Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதியின் புதுடில்லி விஜயம் ரத்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

MR60_60(2).jpg

இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு இன்று வெள்ளிக்கிழமை காலை இந்தியாவுக்கு பயணமாகிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர், தங்களது பயண ஒழுங்கை மாற்றிய நிலையில் புதுடில்லிக்குச் செல்லாமல் நேரடியாக புத்தகாயாவுக்கு சென்று அங்குள்ள மகாபோதி விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர் என்று இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. 

மக்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தினரால் புதுடில்லியில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையிலேயே ஜனாதிபதியின் பயண ஒழுங்கில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அச்செய்திகள் குறிப்பிடுகின்றன. 

இந்தியாவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, முதலில் புதுடில்லி சென்று அங்கு இந்திய அரசியல் முக்கியஸ்தர்களைச் சந்தித்த பின்னர், புத்தகாயாவுக்கும் அதன்பின்னர் திருப்பதிக்கும் சென்று வழிபாடுகளில் ஈடுபடுவதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது.
 
இருப்பினும், தமிழக அரசியல்வாதிகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்கள் காரணமாக இந்த பயண ஒழுங்கில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதேவேளை, நாளை காலை திருப்பதி கோயிலுக்குச் சென்று அங்கு சிறப்பு தரிசனம் செய்யவுள்ள ஜனாதிபதி குழுவினர், அதன்பின்னர் மீண்டும் இலங்கை திரும்பவுள்ளதாக மேற்படி செய்திகள் மேலும் குறிப்பிடுகின்றன. 

இதேவேளை, ஜனாதிபதியின் இந்த விஜயத்துக்கு இலங்கையிலிருந்து சுமார் 70பேர் அடங்கிய குழுவினர் இந்தியாவுக்கு பயணமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/58536-2013-02-08-11-02-48.html

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய

இலங்கை

அரசியல் மட்டங்கள் இதன் தாக்கத்தை உணர்வார்களா????

அல்லது அது வன்முறையாக மாறும்வரை..............................???

Edited by விசுகு

வைகோ போராட்டம் போராட்டம் என்று கருணாநிதியின் தலையை போட்டு உருட்டுகிறார். இது மத்திக்கு விளங்குகிறது.  வைகோவை இதே போக்கில் விட்டுவிட்டு சும்மா இருந்தால் இந்த தேர்தல் அல்ல அடுத்த தேர்தலில் கூட கூட்டுக்கு ஒருவரும் கிடைக்கபோவதில்லை என்பது காங்கிரசுக்கு புலப்படுகிறது. இதனால் மகிந்தாவிடம் "நீ இங்கே வந்து ஒரு சலசலப்பும் காட்டாதே. போன மார்சில் பிரேரணைக்கு பின் எழுதியது மாதிரியே இன்னொரு இரகசிய அடிமை கடிதம் நான் உனக்கு எழுதி போடுகிறேன்.இப்போது பேசாமல் போய்விடு என்றிருக்கிறார்."  மானமில்லாத மனசிங்கம்.

டெல்லி சந்திப்பு ஏன் இரத்து? பாதுகாப்பு காரணமில்லை.

 

ஒன்றில் மகிந்த சந்திக்க விரும்பவில்லை இல்லை இந்தியா விரும்பவில்லை.

 

மகிந்தா தான் அநேகமாக இரத்து செய்திருக்க வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

வை.கோவை கைது செய்து விட்டார்கள்.பிறகு ஏன் மகிந்தவின்  டெல்லி பயணம் ரத்து செய்யப்பட்டது??

ஐ.நா.மனித உரிமை மாநாட்டில் இந்தியா சிங்களத்திற்கு ஆதரவு தர மறுத்திருக்க வேண்டும்? எனவே தான் மகிந்த இரத்து செய்தார் ??

வை.கோவை கைது செய்து விட்டார்கள்.பிறகு ஏன் மகிந்தவின்  டெல்லி பயணம் ரத்து செய்யப்பட்டது??

 

வைகோ போரராடவென்று டெல்கி சென்றார். வை.கோவின் போராட்டத்தை தடுத்து நிறுத்தி வை.கோவை கைது செய்கிறார்கள். ஆனால் மகிந்தா டெல்கிக்கு கிட்டவும் போகவில்லை.  மகிந்தா, தமிழரிடமிருந்து திருப்பட்ட தமிழ் நாட்டுத் திருப்பதிக்கு வருகிறார். கருணாநிதியும் மகிந்தாவை எதிர்த்து தமிழ்நாட்டில் போர் அடிக்கிறார்.  ஆனல் கருணாநிதி சுதந்திரமாக மேடை கட்டி ஆர்ப்பாட்டம் போட முடிகிறது. அது எப்படி அவரை ஒருவரும் கைது செய்யவில்லை.

 

வை கோ ஈழத்தமிழருக்காக போராடுவதை மூடி மறைத்து, கருணாநிதியின் விளம்பரசோடனைகளை மிகைப்படுத்திக்காட்டி கருணாநிதிதான் ஈழத்தமிழரை காற்றுபாற்றுகிறார் என்று தமிழ் நாட்டவை ஏமாற்றி காங்கிரஸ்-கருணாநிதி கூட்டு தேர்தலில் வெல்லும் முயற்சியா? 

வரும் காலங்களில் சிறிலங்காவைத்தவிர எந்த நாட்டுக்கும் செல்ல முடியாது அப்பு :D

 

 

தமிழரில் சிலர் சிறிலங்காவுக்கு வரமுடியாது உங்களால தமிழர்களினால் நீங்கள் சிறிலங்காவைத்தவிர எங்கும் செல்ல ஏலாது என்ற நிலை வந்திட்டுதே உங்களுக்கு.

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

4079ec36-aeb1-4100-b639-dab1beaf735f_S_s
 

இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வருகைக்கு டெசோ அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தது. இந்த அமைப்பின் சார்பில் கருப்பு சட்டை அணிந்து வள்ளுவர் கோட்டம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கருணாநிதி அறிவித்திருந்தார். அதன்படி ஆர்ப்பாட்டத்தில் கருப்பு சட்டை அணிந்து ஏராளமான தி.மு.க. விடுதலை சிறுத்தைகள் மற்றும் தமிழர் அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். 

ஆர்ப்பாட்டத்துக்கு டெசோ அமைப்பின் தலைவரான கருணாநிதி தலைமை தாங்கினார். மு.க.ஸ்டாலின் டெசோ உறுப்பினர்கள் கி.வீரமணி, சுபவீரபாண்டியன், சுப்புலட்சுமி ஜெகதீசன், திருமாவளவன் எம்.பி., ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கருணாநிதி பேசியதாவது:- 

தமிழர்களின் கலை, கலாசாரம், இலக்கியம், பண்பாடு, மொழி, அனைத்தையும் அழித்திட கங்கணம் கட்டிக் கொண்டு ராஜபக்சே அரசு வெறியாட்டம் போட்டுக் கொண்டிருக்கிறது. தமிழ் இனம் தான் அழிக்கப்படுகிறது. தமிழர்களின் ரத்தம் மழைபோல் தெளிக்கப்படுகிறது என்பது மட்டுமல்ல நாம் கண் போல் காத்த அருமை தமிழ் அடையாளம் தெரியாமல் அழிக்கப்பட்டு வருகிறது. 

தமிழ்ப் பெயரால் அழைக்கப்பட்ட பல கிராமங்களுக்கு சிங்களப் பெயர் சூட்டப்பட்டு வருகிறது. தோல்பூர் துபாபுரா என்றும், பருத்தி துறை பித்ராதோடுவா என்றும், கிளிநொச்சி கிரடிக்கா என்றும் முல்லைத் தீவு முகடூவா என்றும் மாற்றப்பட்டுள்ளது. போருக்கு பிறகு இந்து கோவில்கள், தமிழர்களின் குடியிருப்புகள் அழிக்கப்பட்டுள்ளன. நம் நெஞ்சில் ஆழமாக பதிந்த தமிழ்ப் பெயர்கள் மாற்றப்பட்டு வருகின்றன. மொழியின் ஆக்கத்தை மறைக்க இப்படி பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. இதே போல் தான் தமிழகத்திலும் திருவரங்கம், ஸ்ரீரங்கம் என்றும், திருவில்லி புத்தூர் ஸ்ரீவில்லிபுத்தூர் என்றும், திருப்பெரும்புதூர் ஸ்ரீபெரும்புதூர் என்றும் இங்குள்ள இனப்பகைவர் களால் தமிழ்ப் பகைவர்களால் ஸ்ரீ என்ற வடமொழி புகுத்தப்பட்டது. 

அதே போல்தான் சிங்கள இனவெறியர்கள் தமிழ்ப் பெயரை அழித்திட தமிழர்களை அழித்திட முனைந்து வருகிறார்கள். அவனுக்கு பாடம் கற்பிக்கத்தான் தமிழகமே திரண்டிருக்கிறது. இன்றைய தினம் இந்தியாவில் வேறு சில பகுதிகளிலும் போராட்டம் நடக்கிறது. அவர்களையும் நான் வாழ்த்துகிறேன். நன்றி கூறுகிறேன். அவர்களும் எங்களை வாழ்த்தும் பெருங்குணம் பெறவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். பிரார்த்திக்கிறேன் என்றால் யாரை? அவர்களைத்தான் பிரார்த்திக்கிறேன். 

இதேபோல் எல்லோரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையாக போராடி இருந்தால் எப்போதுமே வெற்றி பெற்றிருக்க முடியும். இப்போது ராஜபக்சேவை எதிர்த்து கூட வேண்டிய அவசியம் வந்திருக்காது. ஆனால் அன்று அதை தவற விட்டுவிட்டோம். அந்த ஒற்றுமையை இன உணர்வை பெறும் காலம் தான் வெற்றியை உருவாக்கும் காலம். அதற்கான ஆரம்பம்தான் இந்த போராட்டம். வருகிற மார்ச் 7-ந்தேதி டெல்லியில் டெசோ அமைப்பின் சார்பில் கருத்தரங்கம் நடக்கிறது. அதில் எடுக்கப்படும் முடிவு இந்த போராட்டத்தின் எழுச்சியை ஒட்டி தான் இருக்கும். அனைவரது உணர்வுகளின் வெளிப்பாடாகத்தான் அமையும். நீங்களும் உங்களது ஆக்கத்தையும், ஊக்கத்தையும் அளியுங்கள். 

இவ்வாறு அவர் பேசினார். 

ஆர்ப்பாட்டத்தில் எம்.பி.க்கள், டி.ஆர்.பாலு, கனிமொழி, ஆ.ராசா, முன்னாள் அமைச்சர்கள் பெரியகருப்பன், சுபதங்க வேலன், பொன்முடி, தென் சென்னை மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன், வட சென்னை மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி.சேகர், முன்னாள் மேயர் மா.சுப்பிர மணியன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சேகர் பாபு, செங்கை சிவம், தலைமை கழக பேச்சாளர் சேலம் சுஜாதா இலக்கிய கலை துணை செயலாளர் பூச்சி முருகன், பகுதி செயலாளர்கள் கே.கே.நகர் தனசேகரன், மகேஷ்குமார், ராமலிங்கம் துரை கபிலன், ம.தமிழரசு, மு.தனசேகரன், இளங்கோவன், திருவள்ளூவர் நகர் தனசேகரன், ஏ.டி.மணி, சுபமுத்துவேல், ஜெ.கருணாநிதி, ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா, விஜய் ஆனந்த், பாக்சர் மதன், தாயகம் கவி, நேரு நகர் பாட்சா, வி.பி.மணி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொண்டர்கள் சிலர் ராஜபக்சே உருவ படத்தை கிழித்து தீ வைத்து எரித்தனர்.

832dfecb-ab38-4b9b-aefe-142ea03d09b1-1-1

 

http://www.maalaimalar.com/2013/02/08113345/rajapaksa-visit-tirupati-dmk-c.html

  • கருத்துக்கள உறவுகள்

என்ன  உலகமையா

 

ஆட்சியில் இருக்கும்போது

புலி  என்றால் தமிழீழம் என்றால் நீதிமன்றம் விசாரணை சிறை

 

எநந்த அதிகாரமும் இல்லாதபோது...........

ஊர்வலம்

பேச்சு

?????????????? :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.