Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசின் புனர்வாழ்வு என்பதன் அர்த்தம் புரியவில்லை! சிங்கள மொழியையே அரசு கற்பித்தது!! - விடுதலையான தர்ஷானந் செவ்வி

Featured Replies

'அரசு புனர்வாழ்வு என்று கூறுவது எதுவென எமக்குத் தெரியவில்லை. தடுத்துவைக்கப்பட்டிருந்த நாட்களில் எமக்கு சிங்களமொழியையே கற்பித்தது அரசு.'

 

இவ்வாறு வெலிக்கந்தை முகாமில் தடுத்துவைக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் ப.தர்ஷானந்த் தெரிவித்தார்.

 

யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மகிந்த ஹத்துருசிங்கவும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவும் எம்மைப் பற்றி ஊடகங்களுக்குத் தவறான செய்திகளை வழங்கியுள்ளார்கள். வெளிநாட்டில் இருக்கும் புலிகளுடன் தொடர்புள்ளது அல்லது இந்தியாவுக்குச் சென்று பயிற்சி எடுத்தோம் என்று எந்தச் சந்தர்ப்பத்திலும் நாம் சி.ஐ.டியினரிடம் தெரிவிக்கவில்லை. அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றி சி.ஐ.டியினர் எம்மிடம் விசாரணைகள் நடத்தவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு வெலிக்கந்தை முகாமில் புனர்வாழ்வு என்ற பெயரில் இரண்டு மாதங்களுக்கு மேலாகத் தடுத்துவைக்கப்பட்டிருந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரும் நேற்றுமுன்தினம் (13.02.13) விடுதலைசெய்யப்பட்டிருந்தனர். யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் ப.தர்ஷானந்த் (கலைப்பீடம்), கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் க.ஜெனமேஜெயந் ஆகியோரே இவ்வாறு விடுதலைசெய்யப்பட்டவர் ஆவர்.

 

இந்நிலையில், தமக்கு வழங்கப்பட்ட புனர்வாழ்வு தொடர்பிலும், தாம் தடுத்துவைக்கப்பட்ட இரண்டு மாத காலப் பகுதியில் நடந்த சம்பவங்கள் குறித்தும் கருத்துத் தெரிவிக்கும்போதே மாணவர் ஒன்றியச் செயலாளர் தர்ஷானந்த மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:


கடந்த டிசம்பர் முதலாம் திகதி அதிகாலைவேளை பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட நாம், வவுனியாவுக்கு அழைத்துவரப்பட்டோம். அங்கு பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸாரின் அலுவலகத்தில் 10 நாட்களாகத் தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டோம்.

 

எம்மிடம் சி.ஐ.டியினர் துருவித்துருவி விசாரணை நடத்தினர். ஆனால், நாம் அச்சமடையாமல் அவர்களிடம் தெளிவாகக் கூறியது என்னவெனில், 'யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் எவரும் அரசியலில் ஈடுபடவில்லை. தமிழர் உரிமைப் போராட்டத்தில் மரணித்த எமது உறவுகளை மட்டும் நாம் நினைவுகூர்ந்து மாவீரர் நாளன்று விளக்கேற்றினோம்' என்று தெரிவித்தோம்.

 

அத்துடன், மாணவர்கள் மீதான படையினரின் தாக்குதல்களைக் கண்டித்தே நாம் அமைதி வழியில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம் எனவும், வன்முறைகளைத் தூண்டிவிடும் விதத்தில் மாணவர்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் செயற்படவில்லை எனவும் கூறினோம்.

 

இதேவேளை, வெளிநாட்டில் இருக்கும் விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருக்கின்றதா எனவும், வெளிநாடுகளுக்குச் சென்று பயிற்சி எடுத்தீர்களா எனவும் சி.ஐ.டியினர் எம்மிடம் விசாரித்தனர். அந்தக் கேள்விகளுக்கு 'இல்லை' என்றே பதிலளித்தோம்.

 

ஆனால், யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மகிந்த ஹத்துருசிங்கவும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவும் எம்மைப் பற்றி ஊடகங்களுக்குத் தவறான கருத்துகளை வழங்கியுள்ளார்கள். வெளிநாட்டில் இருக்கும் புலிகளுடன் தொடர்புள்ளது என்றோ அல்லது இந்தியாவுக்குச் சென்று பயிற்சி எடுத்தோம் என்றோ எந்தச் சந்தர்ப்பத்திலும் நாம் சி.ஐ.டியினரிடம் தெரிவிக்கவில்லை.

 

அதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் என நாம் சி.ஐ.டியினரிடம் தெரிவிக்கவில்லை. யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி இவ்வாறு நாம் கூறியதாக ஊடகங்களுக்குத் தெரிவித்த கருத்துகளில் எவ்வித உண்மையும் இல்லை. இவ்வாறான கேள்விகளை சி.ஐ.டியினர் எம்மிடம் கேட்கவே இல்லை.

 

இதேவேளை, சி.ஐ.டியினரின் விசாரணையின்போது நாம் எவ்வித துன்புறுத்தல்களுக்கும் உள்ளாகவில்லை என்பதைக் கூற விரும்புகின்றோம். எம்மை பல்கலைக்கழக மாணவர்கள் என்ற ரீதியிலேயே அவர்கள் அணுகினார்கள். எமக்கு அவர்கள் அடிக்கவில்லை. உதைக்கவில்லை. சித்திரவதைப்படுத்தாமல் எம்மை விசாரித்தார்கள் என்பதுதான் உண்மை.


வவுனியாவில் 10 நாட்களாகத் தடுத்துவைக்கப்பட்டிருந்த நாம் பின்னர் வெலிக்கந்தை முகாமுக்கு மாற்றப்பட்டோம். அங்கு எமக்கு புனர்வாழ்வு என்று கூறினார்கள்.

 

அங்கு இரண்டு மாதங்களாகத் தடுத்துவைக்கப்பட்டிருந்த எமக்கு புனர்வாழ்வு என்று அரசு எதனைத் தந்தது என்று தெரியாது. அங்கிருந்த நாட்களில் சிங்களமொழியையே பெரும்பாலான நாட்களில் எமக்குக் கற்பித்தார்கள்.

 

அத்துடன், இடையிடையே வெலிக்கந்தையில் இருந்த முன்னாள் போராளிகளுக்கு அரசு வழங்கிய 'கவுன்ஸிலிங்'கில் (உளநலப் போதனை) எம்மைக் கலந்துகொள்ளச் செய்தார்கள். இதைவிடுத்து பெரிதாக அவர்கள் எமக்கு ஒன்றையும் வழங்கவில்லை. அங்கிருந்த முன்னாள் போராளிகளுக்கு மட்டும் தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட்டன. நாம் பல்கலைக்கழக மாணவர்கள் என்றபடியால் படிப்பதற்குரிய ஒழுங்குகளைச் செய்தார்கள். மேசைகள், கதிரைகள் தந்தார்கள். பெற்றோர் கொண்டுவந்து தந்த எமது பாடக் குறிப்புகளைக் கற்றோம்.

 

வெலிக்கந்தை புனர்வாழ்வு முகாமிலும் நாம் எவ்வித சித்திரவதைகளுக்கும் உள்ளாகவில்லை என்பதைக் கூற விரும்புகின்றோம்.

 

நாம் அங்கு தடுத்துவைக்கப்பட்டிருந்த நாட்களில் பெற்றோரும், பல்கலைக்கழக நிர்வாகத்தினரும் வந்து எம்மைச் சந்தித்து சுகம் விசாரித்தார்கள். அப்போது எவ்வித இடையூறுமின்றி நாம் அவர்களுடன் கலந்துரையாடினோம்.

 

எமது விடுதலைக்காக உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் அயராது குரல் கொடுத்து, கண்டனங்கள் வெளியிட்டு, போராட்டங்கள் நடத்தி அரசுக்கு அழுத்தங்களைக் கொடுத்த அனைவருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம் என தெரிவித்தார் தர்ஷானந்த்.

 

'நான் பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டதால் அச்சமடையவில்லை. கொண்ட இலட்சியத்தில் உறுதியாக நிற்கின்றேன். நான் இப்போது யாழ். பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவன். எனது பல்கலைக்கழக கற்கைநெறி முடிவடைவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்தக் காலப்பகுதிகளில் கற்கைநெறியைப் பூர்த்திசெய்வதில் நான் குறியாக இருக்கின்றேன்' என அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=cc8c21b5-f71a-4def-bbb5-8223eab5f29c

தம்பி நீ மனுசன்டா

  • கருத்துக்கள உறவுகள்

புனர்வாழ்வு அளிக்க வேண்டியது மகிந்தவுக்கும் கோத்தாவிற்கும் தினேஷ் குணவர்த்தனவிற்கும் விமல் வீரவன்ச போன்றவர்களுக்கும் பெளத்த பீடாதிபதிகளுக்குமே அன்றி.. மக்களுக்கு அல்ல..! இவர்கள் தான் இந்த நாட்டை சீரழிக்கிறார்கள். மனிதர்களிடையே இன வேற்றுமையை தூண்டி.. உரிமை இழப்பிற்கு காரணமாக உள்ளனர். அந்த உரிமை இழப்பின் எதிரொலிதான் தமிழர்கள் என்ற மனிதர் கூட்டத்தின் விடுதலைக்கான தேடல். அதனை மொழி கற்பிப்பதன் மூலம்.. தீர்க்க முடியாது. ஆனால் தமிழர்களின் குரலை.. சிங்கள மக்களுக்கு அவர்களின் மொழியில்.. கொண்டு செல்ல சிங்களம் இலவசமாக உதவுவதில் நன்றி சொல்வது அவசியம்..!

 

மனித மூளையில்.. உள்ளத்தே உள்ள இலட்சியத்தை ஒரு சில புறக்காரணிகள் சிதைத்து விடும் என்றால்  மனித வரலாற்றில் பல புரட்சியாளர்கள் தோன்றி இருக்கவே முடியாது. மனிதனும் நாகரிகக் கூர்ப்புக் கண்டிருக்க முடியாது..! சிங்களம்.. மனிதனைப் பற்றி கற்க நிறைய இருக்குது. :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எமது விடுதலைக்காக உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் அயராது குரல் கொடுத்து, கண்டனங்கள் வெளியிட்டு, போராட்டங்கள் நடத்தி அரசுக்கு அழுத்தங்களைக் கொடுத்த அனைவருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம் என தெரிவித்தார் தர்ஷானந்த்.

 

இந்த நன்றி அறிதல்.. புலம்பெயர் மக்கள் தூண்டிவிட்டு கூத்துப் பார்க்கின்றனர் என்று எந்தப் புரிதல்களும் இன்றி கருத்துச் சொன்னவர்களுக்கு வழங்கப்பட்ட நல்ல சாட்டையடி.

 

புலம்பெயர் இளையோர் அமைப்புக்களையே இந்த நன்றி அதிகம் போய் சேர வேண்டும். அவர்கள் விடாமல் அயராது சிறிய அளவிலான பங்களிப்புகளை மட்டும் வைத்துக் கொண்டு.. போராட்டங்களில் ஈடுபட்டனர். :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இந்த நேரத்தில் இப்பிடியான பேட்டி தேவையா? இப்பொழுது தான் கைது செய்து எத்தனையோ அழுத்தங்கள் கொடுத்து விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்கள் இந்த நேரத்தில் மீண்டும் கைது செய்யப்பட்டால் என்ன ஆகிறது?

  • கருத்துக்கள உறவுகள்

இதில் அவர்களுக்கு அரசுக்கும் மக்களுக்கும் பல்கலை நிர்வாகத்திற்கும் சிலவற்றைத் தெளிவாகச் சொல்ல வேண்டிய..ஒரு தேவை இருக்கும் என்றே நினைக்கிறேன். இன்றேல்.. இந்த பேட்டியையே வழங்க வேண்டிய தேவை அவர்களுக்கு இல்லை. எம்மைத் தொடர்ந்து.. கைது செய்வதன் மூலம் கட்டுப்படுத்த முடியாது. மாறாக மக்களின் மனங்களை வெல்ல அரசியல் தீர்வைத் தேடு என்பதைச் சொல்வதாக இருக்கும்..! :icon_idea:

கனகரத்தினமும் ஜெனிவா வந்தவர் என்பதால் இதை இங்கேவிடுவது இந்த இரண்டு மாணவர்களுக்கும் பாதுகாப்பாக இருக்கு..

  • தொடங்கியவர்

உண்மையில் இந்த நேரத்தில் இப்பிடியான பேட்டி தேவையா? இப்பொழுது தான் கைது செய்து எத்தனையோ அழுத்தங்கள் கொடுத்து விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்கள் இந்த நேரத்தில் மீண்டும் கைது செய்யப்பட்டால் என்ன ஆகிறது?

 

நானும் அப்படி எண்ணினேன்.

ஆனால் அந்த மாணவர் சிங்கள அரசை குறை கூறாமல் சில செய்திகளை அவதனாமாக   பலருக்கு கூறியுள்ளார். மிகவும் திறமைவாய்ந்தவர் என்பதில் சந்தேகமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

வெலிக்கந்தை புனர்வாழ்வு முகாமிலும் நாம் எவ்வித சித்திரவதைகளுக்கும் உள்ளாகவில்லை என்பதைக் கூற விரும்புகின்றோம்.

 

இந்த அறிக்கையை சிங்கள அரசின் வற்புறுத்தலால்  விடவில்லை என்பதற்கு என்ன உத்தரவாதம்??

இந்த அறிக்கையை சிங்கள அரசின் வற்புறுத்தலால்  விடவில்லை என்பதற்கு என்ன உத்தரவாதம்??

 

இந்த அறிக்கையையே சிங்கள அரசின் வற்புறுத்தலுக்காக சொல்லியிருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டிருந்தாலும் அந்த விடயம் வெளிவரக்கூடாது என்று புனர்வாழ்வு அளிக்கப்படும் போது சிங்கள அரசு கூறியிருப்பார்கள்.  

சில உண்மைகளை சொல்வதற்கு சில பொய்களையும் சேர்த்து சொல்ல வேண்டியிருந்திருக்கும். எனவே தாம் எந்தவித சித்திரவதைக்கும் உள்ளாகவில்லை என்று கூறியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். :unsure: சித்திரவதைக்குட்படுத்தினார்கள் என்று கூறினால் மீண்டும் கைது செய்து விடுவார்கள். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அறிக்கையையே சிங்கள அரசின் வற்புறுத்தலுக்காக சொல்லியிருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டிருந்தாலும் அந்த விடயம் வெளிவரக்கூடாது என்று புனர்வாழ்வு அளிக்கப்படும் போது சிங்கள அரசு கூறியிருப்பார்கள்.  

சில உண்மைகளை சொல்வதற்கு சில பொய்களையும் சேர்த்து சொல்ல வேண்டியிருந்திருக்கும். எனவே தாம் எந்தவித சித்திரவதைக்கும் உள்ளாகவில்லை என்று கூறியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். :unsure: சித்திரவதைக்குட்படுத்தினார்கள் என்று கூறினால் மீண்டும் கைது செய்து விடுவார்கள். :rolleyes:

 

 

சிறிலங்கா அரசின் வெற்றிகளுக்கு முக்கியமான காரணங்களில் ஒன்று, அவர்களது உளவியல் போர், மற்றும் புலனாய்வு முறைகளில் ஏற்பட்டுள்ள பாரிய வளர்ச்சியாகும். பின்வரும் அம்சங்கள் இவற்றில் முக்கியமானவை:
  1. பெருமளவிலான தமிழர்களை புலனாய்வு துறையிலும் உளவியல் போரிலும் இணைத்து கொள்ளல்.
  2. அடிதடி, வன்முறை போன்ற பெருமளவில் பாதிப்பு கூடிய ஆனால் பயன் குறைந்த முறைகளை விட்டு, உளவியல், அறிவியல் சார்ந்த பாதிப்பு குறைந்த, ஆனால் பயன் கூடிய அணுகுமுறைகளை பயன்படுத்துதல்.
இந்த மாணவர் தலைவர் இரகசியமாக சிறிலங்கா புலனாய்வு துறைக்கு வேலை செய்ய ஆரம்பித்துள்ளார் என்ற கருத்து தெரிவிக்கப்படும் நாள் வெகு துரத்தில் இல்லை போலவே தெரிகிறது.
  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக சிங்களப் படையினர் பல்கலைக்கழக மாணவர்கள் விடயத்தில் கூடிய நிதானமாக நடந்து கொள்ள பணிக்கப்பட்டுள்ளனர் என்றே நினைக்கிறேன். காரணம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பிரச்சனை என்றால் இதர மாணவர்களின் எழுச்சி பற்றிய பயம்..! மேலும் பல்கலைக்கழகங்களுக்குள் தான் ஆளும் கட்சிக்கு எப்ப அழுத்தம் கொடுக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கக் கூடிய எதிரணிகளும் அதிகம் உள்ளன.

 

பல தடவைகள் தென்னிலங்கையில் வழிமறிக்கப்பட்ட வேளைகளில் எல்லாம்.. பள்ளி ஐடி தான் கூட வந்த தெய்வமாக இருந்து காப்பாற்றியுள்ளது.

 

அந்த மாணவர் செவ்வியில் தெளிவாக ஒன்றைச் சொல்லியுள்ளார். தங்களை விசாரணையின் போது.. துன்புறுத்தவில்லை என்றே சொல்லி இருக்கிறார். மற்றவர்களை என்று சொல்லவில்லை..!

 

நாமாக இதில் எங்கள் சுயநிலை விளக்கம் அளிக்காமல்... இதனை இப்படியே விட்டு விடுவதே நல்லம். அவரே சொல்லி இருக்கிறார் நான் என் படிப்பை பார்க்க வேண்டிய தருணம் இது என்று..! :):icon_idea:

மாணவரின் செவ்வி நேர்மையானது! உண்மையில் நடந்ததை மட்டுமே கூறியுள்ளார்.

இவர்களுக்கு சித்திரவதை நடக்கவில்லை என்பதால் ஏனையோருக்கும் நடக்கவில்லை என்று கருத முடியாது. மாணவர்கள் கைதுக்கு பலத்த ஆதாரங்கள் இருப்பதால் மிகவும் கவனமாக சிங்கள அரச பயங்கரவாதிகள் நடந்துள்ளனர்.

இங்கு சிலர் குறிப்பிட்டது போல் இது ஒருவித உளவியல் போர். ஆனால் இது எப்படி சிங்கள அரச பயங்கரவாதத்துக்கு எதிராக திரும்பும் என்று பொறுத்திருந்து பார்ப்பதே நல்லது.

மாணவர்களின் கைதுகள் சட்ட விரோதமானவை. இதற்கு நீதியும் நட்டஈடுயம் கேட்கும் உரிமை அவர்களுக்கு உண்டு! அதை உரிய நேரத்தில் செய்வதன் மூலம் சிங்கள அரச பயங்கரவாதிகளின், சிங்கள பௌத்த நீதித்துறையின் அடாவடித்தனங்களை வெளிக்கொண்டுவரலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.