Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என் இனத்தின் சில மனிதங்கள்.....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் டக்ளஸ் கே பி கிழக்கில் கருணா பிள்ளையான். இவர்கள் வெளிப்படையான முகங்கள். தமிழ்த்தேசீயம் சரிவராது என்ற நிலைப்பாட்டில் அரசை அண்டி பிழைக்கும் அரசமானியம் பெறும் பெரும்கூட்டம் அன்றிலிருந்து இருக்கின்றது. விலாங்கு மீன்போல் தமிழ்த்தேசீயமும் பேசி சிங்களத்தை அனுசரித்து வாழ்க்கையை ஒட்டுபவர்களும் அதிகம். இந்த இரண்ட்டில் இருந்தும் நழுவிய புலம்பெயர்ந்தவர்கள். இந்த வகைக்குள் இருப்பவர்கள் தமிழ்த்தேசீயத்தை ஆதரிப்பினும் சிங்களப்பேரினவத்த்தின் கனவை நிறைவேற்றியவர்கள் என்பது மிகையில்லை. இந் நிலையில் இவர்கள் எந்தவகையிலும் தமிழ்த்தேசீயத்தை முன்னெடுத்தவர்கள் இல்லை. இவர்கள் சார்பாக வடக்கில் இரண்டுபேர் கிழக்கில் இரண்டுபேர் பழி ஏற்று மீதமுள்ளவர்கள் தேசீயத்தை முன்னெடுப்பதாக சொல்வதில் நியாயம் இல்லை. வெளிப்படையாக நான்குபேர் மறைமுகமாக லட்சம்பேர். ஒட்டுமொத்த விழைவு ஒன்றுதான்.

மறுபுறம் தமிழ்த்தேசீயத்தை மிகத்தீவிரமாக முன்னெடுத்து அளப்பரிய தியாகங்களை செய்து உயிர்விட்ட மக்கள் மாவீரர்களை அவர்கள் நினைவுதினங்களை வியாபாரமாக்கி காசுபார்ப்பவர்கள் அவர்கள் நாமத்தை சுயலாபத்துக்கு பயன்படுத்துபவர்கள் மேற்குறிப்பிடும் நான்குபேரையும் துரோகியாக்கி தாங்கள் நல்லவர்களாகின்றனர். மேற்குறிப்பிட்ட நான்குபேரும் மகிந்தனுக்கு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு இவர்களுக்கும் தங்களை தேசீய நாட்டாமைகள் என்று நிருபிக்க முக்கியமாகின்றனர்.

இங்கே நடப்பதும் தன்னை முன்னிலைப்படுத்தும் போட்டி தவிர தமிழ்த்தேசீயத்தை முன்னிலைப்படுத்துவதாக இல்லை. போட்டிக்கு அப்பாற்பட்டு வெளிப்படையாக சிங்களத்துடன் இணைந்துள்ளவர்களை விட தமிழத்தேசீயம் என்ற கருத்தியல் மற்றும் இங்கு சக்திக்குள் இருந்து அதைச் சிதைப்பவர்கள் சுயலாபத்துக்காக பயன்படுத்துபவர்கள் மோசமானவர்கள். சிங்கள இந்தியப் புலனாய்வுத்துறைகள் திட்டமிட்டு செய்யவேண்டிய வேலையை இயல்பாகச் செய்கின்றனர்.

என்னுடைய கருத்து வெறுமனே நாலு பேரின் மீது பழி சுமத்திவிட்டு தமிழ்த்தேசியம் என்று சொல்லி மக்கள் மீது சவாரி செய்ய நினைப்பவர்களைக் காப்பாற்றும் நோக்கில் இல்லை.

இப்படியான போலித் தமிழ்த் தேசியவாதிகளுக்கும், தமிழருக்கு உண்மையில் விடிவுவேண்டும் என்று சிந்தித்து தங்களால் இயன்ற வழியில் இதயசுத்தியுடன் செயற்படுகின்ற நேர்மையான தமிழ்த் தேசியவாதிகளுக்கும் நிறைய வேறுபாடு உண்டு.

எனினும் தமிழ்த்தேசியம் என்று வாயளவில் சொல்லி சுயலாபத்திற்காகக் பின்புறமாக அரசோடும், தமிழ்த் தேசிய உணர்வை மழுங்கடிக்கும் கக்திகளினுடம் உறவாடுவர்களை எதிர்க்கவேண்டும் என்பதற்காக அண்டிப் பிழைத்தல் ஒன்றையே கொள்கையாகக் கொண்டு முதுகெலும்பற்றுச் செயற்படும் டக்ளஸ் போன்றோரின் சுயலாப அரசியல் நடவடிக்கைகளை ஆதரிப்பது ஏற்புடையதல்ல என்பதே. 

  • Replies 125
  • Views 7.5k
  • Created
  • Last Reply

அதுதான் கிருபன் அண்ணா ...............................வெட்டொன்று துண்டொன்று என்ற பதில் ........யதார்த்தம்,உண்மை ..................போலித்தேசியவாதிகளை சாட்டாக வைத்து உண்மையான உணர்வுடன் செயல்படுபவர்களையும் முடக்கும் செயற்பாடுகள் ,அது சார்ந்த கருத்துக்கள் தற்போது யாழில் மட்டிமல்ல ,எங்கும் அதிகரித்த வண்ணமே உள்ளது, ஆனால் உண்மையில் உங்கள் கருத்துடன் நூறுவீதம் உடன்படுகிறேன் ,,,,,,,,,,,,,,எனது இந்த கருத்தின் ஊடு ,இங்கே தவறாக விளக்கம் எதுவும் எடுக்காமல் .ஒற்றுமை என்ற குடையும் கீழ் நாம் செயல் பட நினைக்க வேணும் ,தவறுகளையும் ,திருத்தங்களையும் ,புரிந்துணர்வுடனும்,பரந்துபட்ட மனத்துடனும் சுட்டிக்காட்டி செயற்பட வேணும் என்பதே என் அவா ................நன்றிகள் .

[மீண்டும் வருவேன் விருப்புப்புள்ளியுடன் ]

  • தொடங்கியவர்

போலித்தேசியவாதிகளை சாட்டாக வைத்து உண்மையான உணர்வுடன் செயல்படுபவர்களையும் முடக்கும் செயற்பாடுகள் ,அது சார்ந்த கருத்துக்கள் தற்போது யாழில் மட்டிமல்ல ,எங்கும் அதிகரித்த வண்ணமே உள்ளது, ஆனால் உண்மையில் உங்கள் கருத்துடன் நூறுவீதம் உடன்படுகிறேன் :icon_idea: 

நானும் கிருபன் அண்ணாவின் கருத்துடன் ஒன்றுபடுகிறேன். தினமுரசு 
அற்புதன் அண்ணா எனது நெருங்கிய உறவினன்.அற்புதன் அண்ணாவின் 
வளர்ச்சியை பொறுக்கமுடியாமல் சந்திரகுமாரைக்கொண்டு டக்லஸ் கொலை செய்தான்.அரசியல்வாதிகளுக்கு கொலைகள் சாதாரண விடயம்தான் இருந்தாலும் நம்பி இருந்தவனை கொலை செய்த பாவி அவன்.
  • தொடங்கியவர்

டக்லஸ் ஒரு ஜனநாயக வாதி அப்பிடி செய்ய மாட்டா :icon_idea: ர்   எங்கே எம் கருத்துச் செம்மல்கள் ????

நானும் கிருபன் அண்ணாவின் கருத்துடன் ஒன்றுபடுகிறேன். தினமுரசு 
அற்புதன் அண்ணா எனது நெருங்கிய உறவினன்.அற்புதன் அண்ணாவின் 
வளர்ச்சியை பொறுக்கமுடியாமல் சந்திரகுமாரைக்கொண்டு டக்லஸ் கொலை செய்தான்.அரசியல்வாதிகளுக்கு கொலைகள் சாதாரண விடயம்தான் இருந்தாலும் நம்பி இருந்தவனை கொலை செய்த பாவி அவன்.

அற்புதனின் கொலைக்கும் சந்திரகுமாரிற்கும் தொடர்பில்லை. இருவரும் மிக நெருங்கிய நண்பர்கள். சந்திரகுமாரையும் இன்னொரு ஈபிடிபி எம்பியையும் லண்டனுக்கு டக்கிளஸ் அனுப்பி அற்புதனை தனிமைப்படுத்திய பின் தான் அற்புதனை கொலை செய்தார். அற்புதன் கொலையான பின்பு சந்திரகுமாரும் இன்னொரு ஈபிடிபி எம் பியும் (பெயர் மறந்து விட்டது) லண்டனிலேயே 2 அல்லது 3 வருடங்கள் இருக்க வேண்டி வந்தது. பின்னர் டக்கியுடன் டீல் போட்டு மீண்டும் இலங்கைக்கு வந்தனர்.

அற்புதன் ஒன்றும் புண்ணியானோ அல்லது சுத்தவாளியோ அல்ல. சிலாபம்/ புத்தளம் பகுதிகளில் இருந்த  ஈபிடிபியின்  சித்திரவதை முகாமுக்கு பொறுப்பாக இருந்ததில் இருந்து தமிழ் மக்களை படுகொலை செய்ய துணை புரிந்த பயங்கரவாதச் சட்டத்துக்கு ஆதரவு வழங்க கை உயர்த்தியது வரைக்கும் செய்த தமிழ் இரத்தக் கறை படிந்த ஈபிடிபி ஆள்தான். ஆள் நல்ல வடிவு என்பதால் இவரை முன்னர் 'அப்பிள்' என்றும் அழைப்பர்.

டக்கியிடம் கணக்கு கேட்டது, குமார் பொன்னம்பலத்துடன் சேர்ந்து ஒரு புதுக் கட்சி ஆரம்பிக்க எத்தனித்தவை, தனக்கு அரசாங்கம் தந்த பஜிரோ வாகனத்தினை விற்றதில் டக்கிக்கு பங்கு கொடுக்காமை, வெள்ளவத்தையில் நெல்சன் பிளேசில் இருக்கும் வீட்டை வாங்கியமை போன்ற காரணங்கள் தான் அற்புதனை போட வைத்தவை.

பாலகுமாரனின் நாவல்களை வாசித்துக் கொண்டு இருந்த எனக்கு ரஷ்ய நாவல்களையும் மொழிபெயர்ப்பு நாவல்களையும் அறிமுகப்படுத்தி வாசிப்பின் எல்லைகளை விரிய வைத்தவரும் அற்புதன் தான்.

தற்போதைய சூழ்நிலையில் சிங்களவனை முற்றாக நிராகரித்து தமிழர்களை அணுக முடியாது. அதேநேரம் சிங்களவர்களின் அடக்குமுறையை ஏற்கவும் முடியாது. முதன்மையானது மக்கள் அபிவிருத்திக்கு உதவுவது இரண்டாவது சிங்களவர்களின் அடக்குமுறைக்கு எதிராக போராடுவது. இது இரண்டையும் ஒரே நேரத்தில் செய்யும் திறன் தமிழர்களிடம் அறவே இல்லை.

அரசின் பிடிக்குள் இருப்பவர்கள் ஊடாக மக்களுக்கு உதவினால் அவர் துரோகியாக்கப்படுகின்றார். மக்களுக்கு சென்றடையும் உதவியை விட துரோகியக்கி மக்கள் உதவியை தடுப்பதில் குறியாய் நிற்கின்றனர்.

கூட்டமைப்பு அரசுக்கு அப்பற்பட்டு புலம்பெயர் தமிழர்களுடன் இணைந்தால் அவர்கள் இலங்கை அரசுக்கு துரோகியாகி இல்லாமல் போகும் அபாயம்.

எப்படிப்பார்த்தாலும் அமைச்சர் தேவானந்தா சூழ்நிலை சார்ந்து முக்கியமாகின்றார். வேறு எந்த தெரிவையும் அதி தேசீயவாதிகள் விட்டுவைப்பதாக இல்லை.

உங்களிடம் ஒரு கேள்வி.

முதலில் சிங்களவனுடன் சேர்ந்து நின்று மக்களுக்கான அபிவிருத்திக்கு உதவ வேண்டும் என்கிறீர்கள். இரண்டாவதாக சிங்களவர்களின் அடக்குமுறைக்கெதிராக போராட வேண்டும் என்று சொல்கிறீர்கள்.

சிங்களவர்களுக்கெதிராக எவ்வகையில் போராட வேண்டும் என்று கூறுகிறீர்கள்? ஆயுத போராட்டமா? அல்லது அரசியல் போராட்டமா? அதற்கு சர்வதேச அங்கீகாரம் தேவையில்லையா? தேவை இல்லை எனின் எதுவரைக்கும் போராடுவது? எவ்வாறு எமது உரிமைகளை பெறுவது? தமிழர்களுக்கான உரிமைகளை சிங்கள அரசு எப்படியும் தரப்போவதில்லை. அதே போல் சர்வதேச அங்கீகாரம் இல்லாத போராட்டம் எமக்கான விடிவை இனி தரப்போவதும் இல்லை.

சர்வதேச அங்கீகாரம் தேவை என்றால் அதற்கு எவ்வாறு டக்ளஸ் முயற்சி செய்கிறார்?

இப்பொழுது ஜெனீவா வரை எமது பிரச்சினை வந்ததே நாம் சிங்களவர்களுடன் சேர்ந்து வாழ முடியாது என்ற நிலையை தமிழ்தேசிய கூட்டமைப்பும் நாடுகடந்த அரசாங்கமும் சர்வதேசத்துக்கு தெரியப்படுத்திக்கொண்டிருப்பதால் தான். ஜெனீவாவில் கொண்டுவரப்படும் பிரேரணையால் இம்முறை தமிழர்களுக்கு எந்த அனுகூலமும் கிடைக்காவிட்டாலும் தமிழர்கள் இன்னும் சிங்களவர்களுடன் சேர்ந்து வாழ முடியாமல் உள்ளது என்ற விடயத்தை சர்வதேசம் புரிந்து கொண்டே இருக்கும்.

ஆனால் டக்ளஸ் போன்று அனைவரும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டால் சர்வதேசமே தமிழர்களும் சிங்களவர்களும் ஒற்றுமையாகி விட்டார்கள் என்று நினைத்து எமது பிரச்சினையை கிடப்பில் போட்டு விடுவார்கள். அதன் பின்னர் எவ்வாறு சிங்களவர்களின் அடக்குமுறைக்கெதிராக போராடுவது? யார் போராடுவது? எமது நாட்டில் போராடும் நிலை உள்ளதா? அப்படியே போராடினாலும் சர்வதேசம் அதை கவனத்தில் கொள்ளுமா? நிச்சயமாக இல்லை.

எனவே முள்ளிவாய்க்கால் படுகொலைகளுடன் எமது பிரச்சினையை சர்வதேச மட்டத்தில் தெரியப்படுத்த எமக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை நாம் தவற விடக்கூடாது.

Edited by துளசி

என்னுடைய கருத்து வெறுமனே நாலு பேரின் மீது பழி சுமத்திவிட்டு தமிழ்த்தேசியம் என்று சொல்லி மக்கள் மீது சவாரி செய்ய நினைப்பவர்களைக் காப்பாற்றும் நோக்கில் இல்லை.

இப்படியான போலித் தமிழ்த் தேசியவாதிகளுக்கும், தமிழருக்கு உண்மையில் விடிவுவேண்டும் என்று சிந்தித்து தங்களால் இயன்ற வழியில் இதயசுத்தியுடன் செயற்படுகின்ற நேர்மையான தமிழ்த் தேசியவாதிகளுக்கும் நிறைய வேறுபாடு உண்டு.

எனினும் தமிழ்த்தேசியம் என்று வாயளவில் சொல்லி சுயலாபத்திற்காகக் பின்புறமாக அரசோடும், தமிழ்த் தேசிய உணர்வை மழுங்கடிக்கும் கக்திகளினுடம் உறவாடுவர்களை எதிர்க்கவேண்டும் என்பதற்காக அண்டிப் பிழைத்தல் ஒன்றையே கொள்கையாகக் கொண்டு முதுகெலும்பற்றுச் செயற்படும் டக்ளஸ் போன்றோரின் சுயலாப அரசியல் நடவடிக்கைகளை ஆதரிப்பது ஏற்புடையதல்ல என்பதே. 

உண்மையான தமிழ்த்தேசீய உணர்வாளர்கள் என்ற கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு. இந்தப் பதத்தை ஒரு மனிதநேய செயற்பாட்டின் அடிப்படையிலே பார்க்கின்றேன் கருத்தை மட்டும் வைத்து வித்தைகாட்டும் அடிப்படையில் அல்ல. ஆனால் தேசீயச் செயற்பாடு கருத்தியல் ஆதிக்கம் என்பன போலிகளின் கைகளிலேயே ஒரு போட்டி நிலையில் உள்ளது. அண்ணா கசாரே ஊழலுக்கு எதிராக வெளிக்கிடும்போது அனைத்து கட்சிகளும் ஊழல் செய்தவர்களும் அவரை ஆதரிப்பதாக சொன்னார்கள் அதுபோல் இப்போது எல்லோரும் போலித்தேசீயவாதிகள் என்று சொல்வார்கள். எப்படி இனங்காண்பது? ஒரு வகையில் மனிதநேயச் செயற்பாடு அதிலிருந்து தள்ளி நிற்பவர்கள் என்னொருவகையில் சிங்களப் பேரினவாதத்துக்கு எதிராக செயற்படுவதை தவிர்த்து  தமிழர்களுக்குள் (உதாரணமாக டக்ளஸ் கேபி வினாயகம் என்னும் பலரல் ) ஒருவனை தாழ்த்தி தேசீயம் என்றதை பாவித்து தன்னை முன்னிலைப்படுத்துபவர்கள். இவ்வாறு இனம்காண்பதற்கு அமைச்சர் அவசியமாகின்றர். அமைச்சரை முன்நிலைப்படுத்தும் கருத்துக்கள் என்பது அமைச்சரின் மனிதாபிமான அபிவிருத்திகளை அடிப்படையாகக் கொண்டது. இது போலிகளை இனம்காண உதவுமே அன்றி உண்மையான தேசீயவாதிகளை பாதிக்காது. எலிப்பொறிக்குள் புலி மாட்டாது. :blink:

கடந்த வருடம் பெப்ரவரி 6 ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்தார் ஜனாதிபதி. இதற்காக அவர் பெயரில் விழுங்கப்பட்ட தொகை 140 இலட்சங்கள். இந்தப் பணமே எங்களின் வரி அதிகரிப்பாக முதுகில் சுமையாக விழுந்திருக்கின்றது.

இது ஜனாதிபதியின் தனிப்பட்ட செலவு மாத்திரமே, அவருக்கு குடை பிடித்து கூட வந்த அமைச்சர்களின் செலவுகளையும் சேர்த்துக் கொண்டால் 180 இலட்சத்தை தாண்டும் என்கின்றனர் அதிகாரிகள்.

சாவகச்சேரி வைத்தியசாலையத் திறப்பதற்கான (திறந்து வைத்த கட்டத்தை திறந்தது அது வேறு கதை) ஒரு மணி நேர நிகழ்வுக்காக யாழ்.பிராந்திய சுகாதாரத் திணைக்களம் செலவு செய்த தொகை 80 லட்சம்.

வடமாகாண சபையில் எல்லோரையும் ஆட்டிப்படைத்து, தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள இராணுவ அதிகாரியின் கட்டளைப்படியே கடந்த ஆண்டு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டன.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=117050

============================================

அபிவிருத்தி என்ற பெயரில் என்ன அங்கே நடக்கின்றது என்பதை ஆதாரத்துடன் முன்வைத்துள்ளார்கள்.

மகிந்தவிற்கும் அவரது வாலுகளுக்கும்  துணைபோவது என்பது தாயக மக்களின் வயிற்றில் அடிப்பதற்கு சமன்.

சிங்கள அரசை பாதுகாப்பதே புலம்பெயர் அமைப்புகள். புலம்பெயர் மக்கள் என்பது வேறு அவர்களை வளிநடத்தமுற்படும் அமைப்புகள் என்பது வேறு.

பெரும்பாலான புலம்பெயர் மக்களுக்கு இனவழிப்பு குறித்த வேதனையும் ஆத்திரமும் உள்ளது. ஏதாவது ஒருவகையில் செயற்படவேண்டும் என்ற நோக்கம் இருக்கின்றது. ஒன்றுபட்டு வீதியில் இறங்கியவர்கள் என்றைக்கும் இறங்கக் கூடியவர்கள்- இதுதான் புலம்பெயர் மக்கள்.

இந்த நிலை எவ்வாறு சிதைக்கப்படுகின்றது?

முன்னாளைய அமைப்புகள் நபர்கள் தங்களுக்குள் போட்டிபோடுகின்றார்கள். பணத்தை குறிவைக்கின்றார்கள். நிகழ்வுகள் மாவீரர் ஏற்படுகளை வியாபாரமாக்குகின்றார்கள். மக்கள் வெறுப்படைகின்றார்கள்.

தாங்களே எல்லாம் செய்துகொள்வோம் என்று மக்களை மெளனியாக்கிவிட்ட சாதுர்யமான செயல்பாடுள். இவற்றுக்குள் தான் வட்டுக்கோட்டை வாக்கெடுப்பு நாடகம் மற்றும் நாடுகடந்த அரசு உருவாக்கம் பிறகு அவற்றில் பிளவை ஏற்படுத்தி மக்கள் நம்பிக்கையை சாதூர்ய்யமாக சிதைத்தனர்.

இந்த அமைப்புகள் எல்லாம் ஆளையாள் குற்றம் சொல்வது ஆளையாள் மீது பழியை போடுவது. கொலைவரை சென்றது. தவிர என்றாவது போர்குற்றம் அபிவிருத்தி என்ற கருத்துடன் மக்களை அணுகியுள்ளதா?

சனல் 4 தான் போர்குற்றத்தை கையில் எடுத்ததே தவிர புலம்பெயர் அமைப்புகள் இல்லை

ந க அரசுகள் ஒன்றிரண்டு அறிக்கையும் யாகமும் செய்ததே தவிர போர்க்குற்றம் புனர்வாழ்வு முன்னாள் போராளிகள் என்பதை கையில் எடுத்ததில்லை

இவர்களே பேரினவாதத்தின் நண்பர்கள்.

தேசீயம் என்ற கருத்தியலை மக்களுக்காக மக்களுடன் இணைந்தை வளர்த்தெடுப்பதற்கு பதிலாக மக்களிடம் இருந்து பிரித்து சிதைத்து பங்குபோட்டு சுயலாபம் தேடும் அதே வேளை சிங்களக் கனவை நனவாக்குபவர்கள்.

அடிப்படையில் செயற்பாட்டில் நீங்களே சிங்களத்தின் மிக நெருங்கிய நண்பர்கள். அதை தூக்கி எவன் தலையிலாவது கட்டிவிடமுனைந்தால் அது நடமுறைச்சாத்தியமில்லை. எல்லாம் போய் கடசியில் இந்தக் களத்தில் பழிபோடும் வேலையை செய்ய முற்படுகின்றீர்கள். இதுவும் அதிகநாள் நீடிக்கப்போவதில்லை.

புலம்பெயர் அமைப்புகள் போர்குற்றம் தொடர்பாக மக்களை அணுகியதா என்று கேள்வி கேட்கிறீர்கள். ஆனால் டக்ளஸ் போர்குற்றம் தொடர்பாக மக்களை அல்லது சர்வதேசத்தை அணுகினாரா? இல்லையே.... நாடு நன்றாக உள்ளது என்று தானே சொல்லிக்கொண்டிருக்கிறார்.

புலம்பெயர் அமைப்புகள் போர்குற்றம் தொடர்பாக மக்களை, சர்வதேசத்தை அணுகுகிறார்களோ இல்லையோ நாட்டில் பிரச்சினை முடிந்து விட்டது, மக்கள் நன்றாக இருக்கிறார்கள் என்று மக்களுக்கோ சர்வதேசத்துக்கோ சொல்லிக்கொண்டு திரியவில்லை.

நிச்சயமாக போர்க்குற்றங்களை திரட்டுவதிலோ ஆதாரத்தை சேகரித்து வைப்பதிலோ நாம் மிகவும் பின்தங்கிய நிலையில் நிற்கிறோம். அவ்வாறு நாம் திரட்டியிருந்தாலும் channel 4 போன்ற சர்வதேச ஊடகமில்லாமல் எமது பிரச்சனைகளை நாம் வெளிப்படுத்த முடியாது. அதையும் நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.

channel 4 க்கு பின்னால் கூட ஒருசில புலம்பெயர் அமைப்புகள் இருப்பதாக கந்தப்பு அண்ணா இந்த திரியில் கூறியுள்ளார்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=116352&p=858993

அது பற்றி மேலதிக விளக்கம் தேவைப்பட்டால் அவரிடமே உங்கள் கேள்விகளை முன்வையுங்கள்.

உண்மையான தமிழ்த்தேசீய உணர்வாளர்கள் என்ற கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு. இந்தப் பதத்தை ஒரு மனிதநேய செயற்பாட்டின் அடிப்படையிலே பார்க்கின்றேன் கருத்தை மட்டும் வைத்து வித்தைகாட்டும் அடிப்படையில் அல்ல. ஆனால் தேசீயச் செயற்பாடு கருத்தியல் ஆதிக்கம் என்பன போலிகளின் கைகளிலேயே ஒரு போட்டி நிலையில் உள்ளது. அண்ணா கசாரே ஊழலுக்கு எதிராக வெளிக்கிடும்போது அனைத்து கட்சிகளும் ஊழல் செய்தவர்களும் அவரை ஆதரிப்பதாக சொன்னார்கள் அதுபோல் இப்போது எல்லோரும் போலித்தேசீயவாதிகள் என்று சொல்வார்கள். எப்படி இனங்காண்பது? ஒரு வகையில் மனிதநேயச் செயற்பாடு அதிலிருந்து தள்ளி நிற்பவர்கள் என்னொருவகையில் சிங்களப் பேரினவாதத்துக்கு எதிராக செயற்படுவதை தவிர்த்து  தமிழர்களுக்குள் (உதாரணமாக டக்ளஸ் கேபி வினாயகம் என்னும் பலரல் ) ஒருவனை தாழ்த்தி தேசீயம் என்றதை பாவித்து தன்னை முன்னிலைப்படுத்துபவர்கள். இவ்வாறு இனம்காண்பதற்கு அமைச்சர் அவசியமாகின்றர். அமைச்சரை முன்நிலைப்படுத்தும் கருத்துக்கள் என்பது அமைச்சரின் மனிதாபிமான அபிவிருத்திகளை அடிப்படையாகக் கொண்டது. இது போலிகளை இனம்காண உதவுமே அன்றி உண்மையான தேசீயவாதிகளை பாதிக்காது. எலிப்பொறிக்குள் புலி மாட்டாது. :blink:

நீங்கள் இவ்வளவு காலமும் இனங்கண்டதை வைத்து யார் உண்மையான தேசியவாதிகள், யார் போலிகள் என்று கூறுங்கள். தயவுசெய்து சில போலிகள் இருப்பதற்காக ஒட்டுமொத்தமாக தேசியத்துக்காக உழைப்பவர்களையும் போலி தேசியவாதிகள் என்ற அடிப்படையில் கருத்துகளை வைக்காதீர்கள்.

நீங்கள் ஒருசிலரை தான் குறிப்பிடுகிறீர்கள் என்றால் அந்த ஒருசிலர் யார்? எதற்காக அவ்வாறு குறிப்பிடுகிறீர்கள் என்றும் ஆதாரத்துடன் கூறுங்கள். இல்லாவிட்டால் யார் போலிகள் என்று தெரியாமல் சாதாரண மக்கள் தேசியத்துக்காக பாடுபடும் அனைவரையுமே போலிகள் என்று நினைத்து விடுவார்கள். உண்மை தேசியவாதிகளை எதுவும் பாதிக்காது என்று எதை வைத்து சொல்கிறீர்கள்? அடுத்தவனுக்கு துரோகி பட்டத்தை கொடுக்க கூடாது என்று வாதாடும் நீங்கள் அடுத்தவனுக்கு போலி பட்டத்தை இலகுவில் வழங்கி விடுகிறீர்கள்.

உண்மையில் எடுத்ததுக்கும் துரோகி என்ற சொல்லை பயன்படுத்துவதும், போலி என்ற சொல்லை பயன்படுத்துவதும் நிறுத்தப்பட வேண்டும்.

திருடனும் சேர்ந்து தேடும்போது களவெடுத்தவன் அகப்படமாட்டான் என்பது உண்மைதான். அது போலத்தான் தேசியப் போலிகளும் தமக்குப் பிடிக்காதவர்களைப் போலிகள் துரோகிகள் என்பார்கள். இந்த வாரம் வந்த செய்திகளிலும் இதைக் காணக்கூடியதாக இருந்தது.

தம்மை முன்னிலைப்படுத்துவர்களை அடையாளம் காண அமைச்சரின் மனிதாபிமான அபிவிருத்தி பற்றிய கதையாடல்கள் உதவும் என்பது ஏற்புடையதல்ல. அமைச்சர் மனிதாபிமான அபிவிருத்தி என்ற பெயரில் மக்களை ஏமாற்றிப் பிழைப்பதை அம்பலப்படுத்தவேண்டியதும் உண்மையாக தமிழர்களின் வாழ்வில் அக்கறையுள்ளவர்கள் செய்யவேண்டிய கடமை.

1)என் இனத்தின் சில மனிதங்கள்.....
 
கடும் வேலை என்றாலும் 

மிகை நேரம் உழைத்தாலும் 

மண் மீட்பை மறக்காமல் 

இன மானம் இழக்காமல் 

பனி கொட்டும் இரவினிலும் 

மலைச் சிகர நுனியினிலும்

கத தட்டும் ஒலி கேட்டு 

கனிவுடனே வரவேற்று 

அள்ளி அள்ளி தந்ததுதான் வெற்றிகள் ஆச்சு 

நம் புலம் பெயர்ந்தோர் உதவிகளும் 

காலச் செயல் ஆற்று ....

தமிழீழப் பறவை(கனடா)நன்றி முகநூல்

இந்த வாரம் மே 17 அமைப்பு பலவேறு நாடுகளில் ஆரப்பட்டங்களை நடாத்தியது.

சில புலம்பெயர் தமிழர்கள் சனல் நாலுடன் இணைந்து வேலை செய்கிறார்கள்.

பலர் பலவேறு சமூக புனர்வாழ்வுத்திட்டங்களுக்கு உதவுகிறார்கள்.

ஐ.நா. நோக்கி பல ஏற்பாடுகள் நடக்கின்றன.

தாயகத்தில் மக்கள் மீண்டும் போராட ஆரம்பித்துள்ளார்கள்.

அவர்களின் விடுதலைக்கு உறுதுணையாக இருப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இவ்வளவு காலமும் இனங்கண்டதை வைத்து யார் உண்மையான தேசியவாதிகள், யார் போலிகள் என்று கூறுங்கள். தயவுசெய்து சில போலிகள் இருப்பதற்காக ஒட்டுமொத்தமாக தேசியத்துக்காக உழைப்பவர்களையும் போலி தேசியவாதிகள் என்ற அடிப்படையில் கருத்துகளை வைக்காதீர்கள்.

நீங்கள் ஒருசிலரை தான் குறிப்பிடுகிறீர்கள் என்றால் அந்த ஒருசிலர் யார்? எதற்காக அவ்வாறு குறிப்பிடுகிறீர்கள் என்றும் ஆதாரத்துடன் கூறுங்கள். இல்லாவிட்டால் யார் போலிகள் என்று தெரியாமல் சாதாரண மக்கள் தேசியத்துக்காக பாடுபடும் அனைவரையுமே போலிகள் என்று நினைத்து விடுவார்கள். உண்மை தேசியவாதிகளை எதுவும் பாதிக்காது என்று எதை வைத்து சொல்கிறீர்கள்? அடுத்தவனுக்கு துரோகி பட்டத்தை கொடுக்க கூடாது என்று வாதாடும் நீங்கள் அடுத்தவனுக்கு போலி பட்டத்தை இலகுவில் வழங்கி விடுகிறீர்கள்.

உண்மையில் எடுத்ததுக்கும் துரோகி என்ற சொல்லை பயன்படுத்துவதும், போலி என்ற சொல்லை பயன்படுத்துவதும் நிறுத்தப்பட வேண்டும்.

எவரது பெயரையும் சுட்டிக் கதைக்கும்போது தகுந்த ஆதாரம் வைக்க்கப்படவேண்டும். ஆனாலும் மக்களை ஏய்த்துப் பிழைப்பவர்கள் கூடுதலானவரை ஆதாரங்கள் வெளியில் வராதவாறு பார்த்துக் கொள்வதில் வல்லவர்கள். அத்தோடு ஆதாரங்களை வெளியில் கொண்டு வருபவர்களை மிரட்டிப் பணிய வைத்து வாய்ப்பூட்டு போடுவதிலும் அது முடியாத பட்சத்தில் பட்டங்கள் சூட்டுவதிலும் கைதேர்ந்தவர்கள்.

எனவே பெயர்களைத் தவிர்த்து குழுமங்களை அடையாளம் காட்டிப் பேசுவதில் சிக்கல்கள் இல்லை என்றே நினைக்கின்றேன்.

புலம்பெயர் அமைப்புகள் அனைத்தும் போலிகள் என்ற கணக்கில் சண்டமாருதன் அண்ணா கருத்து கூறினார்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=116259&p=862699

அதனால் அவருக்கு அந்த கருத்தை கூறியிருந்தேன். குழுமங்களை அடையாளம் காட்டி பேசுகிறேன் என்ற பெயரில் அனைவரையும் அல்லது அனைத்து அமைப்புகளையும் பொதுமைப்பட போலிகள் என்ற கணக்கில் பேசுவது சரியல்ல. இவ்வாறான கதைகளால் பல  உண்மையாக தேசியத்துக்காக உழைப்பவர்களும் போலி என்ற பட்டத்தை சுமக்கும் நிலையும் உள்ளது.

Edited by துளசி

  • தொடங்கியவர்

இந்த வாரம் மே 17 அமைப்பு பலவேறு நாடுகளில் ஆரப்பட்டங்களை நடாத்தியது.

சில புலம்பெயர் தமிழர்கள் சனல் நாலுடன் இணைந்து வேலை செய்கிறார்கள்.

பலர் பலவேறு சமூக புனர்வாழ்வுத்திட்டங்களுக்கு உதவுகிறார்கள்.

ஐ.நா. நோக்கி பல ஏற்பாடுகள் நடக்கின்றன.

தாயகத்தில் மக்கள் மீண்டும் போராட ஆரம்பித்துள்ளார்கள்.

அவர்களின் விடுதலைக்கு உறுதுணையாக இருப்போம்.

இந்த வேலைத் திட்டங்களை முன்னெடுப்பவர்களும் போலி என்று சில துரோகிகள் சொல்வார்கள் இதைப் பார்த்தா தேரை அசைக்காமல் விடலாமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணைப்பு கொடுத்த யாழ்அன்பருக்கு என் நன்றிகள்.

  • தொடங்கியவர்

சில வேதனைகளில் இருந்த பொழுது வந்த சிந்தனையே இது.  :rolleyes:

இந்த வாரம் மே 17 அமைப்பு பலவேறு நாடுகளில் ஆரப்பட்டங்களை நடாத்தியது.

சில புலம்பெயர் தமிழர்கள் சனல் நாலுடன் இணைந்து வேலை செய்கிறார்கள்.

பலர் பலவேறு சமூக புனர்வாழ்வுத்திட்டங்களுக்கு உதவுகிறார்கள்.

ஐ.நா. நோக்கி பல ஏற்பாடுகள் நடக்கின்றன.

தாயகத்தில் மக்கள் மீண்டும் போராட ஆரம்பித்துள்ளார்கள்.

அவர்களின் விடுதலைக்கு உறுதுணையாக இருப்போம்.

மே 17 இயக்கத்தின் பின்னால் குளிர்காய முற்படாதீர்கள். அவர்கள் உணர்வுடனும் தெளிவுடனும் நெறிப்படுத்தலுடனும் தமது கருத்தை முன்வைத்து போராடுபவர்கள். போற்றத்தக்கவர்கள்.

http://may17movementnews.blogspot.ca/

இதில் உள்ள படங்கள் வாசகங்களே போதும். மேற்கொண்டு அறிவதற்கு. இவ்வாறானதொரு பாதையில் புலம்பெயர் தமிழர்களின் போராட்டம் சென்றால் அதன் பலாபலன் அளப்பெரியது. ஆனால் இங்கு நடப்பது என்ன,? கோயில்களில் யாகம். அமர்வுகள். அறிக்கை விடுதல்கள். பெட்டிசம் போடுவது. ஆழுக்காள் போட்டி. மாவீரர் தினத்தை நடத்துவதில் போட்டி. பங்கு பிரிப்பு படுகொலை. நூற்றியெட்டுக் குழுக்கள்' இவனை அவன் துரோகி அவனை இவன் துரோகி். ஒரு நிழல் அரசையே நடத்தியபின் புதுசா ஒரு வட்டுக்கோட்டை வாககெடுப்பு நாடகம்' போட்டி சுய லாபங்களுக்காக மாவீரர் தேசியத்தை பயன்படுத்துதல்' எப்படிப் பார்த்தாலும் மக்களின் தேவைகளை நீங்கள் முன்நகர்த்தவில்லை. அதை வைத்து உங்களையே முன்நகர்த்துகின்றீர்கள். ஆனால் மே 17 இயக்கம் மக்களின் தேவைகளை முன்னகர்த்துகின்றது. இதற்கும் உங்கள் நடைமுறைக்கும் சம்மந்தமே கிடையாது.

மே 17 இயக்கம் என்ற முதலாவது வரி தமிழக அமைப்பு அதன் பின் உங்கள் வரிகளில் சிலர் அப்படி செய்கின்றார்கள் பலர் இப்படி செய்கின்றார்கள் என்கின்றீர்கள். யார் இவர்கள் என்று உங்களால் சொல்லக்கூட முடியாத வக்கற்ற நிலை' உரிமை கேட்டு நீதி கேட்டு நடக்கும் வெளிப்படையான போராட்டத்தில் இப்படியொரு வக்கற்ற நிலையை விட மோசமானது வேறு என்ன.

மே 17 இயக்கம் போல் புலம்பெயர்ந்தவர்கள் போராட வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு.

தம்மை முன்னிலைப்படுத்துவர்களை அடையாளம் காண அமைச்சரின் மனிதாபிமான அபிவிருத்தி பற்றிய கதையாடல்கள் உதவும் என்பது ஏற்புடையதல்ல. அமைச்சர் மனிதாபிமான அபிவிருத்தி என்ற பெயரில் மக்களை ஏமாற்றிப் பிழைப்பதை அம்பலப்படுத்தவேண்டியதும் உண்மையாக தமிழர்களின் வாழ்வில் அக்கறையுள்ளவர்கள் செய்யவேண்டிய கடமை.

இக்கருத்தை ஏற்றுக்கொள்கின்றேன்' 

நீங்கள் இவ்வளவு காலமும் இனங்கண்டதை வைத்து யார் உண்மையான தேசியவாதிகள், யார் போலிகள் என்று கூறுங்கள். தயவுசெய்து சில போலிகள் இருப்பதற்காக ஒட்டுமொத்தமாக தேசியத்துக்காக உழைப்பவர்களையும் போலி தேசியவாதிகள் என்ற அடிப்படையில் கருத்துகளை வைக்காதீர்கள்.

நீங்கள் ஒருசிலரை தான் குறிப்பிடுகிறீர்கள் என்றால் அந்த ஒருசிலர் யார்? எதற்காக அவ்வாறு குறிப்பிடுகிறீர்கள் என்றும் ஆதாரத்துடன் கூறுங்கள். இல்லாவிட்டால் யார் போலிகள் என்று தெரியாமல் சாதாரண மக்கள் தேசியத்துக்காக பாடுபடும் அனைவரையுமே போலிகள் என்று நினைத்து விடுவார்கள். உண்மை தேசியவாதிகளை எதுவும் பாதிக்காது என்று எதை வைத்து சொல்கிறீர்கள்? அடுத்தவனுக்கு துரோகி பட்டத்தை கொடுக்க கூடாது என்று வாதாடும் நீங்கள் அடுத்தவனுக்கு போலி பட்டத்தை இலகுவில் வழங்கி விடுகிறீர்கள்.

உண்மையில் எடுத்ததுக்கும் துரோகி என்ற சொல்லை பயன்படுத்துவதும், போலி என்ற சொல்லை பயன்படுத்துவதும் நிறுத்தப்பட வேண்டும்.

இவர் போலி இவர் உண்மை என்பதல்ல பிரச்சனை. புலம்பெயர் தமிழனின் ஒட்டுமொத்த செயற்பாடும் கோமாளித்தனமாகிவிட்டது'

சிங்களம் என்ற ஒரு இனக் கட்டமைப்பின் ஆரம்பமே தாங்கள் அடிமை இரத்தம் இல்லை என்றுதான் தொடங்கப்பட்டது. அதன் பிறகே அதற்கு பக்கபலமாக பெளத்தம் மகாவம்சங்கள் இணைந்துகொண்டது. சரியான பாதை தெளிவு திட்டமிடல் அவர்களிடம் இருந்தது.

உரிமையை உரிமையுடன் கேட்காமல் அடிமையாய் கேட்பது அதை கேட்பவரே நிராகரிப்பதாக அர்த்தம்.

என்று ஐ நா அல்லது படுகொலைக்கு உதவும் நாடுகளை நோக்கி நீ செய்தது தவறு செய்வது தவறு அதை நிறுத்து என்று பெட்டிசத்துக்குப் பதிலாக சுட்டிக்காட்டுகின்றோமோ கண்டனம் செய்ய ஆரம்பிக்கின்றோமோ அன்று போராட்டம் ஆரம்பிக்கும். அதற்கு தான் தன்னளவில் அடிமை இல்லை என்ற உணர்வு மேலோங்க வேண்டும்' போலி உண்மைக்கு அப்பால் அதுவரை கோமாளித்தனமே தொடரும்'

நிழலி அண்ணா நீங்கள் சொல்வது சரியானதுதான். அற்புதன் அண்ணாவிற்கு புலிகளுடன் ஏதோ ஒரு விதத்தில் பிற்காலத்தில் தொடர்பிருந்தது.அதை சந்திரகுமார்தான் டக்கிக்கு போட்டுக்கொடுத்தார். இதில் பல விடயங்களில் சந்திரகுமாரும் சூத்திரதாரிதான்.மற்ற எம் பி தவராசா என்று நினைக்கிறேன்.
  • தொடங்கியவர்

மே 17 இயக்கத்தின் பின்னால் குளிர்காய முற்படாதீர்கள். அவர்கள் உணர்வுடனும் தெளிவுடனும் நெறிப்படுத்தலுடனும் தமது கருத்தை முன்வைத்து போராடுபவர்கள். போற்றத்தக்கவர்கள்.

http://may17movementnews.blogspot.ca/

மே 17 இயக்கம் என்ற முதலாவது வரி தமிழக அமைப்பு அதன் பின் உங்கள் வரிகளில் சிலர் அப்படி செய்கின்றார்கள் பலர் இப்படி செய்கின்றார்கள் என்கின்றீர்கள். யார் இவர்கள் என்று உங்களால் சொல்லக்கூட முடியாத வக்கற்ற நிலை' உரிமை கேட்டு நீதி கேட்டு நடக்கும் வெளிப்படையான போராட்டத்தில் இப்படியொரு வக்கற்ற நிலையை விட மோசமானது வேறு என்ன.

மே 17 இயக்கம் போல் புலம்பெயர்ந்தவர்கள் போராட வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு.

மே 17 இயக்கம்புலிகளை ஏற்றுக் கொண்டே அவர்கள் போராட்டங்களை நடாத்துகிறார்கள் இ பி டி பியை அல்ல நண்பரே 

மே 17 இயக்கம்புலிகளை ஏற்றுக் கொண்டே அவர்கள் போராட்டங்களை நடாத்துகிறார்கள் இ பி டி பியை அல்ல நண்பரே 

யாழ் அன்பரே ! மே பதினேழு இயக்கம் ஈபி டிபி யையே ஏற்கவில்லை என்றால் அவர்களை விட பன்மடங்கு மோசமானவர்களை எப்படி ஏற்கும் ?

புலிகளின் கொள்கையை போராட்டத்தை தியாகத்தை ஏற்றவர்கள். அதே கொள்கையை முன்னெடுப்பவர்கள். ஈழத்தமிழர்கள் விடுதலை பெறவேண்டும் என்று தெளிவான வகையில் போராடுபவர்கள். தவிர அதே கொள்கைகளுக்காக மக்களிடம் இருந்து சேர்தத பணத்தை கொள்ளையடித்தவர்களை அதே கொள்கைகளுக்காக தமது உயிரை விட்ட மாவீரர் நிகழ்வுகளை போட்டியாக்கி வியாபாரமாக்கி காசுபார்ப்பவர்களை அதே கொள்கைகளை பயன்படுத்தி தன்னை முன்னிலைப்படுத்துபவர்களை அவர்கள் அல்ல எவரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். புலி என்றால் இப்போது யார்? என்ற கேள்விக்கு நூறு குழுக்களும் நபர்களும் தாம் தான் புலி என்று பிழைப்பு நடத்துகின்றார்கள் அதற்குள் தான் நீங்களும் அடங்குகின்றீர்கள். உங்களை ஒருபோதும் எவராலும் ஏற்க முடியாது. இலங்கை அரசும் உலக நாடுகளும் இணைந்து சுயலாபம் தேடும் ஈழத் தமிழர்களும் அவர்கள் செயற்பாடகளும் இணைந்து ஈழவிடுதலைக்காக போராடிய புலிகளை மே 17 இல் அழித்து முடிவு கட்டிவிட்டார்கள் ஆனால் அந்த விடுதலைப்போராட்டத்தை சாத்தியமான வகையில் மே 17 இயக்கம் தெடர்கின்றது.

கொலைகார கொள்ளைக்கார இந்த துரோகிகள், இழி பிறப்புக்களான இபிடிபிய ஏற்றுக் கொள்ளாதவரைக்கும் அவர்கள் தமிழர்கள் என்று நாம் நம்புவோம். தமிழர்களுக்காக நேர்மையாக போராடுபவர்கள் என்று ஏற்றுக் கொள்வோம் நண்பரே 

மே 17 இயக்கம்புலிகளை ஏற்றுக் கொண்டே அவர்கள் போராட்டங்களை நடாத்துகிறார்கள் இ பி டி பியை அல்ல நண்பரே 

அவர் அந்த கருத்தை சொன்ன அதே நாள் கிருபன் அண்ணாவின் கருத்தை ஏற்றுக்கொள்வதாகவும் கூறியுள்ளார். அதாவது புலம்பெயர் தமிழர்களை குறை சொல்வதற்காக டக்ளசின் பிழைகளை நியாயப்படுத்த கூடாது என்ற கருத்தை. எனவே இனி அவருடன் ஈ.பி.டீ.பி பற்றி இழுத்து கதைக்காமல் விடலாமே. அவர் கூறியதை அவரே மீறினால் அதன் பிறகு ஈ.பி.டி.பி பற்றிய கருத்தை வைக்கலாமா இல்லையா என்று முடிவு செய்யலாம் என்று நினைக்கிறேன். :rolleyes:

இவர் போலி இவர் உண்மை என்பதல்ல பிரச்சனை. புலம்பெயர் தமிழனின் ஒட்டுமொத்த செயற்பாடும் கோமாளித்தனமாகிவிட்டது'

சிங்களம் என்ற ஒரு இனக் கட்டமைப்பின் ஆரம்பமே தாங்கள் அடிமை இரத்தம் இல்லை என்றுதான் தொடங்கப்பட்டது. அதன் பிறகே அதற்கு பக்கபலமாக பெளத்தம் மகாவம்சங்கள் இணைந்துகொண்டது. சரியான பாதை தெளிவு திட்டமிடல் அவர்களிடம் இருந்தது.

உரிமையை உரிமையுடன் கேட்காமல் அடிமையாய் கேட்பது அதை கேட்பவரே நிராகரிப்பதாக அர்த்தம். என்று ஐ நா அல்லது படுகொலைக்கு உதவும் நாடுகளை நோக்கி நீ செய்தது தவறு செய்வது தவறு அதை நிறுத்து என்று பெட்டிசத்துக்குப் பதிலாக சுட்டிக்காட்டுகின்றோமோ கண்டனம் செய்ய ஆரம்பிக்கின்றோமோ அன்று போராட்டம் ஆரம்பிக்கும். அதற்கு தான் தன்னளவில் அடிமை இல்லை என்ற உணர்வு மேலோங்க வேண்டும்' போலி உண்மைக்கு அப்பால் அதுவரை கோமாளித்தனமே தொடரும்'

ஈ.பி.டி.பி யை தாழ்த்தி கதைத்தால் அவர்கள் போலி என்று இனம்காணலாம் என்ற வகையில் நீங்கள் கருத்து வைத்ததால் தான் இதுவரை நீங்கள் இனங்கண்டதன் படி யார் போலி, யார் உண்மை என்று கூறும்படி கேட்டிருந்தேன். ஆனால் கிருபன் அண்ணாவின் கருத்தை நீங்கள் ஏற்றுக்கொண்டதால் அந்த கேள்வியை தவிர்க்கிறேன். திரும்ப பழையபடி கதைத்தால் இணைப்பை தந்து பதிலளிக்க சொல்வேன். :D

இப்பொழுது சர்வதேச விசாரணைக்கு அமெரிக்காவோ, ஐநாவோ இன்னும் சம்மதிக்காததற்கு முக்கிய காரணம் தாமும் குற்றவாளிகள் என்பதால் தான். அப்படியிருக்க நீ செய்வது தவறு, நீ செய்வது தவறு என்று நாங்கள் இப்பொழுது அவர்களை சுட்டிக்காட்டினால் அவர்கள் எமக்கு சார்பாக இப்பொழுது எடுக்கும் சிறு நடவடிக்கையை கைவிடும் சந்தர்ப்பமும் உள்ளது. :unsure: 

அப்படியே அவர்களை குற்றவாளி என்று சொன்னால், இனி தாம் சரியாக நடப்பதாக கூறுவார்களே தவிர அதனால் அவர்கள் பகையை வளர்ப்பதை தவிர வேறெதுவும் செய்ய முடியாதென்றே நினைக்கிறேன்.. :unsure: இதன் மூலம் போராட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கு பதிலாக போராட்டம் விழுந்து விடலாம். :rolleyes: 

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் அன்பரே ! மே பதினேழு இயக்கம் ஈபி டிபி யையே ஏற்கவில்லை என்றால் அவர்களை விட பன்மடங்கு மோசமானவர்களை எப்படி ஏற்கும் ?

புலிகளின் கொள்கையை போராட்டத்தை தியாகத்தை ஏற்றவர்கள். அதே கொள்கையை முன்னெடுப்பவர்கள். ஈழத்தமிழர்கள் விடுதலை பெறவேண்டும் என்று தெளிவான வகையில் போராடுபவர்கள். தவிர அதே கொள்கைகளுக்காக மக்களிடம் இருந்து சேர்தத பணத்தை கொள்ளையடித்தவர்களை அதே கொள்கைகளுக்காக தமது உயிரை விட்ட மாவீரர் நிகழ்வுகளை போட்டியாக்கி வியாபாரமாக்கி காசுபார்ப்பவர்களை அதே கொள்கைகளை பயன்படுத்தி தன்னை முன்னிலைப்படுத்துபவர்களை அவர்கள் அல்ல எவரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். புலி என்றால் இப்போது யார்? என்ற கேள்விக்கு நூறு குழுக்களும் நபர்களும் தாம் தான் புலி என்று பிழைப்பு நடத்துகின்றார்கள் அதற்குள் தான் நீங்களும் அடங்குகின்றீர்கள். உங்களை ஒருபோதும் எவராலும் ஏற்க முடியாது. இலங்கை அரசும் உலக நாடுகளும் இணைந்து சுயலாபம் தேடும் ஈழத் தமிழர்களும் அவர்கள் செயற்பாடகளும் இணைந்து ஈழவிடுதலைக்காக போராடிய புலிகளை மே 17 இல் அழித்து முடிவு கட்டிவிட்டார்கள் ஆனால் அந்த விடுதலைப்போராட்டத்தை சாத்தியமான வகையில் மே 17 இயக்கம் தெடர்கின்றது.

 ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி எனப்படும் ஈபிடிபியினர் தமது கோட்டையாக ஆதிக்கம் செலுத்தி வந்த நெடுந்தீவில் இருந்து முற்றாக செல்வாக்கு இழக்கும் நிலையை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

 அண்மையில் சிறுமி லக்சினியை கொலை செய்த சம்பவத்தின் பொழுது நெடுந்தீவு மக்கள் ஈபிடீபி உறுப்பினர்மீது குற்றம்சாட்டி அவரை கைது செய்ய வேண்டும் என்று கடுமையான போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். பள்ளி மாணவியும் 13 வயதைக் கொண்ட சிறுமியுமான லக்சினியை பாலியல் வல்லுறவு புரிந்து கொலை செய்த கந்தசாமி ஜெகதீஸ்வரன் என்ற ஈபிடிபி உறுப்பினருக்கு தகுந்த தண்டணையைக் கொடுக்க வேண்டும் என்று மக்கள் கடும் போராட்டங்களில் ஈடுபட்டனர். நெடுந்தீவில் உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டு கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன. ஈபிடிபி உறுப்பினருக்கு எதிரான சுலோக்களை ஏந்தியவாறு வைத்தியசாலை முன்பாகவும் பொலிஸ்நிலையம் முன்பாகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈபிடிபியின் நெடுந்தீவு அலுவலகத்தில் நுழைந்த மக்கள் அங்கு அந்தக் கட்சியின் உறுப்பினருக்கு எதிராக கோசங்களை எழுப்பினார்கள். தொடர்ந்து நெடுந்தீவு துறைமுகம் வரையில் கோசங்களை மக்கள் எழுப்பிச் சென்றனர். குறித்த ஈபிடிபி உறுப்பினர் தப்பிச் செல்லலாம் என்பதால் படகுகளை செல்லவிடாமல் தடுத்து நிறுத்தி மக்கள் கடுமையான எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறுமி லக்சினியை பாலியல் வல்லுறவு புரிந்து கொலை செய்த சம்பவத்திற்கு எதிரான போராட்டங்களைக் கண்டு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி எனப்படும் ஈபிடிபி பொரும் அதிர்ச்சியடைந்துள்ளது. கட்சியின் செயலாளரும் அமைச்சருமான டக்கிளஸ் தேவானந்தா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக ஜெனிவா சென்றுள்ள நிலையில் கட்சியின்மீது கொலை குற்றத்தை சுமத்தும் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. இந் நிலையில் நெடுந்தீவு மக்களின் போராட்டங்களை சமாளிக்க அந்தக் கட்சியின் உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதயன் என்படும் சில்வேதிரி அலஸ்டீன் நெடுந்தீவுக்கு விரைந்து சென்றுள்ளார். சில்வேதிரி அலஸ்டீன் அங்கு சென்ற பொழுது கட்சி உறுப்பினரின் நடவடிக்கைக்கு மக்கள் கடும் கண்டனத்தை தெரிவித்ததுடன் கொலையாளிக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றும் கோசங்களை எழுப்பினார்கள். 
 
சிறுமி லக்சினி பாலியல் வல்லுறவு கொள்ளப்பட்ட பின்னர் தலையை குத்தி சிதைத்து கொல்லப்பட்டார் என்று வைத்திய பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டள்ளது. சிறுமி லக்சினி படுகொலைச் சந்தேக நபர் நெடுந்தீவில் இடம்பெற்ற பல்வேறு பாலியல் குற்றங்களுடன் தொடர்புடையவர் என்றும் யாழப்;பாணத்தில் இடம்பெற்ற பல படுகொலைகளுடன் தொடர்புடையவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. கடந்த பல வருடங்களாக தமது கோட்டையாக நெடுந்தீவை ஈபிடிபி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஈபிடியின் கட்டுப்பாட்டில் நெடுந்தீவில் பல்வேறு படுகொலைச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அத்துடன் சொந்த அரசியல் ஆதாயங்களுக்காக மக்களை மிரட்டி தமது ஆதிக்கத்தின் கீழ் பல ஆண்டுகள் நெடுந்தீவை வைத்துள்ளனர். இந்நிலையில் லக்சினியை கொலை செய்த நிகழ்வு ஈபிடிபியை தமது கோட்டையான நெடுந்தீவிலிருந்து முற்றாக வெளியேற்றுச் செய்யும் நிலைக்கு தள்ளியள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Edited by nunavilan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.