Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருத்துகளில் மாற்றங்கள் [2013]

Featured Replies

'புலம் பெயர் தமிழர்கள் முதலீடுகளை மேற்கொள்ள வட மாகாண சபை ஆவண செய்யவேண்டும் - சந்திரநேரு' என்ற தலைப்பிலிருந்து 2 கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

  • Replies 197
  • Views 28.9k
  • Created
  • Last Reply

உண்ணாவிரதப் போராட்டத்தை; தியாகு இன்று கைவிட்டார் எனும் திரியில் இருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன. ஆரோக்கியற்ற சீண்டல் கருத்துக்களைத் தவிர்த்துக் கருத்தாடலைத் தொடருங்கள்.

  • தொடங்கியவர்

30 ஆவது பெண்கள் சந்திப்பு தொடர்பான திரியில் பண்பற்ற முறையில் எழுதப்பட்ட சில கருத்துகள் நீக்கப்பட்டன. பண்பற்ற முறையில் தொடர்ந்து எழுதுகின்றவர்களுக்கு யாழ் கள விதிகளின் படி உரியமுறையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

  • தொடங்கியவர்

"வடக்கு - கிழக்கு இணைப்புக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பச்சைக்கொடி" என்ற திரியில் முஸ்லிம் இனத்தினை கொச்சைப்படுத்தும் விதமாக எழுதப்பட்ட கருத்துகள் நீக்கப்பட்டன,

 

கள விதி:

  • காக்கா, தொப்பி பிரட்டி போன்ற பதங்களும் தவிர்க்கப்படல் வேண்டும்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=100794

திருமாவளவன் சாகும்வரை உண்ணாவிரதம் எனும் திரியிலிருந்து அரட்டைத்தனமான கருத்துக்கள் பல நீக்கப்பட்டுள்ளன. கள உறவுகள் திரிகளுக்குள் அரட்டைகளைத் தவிர்க்கவேண்டும்.

ஈழ விடியலுக்காக மரணித்த மாவீர செல்வங்களின் கோவில்களில் ஒளியேற்றுமா கூட்டமைப்பு. எனும் திரியில் இருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

மெல்ல வெளியில் வரும் நிஜ முகம் எனும் திரியில் இருந்து சீண்டல் கருத்துக்கள் சில நீக்கப்பட்டுள்ளன.
கள உறவுகள் பண்பற்ற சொல்லாடல்களைத் தவிர்த்து நாகரீகமாக கருத்தாடலைத் தொடருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
"கருத்துக் களம் 2013 கள உறவுகளுக்கான விருதுகள் தெரிவும் நடுவர்கள் தெரிவும்" எனும் திரியில் இருந்து பல சீண்டல், நக்கல்,தனிநபர் தாக்குதல் கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன. யாழ்கள விருது விழாவை இனிதே நடாத்த அனைத்து உறவுகளின் இதயபூர்வ பங்களிப்பு வேண்டப்படுகிறது.
 

நல்ல இருக்குயா உங்க ஈழ வியாபாரம் !Srinivas Tiwari எனும் மூலம் குறிப்பிடப்படாத தலைப்பு நீக்கப்படுகின்றது.

நம்பகத்தன்மையை உறுதி செய்யமுடியாத காரணத்தால் முகநூலில் இருந்து செய்திகளையும் தமிழர்களின் அரசியல் சம்பந்தமான பதிவுகளையும் கள உறவுகள் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.

  • தொடங்கியவர்

கருணாநிதியை மிஞ்சிய விக்னேஸ்வரன் யாழ். போதனா வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பினார்:   என்ற திரியும் சரிதம் என்ற இணையத்தில் இருந்து ஒட்டப்பட்ட வேறு சில திரிகளும் நீக்கப்பட்டுள்ளன.

 

செய்திகளை ஒட்டுகின்றவர்கள், ஓரளவுக்கேனும் நம்பிக்கை தரவல்ல தரமான செய்தித் தளங்களில் இருந்து செய்திகளை இணைக்குமாறு வேண்டுகின்றோம்.

  • தொடங்கியவர்

"புலிகளுக்கு ஆயுதம் வாங்க முயன்ற குற்றச்சாட்டு: அமெரிக்காவில் வழக்கு" எனும் திரியில் அநாகரீக வார்த்தை பிரயோகங்களால் எழுதப்பட்ட கருத்து முற்றாக நீக்கப்படுகின்றது.

  • 3 weeks later...

இந்தியப் பிரதமரும் காமன்வெல்த் மாநாடும்--- சம்பந்தன் கருத்து எனும் திரியில் சக கள உறவு ஒருவரை ஒருமையில் விளித்து சீண்டும் வகையில் அமைந்த கருத்து ஒன்று நீக்கப்பட்டுள்ளது.

 

களவிதி:
"நீர், உமது, உமக்கு, உம்முடைய" என்றும் கருத்துக்கள உறுப்பினர்களை அழைத்தல்/குறிப்பிடுதல் ஆகாது.

  • தொடங்கியவர்

ஊர்புதினம் பகுதியில் சம்பந்தர் தொடர்பாக இணைக்கப்பட்ட திரி ஒன்று நீக்கப்படுகின்றது.

கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது! எனும் திரியில் இருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன. மாற்றுக் கருத்தாளர்கள் மீது விமர்சனம் எனும் போர்வையில் அரசியல் காழ்ப்புணர்வுடன் கருத்துக்கள் பதிவதைக் கள உறவுகள் தவிர்த்தல் வேண்டும்.

  • தொடங்கியவர்

கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது! திரியில் இருந்து, திரிக்கு சம்பந்தமில்லாமல் மேலும் எழுதப்பட்ட கருத்துகள் அனைத்தும் நீக்கப்பட்டன. கள உறவுகள் தொடர்ந்து கள விதிகளை கடைப்பிடிக்குமாறு வேண்டப்படுகின்றீர்கள்.

 

 

கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!, ஜெயபாலன் இன்றிரவு நாடு கடத்தப்படவுள்ளார்! - கொழும்பு ஊடகம் செய்தி!! எனும் திரிகளில் கறுப்புப்பட்டியலில் உள்ள தளத்தில் இருந்து இணைக்கப்பட்ட பதிவு நீக்கப்பட்டுள்ளது.

Edited by நியானி

அனந்தி சசிதரன் (எழிலன்) எனும் திரியில் சக கள உறுப்பினர்களைச் சீண்டும் வகையில் அமைந்த கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.
 

  • தொடங்கியவர்

 கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது! திரி கவிஞர் விடுதலையாகி வந்தமையாலும், அது தொடர்பான விவாதங்களுக்கு  கவிஞரும் பதில் தந்தமையாலும் 330 பதில்களுடன் பூட்டப்படுகின்றது.  இதை மீண்டும் திறப்பதற்குரிய தேவை கவிஞராலும், எம்மாலும் உணரப்படின் திறக்கப்படும்.

 

திரிக்கான இணைப்பு: http://www.yarl.com/forum3/index.php?showtopic=132498

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் றெக்சிகன் மரணம்EPDPயின் முக்கியஸ்த்தரும் யாழ் மாவட்ட அமைப்பாளரும் வடமாகாண சபையின் உறுப்பினருமான கமலேந்திரன் கைது எனும் திரியில் தலைப்புக்குச் சம்பந்தமற்ற பல கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

 

 

நிறுத்தப்பட இருந்த போரை நிறுத்த விடாமல் தடுத்ததே இந்தியாதான்: - ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய திருமுருகன் எனும் திரியில் இருந்து பல தனிமனித தாக்குதல் கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

வெறுமனே சீண்டுவதற்காக தொடர்ந்து எழுதுகின்றவர்கள் மீதும், ஒருவர் ஆத்திரமூட்டும் வகையில் கருத்துக்களை வைக்கும்போது பதிலுக்கு களவிதிகளை மீறும் கருத்துக்களை வைப்பவர்கள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

இலங்கையில் நடந்த இறுதி கட்டப் போரை நிறுத்த, மத்திய அரசு முழு முயற்சிகளும் எடுத்தது. காரணம் சொன்னார் சிதம்பரம் எனும் திரியில் கறுப்புப்பட்டியலில் உள்ள தளத்தில் இருந்து இணைக்கப்பட்ட பதிவு ஒன்று நீக்கப்பட்டுள்ளது.

பிரான்சில், அனந்தி சசிதரன் அவர்களுடனான மக்கள் சந்திப்பு 17.12.2013 அன்று எனும் திரியில் ஆதாரமற்ற அரசியல் விமர்சனக் கருத்துக்களும் பதில்களும் நீக்கப்பட்டுள்ளன.

களவிதி: துரோகி, பச்சோந்தி போன்ற அரசியல் ரீதியான தூற்றுதலுக்குரிய சொற்கள் பயன்படுத்தப்படுவது தவிர்க்கப் படல் வேண்டும்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

"தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பாதுகாப்பாகவுள்ளார்" என்ற செய்தி நீக்கப்படுகின்றது. அநாமதேய  மற்றும் பொய்யான தகவல்களை பரப்பி வரும் இணையத்தளங்களில் இருந்து செய்திகள் ஒட்டுவதை முற்றாகத் தவிர்க்கவும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.