Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலட்சியத்தின் பாதையில்.... தொடர்கதை

Featured Replies

 நீங்கள் கதையை நகர்த்தும் விதம் மிக அழகு! தொடருங்கள் பூங்கோதை!

நன்றாக எழுதுகிறீர்கள். :) கதை சோகமாக செல்கிறது. ஆனால் தலைப்புக்கேற்றபடி இலட்சியம் நோக்கி வீரத்துடன் பயணமாகிறது... என்ன நடக்கப்போகிறது என்று அறிய ஆவலாக உள்ளேன். :rolleyes:  தொடருங்கள். :)

 

 
இந்த வேளையில் தான் நிதனுக்கு பணி மாற்றம் கொடுக்கப்பட்டது...  அதே ஊரில் தான் இருந்தாலும் சற்று கடினமான பணி வழங்கப்பட்டதால் அவனால் மகிழ்மதியைக் காணமுடியவில்லை.. ஆனாலும் இருவருமே ஒரே இலட்சியப் போக்குடையவர்களாக இருந்த படியால் அவர்களது பணிகளை சீராகவே செய்துகொண்டிருந்தனர். மகிழ்நிலாவுக்கு சில நாட்களாக அவனைப் பார்க்க வேண்டும் போல உள்மனம் தவித்துக் கொண்டிருந்தது..அவன் இருக்கும் முகாமுக்கு போகமுடியாது. அது இரகசிய வேலைத்திட்டங்கள் நடக்கும் இடம் என்பதால் யாரும் அங்கு போக அனுமதிக்கப்படமாட்டார்கள். நிதனின் தற்போதைய பணியைப் பற்றி அதிகம் நிதன் பகிர்ந்து கொள்ளமாட்டான். என்ன தான் காதலியாக இருந்தாலும் அவன் ஒரு விசுவாசமுள்ள போராளியாக இரகசியம் காத்தலை அவளிடம் கூடக் கடைப்பிடித்தான்.

-----

-----

----

நிதன் நேற்று வேவுக்காக சென்றபோது எதிரியின் தாக்குதலுக்குள்ளாகி வீரசாவடைந்திருந்தான். அவனது பருவக் கனவான காதல் தன்னை இலட்சியத்துக்குள் புதைத்துக்கொள்ள, இப்பொழுது அந்த இலட்சியம் மேஜர் நிதனாக சிரித்துக்கொண்டிருந்தது.
“அடக் கடவுளே...” என ஏங்கிய தமிழ்மதிக்கு இதயமே நிற்பதுபோல் அதிர்ச்சி..... பாவம்... தமிழ்.. இதை எப்படித் தாங்குவாள்... அவளது வண்ணக் கனவுகள் எல்லாம் ஒரே நாளில் இப்படிச் சிதைந்ததே... எனத் தன் தோழியை எண்ணிக் கண்ணீர் விடத் தொடங்கினாள் தமிழ்மதி. அதற்கிடையில் தண்ணீர் கொண்டு வரப்பட்டதும் மகிழ்மதியின் முகத்தில் தெளித்துத் துடைத்து விட்டாள். மகிழ்மதி சுய உணர்வுக்கு வந்ததவுடன் தேம்பித் தேம்பி அழுதாள் மகிழ்மதி... எப்போதும் மற்றவர்களுக்கு முன் அழுவதை அசிங்கமாக எண்ணுபவள், இப்பொழுது இதயமே வெடித்துச் சிதறியது போல் சில நிமிடம் கதறினாள்..
 

தொடர் 4 இல் மேற்குறிப்பிட்ட இடங்களில் முறையே மகிழ்மதி, மகிழ் என வர வேண்டும். :)

 

  • தொடங்கியவர்
இலட்சியத்தின் பாதையில் தொடர் 5
 
எதிர்பாராத நிதனின் வீரச்சாவு மகிழ்மதியை எந்தளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியதோ அந்தளவுக்கு அவளுடைய இலட்சியத்தில் இன்னும் உறுதியையும் ஏற்படுத்தியது.நிதனின் ஆசைப்படி போராட்டத்தில் நிறைய சாதிக்க வேண்டுமென்பது ஒரு வெறியாகவே ஏற்பட்டது. காதலியின் உள்ளத்துள் இலட்சிய விதையாகி விழுந்து வேரூன்றிய அவனது காதல், இப்பொழுது முளைவிட்டுக் கிளை பரப்பத் தொடங்கியது...
 
சில கடற்தாக்குதல்களுக்கு முழுமூச்சாக உழைத்து அதில் வெற்றி கண்டதால் தமிழீழத்தேசியத்தலைவரின் கையால் ஒரு மோட்டார்சைக்கிளைப் பரிசாகப் பெற்றுக் கொண்டாள் மகிழ்மதி. அவளது வேகத்தையும் உறுதியையும் கண்டு பொறுப்பாளர்கள் வியந்து நின்றனர். ஆனால் அது நிதன் விதைத்துச் சென்ற விதை என்பதை அவளது உள்ளம் மட்டுமே அறியும். தமிழ்மதி அவளைப் புரிந்துகொண்ட ஒரு தோழியாக எப்போதும் கூட நின்றாள். அவளது வெற்றியைக் கண்டு முதலில் பெருமிதப்பட்டவள் தமிழ்மதி தான்.
 
அத்தகைய நாட்களில் தான் ஒருநாள், ரோந்துக் கப்பல் ஒன்றை வழிமறித்து தாக்குவதற்கான ஆயத்தங்கள் எல்லாம் முடிந்தநிலையில் ஒவ்வொரு போராளியும் உள்ளத்தில் இதை எப்படியாவது வெற்றிகரமாக முடித்துவிட வேண்டுமென்ற படபடப்போடு காத்துக் கொண்டிருந்தனர். மகிழ்மதியும் தமிழ்மதியும் பிராதான கட்டளை நிலையத்தில் ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருந்தனர். சிறப்புத்தளபதியின் கட்டளைகளுக்கேற்ப தாமும் தகவல்களை வழங்கிகொண்டிருந்தனர்... சண்டை ஆரம்பமாகிவிட்டிருந்தது...
 
ரோந்துக்கப்பல் வழிமறிக்கப்பட்டதும் காங்கேசந்துறைத்தளத்திலிருந்து டோராப் படகுகளும் புற்றிலிருந்து புறப்படும் ஈசல்கள் போல வந்து சேர, கடுமையான சண்டை நடந்து கொண்டிருந்தது.. போராளிகளின் சளைக்காத அடிக்கு ஈடு கொடுக்க முடியாமல் டோராப்படகுகள் திணற அந்தக் கணத்தில் கரும்புலியின் அதிவேகத் தாக்குதலால் ரோந்துக்கப்பல் பற்றி எரிந்தது... சில உயிர்த்தியாகங்கள் அந்த வெற்றியை ஈட்டிக் கொடுத்தது. தமிழ்மதி மகிழ்மதியின் துல்லியமான தகவல் பரிமாற்றங்களும் அந்த வெற்றிக்கு ஒரு காரணமானது... இப்பொழுது வெற்றிச்செய்தியை தொலைத்தொடர்பு சாதனங்கள் பரிமாறிக்கொண்டிருந்தன... தமிழ்மதி துள்ளிக்குதித்துக் கொண்டிருந்தாள்..மகிழ்மதியோ.. நிதன்.. இந்த வெற்றிக்கு நீங்களும் கூட ஒரு காரணம் தான்... என்னால் இந்தளவுக்கு செயற்படமுடியுது என்டால் நீங்கள் தந்திட்டு போன இலட்சிய வெறி தான்..என்று தன் மனதுக்குள் அவனை பூசித்துக் கொண்டாள்.
 
”சே... இந்த ‘பற்றி’ இப்பிடிக் கழுத்தறுக்குது... நில்லு தமிழ்... நான் ஓடிப்போய் ஜெனரேட்டரைப் ஸ்ராட் பண்ணிட்டு வாறன்” 
 
என்று கூறிக்கொண்டே மகிழ்மதி ஜெனரேட்டர் கொட்டிலை நெருங்கிய அதே நேரம் ....
 
தம் தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாத இலங்கைக் கடற்படையினர் கரையோரப் பகுதிகளை நோக்கி பலாலியிலிருந்து சரமாரியாக எறிகணைகளை வீசத்தொடங்கினர்..அப்படி வந்து விழுந்த முதலாவது எறிகணையின் சிதறல்களில் ஒன்று மகிழ்மதியின் பிடரிப்பகுதியைப் பதம் பார்க்க அப்படியே சரிந்தாள்..
 
தன் உயிர்த்தோழி தன் கண்களுக்கு முன்னாலேயே மடிந்து வீழ்ந்த அந்தக் காட்சியைக் காலம் பூராவும் மறக்க முடியாதவளானால் தமிழ் மதி.. கிட்ட்த்தட்ட அவளுக்குப் பைத்தியமே பிடித்தது போலானது.
 
இதன் பின்னர்.. கால மாற்றங்கள் முள்ளிவாய்க்கால் சரித்திரத்தை எட்டிவிட... தமிழ்மதி எப்படியோ அந்த கிராதகரின் கையில் அகப்படாமல் தன் உறவினரோடு கொழும்புக்கு வந்து சில மாதங்களுக்குள்ளாகவே தன் இயற்பெயரான மாதுரி என்ற பெயருடன்...  வெளிநாட்டு முகவர் ஒருவரின் உதவியுடன் வெளிநாடு வந்து விட்டாள் தமிழ்மதி.
 
புலம் பெயர்ந்து போனாலும் அந்த தாயகத்தாகமும் இலட்சியங்களும் தன் உயிர்த்தோழியின் நினைவுகளும் கூடவே அவள் மனதில் இன்னும் பசுமையாக. வாழ்ந்து கொண்டிருந்தன. இந்த நிலையில தான் அவள் தன் உயிர்த் தோழியை மாவீர்ர் தின மண்டபத்தில் படமாகக் கண்ட்தும் உள்ளே அமிழ்ந்து போயிருந்த வேதனைச்சிதறல்கள் இதயத்தைப் பிய்த்துக் கொண்டு வெளியேறின.
 
மாதுரியின் கதையைக் கேட்டுக் கொண்டே அவளை அழைத்து வந்து சமையலறையில் இருத்தி விட்டு  தன் சமையலையும் முடித்திருந்த வதனியின் கண்கள் கண்ணீரால் நிறைந்திருந்தன.
 
“நான் சின்ன வயதிலேயே லண்டனுக்கு வந்திட்டன் மாதுரி... போராட்டத்தைப் பற்றியும் அவங்கட தியாகங்களைப் பற்றியும் நான் எப்பவுமே அறிஞ்சிருக்கிறன்.. தங்கட சுக துக்கங்களையெல்லாம் இந்த இளம் வயதில தியாகம் செய்யுறாங்களே எண்டு எனக்கு பெரிய மதிப்பு அவங்களிட்ட இருந்தது.. ஆனால் இண்டைக்கு தான் ... தங்கட காதலைத் தியாகம் செய்து போராடின கதையை நேரடியாக் கேட்டிருக்கிறன்... எனக்கு அந்த போராளிகளில இருந்த மதிப்பு இன்னும் உயர்ந்திருக்கு மாதுரி...” உணர்ச்சி பொங்க கூறினாள் வதனி.
 
மாதுரியின் கண்கள் இப்போதும் சுவரை இலக்கின்றி வெறித்துக் கொண்டிருந்தன... தன் தோழியினதும், அவளைப்போல ஆயிரமாயிரம் வேங்கைளினதும் கனவுகள் நனவாகுவது எப்போது... அதற்கு நான் என்ன செய்யலாம் என சிந்திக்கத் தொடங்கியிருந்தாள்...அவளுக்குள் நீறு பூத்திருந்த அந்த இலட்சிய நெருப்பு மீண்டும் பற்றிக் கொள்ளத் தொடங்கியது.. இனி அது தணியாது..
 
முற்றும்
 
 
 
 

 

Edited by poongothai

தொடரும் என்று நினைத்திருந்தேன். முற்றும் என்று கூறி முடித்து விட்டீர்கள். :rolleyes: மிகவும் நன்றாக எழுதியுள்ளீர்கள். :)  இது உண்மை சம்பவமா? :unsure:

 

மாதுரியின் கண்கள் இப்போதும் சுவரை இலக்கின்றி வெறித்துக் கொண்டிருந்தன... தன் தோழியினதும், அவளைப்போல ஆயிரமாயிரம் வேங்கைளினதும் கனவுகள் நனவாகுவது எப்போது... அதற்கு நான் என்ன செய்யலாம் என சிந்திக்கத் தொடங்கியிருந்தாள்...அவளுக்குள் நீறு பூத்திருந்த அந்த இலட்சிய நெருப்பு மீண்டும் பற்றிக் கொள்ளத் தொடங்கியது.. இனி அது தணியாது..
 


இன்று பலரின் சிந்தனையும் மாவீரர்களின் கனவு நனவாக நாம் என்ன செய்யலாம் என்பதே. :rolleyes:

 

தொடர்ந்து வேறு கதைகளும் எழுதுங்கள். :)


 

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

கதையைப் பகிர்ந்தமைக்கு நன்றிகள், பூங்கோதை!

 

பூசிக்கப் பட வேண்டிய மலர்கள், இன்னும் எமக்கிடையே வாழ்ந்து கொண்டுதானிருக்கின்றன!

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கதை மிக அருமை கோதை. மிகக் கைதேர்ந்த எழுத்துக்களாக உள்ளன. உங்கள்
எழுத்துக்கள். கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடுமன்றோ. :D

  • தொடங்கியவர்

தொடரும் என்று நினைத்திருந்தேன். முற்றும் என்று கூறி முடித்து விட்டீர்கள். :rolleyes: மிகவும் நன்றாக எழுதியுள்ளீர்கள். :)  இது உண்மை சம்பவமா? :unsure:

 

இன்று பலரின் சிந்தனையும் மாவீரர்களின் கனவு நனவாக நாம் என்ன செய்யலாம் என்பதே. :rolleyes:

 

தொடர்ந்து வேறு கதைகளும் எழுதுங்கள். :)

 

 

நன்றி சகோதரி.. இறுதிவரை வாசித்து ஆக்கபூர்வமான பின்னூட்டங்களை வழங்கி ஊக்குவித்தீர்கள்.. 

இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட கதை தான்.. ஆனால் பெயர்களும், சந்தர்ப்பங்களும் கதைக்கேற்ப மாற்றப்பட்டுள்ளது.. 

 

ம்ம்.. நிச்சயமாக உங்கள் பலத்துடன் தொடர்கிறேன்..

Edited by poongothai

  • தொடங்கியவர்

கதையைப் பகிர்ந்தமைக்கு நன்றிகள், பூங்கோதை!

 

பூசிக்கப் பட வேண்டிய மலர்கள், இன்னும் எமக்கிடையே வாழ்ந்து கொண்டுதானிருக்கின்றன!

 

பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி சகோ.

ம்ம்.. இவர்கள் இறவாமை உடையவர்கள்... எம் உணர்வுகளோடு கலந்தவர்கள்..

உங்கள் கதை மிக அருமை கோதை. மிகக் கைதேர்ந்த எழுத்துக்களாக உள்ளன. உங்கள்

எழுத்துக்கள். கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடுமன்றோ. :D

 

பாராட்டுக்கு நன்றி சகோதரி... 

கட்டுத்தறி தான்... ஆனால் இங்க கவிதை பாடல... தொடர்கதை படிச்சிட்டு இருக்கு...  :icon_idea:

Edited by poongothai

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.