Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கலைஞர் மீண்டும் தமிழினத்திற்கு துரோகம்!

Featured Replies

கலைஞரின் அரசு ஈழத் தமிழர்களுக்கு செய்து கொண்டிருக்கும் ஒரு துரோகச் செயல் குறித்து அதிர்சிகரமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கருணா குழுவினர் தமது பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆட்களை சேர்ப்பதற்கு கலைஞரின் அரசு அனுமதி அளித்துள்ளது என்பதே அந்த அதிர்ச்சிகரமான தகவல் ஆகும். இந்தத் தகவலை மிகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன. கருணா குழு தமிழகத்தில் ஆட்சேர்ப்பதற்கு ஈழத் தமிழரில் அக்கறை கொண்ட பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தும், கலைஞரின் அரசு அதை அலட்சியம் செய்துள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

கருணா குழுவுக்கான ஆட்சேர்ப்பு தமிழகத்தில் உள்ள ஈழத் தமிழர்களின் அகதி முகாம்களிலேயே நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சேர்ப்பு கருணா குழுவைச் சேர்ந்த பரந்தன்ராஜன் தலைமையில் நடைபெற்று வருகிறது. விடுதலைப்புலிகளின் தாக்குதல்களினால் கருணா குழுவிற்கு பெரும் ஆட்தட்டுப்பாடு நேர்ந்துள்ளது. ஈழத்தில் ஆட்களை திரட்ட முடியாத நிலையில் உள்ள கருணா குழு, பரந்தன்ராஜன் மூலம் தமிழகத்தில் இருக்கும் ஈழத் தமிழர்களை தமது குழுவில் சேர்க்கும் முயற்சியை ஆரம்பித்துள்ளது. ஈழத்தில் இருந்து படகுகள் மூலம் அகதிகளாக வருகின்ற தமிழ் மக்கள் மண்டப முகாம்களில் தங்க வைக்கப்படுகிறார்கள். அனைத்தையும் இழந்து நிற்கின்ற இவர்கள் தமிழ்நாட்டிலும் சிறைக் கைதிகள் போன்று மண்டப முகாம்களில் வைக்கப்படுவதினால் கடும் விரக்திக்கு ஆளாகிறார்கள். இவ்வாறு விரக்தியின் உச்சத்தில் நிற்பவர்களையே பரந்தன்ராஜன் குழுவினர் அணுகுகின்றனர். கருணா குழுவில் இணைவதற்கு சம்மதித்தால் உடனடியாக 10.000 ருபாய்கள் தருவதாகவும் ஈழத்திற்கு சென்றதும் மேலும் அதிகமான பணம் தருவதாகவும் ஆசை காட்டி வருகிறார்கள்.

இந்த பரந்தன்ராஜன் ஒரு வருடத்திற்கு முன்பு தமிழகத்தில் இருந்து கொண்டு ஈழத் தமிழர்களுக்கு எதிரான சதி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தான். இதை அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்திற்கு சிலர் கொண்டு வந்ததை அடுத்து, பரந்தன்ராஜன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். அப்பொழுது இந்திய உளவுத்துறையாகிய "றோ" தலையிட்டு பரந்தன்ராஜனை விடுதலை செய்யும் படி தமிழக அரசுக்கு அழுத்தம் வழங்கியது. கடைசியில் தமிழகத்திற்குள் இனி காலடி வைக்க மாட்டேன் என்று எழுத்து மூலமான உத்தரவாதத்தை பரந்தன்ராஜனிடம் வாங்கிக் கொண்டு தமிழக அரசு பரந்தன்ராஜனை விடுவித்தது. இதன் பிறகு சிறிலங்காவிற்கு திரும்பிய பரந்தன்ராஜன் சிறிலங்கா இராணுவத்துடன் இணைந்து பல அப்பாவித் தமிழ் மக்களை கொலை செய்து வந்தான். தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் மீண்டும் இந்தியா திரும்பிய பரந்தன்ராஜன் தமிழகம் செல்லாது கர்நாடகத்தில் உள்ள பெங்களுரில் தங்கியிருந்தான். தற்பொழுது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, பரந்தன்ராஜன் தமிழகத்தில் மீண்டும் செயற்படத் தொடங்கியுள்ளான்.

ஈழத்தில் தமிழ் மக்களை கொலை செய்வதற்கும், மீண்டும் யுத்தத்தை ஆரம்பிப்பதற்கான சதி நடவடிக்கைகளுக்கும் கருணா குழுவையே சிறிலங்கா அரசு பயன்படுத்தி வருகிறது. இதை கலைஞர் தலைமையிலான தமிழக அரசு நன்கு அறிந்தும், பரந்தன்ராஜனை தமிழகத்தில் கருணா குழுவிற்கு ஆட்களை சேர்ப்பதற்கு அனுமதித்துள்ளது. "அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்", "தமிழ் கட்டாய பாடம்" போன்று நல்ல திட்டங்களைப் போட்டு சரியான பாதையில் நடை போடத் தொடங்கிய கலைஞரின் அரசு, சில நாட்களுக்கு முன்புதான் பெற்றோல் விலை உயர்வின் மூலம் தமிழக மக்களின் அதிருப்தியை சம்பாதித்தது. தற்பொழுது ஈழத் தமிழர்களின் தலையிலும் இடியை இறக்கி உள்ளது. ஜெயலலிதா தலைமையிலான முன்னைய அரசு செய்ததற்கு நேர் எதிராக செய்ய வேண்டும் என்ற காரணத்திற்காக, ஈழத்தில் தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்கு கலைஞர் அரசு துணை போவதானது, தமிழ் மக்களுக்கு செய்யக் கூடிய மிகப் பெரிய துரோகம் ஆகும். இதை உலகத் தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள்.

இது தெரிந்த விடயம்தான்.... எண்றாலும் நண்றி....!

இந்தியாவிற்கு அகதிகள் ஏன்போக வேண்டும் என்பது என்னால் விளங்கிக்கொள்ள முடியாமல் இருக்கிறது. 70 வீத தாயக பிரதேசம் எமது கட்டுப்பாட்டில் இருக்கு என்று பெருமைப்படுகிறோம். 4 லட்சத்திற்கும் மேற்பட்ட உறவுகள் புலம் பெயர்ந்து இருக்கிறார்கள் கணிசமான பொருளாதார உதவிகளை தரக்கூடிய நிலையில். அதைவிட சிறிய அளவில் அரசச்சார்பற்ற நிறுவனங்களும் உதவிகளை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வழங்குகின்றன. இந்தியாவிற்கு படகில் போவதில் சந்திக்கும் ஆபத்துக்களையும் போய்சேர்ந்தபின் அவர்கள் எதிர்கொள்ளும் நிலமைகளையும் தெரிந்தா அங்கு போகிறார்கள்? 1980கள் 1990கள் போல் அல்லவே எமது நிலமை இன்று. எமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு ஏன் இடம்பெயர யோசிக்கவில்லை?

இன்று நாம் உள்ள இராணுவ, அரசியல் மற்றும் இராஜதந்திர பலத்தின் மத்தியிலும் மக்கள் இந்தியாவிற்கு ஓடுவது எமது பலவீனம். அதை எதிரி நன்றாக பயன்படுத்திக் கொள்கிறான்.

இதன் காரணம் என்ன? பொருளாதார பலவீனமா? நிர்வாகப் பலவீனமா? வெகுஜனப் பலவீனமா?

முன்பு களத்தில் இந்தியா செல்லும் அகதிகள் தரக்குறைவாக நடத்தப்படுவது பற்றி நடந்த சூடான விவாதத்தின் போது இந்த கேள்விகள் உறுத்தியது.

குறுக்காலபோவான் அவர்களுடைய கேள்வி நியாயமாதே! ஆனால் ஸ்ரீலங்கா அரசானது பொருளாதார தடைகளை விதிக்கும்பட்சத்தில்.. வெளிநாடுகளில் இருப்போரது உதவிகளை அவர்களால் எப்படி பெறமுடியும்.. ஆகக் குறைந்தது உயிர்வாழ்தலுக்கான அத்தியாவசிய தேவைகளை எப்படி பெறுவது என்ற அச்ச உணர்வே அவர்களை இந்தியாவுக்கு செல்ல தூண்டுகிறது என நினைக்கிறேன். ஆகஇ இந்த விடயத்தில் அவர்களது அச்ச உணர்வு போகஇ சம்பந்தப்பட்டவர்கள் விளக்கங்களை வெளியிட வேண்டும்

சரியான உண்மை,அத்தோடு போர் தொடங்கினால் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசமும் அரச இராணுவ தாக்குதலுக்கு உள்ளாகும் என்று பயப்படுவதினால் நேராக போரற்ற சூழலுக்கு இடம் பெயரத்தான் விரும்புகிறார்கள்.

அண்மையில் இராணுவ தளபதி கொல்லப்பட்டதிற்கு புலிகளின் நிர்வாகப்பகுதிக்குள் விமானக்குண்டு வீசியதை நினைவில்கொள்ளலாம்.

மற்றும்படி புலிகளின் நிர்வாக அமைப்பை ஏற்க மறுத்து அவர்கள் ஓடுகிறார்கள் என்று அர்த்தப்படுத்தல் ஆகாது.

முழு அளவில் சண்டை தொடங்கினால் ஆபத்துகள் உண்டுதான். ஆனால் இந்தியாவிற்கு போகும் வழியில் படகுகவிழ்ந்து இறக்கிறார்கள். தப்பிப்பிழைத்தவர்களிற்கு இந்தியாவில் கிடைப்;பதும் (உடனடி உயிராபத்துகள் இல்லாவிட்டாலும்) மேசமான வாழ்கைதான்.

ஜரோப்பா வடஅமெரிக்கா அவுஸ்ரேலியா போன்ற நாடுகளிற்கு ஆபத்துகளை எதிர்கொண்டு செல்வதை நியாயப்படுத்தலாம். இந்திய அகதிமுகாம் வாழ்கைக்கு போவது அறியாமையா?

அது மாத்திரமல்ல யாழ்பாணத்திலிருந்து 1995 இல் இடம்பெயர்ந்தவர்கள் வன்னியில் எந்தளவற்கு ஒரு பொருளாதாரத்தையும் வாழ்வாதாரத்தையும் தமது கடின உழைப்பு, இழப்புகள் வதைகள் மூலம் இன்று கட்டி எழுப்பியுள்ளார்கள். எங்கெங்கோ எல்லாம் சிதறிப்போகும் எமது வதைகள் ஒருமுகப்படுத்தப்பட்டால் எமது பிரதேசத்தில் ஒரு வாழ்வை அமைக்கலாம். புலிகளோடு ஆயுதம் ஏந்தி சண்டைபிடிக்க தேவையில்லை. ஏனைய வாழ்வாதார விடையங்களை கட்டி எழுப்ப உதவலாம்.

http://www.tamilnaatham.com/audio/2006/jun...la20060611.smil

மேற்கோள்:

இந்தியாவிற்கு அகதிகள் ஏன்போக வேண்டும் என்பது என்னால் விளங்கிக்கொள்ள முடியாமல் இருக்கிறது

4 லட்சத்திற்கும் மேற்பட்ட உறவுகள் புலம் பெயர்ந்து இருக்கிறார்கள் கணிசமான பொருளாதார உதவிகளை தரக்கூடிய நிலையில். அதைவிட சிறிய அளவில் அரசச்சார்பற்ற நிறுவனங்களும் உதவிகளை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வழங்குகின்றன. இந்தியாவிற்கு படகில் போவதில் சந்திக்கும் ஆபத்துக்களையும் போய்சேர்ந்தபின் அவர்கள் எதிர்கொள்ளும் நிலமைகளையும் தெரிந்தா அங்கு போகிறார்கள்? 1980கள் 1990கள் போல் அல்லவே எமது நிலமை இன்று. எமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு ஏன் இடம்பெயர யோசிக்கவில்லை?

குறுக்கால போவான் அண்ணாவின் கருத்துக்கள் அசிங்கம் ...... ஊப்ஸ் அபாரம்!

ஒரு விடயத்தில் உங்களுக்கு எதிராய் போக நினைக்க மாட்டார்கள் யாரும் - அது நீங்கள் தேசியத்துக்கு எதிரானவர் இல்ல-!

மறு பக்கம் - எப்பிட்டிங்கண்னா இப்பிடி எல்லாம் சிந்தனை தோன்றுது உங்களுக்கு?

எத்தனை பெரிய புலம் பெயர்ந்த உறவு பலம் இருந்தாலும்

எவ்ளோ பெரிய பிரதேசம் - இன்னும் பூரணமா - சுதந்திரமடையாத நிலையில எங்க கட்டுப்பாட்டில இருந்தாலும் .........

அடுத்தநாள் என்ன நடக்குமோ என்று விடிய விடிய தூக்கம் இல்லாம - பயத்தோட வாழ்வை கழிக்கிறவங்களுக்கு - உங்கட கருத்து - சபைக்கு உதவாதது அண்ணா ! 8)

மேற்கோள்:

ஜரோப்பா வடஅமெரிக்கா அவுஸ்ரேலியா போன்ற நாடுகளிற்கு ஆபத்துகளை எதிர்கொண்டு செல்வதை நியாயப்படுத்தலாம். இந்திய அகதிமுகாம் வாழ்கைக்கு போவது அறியாமையா?

ஆகா என்ன கருத்து என்ன கருத்து ........

ஏதிலியாய் ....... உயிரை - காக்க நினைப்பவன் - எந்த திசையும் ஓடுவான் அண்ணா -

எது அவனுக்கு அண்மையில் இருக்கோ அதை நோக்கி!

அப்போ - அவுஸ் க்கு ஒடினால் நியாயம்!- இல்ல .....

அமெரிக்காக்கு ஆபத்தை எதிர்கொண்டு ஓடினாலும் நியாயம் என்று யோசிப்பானா?

கலைஞரும் ஆட்சியும் - அவருக்கு அவசரப்பட்டு வாழ்த்து சொன்னதும் இங்கேதான் நடந்தது !

அவர் காலை வாருறார் என்று கருத்தாடலும் இங்கதான் நடக்குது!

தலைவர் என்று எங்களுக்கு ஒருவர் இருக்கார்

அவரை நம்புவம்!

எந்த திசையில் நாங்க உயிர் பயத்தில் ஓடி போனாலும்!

அவரவர்க்கு இருந்த பொருளாதார வசதியினடிப்படை - ஒவ்வொறு திசைக்கு ஒடிட்டம்.....

எதுவுமே இல்லாதவன் என்ன செய்வான்?

உயிர்போகும் என்று தெரிந்தாலும் - கடைசிவரை - அதை காப்பாற்ற தன் வசதிக்கு ஏற்றபடி முயற்சி செய்வான்!

அது ஆபத்தான வழி என்று தெரிந்தாலும் - ஏனென்றால் அவனுக்கு அந்த நிமிடத்தில் - வேறு வழி என்ன?

அந்த இடங்களில் - உங்கள் கருத்துக்களை நினைச்சு பார்க்க யாருக்கும் நேரம் இருக்குமா?

மேற்கோள்:

முழு அளவில் சண்டை தொடங்கினால் ஆபத்துகள் உண்டுதான்

அப்பிடியா?

அப்போ இது எல்லாம்?

http://www.yarl.com/forum3/viewtopic.php?t=11349

http://www.yarl.com/forum3/viewtopic.php?t...t=11331&start=0

http://www.yarl.com/forum3/viewtopic.php?t=11302

http://www.yarl.com/forum3/viewtopic.php?t=11281

http://www.yarl.com/forum3/viewforum.php?f...days=0&start=75

http://www.yarl.com/forum3/viewtopic.php?t=10854

முழு அளவான யுத்தம் நடந்த காலத்தில கூட இப்பிடி தொடர்ச்சியா????? -கேள்விபட்டிங்களா?

மேற்கத்தேய நாடுகளிற்கு செல்வபவர்கள் கொஞ்சம் வசதிபடைத்தவர்கள் ஏன் என்றால் அவர்களால் அந்த தெரிவை செய்யக்கூடியதாக இருக்கிறது. அவர்கள் பொருளாதாரம் வேலைவாய்ப்பு கல்வி என்று பல நன்மைகளையும் கூடவே எதிர்பார்த்து தான் அந்த தெரிவை மேற்கொள்கிறார்கள்.

ஆனால் இந்தியாவிற்கு அகதிமுகாமிற்கு செல்பவர்கள் இப்படியான எதிர்பார்ப்புகளுடன் போகிறார்களா? இல்லை என்று தான் நினைக்கிறேன்.

தலைவர் இருக்கிறார் எமக்கு முப்படைகளும் இருக்கு என்றால் ஏன் எமது இதுவரை விடுவிக்கப்பட்ட பிரதேசம் இவர்களுடைய குறைந்தபட்ச எதிர்பார்பை பூர்த்திசெய்யும் தெரிவாக இல்லை? ஆக்கிரமிப்பு பிரதேசத்தில் தான் மக்களின் உயிர்களிற்கு ஆபத்து என்றால் விடுவிக்கப்பட்ட புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலும் அதே மேசமான நிலமையா?

அல்லைப்பிட்டியிலிருந்து மக்கள் வன்னிக்கு தானே பெருமளவில் வந்தார்கள்.

மன்னார் தலைமன்னாரிலிருந்து இந்தியாவிற்கு போறவர்கள் ஒருபுறம் இருக்க திருகோணமலையிலிருந்து மன்னார் சொன்று இந்தியா செல்பவர்கள் எவ்வளவு பிரயத்தனத்துடன் அதை செய்கிறார்கள்.

உவன் கலைஞனுக்கு அரலை தட்டி போச்சு...உந்த விசயத்திலே எங்க அம்மா புரட்சி தலைவி மேல்........

உவன் கலைஞனுக்கு அரலை தட்டி போச்சு...உந்த விசயத்திலே எங்க அம்மா புரட்சி தலைவி மேல்........

தேர்தல் முடிஞ்ச உடன் உங்கட கூட்டணி முடிஞ்சிடும் எண்டு நினைச்சன் முடிய இல்லையே....!

கலைஞர் உங்கள உள்ளபோடாப்ப் போறாராம் எண்ட பயத்திலதான் அம்மாவோட ஒட்டி இருக்கிறியள் எண்டு சொல்லீனமே உண்மையா...??? :?: :?: :roll:

உண்மை தான் வெளியால சொல்லி போடாதயுங்கோ........

உள்ளே போட்டாலும் உண்ணாவிரத போராட்டம்,உப்பு சத்தியா கிரகம் என்று தொடங்கி எனக்கு ஆதரவாக அனுதாப அலையை திருப்பி போடுவேன்...........

இந்தியன் என்று சொல்லடா இமயமாக நில்லடா(கனவிலே)

மேற்கத்தேய நாடுகளிற்கு செல்வபவர்கள் கொஞ்சம் வசதிபடைத்தவர்கள் ஏன் என்றால் அவர்களால் அந்த தெரிவை செய்யக்கூடியதாக இருக்கிறது. அவர்கள் பொருளாதாரம் வேலைவாய்ப்பு கல்வி என்று பல நன்மைகளையும் கூடவே எதிர்பார்த்து தான் அந்த தெரிவை மேற்கொள்கிறார்கள்.

ஆனால் இந்தியாவிற்கு அகதிமுகாமிற்கு செல்பவர்கள் இப்படியான எதிர்பார்ப்புகளுடன் போகிறார்களா? இல்லை என்று தான் நினைக்கிறேன்.

குறுக்ஸ் உது தேவை இல்லாத பிரச்சினை.......! இலங்கை அரசாங்கமே மக்களை இந்தியாவுக்க்கு புலிதான் கட்டாயப்பபடுத்தி அனுப்புது எண்டு சொல்லூது அதைத்தான் "அறசியல் களந்துறையாடலிலையும் சொல்லீனம்" இதுக்கை சனம் காஸ்ரப்படுது எண்டுறீங்கள்.....!

இதுக்கு முதல் இந்தியாவுக்கு போனவைதான்.... ஆனால் அந்த சனம் மண்டபம் கொட்டப்பட்டி மூகாகளில் நிரந்தரமாக தங்க இல்லை.... பெரும்பாலான சனம் முகாம்களில் இருந்து வெளியேறி தனியாகவீடு எடுத்து தங்கினார்கள்.... அவர்கள் எல்லாம் உண்மையான வாசதி படைத்தவர்கள்....... அவர்களால் லஞ்சம் எல்லாம் கொடுத்து காவல்த்துறையில் பதிய முடியும்....

இப்போது போகும் வசதி இல்லாத கஸ்ரப்பட்டவர்களால் முகாம்களை விட்டால் கதி கிடையாது.... இந்த மக்களில் பலருக்கு முகாம்களில் கிடைக்கும் மரியாதை என்ன என்பது தெரியவே தெரியாது..... தெரிந்து இருந்தால் ஆளுக்கு 15ரூபா வரை படகோட்டிக்குகொடுத்து இந்தியா போவார்க்களா...????

இந்திய இராணுவம் வரும்போது வீதியோரங்களில் நிண்டு வரவேற்ற சனங்களின்..... பாமரத்தனம் இன்னும் இந்தியா எங்களை வாழவைக்கும் என நினக்கும் சனம் இல்லாமல் இல்லைத்தானே....! இப்போதான்ன் உண்ண்மையான இந்தியாவின் நிலை வெளிவர ஆரம்பிக்கீறது....

சனம் இந்தியாவை தெரிவு செய்ய இன்னும் வேற காரணங்களும் இருக்க்கிறது அதை இப்போ சொல்ல முடியுமா தெரிய வில்லை....!

சரி கலைஞர் ஆட்சி செய்கிற இந்த தமிழீழத்திற்கு எதிரானவர்களின் நடவடிக்கைகளை அங்கே இருக்கிற பிற தமிழகக்கட்சிகளிடம் எடுத்துச்சொல்லி நடவடிக்கை எடுக்க யாராவது அக்கட்சிகளுக்கு தகவல்களை கொடுக்கலாம் தானே

அவர்கள் வந்து யாழ் இணையத்தை பார்ககப்போவதில்லை.

ம.தி.மு.க கட்சி, பாட்டளிமக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள், நெடுமாறன் ஐயா போன்றவர்களுக்கு தகவல்களை வழங்குங்கள்.

ஓரளவு வசதியுள்ளவர்கள் மூகாங்களில் தங்கமாட்டார்கள் என்பது தெரியும். ஆனால் வசதியில்லாமல் இன்றுவரை (1990களில் போனவர்கள்) முகாங்களில் இருப்பவர்கள் எத்தனை என்று தெரியுமா? மனிதம் மலிந்த இந்தியாவில் ஏற்கனவே கூலிவேலைக்கு எடுபிடி வேலைக்கு ஆட்கள் பிடிப்பது பிச்சைக்கு சமம். ஆனால் அதைவிட கேவலமான நிலமையில் தான் முகாமில் உள்ளவர்களின் வேலைவாய்ப்பு. அதைவிட பெண்கள் சிறார்கள் நிலமை... இப்படியான ஒரு சமூகச்சூழ்நிலையில் எவ்வளவுகாலம் (மாதங்கள் அல்ல வருடங்கள்) என்றுதான் ஒருவனுக்கு பணவசதிகளோடு விற்கப்படும் துரோகத்தை செய்ய தூண்டும் மூளைச்சலவையால் விலைபோகாமல் இருக்கமுடியும்?

மேற்கத்தேய நாடுகளில் 3 நேரம் கொழுக்க திண்டுபோட்டு "துரோகம் செய்யிறதிலும் பார்க்க அம்மா தங்கை அக்கா மனைவிமாரை விக்கலாம்" என்று நாங்கள் வீர வசனங்கள் பேசலாம். ஆனால் அவர்களை அந்த ஒரு சூழ்நிலைக்குள் செல்லமுன் தடுப்பதற்கு இயன்றளவு முயற்சிக்கிறமா?

இப்போது போகும் வசதி இல்லாத கஸ்ரப்பட்டவர்களால் முகாம்களை விட்டால் கதி கிடையாது.... இந்த மக்களில் பலருக்கு முகாம்களில் கிடைக்கும் மரியாதை என்ன என்பது தெரியவே தெரியாது..... தெரிந்து இருந்தால் ஆளுக்கு 15ரூபா வரை படகோட்டிக்குகொடுத்து இந்தியா போவார்க்களா...????

இதைத்தான் நானும் கேக்கிறன்? இது யாருடைய பிழை? ஊடகங்கள் ஏன் அங்குள்ள நிலமையை வெளியில் கொண்டுவரவில்லை? கீழ்நிலை சமூக அமைப்புகள் ஏன் மக்களிற்கு விளக்கம் கொடுக்க முயற்சிக்கவில்லை? உண்மையில் துரோகத்தனம் இழைக்க முயற்சிப்பவர்கள் மிகசிறு தொகை. சந்தர்ப்ப சூழ்நிலையால் நிர்கதியான நிலையில் மாறுபவர்களில் பொரும்பாலானவர்களை தடுக்க முடியும் அதனால் வரும் பாரிய இழப்புகளையும் முற்றாக தவிர்க்கவும் முடியும்.

இந்திய இராணுவம் வரும்போது வீதியோரங்களில் நிண்டு வரவேற்ற சனங்களின்..... பாமரத்தனம் இன்னும் இந்தியா எங்களை வாழவைக்கும் என நினக்கும் சனம் இல்லாமல் இல்லைத்தானே....! இப்போதான்ன் உண்ண்மையான இந்தியாவின் நிலை வெளிவர ஆரம்பிக்கீறது....

சனம் இந்தியாவை தெரிவு செய்ய இன்னும் வேற காரணங்களும் இருக்க்கிறது அதை இப்போ சொல்ல முடியுமா தெரிய வில்லை....!

உந்தப் பீலா தானே வேண்டாம் என்றது. இதில் தளபதி லோறன்ஸ் இன் கருத்துக்களை பாலகுமாரன் அண்ணா சொல்லுறார் கேட்டுப்பாரும்.

http://www.tamilnaatham.com/audio/2006/jun...la20060611.smil

எங்கடை மக்களின் இடப்பெயர்வு பிரச்சனையை நாங்கள் தான் தீர்க்க முயற்சிக்க வேண்டும். கலைஞர் அது செய்யேல்லை றோ இது செய்யுது என்று மற்றவையிலை குறைபிடித்து ஒரு முன்னேற்றமும் வராது.

கலைஞர் ஒரு சதாரண அரசியல்வாதி என்றது எல்லோருக்கும் தெரிந்தது பிறகு ஏன் அவரிடம் இருந்து மேன்மையான எதிர்பார்ப்புகள்? றோ பிடிக்குது பரந்தன்ராஜன் பிடிக்கிறான் எண்டு ஒப்பாரிவைத்து என்ன பயன். அவர்கள் என்ன எங்கள் உற்ற நண்பர்களை பலவீனத்தை பயன்படுத்தாது உதவி செய்ய?

என்ன மயிருக்கு

வந்தாய் இங்கே?

உயிர் பிழைக்கவா?

பிழைப்பததெற்கு

திறந்தவெளி கழிப்பிடத்திற்கும்

திறந்தவெளி சிறைக்குமா?

பேருந்தில் பெண்களை

கருக்கியவனும்

பெஸ்ட் பேக்கரியை

எரித்தவனும்

பெயிலில் சுதந்திரமாய்

சுற்றி வர

ஆறுமணி ரோல்காலுக்கு

ஆஜராக வேண்டிய

கண்டிஷன் பெயிலுக்கா

கடல் தாண்டி

வந்தாய்?

தொப்புள்கொடி உறவா?

அட பைத்தியமே...

சகோதரனை அனுப்பி

கற்பழிக்க செய்தவனிடம்

என்ன மயிரை

எதிர்பார்க்கிறாய்?

தார்மீக ஆதரவுமா?

சனியனே நான்

தேசதுரோகி பட்டம்

வாங்க வேண்டுமா!

சாய்ந்து கொள்ள தோளும்

ஆதரவு குரலும் தேடி

மானத்தோடு வாழ

பக்கத்திடம் பங்காளியிடமென

படகேறி வராமல்

உன் உயிர்போனாலும்

உன் தன்மானமாவது

மிஞ்சும் எனக்கும் குற்ற

உணர்ச்சி இருக்காது

நீ செத்துப் போனால்

உனக்காக ஒரு துளி

கண்ணீர் சிந்துவேன்

அதுவும் கூட

இரகசியமாக!

மன்னித்து விடு

என்னை!

நன்றி

தினமலர்

தமிழகத்துக்கு இலங்கை தமிழ் அகதிகள் வருகை

ஆக்கம் குழலி / Kuzhali @

At 3:45 PM, manasu said…

நீங்கள் சொன்ன எல்லா குற்றசாட்டுகளுக்குப் பின்னும் இங்கே வருகிறார்கள் என்றால் ஏதோ ஒரு பாதுகாப்பு இருப்பதினால் தானே???

At 4:04 PM, கார்திக்வேலு said…

சொல்லக்கூசும் கையாலாகாதனத்தின் எரிச்சலை நன்கு பதிந்துள்ளீர்கள்

At 4:30 PM, Kuppusamy Chellamuthu said…

எனது தார்மீக ஆதரவும் இங்கே.

At 5:15 PM, மகேஸ் said…

தமிழகத்தில் 1980களில் இருந்த எழுச்சி மீண்டும் ஏற்பட்டால் உலக நாடுகள் புலிகளின் மீது உரசிப்பார்க்க கொஞ்சம் தயங்குவார்கள். அதனை முன்னெடுத்துச் செல்ல யாரும் இல்லயே.

புலிகளை ஆதரிக்கவில்லையென்றாலும், இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக ஒரு போராட்டம், கடையடைப்பு தமிழக அரசு நடத்தலாம்.

புலிகள் தமிழ்நாட்டுத் தமிழர்களின் ஆதரவு இல்லாமல் இலக்கை அடைவது சிரமமானதே.

சோற்றால் அடைத்த பிண்டம் டில்லியில் பதவி வாங்குவதில் காட்டும் வேகம் தமிழன் கொல்லப்படுவதைக் கண்டிப்பதில் காட்டுவதில்லை.

நேற்று கொழுவி அவர்களின் பதிவில் கொன்று தூக்கிலிடப்பட்ட குழந்தைகளைப் பார்த்த பின்னும் அமைதியாக இருக்க முடியவில்லை.

இங்கு திட்டமிட்டு இலங்கைத் தமிழர்களை மறக்க வைக்கும் முயற்சி ஆங்கில ஊடகங்களால் நடக்கிறது. ஹிந்து என்ற ஆங்கில ஊடகம் அதில் முன்னிலையில் இருக்கிறது. அதற்கு இந்திய அரசு, இலங்கை அரசு என்ற இரு முனைகளில் இருந்து ஆதரவும் பணமும் கிடைக்கிறது.

விடுதலைப் புலிகளை ஆதரிக்காமல், இலங்கைத் தமிழர்களை ஆதரித்து கொழுவி அவர்கள் பதிவில் போட்ட படங்களை நம் தமிழ் ஊடகங்கள் வெளியிட்டால் தமிழக கிராமங்களில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு கிடைக்கும். இவைகளை யார் முன்னெடுதுச் செய்வது?

தமிழனின் போராட்ட குணம் குறைந்து விட்டது உண்மைதான்.

At 6:06 PM, அருள் குமார் said…

//நீ செத்துப் போனால்

உனக்காக ஒரு துளி

கண்ணீர் சிந்துவேன்

அதுவும் கூட

இரகசியமாக!

//

என்ன சொல்ல! வார்த்தைகள் இல்லை.

At 9:32 PM, bonapert said…

இங்கே தேவைப்படுவது கழிவிரக்கமா, போர்குணமா?

தங்களது கவிதை மிகவும் வசதியாக கழிவிரக்கத்தில் அடைக்கலம் புகுந்து, குற்றவுணர்வை சொறிந்து விடுவதாக, மிகவும் அருவெறுப்பாக உணர்கிறேன்.

வார்த்தைகள் கடுமையாக இருந்தால் மன்னிக்கவும்.

எனது கருத்துக்களில் தவறுகள் இருந்தால் திருத்தவும்.

இங்கு ராஜீவ் மரணத்தை ஒட்டி மக்கள் கலை இலக்கிய கழகத்தின்- மருதையன் எழுதிய உரைவீச்சை நியாபகப்படுத்த விரும்புகிறேன்.

அதில், தமிழகத்தின் அமைதியை(அமைதிப் பூங்கா என்று பெயர் பெற்றதல்லவா நமது மண்) தீக்கொழுத்த ஒரு நெருப்போறி வேண்டும் என்று கேட்டு முடித்திருப்பார்.

அது போன்ற சூழ்நிலைக்கு தேவையான உணர்வை தூண்டும் கவிதைகள்தான் நன்றாக இருக்கும்.

மற்றவை இழவு வீட்டில் இன்னிசை கச்சேரியாக, மிக அபத்தமாக அருவெறுப்பாக இருக்கும்.

விமர்சனத்தின் நோக்கம் நட்பு முரன்பாடுதானன்றி வேறல்ல. சம தளத்தில் நின்று பரிசீலிக்கவும்.

At 10:32 PM, குழலி / Kuzhali said…

This post has been removed by the author.

At 10:34 PM, குழலி / Kuzhali said…

//இங்கே தேவைப்படுவது கழிவிரக்கமா, போர்குணமா?

//

ஒன்றும் செய்யமுடியாத கையாலாகாத ஒரு இந்திய தமிழனின்(?!) புலம்பல் தான் இந்த பதிவு...

At 12:23 AM, கலாநிதி said…

நீங்கள் சொன்ன எல்லா குற்றசாட்டுகளுக்குப் பின்னும் இங்கே வருகிறார்கள் என்றால் ஏதோ ஒரு பாதுகாப்பு இருப்பதினால் தானே???

வேறென்னதுக்கு

At 11:39 AM, வெற்றி said…

குழலி,

எம்மினத்தின் தலைவிதியை என்னவென்று சொல்வது?!.

At 12:48 PM, Anonymous said…

ஆஹா அருமையான பதிஉ.தொடர வாழ்த்துக்கள்

At 12:49 PM, Anonymous said…

What happened to PMK and Ramadoss.

What happend to DMK and Karunanidhi.Why are they so silent

and not even willing to issue a

press statement condemning this.You should think about this first.

At 6:19 PM, முகு said…

காசிருந்தால் கனடா போயிருப்பான்,

கள்ள தோணியில்,

எங்கே போகமுடியும்,தமிழ் நாட்டை தவிர;

அங்கே பிணமாவதை விட

நம் மண்ணில் நடைப்பிணமாவதையே

விரும்புகிறார்கள் போலிருக்கிறது.

காலம் மாறலாம்,அவர் மண்ணில்

அகதிகளாய் நாம்.

கண்ணீருடன்,

முகு

At 7:00 PM, ப்ரியன் said…

மக்கள் அநேகருக்கு மனதிலும் ஈழமக்களுக்கான ஆதரவு இருக்க செய்தாலும் ஏதோ ஒன்று தடுக்கிறது வாய் விட்டு பேச அது நம் இயலாமையா?இல்லை பயமா?எனத் தெரியவில்லை சமீபத்தில் ஊருக்குப் போகும்போது "Inside an Elusive Mind - by MRNarayan Swamy" படிப்பதற்காக எடுத்துச் சென்றிருந்தேன்.அப்பா பார்த்துவிட்டு பதறிவிட்டார்.இதெல்லாம் படிக்காதே படித்தாலும் பப்ளிக்கா பேசாதே என்கிறார்.என்ன செய்ய :lol:

/*நீ செத்துப் போனால்

உனக்காக ஒரு துளி

கண்ணீர் சிந்துவேன்

அதுவும் கூட

இரகசியமாக!*/

இயலாமையின் உட்சகட்டம் என்ன செய்ய வருத்தமாய் இருக்கிறது :lol:

http://kuzhali.blogspot.com/2006/06/blog-post_11.html

தமிழகத்தில் 1980களில் இருந்த எழுச்சி மீண்டும் ஏற்பட்டால் உலக நாடுகள் புலிகளின் மீது உரசிப்பார்க்க கொஞ்சம் தயங்குவார்கள். அதனை முன்னெடுத்துச் செல்ல யாரும் இல்லயே.

புலிகளை ஆதரிக்கவில்லையென்றாலும், இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக ஒரு போராட்டம், கடையடைப்பு தமிழக அரசு நடத்தலாம்.

புலிகள் தமிழ்நாட்டுத் தமிழர்களின் ஆதரவு இல்லாமல் இலக்கை அடைவது சிரமமானதே.

இங்கு பலர் பழைய நிலைப்பாடுகளிலிருந்து இன்னமும் மீளவில்லை, மலையேறிப்போன சிந்தனைகளோடு தான் இருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது 2 காரணங்களிற்காக.

1) இந்தியா தனது பொருளாதார முன்னேற்றத்தில் மற்றும் அது சார்ந்த வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிப்பதில் கவனமாக இருக்கிறது. தற்பொழுது அவர்களிற்கு கிடைத்திருப்பது ஒரு window of opportunity அதை அவர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். சீனாவோடு போட்டி போட்டு முன்னேறிக்கொண்டிருக்கிறார்

ஓரளவு வசதியுள்ளவர்கள் மூகாங்களில் தங்கமாட்டார்கள் என்பது தெரியும். ஆனால் வசதியில்லாமல் இன்றுவரை (1990களில் போனவர்கள்) முகாங்களில் இருப்பவர்கள் எத்தனை என்று தெரியுமா? மனிதம் மலிந்த இந்தியாவில் ஏற்கனவே கூலிவேலைக்கு எடுபிடி வேலைக்கு ஆட்கள் பிடிப்பது பிச்சைக்கு சமம். ஆனால் அதைவிட கேவலமான நிலமையில் தான் முகாமில் உள்ளவர்களின் வேலைவாய்ப்பு. அதைவிட பெண்கள் சிறார்கள் நிலமை... இப்படியான ஒரு சமூகச்சூழ்நிலையில் எவ்வளவுகாலம் (மாதங்கள் அல்ல வருடங்கள்) என்றுதான் ஒருவனுக்கு பணவசதிகளோடு விற்கப்படும் துரோகத்தை செய்ய தூண்டும் மூளைச்சலவையால் விலைபோகாமல் இருக்கமுடியும்?

மேற்கத்தேய நாடுகளில் 3 நேரம் கொழுக்க திண்டுபோட்டு "துரோகம் செய்யிறதிலும் பார்க்க அம்மா தங்கை அக்கா மனைவிமாரை விக்கலாம்" என்று நாங்கள் வீர வசனங்கள் பேசலாம். ஆனால் அவர்களை அந்த ஒரு சூழ்நிலைக்குள் செல்லமுன் தடுப்பதற்கு இயன்றளவு முயற்சிக்கிறமா?

ஒரு வகையில் பார்க்கும் போது மக்கள் செய்வது மிகவும் பாரதூரமான விடயமாகப்பட்டாலும் பெரும்பாலான மக்கள் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்தில் இருந்துதான் இடம்பெயருகிறார்கள் என்பதை மறுக்க முடியாது.... அதுக்கு மக்கள் ஏன் புலிகள் பிரதேசத்துக்கு நகரவில்லை எண்று கேள்விகள் வரலாம்....!

அதுக்காக பல காரணம் சொல்லலாமே..

புலிகள் பிரதேச மக்கள் இராணுவ பிரதேசங்களில் இப்போது எல்லாம் நடமாட முடியவில்லை... அவர்கள் புலிகளின் பிரதிநிதிகளாகவே காணப்படுகிறார்கள் கொல்லப்படுகிறார்கள்.....! அதனால் போர் எண்று ஒண்று வரும் வரை மக்கள் நிரந்தரமாக புலிகள் பகுதிக்கு இடம்பெயர முடியவில்லை முடிந்தால்லும் பின்னாளில் அவர்களால் திரும்பவும் வரமுடிய வில்லை... எதுவுமே நிரந்தரமாக சாத்தியம் இல்லாமல் போகின்றது....!

அதோடு பொருளாதாரம்.... காசிருந்தாலும் யுத்தம் ஒண்று வந்தால் வரப்போகும் பொருளாதாரத்தடை, இடம்பெயர்வுகள் பற்றிய அச்ச நிலை, உயிர் பாதுகாப்பு என்பது எண்று மக்களின் சிந்தனையில் இந்தியா என்பது எதோ சொர்க்கமாக காணப்படுகிறதே....!

அக்கரைக்கு இக்கரை பச்சை... என்பது மக்கள் பலருக்கு பட்டுத்தான் தெரிகிறது....!

புலிகளால் இந்த முறை கைகொள்ளப்படும் அணுகுமுறை என்பது மக்களில் பலருக்கு நம்பிக்கையை தந்தாலும் புலிகள் பிரதேசத்துக்கு நகரவிரும்பவில்லை என்பதை விட 1996 ம் வருடம் இந்தியா நோக்கி நகர்ந்த மக்களை விடவும் இந்த முறை போகும் போய்க்கொண்டு இருக்கும் மக்களின் தொகை மிகவும் குறைவு போல இருக்கிறதே....! இது வரை 4000 பேர் போய் இருக்கிறார்களாம் எண்றால்.... 1996ல் இதைவிடவும் பத்து மடங்கு அதிகம்....!

  • தொடங்கியவர்

தமிழ்நாடு துரோகிகளின் வேட்டைக் காடாகிறது

2005ம் ஆண்டின் நடுவில் தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக சதி வேலைகள் செய்வதற்கும் பொய்ப்பிரச்சாரம் செய்வதற்கும் பரந்தன் ராசன் இலங்கை அரசினால் அனுப்பி வைக்கப்பட்டார். துரோகக் குழு ஒன்றினைச் சேர்ந்த இவரும் தோழர்களும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான சுவரொட்டிகள் துண்டறிக்கைகள் ஆகியவற்றை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.

இது குறித்து தென்செய்தி 16-02-2006 இதழில் முதல் பக்கத்தில் பரந்தன் ராசன் குழுவினரின் நடவடிக்கைகள் குறித்து செய்தி வெளியிட்டிருந்தோம்.

முந்திய அ.தி.மு.க. அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து பரந்தன் ராசனையும் அவரது குழுவினரையும் கைது செய்து செங்கல்பட்டுச் சிறையில் அடைத்தது. இவர்களை விடுவிக்க டெல்லியிலிருந்து ரா உளவுத்துறை அதிகாரிகள் தமிழகத்திற்கு விரைந்து வந்தனர். அப்போதைய முதலமைச்சரைச் சந்தித்துப் பேச முயற்சி செய்தனர். ஆனால் அவர்கள் முயற்சி வெற்றிபெறவில்லை.

பிறகு இனி இந்தியாவிற்குள் அடியெடுத்து வைக்கமாட்டோம் என்ற உறுதிமொழியை பரந்தன் ராசன் குழுவினர் எழுத்துப்பூர்வமாக கொடுத்ததின் பேரில் அவர்கள் விடுதலைச் செய்யப்பட்டு கொழும்புவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பொதுவாக இந்தியாவிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் யாரும் மீண்டும் இந்தியா திரும்ப அனுமதிக்கப்பட்டதில்லை.

ஆனால் பரந்தன் ராசன் குழுவினர் மீண்டும் இந்தியா திரும்பி பெங்களூரில் தங்களது தலைமை அலுவலகத்தை அமைத்துக்கொண்டு செயல்படத் தொடங்கினார்கள். தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் இப்போது தமிழகத்தில் பகிரங்கமாகச் செயல்பட்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாம்களுக்குச் சென்று அங்குள்ள இளைஞர்களிடம் பொய்யான வாக்குறுதிகளைத் தந்து ஆள் சேர்க்கிறார்கள். சிங்கள இராணுவத்தின் துணைப்படையில் சேர்ந்தால் மாதம் 10இ000ஃ- ஊதியம் கிடைக்கும் என்றும் வேறுபல சலுகைகளும் அளிக்கப்படும் என்றும் கூறி இளைஞர்களைத் திரட்டி கொழும்புவிற்கு அனுப்பி வைக்கிறார்கள். அங்கு இவர்களுக்கு சிங்கள இராணுவம் ஆயுதப் பயிற்சி அளிக்கிறது. அதன்பின் இவர்கள் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள தமிழர் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். அங்கு இவர்கள் விடுதலைப் புலிகளின் குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர் ஆகியோரை வேட்டையாடி கொன்றுக் குவிக்கிறார்கள். இதற்கானப் பழி கருணா கும்பல் மீது சுமத்தப்படுகிறது. கருணா கும்பலில் விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரைத் தவிர வேறு யாரும் இல்லை. எனவே தமிழ் இளைஞர்களைக் கொண்டே தமிழர்களை அழிக்கும் வேலையை சிங்கள இராணுவம் செய்வதற்கு முகவராக பரந்தன் ராசன் செயல்படுகிறார். தமிழ்நாட்டில் அகதிகள் முகாம்களுக்கு நேரில் சென்று பகிரங்கமாக ஆள் திரட்டி வரும் இவருக்கு 'ரா' உளவுத்துறையின் முழுமையான ஆதரவு உள்ளது. அந்தத் தைரியத்தில்தான் இவ்வாறு செயல்படுகிறார்.

துரோகப்படைக்கு ஆள் திரட்டும் பரந்தன் ராசனின் நடவடிக்கைகள் தமிழ்நாட்டில் தங்கு தடையில்லாமல் நடைபெற்று வருகிறது. காவல் துறையில் அவர் மீது பல வழக்குகள் இருந்தபோதிலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

நன்றி : தென்செய்தி (16.06.2006)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருணாநிதி மட்டுமல்ல அவரது ஊடகங்களும் தமிழருக்கேதிரானவை தான். உதாரணமாக தினகரன்.கொம்.

சன் ரிவி, முரசொலி என்பன.

சிங்களவர் இறந்தால் அதை பெரிதாக விளம்பர படுத்தும்.

இதை தமிழ் நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் முதலில்.

பாமக அவர்களின் கூட்டணியில் இருந்தும் இதனை தட்டிக்கேட்பதில்லையா? எல்லாம் அரசியல் இருப்புக்காகத்தான் ஈழத்தமிழர் பிரச்சினையை கையில் எடுப்பார்கள் போலிருக்கு. :roll:

  • தொடங்கியவர்

கலைஞர் கருணாநிதி பற்றிய செய்தி ஏற்படுத்திய தாக்கங்கள்!

"கலைஞர் தமிழினத்திற்கு மீண்டும் துரோகம்" என்னும் தலைப்பில் வெப்ஈழத்தில் வெளியிடப்பட்ட செய்தி சில விவாதங்களை தோற்றுவித்துள்ளது. இச் செய்தி எம்மால் தமிழ்நாட்டில் உள்ள பல ஊடகங்களுக்கு தெரியப்படுத்தப்பட்டிருந்தத

கலைஞரை காப்பாற்ற முயலும் ஈழத்து ஊடகங்களை பெயரிட்டால் மக்கள் விளித்துக் கொள்ள உதவியாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப் பிரச்சினையில் மாறாத நிலைப்பாடு !

-அஜாதசத்ரு-

இலங்கைத் தமிழர் விடயத்தில் மத்திய அரசின் நிலைப்பாடுதான் தமிழக மாநில அரசின் நிலைப்பாடுமாகும் என்று வெளிப்படையாக கூறியிருப்பதன் மூலம் தமிழக முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி தனது இரட்டை வேடப் போக்கை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார்.

குடும்பம், சொத்து, வாரிசு அரசியல் என்ற பிற்போக்குத்தனமான அரசியல் சகதிக்குள்ளிருந்து விடுபட முடியாத நிலைமையொன்றுக்குள் தன்னை முழுமையாக திணித்துக் கொண்டுள்ள தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தனது குடும்ப ஊடகங்கள் மூலம் உலகத் தமிழர்களின் தலைவர் என்று புகழாராம் சூடிக் கொள்வதுதான் வேதனைப் படவும் வெட்கப்படவும் கூடிய விடயமாகும்.

இலங்கை இனநெருக்கடித் தீர்வு முயற்சிகள் சீர்குலைந்து மீண்டுமோர் யுத்தத்தை நோக்கிய நகர்வுகளுக்கான தாக்குதல்களும் படுகொலைகளும் மனித உரிமை மீறல்களும் தமிழர்களுக்கு எதிராக அதிகரித்துள்ள நிலையில் வாய்மூடி மௌனம் காக்கும் அல்லது ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான அரசுக்கு மறைமுகமாக போர்த் தளபாடங்களை வழங்கிக் கொண்டிருக்கும் மத்திய அரசின் நிலைப்பாடு தான் தமிழக அரசின் நிலைப்பாடாகும் என்று கூறியதன் மூலம் இலங்கைத் தமிழர்களுக்கு கலைஞர் கருணாநிதி எந்தச் செய்தியை சொல்ல விரும்புகின்றார்.

இலங்கையின் தமிழர் தாயகப் பிரதேசங்களில் குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் அரச படையினராலும் சிங்கள பௌத்த இனவெறியர்களாலும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் அச்சுறுத்தல், படுகொலைகள் காரணமாக கடந்த ஒரு மாத காலப்பகுதியில் சுமார் 2 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் படகுகள் மூலம் அகதிகளாக தப்பிச் சென்றுள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் ஜூன் மாதம் நடுப்பகுதி வரை 3500 க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் தமிழகத்துக்கு சென்று அகதிகளாக தஞ்சமடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மண்டபம் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள சுமார் 40 இற்கு மேற்பட்ட அகதி முகாம்களில் பல வருடங்களைக் கடந்த நிலையில் `விடியல்' இல்லாத வாழ்வுடன் உயிருக்கு மட்டும் உத்தரவாதம் என்ற நிலைப்பாட்டுடன் மட்டுமே இலங்கைத் தமிழ் அகதிகளின் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது.

முன்னாள் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தின்போது இலங்கைத் தமிழ் அகதிகள் அங்குள்ள அகதி முகாம்களில் எவ்வாறானதோர் பாதுகாப்பு கெடுபிடி உட்பட எத்தகைய நெருக்கடி நிலைமையை எதிர்கொண்டார்களோ அவ்வாறானதோர் நிலைமையே கலைஞர் கருணாநிதியின் ஆட்சியிலும் தொடர்கதையாகவுள்ளது.

இதனைவிட தமிழக சட்டசபையில் இலங்கை அரசின் மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டுமென்று விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையானது கவனத்திலெடுத்துக் கொள்ளப்படவில்லை.

இவ்வாறே, கடந்த வெள்ளிக்கிழமை இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து தமிழீழ விடுதலை ஒருங்கிணைப்பு ஆதரவாளர்களால் சென்னை உட்பட தமிழகத்தின் 40 இடங்களில் நடைபெற்ற பேரணி நிகழ்வுகளையும் தமிழக அரசு உதாசீனப்படுத்தியுள்ளது.

கலைஞர் கருணாநிதியின் திராவிட முன்னேற்றக்கழகம் மட்டுமன்றி டாக்டர் ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சியும் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற இலங்கைத் தமிழர் ஆதரவுப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதொரு விடயமாகும்.

இதனைவிட முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா இலங்கை அரசுடன் கொண்டிருந்த உறவுகளை கலைஞர் கருணாநிதியின் ஆட்சியிலும் தொடர்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அறிய வருகிறது.

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் இந்த விருப்பத்தை கலைஞர் கருணாநிதியிடம் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் கடந்த வாரம் சென்னையில் சந்தித்து வெளிப்படுத்தியதாகவும் தெரிய வருகிறது.

இவ்வாறான நிலைமைகளுக்கு மத்தியில் தான் மத்திய அரசின் நிலைப்பாடு தான் தமிழக அரசின் நிலைப்பாடென்கின்ற போக்கை கலைஞர் கருணாநிதி வெளிப்படையாக தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றக் குழுவை இலங்கைக்கு அனுப்பி தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல் சம்பவங்களை வெளிக்கொண்டு வர வேண்டுமென்ற கோரிக்கையும் தமிழக அரசினால் உதாசீனப்படுத்தப்பட்டுள்ளது.

இதனைவிட தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பையேற்றுள்ள முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் விருப்பம் தெரிவித்துள்ளபோதிலும் அந்த வேண்டுகோளை கலைஞர் கருணாநிதி தொடர்ந்தும் அலட்சியப்போக்குடன் நிராகரித்து வருவதாக தமிழ்க் கூட்டமைப்பினர் விசனம் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் தமிழகத்திற்கு சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிரேஷ்ட முக்கியஸ்தரான மாவை சேனாதிராஜா, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் வைகோ, பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ், இந்திய கம்னியூஸ்ட் கட்சி செயலாளர் ராஜா உட்பட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களைச் சந்தித்துள்ள நிலையில் கலைஞர் கருணாநிதியுடனான சந்திப்புக்கு மட்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் அறிய வருகிறது.

ஆரம்ப காலகட்டத்தில் தமிழ்த் தேசிய விடுதலை போராட்டத்தை உளப்பூர்வமாக நேசித்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு போட்டியாக தமிழகத்தில் தனது அரசியல் காய் நகர்த்தலுக்காக ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்த கலைஞர் கருணாநிதி ஒரு வெறும் அரசியல்வாதியாக மட்டுமே தன்னை இன்றும் வெளிப்படுத்தி நிற்கின்றார்.

இலங்கைத் தமிழர் விவகாரத்தில் நேரடியானதும் மறைமுகமானதுமான முழுமையான பங்களிப்பை செலுத்தி வந்த இந்திய மத்திய அரசும் தமிழக அரசும் தொடர்ந்தும் மௌனம் சாதிப்பதென்பது இலங்கை அரச படைகளின் மனித உரிமை மீறல்களை மேலும் மேலும் ஊக்குவிப்பதாகவே அமையப்போகின்றது.

-தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.