Jump to content

தமிழ் உணர்வாளர் திரு நவநாயகம் லண்டனில் காலமானார்


Recommended Posts

பருத்தித் துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட, தமிழ் உணர்வாளர் திரு நவனாயகம் லண்டனில் காலமானார்.  இவர் 'வோல்தம்ஸ்டோ தமிழ்ச் சங்கம்' தின்  ஆரம்பகர்த்தாவும், 'Tamil Refugee Action Group' இன் முன்னாள் தலைவரும்,  வோல்தம்ஸ்டோ தமிழ் பாடசாலையின் முன்னாள் அதிபருமாவார். தமிழர் புனர் வாழ்வுக் கழகத்தின் செயற்பாட்டாளராகவும் இருந்தவர்.

 

அன்னாரிற்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாரிற்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்.


 

Link to comment
Share on other sites

அன்னாரின் சேவைக்கு நன்றிகளும்,
அவரது பிரிவால் வாடும் உறவுகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்களும் உரித்தாகட்டும்.



12589_315854131851839_552464854_n.jpg



பிரபல சமூகத் தொண்டரும் தேசப்பற்றாளருமான திரு இராசையா நவநாயகம் அவர்கள் 27.12.2012 அன்று அதிகாலை காலமானார்.

 

நவா அண்ணா என்று அன்போடு அழைக்கப்படும் இவர்இ தமிழ்த் தேசியத்தின் மீது மிகுந்த பற்றுக் கொண்டிருந்ததோடுஇ பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவுடன் இணைந்து தமிழீழ விடுதலைப் போராட்டதின் அனைத்துச் செயற்பாடுகலிலும் முன்னின்று உழைத்து இன்று வரையும் உறுதியோடு குரல் கொடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.


1986 முதல் 1992 வரை தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். டாக்டர் ஜெயகுலராஜா அவர்கள் பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம் செய்து தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் வேலைப்பாடுகளை விரிவுபடுத்திய காலகட்டத்தில் பிரித்தானியாவில் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் திரு நவநாயகம் அவர்களின் தலைமைல் மிகச் சிறப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.

 

தாயகதில் விடுதலைப் போராட்டம் தீவிரமடைந்த காலத்தில் சிறி லங்கா அரசின் இராணுவ அடக்கு முறையில் இருந்து தப்பி வெளி நாடுகளுக்கு தஞ்சம் புகுந்தவர்களில் கணிசமானோர் பிரித்தானியாவுக்கு வந்தார்கள். அக்காலத்தில் தமிழர் அகதிகள் நடவடிக்கைக் குழுஇ அவர்களின் அரசியல் தஞ்சக் கோரிக்கைகளை முதன்மைப்படுத்தி அவர்களது செயற்பாடுகள் ஒய்வுபெற்ற காலத்தில் திரு நவநாயகம் அவர்களும் அவ்வமைப்பிற் கூடாக சிறந்த சேவையை வழங்குவதற்குப் பெரிதும் துணை நின்றார்.

1985ல் இடம் பெயர்ந்து வந்தவர்களின் எதிர் கால வாழ்வுக்காகவும் அவர்களின் கலை கலாச்சார மேம்பாடுகளை வளர்ப்பதற்கும்இ தாயக விடுதலையை புலம்பெயர் மக்களின் ஆதரவைத் திரட்டும் நோக்குடனும் வோல்தம் பொறஸ்ட் தமிழ்ச்சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினார்.

 

1986ம் ஆண்டு ஆரம்பித்த இத்தமிழ்ச்சங்கம் தனது வெள்ளி விழாவின் போது மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் வோல்தம்ஸ்ரோ தமிழ் மக்களின் தந்தை என்று கௌரவிக்கப்பட்டார். இளையோர்கள் மத்தியில் நாட்டுப்பற்றை வளர்ப்பதற்காகவும் அவர்களை தமிழ்ச் சங்க ஒழுங்கிற்குள் கொண்டு வருவதற்காகவும் வோல்தம் பொறஸ்ட் தமிழ்ச்சங்கத்தின் கலை – பண்பாடு மற்றும் விளையாட்டுத் துறைகளை உருவாக்கிஇ இவற்ரின் வளர்ச்சிக்காகவும் முன்னின்று உழைத்தார். லண்டனில் ராகாஸ் இசைக்குழுவை உருவாக்கி அதனையும் தேசப்பற்றோடு பயணிக்க வைத்தவர் என்பதும் குறிப்பிடத்தது.


வோல்தம் பொறஸ்ட் பகுதி வாழ் தமிழ் மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைக்கு தான் சார்ந்த அமைப்பிற் கூடாகவும்இ தனிப்பட்ட முறையிலும் உதவிகளை வழங்கி அவர்களின் ஏகோபித்த பாராட்டுதலைப் பெற்றுள்ளார்.

 

கடந்த 25 வருட காலமாக பிரித்தானியாவில் இயங்கி வந்த போன்ற சமூக அமைப்புக்களுடன் தொடர்ச்சியாக தன் மறைவு வரை இயங்கி வந்தார். இவர் ஓர் தேசப்பற்றாளரும் சமூக தொண்டர் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.


தேசிய விடுதலைப் போராட்டத்தில் வீ ரச்சாவைத்தழுவிய எமது போராளிகளை நினைவு கூர்ந்து மலர் வணக்கம் செய்யும் மாவீ ரர் நாள் நவம்பர் 27இ 1990ம் ஆண்டு வோல்தம்ஸ்ரோ நகர மண்டபத்தில் முதன்முறையாக சிறப்பாக நடப்பதற்கு உறுதுணையாக இருந்தார்.

 

1985இல் கலை பண்பாட்டுக்கழக ஒருங்கிணைப்பாளராக செயற்பட்டு பல வருடங்களாக அதனை தாயக விடுதலையை நோக்கி நெறிப்படுத்தி வந்துள்ளார்


தமிழர் புனர்வாழ்வுக் கழகம் வேலைப்பாடுகளை விரிவுபடுத்திய காலகட்டத்தில் பிரித்தானியாவில் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் திரு.நவநாயகம் அவர்களின் தலைமைல் மிகச் சிறப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.

 

தாயகதில் விடுதலைப் போராட்டம் தீவிரமடைந்த காலத்ïல் சிறி லங்கா அரசின் இராணுவ அடக்கு முறையில் இருந்து தப்பி வெளி நாடுகளுக்கு தஞ்சம் புகுந்தவர்களில் கணிசமானோர் பிரித்தானியாவுக்கு வந்தார்கள். அக்காலத்தில் தமிழர் அகதிகள் நடவடிக்கைக் குழுஇ அவர்களின் அரசியல் தஞ்சக்கோரிக்கைகளை முதன்மைப்படுத்தி அவர்களது செயற்பாடுகள் ஒய்வுபெற்ற காலத்தில் திரு நவநாயகம் அவர்களும் அவ்வமைப்பிற் கூடாக சிறந்த சேவையை வழங்குவதற்குப் பெரிதும் துணை நின்றார்.

 

தாயக விடுதலை நோக்கி அயராது உழைத்து இன்று உறங்கிப் போயிருக்கும் நவா அண்ணாவின் கனவை நனவாக்க நாம் அயராது உழைப்போம்.

 

 



- - முகநூல்

Link to comment
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள்..!

Link to comment
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள்..!

Link to comment
Share on other sites

Veteran Eezham Tamil activist Rasaiah Navanayagam passes away in London

[TamilNet, Monday, 31 December 2012, 21:46 GMT]

Rasaiah Navanayagam, a veteran Eezham Tamil activist based in the UK, passed away in London on Wednesday at the age of 71. Mr. Navanayagam, who rose in prominence as an activist in UK in the 80s, was instrumental in the formation of several grassroot political and social organizations in London. Recognized for being one of the key organizers of the first Maaveerar Naa'l in London in 1990 with the guidance of the late Col. Kittu, activists who worked with him remember his homeland oriented perspective and his resourcefulness in mobilizing the Tamil community in the UK for political and cultural activities. Mr. Navanayagam’s demise is mourned by a cross-section of the Eezham Tamil community in the UK.

"By being at the forefront of the formation of different organizations, he worked for the liberation struggle through different fronts. He realized long ago that a strong, enlightened people's support is required for the sustenance and success of the struggle," a source close to Mr. Navanayagam told TamilNet.

Mr. Navanayagam, who was suffering from cancer for about a year, passed away in the late hours of 26 December.

He is survived by 2 sons and wife.

Born on 21 July 1941, Mr. Navanayagam came to the UK in 1966 as an Engineering student. Initially working as a Cost Analyst at a private firm, he later became entrenched in political activities as the crisis in the Tamil homeland worsened.

Emerging to prominence as a grassroots mobilizer for the Eezham Tamil cause after Black July remembrance in 1986, he started the Waltham Forest Tamil Sangam in East London borough, intended to function as a political and cultural organization to cater to the needs of the increasing numbers of Eezham Tamils in the UK.

Incidentally, on the 25th anniversary of the above organization held on 26 March 2011, Mr. Navanayagam was awarded the title of 'Waltham Stow Thamizhar Thanthai'.

Assisting in the formation of the Tamil Rehabilitation Organisation (TRO) Branch in London in 1985, he was in charge of the same from 1986-92.

He was also greatly instrumental in the formation of the Tamil Refugee Action Group (TRAG), an organization to assist Eezham Tamil refugees in the UK, in 1986. TRAG was set-up after his extensive interactions with and assistance from the African Refugee Action Group, sources close to him told TamilNet.

In 1989, he became an employee in TRAG as an Immigration Case Worker, while also assisting with the working programme of TRAG’s housing plan for Tamil refugees.

Mr. Navanayagam was also deeply involved in the activities of the Thamizhar Marumalarchchi Sangam since 1985.

He played a key role in organizing the first Tamil Heroes Day (Maaveeral Naa'l) in London in 1990 with the guidance of Col.Kittu.

Besides his keen interest in promoting cultural activities, he took political classes for activists, besides initiating workshops for community building and social empowerment of Tamils in the UK.

"He was very clear on the concept of the nation and sovereignty and he was also an adept in using Marxist theory to elaborate on the national question of Eezham Tamils. He was a committed Tamil nationalist at heart. Till his last days he remained committed to the objectives of the struggle," Mr. Guhan, a veteran activist and a political contemporary of Mr. Navanayagam, told TamilNet.

 

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=35897

Link to comment
Share on other sites

அன்னாரின் சேவைகளுக்கு நன்றிகள்.
பிரிவால் தவிக்கும் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.