Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாய்மையைக்கேவலப் படுத்தும் சமுதாயமா தமிழ்ச்சமுதாயம்?

Featured Replies

"ஓரு சில மாதங்களுக்கு முன் மட்டக்களப்பைச்சேர்ந்த பாராளுமன்றப் பிரதிநிதி அரியரத்தினம் அரியேந்திரன் என்பவர் "மட்டக்களப்பில்" அரசியல் சார்பற்ற ஸதாபனங்களில் வேலைசெய்யும் நூற்றுக்கணக்கான பெண்கள் ஒழுக்கமற்ற முறையில் கர்ப்பமாகியுள்ளனர் என்ற பொய் பரப்புரையைச் செய்தார். தமிழ்ப்பெண்களின் கற்புக்கு வக்காலத்து வாங்கும் பண்புவாதி இவர்... மனித நாகரிகம் வெட்கித் தலைகுனியும் செயல்கள் இவை."

மனித நாகரிகம் வெட்கித் தலைகுனியும் செயல்கள்

கர்ப்பிணிப் பெண்- தற்கொலைதாரியும்,- தமிழ்ப் பெண்கள் படும் அவதிகளும்

கடந்த மாதம் 25ம் திகதி (25.04.06) இலங்கையின் தலைநகரான கொழும்பில் இராணுவத் தலைமைக் காரியாலயத்தின் முன் ஒரு கற்பிணிப் தமிழ்ப்பெண் தற்கொலை தாரியால் இலங்கையரசின் இராணுவ மா அதிபரைக் குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைத்தாக்குதலின் பின் தமிழ்ப் பெண்கள் படும்பாடு மிகவும் கவலைக்குரிய தாகவிருக்கிறது. தற்கொலைதாரி உண்மையிலேயே ஐந்து மாதக் கர்ப்பவதியா இல்லையா? என்று திட்டவட்டமாக முடிவு கட்ட, அந்தப் பெண்ணின் இரத்தத்தைப் பரிசோதனைக்கு வெளிநாட்டுக்கு அனுப்பியிருப்பதாகச் தகவல்கள் சொல்லப் படுகிறது.

இத்தாக்குதல் நடந்தபின், வெளிநாடுகளுக்குப் போவதற்காக கொழும்புக்கு வந்து விடுதிகளில் தங்கி நின்ற தமிழ்ப் பெண்கள் அரச படையினரின் பாதுகாப்புத் தேடல்களில் மிகவும் பாதிக்கப் படுகிறார்கள். வேலை செய்யுமிடஙகளில் பெரும்பாலான தமிழ்ப்பெண்கள் சந்தேகக் கண்ணோடு பார்ககப் படுகிறார்கள். கொழும்பில் வாழும் தமிழர்களுடன்; அன்பாகவிருந்த அண்டைவீPட்டுச் சிகேகிதர்கள் 25ம் திகதியின்பின் சினேகித நெருக்கத்திலிருந்து கொஞ்ச தூரம் போய்விட்டார்கள். 28ம் (28.04.06) திகதி வெள்ளவத்தைப் பகுதியில் உள்ள பெரிய n~hப்பிங் பகுதியில் ஒரு தமிழப்பெண் ஆயதம் தாங்கிய படையினரால் கைது செய்யப் பட்டிருக்கிறார்.

1ம் திகதி (01.05.06) யுனெஸ்கோ காரியாலயத்தில், அகில உலக சுதந்திர பத்திரிகையாளர் மகாநாட்டுக்கு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் வேலை செய்யும் சிவரம்யா என்ற தமிழ் பெண் ஊடகவியாலாளர் போயிருந்த போது சங்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு இப்போது விடுதலை செய்யப் பட்டிருக்கிறார். இதுவரை, உலகில் எந்தப்பகுதியிலும் கர்ப்;பவதிகள் தற்கொலைக் குண்டுதாரிகளாயிருந்தார்கள் என்று எந்த சரித்திரமும் கிடையாது. தாய்மை என்பது கடவுளின் ஆசியிற் கிடைக்கும் பாக்கியம் என்று நமது ஆன்றோர்கள சொல்லியிருக்கிறறர்கள். ஓரு கர்ப்பவதி தன்னையும் தன்னுள் வளரும் குழந்தையையும் இன்னும் பல உயிர்களை அழிக்கும் ஆயதமாப் பாவித்தாள் என்பதை 99.9 விகிதமான பெண்கள் நம்ப மாட்டார்கள்.. சில மிருகங்கள் தனது குட்டி பிறந்ததும் பசி காரணமாகத் தனது குட்டிகளில் ஒன்றைத் தின்னும என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் எந்த மிருகங்களும் இன்னொரு மிருகத்தைக் கொல்லத் தனது குட்டியைப் பாவித்ததாகச் சரித்திரம இல்லை.

காட்டு மிருகங்கள் கூடத் தங்கள் குட்டிகளைத் தங்கள் கண் இமைக்குள் வைத்துப் பாதுகாக்கும.; துள்ளித்திரியும் கங்காரு என்ற அவுஸ்திரெலிய நாட்டு மிருகம் தனது குட்டியை, அந்தக் குட்டி வளரும் வரை தனது வயிற்றுக்குப் பக்கத்திலுள்ள தோற்பைக்குள் பத்திரமாக வைத்துப் பாதுகாக்கும்;. மனிதர்களின் மூதாதையர்கள் என்று சொல்லப்படும் கொரில்லா என்ற பெரிய உருவமைப்புக் கொண்ட குரங்கு, மனிதர்கள் மாதிரியே தங்கள் குழந்தைகளைப் பாதுகாக்கும.

இன்று பல நாடுகளில், மிருகங்களின் தோலையெடுத்து ஆடம்பர ஆடைகள் செய்வதற்காகப் பனிக்கரடிகள் (கனடா) சிறுத்தைகள் (இந்தியா,ஆபிரிக்கா); போன்ற மிருகங்களை வேட்டையாடுகிறார்கள். இந்த மிருகங்கள் கூட தங்களின் உயிரைக்காக்க ஓடும்போது தங்கள் குட்டிகளின் பாதுகாப்புக்குக் குட்டிகளையும் தூக்கிக்கொண்டுபோக விளைந்து, அதனால் ஏற்பட்ட ;சோர்வாலும் தடைகளாலும் தங்கள் உயிரையே இழப்பதாக மிருக நலத்திற்குப் பாடுபடும். உலக ஸ்தாபன அறிக்கைகள் சொல்கின்றன. மிருகங்கள்கூட கட்டிக்காக்கும் அன்பு தாயன்பு.

இன்று உலகின் பல பாகங்களிலும் சூழ்நிலை மாற்றங்கள், வாழ்க்கை மாற்றங்கள், சமுதாய மாற்றங்களால் பெண்கள் கர்ப்பம் தரிப்பதில் பல பிரச்சினைகள் தோன்றியுள்ளன. இதனால் வளர்ந்த நாடுகளில் சனத்தொகை வளர்ச்சி மிகவும் குறைந்து கொண்டு போகிறது. இத்தாலி போன்ற நாடுகளில கத்தோலிக்க பாதிரிமார் பெண்கள் தங்கள் இயற்கைப் பணியான (குழந்தைகள் பெற்று) சமுதாய வளர்ச்சிக்கு உதவி செய்ய வேண்டும் என்று வேண்டு கோள்கள் விடுக்கிறார்கள். பிரான்சில் இரண்டு குழந்தைக்கு மேல் குழந்தை பெற்றால், அந்த பெற்றோர்களுக்கு அரசாங்கம் தாராள பண உதவிகளைச் செய்கிறார்கள் இத்தாலியைச் சேர்ந்த பிரபல வைத்தியர், புரொபஸர் செவரினோ அன்ரினோரி என்பவர் குழந்தைகளுக்காத் தவமாய்த் தவமிருந்து துயர்படும் பல தரப்பட்ட வயதுள்ள தாய்மாருக்குத் தனது திறமையாற் தாய்மையடையும் சந்தர்ப்பத்தைக் கொடுக்கிறார்.

இரண்டு வருடங்களுக்கு (2004) முன்;, தனக்கொரு குழந்தை வேண்டுமென்று ஆசைப்பட்ட ரூமேனிய நாட்டைச் சேர்ந்த அறுபத்தியாறு (66) வயதுள்ள ஆட்ரியானா இலிசெக்கு என்ற மூதாட்டியைத் தாயாக்கினார். அந்தச் செயலைப் பார்த்து உலகம் வியந்தது. 'ஓரு பெண் தான் தாயாக வேண்டு மென்று ஆசைப் பட்டால், எனது வைத்தியத் திறமையைப் பாவித்து அவர்களுக்கு உதவி செய்வேன். தாய்மையடைவது பெண்களின் உரிமை' என்று கூறினார் அன்ரினோரி.

குழந்தைகளுக்குத் தவமிருந்து இப்போது பாட்டியாகும் வயதிலுள்ள பல பெண்களுக்கும் தாய்மையைக் கொடுக்கிறார். 04.05.06ல் இங்கிலாந்துப் பத்திரிகைகள் பல அறுபத்தி மூன்று வயதில் வைத்தியர் செவரினோ அன்ரினோரியின் உதவியால் தாயாகும் திருமதி பற்றிஸியா ரா~;பறூக் என்ற குழந்தைகள் மனநல வைத்தியர் பற்றி பந்தி பந்தியாயச் செய்திகளை வெளியிட்டன.

பாட்டியான வயதில் குழந்தையா என்று பலர் ஆச்சரியப்பட்டார்;கள். 'கிழட்டு வயதில் குழந்தை பெறுவது குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உகந்ததா' என்று குழந்தை நலவாதிகள் கேள்வியெழுப்பினர். ஆனால் அந்த வயது போன தாய் பற்றிஸியா ' ஒரு அன்பான தாய் தகப்பனுக்குப் பிறந்து, மிகவும் அன்பான சூழ்நிலையில் எங்கள் குழந்தை வளரும்' என்று பெருமையுடன் சொன்னார். ஆறுமாதக் கருவைச் சுமக்கும் அவரின் குரலில் தாய்மையின் சந்தோசம் பிரதிபலித்தது.

புரொபஸர் அன்ரினோரி, வயது போன தாய்மாருக்கு மட்டுமல்லாமல், தாய்மையாக முடியாத பல தரப்பட்ட தாய்மாருக்கும் பல வைத்திய உதவிகள் செய்கிறார். உடல் நலக் கோளாறுகள், பெண்களின் கருப்பப்பையில உண்டாகும் வைத்தியக் கோளாறுகள் காரணமாகக் கருத்தரிக்க முடியாத மேல் நாட்டுப் பெண்களுக்கு, கருத்தரிக்கத் தகுந்த நல்ல வயது, உடல், உள நலமுள்ள இர~;சிய, கிழக்கு ஐரோப்பிய இளம் பெண்களின் கருக்களைக் கொடுத்து அவர்கள் தாய்மையடைய உதவி செய்கிறார். நாடு, பிரதேசம், சாதி, சமயம், நிறம், பொருளாதார வசதி என்ற பல தரப்பட்ட பரிமாணங்களைத் தாண்டி தாய்மை என்பது கடவுளால் பெண்களுக்குக் கொடுக்கபட்ட அற்புதமான கொடை. தனக்குள் இன்னொரு உயிரைப் படைக்கும் சக்தியைக் கொண்ட பெண் இறைவனுக்குச் சமம். இந்தத் தாய்மையைப் பழிவாங்கவும் பலியெடுக்கவும் பாவிப்பது மனித இனம் காணாத பயங்கரச் செயல். தாய்மையைப் பாவித்துப் பழிவாங்க நினைப்பது தன் சமுதாயத்தை நிர்மூலமாக்குவதற்குச் சமம். ஓரு சமுதாயத்தை அழிக்க இலகுவான வழி அந்தச் சமுதாயத்தில் வாழும் பெண்களை அழிப்பாதாகும். அதுவும் இன்று

'விடுதலைப் போர்' என்ற பெயரில் பலியாடுகளாகுபவர்களிற் பெரும்பாலானவர்கள் 13-21 வயதுள்ள பெண்கள் என்று மனித உரிமைவாதிகள் அறிக்கைகள் விடுகிறார்கள். தாய்மையடைந்த பெண்ணையும் சிசுவையும் ஆயதமாகப் பாவித்த |அரசதந்திரத்தின்' கீழ்த்தரமான 'ஆண்மையின்' போர்த் திட்டத்தைப் பார்த்து, மனித உரிமைவாதிகள், சமுகநலவாதிகள், சமய நலவாதிகள், பெண்களின் உரிமைகளுக்குப் போராடுபவர்கள் என்று பலதரப்பட்ட குழுவினர்; மிகவும் கடுமையாக, இது மிகவும் கேவலமான மனித உரிமை மீறலான விடயமெனக் கண்டிக்கிறார்கள்.

உலகில் இதுவரை எத்தைனையோ விடுதலைப் போரட்டங்கள நடந்திருக்கின்றன. ஆனால் விடுதலைப் போராட்டம் என்ற பெயரில், இலங்கையில் பெண்களைத் தற்கொலைத் தாக்குதல்களுக்குப் பாவிக்கப் படுவதுபோல், உலகில் வேறு எந்த விடுதலைப் போரிலும் பாவிக்கப் படவில்லை. பிரித்தானிய ஏகாதிபத்தியத்தை ஆட்டிப் படைத்த அயர்லாந்துப் (ஐ ஆர் ஏ) போராளிகள் ஒரு தற்கொலைத் தாக்குதலையும் நடத்தவில்லை. தங்களின் பெண் போராளிகளை, ஆண்களுக்குக் கொடுத்த அத்தனை சமத்துவத்துடனும் நடத்தினார்கள். ஐ. ஆர்.ஏ போராளிகள் பிரித்தானிய அரச குடும்பத்துப் பிரபு மவுண்ட்பேட்டனைச் சிதறடித்துக் கொலை செய்தவர்கள். மார்க்கிரட் தச்சரைக் குறிவைத்தவர்கள், மந்திரி சபைக்கூட்டம் நடக்கும்போது, அருகில் இருந்த தெருவில் ஒரு வெள்ளை வேனுக்குள் மறைந்திருந்து ஏவுகணையை விட்டார்கள். இத்தாக்குதலில் பிரித்தானிய மந்திரி சபை மயிரிழையில் தப்பியது.

இவற்றையெல்லாம் செய்தவர்கள் ஐ. ஆர். ஏ போராளிகள். மூளைச் சலவை செய்த, புத்தி கெட்டுப் போன பெண்களை அனுப்பிப் பேடித்தனமாகச் செய்யவில்லை. ஏனென்றாhல் பயங்கர தாக்குதல்செய்யும்போதும் மனித தர்மம், போர் முறைகளுக்கு மதிப்புக் கொடுத்தவர்கள். இந்தியா -பாகிஸ்தான் பிரிவு ஏற்பட்டபோது (1947) இரண்டு கோடி இந்து -முஸ்லிம் மக்கள் இறந்தார்கள், பதினைந்து கோடிமக்கள் இடம் பெயர்ந்தார்கள். இந்துக்களும் முஸ்லிம்களும் ஒருத்தரை ஒருத்தர் பயங்கரமாகத் தாக்கியழித்துக் கொண்டார்கள். இலட்சக்கணக்கான பெண்கள் இருபக்கத்திலும் மிகக்கொடுமையான பாலியல் கொடுமைகளுக்கு ஆட்படுத்தப் பட்டார்கள். தங்களின் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளவும வஞ்சம் தீர்த்துக்கொள்ளவும் இந்து முஸ்லிம் ஆண்கள் அடிபட்டுக் கொண்டார்கள். உடல், உள ரீதியாய்ப் பெரிதளவு பாதிக்கப் பட்டிருந்த பெண்களை தற்கொலைதாரி ஆயுதமாக அவர்கள் பாவிக்கவில்லை.

ஆதிகாலச் சரித்திரத்திலிருநது அண்மைக்காலம் வரை தற்கொலைதாரிகளாகி; எதிரியை அழித்தவர்கள் ஆண்களே. புனித பைபிள் கதையின் படி, உலகின் முதல் தற்கொலைதாரி சாம்சன் என்பவன் என்று சொல்லப் படுகிறது. தன் உயிரைக் கொடுத்துப் பல எதிரிகளையழித்தவன் என்று சொல்லப் படுகிறது.

அதன் பின் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் நடந்த புனித சிலுவைப் போரில் (11-13ம் நூற்றாண்டு), அப்போதிருந்த போப்பாண்டவரின் உத்தரவின் பெயரில், கிறிஸ்தவத் தளபதி; (1243) தனது போர்க்கப்பலை எதிரியின் போர்க் கப்பலில் மோதவைத்துத தனது 140 வீரர்களையிழப்பதன் மூலம பத்து மடங்கு எண்ணிக்கையுள்ள முஸ்லிம் எதிரிகளைய அழித்தான் என்று சரித்திரம் சொல்கிறது.

கடந்த இரண்டாம் உலகப் போரில் (1939-45); தங்கள் தோல்வியை உணர்ந்து கொண்ட ஜப்பானியப் படைகள், முக்கியமாக 'கமக்காசிப் பைலட்' என்ற தற்கொலைதாரி விமானிகள், தங்களின் போர்முறையின் மரபுப்படி தங்கள் அரசனுக்குத் தங்கள் உயிரைப் பணயம் வைத்துத் தங்கள் போர் விமானங்களுடன் 'பேர்ள் துறைமுகத்தில் நின்றிருந்த திறமைவாய்ந்த பல அமெரிக்கக் போர்க் கப்பல்களை மோதியழித்தார்கள். அதனால் இரண்டாம் உலக யுத்தம் தொடங்கியது. .ஜப்பானியருக்குப் பாடம் படிப்பிக்க அமெரிக்கா ஹிரோ~pமா நகரில் அணுகுண்டைப் போட்டு இருபது நிமிடங்களில் 146.000 அப்பாவிகளாள ஜப்பானிய மக்களை அழித்தார்கள். பெண்களைத் தறகொலைதாரிகளாக முதன் முதலில் (1986) பயன் படுத்தியவாகள், லெபனான் நாhட்டின் புரட்சிவாதிகளான ஹெஸ்புல்லா இயக்கத்தினராகும். அதன் பின் பாலஸ்தினிய விடுதலைப் போராளிகள் சில பெண் தற்கொலைதாரிகளைப் பயன் படுத்தியிருக்கிறார்கள். இன்று நடைபெறும் ஈராக் யுத்தத்தில் தற்கொலைப் படையினரால் ஒரு நாளைக்குச் சராசரி 32 கொலைகள் நடப்பதாகச் சொல்லப் படுகிறது. சுனி முஸ்லிம், ~pயா முஸ்லிம் மக்களிடையே பல தாக்குதல்களும் அழிவுகளும் நடந்தன.

ஆனால் பெண் தற்கொலைதாரிகள் பங்கு பற்றவில்லை. இன்று உலகத்தில் பெரும்பான்மையான தற்கொலைத் தாக்குதல்களைச் செயதவர்களும் (பி.பி.சியின் தகவல்களின்படி 240) அவற்றில் பெண்களைப் பயன்படுத்தியவர்கள் விடுதலைப் புலிகள் முதலிடம் வகிக்கிறார்கள்;

பெண்களைச் சக்தியாய் வழிபடும் தமிழினம் இன்று, பால்மணம் மாறூத சிறார்களைக் கடத்திப் போர்க்களத்தில் பலி கொடுப்பவர்கள், கருவில் வளரும் சிசுவிலும் கருணை காட்டாத மிருகத்தனமானவர்கள் என்று உலகம் எடை போடுமளவுக்குச் சிறுமைப்பட்டு விட்டது தன் உயிரில்; பரிணமித்த இன்னுயிரைப் பாதுகாக்கும் உணர்வுகளைத்தாண்டி ஒரு பெண் தனது வயிற்றில வளரும் ஐந்து மாத சிசுவை மற்றவர்களைக் கொல்லும் ஆயதமாகப் பாவித்திருக்கிறாள் என்றால் அவளை அந்த நிகை;குத் தூண்டிய பின்னணியை ஆராயவேண்டும்.

உலகில் நடந்த பல விடுதலைப் போராட்டங்ளிலும் ஆதிக்கப் போராட்டங்களிலும் மிகக் கொடுமையான விதத்தில் பாதிக்கப் படுபவர்கள் பெண்களே. இன்று எங்கள் நாட்டில் நடக்கும் போராட்டத்திலும் மிகக்கொடுமையாகப் பாதிக்கப் படுபவர்களும் பாவிக்கப் படுபவர்களும் மிகவும் வறிய நிலையிலிருக்கும் தமிழ்ப் பெண்களாகும். பெரும்பாலோர், இலங்கையில், அதிலும் தமிழ்ப் பகுதிகளில தொடர்ந்து கொண்டிருக்கும் வன்முறைகளால் தங்களின் ஆண் உறவுகளை இழந்தவர்கள். இனம் தெரியாதவர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட, இராணுவத்தால் சுட்டுக்கொல்லப் பட்ட ஆண்களின் சொந்தங்கள்.

இவர்களில் பெருமபாலோர் வவுனியா, மன்னார், மட்டக்களப்புப் பகுதிகளில் வாழும் பெண்கள் அன்றாடம் காய்ச்சிக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். 25.04.06 ல் நடந்த தற்கொலைத் தாக்குதலில் தன்னையும் தன்னுள் வளரும் குழந்தையையும இன்னும் பதினொரு உயிர்களைப் பலியெடுக்கும்; ஆயதமாகப் பாவித்த அனோஜா குகனேசராசா வயது 21 வவுனியாவைச் சேர்நத பெண் என்று அடையாளம் காணப்பட்டிருக்கிறார்.

அகில உலகக் கணிப்பின்படி தமிழப் பகுதிகளில் தொடரும் போர்ச்சூழ்நிலையால் மிகவும் பாதிக்கப்பட்டோர் பெண்கள். இவர்கள் பெரும்பாலேர் வறுமையின் தாழ்ந்த கோட்டில் இருக்கிறார்கள். இவர்களால் பெரிய படிப்பு படிக்க முடியாது. வெளிநாடு போகமுடியாது. தங்கள் சுற்றாடல்களில் அடிக்கடி நடக்கும் வன்முறைகளால் வெளியில: போய் உழைக்க முடியாத துன்பம், நாளாந்தம் அவர்களின் குடும்பத்தை ஆட்டிப்படைக்கும் வறுமை என்பன இவர்களின் சீரான சிந்தினைச் சக்தியை மழுங்கடிக்கின்றன. ஒரு பெண் பாலியல் ரீதியாகப் பாதிக்கப் பட்டிருந்தால், தன்னால் இனி இந்த உலகில் வாழ முடியாது என்ற தன்னம்பிக்கையையிழந்துவிட்ட

"ஓரு சில மாதங்களுக்கு முன் மட்டக்களப்பைச்சேர்ந்த பாராளுமன்றப் பிரதிநிதி அரியரத்தினம் அரியேந்திரன் என்பவர் "மட்டக்களப்பில்" அரசியல் சார்பற்ற ஸதாபனங்களில் வேலைசெய்யும் நூற்றுக்கணக்கான பெண்கள் ஒழுக்கமற்ற முறையில் கர்ப்பமாகியுள்ளனர் என்ற பொய் பரப்புரையைச் செய்தார். தமிழ்ப்பெண்களின் கற்புக்கு வக்காலத்து வாங்கும் பண்புவாதி இவர்... மனித நாகரிகம் வெட்கித் தலைகுனியும் செயல்கள் இவை."

மனித நாகரிகம் வெட்கித் தலைகுனியும் செயல்கள்

கர்ப்பிணிப் பெண்- தற்கொலைதாரியும்,- தமிழ்ப் பெண்கள் படும் அவதிகளும்

கடந்த மாதம் 25ம் திகதி (25.04.06) இலங்கையின் தலைநகரான கொழும்பில் இராணுவத் தலைமைக் காரியாலயத்தின் முன் ஒரு கற்பிணிப் தமிழ்ப்பெண் தற்கொலை தாரியால் இலங்கையரசின் இராணுவ மா அதிபரைக் குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைத்தாக்குதலின் பின் தமிழ்ப் பெண்கள் படும்பாடு மிகவும் கவலைக்குரிய தாகவிருக்கிறது. தற்கொலைதாரி உண்மையிலேயே ஐந்து மாதக் கர்ப்பவதியா இல்லையா? என்று திட்டவட்டமாக முடிவு கட்ட, அந்தப் பெண்ணின் இரத்தத்தைப் பரிசோதனைக்கு வெளிநாட்டுக்கு அனுப்பியிருப்பதாகச் தகவல்கள் சொல்லப் படுகிறது.

இத்தாக்குதல் நடந்தபின், வெளிநாடுகளுக்குப் போவதற்காக கொழும்புக்கு வந்து விடுதிகளில் தங்கி நின்ற தமிழ்ப் பெண்கள் அரச படையினரின் பாதுகாப்புத் தேடல்களில் மிகவும் பாதிக்கப் படுகிறார்கள். வேலை செய்யுமிடஙகளில் பெரும்பாலான தமிழ்ப்பெண்கள் சந்தேகக் கண்ணோடு பார்ககப் படுகிறார்கள். கொழும்பில் வாழும் தமிழர்களுடன்; அன்பாகவிருந்த அண்டைவீPட்டுச் சிகேகிதர்கள் 25ம் திகதியின்பின் சினேகித நெருக்கத்திலிருந்து கொஞ்ச தூரம் போய்விட்டார்கள். 28ம் (28.04.06) திகதி வெள்ளவத்தைப் பகுதியில் உள்ள பெரிய n~hப்பிங் பகுதியில் ஒரு தமிழப்பெண் ஆயதம் தாங்கிய படையினரால் கைது செய்யப் பட்டிருக்கிறார்.

1ம் திகதி (01.05.06) யுனெஸ்கோ காரியாலயத்தில், அகில உலக சுதந்திர பத்திரிகையாளர் மகாநாட்டுக்கு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் வேலை செய்யும் சிவரம்யா என்ற தமிழ் பெண் ஊடகவியாலாளர் போயிருந்த போது சங்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு இப்போது விடுதலை செய்யப் பட்டிருக்கிறார். இதுவரை, உலகில் எந்தப்பகுதியிலும் கர்ப்;பவதிகள் தற்கொலைக் குண்டுதாரிகளாயிருந்தார்கள் என்று எந்த சரித்திரமும் கிடையாது. தாய்மை என்பது கடவுளின் ஆசியிற் கிடைக்கும் பாக்கியம் என்று நமது ஆன்றோர்கள சொல்லியிருக்கிறறர்கள். ஓரு கர்ப்பவதி தன்னையும் தன்னுள் வளரும் குழந்தையையும் இன்னும் பல உயிர்களை அழிக்கும் ஆயதமாப் பாவித்தாள் என்பதை 99.9 விகிதமான பெண்கள் நம்ப மாட்டார்கள்.. சில மிருகங்கள் தனது குட்டி பிறந்ததும் பசி காரணமாகத் தனது குட்டிகளில் ஒன்றைத் தின்னும என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் எந்த மிருகங்களும் இன்னொரு மிருகத்தைக் கொல்லத் தனது குட்டியைப் பாவித்ததாகச் சரித்திரம இல்லை.

இதுவரை இது தற்கொலைத்தாக்குதல் என்பதுக்கான எந்த ஆதாரமும் தராத வகையில் இல்லை காணாத வகையில்...

யார் அந்த பெண்... சிங்களப்பெண்ணா இல்லை தமிழ்ப்பெண்ணா என்பது கூட தெரியாத நிலையில் அது தற்கொலைதாரி பெண், அவர்தான் தற்கொலை செய்தார் என்பது என்ன நோக்கத்தில்.... அந்த பெண்ணுக்கும் அதுக்கும் சம்பந்த கூட இல்லாமல் இருக்கலாம்... அவர் கையில் சிலர் குண்டை கொடுத்து இருக்கலாம்... அது இராணுவத்தினராக கூட இருக்கலாமே...??

அரியேந்திரன் அவர்கள் பிழையாக ஒருவிடயத்தை சொல்லுகிறார் எண்டால்... அவர் சம்பந்தமாக பேசலாம்... ஆனால் சம்பந்தமே இல்லாமல் ஒரு பெண்ணை, அதுவும் கர்ப்பிணியை தற்கொலையாக குண்டுத்தாக்குதல் செய்ய வைத்ததாக சொல்வதின் நோக்கம் என்ன.... எதை கேவலப்படுத்தும் முயற்ச்ச்சி இது.....????

இதில் அவர் சொல்ல வந்த விடயத்தின் கருத்தை விட அவர் சொல்லிசெல்லும் ஒரு விடயங்களின் நோக்கம் என்ன என்பதுதான் கேவலமாக இருக்கிறது......!

அரியரத்தினம் அரியேந்திரன்ர பரப்புரைக்கு வலுச்சேர்க்கிறீங்களோ நீங்கள்?

குண்டுதாரியா வந்தவர் ஒரு காவல் அதிகாரியின் மனைவி என்று சிலரால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.அந்த இடத்திலிருந்த எட்டு அடையாள அட்டைகளில் ஒன்றுதான் அனோஜாவினுடையது.தமிழ்ப் பெண் என்ற காரணத்தால் தற்கொலைப்போராளியாகச் சித்தரிக்கப்பட்டார்.

தற்கொலைப்பெண் அனோஜாவே இல்லை அவா உயிரோட வவுனியாவில இருக்கிறா என்று அரசாங்க அலுவலர்களே சொல்லிட்டினம்.நீங்கள் என்னென்டா பெண்களை மனரீதியாப் பலவீனப்படுத்தினம் என்றீங்கள்? தமிழ்ச்சமுதாயம் பெண்களைக் கேவலப்படுத்துது என்று சொல்றதா இல்லை விடுதலைப்போரைக் கொச்சைப் படுத்துறதா உங்கட நோக்கம்?

30 வயதுக்கும் 45வயதுக்குமிடைப்பட்ட அந்தப் பெண் கர்ப்பவதியா என்பது கூட இன்னமும் உறுதி செய்யப்படவில்லை.அவுஸ்ரேலியா

  • தொடங்கியவர்

இதுவரை இது தற்கொலைத்தாக்குதல் தானா என்று கூட உறுதி செய்யப்பட இல்லை.

அதற்கிடையில் நீங்கள் இவ்வாறு ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு கூறுவதைப் பார்த்தால்

ஏதோ யாரிலயோ உள்ள காழ்ப்புணர்ச்சியில் எழுதியது போல் தெரிகிறது.

அது மட்டும் இல்லை அந்தப் பெண் கர்ப்பவதியா என்பது கூட இன்னமும் உறுதி செய்யப்படவில்லை

அவுஸ்ரேலியாக்கு அனுப்பப்பட்ட இரத்த மாதிரி பரிசோதனை முடிந்தால்தான் அவர்

கர்ப்பமுற்று இருந்தாரா இல்லையா என அறிய முடியும். ஆனால் நீங்கள் ஒரு தாய் தன்

குழந்தையை இன்னொரு உயிரைக்கொலை செய்யும் ஆயுதமாப் பயன்படுத்திட்டா

என்று உணர்ச்சிவசப்பட்டு நிறைய உதாரணங்கள் எல்லாம் சொல்லி இவ்வளவு எழுதிப்போட்டீங்கள்.

அது தான் ஏன் எண்டு புரியலை?

எனக்கு ஒரு சந்தேகம் நீங்கள் முதல் சொல்லிறியள் அவ தற்கொலையாளி எண்டு இன்னும்

உறுதி செய்யப்படவில்லை எண்டு பேந்து சொல்லுறியள் அவ தற்கொலையாளி

அவக்கு 21 வயது வயித்தில் பிள்ளையோடு தற்கொலை செய்தார் எண்டு. ஆனால்

அந்த ரிப்போட் அப்படி சொல்ல இல்லையே? அப் பெண்ணுக்கு 31 40 க்குள்ள தானே

இருக்கும் என எதிர் பார்க்கப் படுகிறது எண்டு கூறப்படுகிறது. ஒரு வேளை நீங்கள்

அதை வடிவா வாசிக்கவில்லையோ????

நீங்கள் பெண் போராளிகள் தற்கொலதாரிகளாக மாறியது நம்ம போராட்டத்துல தான் என்று சொல்கிறீர்கள்.

அவர்கள் ஏன் அப்படி மாறீனார்கள் எண்டு யோசிச்சு பார்த்தீங்களா?? அட நாம இங்க இருந்து

சும்மா கருத்து எழுதுறனாங்கள் நமக்கு எங்க தெரியப் போகுது. இருந்தாலும் ஊருல இருக்கிற

பெண்களுக்கு எவ்வளவு பிரச்சினைகள். கிருசாந்தி தொடக்கம் தர்சினி வரை பாலியல் வல்லுறவுகள்

கொலைகள் எண்டே தொடர்ந்து கொண்டு போகும் போது அதனைப் பார்த்த பெண்கள் பொங்கி

எழுகிறார்கள் தாங்களும் போராளியாகி தற்கொலையாளி ஆகிறார்களே ஒழிய நீங்கள் கூறின மாதிரி

அவர்களை யாரும் மூளைச்சலவை செய்து அனுப்பவில்லை. தயவு செய்து இப்படி பெண்களை அதுவும்

தமிழீழப் பெண்களை கேவலப்படுத்துற மாதிரி எழுதேங்கோ.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்னை மூடிக்கொண்டு கருத்தெழுதும் கருத்துவவாதிகளே சற்று நீர் அருந்துங்கள் உணர்ச்சி பெருவாகத்தில் யாருக்கோ எதிராக கருத்து எழுதும் அவசரத்தில் பெண்களை உள்வாங்கி, நீங்களே பெண்களை கேவலப்படுத்துவதாய் அறிவித்தால் அதன் பொருள் என்னவோ? விடுதலைப்போரில் பெண்கள் இணைவதை வெறுக்கிறீர்கள்ா? அல்லது ஆணுக்கும் பெண்ணுக்குமான சம நிலையை தமிழீழம் வழங்கியதை வெறுக்கிறீரா? இது கட்டுரையல்ல உங்கள் காழ்புணர்வின் வெளிப்பாடு. தமிழீழ விடுதலைக்கெதிராக இளைவருக்கு நீர் செய்ய விளைந்த மூளைச்சலவை. இந்த மூளைசச்சலவைகள் இத்தோடு நின்றால் போதும் என்று பறவைகள் நினைக்கிறது.

'

"உன்னை நீயே கேவலப்படுத்துவை நிறுத்து உலகம் கேவலப்படுத்துவதை பற்றி பின்னர் பேசலாம்"

நகைச்சுவை பகுதில் போட வேண்டிய கட்டுரைகள் எல்லாம்

இப்பகுதில் போட்டு நாறடிக்கவேண்டாம் :P

நான் எனது சொந்த அனுபவத்தை சொல்கிறேன்

எனது சிந்தப்பா பெண் A/L எடுத்து விட்டு ஒரு தொண்டு நிறுவனதில் வேலை பார்த்தார் அவரின் பரிட்சை முடிவு வரும் முன் வேலை பார்ந்த இடத்தில் அவரின் எதிர்கலத்தை யாரோ முடிவு கொடுத்து விட்டார்கள் பின் என்னா அவாக்கு விட்டில் அடியும் உதையும் ஒரு விவசாயம் செய்யும் இளஞனின் வாழ்வும் திருமனம் என்ற உறவின் முலம் தொடர் கதையாகி விட்டது(நான் கூட சுயநலவாதிதான்) இதை பற்றி அவர்கள் விட்டில் சொல்ல சொல்லவில்லை

எனக்கென்னவோ இந்தக் கட்டுரையை எழுதியவரைத்தான் யாரோ மூளைச்சலவை செய்திட்டினம் போல இருக்கு :wink:

இறந்தது யார் அவர் உண்மையிலயே கர்ப்பவதியா என்று இன்னுமே கண்டுபிடிக்கப்படாத நிலையில் அவர் தமிழ் பெண்தான் என்று எழுத இந்தக் கட்டுரையாளரை தூண்டியது எது அல்லது யார் :evil:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இணையத்தை யார் நடத்துகின்றார்கள் என்று பார்த்தாலே தெரியும். அவர்களின் தொடர்புகள் எப்படிப் பட்டதென்று. பெண்கள் உரிமை என்றபடி, ஜரோப்பாவில் ஈழத்தில் நடந்த ராஜனி திரணமவைத் தவிர வேறு எவ்வித படுகொலைகளையும் தெரியாத மாதிரிக் காட்டிக் கொள்ளும் சில முகவர்களினதே!

தற்கொலைப் போராளி எனப்பட்ட பெண் வவுனியாவைச் சேர்ந்தவர் என்று அறிக்கை எல்லாம் விட்ட சிங்கள பேரினவாதம், கடைசியில் அப் பெண் வவுனியாவில் உயிரோடு இருப்பதை வெளிப்படுத்த வேண்டிய கட்டாய நிலைக்கு உள்ளானதை இந்தப் புலம்பல்களுக்கு எட்டவில்லையா?

ரசிகை, இப்படியான கும்பல்களின் கட்டுரைகளை ஏன் இங்கே இணைக்கின்றீர்? ஒரு யாதர்த்தமான கட்டுரைகளுக்கும், ஆதாரமற்ற புலம்பல்களுக்கும் வேறுபாடு தெரியவில்லையா?

மேற்கோள்:

ரசிகை, இப்படியான கும்பல்களின் கட்டுரைகளை ஏன் இங்கே இணைக்கின்றீர்? ஒரு யாதர்த்தமான கட்டுரைகளுக்கும், ஆதாரமற்ற புலம்பல்களுக்கும் வேறுபாடு தெரியவில்லையா?

இது கருத்து!

வேண்டாமே இப்பிடியெல்லாம் இணைப்புக்கள்!

இருக்கிற பிரைச்சினைகளே நிறைய ......

இதில .......தலைப்பு என்று இப்பிடி வந்து - நாங்களும் - ஏதோ-கருத்து - எழுதுறம் பேர்வழி என்று போய் .....

கடைசில - வடிவா பாருங்க -

எங்களை நாங்களே சாகடிக்கிறம்- ! 8)

இதே மாதிரியான கருத்துக்களைத்தானே பெண்கள் உரிமை காவலர் ராதிகா குமாரசாமியும் வைக்கிறார்கள்..! ரசிகை தந்த கட்டுரையை ஒழிச்சு வைக்கிறதிலும் அதில சொல்லப்படுறதில நியாயமற்றது என்று நீங்கள் கருதுபவற்றை நிறுவி நில்லுங்கள்..! கருத்துக்களை ஒழிச்சு வைக்கிறதால் தெளிவு பிறக்கும் என்றில்லை..! தெளிவு ஏற்படுத்தும் படி விளக்கிறதுதான் அவசியம்..! அதுக்குத்தான் கருத்துக் களம்..!

இதேபோன்று தேனீ, நெருப்பு, விழிப்பு போன்றவற்றில் வரும் கட்டுரைகளையும் போட்டு விவாதம் செய்யுங்கள், உருப்பட்ட மாதிரித்தான். தேசியத்துக்கு எதிரான கருத்துக்களை பரப்பும் ஒரு களமாக யாழ்களம் இருக்கூடாது.

அவற்றுக்கான விவாதங்களை அங்கேயே வைத்துக்கொள்ளலாம். :wink:

தேனி நெருப்பு விழிப்பு எல்லாமே புலி எதிர்ப்பு என்ற ஒரே தொனியில் உண்மைகளைக் கூட தலைகீழாக்கி எழுதிற தளங்கள் என்பது பார்த்த மாத்திரத்தில புரியும்..!

ஆனா இது கொஞ்சம் சென்சிற்றிவ் மற்றர். பெண் உரிமைகள் மனித உரிமைகள் என்று சில விசயங்கள் அழகாக கையாளப்பட்டு கட்டுரைகள் சோடிக்கப்பட்டு கருத்துக்கள் திசை திருப்பப்படுகின்றன. ஒரு கர்ப்பிணி தற்கொலைப் பெண்ணாக இருந்திருக்கலாம் என்ற ஊகத்திலான செய்தியின் அடிப்படையில் மனித உரிமைகள் பெண் உரிமைகள்..என்று அவற்றைக் காக்க கங்கணம் கட்டுபவர்கள்...தினமும் பெண்கள் எதிர்நோக்கும் மனித உரிமை மீறல்கள் பற்றி ஏன் வாய் திறப்பதில்லை. ஒரு வேளை அரச படைகளின் பெண்கள் மீதான் வன்முறைகளை நிறுத்த கட்டுரை வரைவார்களேயானால் கர்ப்பிணி என்ன தமிழ் பெண்கள் ஆயுதம் ஏந்த வேண்டிய தேவையின் தார்ப்பரியத்தை விளங்கிக்க முடியும் என்பதே எங்கள் கருத்து. ராதிகா குமாரசாமி அறிக்கைகளை விடுகிறாரே ஒழிய தமிழ் பெண்களின் வாழ்விடங்களுக்கு சென்று அவர்களுடன் வாழ்ந்து அவர்களின் துன்பங்களை மன உணர்வுகளை உள்வாங்கி உரிமைகள் தொடர்பில் கருத்துரைப்பாரானால் நிச்சயம்..அதுதான் உண்மையான மனித உரிமைகலுக்கான தேடலுக்கான வழிமுறையாக இருக்க முடியும்..! அதேதான் இக்கட்டுரையாளருக்கும் கூறப்பட வேண்டிய செய்தி..! :idea:

  • கருத்துக்கள உறவுகள்

இதே மாதிரி ஒரு கட்டுரை படித்தேன் சமீபத்தில். பெண்கள் யாழ்பாணத்தில் சிங்கள இராணுவம் சுட்டுக் கொன்றதை, நேரடியாக சொல்லாமல், பொதுவதாகச் சொல்லி விட்டு, கடைசியில் ஒரு பெண்ணின் கொலைக்கு, அரசாங்கத்திடம் இருந்து சமூர்த்தி மானியம் பெறுவதே காரணம் என்ற வகையில் பந்தியை முடித்திருந்தனர்.

இதன் மூலம் சொல்லப்படுவது என்னவென்றால் சிறிலங்கா இராணுவம் கொல்லும் எவரும் அரசசேவையில் இருப்பின், அவர்கள் அரச ஆதரவாளர் என்ற வகையில் நடைபெறும் சுத்துமாத்துக்கதைகள். அது பொய் என்பது அனைவருக்கும் தெரிந்த பொய்யான விடயம்.

இந்தக் கடபநரிகளின் எழுத்துக்களுக்கு மதிப்பு தேவையே இல்லை. இலக்கியச் சந்திப்பு என்ற பெயரில் பெருமை தேடும் கபடநரிகள். ஒவ்வொரு துரோகக் கும்பல்களுக்கும் பதில் அளித்து யாழ்களத்தில் இந்த சிறுமை மிக்கவர்களுக்கு மதிப்பு கொடுத்து நாம் ஏன் தாழ்ந்து கொள்ள வேண்டும்.

ராதிகா குமாரசாமி ஜநா சார்ந்த அமைப்பில் இருப்பதால் தான் அவரின் குரல் எடுபடுகின்றதே தவிர, இல்லாவிட்டால் ஓரு நாயும் மதிப்பளிக்காது. அவருக்கு கொழும்பின் உல்லாச விடுதியில் கூத்தடிக்க, தமிழ்பெண்களின் மானம் தேவைப்படுகின்றது. அவருக்கு பதில் அளித்தாலும், அவர் கூத்துக்காக இப்பிரச்சனையை கையில் தூக்கி வைத்துக் கொண்டே இருக்கப் போகின்றார். ஆனால் மனித உரிமைகளை கையில் தூக்குவதற்கு அவருக்கு வேணுமென்றால் பதில் கொடுக்கலாம்!

  • 3 weeks later...

சரத் பொன்சேகா மீது தாக்குதல் நடத்திய பெண் "கர்ப்பிணி" அல்ல: சந்திரா பெர்னாண்டோ

சிறிலங்கா இராணுவ தளபதி சரத் பொன்சேகா மீது தாக்குதல் நடத்திய தற்கொலைப் பெண் கர்ப்பிணி அல்ல என்று காவல்துறை மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

காவல்துறை தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை ஊடகவியலாளர்களிடம் சந்திரா பெர்னாண்டோ கூறியதாவது:

கொழும்பு இராணுவத் தலைமையகத்தில் இராணுவ தளபதி சரத் பொன்சேகா மீது தற்கொலைத் தாக்குதலுக்கான திட்டம் ரம்புக்கனை பகுதியில் திட்டமிடப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்திய பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் அனுராதரபும் குருணாகல் வீதியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை மஞ்சுளாதேவி என தெரியவந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் ரம்புக்கனை பகுதிக்கு அப்பெண் வந்துள்ளார்.

தற்கொலைப் பெண் ரம்புக்கனை, வெலிவேரிய பகுதிகளில் தங்கவைக்க வீடு வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் பயணம் செய்ய முச்சக்கர வாகனம் ஒன்றும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

அப்பெண்ணுக்கு உதவியதாக ரம்புக்கனவைச் சேர்ந்த ஒரு தம்பதியர் மற்றும் ஒரு ஆண் ஆகிய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட அடையாள அட்டையின் அடிப்படையில் தற்கொலைப் பெண் மஞ்சுளாதேவி (வயது 32) என்று தெரியவந்தது.

தற்கொலைப் பெண்ணின் உடற்பாகங்களைச் சோதனைக்குட்படுத்தியபோது அவர் கர்ப்பிணி இல்லை என்பது தெரியவந்துள்ளது என்றார் சந்திரா பெர்னாண்டோ.

http://www.eelampage.com/?cn=27355

"ஓரு சில மாதங்களுக்கு முன் மட்டக்களப்பைச்சேர்ந்த பாராளுமன்றப் பிரதிநிதி அரியரத்தினம் அரியேந்திரன் என்பவர் "மட்டக்களப்பில்" அரசியல் சார்பற்ற ஸதாபனங்களில் வேலைசெய்யும் நூற்றுக்கணக்கான பெண்கள் ஒழுக்கமற்ற முறையில் கர்ப்பமாகியுள்ளனர் என்ற பொய் பரப்புரையைச் செய்தார். தமிழ்ப்பெண்களின் கற்புக்கு வக்காலத்து வாங்கும் பண்புவாதி இவர்... மனித நாகரிகம் வெட்கித் தலைகுனியும் செயல்கள் இவை."

அரியேந்திரனுடைய பேச்சின் அல்லது அறிக்கையின் முழுமையான பதிவு எங்காவது கிடைக்குமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.