Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்றைய... பாடல்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முகூர்த்த நாளில் சுசீலா.

 

மாணிக்க மூக்குத்தி மதுரை மீனாட்சிக்கு மதுரையிலே முகூர்த்தநாள்,

காணிக்கையாய் கொண்ட சோமசுந்தரர் கண்களுக்கும் முகூர்த்தநாள். 

 

சின்னனிலை உண்மையாக பக்த்திப் பாட்டு என்று எண்ணி வளர்ந்த பின்னர் உண்மையை கண்டு ஏமாந்த பாடல்.

 

கலை கோவில் சுசீலா

 

http://youtu.be/_B41-On4S2I

 

முதலாவது பாடலில் வரும் நடிகை யார் என்று தெரியுமா???

 

முத்துராமன் நடித்த படத்தின் பெயர் என்ன?????

 

  • Replies 2.1k
  • Views 180.2k
  • Created
  • Last Reply

"மாணிக்க மூக்குத்தி" முகூர்த்த நாள் என்ற படத்தில் வரும் பாடல். இதில் நடிப்பவர் K.R. viyaja

http://psusheela.org/tam/show_lyrics.php?id=1324

 

முத்துராமனின் படம் கலைக்கோவில்.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D

 

சீர்காழியின் பாடல் அவரை படங்களுக்கு G.ராமநாதனால்  அறிமுகம் செய்து வைத்த காலத்தில் பாடப்பட்டது. அதில் நடிக்கும் பெண் தாம்பரம் லலிதா , நடிகர் ஏ.எஸ் நாகராஜன். படம் கோகிலவாணி

 

"சீர்காழியின் வணக்கம் செய்வோம் வாரீர், சர மோகன சங்கீத அமிர்த" போன்ற பாடல்கள் பழைய நாட்களில் லவுட்ஸ்பீகரில் கேட்பது போல இப்போது தெளிவான வடிவங்களில் கிடைப்பதில்லை. இதனால் இவற்றை புதிய தலைமுறை சரியக் கேட்கவோ ரசிக்கவோ முடியாது . வேறு யாருக்குமாவது Media Form ல் இருந்தால் இணைத்துவிடலாம்.

 

ம் ம் ம் ம் ம் ம்
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
தன் வசம் இழந்த உள்ளம் குளிர இன்பமே தாராய்
மன மயக்கமே தீராய்
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்

மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
தன் வசம் இழந்த உள்ளம் குளிர இன்பமே தாராய்
மன மயக்கமே தீராய்
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்

அரும்பை தீண்டி அன்பாலே அழகாய் மலரவும் செய்கின்றாய்
அரும்பை தீண்டி அன்பாலே அழகாய் மலரவும் செய்கின்றாய்
குரும்புகள் ஏனோ என்னிடம்
குரும்புகள் ஏனோ என்னிடம்
என் குறையை நீயும் தீராயோ
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்

இரவில் நிலவை விண்மீனை சிரிக்கும் முகிலை கலைக்கின்றாய்
இரவில் நிலவை விண்மீனை சிரிக்கும் முகிலை கலைக்கின்றாய்
குரும்புகள் ஏனோ என்னிடம்
குரும்புகள் ஏனோ என்னிடம்
என் குறையை நீயும் தீராயோ
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்

குலுங்கும் முல்லை கொடிதாவி கொம்பை தழுவிட செய்கின்றாய்
குலுங்கும் முல்லை கொடிதாவி கொம்பை தழுவிட செய்கின்றாய்
குரும்புகள் ஏனோ என்னிடம்
குரும்புகள் ஏனோ என்னிடம்
என் குறையை நீயும் தீராயோ
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்

விரும்பும் இருவர் மன நிலையை விளக்கும் தூதன் நீயன்றோ
விரும்பும் இருவர் மன நிலையை விளக்கும் தூதன் நீயன்றோ
குரும்புகள் ஏனோ என்னிடம்
குரும்புகள் ஏனோ என்னிடம்
என் குறையை நீயும் தீராயோ
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்

திரைப் படம்: தெய்வ பலம் (1959)
இயக்கம்: வசந்த குமார் ரெட்டி
குரல்கள்: P B S, S ஜானகி
இசை: அஸ்வதாமா
நடிப்பு: பாலாஜி, பத்மினி

 

  • கருத்துக்கள உறவுகள்

பாடலுக்கு நன்றி மல்லை

வருகைக்கு நன்றி சுமே அக்கா!

 

ஜான்சி- நிறம் மாறாத பூக்கள்

 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

இனிமையான பாடல் மல்லை.. குறிப்பாக 3:12 நேரக்கணக்கில் இருந்து அந்த இசை எனக்கு மிகவும் பிடிக்கும்.. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

பாடலுக்கு நன்றி மல்லை.

 

இந்தப் பாடலைப் பாடியவர் சிறிது காலத்தில் இறந்துவிட்டார் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

பாடலுக்கு நன்றி மல்லை.

 

இந்தப் பாடலைப் பாடியவர் சிறிது காலத்தில் இறந்துவிட்டார் என நினைக்கிறேன்.

ஏன் இந்தக் கொலைவெறி..? அவங்கட குரல்தான் இறந்துபோச்சு.. :blink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாடலுக்கு நன்றி மல்லை.

 

இந்தப் பாடலைப் பாடியவர் சிறிது காலத்தில் இறந்துவிட்டார் என நினைக்கிறேன்.

 

அத்துடன் அந்த பாடலுக்கு இசையமைத்த கே.வி.மகாதேவனும் இன்று உயிருடன் இல்லையென்பது மிகவும் வருத்ததிற்குரிய விடயம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் படம் வந்த நேரத்தில், இந்தப் பாடல் மிகவும் பிடித்தமாக இருந்ததால்....
"நியூ விக்ரஸ்சில்" ஒலிப்பதிவு நாடா (ரேடியோ கஸெற்) ஒன்றை பதிவு செய்து அடிக்கடி கேட்பேன்.
இப்போது கேட்கும் போதும்.... அந்த இனிமை குறையவில்லை.
இணைப்பிற்கு நன்றி மல்லை. :)

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இந்தக் கொலைவெறி..? அவங்கட குரல்தான் இறந்துபோச்சு.. :blink:

 

யான்சியோட எனக்கென்ன போட்டியா??? சண்டையா??? முன்பு கேள்விப்பட்டது நினைவில் வந்ததால் எழுதினான். :lol:

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாய்த் தான் இருக்கு, மல்லை! :D

வருகை தந்தோருக்கும் கருத்தெழுதியோருக்கும் நன்றி.

 

பாடலுக்கு நன்றி மல்லை.

 

இந்தப் பாடலைப் பாடியவர் சிறிது காலத்தில் இறந்துவிட்டார் என நினைக்கிறேன்.

 

 

அத்துடன் அந்த பாடலுக்கு இசையமைத்த கே.வி.மகாதேவனும் இன்று உயிருடன் இல்லையென்பது மிகவும் வருத்ததிற்குரிய விடயம்.

 

சிலநாட்களுக்கு மட்டும் புகழ் அடைந்து, மறைந்தபோய்விட்ட ஜன்சி, சுவர்ணலதா போன்ற இரு பாடகிகளுக்கிடையில் வரும் குழப்பம் மாதவன், இளையராஜா போன்று தொடர்ந்து பலகாலம் புகழ் ஏணியில் இருந்த இசையமைபாளர்களுக்குமிடையிலும் வருமா?  :D

 

 

 

அழகிய அணங்குகளின் கருங்கூந்தல் தென்றல் காற்றில் அலை பாய்வது போல நாணந்தால் நெளிந்து மோகத்தால் மயங்கி, தயங்கி, தயங்கி வட இந்திய மத்திய பிரதேச காடொன்றில் ஓடிக்கொண்டிருந்தாள் தமஸ். வட கிழக்கே இன்னும் கனகாத தூரம் ஓடினால்த்தான் அவள் தன் தோழி கங்கையை சென்று தொடமுடியும். அதன் பின்னர் அவர்கள் இருவரும் ஒன்றாகிவிடுவார்கள். அவர்கள் இருவரும் சேர்ந்து கொள்வதே ஒரு அலாதியான காட்சி. அந்த காட்சியை காணவென்றே தமசின் பிரவாகத்தோடு பயணம் போகும் காலை நேரத்தின் பறவைகளின் ஆரவாரிப்பும், காட்டில் இரை தேடும் மிருகங்களின் கூட்டமும், தேர் திருவிழாவில் தேரோடு போகும் பக்கதர்களின் காட்சியை நினவூட்டும்.  

 

நதிக்கு வடக்கே பச்சை பசேலென, பூஞ்செடிகளும், கொடிகளும் நிறந்த  பூங்காவனம் மாதிரியான ஒரு அமைதியான தனி வெளி இடம்.  நதியை சற்றி தள்ளி ஒரு ஆச்சிரமம். ஆன்மீக சுகந்தம் வீசும் அந்த ஆச்சிரமத்தை தூரத்தில் இருந்து பார்த்தாலே அதில் வாழும் தபசி ஒரு மாகாமுனி என்பது புரியும். தனது காலைக் கடன்களை அதிகாலையில் முடித்து வந்து அமர்ந்திருந்த அந்த தபசி இன்னமும் தன் கண்களை மூடிய படி  ஆச்சிரமத்தின் நடுவில் அமர்ந்திருந்தார். அந்தக்காலையில் அவர் முன்னால் இரண்டு சிறுவர்கள் அடக்க ஒடுக்கமாக அமர்ந்திருந்தார்கள்.

 

ஆச்சிரமத்துக்கு முன்பக்கமாக ஒரு காற் கட்டை தூரத்தில் ஒரு பெண் அவசரமவரசாம ஒரு சிறிய கூடையில்  சேர்த்த சில பழங்களுடன் ஓட்டமும் நடையுமாக வந்து கொண்டிருந்தாள்.  அவளின் நடையில் திசையை வைத்து அவளும் ஆச்சிரமத்துக்குத்தான் போகிறாள் என்பதில் சந்தேகம் இருக்காது. ஆனால் அதில் வேறு ஒரு சிறு சந்தேகம், ……..இந்த காட்டு வாழ்க்கையிலும் ஓட்டமும் நடையுமான அவசரத்துக்கு ஏதாவது தேவையிருக்குமா? அல்லது ஒருவேளை தேவை, தவறு ஒன்றும் இல்லாமல் பரதவிப்பதும் அவசரப்படுவதும்தான் அவள் இயல்பாக இருக்குமா? அவளைபார்த்தால் ஒவ்வொருவகை ராஜ லட்ஷணகளும் ஒன்றாக கூடி அவளில் பிரகாசித்துக்கொண்டிருந்தது. அந்த காலையின் உதய சூரியனுடனுடன் போட்டி போட்டி பிரகாசித்துக்கொண்டிருந்த அவளின் கண்களில் திருமகளின் கருணை குடியிருந்தது. எதற்கும் இந்த பெண் அந்த காட்டில் என்னதான் பண்ணுகிறாள் என்ற கேள்வி எழாமலும் போகாது. தபசிகளின் ஆச்சிரமங்கள் மட்டும் சுற்றியிருக்கும் அந்த காட்டில் தனியே அலையும் இந்த இந்திராணி யார்?, மதனின் மனைவி ரதியே பொறாமைப்படும் அந்த தேவதைப் பெண் யார்?

 

அந்த கேள்விகளுக்கு விடையைக் காண நாம் பல மைல்கள் தூரம் காட்டுனுள் நடக்க வேண்டியிருக்கிறது. காட்டுக்கு 150-200 மைல்கள் வடக்கே தள்ளி இருக்கும் பெரு நகரம்தான் அயோத்தி. அந்த நகரத்தின் பாரிய ஒரு அரமனையில் மனிதாக பிறந்திருந்த பரந்தாமன் தன்னைத்தான் அறியாமல் இராமபிரானாக  தன் தவறுகளை நினத்து வருந்தியவனாக தனந்தனியனாக வீற்றிருக்கிறான். வால்மீகி கதையில் சுவைக்காக எழுதினாரா அல்லது உண்மைதானா நமக்கு தெரியாது. ஆனால் இராமனுக்கு மட்டும் தான் யார் என்பது தெரிந்திருக்க வில்லை. மனைவி சீதைக்கும் தான் யார் என்பது தெரிந்திருக்கவில்லை. மானிட ஜென்மங்கள் இந்த பூமியில் தாங்கும் வருந்தல்களையும் நோதல்களை தாங்களும் தாங்கியபடியே மானுட ஜென்மங்களில் மானுடங்களாகவே  பரந்தாமனும், இலக்சுமி தேவியும் தங்கள் வாழ்க்கையின் துரப்புக்களைப் பட்டுளைந்து கொண்டிருந்தார்கள் என்பது வால்மீகியின் கூற்று.

 

ஆனால் இராமன் பிறந்து வளர்ந்து வருவதை தூரத்தே தமஸ் ஓடும் காடுகளில் இருந்த காவி உடுத்த நீண்ட நரைத்த தாடியுடன் கூடிய கிழவன் ஒருவன்  தெரிந்து கொண்டுவிடுகிறான். உடம்பை வருத்தி உணவை, வெறுத்து பகல் இரவாக தவத்தினால் தேடி ஞானக் கண்ணால் மட்டும் காணக்கூடிய பரந்தாமனை அயோத்தி அரண்மனைக்கு ஒரு நடை போட்டுவிடுவதால் ஊனக்கண்ணாலேயே நேராக பார்த்துவிட முடியும் என்பதை உணருகிறான். அதனால்தான் அவன் ஒருதடவை அயோத்தி போய் இரமனை தரிசித்து தன் பிறவிப்பலனை அடைந்துவிட்டு தமசு ஓடும் காட்டில் தன் ஆச்சிரமத்திற்கு திரும்பி வந்து தன் வாழ்வின் முடிவின் நாட்களை எண்ணி பிற்காலத்தை கழித்துக்கொண்டிருந்தான்..  இந்த நாட்களில் தான் இராமனால் தள்ளிவைக்கப்பட்ட சீதை அவரின் ஆச்சிரமத்தை வந்து அடைகிறாள்.

 

அவள் தான் நாம் ஆரம்பத்தில் பார்த்த ஓட்டமும் நடையுமாக வந்து கொண்டிருக்கும் பெண். தன் பிள்ளைகள் பள்ளிக்குப் போகமுதல் காலை உணவிற்கு கடிக்க கொடுக்க தேடப்போன கனிகள் தான் அவளின் கையிலிருந்த கூடையில் இருந்து அவளின் ஓட்டத்தின் ஒவ்வொரு அடிக்கும் துள்ளி துள்ளி விழுந்து தாழம் போட்டுக்கொண்டிருந்தன கொண்டிருந்தன.  அவளின் இரண்டு பிள்ளைகளான லவனும், குசனும் தான் அந்த ஆச்சிரமத்தில் தங்கள் பாடங்களை தொடங்கதயாராக முனிவர் முன்னால் அமர்ந்திருக்கும் சிறுவர்கள். என்ன அவசரப்படும் சீதை இன்று நேரம் சற்று பித்திவிட்டாள்.  பிள்ளைகள் பாடத்திற்கு வந்துவிட்டார்கள்.  தன் முன்னால் மாணவர் வந்து அமர்ந்திருப்பதை உணர்ந்து மெல்லத் தன் கண்களை திறந்துகொண்டிருக்கும் அந்த முனிவன்தான் மாகாதபசி வால்மீகி. கண்களை தான் மூடிகொண்டிருந்த போது அவன் தன் ஞானத்தில்கண்ட தெய்வீக சரித்திரத்தைதான் இந்த பிள்ளைகளுக்கு இன்று பாடமாக சொல்லிக்கொடுக்கபோகிறான் வால்மீகி.

 

இதோ மௌனத்தில் மூடியிருந்த தன் வாயை திறந்து பாடங்களை சுலோகங்க்களாக பாட ஆரம்பிக்கிறான் முனிவன் ……. அவன் இன்று பாடத்தொடங்கியிருக்கும் அந்த சரித்திரம்தான் பிற்காலம் கதைகளில் எல்லாம் புண்ணிய கதையான ஸ்ரீராமனின் கதையாக ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் நிலைக்க போகிறது.

 

இனி நீங்கள் எனது அறுவையை விட்டு விட்டு புல்லையாவின் புகழ் பெற்ற படைப்பான லவ குசா விலிருந்து அந்த புண்ணிய கதையை நேராக கேட்க முடியும்.

 

அந்தப்படத்தில் “பாடத்தின் போது, அரங்கேற்றத்தில், அரண்மையில் தங்கள் தந்தை ஸ்ரீஇராமனை சந்திக்கும் போது” என்று மூன்று பாகமாக பிள்ளைகள் லவனும் குசனும் பாடுவதாக  பாடல் “ஜெகம் புகழும் புண்ணியகதை” போகிறது. அந்த படத்திலும், பாடலிலும் அருமையான பாகம் என்ன என்றால் இராமன் தன்னை அறியாமல் அரண்மனையில் வேதனையில் தவித்துக்கொண்டிருக்கிறான். ஆனால் வால்மீமி தன் ஞானக்கண்ணால் இராமனை யார் என உணர்ந்து இராமன் உயிரோடு இருக்கும் போதே அவனின் சரித்திரமான புண்ணிய கதையைப் பாடி முடித்து இராமனின் பிள்ளைகளுக்கே அதை பாடமாக சொல்லியும் கொடுக்கிறார். படத்தில் ஆரம்பம் தொடக்கம் முடிவு வரையும் கண்ணீரும் கம்பலையும் அஞ்சலிதேவியின் சீதா பாத்திரம் நெஞ்சை பிழிந்தெடுக்கும் அபார நடிப்பு.

 

இனி "அந்த புண்ணிய கதையை கேட்டு எல்லோரும் இகபர சுகமெல்லாம் அடைய" என்று வாழ்த்திக்கொண்டு…………..

 

பாகம் 1 : http://youtu.be/hjBWJQg8ApU

 

பாகம் 2 & பாகம் 3 : http://youtu.be/RA5ecj775MU

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

அட பாவியளே! பாட்டு  என்ன என்று பார்க்க ஓடோடி வந்த என்னை ஏமாற்றிக் கதா கலாட்சேபம் கேட்கவைத்துவிட்டீர்களே ! :D :D

  • கருத்துக்கள உறவுகள்

அட பாவியளே! பாட்டு  என்ன என்று பார்க்க ஓடோடி வந்த என்னை ஏமாற்றிக் கதா கலாட்சேபம் கேட்கவைத்துவிட்டீர்களே ! :D :D

ஏன், நீங்கள் 'மவுஸ்' பாவிக்கிறதில்லையா சுமே? :o

 

வீணாக ஓடித்திரியத் தேவையில்லையே? :D

  • கருத்துக்கள உறவுகள்

ஏன், நீங்கள் 'மவுஸ்' பாவிக்கிறதில்லையா சுமே? :o

 

வீணாக ஓடித்திரியத் தேவையில்லையே? :D

 

 எலிகளே இல்லாத வீடு என் வீடு :lol:

  • கருத்துக்கள உறவுகள்

 எலிகளே இல்லாத வீடு என் வீடு :lol:

நரியள் எலியளை  விடக் 'குழப்படி' கூட! :D

வழமையில் 10,15  உறவுகள்தான் பழைய பாடல்களை கேட்க வருவார்கள். ஆனால் கதா காலட்சேபத்துக்கு 25 உறவுகள் தேறினார்கள். :)

 

"ஏன், நீங்கள் 'மவுஸ்' பாவிக்கிறதில்லையா சுமே? :o

வீணாக ஓடித்திரியத் தேவையில்லையே? :D"

 

மவுஸ் உருளாவிட்டாலும் Arrow Keys  தொழில்ப்படும். உங்களை மாதிரியே அவவும் ஸ்ரீ ராமபிரானின் புகழை தள்ளி வைக்க விரும்பவில்லை. இருந்தாலும் சுமே அக்காவுக்காக உங்கள் ஆலோசனைக்கு நன்றி :D  :D

 

களுத்தூர் கண்ணம்மாவில் A.M.Raja சுசீலா

 

http://youtu.be/-v_FDtF4XAs

  • கருத்துக்கள உறவுகள்

இந்தமாதிரி காட்சிகளை இதுவரைக்கும் ஆங்கிலப் படங்களில்தான் பார்த்துள்ளேன் மல்லை.. :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நமது முன்னோர்கள் எதையும் நாசுக்காக கதைப்பதிலும் காட்டுவதிலும் விண்ணர்கள். இப்படி பாடல்காட்சிகள் இன்றைய திரைப்படங்களில் வருமானால் ஏ முத்திரையிடுவார்கள். :D

விடிவெள்ளியில் பி. சுசீலா

 


இந்தமாதிரி காட்சிகளை இதுவரைக்கும் ஆங்கிலப் படங்களில்தான் பார்த்துள்ளேன் மல்லை.. :D

எங்களின் பழைய க்தைகளை நீங்கள் சரியாக புரியவில்லை. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான பாடல்கள். நன்றாக இருக்கிறது மல்லை. நண்றி! :D

நான் கொஞ்ச நாள் பாடல்கள் இணைத்தேன். பின் இன்றைய ... பாடலில் ஒரு நாலைக்கு ஒரு பாடல் போதும் என்று , நீங்கள் இணைப்பது நன்றாகவும் இருப்பதால் ரசிகனாய் இருக்கின்றேன்! :D

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்களுக்கு நன்றி மல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.