Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் தாயகமான வடக்கு, கிழக்குப் பகுதிகளில் நிரந்தரதீர்வு கிடைக்கும் வரை ஐ.நா. படையை நிறுத்துங்கள்

Featured Replies

தமிழர் தாயகமான வடக்கு, கிழக்குப் பகுதிகளில் நிரந்தரதீர்வு கிடைக்கும் வரை ஐ.நா. படையை நிறுத்துங்கள்; யாழ்ப்பாணம் வந்த வதிவிடப் பிரதிநிதிகளிடம் சிவில் சமூகம் வலியுறுத்து

 

நிரந்தரமான தீர்வு ஒன்று ஏற்படும் வரை தமிழர் தாயகப் பகுதியான இலங்கையின் வடக்கு கிழக்கில் ஐக்கிய நாடுகளின் படையை நிறுத்த வேண்டும் என்று ஐ.நா. வதிவிடப் பிரதிநிதிகள் குழுவிடம் யாழ்ப்பாணத்தின் சிவில் சமூகம் வலியுறுத்தி உள்ளது.


கடந்த காலங்களில் தொடர்ச்சியாக இடம் பெற்ற சம்பவங்களில் இருந்து அரச படைகள் மீது தமிழ் மக்கள் நம்பிக்கை வைக்க முடியாத நிலை இருப்பதால் இவ்வாறு ஐ.நா. படையை நிறுத்தும் யோசனையை சிவில் சமூகம் முன்வைத்ததாக அதன் பிரதிநிதி ஒருவர் "உதயன்' பத்திரிகையிடம் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் விதிவிடப் பிரதிநிதிகள் குழு ஒன்று நேற்று யாழ்ப்பாணம் வந்தது. ஐ.நாவுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி பாலித கோஹன்ன குழுவுக்குத் தலைமை தாங்கினார். ஜப்பான், பங்களாதேஷ், ருமேனியா, நைஜீரியா, தென்னாபிரிக்கா உள்ளிட்ட 13 நாடுகளின் வதிவிடப் பிரதிநிதிகள் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

போர் முடிந்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் வடக்கின் நிலைமையை நேரில் ஆராய்வதற்காகவே இந்தக் குழுவினர் வருகை தந்திருந்தனர். அவர்கள் சமூகத்தின் பல தரப்பட்டவர்களையும் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள சமாதானத்துக்கும் நல்நெலண்ணத்துக்குமா தூதுக்குழுவினர் காலையில் யாழ். ஆயர் இல்லத்தில் வைத்து ஐ.நா. குழுவினரைச் சந்தித்து நிலைமைகளை எடுத்துரைத்தனர்.

சுமார் ஒரு மணி நேரம் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில், தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அறிந்து கொள்வதும் மீண்டும் சமாதானத்தைக் கொண்டு வருவதற்கு மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதுமே தமது பயணத்தின் நோக்கம் என்று ஐ.நா. குழுவினர் தெரிவித்தனர்.

"இலங்கையில் சகல இன மக்களும் சகல விடயங்களிலும் சமமாக நடத்தப்படுவதில்லை. மொழி உரிமை தொடர்ந்தும் மீறப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அதிகாரப் பகிர்வைக் கேட்டுப் போராடியவர்களுக்கு அது கிடைக்கவில்லை. ஆனால் கேட்காதவர்கள் அதனை அனுபவிக்கிறார்கள்.

சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த வேண்டுமானால் தமிழ் மக்கள் மனதை வெல்ல வேண்டும். ஆனால் அதற்குரிய எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. மாறாக தமிழர்கள் தமது தனித்துவங்களைப் பேண முடியாத நிலையில் இருக்கின்றோம்.

பெரும் எண்ணிக்கையில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருப்பதும் படை முகாம்கள் பல அமைக்கப்பட்டிருப்பதும் நல்லிணக்கத்துக்குத் தடையாக இருக்கின்றது.

தென்னாபிரிக்காவைப் போன்றதொரு நல்லிணக்கத்தை இங்கு ஏற்படுத்த முடியாது. அங்கு சட்டரீதியான உரிமைகளை மதித்து கறுப்பின மக்கள் வெள்ளையர்களுடன் இணக்கத்திற்கு வந்திருந்தார்கள்.

ஆனால் இங்கு இதுவரை செய்து கொள்ளப்பட்ட எந்தவொரு ஒப்பந்தங்களும் மதிக்கப்பட்டதில்லை. இங்கு கருத்துச் சுதந்திரமோ பத்திரிகைச் சுதந்திரமோ கிடையாது. இரண்டுமே அச்சுறுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.'' இவ்வாறு சிவில் சமூகத்தினர் ஐ.நா. குழுவினரிடம் வலியுறுத்தினர்.



unj.jpg



http://onlineuthayan.com/News_More.php?id=666771680609517976

  • தொடங்கியவர்

Subject: Send UN troops to Sri Lanka 
to: sg@un.org

 

10 Dec. 2012

Hon. Ban Ki Moon.
UN Secretary General
United Nations
New York, USA


Dear Secretary General,

 

Subject: Send UN troops to Sri Lanka

 

Since the end of civil war, UN has given ample opportunities to Sri Lanka despite available evidence of war crimes and genocide. And yet Sri Lanka has failed to make any progress in reconciliation.

 

 

Today, Sri Lanka has once again created a climate of fear and where more than 15 students and others have been arrested. And the people are requesting UN protection as they have lost faith in Sri Lanka's forces.

 

I kindly request to seriously consider the safety of Tamils in Sri Lanka who may be faced with another massacre.  Do not fail them again!


Thank you.

Yours Truly,

  • கருத்துக்கள உறவுகள்

10 Dec. 2012

Hon. Ban Ki Moon.
UN Secretary General
United Nations
New York, USA

 

Dear Secretary General,

 

Subject: Send UN troops to Sri Lanka

 

Enough is enough. We all know how the UN had bungled it all up. We know the blame is not fully on you. Nambiar, John Holmes and his cohorts did it all and put you, Mr. Secretary General in shame.

 

It's about time, Mr. Secretary General. Do some damage control. Sweet talk is no longer going to work. Everyone knows the truth. We all know it's all being done in the name of geopolitics. We ain't no fools.

 

Time for you Mr. Secretary General, to come clean. How about sending some UN Peace keeping Troops to Sri Lanka and ensuring some real peace? If no action today, history will have your name Mr. Secretary General in the black pages.

 

Yours Truly,

 

காரசாரமான கடிதம்.. :D

10 Dec. 2012

Hon. Ban Ki Moon.

UN Secretary General

United Nations

New York, USA

 

Dear Secretary General,

 

Subject: Send UN troops to Sri Lanka

 

Enough is enough. We all know how the UN had bungled it all up. We know the blame is not fully on you. Nambiar, John Holmes and his cohorts did it all and put you, Mr. Secretary General in shame.

 

It's about time, Mr. Secretary General. Do some damage control. Sweet talk is no longer going to work. Everyone knows the truth. We all know it's all being done in the name of geopolitics. We ain't no fools.

 

Time for you Mr. Secretary General, to come clean. How about sending some UN Peace keeping Troops to Sri Lanka and ensuring some real peace? If no action today, history will have your name Mr. Secretary General in the black pages.

 

Yours Truly,

 

காரசாரமான கடிதம்.. :D

 

 இது எழுதிய நேரம் ஈமெயில் அனுப்பியிருக்கலாம், செய்தனீங்களா? 

 

இதிலும் வந்து காமடி செய்கின்றீர்கள்

  • தொடங்கியவர்

இல்லை வந்தியத்தேவன்.

 

அவர் தான் எழுதிய கடிதத்தை இணைத்துள்ளார். அது நான் அதற்கு மேலே எழுதிய மடலை விட கராசராமாக உள்ளது. அதைத்தான் அவர் அந்த முகக்குறியுடன்  எழுதியுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

 இது எழுதிய நேரம் ஈமெயில் அனுப்பியிருக்கலாம், செய்தனீங்களா? 

 

இதிலும் வந்து காமடி செய்கின்றீர்கள்

 

ஒரு கருத்தை இடமுன் சற்று நிதானிப்பது நல்லது.

நன்றி akootha

 

கடிதம் அனுப்பியுள்ளேன்.

நான் அகூதா அண்ணாவின் கடிதத்தை ஏற்கனவே அனுப்பி விட்டேன்.

  • தொடங்கியவர்

கடிதம் அனுப்பிய உறவுகளுக்கு நன்றிகள்.

அனுப்பப்பட்டது .நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் ஐக்கிய நாடுகள் சபை படைகள் வந்து இருக்கிற கலாச்சாரத்தையும் கெடுத்திட்டு போகவா?

ஏன் ஐக்கிய நாடுகள் சபை படைகள் வந்து இருக்கிற கலாச்சாரத்தையும் கெடுத்திட்டு போகவா?

ஐ.நா படை வராதபோது நாட்டில் ஏற்படும் சீரழிவை விட ஐ.நா படை வந்தால் அங்கு ஏற்படும் சீரழிவு குறைவாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் வேலைக்கு ஆகாது ஐக்கிய நாடுகள் சபை படைகள் போன இடங்களில் எல்லாம் பாலியல் வல்லுறவுகளும் கலாச்சார சீரழிவுகளும் aids நோய் பரம்பல்களும் இடம் பெற்றதாக தான் கடந்த கால மற்றும் இன்றைய வரலாறுகள் சொல்லி நிற்கின்றன தமிழர்களை பொறுத்த வரை பிச்சை வேண்டாம் நாயை பிடி

  • தொடங்கியவர்

ஐ.நா. படை வந்தால்.... சிங்கள ஆக்கிரமிப்பு படைகள்  வெளியேறவேண்டும்.
சிங்கள ஆக்கிரமிப்பு படைகள் வெளியேறினால் ... அது தமிழீழத்திற்கான ஒரு மிகப்பெரிய நகர்வு.

 

இரண்டுமே எமது மண்ணில் நிற்க கூடாத படைகள்.

ஆனால், ஆக்கிரமிப்பு சிங்கள படைகளை விட ஐ.நா. படை எவ்வளவோ மேல்.

  • கருத்துக்கள உறவுகள்

வேணாமே எமது மக்கள் கலையை காலச்சாரத்தை இழந்து aids நோயாளிகளாகவும் பாலியல் தொழில் செய்பவர்கலாவும் இன்னும் அதிவேகமாக மாட்டபடுவார்கள் இந்திய இராணுவமும் அமைதிப்படையாக தான் வந்தது அதன் பின்பு நடந்தது அனைவருக்கும் தெரியும் ஆகவே எமது மண்ணில் மீண்டும் ஒரு அன்னியப்படை வேண்டாம்

  • கருத்துக்கள உறவுகள்

அதுவும் ஐக்கிய நாட்டு படைகளில் ஆபிரிக்க நாட்டு படைகளும் அனுப்பப்பட்டால் அம்புட்டுத்தான் சொல்லவே வேண்டாம்

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல்.. தாயகப் பகுதிக்குள் இன்னுமொருமுறை அந்நியப் படைகள் நுழைவது தவிர்க்க முடியாதது.

மீண்டும் ஒருதடவை தமிழர் புலியாய் படையாய் புறப்படவேண்டும் ...........அப்போ அங்கே ஐநா படைகள் செல்வதை தடுக்கலாம் .............. தற்போது இதைத்தவிர எந்த வழியும் இல்லை என்றே நினைக்கிறேன் ..............வழியிருந்தால் சொல்லுங்கள் சுண்டல் ......

  • கருத்துக்கள உறவுகள்

சூரியன் அண்ணாக்கு வர வர லொள்ளு கூடிப்போச்சு பின்ன என்ன பதில நீங்களே கூறிட்டு கேள்விய என்கிட்டே கேட்டால்? புதிய படையாய் புலிப்படை புறப்படும் கவலை வேண்டாம் காத்திருப்பு அவசியம்

சூரியன் அண்ணாக்கு வர வர லொள்ளு கூடிப்போச்சு பின்ன என்ன பதில நீங்களே கூறிட்டு கேள்விய என்கிட்டே கேட்டால்? புதிய படையாய் புலிப்படை புறப்படும் கவலை வேண்டாம் காத்திருப்பு அவசியம்

புதிய படையாய் புலிப்படை புறப்படும்

சூரியன் அண்ணாக்கு வர வர லொள்ளு கூடிப்போச்சு பின்ன என்ன பதில நீங்களே கூறிட்டு கேள்விய என்கிட்டே கேட்டால்? புதிய படையாய் புலிப்படை புறப்படும் கவலை வேண்டாம் காத்திருப்பு அவசியம்

 

யோசிக்காமல் கதைக்க கூடாது. புலிப்படை வரட்டும் என்று சொல்லி அங்குள்ள மக்களை போராட விட்டிட்டு நாம் இங்கு சௌகரியமாக இருக்க கூடாது. இப்போதைய நிலையில் மீண்டும் ஆயுதப்போராட்டம் சாத்தியமும் இல்லை.

 

புலிகள் மீண்டும் வருவார்கள் வருவார்கள் என்று சொல்லி மக்களை உசுப்பேற்றிக்கொண்டிருக்காமல், மக்களை காத்திருக்க வைக்காமல் எம்மால் முடிந்ததை செய்ய வேண்டும். ஆயுதப்போராட்டம் வந்து மீண்டும் மக்கள் அழிவதை பார்க்காமல் அரசியல் மூலம் ஓர் தீர்வை பெற ஆதரவை கொடுங்கள்.

Edited by துளசி

அனுப்பியாச்சு , நன்றி அகூதா

  • தொடங்கியவர்

ஐ. நாவினை ஏன் எதிர்க்கவேண்டும் என்பதற்கான ஒரு சில ஆதரங்களைஇங்கு முன் வைக்கிறோம்.... அனைவரிடத்திலும் கொண்டு செல்லுங்கள் தமிழர்களே..

 

Compiling some of the evidences of UN's complicit in Eelam Tamil Genocide.. Lot more to come soon...



403712_10200132088888500_1409763650_n.jp

  • தொடங்கியவர்

282586_10200132261692820_1968127971_n.jp

  • தொடங்கியவர்

59291_10200132214331636_442890095_n.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.