Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலிகள் விடயத்தில் மட்டும்....................???

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சில் கடந்த சார்கோசி  அரசின் கட்சி  இன்று பெரும் பின்னடைவுகளையும்  உடைவுகளையும் சந்தித்து நிற்கிறது.   இந்த நிலையில் பெரும் ஆய்வுகளும் கருத்தரங்குகளும் நடைபெற்ற  வண்ணம் உள்ளன. 

இந்த நிலையை  தலைவர் இல்லாத எமது நிலையுடன் என்னால் ஒப்பிட்டு பார்க்க முடிகிறது.

ஆனால் அதிலும் ஒன்று எனக்கு உறைக்கிறது.

இன்று வானொலியில் ஒரு  ஆய்வாளர் குறிப்பிட்டார்.

நாம் காரைச்செலுத்தும் போது பின்னால்  திரும்பிப்பார்ப்பது அரிது.

அதைப்போலத்தான்  இதுவும். 

பின்னால் உள்ளவைகளையே  கிளறிக்கொண்டிருக்கின்றிருக்கின்றார்களே தவிர அடுத்த பாய்ச்சல் அல்லது முன்னோக்கிய  நகர்வுகளுக்கு எந்த திட்டமுமில்லை என்று.

இதனாலேயே  இந்தளவு முடக்கம்  வந்துள்ளதாக.

எமக்கும் இதுதானே.................???

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளும் அவர்களின் தலைமையும் உலகிற்கே ஒரு புதிராகவே தென்பட்டார்கள். நம்மவர்களுக்கும் கூடவே. அதனால்.. அந்தப் புதிரை இயன்ற வரை விடுவிக்க உலகம் படாத பாடுபட்டுள்ளது.

இன்றும் கூட மேற்குலகக் கொள்கை வகுப்பாளர்கள்.. புலிகள் மீதான தடையை நீக்கவில்லை. புலிகள் மேற்குலகில் தனி ஈழம் கேட்டோ.. மேற்குலகிற்கு எதிராகவோ போராட்டம் நடத்தவில்லை. இருந்தாலும் தடை நீக்கம் இல்லை. காரணம்... புலிகள் என்ற புதிர் இன்னும் முழுமையாக அவர்களின் பார்வையில் அவிழவில்லை என்பது தான்.

மேற்குலக கொள்கை வகுப்பாளர்களுக்கே இப்படி இருக்கும் போது சுண்டக்காய்.. நம்ம அரசியல் ஆறின கஞ்சிகளுக்கு.. அதுதான் அரசியல் ஆய்வாளர்களுக்கு.. (கொக்கத்தடி வைச்சு முருங்கைக்காய் ஆய்பவர்களுக்கு) கத்துக்குட்டிகளுக்கு.....காட்டிக்கொடுப்பாளர்களுக்கு... ???! :lol::icon_idea:

புலிகள் முழுமையாக விடுவிக்கப்படாத புதிராக இருப்பதும் நன்மைக்கே. அதனைப் பயன்படுத்துவது தான் புத்திசாலித்தனம். உதுகள விட்டுத்தள்ளிட்ட அந்தப் புத்திசாலித்தனத்தை வளர்த்தால் நன்று.. விசுகு அண்ணா. :icon_idea:

Edited by nedukkalapoovan

புலிகள் முழுமையாக விடுவிக்கப்படாத புதிராக இருப்பதும் நன்மைக்கே. அதனைப் பயன்படுத்துவது தான் புத்திசாலித்தனம்.

எமது நிலை அதைவிட மோசம்.

அவர்களுக்கு நாடு உள்ளது.

எமக்கு எதுவுமே இல்லாத நிலை.

 அதற்குள் நாங்களோ  :(

புலிகள் எல்லா வழிகளிலும் காட்டி விட்டார்கள் இனிமேல் மக்கள் தான் போராட்டத்தை முன் நகர்த்த வேணும் அதுவும் தாயகத்தில் இருந்து அடக்குமுறையை மக்கள்  தகர்த்து எழுச்சி கொள்ளவேணும்.

புலிகள் எல்லா வழிகளிலும் காட்டி விட்டார்கள் இனிமேல் மக்கள் தான் போராட்டத்தை முன் நகர்த்த வேணும் அதுவும் தாயகத்தில் இருந்து அடக்குமுறையை மக்கள்  தகர்த்து எழுச்சி கொள்ளவேணும்.

அது சரிதான் ஆனால்

அங்கிருந்து ஊடகவியலாளர் ஒருவர் இப்படிச் சொல்லியிருக்கிறார்.

எமது மாணவர்களுக்காக நாம் திரள வேண்டும் என்பது உண்மை.. ஆனால் அதனால் நடக்கப்போவது மேலதிக கைதுகளைத் தவிர வேறெதுவும் இல்லை என்பதே நிதர்சனம்... நாட்டில் இருப்பவர்களை போராடுமாறு வெளியிலிருப்பவர்கள் தயவுசெய்து தூண்டக்கூடாது... ஒரு நாளாவது கம்பிகளுக்குப் பின்னால் இருந்து பார்த்திருக்கிறீர்களா.. அந்த வெளவால் அல்லது சிறுநீர் மணம் நாசியைத் துளைத்து வயிற்றைக் குமட்டுவதை உணர்ந்திருக்கிறீர்களா...

இப்படிச் சொல்லுற ஊடகவியலாளர்.. சாப்பாடு.. தண்ணி.. குளிப்பு.. எதுவுமே இன்றி மாதக்கணக்கில் சென்ரில நின்று இதே சிங்கள ஆமியின் ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தி வைத்திருந்த போராளிகள் வாழ்வு பற்றி சிந்தித்திருக்கிறாரா..???!

நிச்சயமா போராட்டம் என்று வரும் போது ஜெயில் வாழ்க்கை அமையும்.

நேரு சில வருடங்கள் ஜெயிலில் கிடந்து போராடினார். மண்டேலா பல வருடங்கள் ஜெயிலில் இருந்தபடி போராடினார். அவர்களும் ஜெயில் வாழ்க்கை எவ்வளவு கஸ்டம்.. மக்களே நீங்கள் வெளில இருந்து சுகம் அனுபவிக்கிறீங்க.. நமக்கு விடுதலை அவசியம் தானா என்று கேள்வி கேட்டிருந்தால்.. அந்த மக்கள் விடுதலையின் சுகத்தை அனுபவிக்க முடிஞ்சிருக்குமோ.

போராடனும் என்ற வந்திட்ட பிறகு.. மதிநுட்பத்தோடு போராடி இயன்றவரை ஜெயிலுக்கு போறதை தவிர்த்தும்.. போனாலும் வெளில வரக்கூடிய வகைக்கும் போராடனும். ஜெயிலைக் காட்டி யாருமே போராடக் கூடாதுன்னா.. அடக்குமுறையாளனின் கைதுகளின் கொலைகளின் படுகொலைகளின் பயங்காட்டலின்.. இருப்பின்.. நோக்கத்தை நாமே நிறைவு செய்ததாக முடிந்துவிடும்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

புலிகளும் அவர்களின் தலைமையும் உலகிற்கே ஒரு புதிராகவே தென்பட்டார்கள். நம்மவர்களுக்கும் கூடவே. அதனால்.. அந்தப் புதிரை இயன்ற வரை விடுவிக்க உலகம் படாத பாடுபட்டுள்ளது.

இன்றும் கூட மேற்குலகக் கொள்கை வகுப்பாளர்கள்.. புலிகள் மீதான தடையை நீக்கவில்லை. புலிகள் மேற்குலகில் தனி ஈழம் கேட்டோ.. மேற்குலகிற்கு எதிராகவோ போராட்டம் நடத்தவில்லை. இருந்தாலும் தடை நீக்கம் இல்லை. காரணம்... புலிகள் என்ற புதிர் இன்னும் முழுமையாக அவர்களின் பார்வையில் அவிழவில்லை என்பது தான்.

புலிகள் என்ற புதிர் இன்னும் முழுமையாக அவிழவில்லை என்பதைவிட "புலிகள் என்பவர்கள் விதிவிலக்கானவர்கள், விட்டுவைக்கக்

கூடாதவர்கள்; எனவே எவ்வகையிலாவது விரைந்து அழிக்கப்படவேண்டியவர்கள்"  என்பதே மேற்குலகக் கொள்கைவகுப்பாளரின்

கருத்து. அவர்களின் நிகழ்ச்சிநிரலில் ஒரு பகுதிமட்டும்தான் முடிந்துள்ளது. நிறைவுபெறாத நிகழ்ச்சிநிரல்; அவ்வளவுதான்!

  • கருத்துக்கள உறவுகள்
நேரு 40 வருடங்கள் ஜெயிலில் கிடந்து போராடினார்.

நேரு எங்கை ஜெயிலில் கிடந்தார்? மிஸ் மௌண்ட்பேட்டன் மட்டும்தானே? :D

நேரு எங்கை ஜெயிலில் கிடந்தார்? மிஸ் மௌண்ட்பேட்டன் மட்டும்தானே? :D

அதுவும் வெறும் மூன்றோ ஐந்து வருடங்கள் மட்டும்தான். சீமாட்டியின் குறுகியகாலத் தண்டனைக்குள்ளானவர்கள் பலர். இதில் நேரு மாமாவின் தியாகம் போற்றத்தக்கதே!

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் எல்லா வழிகளிலும் காட்டி விட்டார்கள் இனிமேல் மக்கள் தான் போராட்டத்தை முன் நகர்த்த வேணும் அதுவும் தாயகத்தில் இருந்து அடக்குமுறையை மக்கள் தகர்த்து எழுச்சி கொள்ளவேணும்.

இதெல்லாம் நடக்கிறதா? அதுவும் தாயகத்தில் இருந்து எமது மக்கள்? சரியான நக்கல்.

தலைவர் மாதிரி ஒராள் வந்து மக்களை எழுசிகொள்ள வைக்கும் மட்டும் நடக்காது....

சம்மந்தன் போன்றவர்கள் மக்களை தூங்க தான் வைக்க முடியும்

  • கருத்துக்கள உறவுகள்
நேரு எங்கை ஜெயிலில் கிடந்தார்? மிஸ் மௌண்ட்பேட்டன் மட்டும்தானே? :D

நேரு பற்றிய குறிப்பில் தவறு இடம்பெற்றுள்ளது.

அவர் 40 ஆண்டுகள் ஜெயிலில் இருக்கவில்லை. சில ஆண்டுகளே (மொத்தமாக கிட்டத்தட்ட 9 ஆண்டுகள்) இருந்துள்ளார்.

நன்றி இசை தவறை இனங்காட்டியமைக்கு. அண்மையில் இந்திய ஊடகம் ஒன்றில் அவர் 41 ஆண்டுகள் ஜெயிலில் இருந்து இந்திராவிற்கு கடிதம் மூலம் அரசியல் படிப்பித்ததாக ஒரு தமிழக பட்டிமன்ற வித்துவான் சொன்னத்தை நம்பி.. அந்தக் குறிப்பு இடம்பெற்றதால் வந்த தவறு. பட்டிமன்றத்தில வரலாற்றையும் திரிக்கிறாங்கள் என்பது இப்பதான் தெரியுது. :lol:

The British didn't give in easily to Indian demands for freedom, and in late 1921, the Congress Party's central leaders and workers were banned from operating in some provinces. Nehru went to prison for the first time as the ban took effect; over the next 24 years he was to serve a total of nine sentences, adding up to more than nine years in jail. Always leaning to the left politically, Nehru studied Marxism while imprisoned. Though he found himself interested in the philosophy but repelled by some of its methods, from then on the backdrop of Nehru's economic thinking was Marxist, adjusted as necessary to Indian conditions.

http://www.biography.com/people/jawaharlal-nehru-9421253

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அடக்கு முறைக்கு எதிரா ஆயுதம் எடுத்து போராடினா வன்முறை கூடாது அதனால் எதையும் சாதிக்க முடியாது என்டுராங்கோ......

சரி அகிம்சைய கையில எடுத்து போராடினா அப்பாவி மக்களை தூண்டி விடாதிர்கள் சிறையில் சிறுநீர் மணக்கும் வௌவால் இருக்கும் கரடி கடிக்கும் அதெல்லாம் உங்களுக்கு எங்க புரிய போகுது என்டுராங்கோ :(

Edited by SUNDHAL

இனம் கண்டு விட்டீர்கள்  :D

புலம்பெயர் தமிழனுக்கு: தூண்டிவிடாதே.. :wub:

மேற்குலகுக்கு: உள்விவகாரத்தில் தலையிடாதே.. :huh:

போராளிகளுக்கு: ஆயுதத்தைத் தூக்காதே.. :rolleyes:

தாயகத் தமிழருக்கு: அடிமையாக இரு.. :blink:

293185_311742628929656_1314644507_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்
நாம் காரைச்செலுத்தும் போது பின்னால்  திரும்பிப்பார்ப்பது அரிது.

அதைப்போலத்தான்  இதுவும். 

பின்னால் உள்ளவைகளையே  கிளறிக்கொண்டிருக்கின்றிருக்கின்றார்களே தவிர அடுத்த பாய்ச்சல் அல்லது முன்னோக்கிய  நகர்வுகளுக்கு எந்த திட்டமுமில்லை என்று.

இதனாலேயே  இந்தளவு முடக்கம்  வந்துள்ளதாக.

எமக்கும் இதுதானே.................???

மின்னொளிகள் பாய்ச்சிய, பாதுகாப்பு சட்டங்கள் பொருத்திய, குண்டு குழிகள் அற்ற, சீராகத் தார்பூசப்பட்ட வழுக்கும் வீதிகளில் பயணவிதிகளை அதிகம் கடைபிடிக்கும் பிற வாகனங்கள் நிரம்பியிருப்பதால், பயணிக்கும்போது பின்னோக்கிப் பார்க்காமலேயே சேரவேண்டிய இடத்திற்கு விரைவாக முன்னகரந்து போய்விடலாம்.

ஆனால் புலிகள் பயணித்த பாதையோ மிகவும் குறுகலான வளைவு நெளிவுகள், முழங்கைத் திருப்பங்கள், பாரிய பள்ளங்கள் கொண்ட ஆபத்துக்கள் நிறைந்த வங்குப் பாதை. முடிவிடம் தெரிந்திருந்தாலும், அதனை அடைய முன்னரேயே சரிவில் உருண்டு பள்ளத்தாக்கில் பல குத்துக்கரணங்கள் போட்டு வாகனம் இனி ஓட்டமுடியாமல் உருக்குலைந்துபோய் நிற்கின்றது.

ஏன் இப்படி காப்பாற்ற எவருமின்றி அதல பாதாளத்தில் விழுந்து கிடக்கின்ற பாதையில் பயணித்தோம் என்று சிந்திக்காமல் அதே பாதையில் தொடர்ந்தால் அதைப் போல பைத்தியக்காரனத்தனம் வேறு ஏதாவது இருக்குமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
மின்னொளிகள் பாய்ச்சிய, பாதுகாப்பு சட்டங்கள் பொருத்திய, குண்டு குழிகள் அற்ற, சீராகத் தார்பூசப்பட்ட வழுக்கும் வீதிகளில் பயணவிதிகளை அதிகம் கடைபிடிக்கும் பிற வாகனங்கள் நிரம்பியிருப்பதால், பயணிக்கும்போது பின்னோக்கிப் பார்க்காமலேயே சேரவேண்டிய இடத்திற்கு விரைவாக முன்னகரந்து போய்விடலாம்.

ஆனால் புலிகள் பயணித்த பாதையோ மிகவும் குறுகலான வளைவு நெளிவுகள், முழங்கைத் திருப்பங்கள், பாரிய பள்ளங்கள் கொண்ட ஆபத்துக்கள் நிறைந்த வங்குப் பாதை. முடிவிடம் தெரிந்திருந்தாலும், அதனை அடைய முன்னரேயே சரிவில் உருண்டு பள்ளத்தாக்கில் பல குத்துக்கரணங்கள் போட்டு வாகனம் இனி ஓட்டமுடியாமல் உருக்குலைந்துபோய் நிற்கின்றது.

ஏன் இப்படி காப்பாற்ற எவருமின்றி அதல பாதாளத்தில் விழுந்து கிடக்கின்ற பாதையில் பயணித்தோம் என்று சிந்திக்காமல் அதே பாதையில் தொடர்ந்தால் அதைப் போல பைத்தியக்காரனத்தனம் வேறு ஏதாவது இருக்குமா?நான்

ஒரு பக்கத்தால் சிந்திக்க நீங்கள் இன்னொரு பக்கத்தால் மடக்குகின்றீர்கள்???

சரி

உங்களது எடுது கோள்படியே  பார்த்தாலும் ஓட முடியாது உருக்குலைந்த வாகனத்தைப்பற்றி மூன்று வருடமாக பேசியது போதாதா?

இன்னும் அதே இடத்தில் நின்று ஆராய்ச்சி  எவ்வளவு நாளைக்கு???

அடுத்த அடி

அல்லது

அடுத்த வாகனத்தில் பயணிப்பது எப்போது..................???

தலைப்பைத் தொடங்கிய விசுகு அண்ணா போன்றவர்கள்தான் இன்னமும் அதே இடத்தில் செய்வதறியாது நிற்கின்றார்கள். பலர் பயணித்த பாதையின் பழுதுகளைத் தெரிந்து புதிய பாதைகளையும் வாகனங்களையும் தெரிவு செய்யும் அடுத்த கட்டத்திற்குள் போய்விட்டார்கள்.

கேட்க  சந்தோசமாகத்தான் இருக்கு  கிருபன்

ஆனால் ஆதாரமா

புதிய பாதைகளையும் வாகனங்களையும் தெரிவு செய்யும் அடுத்த கட்டத்திற்குள்

போயிருப்பவர்களில் ஒருவரது   பெயரையாவது சொன்னால் உங்கள் கருத்துக்கு பலமிருக்கும்.

சும்மா பகிடியெல்லாம் விடக்கூடாது கிருபன்...................... :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலிகளும் அவர்களின் தலைமையும் உலகிற்கே ஒரு புதிராகவே தென்பட்டார்கள். நம்மவர்களுக்கும் கூடவே. அதனால்.. அந்தப் புதிரை இயன்ற வரை விடுவிக்க உலகம் படாத பாடுபட்டுள்ளது.

இன்றும் கூட மேற்குலகக் கொள்கை வகுப்பாளர்கள்.. புலிகள் மீதான தடையை நீக்கவில்லை. புலிகள் மேற்குலகில் தனி ஈழம் கேட்டோ.. மேற்குலகிற்கு எதிராகவோ போராட்டம் நடத்தவில்லை. இருந்தாலும் தடை நீக்கம் இல்லை. காரணம்... புலிகள் என்ற புதிர் இன்னும் முழுமையாக அவர்களின் பார்வையில் அவிழவில்லை என்பது தான்.

மேற்குலக கொள்கை வகுப்பாளர்களுக்கே இப்படி இருக்கும் போது சுண்டக்காய்.. நம்ம அரசியல் ஆறின கஞ்சிகளுக்கு.. அதுதான் அரசியல் ஆய்வாளர்களுக்கு.. (கொக்கத்தடி வைச்சு முருங்கைக்காய் ஆய்பவர்களுக்கு) கத்துக்குட்டிகளுக்கு.....காட்டிக்கொடுப்பாளர்களுக்கு... ???! :lol::icon_idea:

புலிகள் முழுமையாக விடுவிக்கப்படாத புதிராக இருப்பதும் நன்மைக்கே. அதனைப் பயன்படுத்துவது தான் புத்திசாலித்தனம். உதுகள விட்டுத்தள்ளிட்ட அந்தப் புத்திசாலித்தனத்தை வளர்த்தால் நன்று.. விசுகு அண்ணா. :icon_idea:

நன்றி  நெடுக்கு

கருத்துக்கு

புலிகள் எப்பெழுதும் பலருக்கு  புதிராக இருப்பதற்கு காரணம்  அவர்களது தியாகம் மற்றும் இரகசியங்களை  பாதுகாத்தல்.

அவை அப்படியேதான் இருக்கும்.  இருக்கணும்.  காரணம் அவை  அவர்கள் ஒவ்வொருவரினதும் அர்ப்பணிப்புக்குள்ளாலும்  உயிர்த்தியாகங்களாலும் அவர்களுடேனேயே  போய்விட்டன.

இனி  நாம் எழுதுவதெல்லாம் உண்மை  பொய்க்கப்பால் வெறும் ஊகமே.  அதை அறிந்தவர் எவருமில்லை.  ஊகிப்பவர் வெளியில் சொல்லி அதை வரலாறாக்க முடியாது.

ஆனால் இங்கு நான் கேட்டது

அதைவிட்டு வெளியில் வந்து இலக்கு நோக்கிய  பயணத்தை தொடர்வதை விட்டுவிட்டு இன்றும் அதே பழைய  அலுமாரியை தோண்டிக்கொண்டிருப்பதேன்.................???

புலிகள் முழுமையாக விடுவிக்கப்படாத புதிராக இருப்பதும் நன்மைக்கே. அதனைப் பயன்படுத்துவது தான் புத்திசாலித்தனம்.

நன்றி  தங்கள் கருத்துக்கும் நேரத்திற்கும்

எமது நிலை அதைவிட மோசம்.

அவர்களுக்கு நாடு உள்ளது.

எமக்கு எதுவுமே இல்லாத நிலை.

 அதற்குள் நாங்களோ  :(

இதிலிருந்து மீண்டு எமது இலக்கை நோக்கி நகர வழியுண்டா? என்ற  பெரும் ஆதங்கத்திலேயே  இதை பதிந்தேன்.

ஆளுக்கு ஆள் எழுதுகின்றார்கள்

அதற்கு பதில் இன்னொரு கதை

அதற்கு மீண்டும் பதில்

மாவீரர் நாளை 3 ஆக நடாத்துவதற்கும்  காரணம் தருகிறார்கள்.  வரவேற்கிறார்கள்.

எங்கே போகின்றோம்??????????

இது எப்போ முடியும்???????????????????

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
புலிகள் எல்லா வழிகளிலும் காட்டி விட்டார்கள் இனிமேல் மக்கள் தான் போராட்டத்தை முன் நகர்த்த வேணும் அதுவும் தாயகத்தில் இருந்து அடக்குமுறையை மக்கள்  தகர்த்து எழுச்சி கொள்ளவேணும்.

தாயகத்தில் எழுச்சி

அது எல்லோர் உள்ளத்திலும் தாயகத்திலும் புலத்திலும் நெருப்பாக எரிந்தபடி இருக்கு.

அதை  நாம் மறந்தாலும் சிங்களம் பலப்படித்தபடியேதான் இருக்கு.  இருக்கும்.

ஆனால் அதற்கு காரணம் மாவீரர்கள் போராளிகள் தம்மையே  தந்த அந்த மக்கள்.

அவர்கள் ஒவவ்வொருவரது தியாகத்தையும் கொச்சைப்படுத்தி மலினப்படுத்தி  வரலாற்றுத்திரிவுகளை செய்தபடி எவ்வாறு அதை நடைமுறைப்படுத்துவது????

இறுதியாக நடந்த பல்கலைக்கழக எழுச்சி  பற்றி  வந்த கதைகளை யாழை  வாசித்தாலே புரியும் எவ்வாறு அவர்களது எழுச்சிகளை  நாம் புரிந்து கொள்கின்றோம் என்று.............?? :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடக்கு முறைக்கு எதிரா ஆயுதம் எடுத்து போராடினா வன்முறை கூடாது அதனால் எதையும் சாதிக்க முடியாது என்டுராங்கோ......

சரி அகிம்சைய கையில எடுத்து போராடினா அப்பாவி மக்களை தூண்டி விடாதிர்கள் சிறையில் சிறுநீர் மணக்கும் வௌவால் இருக்கும் கரடி கடிக்கும் அதெல்லாம் உங்களுக்கு எங்க புரிய போகுது என்டுராங்கோ :(

உண்மைதான்  சுண்டல்

இதிலிருந்தே நோக்கத்தை நாம் புரிந்து கொள்ளலாம்

அடிமையாக  இருக்கப்பழகிக்கோ என்பதே அது.

அண்மையில்

எனது மைத்துணர் யாழ்ப்பாணத்திலிருந்து சொன்னது

சாப்பிட மட்டும் வாய்திறக்க அனுமதிப்பதே தற்பொழுது அதிக சலுகை.

ஆனால் அமைதியாக வாய் மூடி சூரியனைத்தான் எதிர் பார்த்துக்காத்திருக்கிறோம் என.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
புலம்பெயர் தமிழனுக்கு: தூண்டிவிடாதே.. :wub:

மேற்குலகுக்கு: உள்விவகாரத்தில் தலையிடாதே.. :huh:

போராளிகளுக்கு: ஆயுதத்தைத் தூக்காதே.. :rolleyes:

தாயகத் தமிழருக்கு: அடிமையாக இரு.. :blink:

புலம்பெயர் தமிழனுக்கு: தூண்டிவிடாதே.

இது பற்றி  ஒரு விளக்கம்  தேவை.

இப்போ  என்னை  எடுத்துக்கொள்வோம்.

நான் ஒரு பிரெஞ்சுக்குடி மகன்

மக்களும் அவ்வாறே 

இங்கு பிறந்தவர்கள்

நானாக அழைத்துச்செல்லாவிட்டால் விடுமுறைக்கு கூட  போவார்களா என்பது சந்தேகமே.........

ஏனெனில் உலகத்தில் பார்க்க பல  நாடுகள் உள்ளது அவர்களது ரசனைக்கு.

நான்

எனது  பிள்ளைகள்

எதற்காக தாயகத்துக்காக நேரத்தை பணத்தை செலவளிக்கணும்....???????

நாங்கள் அகதியாக வந்தாலும், படிப்பு விசாவில் வந்தாலும், தொழில் விசாவில் வந்தாலும் தாயகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களே..! நாட்டில் பிரச்சினைகள் இலாதிருந்தால் எத்தனைபேர் புலம்பெயர் வாசிகள் ஆகியிருப்போம்?

ஆக, "நீ புலம்பெயர்ந்துவிட்டாய்.. ஆகையால் பேசாமல் இரு" என்கிற வாதம் சிந்தனையற்றது.

ஒருமுறை அலுவலகத்தில் லண்டனில் இருந்து குடிபெயர்ந்து கனடாவில் வாழும் றோலண்டிடம் பேசிக்கொண்டிருந்தேன். நாட்டுப் பிரச்சினைகள் பற்றிப் பேசியபோது தானும் புலம்பெயர்ந்து மகிழ்ச்சியாக உள்ளேன். உங்களால் முடியாதா என்று கேட்டார்.

நான் அவருக்குச் சொன்னது.. நீங்கள் விரும்பினால் இங்கிலாந்துக்குச் சென்று மகிழ்வாக விடுமுறையைக் கழித்துவிட்டு பாதுகாப்பாகவும், நல்ல நினைவுகளுடனும் திரும்பி வரலாம். ஆனால் என்னால் முடியாது என்றேன். அவருக்கு அது விளங்கியிருந்தது.

ஆகவே, புலம்பெயர்ந்த எங்கள் தலைமுறைக்கு நினைவுகள் விட்டுப் போகாது. இங்கே பிறந்த குழந்தைகளின் நிலை பற்றிச் சொல்ல முடியவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.