Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பங்கு பிரிப்பும் படுகெலையும் பாகம் 3

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 பங்குபிரிப்பும் படுகெலையும் பாகம் 3
 
(பூபாளம் கனடா)
சாத்திரி
 
கடந்த தெடரில் பங்குபிரிப்பும் 1995ம் ஆண்டு புலிகளின் புலனாய்வு மற்றும் வெளிக்கட்டமைப்பை சேர்ந்தவர்களாலேயே புலிகளின் அனைத்துலகத்தால் நடாத்தப்பட்ட  வியாபார நிலையமும் அவர்களது அலுவலகமும் தாக்கப்பட்டதை  எழுதியிருந்தேன். அது பலரிற்கும் ஆச்சரியத்தை கொடுத்திருந்தது, என்னுடைய நண்பர்கள் மட்டுமல்ல பல முன்னைநாள் போராளிகள் கூட அந்தச் சம்பவம்பற்றி அறிந்திருக்கவில்லை,உண்மையிலேயே இலங்கை புலனாய்வாளர்களோ அல்லது ஒட்டுக்குழுக்களோ நடத்தியதாகவே இது வரை காலமும் நினைதஇதிருந்தார்கள், அதேபோலத்தான்  புலிகள் அமைப்பின் அனைத்துலக செயலகத்தை சேர்ந்தவரே தங்களது பொறுப்பாளரை போட்டுக்கொடுத்த சம்பவம் ஒன்றும் யெர்மனியில் நடந்தது,
 
 
புலிகள் அமைப்பின் முடிவிற்கு பின்னர் அனைத்துலக செயலக பொறுப்பாளர் கஸ்ரோ இறந்துபோக வெளிநாட்டு அனைத்துலகச்செயலகம் அனைத்தையும் நோர்வே யில் இருந்து நெடியவன் என்பவர் இயக்க அவரிற்கு அடுத்த நிலை பொறுப்பாளராகவும் யெர்மனிய பொறுப்பிலும் இருந்தவர்தான் வாகீசன் என்பவர். புலிகளின் முடிவிற்கு பின்னர் நெடியவனும் வாகீசனும் கனடா அமெரிக்கா தவிர்ந்த மற்றைய நாடுகளிற்கு பயணம் செய்து புலிகள் அமைப்பின் சொத்து விபரங்களை திரட்டியவர்கள்  தங்களின் நம்பிக்கைக்குரிய தாங்கள் கைகாட்டும் நபர்களின் பெயரிற்கு மாற்றி விடும்படி கோரிக்கை வைத்தனர் ,மறுத்தவர்கள் மிரட்டப்பட்டனர்
 
vakesan_zps04d82faf.jpg
வாகீசன்
,
அதேபோலத்தான் சுவிசிலும் அனைவரிடமும் கோரிக்கை வைத்தபோது சுவிஸ் பொறுப்பாளராக இருந்த குலம்  இவர்களது கோரிக்கைக்கு மறுத்ததோடு பலர்  தன்னை நம்பித்தான் கடன் எடுத்து பணம் தந்திருக்கிறார்கள் எனவே வியாபார நிலையங்களால் வரும் வருமானத்தை வைத்து அந்தக்கடன்களை அடைக்கவேண்டும் என்று சொன்னதற்கு. கடன் அடைக்கிற வழி எங்களிற்கு தெரியும் நீ உனது வேலையை பார் இன்றிலிருந்து நீ பொறுப்பாளர் இல்லையென்று விட்டு நெடியவன் குலத்தை தாக்கி அலுவலகத்தை விட்டு துரத்தியும்விட்டிருந்தார்கள், இங்கு குலம் என்பவர் யார் என்றும் சுருக்கமாக சொல்லி விடுகிறேன், சுவிஸ் நாட்டில் புலிகளின் பொறுப்பாளரக இருந்த முரளி  தற்சமயம் கனடாவில் வசிக்கிறார் இவர் நிதி சேகரித்தது சிலரை அச்சுறுத்தியது தொடர்பா சுவிஸ் காவல்த்துறையால் கைதான பின்னர் சுவிஸ் பொறுப்பை ஏற்றவர் குலம்,எழுபதுகளின் இறுதியில் பிரபாகரன் அவர்கள் தலைமறைவு வாழ்க்கை நடத்திய காலங்களில் பிரபாகரனை புன்னாலைக்கட்டுவன் பகுதியில் தனது வீட்டில் தங்கவைத்து பராமரித்ததில் இருந்து இவரது இயக்கத்துடனான தொடர்பு தொடங்குகின்றது,பிரபாகரனே குலம் அண்ணை என்று மரியாதையோடு அழைக்கப்பட்டதொரு மனிதர்,
 
ltteSwisskulam-147x150_zps1beb18ec.jpg
குலம்
1984 ம் ஆண்டு இலங்கையரசின் அவ்ரோரக விமானத்தை தானே தயாரித்து எடுத்துச்சென்ற நேரக்கணிப்பு குண்டின் முலம் தகர்த்தவர்,அதற்கும் மேலால்  ஆரம்ப கால இயக்க விதிக்கு அமைய இன்றுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் ஒரு மனிதன் , பிரபாகரன் அவர்களே திருமணம் செய்த பின்னர்  பல தடைவைகள் குலத்தை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுக்கொண்டும் தமிழீழம் கிடைக்கட்டும் பார்க்கலாம் என்று சொல்லிவந்தவர்,புலிகளை திட்டுபவர்கள் கூட குலம் அண்ணையை திட்டுவது கிடையாது அப்படியான ஒருவரை சொத்திற்காக நெடியவனும் வாகீசனும்அடித்து உதைத்திருந்தார்கள், ********************************************** *********************** ******************
 
nediyavan_zps0a7d3761.jpg
நெடியவன்
இதற்கு அடுத்ததாக யெர்மனியில் அனைத்து மானிலங்களிலும் தங்கள் பெயர்களில் சொத்துக்களை வைத்திருந்த பொறுப்பாளர்கள் அனைவரையும் அதன் விபரங்களோடு தன்னை வந்து சந்திக்கும்படி அழைப்பு விடுத்த வாகீசன் சந்திக்கும் இடம் திகதி நேரம் அனைத்தையும் அறிவித்து விடுகிறார். அவர்கள் சந்திப்பதாக சொல்லியிருந்த  உணவு விடுதியில் வாகீசன் காத்திருக்கிறார். பெரும்பாலனவர்கள் வந்துசேர்ந்துவிட்டிருந்தார்கள் முக்கியமான ஒருவரைத்தவிர,அவர் யாரெனில் தென்மானிலங்களிற்கு பொறுப்பாக இருந்த ஸ்ருக்காட் நகரை சேர்ந்த சிறிரவி  என்பவரே,  சிறிரவிக்காக காத்திருந்தவேளை சிறிரவி வரவில்லை அவரிற்கு பதிலாக அங்கு வந்தவர்கள் யெர்மனிய காவல்த்துயையினர், வாகீசனையும் அவரோடு நின்றவர்களையும் கைது செய்கிறார்கள், ஒபகௌசன் என்னும் இடத்தில் இயங்கிய வாகீசனின் அலுவலகத்தினுள் புகுந்த யெர்மன் காவத்துறையினர் அங்கிருந்த ஆவணங்களையும் எடுத்துச் சென்றார்கள்.
 
வாகீசனை ஏற்கனவே யெர்மனிய காவல்த்துறையினர் தங்கள் கண்காணிப்பு வழையத்தினுள் கொண்டுவந்திருந்தாலும் அன்று அனைவரும் முக்கிய ஆவணங்களோடு சந்திப்பதை போட்டுக்கொடுத்ததேடு தன்னுடைய சொத்துக்களை சிறிரவி வாகீசனிடமிருந்து பாதுகாத்துக்கொண்டார்,  ஆனால் வழைமைபோல இலங்கை அரசின் சதி என்று தமிழ் இணையங்கள் எழுதித் தள்ள  இந்த கைதுகளின் பின்னணியில் தானே இருந்ததாக சிறீலங்காவிற்கான தூதர் ஜெகத்டயஸ் அறிவித்ததாகவும் செய்திகள் வெளியானது, தொடர்ந்தும் யெர்மனியில் பலர் கைதாகி விசாரணைகள் நடந்தாலும் இதுவரை புலிகள் அமைப்பில் ஒரு பெரும் பகுதியான தென்மானில பொறுப்பாளரான சிறிரவியை மட்டும் இன்னமும் யெர்மன் காவல்த்துறையினர் விசாரணை செய்யவில்லை.இவரிடமிருந்து தொடர்ந்தும் யெர்மன் காவல்த்துறை தகவல்களை பெற்றுக்கொண்டிருக்கலாம், எல்லாவற்றையுமே பணமாக்கத் தெரிந்த அனைத்துலகசெயலகம் வாகீசன் கைதானதும் ,வாகீசனை வெளியே எடுக்கவேண்டும் என்று அதற்கும் மக்களிடம் பணம் சேர்த்தார்கள், நிதி சேர்ப்பது விரும்பியவர்கள் கொடுப்பது அவரவர் விருப்பம் ஆனால் நிதியை சேகரிப்பவர்  சிறிரவியே . அவரே மாட்டியும் விட்டுவிட்டு வெளியே எடுக்க அவரே நிதியும் சேகரிக்கிறார்,சிறி ரவி தான் வாகீசனை போட்டுக்கொடுத்தார் என்று அறிந்த சிலர் சிறிரவியிடம் எதற்காக வாகீசனை போலிசிடம் போட்டுக்குடுத்தாய் எனகேட்டதற்கு அவர் சொன்ன பதில்  நான் போட்டுக் குடுக்கவில்லை நான் யேர்மனியில் வசிப்பதால் யேர்மன் நாட்டு காவல்த்துறையின் நடவடிக்கைக்கு ஒத்துளைப்பு கொடுத்தேன்  அது காட்டிக்கொடுப்பு அல்ல என்றாராம். ********** ****************** ****************,
 
அதே இவர்களே தங்களுக்குள்ளை காட்டிக்குடுத்தால்  அது காவல்த்துறைக்கு ஒத்துளைப்பாம்,கவுண்டமணி பாணியில்  அடங்கொக்கா மக்கா என்று  சொல்லதோன்றுகிறதா,,ஆனால் வாகீசன் வெளியே வந்தபாடுதான் இல்லை, இதேபோலத்தான் பிரான்சில் பரிதி மற்றும் பலரும் கைது செய்யப்பட்டபோதும் பிரான்சிலும் அவர்களை வெளியே எடுக்கவென நிதி சேகரிக்கப்பட்டது  அதற்கென ஒரு குழு அமைக்கப்பட்டு அதற்கு பொறுப்பாளராக பாரிஸ் ஈழநாடு  பாலச்சந்திரன் நியமிக்கப்பட்டிருந்தார் , இந்தக்குழுவை பரிதி கைதின் பின்னர் பிரான்ஸ்  பொறுப்பை எடுத்த மயூரன் குட்டி அல்லது விடுதலை  என்பவரோடு சேர்ந்து அமைத்தவர்களில் நானும் ஒருவன் ,அந்த குழுவை அமைத்ததோடு நான் ஒதுங்கி விட்டிருந்தேன், பிரான்சிலும் நிதி சேகரிக்கப்பட்டது ஆனால்  கைதானவர் எவரது வழக்கிற்கும் அந்த நிதி செலவளிக்கப்படவில்லை .கைதானவர் அவரவர் தங்கள் உறவுகள் நண்பர்களின் உதவிகளுடனேயே வழக்கு செலவுகளை கவனித்திருந்தார்கள்.
 
 
இது இப்படியிருக்க யெர்மனியில் பரப்புரைக்கு பொறுப்பாக இருந்தவர் பெயர் அகிலன் என்பவர். இறுதி யுத்தத்திற்கு என சேகரித்த நிதியில் ஒரு பகுதி இவரது கைகளிலும் இருந்தது அதனை அவர் மடகஸ்காரில் முதலீடு செய்திருந்தார் அதேநேரம் அகிலன் சிறுவயதிலேயே யெர்மனிக்கு வந்துசேர்ந்தவர் யெர்மனிய குடியுரிமை பெற்றவர் இவரிற்கு யெர்மன் சட்டதிட்டங்கள் என்றால் என்ன யெர்மனிய காவல்த்துறை எப்படிப்பட்டது என்று தெரிந்திருந்திருந்தவர். வாகீசனின் அடிதடி அடாவடி அரசியலால் நிச்சயம் ஒரு நாளைக்கு மாட்டவேண்டி வரும் என்று தெரிந்திருந்தது ஆனால் வாகீசனை கட்டுப்படுத்த முடியாமல் இருந்தார். அதனால் நிரந்தரமாக குடும்பத்துடன் மடகஸ்காரிற்கு சென்று குடியேறிவிட திட்டமிட்டிருந்தார். ஆனால் யேர்மன் காவல்த்துறை முந்திவிட்டிருந்தது.வாகீசனை கைது செய்துவிட்டார்கள். அதை அறிந்த உடனே அகிலன் யேர்மனிய காவல்த்துறை எல்லாம் மொக்கனுகள் என நினைத்தாரோ என்னவோ அவசரமாக மடகஸ்காரிற்கு தனியா பறந்துவிட்டிருந்தார்.ஆனால் அவரது நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்துக்கொண்டிருந் யேர்மன் காவல்த்துறையினர்  அகிலனை மடகஸ்காரிலிருந்துயேர்மனிக்கு  நாடுகடத்தவைத்து யேர்மன் விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர்.
 
இவையனைத்தும் அவ்வப்போது செய்திகளாக வெளிவந்தவைதான். அனைத்துலகச் செயலகம் புதிதாக விட்ட புலுடாதான்  மீள இணையும் புலிகள் என்கிறதொரு   காணொளி. 
கைத்தொலைபேசி முலம் எடுக்கப்பட்ட காணொளியில் முதலில் மாவீரர்நாள் உறுதி உரை என எழுத்து போகின்றது. பின்னர்  இருளான  மரங்கள் உள்ள  இடமொன்றில் முகங்கள் மறைக்கப்பட்ட சிலர் கறுப்பு உடையணிந்தபடி நிற்க முன்னால் ஒரு பெண் சிறிய ரோச்லைற் வெளிச்சத்தில் கடதாசியில் எழுதியிருப்பதை படிக்கிறார். தாங்கள் முள்ளிவாய்க்காலில் நின்றே உறுதியெடுப்பதாக தொடங்குகிறார். முள்ளிவாய்கால் பகுதிமுழுக்க முழுக்க இலங்கை ராணுவமே நிற்கிறதென்பது வேறை கதை. அறிக்கையை படித்தவர்   5ம் கட்ட ஈழப்போரை தொடங்கப்போகிறோம் என்கிறார்.ஒருவர் கைகளிலும் ஒரு பொல்லாங்கட்டை கூட இல்லை. சரி அவர்களது உறுதி மொழியில் அடுத்த கட்ட நடவடிக்கை கொள்கை விளக்க உரை தரைவரைப்பற்றிய தகவல்கள்.எதாவது வருமா என நானும் ஆவலோடு காத்திருந்தேன். ஆனால் அந்தப் பெண்மணியோ  வினாயகத்தையும்  அவரது சகோதரரையும் திட்டித்தீர்க்கிறார்,இதுதான் அவர்களது மாவீரர் உறுதி உரை. மற்றையவர்களை திட்டித்தீர்ப்பதுதான் அவர்களது 5 ம் கட்டப்போர் என்று அப்பொழுதுதான்  எனக்குப்புரிந்தது.
 
அறிக்கை படித்து முடிந்ததும் ஒருவர் ஆமிவாறான் ஓடுங்கோ என்பார் . அறிக்கை படித்து முடியும்வரை ஆமிக்காரரை காத்திருக்கச் சொல்லியிருப்பாங்கள் என்று நினைக்கிறேன். பற்றைகள் உள்ள பகுதியால் ஓடுகிறார்கள். தமிழ் சினிமாவில் கதாநாயகன் உசிலம்பட்டியில்  கொழுத்தும் வெய்யிலில் கதா நாயகியை கலைக்கத்தொடங்க  உடனேயே சுவிசில் கொட்டும் பனியில் பாடல் தொடங்குவதைப்போல  பற்றைக்குள்ளால் ஓடியவர்கள் திடீரென மணல் நிறைந்த கடற்கரை ஓரமாக இரண்டு கல்லறைகள் போல் மணலால் அமைக்கப்பட்டு  ஒரு தீப்பந்தம் ஏற்றிய இடத்தில் சத்தியப்பிரமாணம் எடுக்கிறார்கள். அத்தோடு அனைத்துலகத்தின் படம்காட்டல் முடிவடைகின்றது.  5ம் கட்ட ஈழப்போர் என்பது அடுத்தவரை திட்டித்தீர்ப்பது என்பதால் இக்கட்டுரையை எழுதத்தொடங்கியதிலிருந்து என்மீதும் 5 கட்ட ஈழப்போர் தொடங்கி விட்டது எனவே இந்தக் கட்டுரையில் வாகீசனின் கைது பற்றி  எழுதவேண்டி வந்ததால் பரிதி இறுதியாக தமிழரசனோடு நடாத்திய பேச்சு வார்த்தை பற்றி எழுதமுடியவில்லை. எனவே அதனை அடுத்த  பதிப்பில் பார்ப்போம்..தொடரும்...............
 
 
நியானி: கள விதிகளை மீறும் வரிகள் தணிக்கை

Edited by நியானி

ச்சீ,சப்பெண்டு போச்சு  :D

 

எழுத்தை விட படங்கள் கூடிப்போச்சு :lol:  இடத்தை நிரப்ப  :D

ச்சீ,சப்பெண்டு போச்சு  :D

 

எழுத்தை விட படங்கள் கூடிப்போச்சு :lol:  இடத்தை நிரப்ப  :D

 

பக் எண்டு இருக்குமே? இந்த சிரிப்பே  வலிய சிரிக்கிற மார்திரி இருக்கு.

கொஞ்சம் கொஞ்சமாக படங்களும் வெளிவருது    இனி எப்படி காசு சேர்க்கிறது.

 

அடுத்த மாவீரர்  மாசம் வந்து அதில யாரும்  இசைநிகழ்ச்சி நடத்தினால் தான் பிழைப்பு நடக்கும் போல? :lol:

பக் எண்டு இருக்குமே? இந்த சிரிப்பே  வலிய சிரிக்கிற மார்திரி இருக்கு.

கொஞ்சம் கொஞ்சமாக படங்களும் வெளிவருது    இனி எப்படி காசு சேர்க்கிறது.

 

  இல்லை சசி, இணையத்தளத்தில் உள்ள படங்களை வைத்து அர்ச்சனை  :D

 

 காசு சேர்க்கிறது கடினம். ஆனால் உரிய இடத்தில் வாங்கலாம்  :D

சாத்திரி அண்ணா, வாகீசனை விநாயகம் கட்டிகொடுத்தாக அப்ப இவர்கள் விட்ட  கதை பொய்யோ?அதுபற்றி ஏதாவது தெரிந்தால் எழுதுங்கோ :icon_idea:

Edited by DAM

அடுத்த மாவீரர்  மாசம் வந்து அதில யாரும்  இசைநிகழ்ச்சி நடத்தினால் தான் பிழைப்பு நடக்கும் போல? :lol:

 

கனடாவில் மாவீரர் தினம் நடாத்த சட்டத்தடை இல்லை.

கனேடிய சட்டங்களுக்கு அமைய சிறப்பாக நடக்கின்றது, தொடர்ந்தும் நடக்கும்.

 

 உங்கள் ஆசியும் துணை இருக்கும்  :D

Peace-Dove-from-Heaven.jpg



two_steps_from_hell_by_wolfroad-d3aza4h.

என்னமோ தெரியாது எனக்கு அடிக்கடி   யாழ்களத்திலும்  முன்னர் பல பொன்னான கருத்துகள் சொன்ன  குறுக்காலபோனவன் என்ற உறவு தான் ஞாபகத்துக்கு வருகிறார்.

தொடருங்கள் சாத்திரி ,

தொடருங்கள் சாத்திரி ,

அர்யுன் 

 

நீங்களும் எழுதலாமே நீங்க புளட்டிலை இருந்து யாரை காட்டிக் கொடுத்தீங்க? யாரைப் போட்டு தள்ளிநீங்க எண்டு?  புளட் விட்ட பிழைகள் மாணிக்க தாசன் சாகும் வரைக்கும் செய்த அரிய நற்  சேவைகள்  எண்டு   எடித்து விட்டால் நாங்களும் கருத்து  எழுதி உங்களை கவுரவிப்போமே . உங்க பூபாளம் குழுவை யார் கனடாவில் இயக்குறது இதுவரை தேசியத்தை எப்பிடி விற்றீங்க இப்ப எப்பிடி உங்க வியாபாரம் என்று எழுதலாம் 
பக் எண்டு இருக்குமே? இந்த சிரிப்பே  வலிய சிரிக்கிற மார்திரி இருக்கு.

கொஞ்சம் கொஞ்சமாக படங்களும் வெளிவருது    இனி எப்படி காசு சேர்க்கிறது.

 

அடுத்த மாவீரர்  மாசம் வந்து அதில யாரும்  இசைநிகழ்ச்சி நடத்தினால் தான் பிழைப்பு நடக்கும் போல? :lol:

மாவீரர் மீது உண்மையான பற்று உள்ள ஒரு தமிழன்  இருக்கும் வரை பிச்சை எடுத்தாவது மாவீரர் தினம் நடாத்துவார்கள் உங்களுக்கு அந்த கவலை வேண்டாம். எல்லோரும் உணர்வு கெட்ட ஜென்மங்கள் இல்லை 

 

சாத்திரி அண்ணா, வாகீசனை விநாயகம் கட்டிகொடுத்தாக அப்ப இவர்கள் விட்ட  கதை பொய்யோ?அதுபற்றி ஏதாவது தெரிந்தால் எழுதுங்கோ :icon_idea:

விநாயகம் புலத்தில் வர முதல் வாகீசன் போய்ட்டார் பயபிடாதைங்கோ 

Edited by Ramanan005

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அர்ஜுன் காட்டில மழை.

தொடருங்கள் சாத்திரி ,

 

Divide_and_conquer_2_by_Latuff2.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிலர் தங்கள் எழுத்துக்கள் மூலம் தங்களின் உண்மை முகத்தை வெளிப்படுத்துவர். இந்த நாவல் அதற்க்கு நல்ல உதாரணம்.

கடந்த தொடரில் பங்குபிரிப்பும் 1995ம் ஆண்டு புலிகளின் புலனாய்வு மற்றும் வெளிக்கட்டமைப்பை சேர்ந்தவர்களாலேயே புலிகளின் அனைத்துலகத்தால் நடாத்தப்பட்ட வியாபார நிலையமும் அவர்களது அலுவலகமும் தாக்கப்பட்டதை எழுதியிருந்தேன். அது பலரிற்கும் ஆச்சரியத்தை கொடுத்திருந்தது, என்னுடைய நண்பர்கள் மட்டுமல்ல பல முன்னைநாள் போராளிகள் கூட அந்தச் சம்பவம்பற்றி அறிந்திருக்கவில்லை,
 
சாத்திரி அவர்களே முதலில் இதில் புலிகள் அமைப்பின் புலனாய்வுப்பிரிவு ஆட்களை உறுதிப்படுத்தவும் .இது மிகவும் தவறான தகவலின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது; தாங்கள் குறிப்பிட்ட ஈசன் ,சக்தி என்போர் எந்தக் காலத்தில் புலனாய்வுப்பிரிவில் இருந்தார்கள் என்று தகவல் தர முடியுமா?
 
ஈசன் என்பவர் புலனாய்வுப்பிரிவின் எந்தப் பொறுப்பாளரின் கீழ் செயற்பட்டவர்?
 
வசாவிளான் ஈசன் தனது அறிக்கையை யாருக்கு எந்த வழியில் அனுப்பியவர்? என்றாவது உறுதிப்படுத்தி உங்களால் தகவல் தரமுடியுமானால்,
 
இந்த பெயர் வழிகள் எப்படி தங்களை புலனாய்வு என்று சொல்லி பிரான்சில் படம் காட்டியுள்ளனர் என்பது உறுதியாக தங்களின் கட்டுரையில் துலங்குகிறது.
 
இதற்கு பதில் தருவீர்களாக இருந்தால் மிகுதி புனைவுகளையும் கட்டுடைக்க முடியும்?
 
பொட்டம்மான் உயிருடன் இல்லையென்பதால் புலனாய்வு போராளி , புலனாய்வு முகவர், தூங்கும் முகவர் ,தூங்கா முகவர் என்று எத்தனை பேர் கிளம்பியுள்ளீர்கள்?
 
இன்னமும் உரிமை கோரப்படா 300க்கும் மேற்பட்ட புலனாய்வு மாவீரர்களின் தியாகத்தால் தான் ஒட்டுமொத்த புலிகள் இயக்கமே பல வெற்றிகளை பெற முடிந்தது என்றால் மிகையாகாது;அப்படிப்பட்ட பிரிவை சேர்ந்த எனக்கு இந்த போலிகளை அடையாளம் காட்ட வேண்டிய தேவைஇருப்பதால் தான் இந்த கோரிக்கையை முன் கொண்டு வருகிறேன்;
 
தகவல் தவறுகளால் குறிப்பிட்ட பிரிவினையும் அப்பிரிவில் இருந்தவர்களின் தியாகத்தையும் கொச்சைப்படுத்த இடமளிக்க முடியாது ;
 
-புகழேந்தி

http://muster4.juradesign.de/index.php?wahl=31&u id=149198

 

யேர்மன் மொழி தெரிந்தவர்கள் மேற்கண்ட பக்கத்துக்கு சென்று பாருங்கள். மேலும் உண்மை புரியும்



http://muster4.juradesign.de/index.php?wahl=31&u id=149198

 

யேர்மன் மொழி தெரிந்தவர்கள் மேற்கண்ட பக்கத்துக்கு சென்று பாருங்கள். மேலும் உண்மை புரியும்

ஒத்த இன கூட்டங்கள் ஒன்றாய் சேர்ந்து கூடி மகிழுதடா ........ சிற்றின்பம் விரும்பின் உன் சிரம் ஆயிரம் பிளவாக ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;; :lol:  :lol: :lol:  :lol:  :D  :D  :icon_idea:  :icon_idea:  :icon_idea:  :icon_idea:  முக்கியமான எழுத்துப்பிழை திருத்தப்பட்டது

 

 

 

Edited by தமிழ்சூரியன்

கொலண்ட விசாரணை  முடியட்டும் அதுக்குப் பிறகு சிலபேருக்கும் இதே நிலமைதானாம்.smiley-violent072.gif

சாத்திரி அண்ணா எழுதிய இந்த கதை நல்லா இல்லை. :lol: கொஞ்சம் நல்ல கதையா எழுதுங்கோ. :icon_idea:

 

உங்கள் அரசியல் கட்டுரைகளை வாசித்து வரலாற்றின் உண்மை பகுதியை அறிந்து கொள்ள முடியாது. கதை போல் வாசித்து விட்டு போக வேண்டியது தான். <_<

Edited by துளசி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
கடந்த தொடரில் பங்குபிரிப்பும் 1995ம் ஆண்டு புலிகளின் புலனாய்வு மற்றும் வெளிக்கட்டமைப்பை சேர்ந்தவர்களாலேயே புலிகளின் அனைத்துலகத்தால் நடாத்தப்பட்ட வியாபார நிலையமும் அவர்களது அலுவலகமும் தாக்கப்பட்டதை எழுதியிருந்தேன். அது பலரிற்கும் ஆச்சரியத்தை கொடுத்திருந்தது, என்னுடைய நண்பர்கள் மட்டுமல்ல பல முன்னைநாள் போராளிகள் கூட அந்தச் சம்பவம்பற்றி அறிந்திருக்கவில்லை,
 
சாத்திரி அவர்களே முதலில் இதில் புலிகள் அமைப்பின் புலனாய்வுப்பிரிவு ஆட்களை உறுதிப்படுத்தவும் .இது மிகவும் தவறான தகவலின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது; தாங்கள் குறிப்பிட்ட ஈசன் ,சக்தி என்போர் எந்தக் காலத்தில் புலனாய்வுப்பிரிவில் இருந்தார்கள் என்று தகவல் தர முடியுமா?
 
ஈசன் என்பவர் புலனாய்வுப்பிரிவின் எந்தப் பொறுப்பாளரின் கீழ் செயற்பட்டவர்?
 
வசாவிளான் ஈசன் தனது அறிக்கையை யாருக்கு எந்த வழியில் அனுப்பியவர்? என்றாவது உறுதிப்படுத்தி உங்களால் தகவல் தரமுடியுமானால்,
 
இந்த பெயர் வழிகள் எப்படி தங்களை புலனாய்வு என்று சொல்லி பிரான்சில் படம் காட்டியுள்ளனர் என்பது உறுதியாக தங்களின் கட்டுரையில் துலங்குகிறது.
 
இதற்கு பதில் தருவீர்களாக இருந்தால் மிகுதி புனைவுகளையும் கட்டுடைக்க முடியும்?
 
பொட்டம்மான் உயிருடன் இல்லையென்பதால் புலனாய்வு போராளி , புலனாய்வு முகவர், தூங்கும் முகவர் ,தூங்கா முகவர் என்று எத்தனை பேர் கிளம்பியுள்ளீர்கள்?
 
இன்னமும் உரிமை கோரப்படா 300க்கும் மேற்பட்ட புலனாய்வு மாவீரர்களின் தியாகத்தால் தான் ஒட்டுமொத்த புலிகள் இயக்கமே பல வெற்றிகளை பெற முடிந்தது என்றால் மிகையாகாது;அப்படிப்பட்ட பிரிவை சேர்ந்த எனக்கு இந்த போலிகளை அடையாளம் காட்ட வேண்டிய தேவைஇருப்பதால் தான் இந்த கோரிக்கையை முன் கொண்டு வருகிறேன்;
 
தகவல் தவறுகளால் குறிப்பிட்ட பிரிவினையும் அப்பிரிவில் இருந்தவர்களின் தியாகத்தையும் கொச்சைப்படுத்த இடமளிக்க முடியாது ;
 
-புகழேந்தி

 

புகழேந்தி அல்லது இளங்கதிர். புலிகளின் புலனாய்வு பிரிவில் அதற்குள்ளான பிரிவுகள்  1998 ம் ஆண்டிற்கு பின்னரேயே  உருவாக்கப் பட்டது. அதிலும் வெளிநாட்டிற்கென  தனியான பிரிவு 1999ம் ஆண்டுதான் உருவாக்கப்பட்டது.  நான் குறிப்பிட்ட இருவரும்   வெளிநாட்டு  பிரிவில் வேலை செய்ததோடு பொட்டுவோடும் தொடர்புகளை  பேணியவர்கள்.  அதே நேரம் சக்தி தாய்லாந்தில் கைதான சமயம்  இலங்கையரசு தன்னிடம் ஒப்படைக்க சொல்லி கேட்டதெல்லாம் செய்திகளில் வெளியாகியிருந்தது  சர்வதேச ஊடகங்கள்  கூட செய்தி வெளியிட்டிருந்தன. அதே நேரம் புலனாய்வு பிரிவில் இருந்தவர்கள் பற்றி புரிந்து கொள்வதானால் அதனோடு பரிட்யம்  உள்ளவர்கள் அல்லது அதில் இருந்தவர்களிற்கு மட்டுமே புரியும். நீங்கள் புலநாய்வு பிரிவில் இருந்தவரானால்  என்னுடன் தனிமடலில் தொடர்பு கொள்ளுஙகள் மேலதிக விபரங்கள் தருகிறேன்.  அதே நேரம்  தற்சமயம்  அனைத்துலகம்  5 ம் கட்ட ஈழப்போர் என்பது தெய்வீகன் என்பவரை நம்பித்தான்  செயற்படுகிறார்கள்.   வெளியே சாதாரணமானவர்களிற்கு பரிச்சயம் இல்லாத தெய்வீகன் என்பவர் யார் எங்கே இருக்கிறார் என்பன தொடர்ந்து கட்டுரையில் வெளியாகும். அது வரை பொறுத்திருக்கவும்.

Edited by sathiri

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில் உள்ள தனிப்பட்டவர்களின் விடையங்களை தவிர்த்து, பொதுவான விடையங்களை எழுதவதில் தவறில்லை என்று நான் நினைக்கிறன்- அப்படி எழுதினால் யாருக்காவது விளங்குமா அல்லது யாரேனும் கவனத்தில் எடுப்பார்களா என்றும் தெரியவில்லை.- எனக்கு தெரிந்த சிறிய கருத்து, எங்களுடைய குழு போட்டிகள், இறுதில் ஒரு பகுதியை சிங்களவர்களிடம் சேரவே வகுக்கும்.  சாத்திரி எழுதுகிற இந்த கட்டுரை வந்துள்ள பூபாளத்தில் ஒரு கட்டுரை/ ஆசிரியர் தலையங்கம் வாசித்தேன், முதல் பந்தியில் மகிந்த ராஜபக்க்ஷ சொன்ன- எங்களது படைகள் ஒரு கையில் சமாதானத்தையும், மறுகையில் என்னத்தையும் எடுத்து கொண்டு சென்றார்கள் என்று தொடங்குகிறது. இது ஒரு அரச சார்பு, பத்திரிக்கை  இணையம்  என்று சொல்ல பெரிய புலனாய்வு தேவையில்லை. ஆனால் அதேநேரம்; தமிழ் மக்களை மாக்களாக்க வைத்திருக்க விரும்பும் மற்றவர்களையும் அறிய வேண்டிய தேவை இருக்கிறது. துரதிஷ்ட வசமாக இரண்டுக்கும் இடையே என்கிற  நிலை இங்கு இல்லை. அதைத்தான் இரண்டு பகுதியும் விரும்புகிறார்கள் அல்லது அவர்களை இயக்குகிறவர்கள் விரும்புகிறார்கள்.

ஆனால் பொதுவில் இந்த நிலைகள் நீடித்தால் பலரும் இன்னும் விலத்தி ஓட கூடும்..அதைத்தான் விரும்புகிறார்களோ

 

புகழேந்தியின் கருத்தை படித்த பின்பு எனக்கு ஒரு சந்தேகம் வருகிறது. யாராவது தீர்த்து வைத்தால் நல்லது.

ஒரு புலனாய்வு அமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் அறிந்து வைத்திருப்பார்களா? வேறாரு நாட்டில் அல்லது பகுதியில் வேலை செய்கின்ற புலனாய்வு உறுப்பினர்களுக்கு இன்னொரு பகுதியில் வேலை செய்பவர்கள் பற்றிய தகவல்கள் தெரிந்திருக்குமா?

புகழேந்திக்கு அனைவரையும் தெரியும் என்பது போன்று கருத்து எழுதியிருக்கிறார். இது உண்மை என்றால் பொட்டம்மான் உயிரோடு இருக்கிறார் என்று நம்புகிறேன். அவர் யாழ் களத்திலும் எழுதுவது மகிழ்ச்சியை தருகிறது.

Edited by சபேசன்

நீங்கள் புலநாய்வு பிரிவில் இருந்தவரானால்  என்னுடன் தனிமடலில் தொடர்பு கொள்ளுஙகள் மேலதிக விபரங்கள் தருகிறேன்.  

 

தொடர்பு கொள்ளுங்கள்...

 

 பின்னர் உங்களை வைத்தே அடுத்த பகுதி பின்னப்படும்  <_<

 

 

இதில் உள்ள தனிப்பட்டவர்களின் விடையங்களை தவிர்த்து, பொதுவான விடையங்களை எழுதவதில் தவறில்லை என்று நான் நினைக்கிறன்- அப்படி எழுதினால் யாருக்காவது விளங்குமா அல்லது யாரேனும் கவனத்தில் எடுப்பார்களா என்றும் தெரியவில்லை.- எனக்கு தெரிந்த சிறிய கருத்து, எங்களுடைய குழு போட்டிகள், இறுதில் ஒரு பகுதியை சிங்களவர்களிடம் சேரவே வகுக்கும். 

 

சாத்திரி எழுதுகிற இந்த கட்டுரை வந்துள்ள பூபாளத்தில் ஒரு கட்டுரை/ ஆசிரியர் தலையங்கம் வாசித்தேன், முதல் பந்தியில் மகிந்த ராஜபக்க்ஷ சொன்ன- எங்களது படைகள் ஒரு கையில் சமாதானத்தையும், மறுகையில் என்னத்தையும் எடுத்து கொண்டு சென்றார்கள் என்று தொடங்குகிறது. இது ஒரு அரச சார்பு, பத்திரிக்கை  இணையம்  என்று சொல்ல பெரிய புலனாய்வு தேவையில்லை.

 

ஆனால் அதேநேரம்; தமிழ் மக்களை மாக்களாக்க வைத்திருக்க விரும்பும் மற்றவர்களையும் அறிய வேண்டிய தேவை இருக்கிறது. துரதிஷ்ட வசமாக இரண்டுக்கும் இடையே என்கிற  நிலை இங்கு இல்லை. அதைத்தான் இரண்டு பகுதியும் விரும்புகிறார்கள் அல்லது அவர்களை இயக்குகிறவர்கள் விரும்புகிறார்கள்.

ஆனால் பொதுவில் இந்த நிலைகள் நீடித்தால் பலரும் இன்னும் விலத்தி ஓட கூடும்..அதைத்தான் விரும்புகிறார்களோ

 

 

 

அப்படியா ! பத்திரிக்கை பற்றிய தகவலுக்கு நன்றிகள்.

Edited by akootha

புலிகளின் புலனாய்வுத் துறையில் அவரை தெரியுமா இவரை தெரியுமா என கேட்பது எல்லாம் வீன்வேலை.........

 

 

[size=4]சாத்திரி,

உங்கள் இந்த தொடரை நீங்கள் ஒரு பத்திரிகைக்காக எழுதுகிறீர்கள். அதை வேறு வேறு பத்திரிகைகளில் போட உங்களிடம் அனுமதி பெற வேண்டுமா? இல்லை காசு தரவேண்டுமா? எவ்வளவு தர வேண்டும்? [/size]

[size=4]சாத்திரி,

நீங்கள் ஒரு முன்னாள் விடுதலை புலி போராளியா? உங்களை பற்றி கொஞ்சம் எழுதுங்களேன் ?[/size]

[size=4]சாத்திரி,[/size]

[size=4]நீங்கள் எதற்காக விடுதலைப்புலிகள் அமைப்பில் சேர்ந்தீர்கள்?[/size]

ஒத்த இன கூட்டங்கள் ஒன்றாய் சேர்ந்து கூடி  கொதித்துத் துள்ளுதப்பா...

மக்கள் கொத்தித்தெழுந்து, ஊர்வலத்துக்கு சென்ற போது  செயற்பாட்டாளர்கள் சிலர் கடை திருத்துவதில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள்.

மருதம்  என்ற பெயரில் நான்கு இடத்தில்  கடை திறக்கப்பட்டது. இதுபற்றியும் சாத்திரி விளக்கி எழுதினால் தெரிந்து கொள்ளலாம்.

நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.