Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா ஏனைய நாடுகளுடன் இணைந்து இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - ஜெயலலிதா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1748525256jaya.jpg

இந்தியா ஏனைய நாடுகளுடன் இணைந்து இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - ஜெயலலிதா

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்துக்கு பிறகு, இன்று முதல்வர் சட்டப் பேரவையில் பதில் உரை அளித்தார். 

அதில் அவர் இலங்கை பற்றி கூறியதாவது, 

இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்து இங்கே சில உறுப்பினர்கள் சுட்டிக் காட்டினார்கள். இந்த அரசைப் பொறுத்த வரையில், இடம் பெயர்ந்து இலங்கை முகாம்களில் வசிக்கும் தமிழர்கள் தங்கள் சொந்த இடங்களில் மீண்டும் குடியமர்த்தப்பட வேண்டும். அவர்கள் சிங்களர்களுக்கு இணையாக அனைத்து உரிமைகளுடன் வாழ வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது. 

இந்த நிலை ஏற்படும் வரை இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும்; இலங்கையில் இனப் படுகொலையை நிகழ்த்தி போர்க் குற்றம் புரிந்தவர்களை போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த, ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும். 

இது தொடர்பாக, ஏற்கெனவே இந்த அவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மத்திய அரசு அதை கண்டுகொள்ளவில்லை. இந்தத் தீர்மானத்தின் மீது, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை மீண்டும் நான் வலியுறுத்துகிறேன். 

சென்ற ஆண்டு நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழுக் கூட்டத்தில், இலங்கைக்கு எதிராக அமெரிக்க ஐக்கிய நாடு ஒரு வலுவான தீர்மானத்தைக் கொண்டு வந்தது. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக, மத்திய அரசு வாக்களிக்க வேண்டும் என்று நான் பாரதப் பிரதமரை தொடர்ந்து வலியுறுத்தினேன்.

முதலில், அதை ஆதரிப்பது பற்றி எதுவும் தெரிவிக்காத இந்திய அரசாங்கம், பின்னர் எனது தொடர் வலியுறுத்தல் காரணமாக அந்தத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தது. இருப்பினும், அந்தத் தீர்மானத்தின் வலுவை இழக்கச் செய்தவர் பாரதப் பிரதமர். 

இது குறித்து பாரதப் பிரதமர் இலங்கை ஜனாதிபதிக்கு எழுதிய கடித்தில், விளக்கியிருக்கிறார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நீர்த்துப் போன தீர்மானம் மீதே இலங்கை அரசு இன்னமும் நடவடிக்கை எடுக்காத சூழ்நிலையில், மீண்டும் ஒரு தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழுவில் அமெரிக்க ஐக்கிய நாடு கொண்டு வர உள்ளது என்ற செய்தி வந்துள்ளது. 

இது போன்றதொரு தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழுக் கூட்டத்தில், அமெரிக்க ஐக்கிய நாடு கொண்டு வருவது ஒரு புறம் இருந்தாலும், தமிழர்கள் நலன் கருதி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இயற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்து அதை மற்ற நாடுகளுடன் இணைந்து நிறைவேற்ற வேண்டும் என்றும் மத்திய அரசை நான் இந்த மாமன்றத்தின் வாயிலாக வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். 

இதே போன்று, இலங்கைக் கடற்படையினரின் கொடூரச் செயல்களாலும், கொடும் தாக்குதல்களாலும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் அப்பாவி தமிழக மீனவர்களைப் பாதுகாப்பதில், மத்திய அரசு தொடர்ந்து அலட்சியப் போக்கினை காட்டி வருகிறது. 

இந்திய மீனவர்களின் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்துமாறும், அவர்களிடம் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ளுமாறும் இலங்கை அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண்டுமென்று இந்த மாமன்றத்தின் வாயிலாக கேட்டுக் கொள்கிறேன். 

இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

 

 இது போன்றதொரு தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழுக் கூட்டத்தில், அமெரிக்க ஐக்கிய நாடு கொண்டு வருவது ஒரு புறம் இருந்தாலும், தமிழர்கள் நலன் கருதி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இயற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்து அதை மற்ற நாடுகளுடன் இணைந்து நிறைவேற்ற வேண்டும் என்றும் மத்திய அரசை நான் இந்த மாமன்றத்தின் வாயிலாக வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

 

 

தொடர்ந்தும் அழுத்தம் தரும் முதல்வருக்கு நன்றிகள்.

India should move UN for economic sanctions against Lanka: Jayalalithaa

 

Accusing Prime Minister Manmohan Singh of "weakening" a UN resolution against Sri Lanka for its alleged human rights abuse, Chief Minister J Jayalalithaa today urged the Centre to move the world body for imposing economic sanctions on it, till minority Tamils got equal rights.


Replying to a discussion in the Assembly on the Governor's address, she said, India had voted against Sri Lanka in the UNHCR last year on a "strong" resolution, after her repeated insistence with the Prime Minister.

 

"Even then the Prime Minister had weakened it (the resolution)," she said. Recalling a resolution adopted in the Assembly in 2011, Jayalalithaa said, it had called for economic sanctions till minority Tamils were ensured equal status at par with the Sinhalese and also press the United Nations to declare those who committed alleged crimes during the decades long conflict in Sri Lanka,as "war criminals" .

 

Reading out excerpts from a letter she claimed was written by the PM to the Sri Lankan President Mahinda Rajapaksa, she quoted the Prime Minister as having said, "...Your Excellency would be aware that we spared no effort and were successful in introducing an element of balance in the language of the resolution."

 

While Colombo was yet to act on this "watered down" resolution, there were reports suggesting US was moving another Sri Lanka-specific motion in the UNHCR, she said. Apart from the US initiative, "considering the welfare of Tamils, India should bring one motion based on the unanimous resolution passed in the Tamil Nadu Assembly and implement it along with other countries," she demanded.

 

http://zeenews.india.com/news/nation/india-should-move-un-for-economic-sanctions-against-lanka-jayalalithaa_827880.html

அமெரிக்காவுக்கு இருக்கிற அக்கறை தமிழ் மாநிலத்தை ஒரு பகுதியாக கொண்டிருக்கும் இந்தியாவுக்கு இல்லை. தமிழ் நாட்டவர், இந்தியா இந்த திசையில் முன்னேற்றிச் சென்று இலங்கையை பார்த்து, அங்கும் தமிழர்களின் உரிமைகளை பறிக்க இடம் கொடுக்க கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கையின் மீது பொருளாதாரத்தடை; விதிக்கக் கோருகிறார் ஜெயலலிதா
 
கடந்த முறை பிரேரணையை ஆதரிப்பது பற்றி எதுவும் தெரிவிக்காத இந்திய அரசு, எனது தொடர் வலியுறுத்தல் காரணமாக பின்னர்  பிரேரணையை ஆதரித்து வாக்களித்தது. இருப்பினும், அந்தப் பிரேரணையை வலுவிழக்கச் செய்தவர் பாரதப் பிரதமராவார். 
 
ஐ.நா. மனித உரிமைகள் சபைக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவுள்ள பிரேரணை ஒருபுறமிருக்க, இந்தியாவும் அவ்வாறானதொரு பிரேரணையைக் கொண்டுவந்து ஏனைய நாடுகளின் ஆதரவுடன் அதை நிறைவேற்ற வேண்டும் என்றும் இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் எனவும் தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்திய மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
 
அத்துடன், இனப்படுகொலையை நிகழ்த்தி போர்க்குற்றம் புரிந்தவர்களை போர்க்குற்றவாளிகள் "என்று பிரகடனப்படுத்துமாறு ஐ.நாவை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
தமிழக சட்டப் பேரவையில் நேற்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்துப் பேசியபோதே முதல்வர் ஜெயலலிதா மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.
 
இதுதொடர்பில் அவர் இலங்கை பற்றி மேலும் கூறியதாவது  
 
இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து இங்கே சில உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினார்கள். இலங்கையில் இடம்பெயர்ந்து முகாம்களில் வசிக்கும் தமிழர்கள், தமது சொந்த இடங்களில் மீண்டும் குடியமர்த்தப்பட வேண்டும். சிங்களவர்களுக்கு இணையாக அனைத்து உரிமைகளுடன் அவர்கள் வாழவேண்டும் என்பதில் இந்த அரசு உறுதியாக இருக்கிறது. 
 
இந்நிலை ஏற்படும்வரை இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும். இலங்கையில் இனப் படுகொலையை நிகழ்த்தி போர்க் குற்றம் புரிந்தவர்களை போர்க் குற்றவாளிகள் எனப் பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும். 
 
இது தொடர்பாக, ஏற்கனவே இந்த அவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ஆனால், மத்திய அரசு அதை கண்டுகொள்ளவில்லை. இந்தத் தீர்மானத்தின் மீது, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை இவ்வேளையில் நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். 
 
கடந்த வருடம் ஜெனிவாவில் இடம்பெற்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா வலுவான ஒரு பிரேரணையைக் கொண்டுவந்தது. 
 
இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக இந்திய அரசு வாக்களிக்க வேண்டும் என்று நான் பிரதமர் மன்மோகன் சிங்கை தொடர்ந்து வலியுறுத்தினேன்.
 
வலுவிழக்கச் செய்தவர்
பாரதப் பிரதமரே
 
முதலில், அதை ஆதரிப்பது பற்றி எதுவும் தெரிவிக்காத இந்திய அரசு, எனது தொடர் வலியுறுத்தல் காரணமாக பின்னர்  அந்தப் பிரேரணையை ஆதரித்து வாக்களித்தது. இருப்பினும், அந்தப் பிரேரணையை வலுவிழக்கச் செய்தவர் பாரதப் பிரதமராவார். 
 
பாரதப் பிரதமர் இலங்கை ஜனாதிபதிக்கு எழுதிய கடித்தில் இது விடயத்தை விளக்கியிருக்கிறார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நீர்த்துப்போன பிரேரணையை அடிப்படையாகக் கொண்டே இலங்கை அரசு இன்னமும் நடவடிக்கை எடுக்காத நிலையில், இம்முறைக் கூட்டத்தொடரில் மீண்டும் ஒரு பிரேரணையை அமெரிக்கா கொண்டுவரவுள்ளது என்ற செய்தி வந்துள்ளது. 
 
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இவ்வாறானதொரு பிரேரணையை அமெரிக்க கொண்டுவருவது ஒரு புறம் இருந்தாலும், தமிழர்கள் நலன் கருதி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இயற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், இந்திய அரசு ஒரு தீர்மானத்தை கொண்டுவந்து அதை மற்ற நாடுகளுடன் இணைந்து நிறைவேற்ற வேண்டும் என்றும் மத்திய அரசை நான் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
 
இதேபோன்று, இலங்கைக் கடற்படையினரின் கொடூரச் செயல்களாலும், கடும் தாக்குதல்களாலும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் அப்பாவி தமிழக மீனவர்களைப் பாதுகாப்பதில், மத்திய அரசு தொடர்ந்து அலட்சியப் போக்கைக் கடைப்பிடித்து வருகிறது. 
 
இந்திய மீனவர்கள் மீதான தாக்குதலைத் தடுத்து நிறுத்துமாறும், அவர்களிடம் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ளுமாறும் இலங்கை அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன். என்று தெரிவித்தார் முதல்வர் ஜெயலலிதா.
09 பெப்ரவரி 2013, சனி 8:05 மு.ப

இதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் சட்டம் அமைதி குலைந்து அங்கு சிங்களத்துக்கு எதிராக கலவரம் நிகழ்ந்தால் அந்தப் பொறுப்பு இந்திய மத்திய அரசையே சாரும். 

ஐ.நா. மனித உரிமைகள் சபைக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவுள்ள பிரேரணை ஒருபுறமிருக்க, இந்தியாவும் அவ்வாறானதொரு பிரேரணையைக் கொண்டுவந்து ஏனைய நாடுகளின் ஆதரவுடன் அதை நிறைவேற்ற வேண்டும் என்றும் இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் எனவும் தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்திய மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

உரிமையான கேள்வி. 2008 இலங்கையை பாராட்டி அனுப்பி வைத்த இந்தியா. இலங்கைக்கு எதிராக முதல் பிரேரணையை கொண்டுவந்திருக்க வேண்டிய நாடு கருணாநிதியின் 2ஜி யும் மற்றய ஊழல்களும் நாரணமாக  இலங்கைக்கு முதல் தர நண்பந்தான் என்று மார் தட்டுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
jayalalitha-090213-seithy-150.jpg

கடந்த முறை பிரேரணையை ஆதரிப்பது பற்றி எதுவும் தெரிவிக்காத இந்திய அரசு, எனது தொடர் வலியுறுத்தல் காரணமாக பின்னர் பிரேரணையை ஆதரித்து வாக்களித்தது. இருப்பினும், அந்தப் பிரேரணையை வலுவிழக்கச் செய்தவர் பாரதப் பிரதமராவார். ஐ.நா. மனித உரிமைகள் சபைக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவுள்ள பிரேரணை ஒருபுறமிருக்க, இந்தியாவும் அவ்வாறானதொரு பிரேரணையைக் கொண்டுவந்து ஏனைய நாடுகளின் ஆதரவுடன் அதை நிறைவேற்ற வேண்டும் என்றும் இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் எனவும் தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்திய மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். அத்துடன், இனப்படுகொலையை நிகழ்த்தி போர்க்குற்றம் புரிந்தவர்களை போர்க்குற்றவாளிகள் 'என்று பிரகடனப்படுத்துமாறு ஐ.நாவை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

  

தமிழக சட்டப் பேரவையில் நேற்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்துப் பேசியபோதே முதல்வர் ஜெயலலிதா மேற்கண்டவாறு வலியுறுத்தினார். இதுதொடர்பில் அவர் இலங்கை பற்றி மேலும் கூறியதாவது,

 

இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து இங்கே சில உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினார்கள். இலங்கையில் இடம்பெயர்ந்து முகாம்களில் வசிக்கும் தமிழர்கள், தமது சொந்த இடங்களில் மீண்டும் குடியமர்த்தப்பட வேண்டும். சிங்களவர்களுக்கு இணையாக அனைத்து உரிமைகளுடன் அவர்கள் வாழவேண்டும் என்பதில் இந்த அரசு உறுதியாக இருக்கிறது. இந்நிலை ஏற்படும்வரை இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும். இலங்கையில் இனப் படுகொலையை நிகழ்த்தி போர்க் குற்றம் புரிந்தவர்களை போர்க் குற்றவாளிகள் எனப் பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும்.

 

இது தொடர்பாக, ஏற்கனவே இந்த அவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ஆனால், மத்திய அரசு அதை கண்டுகொள்ளவில்லை. இந்தத் தீர்மானத்தின் மீது, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை இவ்வேளையில் நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். கடந்த வருடம் ஜெனிவாவில் இடம்பெற்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா வலுவான ஒரு பிரேரணையைக் கொண்டுவந்தது. இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக இந்திய அரசு வாக்களிக்க வேண்டும் என்று நான் பிரதமர் மன்மோகன் சிங்கை தொடர்ந்து வலியுறுத்தினேன்.

வலுவிழக்கச் செய்தவர் பாரதப் பிரதமரே

 

முதலில், அதை ஆதரிப்பது பற்றி எதுவும் தெரிவிக்காத இந்திய அரசு, எனது தொடர் வலியுறுத்தல் காரணமாக பின்னர் அந்தப் பிரேரணையை ஆதரித்து வாக்களித்தது. இருப்பினும், அந்தப் பிரேரணையை வலுவிழக்கச் செய்தவர் பாரதப் பிரதமராவார். பாரதப் பிரதமர் இலங்கை ஜனாதிபதிக்கு எழுதிய கடித்தில் இது விடயத்தை விளக்கியிருக்கிறார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நீர்த்துப்போன பிரேரணையை அடிப்படையாகக் கொண்டே இலங்கை அரசு இன்னமும் நடவடிக்கை எடுக்காத நிலையில், இம்முறைக் கூட்டத்தொடரில் மீண்டும் ஒரு பிரேரணையை அமெரிக்கா கொண்டுவரவுள்ளது என்ற செய்தி வந்துள்ளது.

 

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இவ்வாறானதொரு பிரேரணையை அமெரிக்க கொண்டுவருவது ஒரு புறம் இருந்தாலும், தமிழர்கள் நலன் கருதி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இயற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், இந்திய அரசு ஒரு தீர்மானத்தை கொண்டுவந்து அதை மற்ற நாடுகளுடன் இணைந்து நிறைவேற்ற வேண்டும் என்றும் மத்திய அரசை நான் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

 

இதேபோன்று, இலங்கைக் கடற்படையினரின் கொடூரச் செயல்களாலும், கடும் தாக்குதல்களாலும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் அப்பாவி தமிழக மீனவர்களைப் பாதுகாப்பதில், மத்திய அரசு தொடர்ந்து அலட்சியப் போக்கைக் கடைப்பிடித்து வருகிறது. இந்திய மீனவர்கள் மீதான தாக்குதலைத் தடுத்து நிறுத்துமாறும், அவர்களிடம் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ளுமாறும் இலங்கை அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன். என்று தெரிவித்தார் முதல்வர் ஜெயலலிதா.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=75647&category=TamilNews&language=tamil

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Jayalalitha appeal economy embargo against Sri Lanka
1BCqvHa4.jpg

Indian government did not notify about its support for last year resolution, but due to my continuous insistence, supported the resolution. However, Baratha Prime Minister made the resolution to diminish.

 
U.S is supposed to bring up a resolution against Sri Lanka at the UN Human Rights Council sessions this time, and Indian government, based on the resolution passed at the state assembly, should table a resolution against Sri Lanka at the UN and implement it with the support of other countries was added by  Tamil Nadu Chief Minister Jayalalithaa.
 
She insisted India should impose economy embargo against Sri Lanka.
 
She further said Indian government should urge the UN to declare those executed war crimes slaying racial brutalities, as war criminals.
 
Chief Minister Jayalaliltha insisted the above at the Tamil nadu Legislative Assembly, when she gave her gratitude to the address of Governor yesterday.
 
She mentioned about Sri Lanka and said, some members are pointing out concerning the Tamil crisis in Sri Lanka.  The displaced people in Sri Lanka are living in camps should be get resettled again in their native lands. Indian government is strong in its decision that they should live with all rights equally to Sinhalese was said in replying to a debate in the assembly.
 
Until a flawless situation exists, economy embargo should be imposed against Sri Lanka government. Indian government should urge the UN to declare those executed racial brutal murders, as war criminals.
 
Concerning this already a resolution was implemented in this assembly, and was forwarded to the Central government, but Central government did not take into attention.
 
Therefore I take this opportunity to urge the Central government once again to take action against this resolution.
 
Indian government at the start did not notify in supporting it, but due to my continued insistence, it voted in favor of the resolution. However Baratha Prime Minister made the resolution to weaken.
 
Jayalalithaa said Manmohan Singh wrote to Sri Lankan President Mahinda Rajapaksa explaining this issue which I wish to notify.
 
Sri Lankan government did not take any action on the “watered down” resolution and   there is information that the US is bringing another resolution” against the island this year sessions.
 
in one side the  U.S will bring up a resolution against Sri Lanka at the UN Human Rights Council sessions, meanwhile considering the welfare of Tamils, on the basis of the resolution passed at the Legislature Assembly , Indian government should bring a resolution with the support of other countries should implement, for which I insist the Central government.
 
Similarly, due to Sri Lanka navy forces heinous act and severe attacks the innocent Indian fishermen are in anguish and to protect them, Central government is continuously adopting a careless attitude. She urged the central government to take up this  issue with the  Sri Lanka government and  function to control these activities.
 

காங்கிரஸ் கருணாந்திக்கு தொப்பி போடும் படலம் மீண்டும் ஆரம்பித்திருக்கிறது. கருணாநிதி காங்கிரசுடன் உறவுகளை புதுப்பித்து கொண்டு சோனியாவிடம் பழைய குருடி கதவை திறவடி என்று திரும்ப ஓடிப்போய் நிற்கிறார். தமிழீழத்தில் சகோதர யுத்தம் பற்றி திரும்ப பேசுகிறார்.

 

முன்னரும் சோனியா இரசாயன ஆயுதங்களை இலங்கைக்கு கொடுப்பத்தை திசை திருப்ப பிரியங்கா வந்து நளினியை சந்தித்தவ. அந்த நேரம் நான் கூட சோனியாவின் நடத்தையில் மாற்றம் வரப்போகிறது என்று நினைத்ததுண்டு. முசோலினி அம்மா மாறவே மாட்டா.

 

குள்ள நரியார் கருணாநிதி கோழி குட்ட குட்ட குஞ்சு பிடிக்கும் பூனை போன்று என்ன கேவலம் நடந்தாலும் பணத்துடன் வீடு திரும்புவார்.

 

கருணாநிதியை வாங்கி முடிய பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு ஆபத்துக்கள் வரலாம்.

Edited by மல்லையூரான்

ஜெயலலிதா அவர்களுக்கு நன்றி..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.