Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதிரடி தாக்குதல்களுக்கான தயாரிப்புப் பணிகளில் மீண்டும் புலிகள்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
அதிரடி தாக்குதல்களுக்கான தயாரிப்புப் பணிகளில் மீண்டும் புலிகள்?
February 3, 2013, 12:30 am|views: 792    
 
வடதமிழீழம் யாழ்ப்பாணத்தில் சிறீலங்கா ஆக்கிரமிப்புப் படைகளால் அதி உயர் பாதுகாப்பு வலயம் என பிரகடனப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்த தமிழ் மக்களின் வீடுகள் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருவதுடன், பாரம்பரிய நிலங்களை நிரந்தரமாக்கும் முயற்சிகளிலும் சிங்களர் படைகள் ஈடுபட்டுள்ளதாக அறிய முடிகிறது. 
 
இதேவேளை, புதிய காப்பரண்களையும் அமைக்கும் முயற்சியில் சிறீலங்காப் படைகள் தீவிரமாக இயங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது. 
 
புதிதாக தாம் அமைத்து வரும் புதிய பாதுகாப்பரணை மையப்படுத்தி குரும்பசிட்டி-கட்டுவன்-தெல்லிப்பழை-காங்கேசன்துறை வரை இப்புதிய முக்கரங்க பாதுகாப்பு நில அமைக்கப்படுவதாக வலிவடக்கு பிரதேச சபை தலைவர் சோ.சுகிர்தன் தெரிவித்தார்.ஏற்கனவே மக்களது எதிர்ப்பையும் மீறி இதே போன்று தொண்டமனாறு-ஒட்டகப்புலம்-வசாவிளான் வரை புதிய அரண் அமைக்கப்பட்டிருந்தது.அப்போதும் எஞ்சியிருந்த மக்களது வீடுகள் அழிக்கப்பட்டேயிருந்தது.
 
தற்போதும் பல வீடுகள் கட்டடங்கள் அழிக்கப்பட்டுவருகின்றது.நிரந்தரமாக பாதுகாப்பு வலயமாக 26 கிராம சேவையாளர் பிரிவுகளை மக்கள நடமாட முடியாத பகுதியாக அறிவித்து பலாலி முதல் காங்கேசன்துறை வரைபேண அரசு முற்பட்டுள்ளது.அதற்கேதுவாகவே இப்புதிய அணை அமைக்கப்பட்டுவருகின்றது.
 
புதிதாக பாதுகாப்பரண்களை தீவிரமாக அமைக்கும் பணியில் சிறீலங்கா படைகள் ஈடுபட்டுவருகின்றமை விடுதலைப் புலிகள் தமது ஆயுதங்களின் மௌனத்தை கலைக்கப் போகின்றார்களா என்ற கேள்வி மக்களிடத்தில் எழத் தொடங்கியுள்ளதாக யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அரசின் செயற்பாடுகளை நியாயப்படுத்துவதற்கு என்றே எழுதப்பட்ட தலைப்பு இது.

அத்துடன் விடுதலைப் புலிகள் ஒன்றும் விரும்பி மௌனிக்கவில்லை, நினைத்த நேரத்தில் அதைக் கலைப்பதற்கு.

வருகிறது ஜெனீவா.


வரவைக்கப்பட வேண்டியவர்கள் - புலிகள்

இல்லாவிட்டால் தலைக்கே ஆபத்தே :rolleyes: 

  • கருத்துக்கள உறவுகள்

அட.. பல்கலைக்கழக மாணவர் தெரிவித்தாரா? என்னமும் எத்தனை பேரைச் சிங்களப் பேரினவாதம் உள்ளே தூக்கிப் போட வேண்டம் என நினைக்கின்றீர்கள்??

  • கருத்துக்கள உறவுகள்

அதற்குள் 566 பேர் பார்த்துவிட்டார்கள்.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அதற்குள் 566 பேர் பார்த்துவிட்டார்கள்.. :lol:

 

மீட்பர்கள் வருவார்களா என ஏங்குவது  தெரிகிறது.

தமிழின விரோதிகளின் மகா வம்சக் கட்டுக் கதை!

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அரசபயங்கரவாதிகளுக்கு சாதகமாக அமையும் யாழ் பல்கலைக்கழக மாணவர் கருத்து .. பாதுகாப்பு என்றபெயரில் பல முகாம்களும் பல காவரங்களும் திடீர் என்று முளைக்கப்போகின்றது அதுமட்டும் இன்றி ஜெனீவாவில் சிறிலங்கா அரசுக்கு வர இருக்கும் நெருக்கு வாரத்துக்கும் சற்று சாதகத்தன்மையை உருவாக்குவதாக அமையலாம் வேறேதும் இப்போதைக்கு நிகழப்போவது இல்லை  

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய உலக ஒழுங்கில்... சர்வதேச சக்திகளின் (பிராந்திய சக்திகள் ஆதரவு மட்டும் போதாது) வெளிப்படையான அல்லது முறைமுகமான ஆதரவின்றி ஆயுதப் போராட்டங்கள் வெல்லப்பட முடியாது. அதுமட்டுமன்றி விடுதலைப்புலிகள் சமாதான காலத்தில் சொல்லிக் கொண்டிருந்த ஒரு உண்மை.. இதுவே தோற்றாலும் வென்றாலும் இறுதி யுத்தம் என்று. அவர்களுக்கு சர்வதேசச் சூழலை மதிப்பிடும் தன்மை நிறையவே இருந்தது. அதன் ஒரு காரணமாகவே அவர்கள் அப்படிச் சொன்னார்கள்.

 

இது சிங்கள அரசு தான் வைத்த சுய விசாரணைக் கமிசன்.. சமர்ப்பித்த அறிக்கையை தானே நடைமுறைப்படுத்தாமல் இருக்கவும் தமிழர் தேசத்தை கபளீகரம் செய்து சிங்கள தேசமாக்கிக் கொள்ளவும்..சர்வதேசத்திற்கு அதனை நியாயமாக்கிக் காட்டவும்.. தேடும் காரணங்களே இவை.

 

அதுமட்டுமன்றி.. போர்க்குற்ற விசாரணை நோக்கிய அழுத்தத்தில் இருந்து தன்னையும் தான் சார்ந்த படுகொலை நாடுகளையும் காப்பாற்றப் போடும் இன்னொரு நாடகமும் இதில் அரங்கேறுகிறது.

 

இதற்கு புகலிடத்துப் புலி வேசங்களை விலைக்கு வாங்கி சிங்கள அரசு புலிகள் என்ற பெயரில் அறிக்கை விட்டாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை.

 

இன்றைய நிலையில் தமிழ் மக்களுக்கு அவசியம்.. ஆயுதப் போர் அல்ல. அறிவாயுதப் போர் மட்டுமே. அத்தோடு மதிநுட்பத்துடன் கூடிய சர்வதேச அரசியல் நகர்வுகளும் ஒற்றுமையுமே தமிழ் மக்களை எனியும் உலகம் மதிக்கச் செய்யும்..! சர்வதேச பின்புல ஆதரவின்றிய ஆயுதப் போராட்டங்கள் பலமான சக்திகளால் பயங்கரவாதமாக்கப்பட்டு மீண்டும் மீண்டும் எம் மக்கள் மீது அழிவுகளும் ஆக்கிரமிப்புக்களுமே திணிக்கப்படும். நிச்சயம் புலிகள் இன்றைய சூழலில் மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டம் என்ற நிலைக்குப் போகமாட்டார்கள். அவர்கள் அந்தளவுக்கு உலகம் அறியாதவர்களும் அல்ல..!  :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

டைடில் எடிடர் வென்றுவிட்டார். :)

 

சிலபேர் ரைரிலைப் பார்த்துப் பயப்பிடுகிறார்கள். ஏனெனில்.. மீண்டும் புலிகள் வந்திட்டா இடையில் தாங்கள் தடம் மாறிப் போனதிற்கு தலைல விழுமோ என்று. சிங்களவனுக்கு மட்டுமல்ல.. நம்மவர்களிலும் கணிசமானவர்களுக்கு புலிகள் வரவே கூடாது என்ற ஒரு விருப்பு உள்ளது.

 

அந்த வகையில்.... தலைப்பு.. ஒரு கேள்விக் குறியைக் கொண்டிருப்பதை சிலர் கவனிக்கவில்லை. மாறாக பதறிப் போயிட்டார்கள். அந்தப் பதட்டத்தை வெளியில் காட்டக் கூடாது இல்ல... அதுதான்.

 

இன்றைய சூழலில்.. புலிகள் பெரும் ஆயுத பலத்தோடு இருந்தால் கூட போரை ஆரம்பிக்க மாட்டார்கள். அப்படி ஆரம்பிக்க அவர்கள் நினைத்திருந்தால் அவர்களே மூதூரை பிடித்த கையோடு ஒரு போரை வன்னியில் இருந்து ஆரம்பித்திருந்தால்.. இன்று முள்ளிவாய்க்கால் என்ற பேரவலம் நடந்திருக்காது. ஆனால் எமது போராட்டம் இப்போதும் சாவுகளை எண்ணிக் கொண்டிருந்திருக்கும்..!

 

எனி நாங்கள் ஒரு ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கனுன்னா.. நிறைய இராஜதந்திரப் போராட்டங்களில் வென்றாகனும்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

அடியை போடுகிறமாதி போட்டால் ஒரு மாணவர், என்ன வசந்தி அரசரத்தினம் என்ன, ஜெயராஜா என்ன, பரிசுத் தமிழ் என்ன, யாருமேதான் இதை சொல்ல வேண்டும். அரசை எதிர்க்க போகிறவர்கள் இலங்கையில் இருக்க முடியாது என்பதுதான் இலங்கையின் விதி.

 

விரைவில் ஜெயராஜாவின் மாணவர் பேட்டி வரவிருக்கிறது என்பதுதான் இதன் அறிகுறி.

 

 

பாவம் பெடியன் ஆரோ. வெளியிலை வாரத்துக்காக தாய் தகப்பன் எல்லோரும் சேர்ந்துதான் சொல்லு சொல்லு என்றிருப்பார்கள். அதற்கு பிறகு ஜெயராஜாவும் வசந்தியும் ஒருவருக்கொருவர் மாறி மாறி மகுடம் சூட்டியிருப்பார்கள்.

இன்றைய நிலையில் தமிழ் மக்களுக்கு அவசியம்.. ஆயுதப் போர் அல்ல. அறிவாயுதப் போர் மட்டுமே. அத்தோடு மதிநுட்பத்துடன் கூடிய சர்வதேச அரசியல் நகர்வுகளும் ஒற்றுமையுமே தமிழ் மக்களை எனியும் உலகம் மதிக்கச் செய்யும்..! சர்வதேச பின்புல ஆதரவின்றிய ஆயுதப் போராட்டங்கள் பலமான சக்திகளால் பயங்கரவாதமாக்கப்பட்டு மீண்டும் மீண்டும் எம் மக்கள் மீது அழிவுகளும் ஆக்கிரமிப்புக்களுமே திணிக்கப்படும். நிச்சயம் புலிகள் இன்றைய சூழலில் மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டம் என்ற நிலைக்குப் போகமாட்டார்கள். அவர்கள் அந்தளவுக்கு உலகம் அறியாதவர்களும் அல்ல..!  :icon_idea:

 

சர்வதேசம் மகிந்தவுக்கு உதவி செய்தும் மகிந்த இப்பொழுது சர்வதேசத்தின் பேச்சை கேட்டு நடப்பதில்லை. அதை சர்வதேசம் எதிர்பார்த்திருக்காது. புலிகள் இன்றும் போராடக்கூடியவாறு பலமாக இருந்திருந்தால் சர்வதேசம் சிலவேளை மகிந்தவின் கொட்டத்தை அடக்குவதற்காக புலிகளுக்கு ஆதரவளித்தாலும் அளிக்கும். ஆனால் எமது காட்டிக்கொடுப்பாளர்கள் புலிகளை மீண்டும் எழ விட மாட்டார்கள். உண்மையில் இனியும் ஒரு ஆயுத போராட்டம் வேண்டாம்.

 

நீங்கள் சொல்வது போல் அறிவாயுத போர் தேவை. ஆனால் தமிழர்களிடையே மதிநுட்பத்துடன் கூடிய சர்வதேச அரசியல் நகர்வுகளை ஏற்படுத்தும் திறமை இப்பொழுது யாரிடம் உள்ளது?

Edited by துளசி

உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்  இதை எல்லாம்  ஊர்புதினத்தில் போட வேண்டுமா?

நாற்சந்தியில் மாட்டும் போட்டு உண்மையான தேசியவாதிகள் மாட்டும் தெரிந்து கொள்ள வேண்டிய  விடையம்.

 

 

சாத்திரி , அர்ஜூன் அண்ணை காணமுன்னம் தூக்கி விடவும்.

பணம் சுருட்டிகளுக்கும்  'பார்ட்டி' போராளிகளுக்கும் அருமையான தகவல்.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஒரு தலைப்பு.  வீதியில் போகும் வாடிக்கையாளர்களைக் கிறங்கவைக்கும் பார்வையோடு கூப்பிடுவதுபோல இருந்தது. உள்ளே வந்தால்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.