Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாணவரின் விடுதலை கோரி இன்று மாபெரும் ஆர்ப்பாட்டம்

Featured Replies

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது இராணுவமும், பொலிஸாரும் இணைந்து நடத்திய தாக்குதலின் பின்னர் மாணவர் ஒன்றியச் செயலாளர் உட்பட கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்களையும் விடுவிக்கக்கோரி குடாநாட்டில் இன்று மாபெரும் போராட்டம் இடம்பெறவுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்தப் போராட்டத்தை பொது அமைப்புகளும் தெற்கைச் சேர்ந்த கட்சிகளும் இணைந்து நடத்தவுள்ளன.

யாழ்.நகரில், பஸ் நிலையம் முன்பாக, முற்பகல் 11 மணி தொடக்கம் நண்பகல் 12 மணிவரை இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

எதுவித வேறுபாடுகளுமின்றி தமிழ் மக்களது உரிமைகளுக்காகக் குரல்கொடுக்க அனைவரையும் அணிதிரளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

இன்று நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்துக்கு பல்வேறு சமூக அமைப்புகளும் தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன.

பொது அமைப்புகள் பலவும் தாம் இந்த ஜனநாயகப் போராட்டத்தில் கட்சி பேதமின்றிக் கலந்து கொள்ளவுள்ளதாகத் தெரி வித்துள்ளன .

மாவீரர் தினத்தன்று யாழ். பல்கலைக்கழக மாணவர் விடுதிகளுக்குள் அத்துமீறி நுழைந்த இராணுவத்தினரும், புலனாய்வுப் பிரிவினரும் மாணவர்களை அச்சுறுத்தி இருந்தனர். அதனைக் கண்டித்து மாணவர்கள் மறுநாள் நடத்திய அமைதியான ஆர்ப்பாட்டத்தின்போது மாணவர்களை படையினரும் பொலிஸாரும்  கண்மூடித்தனமாகத் தாக்கினர்.

இதன் தொடர்ச்சியாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் பரமலிங்கம் தர்சானந்த், கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் கனக_ந்தர_வாமி ஜெனமேஜெயன், விஞ்ஞானபீட மாணவர் ஒன்றிய உறுப்பினர்  சண்முகம் சொலமன், மருத்துவபீட மாணவன்  கணேசமூர்த்தி _தர்சன் ஆகியோர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர். இதனால் பல்கலைக்கழகச் செயற்பாடுகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் குறித்த ஜனநாயகப் போராட்டத்துக்கு பொது அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன.

 

 

 

http://onlineuthayan.com/News_More.php?id=247621668604564437

 

  • தொடங்கியவர்

ஜனநாயக மக்கள் முன்னணியும் களத்தில்

அதேவேளை, ""அரசின் அடக்குமுறைக்கு எதிராக துணிச்சலுடன் ஜனநாயக ரீதியில் போராடிய பல்கலைக்கழக மாணவர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளனர். நான்கு மாணவர்கள் அரசால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவையெல்லாம் நாட்டில் ஜனநாயகம் இறந்துவிட்டதையே காட்டுகின்றன.

இவ்வாறு ஜனநாயகம் இல்லாத நாட்டின் அர_க்கு எமது எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டியது அவசியமாகும். இந்தப் போராட்டத்துக்கு ஜனநாயக மக்கள் முன்னணி தனது பூரண ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது''  என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் முக்கியஸ்தரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான பாஸ்கரா கூறியுள்ளார்.

இதேவேளை,  இன்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தானும், பாஸ்கராவும் கலந்துகொள்ளவுள்ளோம் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

 



விக்கிரமபாகு கட்சியினர் பங்கேற்பு

இதேபோல், இந்த ஆர்ப்பாட்டத்தில் நவ சமசமாஜக்கட்சியின் உறுப்பினர்களும் கலந்து கொள்கின்றனர் என அக்கட்சியின் செயலர் விக்கிரமபாகு கருணாரட்ண தெரிவித்துள்ளார்.


 

 

ஜே.வி.பி. ஆதரவு

அத்துடன், யாழ். பல்கலைக்கழக  மாணவர்களின் கைதை ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சந்திரசேகரன் வன்மையாகக் கண்டித்துள்ளார்.

இன்று யாழ்.நகரில் நடைபெறும்  ஆர்ப்பாட்டத்தில் தான் கலந்துகொள்ளவுள்ளார் என்று அவர் குறிப்பிட்டார்
மார்க்ஸிய லெனினிசக் கட்சியும் போராடும் இந்தப் போராட்டத்தில் தமது ஜனநாயக மார்க்ஸிச லெனினிசக் கட்சியும் இணைந்துகொள்ளும் என்று அதன் தலைவர் சி.க.செந்தில்வேல் தெரிவித்தார். அனைவரும் ஒன்றிணைந்து எதிர்ப்பை தெரிவிப்பதற்காகவே தாம் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்கிறார்கள் என்னும் அவர் கூறினார்.

இதேவேளை, சமய அமைப்புகளும் மேலும் பல பொது அமைப்புகளும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்தோடு பெருமளவான பல்கலைக்கழக மாணவர்களும், பொதுமக்களும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தவுள்ளனர்.


யாழ். நகரில் ஆயிரக்கணக்கானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் திரண்டு மாணவர்களுக்காக குரல் கொடுப்பர் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

 

  • தொடங்கியவர்

DSCF8165.JPG



DSCF8177.JPG



DSCF8212.JPG



DSCF8169.JPG

  • கருத்துக்கள உறவுகள்

அம் மாணவர்கள் எவ்வித சித்திரவதையுமின்றி விரைவில் விடுதலையாக வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மாணவர்களது விடுதலைக்காக தமிழ் தரப்புக்கள் மீண்டும் யாழ்ப்பாணத்தில் இன்று ஒன்று கூடிய அதிசயம்

04 டிசம்பர் 2012

Bookmark and Share

குளோபல்தமிழ்ச்செய்தியாளர் - படங்கள் இணைப்பு

தமிழ் மாணவர்களது விடுதலைக்காக தமிழ் தரப்புக்கள் மீண்டும் யாழ்ப்பாணத்தில் இன்று ஒன்று கூடிய அதிசயம்

தமிழ் மாணவர்களது விடுதலைக்காக தமிழ தரப்புக்கள் மீண்டும் இன்று ஒன்று கூடிய அதிசயம் யாழ்ப்பாணத்தில் இன்று நடந்துள்ளது.தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் அழைப்பு விடுக்கப்பட்ட மக்கள் போராட்டத்திற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு மற்றும் வணிகர் கழகம் பல்லைக்கழக மாணவர் ஒன்றியம் ஆசிரிய சங்கம் மருத்துவர்கள் சங்கம் சட்டத்தரணிகள் சங்கமென பல தரப்புகளும் இன்று பேதங்களை மறந்து மாணவர்கள் மீதான தாக்குதல்களை கண்டித்தும் அவர்களது விடுதலையினை வலியுறுத்தி ஒருமித்து குரல் எழுப்பின.

காலை 11 மனியளவில் யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பதாக ஒன்று குவிந்த ஆர்ப்பாட்டகாரர்கள் சுமார் ஒன்றரை மணி நேரமாக இவ்வார்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் தெற்கலிருந்து நவசம சமாஜக்கட்சி மற்றும் புதிய இடது சாரி முன்னணி ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் புதிய ஜனநாயக மார்க்சிய லெனினியக்கட்சி என பல தரப்புக்களும் நேரில் பிரசன்னமாகி போராட்டத்தில் குதித்திருந்தன.

எங்கள் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தவும் தடையா? ஊடகவியலாளர்களை தாக்காதே இராணுவமே வெளியே போ சிறி டெலோ தமிழ் மாணவர்களுக்கு துரோகமிழைக்காதே என பல கோசங்களும் எழுப்பப்பட்டது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் குமார் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் செயலாளர் கஜேந்திரன் கூட்டமைப்பு சார்பில் அதன் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா சுரேஸ்பிறேமச்சந்திரன், சரவணபவன் ,சிறீதரன் ஆகியோரும் ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாநகர உறுப்பினர் பாஸ்கரா ஆகியோரும் கலந்து கொண்டனர்.கொழும்பில் பிரதம நீதியரசர் விவகாரம் காரணமாக கண்டன ஆர்ப்பாட்டமொன்று அதே காலப்பகுதியில் நடந்தமையால் பல முக்கியஸ்தர்கள் தமது பிரதிநிதிகளை மட்டும் அனுப்பி தமது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தனர்.

ஆர்ப்பாட்டகாரர்களை சூழ படையினர் மற்றும் பொலிஸார் இராணுவ புலனாய்வு பிரிவினரென பலரும் குவிந்திருந்தனர். பங்கெடுத்த பிரதிநிதிகளை படமெடுப்பதில் அவர்களும் ஊடகவியலாளர்களுக்கு போட்டியாக ஈடுபட்டிருந்தனர்.எந்நேரமும் வன்முறை ஏதும் நடக்கலாமென்ற அச்சமான சூழல் காணப்பட்டது. இராணுவ வாகனங்கள் வீதியின் குறுக்கும் நெடுக்குமாக பறந்து திரிந்தன. இவ்வேளைகளில் எல்லாம் கோசங்கள் வானை தொட்டன.

மாணவர்கள் மீதான வன்முறையை கண்டித்தும் அவர்களது விடுதலையை வலியுறுத்தியும் ஜ.நாவிற்கான மகஜரொன்று பங்கெடுத்தவர்களது ஒப்பத்துடன் அனுப்ப ஏற்பாடாகியிருந்தது. இதனிடையே தற்போதைய பல்கலைக்கழக சூழல் தொடர்பாகவும் அடுத்த கட்ட நகர்வு தொடர்பாகம் ஆராய முக்கிய சந்திப்பொன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நடந்து கொண்டுள்ளது.பாகுபாடு ஏதமின்றி கூட்டமைப்பின் தலைமையும் இச்சந்திப்பில் கலந்து கொண்டுள்ளதாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/86170/language/ta-IN/article.aspx

  • தொடங்கியவர்

இராணுவமே வெளியேறு; மாணவர்களை உடனே விடுதலை செய்; யாழில் முழங்கிய குரல்கள்

கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்களை உடனடியாக விடுதலை செய்ய கோரியும் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும் யாழ். பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

 

அரசே தமிழர்களின் கல்வி வளத்தை அழிக்காதே, கைது செய்யப்பட்ட மாணவர்களை உடனே விடுதலை செய், அரச பயங்கரவாதம் எமக்கு வேண்டாம், கல்வியைத் தொடர பல்கலை மாணவர்களை உடனே விடுதலை செய், இனப்படுகொலை இராணுவமே உன் அராஜகத்தை உடனே நிறுத்து, இராணுவமே எமது மண்னை விட்டு வெளியேறு,

 

சர்வதேசமே தமிழர்களின் சுயநிர்ணய உரிமையினை அங்கிகரி, மாணவர்களின் ஜனநாயக உரிமையினை பறிக்காதே, தாக்காதே தாக்காதே மாணவர்களை தாக்காதே, பல்கலைக் கழக விடுதிக்குள் உனக்கு என்ன வேலை, “மாவீரர் தினத்தை அனுஸ்டிப்போம்”, “மாணவர்கள் மீது வன்முறை புரியாதே”, “கைது செய்த மாணவர்களை விடுதலை செய்“, “சர்வதேசமே இனினும் மௌனம் காக்காதே” ,“தாக்காதே தாக்காதே... ஊடகங்களையும் ஊடகவியலாளர்களை தாக்காதே”, “ஜனநாயக உரிமைகளை மிதிக்காதே”

 

இவ்வாறு போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு பதாதைகளை தாங்கியவாறும் தமது போராட்டத்தை முன்னெடுத்தனர்.

 

 

இவ் போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஈ. சரவணபவன், மாவை சேனாதிராஜா, சிறிதரன்,மற்றும் நவசமாஜ கட்சியின் உறுப்பினர்கள், ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர்,

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன், எம்.கே.சிவாஜிலிங்கம், பல்கலைக்கழக போராசிரியர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் சட்டத்தரணிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

 

 

http://onlineuthayan.com/News_More.php?id=641221670204546869

 

 

Edited by akootha

  • தொடங்கியவர்

DSC3412.JPG

DSC3391.JPG

DSC3408.JPG

DSC3416.JPG

DSC3457.JPG

DSC3461.JPG

  • தொடங்கியவர்

தனிப்பட்ட முஸ்லீம்கள் வந்து இணைந்தாலும், சிங்களவர்கள் வந்து இணைந்தாலும் கக்கீம் கூட்டம் மட்டும் மகிந்தாவின் சேவையில். இதை பற்றி வாயே திறக்க மாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் உறவுகளே அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் தலை குனியாது தமிழர்களாய் தலை நிமிர்ந்து பங்கேற்றதற்கு

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் உறவுகளே அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் தலை குனியாது தமிழர்களாய் தலை நிமிர்ந்து பங்கேற்றதற்கு

 

உண்மைதான்

எல்லோரையும் ஒன்றாக பார்க்கும்போது

இதை உருவாக்கித்தந்த அந்த பல்கலைக்கழக கண்மணிகளுக்கு நன்றி  சொல்ல வார்த்தையில்லை.

 

நல்ல  காலம் பிறக்குது

தமிழனுக்கு

நல்லகாலம் தெரியுது 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.