Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனக்கு அனைத்து நாடுகளிலுமே எதிர்ப்பு இருக்கே..! - ராஜபக்சே ' பெருமிதம்'

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
எனக்கு அனைத்து நாடுகளிலுமே எதிர்ப்பு இருக்கே..! - ராஜபக்சே ' பெருமிதம்'
Posted by: Mathi Published: Saturday, February 9, 2013, 10:46 [iST]
 
திருப்பதி: தமக்கு பல நாடுகளிலும் எதிர்ப்பு இருப்பதாகவும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படமாட்டேன் என்றும் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே கருத்து தெரிவித்திருக்கிறார்.
இலங்கை அதிபர் மகிந்தர் ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம், டெல்லி, பீகாரில் நேற்று கடும் போராட்டங்கள் நடைபெற்றன. இத்தனை எதிர்ப்புகளுக்கும் மத்தியில் பீகார் வந்த அவர் புத்தகயாவில் வழிபாடு நடத்தினார். பின்னர் ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா விமான நிலையத்துக்கு நேற்று மாலை வந்தடைந்தார். அங்கிருந்து சாலை மார்க்கமாக திருமலையை சென்றடைந்தார். வழியெங்கும் அவருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. திருமலையில் பத்மாவதி விருந்தினர் மாளிகையில் அவர் தங்கியிருந்தார்.
பின்னர் அதிகாலை 3 மணிக்கு ராஜபக்சேவும் அவரது குழுவினரும் திருப்பதியில் சுப்ரபாத சேவையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். சுமார் ஒரு மணிநேரம் கோயிலில் தரிசனம் செய்தார்.
தரிசனம் முடித்துவிட்டு வெளியே வந்த ராஜபக்சே செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய வந்துள்ளேன். ஏழுமலையானை தரிசனம் செய்தது எனக்கு மனநிம்மதி அளிக்கிறது. எனக்கு எல்லா நாட்டிலும் எதிர்ப்பு உள்ளது. இதை பற்றி நான் கவலைப்பட மாட்டேன். இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்றார்.
இதைத் தொடர்ந்து காலை 9.30 மணிக்கு கார் மூலம் ரேணிகுண்டா சென்று அங்கிருந்து கொழும்பு புறப்பட்டு சென்றார்.
போராட்டம்
ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருமலை ஜி.என்.சி. டோல்கேட், பத்மாவதி விருந்தினர் மாளிகை அருகில் ம.தி.மு.க.வினர் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது அவர்கள் ராஜபக்சேயின் உருவபொம்மையை தீ வைத்து எரித்தனர். அவரை கண்டித்து முழக்கமிட்டனர்.

 எனக்கு எல்லா நாட்டிலும் எதிர்ப்பு உள்ளது. இதை பற்றி நான் கவலைப்பட மாட்டேன்.

 

 

அன்று ஜே.ஆர். 'தமிழர்கள் நாட்டை விட்டு போனால் நாடு சிங்கள தேசமாகி விடும் என்றார்'.


இன்று உலகமெல்லாம் உள்ள தமிழர்கள் உங்களை எங்கு போனாலும் விட மாட்டர்கள், தமிழர்கள் சுய நிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் வரை.

5824_478089762270909_1821813158_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் இந்துக்களைக் கொல்ல உங்களுக்கு ஆசீர்வாதம்..

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் மக்களைக்கொன்ற மகிந்தவிற்கு இந்தியாவில் பரிகாரம் செய்கின்றனர்.

 

மன நிம்மதி நிரந்தரமாக இவருக்குக் கிடைப்பதென்றால்

ஈழத்தமிழர்களுக்கு ஒரு நிரந்தரமான தீர்வை வழங்க முன்வரவேண்டும்

இல்லையேல் வாழ்நாள் முழுவதுக் கோயில் கோயிலாக அலையவேண்டியதுதான்

 

  • கருத்துக்கள உறவுகள்

முகநூலில் படித்த ஒன்று...மஹிந்த பாவங்களுக்கு பரிகாரம் தேட திருப்பதி செல்லலாம்....திருப்பதியான் பரிகாரம் தெட எங்கு செல்ல முடியும்.....அதுபோலத்தான்  இவரை தொட்டு பரிகாரம் செய்யும் குருக்களின் பாவமும் எத்தனையோ பக்தர்களின்பக்திதியை அசுத்தப் படுத்தப்போகிறது....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.