Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காய்ச்சல் , இருமல் பறந்து போக வேண்டுமா? நம்ம ஊர் மருந்து முயற்சித்துப் பார்க்கலாமே!!!

Featured Replies

ayurveda_2.jpg

 

 

இருமல் , சளி குணமாக  : 

கொஞ்சம் தேனை ( Honey ) ஒரு தேக்கரண்டி எடுத்து அப்படியே வாயில் விடுங்கள். அடுத்த சில நிமிடங்களில் இருமல் காணாமல் போய் விடுவதைப் பார்த்து ஆச்சரியமடைவீர்கள். குழந்தைகளுக்குக் கூட நம்ம ஊரில் இதனைக் கொடுப்பதுண்டு.இகுருவி  

இன்னும் கொஞ்சம் விரிவான மருந்து வேண்டும் என நினைப்போர் - தேன், எலுமிச்சம் பழச் சாறு, இஞ்சிச் சாறு ஆகியவற்றை கலக்கி சாப்பிடலாம். சரசரவென இருமலும், சளியும் ஓடிப் போய் விடும்.

கூடவே சாதாரண காய்ச்சல் இருப்போர் நம்மூர் மிளகு ரசத்தையும் வைத்துச் சாப்பிடலாம்.

நம்மூர் மிளகு ரசம்

தேவையான பொருட்கள் 

o    புளி - ஒரு சிறிய எலுமிச்சை அளவு

o    மிளகுப் பொடி - 2 1/2 தேக்கரண்டி

o    துவரம்பருப்பு - 6 மேசைக்கரண்டி

o    பெருங்காயம் - ஒரு சிறு துண்டு

o    உப்பு - தேவையான அளவு

o    தக்காளி - சிறியது ஒன்று

o    கடுகு - ஒரு தேக்கரண்டி

o    நெய் - 2 தேக்கரண்டி

o    கறிவேப்பிலை - 2 கொத்து

செய்முறை 

 

·         புளியை சற்று வெதுவெதுப்பான நீரில் ஊறப் போடவும். மிளகை லேசாக வறுத்து பொடி செய்து கொள்ளவும். துவரம்பருப்பை சிறிது மஞ்சள் பொடி சேர்த்து வேக விடவும்

·         1 1/2 கப் நீரில் புளியைக் கரைத்து ஒரு காப்பர் பாட்டம் பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க விடவும்.

·         அதில் பெருங்காயம், தேவையான உப்பு, மிளகுப் பொடி, சிறு துண்டங்களாக நறுக்கிய தக்காளி சேர்த்து கொதிக்க விடவும்.

·         நன்கு புளி வாசனை போய் கொதித்து ஒரு கப்பாக குறைந்ததும், வெந்த துவரம் பருப்பை நீரில் கரைத்து 1 1/2 கப் அளவுக்கு சேர்க்கவும்.

·         மேலே நுரைத்து வந்ததும், இறக்கி வைத்து, நெய்யை காய வைத்து அதில் கடுகு போட்டு வெடித்ததும், அதனுடனேயே கறிவேப்பிலையும் சேர்த்து ரசத்தில் கொட்டவும்.

·         சளி, ஜுரம் வந்த நேரங்களில் சூடாக இந்த ரசத்தை சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.

·         ரசத்தை கொதிக்க விடக் கூடாது. நுரைத்து வந்தவுடனேயே இறக்கி விடவும். மிளகுடன் அரை தேக்கரண்டி சீரகம் சேர்த்து பொடி செய்து போட்டால் வாசனையாக இருக்கும். ரசத்திற்கு நெய்யில் கடுகு தாளித்தால் தான் நல்ல வாசனையாக இருக்கும். ரசம் செய்ய எவர்சில்வர் பாத்திரத்தை விட காப்பர் பாட்டம் பாத்திரமே சிறந்தது.

குறிப்பு : குடற்க்காயச்சல் ஏற்பட்டிருப்போர் தயவு செய்து இந்த மருத்துவ முறைகளை பின்பற்ற வேண்டாம்.

 

http://ekuruvi.com/ayurvedic%20medicine

மிளகாய் (தூள்) நாளாந்தம் பாவிப்பது போன்று மிளகை பாவித்தாலே பல வருத்தங்கள் வராது போலுள்ளது  :D 

 

நன்றி தகவலுக்கு .

  • கருத்துக்கள உறவுகள்

10 மிளகு உண்டானால் பகைவன் வீட்டிலும் விருந்துண்ணலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நீலப்பறவை அண்ணா..நல்ல ஒரு பிரயோசனமான பதிவு..

10 மிளகு உண்டானால் பகைவன் வீட்டிலும் விருந்துண்ணலாம்.

 

புலவர் இந்த 'பத்து மிளகு' கலாச்சாரம் உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்.. இந்த பழமொழி மிளகின் மகத்துவத்தை உணர்த்துவதற்காக கூறப்பட்ட பழமொழி.. அப்படி என்ன மகத்துவம் இந்த நல்ல மிளகில்...? ... உலகின் தலைசிறந்த எதிர் மருந்து (Antidote) தான் இந்த மிளகு. இந்த மிளகு இந்தியாவில் மிக அதிகமாக பயிரிடப்படுகிறது . தென்னிந்தியாவில் முக்கியமாக கேரளா, மைசூர், மற்றும் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும், கிழக்குத் தொடர்ச்சி மலைகளான கொல்லிமலை, சேர்வராயன் மலைகளிலும் நல்லமிளகு அதிகம் விளைகிறது. உலகிலேயே தலைசிறந்த தரம் வாய்ந்த நல்ல மிளகு தென்னிந்தியாவில் மட்டுமே கிடைக்கிறது என்பது நவீன ஆராய்ச்சி கூறும் தகவல். மிளகில் உள்ள வேதிப் பொருட்கள் அனைத்தும் நம்மை நோயிலிருந்து காக்கும் வேலையைச் செய்கிறது மேலும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மிளகிற்கு வீக்கத்தைக் குறைக்கும் பண்பும் (Anti-inflamattory) வாதத்தை அடக்கும் பண்பும் (Anti vatha)பசியைத் தூண்டும் பண்பும் (Appetizer), வெப்பத்தைக் குறைக்கும் பண்பும் (Antypyretic), கோழையை அகற்றும் பண்பும் (Expectorant), பூச்சிக்கொல்லியாக செயல்படும் பண்பும் (Anti-helmenthetic) உள்ளது. நரம்புத்தளர்ச்சி, கை கால் நடுக்கம், உதறல், ஞாபக சக்தி குறைபாடு, முதுமையில் உண்டாகும் மதிமயக்கம், இவற்றிற்கு நல்ல மிளகு சிறந்த மருந்தாகும். வீரியத்தை அதிகரிக்கும் தன்மையும் இதற்குண்டு. நல்ல மிளகில் பொட்டாசியம், கால்சியம், ஜிங்க், மாங்கனீசு, இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியம், வைட்டமின் சி, சத்துக்கள் அதிகம் உள்ளது. வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளதால் ஆண்டி ஆக்ஸிடென்டாக செயல்பட்டு நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரிக்கிறது. நல்ல மிளகில் piperine என்ற ஆல்கலாய்டு இருப்பதால் பசியைத் தூண்டுகிறது. வயிற்றில் சுரக்கும் என்ஸைம்களை தூண்டி சுரக்கச் செய்கிறது. மேலும் உமிழ்நீரை சுரக்கச் செய்கிறது. இதனால் ஜீரணத் தன்மை அதிகரிக்கப்படுகிறது. உணவு சரியான முறையில் செரிக்கப் பட்டால் தான் வாயுத் தொந்தரவு இருக்காது. மேலும் நச்சுக் கழிவுகள் உடலில் தங்காது. இந்த நச்சுக் கழிவுகளை வெளியேற்றும் தன்மை மிளகில் அதிகம் இருப்பதால்தான் நம் முன்னோர்கள் இந்த பழமொழியை பயன்படுத்தினார்கள். இதனாலேயே நம் முன்னோர்கள் வெளியிடங்களில் சாப்பிட்டு வரும்போது பத்து மிளகை வாயில் போட்டு சுவைத்து சாப்பிட்டுவிடுவார்கள். வெளியில் தயாரிக்கப் படும் உணவினால் ஏற்படும் நச்சுத்தன்மை அனைத்தையும் இந்த பத்து மிளகு முறித்து விடும். இயற்கை வைத்தியத்தில் ஒன்றான மிளகு முதாதையோர் காலத்தில் தினமும் பயன்படுத்தக்கூடிய ஒன்றாக இருந்தது. தற்போது காலத்தில் சமையலுக்கு மட்டுமே அதிகம் பயன்படுத்துகின்றனர். பாட்டி காலத்தில் தினமும் இரண்டு மிளகுகள் சாப்பிட்டு வந்தனர். அதனால் அவர்களை எந்த நோய்யும் நெருங்கியதில்லை.. தற்போதைய காலத்தில் விஞ்ஞானம் வளர வளர நோய்களும் அதிகரித்து வருகிறது. மிளகு சாப்பிடும் போது வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோக்ளோரிக் அமிலம் வயிற்றில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை சரிசெய்கிறது. அதாவது சரியான செரிமானம் வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் மற்றும் வயிற்று வலி, குடல் எரிவாயு போன்றவற்றை தவிர்க்க மிளகு அத்தியாவசியமான ஒன்று. மிளகு சேர்த்த உணவு உடலில் உள்ள வியர்வைகளை வெளியாக்குவதுடன் எளிதில் சிறுநீரை கழிக்கவும் உதவுகிறது. தினம் இரண்டு மிளகு சாப்பிடுவதன் மூலம் வயிறு சம்பந்தமான பிரச்சனை எட்டிப் பார்காது. உடலுக்கு நலன் தரக்கூடியதில் மிளகும் ஒன்று. இது சுவாசக்கோளாறுகளுக்கு நிவாரணத்தை தருகிறது. மேலும் இருமல், மலச்சிக்கல், ஜலதோசம், செரிமானம், இரத்தசோகை, ஆன்மைக்குறைவு, தசை விகாரங்கள், பல் பாதுகாப்பு, பல் சம்பந்தமான நோய்கள் வயிற்றுபோக்கு இதய நோய் போன்றவற்றை குணப்படுத்துவதில் சிறந்து விளங்குகிறது. மிளகின் வெளிப்புற கருப்பு அடுக்கு கொழுப்பின் காரணமாக உண்டாகும் உயிரணுக்களை முறிப்பதற்கு உதவுகிறது.. எனவே மிளகு கலந்த உணவை சாப்பிட்டு வருவதன் மூலம் எடையை குறைக்கலாம். மிளகு சருமநோயை குணப்படுத்துவதற்கும் பயன்படுகிறது. இது தோலில் காணப்படும் வெண்புள்ளிகளின் நிறமியை அழிக்கிறது. ஆரம்பகட்ட வெண்புள்ளிகளை தடுப்பதற்கு மிளகை பயன்படுத்த வேண்டும். லண்டன் ஆராய்ச்சி ஒன்றின் படி மிளகு வெண்புள்ளிகளை உருவாக்கக்கூடிய நிறமிகளை அழிக்கிறது. நிறமிகளை அழிக்க ஊதா ஒளி சிகிச்சை முறையை பயன்படுத்துகிறது... புற ஊதா கதிர்கள் காரணமாக தோலில் ஏற்படும் புற்றுநோயை போக்க மிளகு சிறந்த மருந்து. ஆயுர்வேதத்தில் இருமல் மற்றும் சளிக்கு டானிக்குகள் தயாரிக்கும் போது அதனுடன் மிளகு சேர்ப்பது உண்டு. ஏனெனில் மிளகு புரையழற்சி மற்றும் நாசிநெரிசல் போன்றவற்றிற்கு சிந்த நிவாரணம் தரக்கூடியது. இருமல் மற்றும் சளி உள்ளவர்கள் மிளகை சாப்பிட்டு வர எளிதில் குணமாகும். நோய்தொற்று பூச்சி போன்றவைகளினால் ஏற்படும் விஷக்கடி போன்றவற்றை தடுக்க மிளகு பயன்படுகிறது. மேலும் மிளகு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.. ஆக்சிஜனேற்றியாக செயல் படும் மிளகு புற்றுநோய் இதயநோய் கல்லீரல் போன்றவற்றில் ஏற்படும் ஆரம்பகட்ட பிரச்சனையை எதிர்த்து செயல் படும். மிளகு உடலில் பல்வேறு பாகங்களுக்கு மூலிகைகள் மூலம் நன்மைகள் புரிகின்றது. காது வலி மற்றும் காது சம்பந்தமான பிரச்சனைகள் பூச்சி கடித்தல், குடலிறக்கம், வலி நிவாரணம் கக்குவான் இருமல், ஆஸ்துமா, சுவாசபிரச்சனைகளை போக்க மிளகு நல்ல நாட்டு மருந்து.. மேலும் பல் வலி பல் சிதைவு பான்றவற்றிற்கும் பயன்படுத்தலாம். முன் காலத்தில் கண் சம்பந்தமான பிரச்சனைகளுக்கும் மிளகு மருத்துவத்தை தான் பயன்படுத்தி வந்தனர். முடிந்த மட்டும் மிளகு பொடியை வீட்டிலே தயார் செய்யுங்கள். கடைகளில் கிடைக்கும் செயற்கை மிளகு தூள்கள் 3 மாதங்களுக்கு மட்டுமே புத்துணர்ச்சியை தக்க வைத்துக்கொள்ள கூடியது. வீட்டிலே தயார் செய்யும் பொடி கால வரையறையின்றி பயன்படுத்தலாம் மிளகு பொடியும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.. ஒரு சிட்டிகை அளவு மிளகு பொடி சேர்த்து சமைத்தால் சுவை மற்றும் செரிமானம் கிடைக்கிறது. உடல் நலத்தில் ஒட்டு மொத்த சுகாதாரத்திற்கும் மிளகு நல்லது. அல்சர் உள்ளவர்கள் மிளகு அதிகம் சேர்த்து கொள்ள கூடாது. thanks-facebook

Quote" தென்னிந்தியாவில் முக்கியமாக கேரளா,"

 

நல்ல பதிவு. மிளகை பாவிக்கும் போது நன்றாக கழுவிட்டு பாவிக்கவும், இல்லையென்றால் கேரளகாரனின் அடிப்பாதத்தில் உள்ள அத்தளை ஊத்தைகளும் உங்கள் வயிற்றினுள். காலால் உலக்கிதான் மிளகை பிரிக்கின்றவர்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லா மூலிகைகளும் உடம்புக்கு நல்லதுதான்....... ஆனால் ஒரு பொறுத்த வருத்தம் எங்கடை உடம்பிலை குடியேறிட்டுது எண்டால்......மிளகென்ன உள்ளியென்ன????? டாக்குத்தர்ரை முழுவட்ட,நேர்வட்ட ,அரைவட்ட குளிசையள் தான் தஞ்சம்....வருமுன் காப்போம். :)

  • கருத்துக்கள உறவுகள்

Quote" தென்னிந்தியாவில் முக்கியமாக கேரளா,"

 

நல்ல பதிவு. மிளகை பாவிக்கும் போது நன்றாக கழுவிட்டு பாவிக்கவும், இல்லையென்றால் கேரளகாரனின் அடிப்பாதத்தில் உள்ள அத்தளை ஊத்தைகளும் உங்கள் வயிற்றினுள். காலால் உலக்கிதான் மிளகை பிரிக்கின்றவர்கள்

ஊரில்... பாணும், காலால்... உழக்கித் தான், குழைப்பார்களாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்தோனியா கோயிலில்...'மிளகும்+உப்பும் வைப்பினம். அம்மா வைச்ச நேத்திக்கு நானும் கொண்டு போய் வைச்சிருக்கிறன்..' அதுக்கும் ஏதும் சம்பந்தம் இருக்குமோ?!!!!.

 

 

 

 

எங்கள் சமையலிலேயே 'மிளகு,பூண்டு, இஞ்சி, மஞ்சள் இவையெல்லாம் 'அருமருந்துகள் தான்.'

  • கருத்துக்கள உறவுகள்

காலத்துக்கு ஏற்ற பதிவு. நன்றி.

  • 3 years later...
  • கருத்துக்கள உறவுகள்

மிளகின் சிறப்பு

மிளகு கொடி வகையை சார்ந்தது. கொடியில் கனிகள் காய்ந்தவுடன் சிறந்த நறுமணத்தை தருகிறது. அதனால் மசாலாக்களில் தலைசிறந்த நறுமணப் பொருளாகிறது. உலகிலேயே கேரள மாநிலத்தில்தான் மிளகு அதிகம் உற்பத்தியாகின்றது. பழங்காலத்தில் வணிகத்தில் மதிப்பு மிக்க பொருளாக இருந்தது, மிளகு.

அதனால் இது கறுப்பு தங்கம் என்றழைக்கப்பட்டது. மிளகிற்கு பின்பு பல சுவாரசியமான வரலாற்று தகவல்கள் இருக்கின்றன. கேரளாவில் இருந்து அரபி கடல் வழியாக மிளகு அரேபியாவிற்கு ஏற்றுமதியானது. அங்கிருந்து, ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டது. ஐரோப்பியர்கள் நம் நாட்டின் மிளகு மற்றும் நறுமணப் பொருட்கள் மீது அதிக நாட்டம் கொண்டனர். அதனால்தான் கடல் வழியாக இந்தியாவை தேடிக் கண்டு பிடித்தனர். மிளகை வாங்க வந்தவர்கள் படிப்படியாக வியாபாரத்தை விரிவுபடுத்தி நம் நாட்டையே பிடித்து கொண்டனர்.

முற்காலத்தில் இருந்து நம் நாட்டில் கார சுவைக்கு நாம் மிளகைதான் பயன்படுத்தி வந்தோம். அதனால் சங்க இலக்கியங்களில் மிளகை பற்றிய குறிப்புகள் உள்ளன. சித்த மருத்துவத்திலும் மிளகிற்கு சிறப்பிடம் இருக்கிறது. ‘பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்!’ என்பது பழமொழி. ஒவ்வாமைக்கு சிறந்த மருந்து மிளகு. சளி, இருமல், ஆஸ்துமா போன்றவைகளுக்கும் இது மருந்தாகின்றது. ஒவ்வாமையால் ஏற்படும் தொடர் தும்மலுக்கும் மிளகை பயன்படுத்தலாம்.

மருத்துவ குணங்கள்

1 தேக்கரண்டி மிளகை இடித்து, 200 மி.லி. நீரில் கொதிக்க வைத்து பனவெல்லம் அல்லது தேன் கலந்து குடிப்பது பலவித நோய்களை கட்டுப்படுத்தும். ஒவ்வாமை மற்றும் பூச்சி கடி காரணமாக தோலில் தடிப்பு, அரிப்பு உண்டாகும். இதற்கு ஒரு தேக்கரண்டி மிளகை பொடி செய்து, அருகம்புல் ஒரு கைபிடி அளவு சேர்த்து, 200 மி.லி. நீரில் கொதிக்க வைத்து குடிக்கவேண்டும். பூச்சி கடி மற்றும் ஒவ்வாமையால் அவதிப்படும்போது முதல் வேலையாக ஒரு தேக்கரண்டி மிளகை நீரில் கொதிக்க வைத்து தேன் கலந்து பருகிவிடவேண்டும்.

மழைக்காலத்தில் அடுக்கடுக்காக தும்மல், கண்களை சுற்றிய அரிப்பு, மூக்கில் நீர் வழிதல் போன்றவை ஏற்படும். இதற்கு ஒரு தேக்கரண்டி மிளகையும், ஒரு வெற்றிலையையும் நீரில் கொதிக்கவைத்து பருகவேண்டும். இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும். தொண்டை கட்டு, குரல் கம்மல், தொண்டை வலி போன்றவை இருந்தால், ஒரு தேக்கரண்டி மிளகை நெய்யில் கருக வைத்து பொடித்து தேன் கலந்து சாப்பிடவேண்டும். விட்டுவிட்டு வரும் காய்ச்சலுக்கும் மிளகு கஷாயம் சிறந்தது.

ஜீரண சக்தியையும் மேம்படுத்தும். மிளகின் காரத்தன்மைக்கு ‘காப்சாய்சின்’ என்ற வேதிப்பொருள் காரணமாக உள்ளது. மிளகின் காரம் கொழுப்பையும் ஜீரணிக்கவைக்கும். இதனால் ரத்த குழாய்களில் கொழுப்பு படியாது. ரத்த குழாய் தடிமனாவதும் தவிர்க்கப்படும். உடலில் உள்ள செல்களை பாதுகாக்கும் ‘ஆன்டி ஆக்ஸிடண்ட்’ தன்மையும் மிளகிற்கு உள்ளது. பசி குறைவாக உள்ள சமயங்களில், ஒரு தேக்கரண்டி மிளகு பொடியை நாட்டு சர்க்கரையுடன் கலந்து சாப்பிட வேண்டும்.

மூல நோய்களுக்கு ஒரு தேக்கரண்டி மிளகு பொடியுடன், ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகத்தை பொடி செய்து தேன் கலந்து சாப்பிடவேண்டும். மிளகின் காரத்தன்மை மலத்தை வெளியேற்றும் சக்தி கொண்டது. பல் சொத்தை, பல் கூச்சம் ஏற்படும்போது, மிளகு பொடியுடன் உப்பு கலந்து பல் தேய்க்கவேண்டும். தலையில் சிலருக்கு புழு வெட்டு ஏற்படும்.

அவர்கள் மிளகுதூள், உப்பு, வெங்காயத்தை சேர்த்து அரைத்து பாதித்த இடத்தில் பூசினால், மீண்டும் முடி வளரும். தலையில் பொடுகு ஏற்படும்போது மிளகை அரைத்து பாலில் கலந்து கொதிக்கவிட்டு, ஆறவைக்கவேண்டும். பின்பு அதை தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்தால், பொடுகு நீங்கும்.

ஆதாரம் : தினமணி நாளிதழ்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.