Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உளநலப்பாதிப்புக்குள்ளான யுவதிகளை பார்வையிட டக்ளஸ் தேவானந்தாவிற்கும் படையினர் அனுமதி மறுப்பு :

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குளோபல்தமிழ்ச்செய்தியாளர்

doulas_CI.png

 

உளநலப்பாதிப்பு காரணமாக பாதிக்கப்பட்ட யுவதிகளை பார்வையிட சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவையும் படையினர் திருப்பி அனுப்பிய பரிதாபம் நேற்று நடந்துள்ளது.படையில் இணைத்துக்கொள்ளப்பட்ட குறித்த யுவதிகள் உள நலப்பாதிப்பிற்குள்ளாகிய நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டமை கடந்த சில தினங்களாக பெரும் வாதப்பிரதிவாதங்களை தோற்றுவித்திருந்தது.
 
முன்னதாக அவர்களை பார்வையிடச்சென்ற கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் திருப்பி அனுப்பப்பட்டிருந்தார்.வன்னி படை கட்டளைத்தலைமையக பணிப்பினை மேற்கோள் காட்டியே தம்மை உள்நுழைய வைத்தியர்கள்  அனுமதி மறுத்ததாக சிறீதரன் தெரிவித்தார்.இந்நிலையினில் இரண்டாவது தடைவையாக நேற்றும் எஞ்சிய இரு யுவதிகளையும் பார்வையிட அவர் முற்பட்ட போது ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டியிருந்தது.
 
இந்நிலையில் யாழ்ப்பாணத்திலிருந்து வருகை தந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் பார்வையிடுவதற்கான அனுமதி மறுக்கப்பட்டமை தொடர்பான தகவல்கள் அம்பலத்திற்கு வந்துள்ளது.பாதுகாப்பு அமைச்சக உத்தரவின் பிரகாரம் அவர் திருப்பி அனுப்பபட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
 
இதனிடையே வைத்தியசாலையில் தொடர்ந்தும் இரு யுவதிகளே சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் ஏனையவர்களை ஆற்றுப்படுத்த திருக்கோணேச்சரம் கோவிலுக்கு படைத்தரப்பு சுற்றுலா அழைத்து சென்றுள்ளது.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/86571/language/ta-IN/article.aspx

இன்று இல்லாவிட்டாலும் என்றோ ஒருநாள் சிங்கள இனவாத இராணுவத்தாலும் தூக்கி எறியப்படப்போகும் ஆட்களில் ஒருவர் தான் டக்கி .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
இன்று இல்லாவிட்டாலும் என்றோ ஒருநாள் சிங்கள இனவாத இராணுவத்தாலும் தூக்கி எறியப்படப்போகும் ஆட்களில் ஒருவர் தான் டக்கி .

 

தூக்கி எறியப்பட்டால் பரவாயில்லை ................... இவர் சிறிலங்கா அரசபயங்கரவாதிகளினால் தேவை இல்லை என்று கருதும் போது கொலை செய்யப்படுவார். 

  • கருத்துக்கள உறவுகள்

குறிப்பிட்ட பெண்கள் பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தப்பட்டாதாக இணையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது..வாசிக்கும் பொழுது ரத்தம் கொதிக்கிறது..தட்டிக்கேட்க யாருமற்ற அநாதையாகிவிட்டோமே நாங்கள்..விடுதலையின் பெறுமதியை மீண்டும் மீண்டும் உணரவைக்கிறது சிங்களப்பேரினவாதம் தனது செயற்பாடுகளில்..நிச்சயமாக போராடாமல் எமக்கு விடிவு வரப்போவதில்லை...மீண்டும் விடுதலைப்போராட்டம் ஆரம்பிக்கவேண்டும் மக்களால்..எங்கிருந்து என்பதுதான் இன்னமும் குழப்பமாக இருக்கிறது..அதற்கும் சிங்களம்தான் விரைவாக தனது செயற்பாட்டின்மூலம் பதில் தரவேண்டும்..

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான செய்திகளுக்கு சர்வதேசமும் சரி அவர்களின் ஊடகங்களும் சரி.. மேற்குலக இராஜதந்திரிகளும் சரி முக்கியத்துவம் கொடுக்கிறதில்லை. இதற்கு ஒரு குண்டு வெடிப்பால எதிர்ப்புக் காட்டினா.. உடன கிளம்பிடுவாங்க.. பயங்கரவாதம் என்று கொண்டு.

 

இந்தக் கேடு கெட்ட உலக ஒழுங்கை மாற்றியமைக்காமல்.. அரச பயங்கரவாதங்களுக்கு முடிவு கட்டுவது சுலபம் அல்ல..! அதற்காக மக்களை பாதிக்க அனுமதிக்க விட்டுக் கொண்டிருக்க முடியாது. இயன்ற வரை இவ்வாறான விடயங்களை கருசணை உள்ள அமைப்புக்களின் ஊடு சர்வதேச மயப்படுத்தி.. அந்த மக்களுக்கு ஒரு பாதுகாப்பை உறுதி செய்து கொடுக்க வேண்டும்.

 

போர்க்குற்றங்கள்.. இன அழிப்புக்கள் தொடர்பில் சிங்களம் சரியான நேரத்திற்கு சரியாக தண்டிக்கப்பட்டிருந்தால் இந்த நிலைமை தோன்றி இருக்காது. இது விடயத்தில்.. சர்வதேசம் தொடர்ந்து தவறுகளை விட்டுக் கொண்டு கண்மூடிக் கிடக்கிறது. அவர்களை எதிர்பார்த்து ஒட்டுமொத்த தமிழினமும் நாசமாவது தான் நடக்கும் போலத் தெரியுது.

 

இதற்கு முடிவு கட்ட... சிங்களப் படைகளை முதலில் தமிழர் நிலத்தில் இருந்து அகற்றனும். சிங்களப் படைகளை நாங்க போகச் சொல்லேல்ல என்கின்ற தலைவர்களும் இவற்றிற்கு பொறுப்பேற்று பதவிகளை விட்டு ஓடிடனும்..! பொறுப்புள்ளவர்கள் கட்சித் தலைமைகளை ஏற்றாலும் ஒற்றுமையோடு செயற்பட்டாலும் கொஞ்சம் என்றாலும் உலகம் கண் விழிக்க வகை செய்யலாம். :icon_idea:

Edited by nedukkalapoovan

போர்க்குற்றங்கள்.. இன அழிப்புக்கள் தொடர்பில் சிங்களம் சரியான நேரத்திற்கு சரியாக தண்டிக்கப்பட்டிருந்தால் இந்த நிலைமை தோன்றி இருக்காது. இது விடயத்தில்.. சர்வதேசம் தொடர்ந்து தவறுகளை விட்டுக் கொண்டு கண்மூடிக் கிடக்கிறது. அவர்களை எதிர்பார்த்து ஒட்டுமொத்த தமிழினமும் நாசமாவது தான் நடக்கும் போலத் தெரியுது.

 

இப்பொழுதும் சர்வதேசம் தொடர்ச்சியாக தவறு விடுகிறது. :(

http://www.yarl.com/forum3/index.php?showtopic=113004&p=836339

 

ஆனாலும் சர்வதேசம் தேவையில்லை என்று தூக்கி எறிந்து விட்டு செயல்படுமளவுக்கு எமக்கு பலமில்லை. பெரிய நாடுகளின் ஆதரவும் இல்லை. :rolleyes:

Edited by துளசி

குறிப்பிட்ட பெண்கள் பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தப்பட்டாதாக இணையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது..வாசிக்கும் பொழுது ரத்தம் கொதிக்கிறது..தட்டிக்கேட்க யாருமற்ற அநாதையாகிவிட்டோமே நாங்கள்..விடுதலையின் பெறுமதியை மீண்டும் மீண்டும் உணரவைக்கிறது சிங்களப்பேரினவாதம் தனது செயற்பாடுகளில்..நிச்சயமாக போராடாமல் எமக்கு விடிவு வரப்போவதில்லை...மீண்டும் விடுதலைப்போராட்டம் ஆரம்பிக்கவேண்டும் மக்களால்..எங்கிருந்து என்பதுதான் இன்னமும் குழப்பமாக இருக்கிறது..அதற்கும் சிங்களம்தான் விரைவாக தனது செயற்பாட்டின்மூலம் பதில் தரவேண்டும்..

 

விடுமுறைக்கு விலாசம் காட்ட போவோரும்...

அங்கு எல்லாம் அந்த மாதிரி என பொது இடங்களில் கூறுவோரும்..

சிங்கள பொருட்களை வேண்டி அதன் பொருளாதாரத்திற்கு வலுச்சேர்ப்போரும் ...

 

இவை பற்றி சிந்திக்கவேண்டும்!

எங்கை ஆடு அடிக்கினம்? அரசியல் மதிப்பு ஒருகுடலை என்ன விலை?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஹிலரி கிளிண்டனுக்கு கடிதம் எழுதுங்கள். இலங்கையில் பெண்களுக்கு எதிராக ராணுவம் பாலியல் வன்முறையை ஆயுதமாக பயன்படுத்தியதாக முன்பு குற்றம் சுமத்தியவர். நாடு கடந்த அரசு உலக தமிழர் பேரவை தகுந்த ஆதாரங்களுடன் அமெரிக்காவின் ராஜாங்க தினைகலதுக்கு எழுத வேண்டும்.

http://www.state.gov/s/gwi/rls/rem/2012/201057.htm

http://www.tamilsydney.com/content/view/2458/37/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.