Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து போராட்டத்தை முன்னெடுக்குக! கூட்டமைப்பிடம் கோரிக்கை!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து போராட்டத்தை முன்னெடுக்குக! கூட்டமைப்பிடம் கோரிக்கை!!

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல்கள் குறித்து பல்வேறு தரப்புகளிடமிருந்தும் கண்டனங்களும் போராட்ட அழைப்பும் வந்துகொண்டிருக்கும் சூழலில், நேற்றயைதினம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விடுத்த போராட்ட அழைப்பிற்குப் போட்டியாக இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் போராட்ட அழைப்பொன்றை விடுத்திருப்பது யாழ்.பல்கலைக்கழக வட்டாரங்களிலும் மாணவர்கள் மத்தியிலும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் போராட்டம் எதிர்வரும் செவ்வாய்கிழமை (04.12.12) இடம்பெறவுள்ள நிலையில், அதற்கு ஒரு நாள் முன்னதாக, அதாவது திங்கட்கிழமை (03.12.12) கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்த உள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இராணுவ அடக்குமுறைகளுக்கு எதிராக மாணவர்கள் முன்னெடுத்துவரும் போராட்டங்களை வைத்து இதுபோன்ற போட்டி அரசியல் நடத்துவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைவிடுவதுடன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விடுத்துள்ள போராட்ட அழைப்பிற்கு தமது பூரண ஆதரவை வழங்க வேண்டுமென பொங்குதமிழ் வேண்டுகிறது.

நேற்றையதினம் இராணுவத்தினரும் காவற்துறையினரும் நடத்திய தாக்குதலைக் கண்டித்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கண்டன ஆர்ப்பாட்டமொன்றுக்கு அழைப்பு விடுத்திருந்தது. இப்போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு அனைவரையும் வேண்டுவதாகவும் முன்னணியினர் வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விடுத்த போராட்ட அழைப்பு பல்வேறு ஊடகங்களிலும் வெளியாகியிருந்தது. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் அவர்களை நிர்வாகியாகக் கொண்டியங்கும் "உதயன்" நாளேடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் போராட்ட அழைப்பு குறித்து செய்தி வெளியிட்டிருந்தது.

மாணவர் விவகாரம் தொடர்பாக புலம்பெயர் நாடுகளிலும் பல்வேறு அமைப்புகளும் தமது கண்டனத்தை வெளியிட்டு வருகின்றன. ஐ.நா உயரதிகாரிகள் குழுவொன்றை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்குமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது சிறிலங்கா இராணுவத்தினரும், காவற்துறையினரும் மேற்கொண்ட தாக்குதல் தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய உரையில் தமது கண்டனத்தைத் தெரிவித்திருப்பதோடு அறிக்கைகளையும் வெளியிட்டுள்ளனர்.

மாவீரர் நாள் அன்று மாணவர் விடுதிக்குள் புகுந்து சிறிலங்கா இராணுவத்தினரும் புலனாய்வுப் பிரிவினரும் தாக்குதல் நடத்திய நேரத்திலும், பின்னர் நேற்றையதினம் பல்கலைக்கழக வளாகத்தினுள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது அரசபடைகள் தாக்குதலை மேற்கொண்ட நேரத்திலும் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்றதாகவும் காவற்துறையினருடன் பேச்சுநடத்தி கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் பயணம்செய்த வாகனத்தின்மீதும் இராணுவ புலனாய்வாளர்கள் தாக்குதல் நடத்தி சேதங்களை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

மாணவர்கள் மீதான தாக்குதலின்போது துணிவுடன் சம்பவ இடத்திற்குச் சென்று மாணவர்களைக் காப்பாற்ற உதவிய நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனின் செயலை பொங்குதமிழ் பாராட்டுகிறது.

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீதான வன்முறைகள் குறித்து பல்வேறு தரப்புகளிடமிருந்தும் கண்டனங்களும் போராட்ட அழைப்பும் வந்துகொண்டிருக்கும் சூழலில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் போராட்ட அழைப்பிற்குப் போட்டியாக இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் போராட்ட அழைப்பொன்றை விடுத்திருப்பது யாழ்.பல்கலைக்கழக வட்டாரங்களிலும் மாணவர்கள் மத்தியிலும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் போராட்டம் எதிர்வரும் செவ்வாய்கிழமை (04.12.12) இடம்பெறவுள்ள நிலையில் அதற்கு ஒரு நாள் முன்னதாக, அதாவது திங்கட்கிழமை (03.12.12) கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்த உள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

வடக்கு கிழக்கில் இராணுவ அடக்குமுறைக்கு எதிராக இடம்பெறும் இதுபோன்ற போராட்டங்களில் குறைவான எண்ணிக்கையிலேயே மக்கள் பங்குகொண்டு வருகின்ற ஒரு சூழலில், தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய கட்சியான கூட்டமைப்பு, போட்டி ஆர்ப்பாட்டங்களை நடத்த முயல்வது போராட்டங்களின் வலுவை மழுங்கடிக்கும் ஒரு செயலாக அமைவதுடன் இறுதியில் எதிரிக்கு சேவை செய்வதாகவே அமைந்துவிடும் என பெயர்குறிப்பிட விரும்பாத யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒருவர் பொங்குதமிழுக்குத் தெரிவித்தார்.

கேப்பாபுலவில் மக்கள் பலவந்தமாக மீள்குடியேற்றப்பட்ட பிரச்சனையிலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விடுத்த கவனயீர்ப்பு போராட்ட அழைப்பிற்கு போட்டியாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அழைப்பு விடுத்திருந்ததை நினைவூட்டிய இம்மாணவர், இதுபோன்ற 'கலைஞர் கருணாநிதி பாணி' அரசியலை கூட்டமைப்பு கைவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

உலகெங்கும் ஆக்கிரமிப்புகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் எதிராக மாணவர் சமூகமே தமது முதற்குரலை எழுப்பியிருக்கிறது. இன்று ஈழத்திலும் மாணவர்கள் முன்னெடுத்துவரும் போராட்டங்கள் இதனையே வெளிப்படுத்துகிறது. அதற்கான துணிச்சலும் வேகமும் மாணவர் சமூகத்திடமே உள்ளதாக நாம் கருதுகிறோம்.

எனவே, மாணவர்கள் முன்னெடுத்துள்ள இப் போராட்டங்களை வைத்து போட்டி அரசியல் நடத்துவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைவிடுவதுடன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விடுத்துள்ள போராட்ட அழைப்பிற்கு தனது பூரண ஆதரவை வழங்க வேண்டுமென பொங்குதமிழ் வேண்டுகிறது.

தேர்தல் அரசியல் தவிர்த்து, இதுபோன்ற மக்கள் நலன் தொடர்பான விடயங்களில் அரசியல் கட்சிகள், மக்கள் அமைப்புகள், மாணவர் அமைப்புகள் என அனைவரையும் இணைத்து போராட்டங்களை முன்னெடுக்கக்கூடிய ஒரு பொறிமுறையின் அவசியத்தையும் இச்சம்பவம் உணர்த்துவதாகவே பொங்குதமிழ் கருதுகிறது.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=c8c60f79-78ad-4b20-b9b6-43e77ac29451

2 அணி என்பது இனி மாறாதோ?

[size=4]

2 அணி என்பது இனி மாறாதோ?

[/size]

[size=4]சசி,[/size][size=1]

[size=4]அரசியல் கட்சிகள் ஒன்றிற்கு மேல் இருப்பது ஆரோக்கியம். சில வேளைகளில் அவை சேர்ந்து செயல்படுவது நல்லம்.[/size][/size]

[size=1]

[size=4]மாவீரர்களை நினைவு கூர ஒன்றாக இருக்கவேண்டும், அவர்கள் தியாகம் - தாயகத்திற்காக.[/size][/size]

[size=4]சசி,[/size]

[size=1][size=4]அரசியல் கட்சிகள் ஒன்றிற்கு மேல் இருப்பது ஆரோக்கியம். சில வேளைகளில் அவை சேர்ந்து செயல்படுவது நல்லம்.[/size][/size]

[size=1][size=4]மாவீரர்களை நினைவு கூர ஒன்றாக இருக்கவேண்டும், அவர்கள் தியாகம் - தாயகத்திற்காக.[/size][/size]

நான் பல கட்சிகள் இருக்க்க கூடாது என்று கூறவில்லை ஆனால் கூட்டாக ஆர்ப்பாட்டம் செய்தால் ஆதரவை பெரிதாக காட்டலாம் என்றதுக்காவே ஏன் 2 அணி என கேட்டேன்.....

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து போராட்டத்தை முன்னெடுக்குக! கூட்டமைப்பிடம் கோரிக்கை!!

[size=4]யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல்கள் குறித்து பல்வேறு தரப்புகளிடமிருந்தும் கண்டனங்களும் போராட்ட அழைப்பும் வந்துகொண்டிருக்கும் சூழலில், நேற்றயைதினம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விடுத்த போராட்ட அழைப்பிற்குப் போட்டியாக இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் போராட்ட அழைப்பொன்றை விடுத்திருப்பது யாழ்.பல்கலைக்கழக வட்டாரங்களிலும் மாணவர்கள் மத்தியிலும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. - கிருபன்[/size]

இன்றைய சூழலில் தமிழர் கூட்டமைப்பு அமரிக்காவினதும் ஏனைய மேற்குலகினதும் இந்தியாவினதும் அசங்களை அதிகரிக்கிறமாதிரி செயல் படக்கூடாது. எங்கள் அரசியல் சமூக பலங்களும் இளைஞர்களும் அழிந்துபோயிருக்கும் கையறு நிலையில் சர்வதேசம் கைவிட்டால் நம்மை எதிரிகள் மிக இலகுவாக அடிமைப் படுத்தி விடுவார்கள்.

சரி பிழைகளுக்கு வெளியில் விரும்பினாலும் விரும்ப்பா விட்டாலும் சர்வதேசம் எதிர்க்கிற குற்றம் சாட்டுகிற அமைப்புகள் சின்னங்களோடு செயல்படுகிறவர்களுடன் கூட்டமைப்பு சிலகாலத்துக்கு விலகி இருப்பது அவசியம். தமிழ் மக்களுக்கு ஆதரவாக செயல்பட்டால் அதன் இலாபத்தை களத்திலும் புலத்திலும் மேற்படி அமைப்புகள் கைபற்றி விடும் என்கிற அச்சம் சர்வதேசத்துக்கு உள்ளது. போர்க்குற்ற சாட்டும் விசாரணைகளும் இருதரபாக முன்னெடுத்துச் செல்லப்படுவதை நாம் மறந்துவிடலாகாது

சர்வதேசம் போர்குற்றச் சாட்டு வைதிருக்கும் தரப்புகளுக்கு வெளியில் நின்றால் மட்டுமே கூட்டமைப்பால் தமிழ்மக்கள் விடுதலை சார்பாக சர்வதேசத்தின் ஆதரவை தொடர்ந்தும் தக்கவைக்கமுடியும்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடனும் மற்றும் அதற்க்குச் சார்பான சில புலம்பெயர் அமைப்புகளுடனும் தமிழர் கூட்டமைப்பு மறைமுகமான உறவுகளை பேணவேண்டும். ஆனால் ஒருபோதும் வெளிப்படையாக அவற்றுடன் தன்னை அடையாளப் படுத்தக் கூடாது. மேற்படி சர்வதேச அரசியல் சூழலில் தமிழர் கூட்டமைப்பு தனியாக போராட நடவடிக்கை எடுப்பதே சரியான இராசதந்திர நடவடிக்கையாகும். தோற்கடிக்கப் பட்டு களத்தில் வாடும் மக்கள் சார்பாக இதனைப் புரிந்து கொள்ளுங்கள்.

Edited by poet

புரியவில்லை! சற்று விளக்கமாக சொல்லுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் உங்களுக்குப் புரியவில்லையா? நம்புகிறேன்.

அடுத்த UNHCRC மாநாடு வரையாவது கூட்டமைப்பு சர்வதேசம் விரும்பும் வகையில் சரியான இராசதந்திரத்துடன் நடந்து கொள்வது மிக மிக அவசியம். காலம் கடக்குமுன்னம் சர்வதேசத்தை வென்றால் மட்டுமே வாழ்வோம். சர்வதேசம் SPOILERS என்று நினைக்கிறவர்களின் பின்னே தற்போதைக்குக் கூட்டமைப்பு போவது எதிரிக்கு மட்டுமே சாதகமாகும். அடுத்த சில மாதங்களுக்காவது எல்லா அமைப்புகளும் நிபந்தனையின்றி கூட்டமைப்பை ஆதரிக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

எம்ஜீஆர் தமிழுpழ விடுதலை அமைப்புக்கள் அனைத்தையும் ஒன்றாகச் சந்திக்க நாள் குறித்திருந்த நிலையில் கருணாநிதி அதற்கு முதல் அனைத்து தமிழீழ அமைப்புக்களையும் அவசரமாகச் சந்திக்க நாள் குறித்து அரசியல்லாபம் தேட முனைந்த சம்பவம்தான் நினைவுக்கு வருகிறது.இது ததேகூட்டமைப்பின் சுயநலத்தையே காட்டுகிறது.இதன் மூலம் தமிழர்களிடையே பிளவை அதிகரிக்கவே இதுபோன்ற செயல்கள் உதவும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.