Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நூரச்சோலை நிலக்கரி மின்சார நிலையத்தை சீன நிறுவனத்திடம் கையளிக்க உள்ளது

Featured Replies

நூரச்சோலை நிலக்கரி  மின்சார நிலையத்தை சீன நிறுவனத்திடம் கையளிக்க உள்ளது
 
சீன நிறுவனம் ஒன்றிடம் இருந்து வாங்கிய மிகப்பெரிய கடனான 1350 மில்லியன் அமெரிக்க டாலர்களை செலுத்த முடியாமல் உள்ளதால் நூரச்சோலை நிலக்கரி  மின்சார நிலையத்தை அந்த சீன நிறுவனத்திடம் கையளிக்க பேச்சு வார்த்தைகள் நடப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

 

மின்சார விலையை அதிகரிப்பதா இல்லை சீன நிறுவனத்திடம் தொழில்சாலையை கையளிப்பதா என்ற இரண்டு தெரிவுகள் முன்வைக்கப்பட்டதாகவும் இலங்கை அரசு இரண்டாவது தெரிவை நடமுறைப்படுத்த உள்ளதாகவும் அறியப்படுகின்றது.

 

Norochcholai coal plant to be transferred to Chinese company

 

Discussions are underway to transfer the Norochcholai coal power plant to the Chinese company in lieu of the massive US $ 1350 million loan obtained from that country to construct the project, informed sources said yesterday.

 

The project was carried out by China’s C.M.C.R. Company and according to sources the Ceylon Electricity Board had put forward two alternatives to cover up the rising electricity generation cost- to increase energy prices or to transfer the coal project to the Chinese company- instead of settling the loan. It is learnt that the government is seriously considering the second option as a way of the present financial crisis.

 

The total capacity of the coal project is 900 megawatts with 300 megawatts being generated in the initial phase annually while the rest would come under the second phase of the project. Work on the project started in 2007.

 

http://www.dailymirror.lk/news/25730-norochcholai-coal-plant-to-be-transferred-to-chinese-company.html

 

Edited by akootha

இனித்தான் சீனாவால் கட்டப்படும் ஆலையொன்றின் உண்மையான பெறுமதி இலங்கைக்கும், அதே நேரம் சீனாவுக்கும் தெரிய வரும். இனி நுரைச்சோலை மின்னிலையம் சீனாவால் லாபம் நோக்கி நடாத்தப்படவேண்டும். சீனாவின் காசின் வட்டி, வேஸ்க்காரர்களின் சம்பளம், நிலக்கரி, ஆலையின் பராமரிப்பு, வினியோக செலவு எல்லாவற்றையும் பெற்றாக வேண்டும். மேலும் இலங்கைத் தொழிலளர் தொழில் இழப்பர். சீனா அதிகாரிகள்தான் நடாத்துவார்கள். 

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

அம்பாந்தோட்டை துறைமுகமும் திறக்கப்படவுள்ள மகிந்த விமான நிலையமும் கூட இந்த நிலைக்கு ஆளாகலாம்  :icon_idea:

அதேவேளை விரைவில் சீன விடுமுறைகளும் இலங்கையில் கொண்டாடப்படலாம்  :D

விமான நிலையம் சீனாவுக்கும் வேண்டப்படாதது. ஆனால் இப்படி சீனா ஆர்வம் இழந்தால் எங்களுக்கு நல்லதா தெரியாது.

50 இணையத்தளம் = ஒரு நுரை சோலை.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை சீன நிறுவனமொன்றிடம் ஒப்படைக்கத் திட்டம்
14 பெப்ரவரி 2013
 
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை சின நிறுவனமொன்றிடம் ஒப்படைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
குறித்த அனல் மின் நிலையத்தை நிர்மாணிப்பதற்கு 1350 மில்லியன் அமெரிக்க டொலர் கடனாகப் பெற்றுக்கொள்ளப்பட்டது.
 
சீனாவின் சீ.எம்.சீ.ஆர் நிறுவனம் இந்த நிhமாணப் பணிகளை மேற்கொண்டிருந்தது.அதிகரித்துச் செல்லும் மின்சா உற்பத்திச் செலவை குறைக்கும் நோக்கில் இலங்கை மின்சாரசபை இரண்டு மாற்று யோசனைகளை முன்வைத்துள்ளது.
 
மின்சாரக் கட்டணங்களை உயர்த்துதல் அல்லது மின் உற்பத்தி நிலையத்தை சீன நிறுவனத்திடம் ஒப்படைத்தல் ஆகிய இரண்டு பரிந்துரைகளை மின்சாரசபை முன்வைத்துள்ளது. நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் ஊடாக மொத்தமாக 900 மெகாவெட் மின்சாரம் உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த செய்தி உண்மையானால் இது இலங்கையின் தற்கால அரசியலில் ஒரு மைல் கல். இதை வெறுமனே கடன் மட்டத்தில் வைத்துப் பார்க்கக் கூடாது. அண்மையில் கீறிசு வங்குரோத்தானது. அதை ஒரு அரசியல் திருப்பம் என்று கருத முடியாது. கிறீசின் கட்சிகள் தமக்குள் சில விட்டுக்கொடுப்புகளை செய்து  எதோ ஒன்றிய அங்கத்துவத்தை காப்பாற்றினார்கள். ஆனால் இலங்கை போகும் பாதை அவ்வாறல்ல, இது பாரிய அரசியல் மாற்றம்.

 

1948ல் இலங்கை அடைந்த சுதந்திரத்தை  நந்தவனத்து ஆண்டிமாதிரி மோடைய சமுதாயம் பிழையானவர்களுக்கு வாக்களித்து போட்டுடைத்துவிட்டது. இதை நான் அல்ல, 1970ல் சிறிமா பதிவிக்கு வந்த போது அன்றைய பிரபல ஏரிக்கரை ஆங்கில நாள் இதழ்  ஜனநாயகத்தின் மரணம் என மரண அறிவித்தல் கொடுத்து சிறிமாவை வரவேற்றிருந்தது. இதை செய்த ஆசிரியர் சிறிமாவால் பதவி நீக்கப்பட்டது மட்டுமல்ல அதன் பின்னர் ஏரிக்கரை பத்திரிகைகள் சுதந்திர வெளிச்சத்தை காணாமல் செய்து விட்டா.

 

மேற்குநாடுகள் சிராணியின் பதவி நீக்கத்தை இலங்கையின் ஜனநாயகத்திற்கு விழுந்த அடியாக காண்கின்றன. ஆனால் நீதித்துறை கெட்டிருந்தது, கோடீஸ்வரன் வழக்குக்கு இலங்கையில் நீதி கிடைக்காமல் பிரிவி கவுன்சிலுக்கு போன போது தெளிவாவாக வெளியே தெரிந்தது. சரத் என் சில்வா, தான் எப்படி மகிந்தாவின் வழக்கை பிரட்டிப்போட்டு அவரை பதவியில் அமர்த்தினார் என்பதை வெளிப்படையாகத்தான் பேசினார். அவை எல்லாம் இலங்கையில் மன்னர் ஆட்சி திரும்பியதின் பரிணாம வளர்ச்சியல்லாமல் புரட்சி ஒன்றும் இல்லை.

 

லோரன்சோடி அல்மெய்டா சில பீரங்கி குண்டுகளை சுட்டு கோட்டை சிங்கள அரசை தனது காலின் கீழ் கொண்டுவந்தார். இலங்கையில் கோட்டை மட்டும் எந்த சணடையும் இல்லாமல் சரண் அடந்த இராச்சியம். கோட்டை மட்டும்தான் இலங்கையின்  மூன்று இராதானிகளில் சிங்கள மன்னர்களால் ஆளப்பட்டதும். திருமண உறவுகள் மூலம் கோட்டை அரசு போத்துகீசருக்கு கையளிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தையும் கண்டியையும் ஆண்ட சங்கிலியனோ, ராசசிங்கனோ போராடிதான் இறந்தார்கள்.  

 

தலைவர் சர்வதேசத்துடன் போராடித்தான் தோற்றர். அது அவரின் பலமும் சர்வதேசத்தின் பலத்தினதும் வித்தியாசம் மட்டுமே. ஒரு மணல்த்துளியை தன்னும் சிங்கள படையிடம் கொடுத்து, நீ கொண்டு போ, ஆனால்  என்னை விட்டுவிடு என்று கேட்டு உயிர் தப்பவில்லை. ஆனால் பேடி கோட்டைச்சிங்கள அரசனும் பிரதானிகளும் பீரங்கிச்சத்ததிற்காக போத்துக்கீச  அரசகுமாரியை திருமணம் செய்தார்கள்.   இன்று சைபர் தாக்குதல்களால்,கேவலம் ஒரு சின்னத் துவக்குச் சூடு இல்லாமல் சிங்கள அரசர்களிடமிருந்து  நிலங்கள் பறிக்கப்படுகின்றன. உயிர் நாடியான ஆலைகள் கை மாறுகின்றன. 1595 இற்கு பிறகு திரும்பவும் இலங்கை கைப்பற்றபடும் பீரங்கி குண்டுகளின் சத்தம் காற்றில் அலை அலையாக எழுகிறது. மோடையாக்கள் அரசியல் தூக்கத்தில் இருந்து விழிக்க முடியாமல் கும்பகர்ணன் படலம் பாடுகிறார்கள்.

 

தலைவர் நான் போனால் நீயும் போ என்று வடக்கு தோற்கும் போது தெற்கு முழுவதையும் ஆழ அமிழ்த்திவிட்டார். இனி இலங்கை மேலே வர பலத்த சிரமப்பட போகிறது. 

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

எந்த நாட்டினதும் பலம் அரசியலோ இல்லை இராணுவமோ இல்லை. பொருளாதாரமே.

 

இலங்கையின்  பொருளாதாரம் ஈடாடும்பொழுது அதன் அரசியலும் இராணுவமும் ஈடாடும்.

 

அத்துடன் வரப்போகும் சர்வதேச அழுத்தங்களும் எமது மக்களின் விடிவிற்கான ஒரு பாதையை திறந்து விடலாம்.திறந்த பாதையில் வரும் தீர்வை எமது தாயக தலைவர்கள் கைப்பற்றவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏழுமலையானும் அவருடைய அவதாரம் எண்டு பலரால் நம்பப்படும் புத்தரும் மகிந்தாவை கைவிடமாட்டார்கள் :D

  • தொடங்கியவர்

cartoon-of-the-day-15_02_2013-600-1.jpg

"சீனா கடன்கள் கொடுக்கும் போது அரசியல் அழுத்தங்களை பிரயோகிப்பதில்லை" கோத்தா அண்மையில்(காலியில் நடந்த பாதுகாப்பு மகாநாட்டில் என்று நினைக்கிறேன்)

 

மடியைப்பிடித்து கள்ளைக் கொடுத்து மயிரை பிடித்து காசை வாங்குவது என்பது இதுதான்.

  • தொடங்கியவர்

ஆனால் இதில் பொதுமக்களே அதிகம் இதுவரை பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலை மாறி மகிந்த கூட்டம் இந்த சூட்டை போல ஆயிரம் மடங்கு சூட்டை மக்களாலேயே ஒருநாள் பெறத்தான் போகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

china.jpg

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தினை சிறீலங்கா அரசாங்கம் சீனாவிற்கே விற்பனை செய்ய முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

வாங்கிய கடனை அடைக்க முடியாமை, தொடர்ந்து இயங்க வைக்க பணம் இல்லாமை ஆகிய காரணங்களினாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

 
நுரைச்சோலை அனல் மின் நிலையம் சீன நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது. 
 
மின்சார செலவைக் கட்டுப்படுத்த முடியாமை காரணமாகவே இந்த அனல் மின் நிலையத்தை சீன நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்ய வேண்டியுள்ளதாக சிறீலங்கா அரச தரப்புத் தகவல் தெரிவித்துள்ளது. 
 
குறித்த மின் நிலையம் 1350 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் நிர்மாணிக்கப்பட்டது. 
 
இருப்பினும் இந்த நிலையத்துக்காக சீனாவிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட அனைத்து உபகரணங்களும் பழையவை என்றும் செயற்பாட்டுக்கு உதவாதவை எனவும் அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
 

  • கருத்துக்கள உறவுகள்

2(2029).jpg

இருப்பினும் இந்த நிலையத்துக்காக சீனாவிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட அனைத்து உபகரணங்களும் பழையவை என்றும் செயற்பாட்டுக்கு உதவாதவை எனவும் அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வேண்டிய ஆயுதங்கள் பல பழையவை என்பதுதான் கேள்விப்பட்டது. இது சுவாரசியமானது.

நினைத்ததை விட வேகமாக இலனகை வங்குரோத்தாகும். இதற்குள் ரசினாவுக்கும், தமிழ் இராணுவ பெண்களுக்கும் அழகு மாளிகைகள்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலக வங்கி இலங்கைக்கு கடன் வழங்க மறுத்த காரணம்: இலங்கையில் தற்போதைய கடன் நாட்டின்  மொத்த உற்பத்தியின்  என்பது வீதம்.

 

 

The reason IMF refused to lend money is, Sri Lanka's current debt is 80% of total GDP!! I read this somewhere.

  • தொடங்கியவர்

சீனா கொடுத்த பணத்தை பெற முடியாததால்... நிறுவனத்தை பொறுப்பு எடுத்தது.


ஆனால் சர்வதேச நிதி அமைப்பு, உலக வங்கி என்பன கொடுத்த பணத்தை பெற முடியாமல் போனால் என்ன செய்வார்கள்??

  • கருத்துக்கள உறவுகள்

சீனா கொடுத்த பணத்தை பெற முடியாததால்... நிறுவனத்தை பொறுப்பு எடுத்தது.

ஆனால் சர்வதேச நிதி அமைப்பு, உலக வங்கி என்பன கொடுத்த பணத்தை பெற முடியாமல் போனால் என்ன செய்வார்கள்??

பொதுவாக இரண்டு விதமான நெருக்கடிகளைக் கொடுப்பார்கள்.

முதலாவதாக அரச செலவினங்களை (Public Sector) குறைக்கும் படி வற்புறுத்துவார்கள். இராணுவச் செலவினங்களும் இதில் அடங்கும். இது இலங்கைக்குப் பல விதமான நெருக்கடிகளைக் கொண்டு வரும். பொது மக்களை அரசுக்கு எதிராகத் திரும்பச் செய்யும், இராணுவமும், அரசுக்கு எதிராகத் திரும்பும் சாத்தியங்களும் உள்ளது.

 

இரண்டாவதாக, இலங்கை ரூபாவின் மதிப்பைக் குறைக்கும் படி வற்புறுத்துவார்கள். இதனால் இலங்கையின் ஏற்றுமதிப் பொருள்களின் விலைகள் குறையும். முக்கியமாக, புடைவை ஏற்றுமதியை இது மிகவும் பாதிக்கும். இது தொழிலாளர்களின் சம்பளத்தைக் குறைக்கும். வேலையிழப்புக்கள் ஏற்படும். முதலீடுகளின் வருமானம் குறைவதனால், வெளிநாட்டு முதலீடுகள் வேறு நாடுகளை நோக்கி நகரத் தொடங்கும். இதுவும் அரசின் செல்வாக்கைப் பாதிக்கும்.

 

நான் நினைப்பது என்னவெனில், இப்படியான நிலைமை ஏற்பட்டால், இராணுவம் அரசைக் கைப்பற்றும் சாத்தியங்கள் தான் அதிகம் உண்டு. கோத்தாவின் திட்டமும் இதுவே எனக் கருதுகின்றேன்!

  • கருத்துக்கள உறவுகள்

சீனா மீது காபன் வெளியேற்றம் தொடர்பான அதிக குற்றச்சாட்டுக்கள் உள்ள நிலையில்.. தமிழர் வளங்களை.. நிலங்களை சுரண்டுவது மட்டுமன்றி தமிழர் நிலங்களை.. காற்றை மாசாக்கும் வேலையையும் சிங்களம் தனது பகுதி அபிவிருத்தி மற்றும் அரசியல்வாதிகளின் கொள்ளை இலாபம் கருத்தி.. செய்ய முனைகிறது..!

 

இது குறித்த சுற்றுச் சூழல் ஆர்வலர்களும் கொஞ்சம் கருசணை காட்டிச் செயற்படுதல் வேண்டும்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

பொதுவாக இரண்டு விதமான நெருக்கடிகளைக் கொடுப்பார்கள்.

முதலாவதாக அரச செலவினங்களை (Public Sector) குறைக்கும் படி வற்புறுத்துவார்கள். இராணுவச் செலவினங்களும் இதில் அடங்கும். இது இலங்கைக்குப் பல விதமான நெருக்கடிகளைக் கொண்டு வரும். பொது மக்களை அரசுக்கு எதிராகத் திரும்பச் செய்யும், இராணுவமும், அரசுக்கு எதிராகத் திரும்பும் சாத்தியங்களும் உள்ளது.

 

இரண்டாவதாக, இலங்கை ரூபாவின் மதிப்பைக் குறைக்கும் படி வற்புறுத்துவார்கள். இதனால் இலங்கையின் ஏற்றுமதிப் பொருள்களின் விலைகள் குறையும். முக்கியமாக, புடைவை ஏற்றுமதியை இது மிகவும் பாதிக்கும். இது தொழிலாளர்களின் சம்பளத்தைக் குறைக்கும். வேலையிழப்புக்கள் ஏற்படும். முதலீடுகளின் வருமானம் குறைவதனால், வெளிநாட்டு முதலீடுகள் வேறு நாடுகளை நோக்கி நகரத் தொடங்கும். இதுவும் அரசின் செல்வாக்கைப் பாதிக்கும்.

 

நான் நினைப்பது என்னவெனில், இப்படியான நிலைமை ஏற்பட்டால், இராணுவம் அரசைக் கைப்பற்றும் சாத்தியங்கள் தான் அதிகம் உண்டு. கோத்தாவின் திட்டமும் இதுவே எனக் கருதுகின்றேன்!

 

உங்கள் கருத்துப்படி முன்னரும் இவ்வாறே கடன் கொடுத்த மேற்குலக அமைப்புக்கள் கேட்டிருந்தன  என எண்ணுகின்றேன். அது அரசியலை பாதிக்கும் என்பதால் அரசியல்வாதிகள் மத்தியில் இவை பிரபல்யம் இல்லாத அணுகுமுறைகள்.

 

அடிப்படையில் ஒழுங்கான திட்டமிடல் இல்லாமையும் ஊழலும் உள்ளவரை அரசியல்வாதிகள் ஏழைமக்களை ஏமாற்றியவண்ணம் உள்ளார்கள்.

இராணுவ ஆட்சி வருவது என்றால் இன்னொரு நாட்டின் உதவி தேவை. இல்லாவிட்டால் அது நிலைக்காது. அந்த நாடு சீனாவாக இருக்கும் சாத்தியங்கள் இல்லை. சீனாவின் நோக்கம் பணம் மட்டுமே.

  • தொடங்கியவர்

cartoon.jpg

  • 2 months later...

மக்கள் கவனத்தை திசைதிருப்ப மீண்டும் அமைச்சரவை மாற்றம்! - ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க குற்றச்சாட்டு!!

b9ef453b-759f-4d15-b178-54fe3e2d3de11.jp

 

'அநீதியான ஆட்சியை மூடிமறைத்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காக மீண்டும் ஓர் அமைச்சரவை மாற்றத்தை மேற்கொள்ள அரசாங்கம் திட்டமிடுகிறது. நாட்டு மக்களை அபாயத்தில் தள்ளிவிட்டு அமைச்சர்மார்களின் முகங்களை மாற்றுவதனூடாக எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை. இதற்கு அரசாங்கம் தான் முழுப்பொறுப்பேற்க வேண்டும்' என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

'இரவு 8 மணிக்குப் பின்னர் வீதி விளக்குகளை அணைப்பதற்கும் அரசாங்கம் முஸ்தீபு செய்து வருகிறது. மாணவர்கள் வீட்டில் கல்வி கற்க முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ள அரசாங்கம், இப்போது தெருமுனையிலிருந்தும் கல்வி கற்கவிடாது, அவர்களின் எதிர்காலத்தை இருளில் தள்ளப்பார்க்கிறது' என்று ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கயந்த கருணாதிலக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

அசாதாரணமான முறையில் அதிகரிக்கப்பட்டுள்ள மின்கட்டண உயர்வால் குப்பிவிளக்கு கலாசாரம் நாட்டில் மீண்டும் தோன்றினாலும் புதுமை கொள்வதற்கில்லை. இருப்பினும், குப்பிவிளக்கையும் பற்றவைக்க முடியாத நிலையைத்தான் அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

'இலங்கை வரலாற்றில் எந்த அரசாங்கமும் அதிகரிக்காத வகையில் மின் கட்டணத்தை இந்த அரசாங்கம் அதிகரித்துள்ளது. மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டமை குறித்து மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி எந்தவிதமான விளக்கத்தையும் அளிக்காது காணாமல் போயுள்ளார். பவித்ராதேவி இப்போது நெருப்பு தேவியாக மாறிவிட்டார்.

மின் கட்டண அதிகரிப்புக்கு சர்வதேச பொருளாதாரத் தடை, உள்நாட்டு யுத்தம், உலக சந்தையில் எரிபொருட்களின் விலை உயர்வு என அரசாங்கத்தால் காரணம் கூறமுடியாது.

அரசாங்கத்தின் இலஞ்சம், ஊழல், அதிக வட்டியுடனான கடன் என்பவையே மின்கட்டண அதிகரிப்புக்குக் காரணம். ஆரம்பகாலத்தில் தீவிரவாதிகளுக்குப் பயந்து வெளிநாடு சென்றார்கள். இன்று அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைகளுக்கு அஞ்சி அவுஸ்திரேலியா செல்கின்றனர்.

இரவில் 8 மணிக்குப் பின்னர் வீதி விளக்குகளை அணைப்பதற்கு அரசாங்கம் முஸ்தீபு செய்வதாக அறியமுடிகின்றது. அசாதாரணமான முறையில் அதிகரிக்கப்பட்டுள்ள மின் கட்டணத்தால் மக்கள் மின்குமிழை வீடுகளில் ஒளிரவிடுவதற்கே அஞ்சுகின்றனர். இதனால் மாணவர்கள் வீடுகளிலிருந்து கல்வி கற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தெரு விளக்குகளையும் அணைப்பதற்கு அரசாங்கம் முயற்சி செய்தால், தெருமுனைகளிலிருந்தும் மாணவர்கள் கல்வி கற்க முடியாத நிலை ஏற்படும். அமைச்சர்மாரின் வீட்டு வளாகத்திலுள்ள பாதுகாப்பு மின்குமிழ்களில் இருந்துதான் மாணவர்கள் கல்வி கற்கவேண்டும்.

நாட்டு மக்கள் மீது அரசாங்கம் நாளுக்கு நாள் சுமைகளையேற்றிவிட்டு மீண்டும் ஓர் அமைச்சரவை மாற்றத்தை மேற்கொள்ளத் திட்டமிடுகிறது. அமைச்சர்மார்களின் முகங்களை மாற்றுவதனூடாக இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதிலிருந்து அரசாங்கம் தப்பிக்க முடியாது. அரசாங்கம் தான் இதற்கு முழுப்பொறுப்பேற்க வேண்டும்' என்று நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க மேலும் தெரிவித்தார்

 

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=b9ef453b-759f-4d15-b178-54fe3e2d3de1

Parliament_CI.jpg

 

மின்சாரக் கட்டண உயர்வு காரணமாக பாராளுமன்றில் அமளி ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. மின்சாரக் கட்டண உயர்விற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியினர் குரல் ஒழுப்பியதனைத் தொடர்ந்து, பாராளுமன்ற அமர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன.
 
மின்சாரக் கட்டண உயர்வு தொடர்பில் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி உரையாற்றியதனைத் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியினர் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.
 
ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற அமர்வுகளை சீர்குலைக்க முயற்சிப்பதாக அவைத் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா, சபாநாயகர் சமால் ராஜபக்ஷவிடம் முறைப்பாடு செய்தார்.
 
இதனைத் தொடர்ந்து பாராளுமன்ற அமர்வுகள் நாளை பிற்பகல் 1.00 மணி வரையில் ஒத்தி வைக்கப்படுவதாகத் அறிவிக்கப்பட்டுள்ளது

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/91051/language/ta-IN/article.aspx

1677402782light.jpg

மின் கட்டண விவகாரத்தில் பந்தம் பிடிக்கும் எதிர்கட்சி உறுப்பினர்கள்!

April 23, 2013  01:11 pm

lg-share-en.gif
மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

இன்று (23) ஹொரண பிரதேச சபை உறுப்பினர்கள் பந்தம் பிடித்துக் கொண்டு சபைக்கு வந்திருந்தனர். 

அநுராதபுரம் பிரதேச சபையின் எதிர்கட்சி உறுப்பினர்கள் பந்தம் பிடித்துக் கொண்டு சபைக்கு வருகை தந்தனர். 

அத்துடன் மத்திய மாகாண சபை எதிர்கட்சி உறுப்பினர்களும் பந்தம் பிடித்துக் கொண்டு சபைக்கு வருகை தந்திருந்தனர். 

 
  • தொடங்கியவர்

மகிந்த கூட்டம் விலைவாசியை கட்டுப்படுத்த நாடுகளிடம் கைவேண்டியும் முடியவில்லை.

அதேவேளை தம்மை பாதுகாக்க இராணுவத்தை பலப்படுத்தி சகல வசதிகளையும் கொடுக்கின்றது.

 

 

இறுதியில் மக்களின் பக்கமே இராணுவம் சாரும்,மகிந்த கூட்டம் கைவிடப்படும்.

1468196208ajithperera2.jpg

சம்பிக்க - பவித்ராவை திட்டி பயனில்லை: ராஜபக்ஷ அரசே பொறுப்பு

April 25, 2013  04:43 pm

 
மின் கட்டண அதிகரிப்பிற்கு எதிராக பாராளுமன்றில் மெழுகுவர்த்தி போராட்டம் இடம்பெற்ற பொழுது ஆளும் தரப்பிலிருந்து சிலர் அதற்கு தாக்குதல் மேற்கொண்டதாகவும் சிலர் தாக்குதல் மேற்கொள்ளாது ஆதரவு தெரிவித்ததாகவும் ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிட்டுள்ளது. 

மின் கட்டண உயர்வு தொடர்பில் நேற்றும், நேற்று முன்தினமும் பாராளுமன்றில் ஏற்பட்ட அமளி குறித்து கொழும்பில் இன்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பீ. பெரேரா மேற்கட்டவாறு தெரிவித்தார். 

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 

மின் கட்டண உயர்வை கண்டித்து பாராளுமன்றில் மெழுகுவர்த்தி போராட்டம் நடத்தியது அப்பாவி பொது மக்களுக்காகத்தான். 

போராட்ட திட்டத்தை அறிந்து கொண்ட ஆளும் கட்சியினர் எம்மை நோக்கி நீர்த் தாக்குதல் நடத்தினர். 

நாட்டு மக்களுக்காக நீர் தாக்குதல் மட்டுமல்ல துப்பாக்கிச் சூடுகளையும் தாங்க ஐக்கிய தேசியக் கட்சி தயாராக உள்ளது. 

எதிர்ப்பு நடவடிக்கைகக்கு முதன் முதலாக தண்ணீர் போத்தலை விட்டு எறிந்தவர் பாராளுமன்ற உறுப்பினர் யொஹான் ரத்வத்தை. 

அதன் பின்னர் மனுஷ நானயக்கார, சந்திர சிறிசூரிய ஆராய்ச்சி ஆகியோர் எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் மோதலில் ஈடுபட்டனர். 

இதன்போது ஆளும் கட்சி உறுப்பினர்கள் சிலர் சிறு பிள்ளைகளைப் போல் நடந்து கொண்டதால் பாராளுமன்ற அமர்வுகளை பார்வையிட வந்திருந்த பாடசாலை மாணவர்கள் அங்கிருந்து அகற்றப்பட்டனர். 

இந்த சம்பவங்களை ஊடகங்களில் வெளிப்படுத்த பாராளுமன்றில் உரிய வசதிகள் இருந்திருக்கவில்லை. 

மின் கட்டண உயர்வு குறித்து சம்பிக்க மற்றும் பவித்ரா வன்னியாராச்சியை மட்டும் திட்டி பயனில்லை. 

ராஜபக்ஷ அரசாங்கமே இதற்கு பதில் கூற வேண்டும். 

இவ்வாறு அஜித் பீ. பெரேரா தெரிவித்தார். 

(அத தெரண - தமிழ்)

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.