Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதி இன்று இந்தியாவிற்கு விஜயம்! புதுடெல்லிக்கு செல்லமாட்டார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஜனாதிபதி மஹிந்த இந்தியா விஜயம்
வெள்ளிக்கிழமை, 08 பெப்ரவரி 2013 08:56    
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
தமிழகத்தில் தமிழ் உணர்வாளர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் சிறீலங்கா அதிபர் மஹிந்த ராஜபக்ச இந்தியாவுக்கு பயணம்
பிப் 8, 2013
     
தமிழகத்தில் தமிழ் உணர்வாளர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் சிறீலங்கா அதிபர் மஹிந்த ராஜபக்ச இரண்டுநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று வெள்ளிக்கிழமை காலை இந்தியாவுக்கு பயணமானார்....
 
இன்று (08-02-2013) இவர் புத்தகாயாவில் வழிபடுவதுடன் திருப்பதி சென்று ஏழுமலையானையும் தரிசிக்கவுள்ளார். ஜனாதிபதி நாளை சனிக்கிழமை மீண்டும் இலங்கை திரும்புவார் என்று அதிபரின் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்தார்.
 
இதேவேளை, டில்லிக்கு விஜயம் செய்வதோ அல்லது இந்திய அரச தலைவர்களை சந்திப்பதோ இதுவரையில் உநுதிப்படுத்தப்படவில்லை. அவ்வாறான சந்திப்புகளுக்கு வாய்ப்புக்கள் குறைவு என்றும் அவர் கூறினார்.
 
இதேவேளை, மஹிந்த ராஜபக்சவின் இந்திய வருகையைக் கண்டித்து ஓசூரில் தமிழ் தேசிய பொதுவுடமைக் கட்சியினர் மற்றும் பெரியார் திராவிடர் கழகத்தினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முற்பட்ட வேளை  காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது. 
 
பெங்களூரில் இருந்து கோவை செல்லும் ரயிலை அவர்கள் மறிக்க முயன்றபோது காவல்துறையினர் அவர்களைத் தடுத்தனர். 
 
அப்போது காவல்துறையினரை ஆர்ப்பாட்டக்காரர்கள் திருப்பித் தாக்கினர். இதனால் அவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே திள்ளுமுள்ளு கைகலப்பு ஏற்பட்டது. 
 
இந்த நிகழ்வால் அங்கே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 80 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.http://www.sankathi24.com/news/26715/64//d,fullart.aspx
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
இந்தியாவில் அரசியல் பேசமாட்டாராம் இலங்கை ஜனாதிபதி?
 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இரண்டு நாள் பயணமாக இந்தியா சென்றுள்ள போதிலும், அவர் புதுடில்லிக்குப் பயணம் மேற்கொள்ளவோ, இந்திய அரசியல் தலைவர்களை சந்திக்கவோ மாட்டார் என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
தனிப்பட்ட ரீதியில் அவரது பயணம் அமைவதால் அரசியல் விவகாரங்கள் குறித்து முக்கிய சந்திப்புக்கள் எவையும் இடம்பெறுவதற்கு சாத்தியமில்லை எனவும் அந்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
 
இரண்டாவது தடவையாக இன்று புத்தகயாவுக்கு செல்லும் அவர், திருப்பதிக்கும் பயணம் மேற்கொள்கிறார். 
 
கொழும்பில் இருந்து தனி விமானத்தில் பீகார் சென்றுள்ள அவர் புத்தகயாவில் வழிபாடுகளை நடத்துவார். 
 
இதன் பின்னர், பீகாரில் மாநில முதல்வர் நித்தீஸ்குமாரை, ஜனாதிபதி சந்திப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 
 
அத்துடன் புத்தகயாவில் கலாசார நிலையம் ஒன்றையும் அவர் திறந்து வைக்கவுள்ளார். 
 
திருப்பதியில் வழிபாடுகளை முடித்துக் கொண்டு ராஜபக்ச கொழும்பு திரும்புவார் என்றும், இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்சேவின் வருகையையொட்டி, திருப்பதியில் 144 தடை உத்தரவு

இலங்கை அதிபர் ராஜபக்சேவின் வருகையையொட்டி, திருப்பதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அதிபர் ராஜபக்சே, திருப்பதி திருமலை கோயிலுக்கு இன்று மாலை வரவுள்ளார். இன்றிரவு திருமலையில் தங்கும் ராஜபக்சே, நாளை காலை சுப்ரபாத சேவையில் கலந்து கொள்கிறார்.

பின்னர், நாளை காலை 9.30 மணியளவில் திருப்பதியிலிருந்து கிளம்புகிறார். ராஜபக்சேவின் வருகைக்கு தமிழ் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதையடுத்து திருப்பதி வரும் அவருக்கு கடுமையான பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது. இதற்காக திருப்பதி (ரேணிகுண்டா) விமான நிலையம், திருப்பதி மற்றும் திருமலையில் இன்று மாலை முதல் ராஜபக்சே திரும்பிச் செல்லும் வரையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் திருமலை முழுவதும் போலீசாரின் முழு கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.

நன்றி நக்கீரன்.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜனாதிபதி இன்று இந்தியாவிற்கு விஜயம்! புதுடெல்லிக்கு செல்லமாட்டார்

[ வெள்ளிக்கிழமை, 08 பெப்ரவரி 2013, 02:14.39 AM GMT ]

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று இந்தியாவிற்கு விஜயத்தை ஆரம்பித்துள்ளார்.ஜனாதிபதி சற்று முன்னர் கட்டுநாயக்க பண்டரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்தியாவை நோக்கிப் புறப்பட்டுச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளார்.

எதிர்வரும் 9ம், 10ம் திகதிகளில் ஜனாதிபதி இந்தியாவின் பீஹார் மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு விஜயம் செய்வார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மஹாபோதி விஹாரையில் கலாசார மண்டபம் ஒன்றை அமைப்பதற்கு பணிகளை ஜனாதிபதி ஆரம்பித்து வைக்க உள்ளார்.

பிஹார் மாநில முதலமைச்சர் நிமிஷ் குமாரை சந்தித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

மஹிந்த ராஜபக்ச இந்தியா பயணமானார்! புதுடில்லிக்கு செல்லமாட்டார்

இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று காலை இந்தியாவுக்கு புறப்பட்டு சென்றுள்ளார். பீஹாரில் உள்ள புத்தகாயா மற்றும் ஆந்திர பிரதேஸில் உள்ள திருப்பதி ஆகிய தலங்களுக்கு செல்லும் நோக்கில், அவர் இந்த பயணத்தை மேற்கொள்கிறார்.

எனினும் அவர் புதுடில்லிக்கு சென்று அரசியல் தலைவர்களை அவர் சந்திக்கமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பீஹாரில் மஹிந்த ராஜபக்ச, அந்த மாநில முதல்வர் நித்திஸ்குமாரை சந்திக்கவுள்ளார்.

இதனையடுத்து சனிக்கிழமை இலங்கைக்கு திரும்பும் வழியிலேயே அவர் திருப்பதிக்கு செல்லவுள்ளார்.

tamilwin.com

Edited by பிரியா

  • கருத்துக்கள உறவுகள்

பிரியாவின் முதலாவது செய்தி இணைப்பிற்கு நன்றி. தொடர்ந்து இணையுங்கள்.
இவ்வளவு நீள..........மான தலையங்கத்தை, இன்று தான் பார்க்கிறேன். :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரியாவின் முதலாவது செய்தி இணைப்பிற்கு நன்றி. தொடர்ந்து இணையுங்கள்.

இவ்வளவு நீள..........மான தலையங்கத்தை, இன்று தான் பார்க்கிறேன். :D

 

நன்றி அண்ணா... :rolleyes:

 

திருத்தம் பண்ணிட்டேன் .. :)  பண்ணிட்டேன்

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள் ப்ரியா ஆனாலும் யாழில் தமிழ் வின் இணையம் தடை செய்யப்பட்ட ஓன்று :(

ஹிட்லர், முசோலினியை விட மோசமான மகிந்த ராஜபக்ச என்னும் ஒரு இனப்படுகொலையாளிக்கு, ஒரு பயங்கரவாதிக்கு, ஒரு போர்க் குற்றவாளிக்கு முழுமையான பாதுகாப்பு கொடுக்கும் ஒரு நாடு உலகிலேயே மிக மோசமான ஒரு காட்டுமிராண்டி நாடாகவே இருக்கும்!

அதுபோல் வரலாற்றில் மிக மோசமான ஒரு சிங்கள பௌத்த பயங்கரவாதிக்கு சிறப்பு வழிபாடு ஏற்பாடுகளை செய்து கொடுப்பதன் மூலம் திருப்பதி தேவஸ்தான பொறுப்பாளர்களும் மனிதாபிமானம் அற்ற காட்டுமிராண்டிகளாகவே கருதப்பட வேண்டும்!

தமிழர்கள் இனிமேல் திருப்பதியை முழுமையாக பகிஸ்கரிக்க வேண்டும்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு- தமிழகம் முழுவதும் போராட்டங்கள்!
Posted by: Mathi Updated: Friday, February 8, 2013, 11:53 [iST]
 
சென்னை: இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்றன.
பல லட்சம் ஈழத் தமிழர்களைப் படுகொலை செய்த இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவை இந்தியாவுக்குள் அனுமதிக்கக் கூடாது என்பது தமிழக கட்சிகளின் கோரிக்கை. ஆனால் இந்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து தொடர்ந்தும் ராஜபக்சேவை அனுமதித்து வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல்வேறு கட்சிகளின் சார்பாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
சென்னையில் சட்டசபை வாயிலில் போராட்டம்
சென்னையில் இன்று காலை சட்டசபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் புதிய தமிழகம் எம்.எல்.ஏக்கள் அவை வாயிலில் நின்றபடி ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை இலங்கை தூதரகம் முற்றுகை
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை மக்கள் விடுதலைக் கட்சியினர் 50 பேர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தின் போது ராஜபக்சேவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கச்சத்தீவை மீட்கக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதேபோல் சென்னை கொருக்குப்பேட்டையில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
ஓசூரில் ரயில் மறியல்
ராஜபக்சேவின் வருகையைக் கண்டித்து ஓசூரில் தமிழ் தேசிய பொதுவுடமைக் கட்சியினர் மற்றும் பெரியார் திராவிடர் கழகத்தினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். பெங்களூரில் இருந்து கோவை சென்ற ரயிலை அவர்கள் மறிக்க முயன்றபோது போலீஸார் அவர்களைத் தடுத்தனர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டோர் போலீசாரைத் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போராட்டம் நடத்திய 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். கடலூரிலும் ரயில் மறியல் போராட்டத்தை தமிழ்த் தேசிய அமைப்புகள் இன்று நடத்தின.
வழக்கறிஞர்கள் பணி புறக்கணிப்பு
ராஜபக்சே வருகைக்கு கண்டனம் தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களைப் புறக்கணித்தனர். மேலும் நீதிமன்றங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
கோவையில் கொடும்பாவி எரிப்பு
கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் இன்று 3-வது நாளாக ராஜபக்சேவின் வருகைக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இன்றும் ராஜபக்சேவின் கொடும்பாவி எரிக்கப்பட்டன.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முயற்சிக்கு பாராட்டுகள் ப்ரியா.

http://www.yarl.com/forum3/index.php?app=forums&module=forums&section=rules&f=40



http://www.yarl.com/forum3/index.php?showtopic=69819

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள் ப்ரியா ஆனாலும் யாழில் தமிழ் வின் இணையம் தடை செய்யப்பட்ட ஓன்று :(

 

அப்படியா??????? எனக்கு தெரியாது...  :unsure:

 

தகவலுக்கு மிக்க நன்றி.. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பிரதமர் வீட்டை முற்றுகையிட முயன்ற வைகோ உள்ளிட்ட 1000 மதிமுகவினர் கைது
Posted by: Mayura Akilan Updated: Friday, February 8, 2013, 12:08 [iST]
 
டெல்லி: ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் வீட்டினை முற்றுகையிட முயன்ற வைகோ உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மதிமுக வினரை போலீசார் கைது செய்தனர்.
இலங்கை அதிபர் ராஜபக்சே இன்று பீகாரில் புத்தகயாவிற்கும், திருப்பதிக்கும் வழிபாடு செய்வதற்காக வருகை தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வைகோ தலைமையில் ஆயிரக்கணக்கான மதிமுகவினர் பிரதமர் வீட்டினை முற்றுகையிட டெல்லி சென்றனர். இன்று காலை ஜந்தர் மந்தரில் இருந்து பிரதமர் வீட்டை நோக்கி பேரணி சென்ற போது நாடாளுமன்ற சாலையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது செய்தியாளர்களிடையே வைகோ பேசியதாவது:
இங்கே தலைநகர் டெல்லியில் எதற்காக இந்தப் போராட்டம் எனில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பணம் கொடுத்து இந்திய அரசு போருக்கு உதவியாக இருந்தது. ஆஸ்பத்திரிகளின் மீது குண்டு வீசினார்கள். லட்சக்கணக்கானோரை கொன்று குவித்தார்கள். ஆனால் அதற்கு இந்தியாவை ஆளும் காங்கிரஸ் அரசு உதவி செய்தது.
டெல்லியில் ஒரு இளம் பெண் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டது எங்கள் நெஞ்சினை பதைப் பதைக்கிறது. எங்கள் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.
ஆனால் பல்லாயிரக்கணக்கான பெண்கள் ஈழத்தில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டனர். இந்திய அரசு, மன்மோகன் சிங், சோனியா ஆகியோர் இந்த படுபாதகத்திற்கு உதவி செய்கிறது. இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டுகிறது. ஐக்கியஜனநாயக கூட்டணி அரசு இதற்கு பதில் சொல்ல வேண்டும்.
 
புத்தர் ஆலயத்திற்கு எப்படி வரலாம்?
மனித உரிமைக்குற்றம் என்றும் பல நாடுகள் இலங்கைக்கு எதிராக கிளம்பியுள்ளன. ஆனால் இந்தியா ஆதரவு தருகிறது. இதற்காகவே நாங்கள் போராட்டத்தை தொடங்குகிறோம். ராஜபக்சே புத்தகயாவிற்கு வருகிறார். அமைதியை போதித்த புத்தரின் ஆலயத்திற்கு படுகொலைகளை செய்த ராஜபக்சே வருகிறான்.
திருப்பதிக்கு வருவது நியாயமா?
திருப்பதியிலும் சாமி கும்பிடப் போகிறான். இலங்கையில் ஆயிரக்கணக்கான இந்துக்கோவில்களை இடித்துவிட்டு திருப்பதிக்கு சாமி கும்பிட வருவது எந்த விதத்தில் நியாயம். யாழ்பாணப் பல்கலைக்கழக மாணவர்களை சிறைப்பிடித்திருக்கின்றனர். ஆனால் இந்திய அரசு ராஜபக்சேவுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறது.
இலங்கைக்கு உதவி செய்வதை நிறுத்திக்கொள்ளவேண்டும். ராஜபக்சே இந்தியாவிற்கு வருவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. இதன் காரணமாக பிரதமர் வீட்டை முற்றுகையிடுகிறோம்.
 
உயிர்தியாகத்திற்கு அர்த்தம் வேண்டாமா?
முத்துக்குமார் தொடங்கி பலர் ஈழத்தமிழர்களுக்காக இன்னுயிரை மாய்த்திருக்கின்றனர். முத்துக்குமார் உள்ளிட்டவர்களின் தியாகத்திற்கு ஒரு அர்த்தம் வேண்டாமா? இந்தியாவிற்கும் ராஜபக்சேவை நுழைய விடக்கூடாது என்பதற்காகவே எங்களின் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளோம்.
இந்தியாவில் எண்ணற்ற அரசியல் கட்சிகள் உள்ளனர். அவர்கள் இந்த கொலைகாரனுக்கு ஆதரவு தருகிறீர்களா? இது சட்டமா, நியாயமா, நாங்கள் கண்டிப்பாக எதிர்ப்போம். அவனை சர்வதேச நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தும் வரை நாங்கள் ஓயப்போவதில்லை
நாதியற்றவர்களா தமிழர்கள் ?
 
முத்துகுமார் உள்ளிட்ட எண்ணற்ற தியாகிகளின் உயிர் தியாகத்திற்கு என்ன செய்யப்போகிறோம். தமிழர்கள் நாதியற்று கிடக்கிறர்களா?
இதுபோல வேறுமாநில மக்களுக்கு நடந்திருந்தால் அனுமதிப்பார்களா? பஞ்சாபிகளை கொன்றுவிட்டு சீக்கியர்கள் பொற்கோவிலுக்குள் ராஜபக்சே நுழைய முடியுமா?
எங்களின் வெந்த புண்ணிலே வேல் பாய்ச்சுகிறது இந்திய அரசு புத்தகயாவிற்கும், திருப்பதிக்கும் ஏன் அழைத்து வருகிறாய் ராஜபக்சேவை. அதற்கு இப்போது என்ன அவசியம்? அவசரம்?
நாங்கள் இங்கே எங்கள் கோபத்தை வெளிப்படுத்தவே வந்திருக்கிறோம். அதற்காகவே பிரதமர் வீட்டினை முற்றுகையிடுகிறோம். இந்த போராட்டம் உலகம் முழுவதும் எதிரொலிக்க வேண்டும் என்றார் வைகோ.
 
உருவபொம்மை எரிப்பு, கைது
இதனைத் தொடர்ந்து ராஜபக்சேவின் உருவ பொம்மைக்கு வைகோ நெருப்பு வைத்தார். பின்னர் மன்னிக்க மாட்டோம், மன்னிக்கமாட்டோம் ராஜபக்சேவை மன்னிக்க மாட்டோம் என்பது போன்ற பல முழக்கங்களை எழுப்பினர். இதனையடுத்து பிரதமர் வீட்டை முற்றுகையிட கிளம்பிய வைகோ, மல்லை சத்யா, நாடாளுமன்ற உறுப்பினர் கணேச மூர்த்தி, இணைய தள ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகமது அலி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மதிமுக வினரை போலீசார் கைது செய்தனர்.
 
   [ கருத்தை எழுதுங்கள் ]   [ நண்பருக்கு அனுப்ப ]
 
 
Strongly Agree
5
Agree
0
Don't Care
0
Disagree
0
Strongly Disagree
0
Topics: vaiko, rajapakse, delhi, ராஜபக்சே, இந்தியா, வைகோ, மதிமுக
Story first published:  Friday, February 8, 2013, 11:59 [iST]
English summary
Vaiko led a protest in Delhi today in protest against Rajapakse's India visit.
Related Articles
 
பிரதமர் வீட்டை முற்றுகையிட மதிமுகவினர் டெல்லி பயணம்
 
 
நாடாளுமன்றத் தேர்தலில் மதிமுக நிச்சயமாக போட்டி: வைகோ (கூட்டணி யார் கூட சார்!)
 
 
‘முன்னேறிச் செல்’: வைகோவின் அடுத்த பிரச்சார பயணம்.. மதிமுக பொதுக்குழுவில் முடிவு
 
 
ராஜபக்சேவின் இந்திய வருகையைக் கண்டித்து, பிப்.8ல் பிரதமர் வீடு முற்றுகை!: வைகோ
 
February 8, 2013 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முயற்சிக்கு பாராட்டுகள் ப்ரியா.

http://www.yarl.com/forum3/index.php?app=forums&module=forums&section=rules&f=40

http://www.yarl.com/forum3/index.php?showtopic=69819

 

 

ஆரம்பமே இப்படியா???????????? :unsure:

 

எனக்கு தேவையான தகவலை உடனடியாக பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி கறுப்பி... :mellow:

08-vaioko-protest3-600.jpg

  • கருத்துக்கள உறவுகள்

செய்திகள் இணைப்பு என்பது யாழ் கள வளர்ச்சிக்கு மிகவும் அத்தியாவசியமானது ப்ரியா அந்த வகையில் ஆரம்பமே இப்பிடி என்று மனம் சலிக்காமல் தொடரட்டும் உங்கள் சேவை

  • கருத்துக்கள உறவுகள்

ஒரேபார்வையில் மகிந்த ராஜபக்ஸவின் இந்திய விஜயத்தின் எதிரொலிகள் ..

vaioko-protest_CI.jpg

ராஜபக்ஸவின் இந்திய விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் வீட்டினை முற்றுகையிட முயன்ற வைகோ உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மதிமுக வினரை போலீசார் கைது செய்தனர்.

இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஸ இன்று பீகாரில் புத்தகயாவிற்கும், திருப்பதிக்கும் வழிபாடு செய்வதற்காக செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வைகோ தலைமையில் ஆயிரக்கணக்கான மதிமுகவினர் பிரதமர் வீட்டினை முற்றுகையிட டெல்லி சென்றனர்.

இன்று காலை ஜந்தர் மந்தரில் இருந்து பிரதமர் வீட்டை நோக்கி பேரணி சென்ற போது நாடாளுமன்ற சாலையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது செய்தியாளர்களிடையே வைகோ பேசியதாவது:

"இங்கே தலைநகர் டெல்லியில் எதற்காக இந்தப் போராட்டம் எனில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பணம் கொடுத்து இந்திய அரசு போருக்கு உதவியாக இருந்தது. ஆஸ்பத்திரிகளின் மீது குண்டு வீசினார்கள். லட்சக்கணக்கானோரை கொன்று குவித்தார்கள். ஆனால் அதற்கு இந்தியாவை ஆளும் காங்கிரஸ் அரசு உதவி செய்தது. டெல்லியில் ஒரு இளம் பெண் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டது எங்கள் நெஞ்சினை பதைப் பதைக்கிறது. எங்கள் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. ஆனால் பல்லாயிரக்கணக்கான பெண்கள் ஈழத்தில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டனர். இந்திய அரசு, மன்மோகன் சிங், சோனியா ஆகியோர் இந்த படுபாதகத்திற்கு உதவி செய்கிறது. இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டுகிறது. ஐக்கியஜனநாயக கூட்டணி அரசு இதற்கு பதில் சொல்ல வேண்டும்"

புத்தர் ஆலயத்திற்கு எப்படி வரலாம்?

"மனித உரிமைக்குற்றம் என்றும் பல நாடுகள் இலங்கைக்கு எதிராக கிளம்பியுள்ளன. ஆனால் இந்தியா ஆதரவு தருகிறது. இதற்காகவே நாங்கள் போராட்டத்தை தொடங்குகிறோம். ராஜபக்சஸ புத்தகயாவிற்கு வருகிறார். அமைதியை போதித்த புத்தரின் ஆலயத்திற்கு படுகொலைகளை செய்த ராஜபக்சஸ வருகிறான். திருப்பதிக்கு வருவது நியாயமா? திருப்பதியிலும் சாமி கும்பிடப் போகிறான். இலங்கையில் ஆயிரக்கணக்கான இந்துக்கோவில்களை இடித்துவிட்டு திருப்பதிக்கு சாமி கும்பிட வருவது எந்த விதத்தில் நியாயம். யாழ்பாணப் பல்கலைக்கழக மாணவர்களை சிறைப்பிடித்திருக்கின்றனர். ஆனால் இந்திய அரசு ராஜபக்சஸவுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறது. இலங்கைக்கு உதவி செய்வதை நிறுத்திக்கொள்ளவேண்டும். ராஜபக்சஸ இந்தியாவிற்கு வருவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. இதன் காரணமாக பிரதமர் வீட்டை முற்றுகையிடுகிறோம்"

உயிர்தியாகத்திற்கு அர்த்தம் வேண்டாமா?

"முத்துக்குமார் தொடங்கி பலர் ஈழத்தமிழர்களுக்காக இன்னுயிரை மாய்த்திருக்கின்றனர். முத்துக்குமார் உள்ளிட்டவர்களின் தியாகத்திற்கு ஒரு அர்த்தம் வேண்டாமா? இந்தியாவிற்கும் ராஜபக்ஸவை நுழைய விடக்கூடாது என்பதற்காகவே எங்களின் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளோம். இந்தியாவில் எண்ணற்ற அரசியல் கட்சிகள் உள்ளனர். அவர்கள் இந்த கொலைகாரனுக்கு ஆதரவு தருகிறீர்களா? இது சட்டமா, நியாயமா, நாங்கள் கண்டிப்பாக எதிர்ப்போம். அவனை சர்வதேச நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தும் வரை நாங்கள் ஓயப்போவதில்லை நாதியற்றவர்களா தமிழர்கள் ? முத்துகுமார் உள்ளிட்ட எண்ணற்ற தியாகிகளின் உயிர் தியாகத்திற்கு என்ன செய்யப்போகிறோம்.

தமிழர்கள் நாதியற்று கிடக்கிறர்களா? இதுபோல வேறுமாநில மக்களுக்கு நடந்திருந்தால் அனுமதிப்பார்களா?

"பஞ்சாபிகளை கொன்றுவிட்டு சீக்கியர்கள் பொற்கோவிலுக்குள் ராஜபக்சஸ நுழைய முடியுமா? எங்களின் வெந்த புண்ணிலே வேல் பாய்ச்சுகிறது இந்திய அரசு புத்தகயாவிற்கும், திருப்பதிக்கும் ஏன் அழைத்து வருகிறாய் ராஜபக்சேவை. அதற்கு இப்போது என்ன அவசியம்? அவசரம்? நாங்கள் இங்கே எங்கள் கோபத்தை வெளிப்படுத்தவே வந்திருக்கிறோம். அதற்காகவே பிரதமர் வீட்டினை முற்றுகையிடுகிறோம். இந்த போராட்டம் உலகம் முழுவதும் எதிரொலிக்க வேண்டும்" என்றார் வைகோ.

உருவபொம்மை எரிப்பு, கைது

இதனைத் தொடர்ந்து ராஜபக்ஸவின் உருவ பொம்மைக்கு வைகோ நெருப்பு வைத்தார். பின்னர் மன்னிக்க மாட்டோம், மன்னிக்கமாட்டோம் ராஜபக்ஸவை மன்னிக்க மாட்டோம் என்பது போன்ற பல முழக்கங்களை எழுப்பினர். இதனையடுத்து பிரதமர் வீட்டை முற்றுகையிட கிளம்பிய வைகோ, மல்லை சத்யா, நாடாளுமன்ற உறுப்பினர் கணேச மூர்த்தி, இணைய தள ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகமது அலி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மதிமுக வினரை போலீசார் கைது செய்தனர்.

idnthakarai.jpg

 

இடிந்தகரையில் ராஜபக்வின் வருகைக்கு எதிர்ப்பு!
 
கூடங்குளம் அணுஉலைக்கு உதிராக போராடி வரும் இடிந்கரையில் இலங்கை ஜனாதிபதி மகிந்தராஜபக்ஸவின் விஜயத்திற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுப்டடுள்ளனர். இன்று காலை இடிந்தகரைப்பகுதியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் உருவ பொம்மையை எரித்து மக்கள் தமது எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். 
 
ஈவ இரக்கமற்ற முறையில் எம்முடைய இரத்த சொந்தங்களான ஈழத்து மக்களை இனப்படுகொலை செய்து போர்க்குற்றத்தில் ஈடுபட்ட ராஜபக்ஸவை இந்திய மண்ணில் அனுமதிக்காதே என்று இடிந்தகரை மக்கள் குரல் எழுப்பினார்கள். 
 
எதிர்ப்புக்காரணமாக ராஜபக்சவின் டெல்லிப் பயணம் இரத்து 
 
தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ் ஆர்வலர்களின் எதிர்ப்பு காரணமாக, இலங்கை அதிபர் ராஜபக்சேவின் இந்திய பயணத் திட்டத்தில் சற்றே மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பீகார் மாநிலம் புத்தகயாவிற்கும், திருப்பதிக்கும் சென்று வழிபடுவதற்காக இலங்கை அதிபர் ராஜபக்சே இன்று இந்தியா வருகிறார். அவர் டெல்லி சென்று பின்னர் புத்த கயா செல்வதாக இருந்தது. ஆனால் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்க மதிமுகவினர் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். 
 
எனவே தலைநகர் டெல்லி செல்வதை ராஜபக்சே தவிர்த்துள்ளார். அதற்குப் பதிலாக நேரடியாக ஒடிசா மாநிலத்தின் கட்டக்கிற்கு செல்கிறார். அங்கிருந்து தனியார் பிரத்யேக விமானத்தில் பிகாரில் உள்ள புத்த கயா செல்லும் அவர், இன்று மாலை திருப்பதி செல்கிறார். அங்கிருந்து சாலை வழியாக திருமலைக்கு செல்லும் ராஜபக்சே, இரவு மலையிலேயே தங்குகிறார். 
 
நாளை அதிகாலையில் திருப்பதி கோயிலில் சிறப்பு தரிசனம் செய்யும் அவர், காலை ஒன்பது மணிக்கு சிறப்பு விமானம் மூலம் கொழும்பு புறப்பட்டு செல்கிறார். போராட்டத்திற்கு தயார் இதனிடையே ராஜபக்சேவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தலைநகர் டெல்லி, திருப்பதி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த மதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் திட்டமிட்டுள்ளன. டெல்லியில் பிரதமர் இல்லத்தை நோக்கிப் பேரணி செல்ல மதிமுகவினர் திட்டமிட்டுள்ளனர். 
 
இதற்காக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ மற்றும ஏராளமான தமிழ் அமைப்பினர் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். சென்னையில் போராட்டம் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே திமுகவினர் கறுப்புக்கொடி அணிந்து ராஜபக்சேவின் வருகையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர். மேலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் ராஜபக்சேவின் வருகையை கண்டித்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடத்த தயாராகி வருகின்றனர்.

 

ராஜபக்ஸவுக்கு எதிர்ப்பு: சட்டசபைக்கு வெளியே இ.கம்யூ, புதிய தமிழகம் போராட்டம்!

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் இந்திய விஜயத்திற்கு கண்டனம் தெரிவித்து சட்டசபைக்குள் நுழையும் முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் புதிய தமிழகம் எம்.எல்.ஏக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ராஜபக்ஸவின் இந்திய விஜயத்தைக் கண்டித்து இன்று சட்டசபைக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ.க்களும், புதிய தமிழகம் கட்சி எம்.எல்.ஏ.க்களும் கண்டன வாசகங்கள் அடங்கிய கருப்பு பேட்ஜ் அணிந்து சென்றனர். சட்டசபைக்குள் நுழைவதற்கு முன்பாக நுழைவாயிலில் கண்டன முழக்கங்களை எழுப்பினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ குணசேகரன், இலங்கையில் இனப்படு கொலை செய்த அதிபர் ராஜபக்ஸ இந்தியாவில் நுழைய அனுமதிக்கக் கூடாது. அவரை உடனடியாக வெளியேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்க மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/88409/language/ta-IN/article.aspx

 

இலங்கையில் இனப்படுகொலை நடந்த காலக்கட்டத்தில் அதை தடுக்காமல் இருந்துவிட்டு தற்போது ராஜபச்வேவை எதிர்ப்பதாக திமுக தலைவர் கருணாநிதி நாடகம் ஆடுவதாக வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.

 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் இனப்படுகொலை நடந்த காலக்கட்டத்தில் அதை தடுக்காமல் இருந்துவிட்டு தற்போது ராஜபச்வேவை எதிர்ப்பதாக திமுக தலைவர் கருணாநிதி நாடகம் ஆடுவதாக வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.

 

 

உண்மையை தான் சொல்லி இருக்கிறார் வைக்கோ ஜயா... அந்த பச்சைக் கள்ளன் கருணாநிதிக்கு இனியாவது ரொசம் வருமா

சிரமங்களைப் பாராது தமிழக எல்லை தாண்டி வைகோ தலைமையிலான போராட்டங்களில் கலந்துகொண்ட அனைத்து தமிழக உறவுகளுக்கும் நன்றிகள்!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில எத்தினை கட்சி இருக்கு யாரு யாரு தலைவர்கள் என்பதை ராஜபக்ஷா வருபோதுதான் மக்களுக்கு தெரிகிறது.....!

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

கொலையாளிக்கு அரசமரியாதை 

போர்க்குற்றவாளிக்கு அரச பாதுகாப்பு 

இவையெல்லாம் இந்தியாவில் தான் கிடைக்கின்றது.


சேர்ந்து நடத்திய போர்க்குற்றங்களை மறைக்க வேண்டுமென்றால் 

இந்தியா  மகிந்தவிற்குப் பாதுகாப்பு அளித்தே ஆக  வேண்டும்  

இனியும் திருப்பதிக்குப் போய் லட்டு தின்னவாபோறிங்கள்? 

 

இவனை உள்ளே விட்டதன் மூலம் திருப்பதியானையும் போர்க்குற்றவளி ஆக்கியிருக்கிறார்கள்.

இந்தியாவின் கொள்கையானது இதுவரை சிங்கள நாட்டை நட்புறவு நாடாக வைத்திருக்கவேண்டும் என்பதே.

 

அதற்காக தமிழக மற்றும் உலகத்தமிழர்களின் உணர்வுகளையும் மீறி நடந்தது.


இன்று தமிழர்களின் வெறுப்பையும் சிங்களத்தால் அவமானத்தையும் சம்பாதித்து உள்ளது.

 

தொடர்ந்தும் இதேபாதையையே தொடர்வதா இல்லையா என்பது அதன் கைகளில் மட்டுமே உள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.