Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்த திருப்பதிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மகிந்த திருப்பதிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்!
ஜன 31, 2013
     
  மஹிந்த ராஜபக்ஷ திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு எதிர்வரும் 8-ம் நாம் செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
கொழும்பில் இருந்து தனி விமானம் மூலம் பீகார் செல்கிறார். அங்கு புத்த கயாவில் வழிபாடு நடத்தி விட்டு அதே விமானத்தில் ஆந்திர மாநிலம் ரேணி குண்டா செல்கிறார். பின்னர் கார் மூலம் திருமலை செல்கிறார். அங்கு ஏழுமலையானை தரிசனம் செய்து விட்டு கொழும்பு திரும்புகிறார்.
 
மஹிந்த ராஜபக்ஷ வருகையையொட்டி திருமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. சிறீலங்கா பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று திருமலை சென்று தேவஸ்தான அதிகாரி ஸ்ரீனிவாசராவ் பொலிஸ் சூப்பிரண்டு சுப்புராமரெட்டி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். ஜனாதிபதியின் தரிசன நேரம் மற்றும் பாதுகாப்புகள் குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.
இது குறித்து மத்திய உளவுத்துறை அதிகாரிகள் கோவில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள். அங்குள்ள பழைய கமராக்களை ஆய்வு சென்ற அவர்கள் அதற்கு பதிலாக நவீன தொழில்நுட்ப கமரா பொருத்த அறிவுரை வழங்கினார்கள்.

ada.jpg

ராஜபட்ச வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிப்.8ல் திருப்பதியில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம்: வைகோ

 

ராஜபட்ச வருகையினை முன்னிட்டு திருப்பதியில் அவருக்கு எதிராக கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கூறியுள்ளார் மதிமுக பொதுச் செயலர் வைகோ.

 

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,


தமிழகத்தின் தன்மான உணர்ச்சிக்குச் சவால் விடும் வகையில், இந்துக்கள் வழிபடும் திருத்தலமான திருப்பதிக்கு மகிந்த ராஜபக்சேவை அழைத்து வந்து வரவேற்கும் அக்கிரமத்தை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு செய்கிறது.

இலங்கையில், 1607 இந்துக் கோவில்களை உடைத்ததாக, சிங்கள அரசு ஏற்கனவே நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொண்டு உள்ளது. ஆனால், 2100க்கும் மேற்பட்ட இந்துக் கோவில்கள், சிறுசிறு ஆலயங்கள், குலதெய்வங்களை கடந்த பல ஆண்டுகளில் சிங்களவர்கள் உடைத்து நொறுக்கிப் பேயாட்டம் ஆடினார்கள்.


திரிகோணமலை சிவன் கோவில் தேரைச் செய்த தச்சர்களை, நடுத்தெருவில் மணிக்கட்டை வெட்டிக் கொன்றார்கள். இந்துக் கோவில் பூசாரிகளைக் கொன்றார்கள். இதையெல்லாம் இந்திய நாடாளுமன்றத்திலேயே பேசி நான் பதிவு செய்து இருக்கின்றேன்.

 

ஏன், இந்துக்கள் பெரிதாகப் போற்றுகின்ற விவேகானந்தர், சிகாகோ உலக சமயங்களின் மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு, இலங்கை வழியாக இந்தியாவுக்குத் திரும்பும்போது, புத்த பிட்சுகள், சிங்களர்கள், அனுராதபுரத்தில் செருப்பாலும், கல்லாலும் விவேகானந்தரை அடித்து விரட்டினார்கள்.


சிவன் கோவில், முருகன் கோவில், துர்கையின் கோவில்களை எல்லாம் உடைத்து நொறுக்கிய, சிங்கள இனவெறிக் கூட்டத்தின் அதிபர் ராஜபட்ச அரசுதான், இப்போதும் தமிழர்கள் வழிபட்டு வருகின்ற கோவில் வளாகங்களில் சிங்கள ராணுவத்தை நிறுத்தி இருக்கின்றது. அங்கே பௌத்த விகாரைகளைக் கட்டுகின்றது. இந்துக் கோவில்களை உடைத்து நொறுக்குபவன், திருப்பதி கோவிலுக்கு உள்ளே நுழைவதை அனுமதிக்கலாமா?

 

‘ராஜபடச பீகாருக்கும் சென்றார்; ஏன், தமிழ்நாட்டின் தலைவாயிலில் உள்ள திருப்பதி கோவிலுக்கும் சென்று வழிபட்டார்’ என்று உலகத்துக்குச் சொல்லுவதற்காக, திட்டமிட்டு மத்திய காங்கிரஸ் அரசு, இந்தத் துரோகத்திலும் அராஜகத்திலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.


எனவே, ஏற்கெனவே அறிவித்தபடி, இந்தியாவுக்கு ராஜபட்சவை அழைத்து வருகின்ற, காங்கிரஸ் தலைமை தாங்கும் மத்திய அரசைக் கண்டித்து, தில்லியில் பிரதமர் இல்ல முற்றுகைப் போராட்டம், திட்டமிட்டபடி பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெறும்.

 

திருப்பதியிலும் ராஜபட்ச வருகையை எதிர்த்து, மதிமுக சார்பில், பிப்ரவரி 8 ஆம் தேதி, கருப்புக்கொடி அறப் போராட்டம் நடைபெறும்.

மானம் அழிந்து விடவில்லை தமிழ்க்குலத்துக்கு என்பதை உணர்த்தும் விதத்தில் இந்த கருப்புக்கொடி கண்டன அறப்போர் நடைபெறும்.

- இவ்வாறு வைகோ அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

 

http://dinamani.com/latest_news/article1445322.ece

இவர்கள் சிங்கள பௌத்தரா? அல்லது இந்துவா?
தமிழ் ஐய்ய்ப்பசாமிகளையே வென்றுவிடுவார்கள் போல இருக்கு

மண்ணுமொக்கன்
சிங்குக்கு மண்டையால் போகும்...இந்த ராஜபக்சக்களை நினைத்து..வருடத்தில் 3
மாதம் இந்தியகோயிலில் குடியிருப்பான்கள் ..சீனா க்கும்
 விளக்குபிடிக்கிறான்கள் என்று

537441_587794564568834_265678950_n.jpg

537441_587794564568834_265678950_n.jpg

இல்லை.......... அனுமதியுங்கள் மொட்டை அடிக்கும்போது தலையையும் .......................இதுதான் இப்போதுள்ள அரசியல் .

537441_587794564568834_265678950_n.jpg

 

ஏதேனும் Church funding ஒ தெரியாது..

 

ஆஊ என்றால் கோயிலை மூடுவது...

இளிச்சவாய் இந்துக்கள் தானே..

ஏதேனும் Church funding ஒ தெரியாது..

 

ஆஊ என்றால் கோயிலை மூடுவது...

இளிச்சவாய் இந்துக்கள் தானே..

எல்லா சந்தேகங்களும் வந்து விட்டது. இவர்கள் முஸ்லீம்களா என்றது மட்டும் கொஞ்ச தடங்கள் காட்டுது. அதை நான் எழுதி விடுகிறேன்.

 

"என்ன இவர்கள் முஸ்லீம்களா?"

திருப்பதி கோயிலை கவிழ்க்க பார்க்கிறது Christians

திருத்தணி தான் இப்போது முஸ்லீம்களின் இலக்கு



தமிழ்நாட்டுக்கு ஒரு மோடி அல்லது "பிரபாகரன்" சீக்கிரம் வரவில்லை என்றால்..
தமிழ்நாடும் இலங்கையின் கிழக்கு மாகாணம் போல் ஆகும்  :)

திருப்பதி கோயிலை கவிழ்க்க பார்க்கிறது Christians

திருத்தணி தான் இப்போது முஸ்லீம்களின் இலக்கு

மகிந்தா எதற்கு அங்கு பயணமாகிறார்?

கிறிஸ்த்தவர்கள் கவிழ்த்தால் இலங்கையில் பௌத்தர்கள் இந்து கோவில்களை நிமிர்த்துவது மாதிரி அங்கும் நிமிர்த்தமாட்டார்களா? 

மகிந்தா எதற்கு அங்கு பயணமாகிறார்?

கிறிஸ்த்தவர்கள் கவிழ்த்தால் இலங்கையில் பௌத்தர்கள் இந்து கோவில்களை நிமிர்த்துவது மாதிரி அங்கும் நிமிர்த்தமாட்டார்களா? 

 

அண்ணெ நீங்க சொன்னா சரியா தான் இருக்கும்

மகிந்தா போவது திருப்பதியை காப்பற்ற தான் இருக்கும்

 

அண்ணெ நீங்க சொன்னா சரியா தான் இருக்கும்

மகிந்தா போவது திருப்பதியை காப்பற்ற தான் இருக்கும்

 

திருப்பதியை குழப்பத்தில் இருந்து காப்பாற்றும் மகிந்த எப்படி அவருக்காக எழுதுபவர்கள் யார் என்ன எழுதினார்கள் என்று விளங்காமல்  தடுமாறும் பொது காப்பாற்றாமல் கைவிடுகிறார்?

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாவங்கள் செய்யவும் வேண்டாம்.......செய்த பாவத்திற்கு புண்ணியம் தேடி அலையவும் வேண்டாம்.

பெரும்பாலும் வைணவர்களாக உள்ள ஹிந்தி வெறியர்கள் கட்டுப்பாட்டில் இயங்கும் VHP, RSS, BJP  போன்ற "இந்து" அமைப்புக்கள்  / கட்சிகள் சிங்கள பௌத்த காட்டுமிராண்டிகளுடன் / பயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருவதால் தான் -  மகிந்தவை சுஸ்மா சுவராஜ் பல்கலைக்கழகத்துக்கு அடிக்கல் நாட்ட அழைத்தவ.

இப்போதும் திருப்பதி செல்வதால் ஹிந்தி / வைணவ வெறியர்களான VHP, RSS, BJP குழுவினர் உள்ளம் மகிழ்ந்து முன்பு போலவே தொடர்ந்தும்  தமிழின அழிப்புக்கு ஆதரவு தருவர் என்று மகிந்த கணக்குப் போட்டுள்ளார்.

இதன் பின்னணியில் ஹிந்தி / வைணவ வெறியர்களான VHP, RSS, BJP கும்பலின் கட்டுப்பாடில் கடந்த சில வருடங்களாக இலங்கையில் இயங்கிவரும்  இந்து  சுயம்சேவா சங்கம் (HSS) இருக்கலாம்!

  • கருத்துக்கள உறவுகள்

537441_587794564568834_265678950_n.jpg

 

மகிந்தவின் கொடுமைகளை வெளிப்படுத்த, இராவணன் தானா கிடைத்தான்? :wub:

 

தமிழர் எழுச்சி இயக்கத்தை, நடத்துபவர்களை, வழி நடத்துபவர்கள் கூட,அதே வட இந்திய சிந்தனையிலிருந்து வெளிவர முடியாமை, வருத்தத்துக்குரியதே! :o

65271_10200366836671781_1278603257_n.jpg

TTD Would you be happy to welcome this cold blooded Genocider to Thirupathi Temple?

  • கருத்துக்கள உறவுகள்

கொல்டிவாலாக்கள் முதலில் சரி கிடையாது எல்லாம் பேக்கு... முதலில் திருப்பதியை தமிழர்நாட்டோடு இணைக்கணும்...

  • கருத்துக்கள உறவுகள்

திருப்பது சென்றால் திருப்பம்.. மார்ச் மாசத்துக்கு முன்னம் ஒருக்கால் ஏழுமலையானை தரிசிக்கப் போறாரு.. :wub:

திருப்பதி கொலைப்பதி ஆகப் போகிறது!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லோருக்கும் நாமத்தைப்  போட்டு  ஏமாற்றி விடலாம் என்று நினைக்கிறார் போல... :rolleyes:

 

 

 

 

 

கோவிந்தா...!!!

கோவிந்தா....!!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

cartoon-02.02.2013.jpg

ஈனப்பிறவி அல்லடா நாங்கள்

 

இனப்படுகொலையை

இரக்கமின்றி

இருமாப்புடன் செய்தவனே!

 

மூர்க்கத்தனத்தோடு

அரக்கத்தனத்தோடு

அழிவுதனை செய்தவனே!

 

 

நீ செய்த போர்முறையை

வீரமென்று சொல்லாதே!

 

உண்மை நிலையோடு

உன்மனதோடு பேசிப்பார்

உனக்கே கூசுமடா!

 

மாவீரர்கள் துயிலும் இல்லத்தை

மட்டமாக நினைத்து

மட்டப்படுத்தியவனே-எங்கள்

மனதில் ஏற்றிய சுடரை

மறக்கடிக்க முடியாதடா

 

மக்கள் பல இழந்தோம்

மண்ணையும் இழந்தோம்

மகிந்தாவே! இன்னும்

மானம் இழக்கவில்லையடா

 

தாயக நிலத்தில்

எம்முறவுகள் கதறிய கதறலை

எங்கள் செவிகள் மறந்துவிடவில்லை

 

ஒன்றாக கூடுவோம்

ஒப்பாரி வைக்க அல்ல.

 

ஓங்கி அடித்து-உன்னை

ஓட விரட்ட

தமிழீழ தாகம் அடங்கிவிடவில்லை

தமிழீழ கனவுகள் அகன்றுவிடவில்லை

விரைவில் விண்ணை முட்டும்

விடுதலைப்பண் பாடுவோமடா!

 

 

தேசமெல்லாம் சென்றாலும்

தெருவெல்லாம் கதைப்போம்!

தேடிவந்து உதைப்போம்!

உலகமெல்லாம் சுத்துவோம்!

 

ஊரரிய கத்துவோம்

தமிழீழம் எங்கள் உயிரென்று

 

உலகம் செவிடாய் இருந்தாலும்

சங்கை ஊதிக் கொண்டு தானிருப்போம்

சாவை குறித்துக் கொள்ளடா

 

கக்கும் கனலோடு

கர்சனை செய்து வருவோமடா

காடைப் பிறவியே -உன்

காலம் முடித்து வைப்போமடா

 

அழித்தவனை கண்டு

இழித்துக் கொண்டு போக

ஈனப்பிறவி அல்லடா நாங்கள்

ஈழம்தனை மீட்க

இடிபோல் தாக்க

இந்நுயிரை வீசும் புலிகளடா

 

 

வா.சி. ப.ம. த.ம.சரவணகுமார்

580552_477822582279318_1052240856_n.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
மூன்றாவது முறையாக திருப்பதி வரும் ராஜபக்சவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்! 
[Tuesday, 2013-02-05 19:12:22]
 
ஈழத்தில் லட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த பின்னர் இதுவரை 2 முறை திருப்பதிக்கு பத்திரமாக வந்து போய் விட்ட ராஜபக்ச, தற்போது 3வது முறையாக வருகிற 8ம் தேதி வரவுள்ளார். அவருக்கு இந்தமுறை மிகத் தீவிரமான எதிர்ப்பைக் காட்டப் போவதாக தமிழ் அமைப்புகள் எச்சரித்துள்ளதால், திருப்பதி வரும் ராஜபக்சவுக்காக பலத்த பாதுகாப்புக்கு ஆந்திர அரசும், மத்திய அரசும் ஏற்பாடு செய்துள்ளன.   
 
முதலில் கொழும்பில் இருந்து தனி விமானம் மூலம் பீகார் வருகிறார் ராஜபக்ச. பின்னர் புத்தகயா செல்லும் அவர் அங்கு வழிபாடு நடத்துகிறார். பின்னர் அதே விமானத்தில் ஏறி ரேணிகுண்டா வருகிறார். அங்கிருந்து காரில் திருமலைக்குப் புறப்படுகிறார். திருப்பதி போய் சாமி தரிசனம் செய்து விட்டு இலங்கை திரும்புகிறார்.தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்ச இந்தியாவுக்கு மீண்டும் மீணடும் வருவதற்கு தமிழ் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பல்வேறு போராட்டங்களையும் அறிவித்துள்ளன.
 
டெல்லியில் பிரதமர் வீட்டை முற்றுகையிடப் போவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் அறிவித்துள்ளார்.இந்த நிலையில் திருப்பதி வரும் ராஜபக்சவுக்கு அங்கு கடும் எதிர்ப்பைக் காட்ட தமிழ் அமைப்புகள் திட்டமிட்டுள்ளதால் ராஜபக்சவுக்கு ஆந்திர அரசும், மத்திய அரசும் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளன. இலங்கை பாதுகாப்பு அதிகாரிகளும் இதற்காக திருப்பதி வந்துள்ளனர்.திருமலையில் உள்ள திருப்பதி தேவஸ்தான அதிகாரி ஸ்ரீனிவாசராவ், போலீஸ் சூப்பிரண்டு சுப்புராமரெட்டி ஆகியோருடன் இலங்கை பாதுகாப்பு அதிகாரி ஒருவர் பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
 
ரேணிகுண்டா விமான நிலையம் முதல் திருப்பதி கோவில் வரை பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், போராட்டத்தில் ஈடுபடுபவர்களை தமிழக எல்லையிலேயே தடுத்து நிறுத்த ஆந்திர போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக வேலூர், திருவள்ளூர் மாவட்ட எல்லைகளில் தமிழக போலீசார் குவிக்கப்படுகின்றனர்.அதேபோல திருப்பதி கோவிலிலும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் கோவிலிலும் பதட்டமான சூழலே காணப்படுகிறது
 

கோவிந்தா!!! கோவிந்தா!!! என்றால் சர்வதேசத்துக்கு நாமம் போட திருப்பதி வெங்கடசலபதி உதவுவார் என்ற நப்பாசையில் தான்!

 

வெங்கடாசலபதியைவிட தேவானந்தா தேவல.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.