Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காதல்னா என்ன???

Featured Replies

நிழழிக்கும் ஆன்மாவுக்கும் 

 

இடையே ரகசியமாக உன்னை 

 

இருட்டின் சங்கதிகளை 

 

விரும்புதல் போல உன்னை காதலிக்கிறேன் 

 

 

 

முதலில் நிழலி  எழுதியபோது சந்தேகம் மட்டுமே இருந்தது

இப்பொழுது

நிச்சயப்படுத்தப்படுகிறது

சந்தேகமே இல்லை

அது தான்........ :D 

 

அது.... எனக்கு நேற்றிரவே புரிந்து விட்டது....

  • Replies 62
  • Views 6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிறைமொழியின் அம்மா காலையில் ஒரு அழகான பரிசு கொடுத்தார்கள், கூடவே ஒரு முத்தமும், நிறைமொழி அப்போது தான் எழுந்து தனது நாளைத் துவக்கி இருந்தாள்,

"அப்பா, அது என்ன?"

"இது ஒரு பரிசு"

"இன்னைக்கு உங்களுக்குப் பிறந்த நாளா???"

"இல்லம்மா"

"அப்புறம் எதுக்குப் பரிசு குடுக்குறாங்க???"

"இன்னைக்குக் காதலர் தினம், ஒருத்தர் மேலே ஒருத்தர் அன்பு செலுத்துபவர்கள் எல்லோரும் பரிசு கொடுப்பாங்க"

"அப்பா, காதல்னா என்ன???"

மூன்றரை வயது மகளுக்குக் காதல் என்றால் என்ன என்று எப்படிச் சொல்வது என்று உண்மையிலேயே எனக்குப் புரியவில்லை, ஆனாலும் சொல்லித்தான் ஆக வேண்டும்.

"உனக்கு பப்பியைத் தெரியும் தானே?"

"தெரியும்ப்பா!!!"

"பப்பியால இப்போ நடக்க முடியாது, பப்பியால இப்போ எழுந்து நிக்கக் கூட முடியாது, பப்பியால இப்போ குரைக்க முடியாது"

"அப்பா, பப்பிக்குக் கண்ணு கூடத் தெரியலன்னு அப்பத்தா சொன்னாங்க!!!!!"

"ம்ம்ம்ம்......ஆனாக் கூட பப்பி நம்ம ஊர்ல இருந்து போன உடனே என்னம்மா செய்யும்???"

"வால வால ஆட்டும்ப்பா!!!!!!"

"பப்பியால எதுவுமே செய்ய முடியலைன்னாலும், அதுக்கு உடம்பு முடியலைன்னாலும் கூட, எத்தனை நாள் ஆனாலும் கூட, அது உன்னைய, என்னைய, அம்மாவப் பாத்தா ஒடனே மறக்காம வால ஆட்டுது பாத்தியா???"

"ஆமாப்பா"

"அதுக்குப் பேரு தாம்மா காதல்."

எந்த எதிர்பார்ப்பும், எந்த லாபங்களும் இல்லாம இன்னொரு உயிர அன்பு செய்யுறதுக்குப் பேரு தாம்மா காதல்.

எங்கள் பத்து வருடக் காதலுக்குப் பரிசான நிறைமொழிக்கு இப்போது புரிந்திருக்கும், காதல் என்றால் என்ன என்று!!!!

Arivazhagan Kaivalyam

பகிர்ந்தமைக்கு நன்றி.

காதல் என்றால் என்ன என்று தெளிவாக புரிந்துக்கொண்டவர்கள் நிச்சயம் திருமண வாழ்வில் வெற்றி பெறுவார்கள்.

உங்களுக்கும் என வாழ்த்துக்கள்....!

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு நீண்ட நாட்களாகவே ஒரு சந்தேகம். :blink:  

 

 காதல் இல்லாமல் காமம் உண்டு. ஆனால் காமம் இல்லாமல் காதல் மாத்திரம் வருமா? :unsure:

 

வரும்.. ஆனால் வராது. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

வரும்.. ஆனால் வராது. :lol:

காதலில்லாத காமங்கள் தினமும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன, நெடுக்கர்!

 

கண்ணகிக்கும், கோவலனுக்குமிடையில் இருந்தது, காதல்!

 

மாதவிக்கும், கோவலனுக்குமிடையில் இருந்தது, காமம்! :D

 

அதை அறிந்தும், தனது காற் சிலம்பைக் கூடக் கழட்டிக் கொடுக்கிறது, கண்ணிகியின் காதல்!

 

அதைக் கூட, மாதவியிடம், கோவலனைக் கொடுக்கச் செய்கிறது, கண்ணை மறைக்கும், காமம்!

Edited by புங்கையூரன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பகிர்ந்தமைக்கு நன்றி.

காதல் என்றால் என்ன என்று தெளிவாக புரிந்துக்கொண்டவர்கள் நிச்சயம் திருமண வாழ்வில் வெற்றி பெறுவார்கள்.

உங்களுக்கும் என வாழ்த்துக்கள்....!

 

உண்மை..நன்றி பிரியா அக்கா வாழ்த்துக்கு...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண்ணகிக்கும், கோவலனுக்குமிடையில் இருந்தது, காதல்!

 

மாதவிக்கும், கோவலனுக்குமிடையில் இருந்தது, காமம்! :D

 

அதை அறிந்தும், தனது காற் சிலம்பைக் கூடக் கழட்டிக் கொடுக்கிறது, கண்ணிகியின் காதல்!

 

அதைக் கூட, மாதவியிடம், கோவலனைக் கொடுக்கச் செய்கிறது, கண்ணை மறைக்கும், காமம்!

 

புங்கை அண்ணா...இவ்வளவு பந்தியாய் பந்தியாய் எழுதியதை..ரென்டே வரியில் சொல்லிவிட்டு போயிட்டியள் பாருங்கோ..அதுதான் புங்கை அண்ணா..நான்கூட இதை சொல்ல பக்கம் பக்கமாய் எழுதி இணைப்புக்களை கொடுத்துக்கொண்டிருக்க..அவ்வளவு இலகுவாக எளிமையாக ரென்டே ரெண்டு வரிகளில்..இவ்வளவு நேரமும் உரையாடியதை சொல்லிவிட்டு போயிருக்கிறீர்கள்..இதுதான் அண்ணா அந்த வித்தியாசம் காதலுக்கும் காமத்துக்கும்..நன்றிகள் அண்ணா...

என்னை பொறுத்தவரை ஏனையோர் மத்தியில் வருவது அன்பு, பாசம். :)  ஓர் ஆணுக்கும் பெண்ணுக்குமிடையிலான ஈர்ப்பு காதல். :) ஆனால் ஆங்கிலத்தில் அனைவருக்கும் love என்ற வார்த்தையை பயன்படுத்துவதை பார்த்து தமிழிலும் அனைவருக்கும் காதல் என்ற வார்த்தையை பலர் பிரயோகிக்கிறார்கள்.

 

இருவரும் புரிந்துணர்வுடன் வாழ்ந்தால் அவர்களுக்குள் விட்டுக்கொடுத்து வாழ முடியும். ஆனால் ஒருவர் தன்னும் புரிந்துணர்வு அற்றவராக  இருப்பின் அவர்கள் பிரிந்து விடுவதே சிறந்தது. அதற்காக அவர்கள் பிரிந்து விட்டால் அவர்கள் காதலித்தது போலி என்று அர்த்தமல்ல. :)  (காதல் என்ற பெயரில் காதலிப்பது போல் நடிப்பவர்களை நான் குறிப்பிடவில்லை)

சிலரிடத்தில் காதல் இல்லாமல் காமமும் உண்டு. சிலரிடத்தில் காமம் இல்லாத காதலும் உண்டு. சிலரிடத்தில் இரண்டும் சேர்ந்தும் உள்ளது...

(பி:கு இது நம்மட நிழலி அண்ணாக்கு என்றபடியால்தான் எழுதிறன்..இப்பெல்லாம் யாழுக்குள் யாருடன் கருத்தாடுவதில்லை என்ற முடிவெடுத்திருக்கன்..இது என் தனிப்பட்ட விருப்பு,முடிவு..கஸ்ரப்பட்டு பெற்றுக்கொண்ட எந்த ஒரு யாழ் உறவையும் சதம் பெறாத கருத்தாடலால் இழக்க விருப்பமில்லை..)

 

அடுத்தவர் விட்டு விலகி விடுவார்களோ என்று நினைத்து உங்கள் கருத்தை தெரிவிக்காமல் விடாதீர்கள். யாழில் பலர் கருத்தெழுதாமல் இருப்பதற்கு இவ்வாறான மனநிலை  ஒரு காரணம். ஒரு கருத்தை வைத்து ஒருவர் விலகி சென்றால் அதை பற்றி யாரும் கவலைப்பட வேண்டியதில்லை.

 

என்ன தான் எதிர் கருத்து எழுதினாலும், தாக்குதல் நடத்தினாலும் நிழலி அண்ணா தொடர்ந்து கதைப்பவர். :)  அவரில் எனக்கு பிடித்த குணங்களில் இதுவும் ஒன்று... :)

Edited by துளசி

எனக்கு என்றால் சுபேஸ் இந்த திரிமூலம் யாருக்கோ தூது விடுகின்றார் போல இருக்கு. ஆளும் களத்துக்கு வெளியே இருக்கும் ஆளுக்கு போல.. பாவம் பிளைச்சுப் போகட்டும்.... :icon_mrgreen:

 

:lol: :lol:

சுபேஸ் அண்ணா, உங்கள் திருமணத்துக்கு எனக்கும் சொல்லுங்கோ. :icon_idea:  நான் வர மாட்டன். ஆனால் வாழ்த்து சொல்லுவன்... :)

 

  • கருத்துக்கள உறவுகள்

அன்பு, பரிவு, பாசம், காதல் எல்லாம் அதிக வித்தியாசங்களில் இல்லை.

ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் உருவாகும் காதல் இந்த உலகத்தில் உயிரினங்களுக்கு உள்ள அடிப்படைக் குணங்களில் இருந்து வருகின்றது. பூமியில் உள்ள ஜீவராசிகள் எல்லாம் தமது சந்ததியை விருத்தி செய்யவேண்டும் என்பதற்காகவே பிறந்துள்ளன. அதனால் ஒரு ஆண் ஒரு பெண்ணைப் பார்க்கும்போது அவள் தனது சந்ததியை விருத்தி செய்யத் தோதானவளா என்று பார்க்கின்றான். அது போலவே ஒரு பெண் ஒரு ஆணைப் பார்க்கும்போது அவன் குழந்தையைத் உருவாக்குவதிலும், உருவாகிய குழந்தையை ஆளாக்கி வளர்ப்பதற்கும் உரிய பண்புகள் உள்ளனவா என்று பார்க்கின்றாள். இந்த அடிப்படையை அப்பட்டமாகச் சொல்லமுடியாததால்தான் பல்வேறு போர்வைகளை உடுத்தி தெய்வீகக் காதல் அது இது என்று சொல்வார்கள்.

 

காதலித்துத் திருமணம் முடித்தாலும் காலவோட்டத்தில் ஒவ்வொருவரது சிந்தனையும், தேவைகளும் மாறும்போது ஒரே அலை நீளத்தில் இருந்தவர்கள் கூட எதிரான அலைவரிசையில் போகச் சாத்தியம் உண்டு. அப்படியான நிலைமைகள் வரும்போது பிரிந்து வாழ்வதுதான் ஒரே தீர்வு என்றால் அதனையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

 

பாலகுமாரன் இப்படிக் காதலைச் சொல்லியிருக்கின்றார்:

 

"காதல் என்பது கருத்தொருமித்தவர் காமம் கழித்து கனிவினைக் கூட்டி நனிமிகும் நட்பினை நாளும் வகுத்து அன்பு செய்வதாகும். காதலில் தோல்வியுறுபவர்கள் காதலில் தெளிவில்லாதவர்கள் மட்டுமே. காதலில் தெளிவுள்ளவர்கள் ஒருபோதும் தோல்வியடைவதேயில்லை"

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் நிழலி எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் உண்மையான பாசத்தை ஒருவர் மேல் வைக்க முடியாதா?...பெற்றோர் குழந்தைகள் மேல் வைக்கும் பாசமும் சுயநலமானது தான்.அவர்கள் வளர்ந்து தங்களை பார்ப்பார்கள் என்ட நம்பிக்கை வைத்து தானே குழந்தைகள் மீது அன்பு செலுத்துகிறார்கள் அப்படி பார்த்தால் இதுவும் தூய்மையான பாசமாக இருக்க முடியாது...இந்த உலகத்தில் எதுவுமே 100% எதிர் பார்ப்பு இல்லாமல் இல்லை...
 
காதலுக்கும்,பாசத்திற்கும் நூலிடை தான் வித்தியாசம் என எங்கேயோ படித்த ஞாபகம்.

அப்படித்தான் நானும் கேள்விப்பட்டனான் ஆனால் உண்மை பொய் தெரியாது  :rolleyes:  :D

  • கருத்துக்கள உறவுகள்

:D

 

அது சரி, கதையில வார பப்பி, ஆணா அல்லது பொண்ணா? :o

இதன்ன கேள்வி இப்படி ஆட்டுறது என்றால் அது நிச்சயம்' ஆண்தான் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தான் நன் சொல்லவந்ததும்...இந்த விட்டுக்கொடுப்பும்,எதிர்பார்ப்பை நிவர்த்திசெய்வது என்பதும்தான் காதல்...விட்டுவிட்டு ஓடிப்போவதல்ல...இது கண்டிப்பாக மனம்விட்டு பேசிப் பழகி ஒருவரை ஒருவர் புரிந்துகொண்ட காதலர்களிடையே உயிர்வாழும்..அங்கு காதலும் வாழும்....ஏமாற்றுவதற்கென்றெ காதலிப்பவர்களைப்பார்த்து நீங்கள் காதலை எடைபோட்டால் அதுகாதலின் தப்பல்ல..இங்கு பலரும் நினைத்திருப்பது காதலென்றால் ஒருத்தங்களை பாத்ததும் ரண்டு நாள் பேசியதும் மூண்டாவது நாள் ஓடிப்போவதும் என்பதாக புரிந்துகொண்டுதான்..அப்படியல்ல..ஒருத்தங்களுடன் பேசிப்பழகி ஒருத்தரை ஒருத்தர் புரிந்துகொண்டு ஒருத்தருக்கொருத்தர் விட்டுக்கொடுப்புடன் ஒத்துவாழ்வோம் என்பதை இனங்கண்டபின் தெளிவாக தங்கள் துணையை இணங்கண்டு காதலிப்பவர்கள் கல்யாணம்செய்கிறார்கள்...குடும்ப வாழ்க்கையின் அர்த்தத்துக்கு உயிர்கொடுக்கிறார்கள்...(உதாரணத்திற்கு நாம்காதலிப்பவளுக்கு படக்கெண்டு கோபம்வரும் கத்துவாள்,திட்டுவாள் ஆனால் பாசக்காறி..பின்னாடி பீல்பண்ணி அழுவாள்,கவலைப்படுவாள் என்று எமக்கு அவளைப்பற்றி தெளிவாகத்தெரிகிறது..அதேபோல் அவளுக்கும் இவன் எனது குணத்தை அறிந்தவன்,என்னுடன் ஒத்துவரக்கூடியவன் என்னைப்போல முற்கோபம் இல்லை என்று தெரிந்து இணங்கன்டு காதலிக்கிரார்கள் என்று வைத்துக்கொளுங்கள்..நிச்சயமாக ஒருவரை ஒருவர் புரிந்துகொண்ட அவர்கள் தெரிவு,காதல் தெளிவானது..)அந்த தெளிவில்லாமல் காதலித்தால் அதற்குபெயர் காதல் அல்ல..அது வெறும் வெளித்தோற்றக் கவர்ச்சியே..இருவரும் ஒவ்வொருவரின் மனதை,ஆசைகளை,விருப்புவெறுப்புக்களை புரிந்துகொண்டு காதலித்திருந்தால் எதுக்கு பிரிவு வரப்போகிறது?

 

நிழலி அண்ணா சொல்வதுபோல் பழகியபின் குணம் பிடிக்கவில்லை என்று பிரியலாம் என்று சொல்வது எல்லாம் காதல் என்ற நிலைக்கே வராதவர்களின் கதைதான்..அல்லது ஒருத்தரை ஒருத்தர் புரிந்துகொள்லாமல் பெற்றோர்களால் திருமணம் செய்விக்கப்பட்ட சிலரின் கதைதான்..ஒருத்தரை ஒருத்தர் புரிந்துகொள்ளாமல்,குணமே தெரியாமல் பிற்கென்ன காதல் அங்கு இருக்காம்..உதெல்லாம் நடப்பது சும்மா பேசிப்பழகும் ஆரம்ப நிலைகளில்தான்..காதல் உண்மையில் இவங்களுடன் நான் கடைசிவரை வாழமுடியும் என்ற தெளிவு பேசிப்பழகும்போது வரும்..அந்த நிலைக்கு அப்புறம்தான் காதலே வரும்..அதுவரை இருப்பதெல்லாம் வெறும் இனக்கவர்ச்சியே..காதல் அல்ல..

 

 

சுபேஸ் ஒரு ஆண்,ஆணுக்குரிய அத்தனை நல்ல குணங்களை கொண்டு இருந்தாலும்[நல்லவனாக,ஒழுக்கமானவனாக,எந்த வித கெட்ட பழக்கவழக்கங்கள் இல்லாதவனாக],ஒரு பெண்,பெண்ணுக்குரிய அத்தனை நல்ல குணங்களை கொண்டு இருந்தாலும்[அமைதி,அடக்கம்,பாசம்,அன்பு காட்டுதல் போன்ற பல] இருவருக்கும் இடையே மனம் பொருத்தம் இல்லா விட்டால் அந்தக் காதலோ,வாழ்க்கையோ தோற்று விடும்.
 
காதலிக்கும் மனநிலையில் இருக்கும் போது அந்தக் காதலனின்/காதலியின் நல்ல குணங்கள் மாத்திரம் தான் கண்ணுக்குத் தெரியும்...ஏதாவது ஒரு காரணத்தால் அந்தக் காதல் தடைப்பட்டுப் போன பிறகு இருந்து யோசித்துப் பார்க்கும் போது காதலன்/காதலியின் பிடிக்காத குணங்களோ அல்லது அவர்களது எதிர்மறையான குணங்கள் தெரியத் தொட‌ங்கும்.
 
காதலனோ/காதலியோ அல்லது கணவனோ/மனைவியோ ஒரு குறிப்பிட்ட எல்லை வரை தான் ஒருவருக்காக மற்றவர் விட்டுக் கொடுக்கலாம்...அதுவும் எல்லை மீறினால் வாழ்க்கையில் விர‌க்தி தான் மிஞ்சும்...சில பேர் பிரிந்து போகக் கூடும்,பல பேர் ஊருக்காக சேர்ந்து வாழக் கூடும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.