Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். பல்கலை மாணவர்கள் இருவரும் விரைவில் விடுதலை: இராணுவம

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ். பல்கலை மாணவர்கள் இருவரும் விரைவில் விடுதலை: இராணுவம்

-சுமித்தி தங்கராசா

'இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு வெலிகந்தை புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு வரும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள்

இருவரும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள்' என்று இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க உறுதியளித்தார்.

'யாழ். பல்கலைக் கழகத்தில் தீபமேற்றுவதற்கு தடை இல்லை. ஆனால் இராணுவத்தினரால் அழிக்கப்பட்ட விடுதலைப் புலிகளை நினைவு கூறுவதற்காகவே அம்மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் தீபமேற்றினார்கள்.

அது குற்றம். அதற்காக மாணவர்கள் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருகின்றது' என்று அவர் கூறினார்.

கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்களில் இருவர் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், ஏனைய இருவரும் விரைவில் விடுதலை செய்யப்படுவர்' யாழ். கட்டளைத் தளபதி மேலும் கூறினார். கடந்த வருடம் நவம்பர் மாதம் 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்கள்

வவுனியா குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அங்கிருந்து வெலிகந்த புனர்வாழ்வு நிலையத்துக்கு மாற்றப்பட்டிருந்தனர்.

இவர்களுக்கு சுமார் ஒன்றரை மாதங்களாக அங்கு புனர்வாழ்வளிக்கப்பட்ட நிலையில் அவர்களில் இருவர் கடந்த மாதம் 22ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டனர்.

ஏனைய இருவரும் தொடர்ந்தும் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

tamilmirror

  • கருத்துக்கள உறவுகள்

பொங்கலுக்கு விடுதலை செய்யப்படுவார்கள் என்று கல்வி அமைச்சர் சொன்னாரே.கல்வி அமைச்சரின் வார்த்தை காற்றோடு போயாச்சு. இனி ஹத்துருசிங்க சொல்லி நடக்கப்போகிறதா 

வசந்தியும் (கோமாளி) ஊடகவியலார் D.B.S.ஜெயராஜாவும் சொல்ல வேண்டும். <_<  அப்போதுதான் நடக்கும்

Edited by மல்லையூரான்

பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு வெலிகந்த புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு வரும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவரும் நாளை விடுதலை செய்யப்படுவார்கள் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் யாழ்.மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழக கலைப் பீட மாணவர் ஒன்றியத்தின் தலைவர் ஜனமேஜெயந் மற்றும் யாழ் பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் செயலாளர் தர்சானந் ஆகியோரே நாளைய தினம் விடுதலை செய்யப்படவுள்ளனர்.

கடந்த வருடம் நவம்பர் மாதம் யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வுகள், ஆர்ப்பாட்டங்களையடுத்து, குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டு வெலிகந்த புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில்,

இவர்களில் இருவர் சுமார் ஒன்றரை மாதங்களுக்கு பின் கடந்த மாதம் 22ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டனர் ஏனைய இருவரும் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

 

http://onlineuthayan.com/News_More.php?id=556701832512666150

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.நகரில் நடத்தப்பட்ட உணர்வு மயமான நாடகமொன்றின் இறுதியில் ஜனாதிபதி திருவாய் மலர்ந்தார்:-

jaff%20news%20round%20up_CI.jpg

 

வெலிகந்தவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவரும் நாளை விடவிக்கப்படுவார்கள் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ உறுதி அளித்துள்ளார். 

இன்று யாழ்.நகரில் நடத்தப்பட்ட உணர்வு மயமான நாடகமொன்றின் இறுதிக்கட்டத்தில் இவ்விடுவிப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகியது. நிகழ்வில் ஜனாதிபதியின் சகோதரர்களான பஸில் ராஜபக்ஸ மற்றும் கோத்தபாய ராஜபக்ஸ ஆகியோர் பிரசன்னமாகியிருந்தார்.

முன்னதாக யாழ்பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் தடுத்து வைக்கப்பட்டள்ள மாணவர்களது பெற்றோர் இந்நிகழ்விற்கு அழைக்கப்பட்டு இருந்தனர். வடக்கு அபிவிருத்தி தொடர்பான மீளாய்வு கூட்டமொன்று இன்று ஜனாதிபதி தலைமையில் ஏற்பாடாகியிருந்தது. 

எனினும் கூட்டமைப்பின் யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் விநாயகமூர்த்தி மற்றும் சரவணபவன் தவிர்ந்த ஏனையவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கவில்லை. இதனால் எவரும் இக்கூட்டத்தினில் கலந்து கொள்ளாது தவிர்த்துக்கொண்டனர்.

இந்நிலையில் அழைத்து வரப்பபட்ட மாணவர்களது பெற்றோரிடம் ஜனாதபதியிடம் தமது பிள்ளைகள் தொடர்பாக கோரிக்கை விடுமாறு கோரப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாகவே  மாணவர்களது விடுதலைபற்றி ஜனாதிபதியின் உறுதி மொழிவழங்கப்பட்டு உள்ளது.

 
  • கருத்துக்கள உறவுகள்
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரும் நாளை விடுதலை: ஜனாதிபதி உறுதி
mahinda_luagh_002.jpg

தடுத்துவைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரும் நாளை புதன்கிழமை விடுதலை செய்யப்படுவர் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

யாழ். மாவட்ட அபிவிருத்தி குழுக்ககூட்டத்தில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பெற்றோரின் வேண்டுகோளிற்கினங்கவே இவர்கள் இருவரும் விடுதலை செய்யப்படவுள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு மாணவர்களின் பெற்றோர்கள் விடுத்த வேண்டுகோளை தான் ஏற்றுக்கொள்வதாகவும்  தான் மாணவர்களுக்கு எதிரி இல்லை என்றும் எதிர்வரும் காலங்களில் அரசாங்கத்திற்கு எதிராக மாணவர்கள் செயற்படாத வகையில் தங்களுடைய பிள்ளைகளை பார்த்துக்கொள்ளுமாறும் ஜனாதிபதி பெற்றோர்களிடம் கேட்டுக்கொண்டார்.

குறித்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரும் வெலிகந்த புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://tamil24news.com/news/?p=44535

 

பயங்கரவாதி மகிந்த கும்பலின் பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும் புனர்வாழ்வுக்காக அனுப்பப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை!

இதில் நாங்கள் செய்யதக்க ஒன்றும் இருக்க இல்லை. மிக குறைத்த எதிர்பார்ப்பாக அவர்களின் மனச்சாட்சிக்கு எதிராக அவர்கள் தமிழருக்கு எதிராகத்தான்  நடந்து கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன் விடுவிக்க படவில்லையாயின் அது போதும்.

 

பெற்றோரின் வேண்டுகோளிற்கினங்கவே இவர்கள் இருவரும் விடுதலை செய்யப்படவுள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

குற்றம் செய்யாத பிள்ளைகளை பெற்ற இந்த பெற்றோர் தேவா, மகிந்த சமரசிங்க, வசந்தி, ஜெயராஜா ..... இன்னும் எத்தனை எத்தனை கால்களில் விழ நேர்ந்ததோ.. கடைசில் இந்த கொடிய சாத்தானின் கால்களிலும் விழுந்து முடித்தாயிற்று. சிறைகளில் நடந்து முடிந்தவை, வெளியே வந்தபின் நடக்கப் போபவை வேறு. ஆனால் பிள்ளைகளை தம்முடன் ஒரு தடவை தன்னும் அழைத்து போக கிடைத்தால் அவர்களின் கண்களில் இருந்து ஒரு துளி நீர்விழும்.

 

அடிமைக்குட்டி திசாநாயக்கா பி.பி,சியுக்கு கூறியது போல், பொங்கள் நேரம், இதே நாடகத்தை, நால்வரையும் வைத்து பெரிய ஆடம்பரமாக செய்யத்தான் போன முறை மகிந்தா திட்டம் போட்டவர். என்ன குழப்பினது என்பது வெளியில் சரியாக தெரிய வரவில்லை.(அல்லது எனக்கு அந்த செய்திகள் படிக்க கிடைக்கவில்லையோ தெரியாது). நாடகம் ரத்து செய்யப்பட்டதால் எல்லா விளக்கங்களுடனும் மாணவர்கள் திரும்ப உள்ளே பூட்டப்பட்டர்கள். ரத்து செய்யப்பட்ட  (இளைய ராஜாவின் கச்சேரி மாதிரி) கச்சேரி நாள் திரும்ப தங்கள் வாழ்நாளில் என்றாவது  வருமா என பெற்றோரும் சம்பந்த பட்டவர்களும் ஏங்கினார்கள்.  வெளிநாட்டு, உள்நாட்டு அழுந்தங்களால் இறுதில் இருவரை வெளியே விட்டார்கள். ஆனாலும், தொப்பிக்குள் நெருப்பெரித்து புறாப்பறக்கவிடும் மந்திர வித்தைக்காக பிடிக்கப்படவற்றில் இரண்டு புறாக்கள் இன்றைவரை கூண்டுக்குள் தான் இருக்க வேண்டியிருந்தது. இதன் மூலம் கூண்டுக்கள் இருப்பது இரண்டு புறாக்கள் மட்டும்தான் என்ற மாயையும் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுவிட்டது.

 

ஒன்றை மட்டும் சொல்ல்லி வைக்க வேண்டும். செல்வநாயகத்தையும், பிராபாகரனையும் மட்டும் நம்பின தமிழ்சனம் இந்த கண்கட்டிவித்தைகளை நம்பும் என்று கனவு கண்டால் மகிந்தா தன்னைத்தான் ஏமாற்றுகிறார். இது தெற்கில் காணப்படும் மோடைய கூட்டம் அல்ல. அங்கே ஜனநாயகத்தை சர்வாதிகாரமாக மாற்ற வாக்கு போடு என்றால் போடுவார்கள். வடக்கு கிழக்கில், 65 வருடத்திலும், இவர்களால் ஒரு சின்ன மனமாற்றதை தன்னும் கொண்டுவர முடியவில்லை.

 

ஒரு நன்மை, மகிந்தாவே, இந்த முறை வசந்தியினதோ, ஜெயராஜாவினதோ நாக்கை ஒட்ட அறுத்துவிட்டுத்தான் நாடகத்தை முடிவுக்கு கொண்டுவருகிறார். 

 

  

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நாடகத்தை அரங்கேற்றத் தானே பிடிச்சது.  இவர்களின் இனவெறி மற்றும் ஒட்டுக்குழு அரசியல் ஆதாயத்திற்காக... மற்றும் சிங்களப் பேரினவாத.. அதிகார வெறியை தமிழ் மக்களிடம் மீண்டும் ஒரு முறை காட்ட.. அந்த மாணவர்களின் கல்வி இதுவரை நாளும்.. பறிக்கப்பட்டுள்ளது. அது அடிப்படை மனித உரிமை மீறல் என்பது கூடத் தெரியாமல்.. இவர்கள்.. ஒரு நாட்டின்.. அரசுத் தலைமையில் உள்ளவர்கள்.. ஒரு நாடகமாடி முடித்துள்ளனர். அதற்கு பாராட்டு வேற எனிக் குவியுமாக்கும்..! :rolleyes::icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தனி மனிதனின் உணர்வை பிரதிபலித்தற்கு புனர்வாழ்வா? சித்திரவதை செய்து இனிமேல் இப்படி செய்தால் நீயும் உனது குடும்பமும் அழிக்கப்படும் என்பதற்கு பெயர் புனர்வாழ்வா??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.