Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்கா-மஹிந்த இரகசிய பேச்சு: சுப்பிரமணிய சுவாமி தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Mahinda%20and%20Blake%20meeting.jpg

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவால் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணையில் திருத்தங்களை மேற்கொள்வது குறித்து இலங்கை அமெரிக்காவுடன் இரகசியப் பேச்சுக்களை நடத்தி வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

இரு தரப்புக்கும் இடையில் தரகராகச் செயற்படும் இந்திய ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து கருத்து வெளியிட்ட சுப்பிரமணிய சுவாமி,இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்துச் சுதந்திரமான, சர்வதேச விசாரணைகளை வலியுறுத்தும் பிரேரணையின் வரைவு தொடர்பாக அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் பேச்சுக்கள் இடம்பெற்று வருகின்றன. 

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நெருக்கமான அதிகாரிகள், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் ஆகியோர் இந்தப் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து சுப்பிரமணியசுவாமி மேலும் தெரிவித்ததாவது:

எனவே இந்த விவகாரத்தில் இன்னமும் சமரசம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. மனித உரிமை மீறல்கள் தொடர்பாகச் சர்வதேச விசாரணை தேவை என்ற அமெரிக்கப் பிரேரணை வரைவைத் திருத்தம் செய்வது குறித்தே பேச்சுக்கள் இடம்பெறுகின்றன. 

இதன் விளைவாக, மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை அரசே உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும் என்று, அமெரிக்காவின் பிரேரணை வரைவு இறுதியாக்கப்படும் என்று எதிர்பார்க்கிறேன்.

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரைக் கொழும்பில் கடந்த மாதம் 28ஆம் திகதி சந்தித்தேன்.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உதவிச் செயலர் றொபேட் ஓ பிளேக்கை இந்த மாத முதல் வாரத்தில் சந்தித்தேன். சர்வதேச விசாரணையை ஏற்கும்படி  இலங்கையிடம் கோருவது நடைமுறைக்கு ஒத்துவராது என்பதை அவரிடம் திட்டவட்டமாக எடுத்துக் கூறினேன். 

இதுபோன்ற கோரிக்கையால் இந்தியாவும் மகிழ்ச்சியடையாது என்பதையும் கூறினேன். ஏனெனில், இதை இந்தியா ஏற்றுக் கொண்டால் காஸ்மீரில் நடந்த மனித உரிமை மீறல் குறித்து சர்வதேச விசாரணை தேவை என்ற கோரிக்கை எழுவதற்கு வாய்ப்புண்டு.

இப்போதைய பிரேரணை வரைவை அமெரிக்கா மிகுந்த எச்சரிக்கையுடன் உருவாக்கியுள்ளது.குறிப்பாக, போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை என்று நேரடியாகக் கோராமல், ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் பரிந்துரையைக் குறிப்பிட்டுள்ளது. 

அந்தப் பரிந்துரையில் சுதந்திரமான, சர்வதேச விசாரணை தேவை என்று கூறப்பட்டுள்ளதை அமெரிக்கா மேற்கோள்காட்டியுள்ளது. இந்தப் பிரேரணையால் விடுதலைப் புலிகள் அமைப்புக்குப் புத்துயிர் கிடைப்பதற்கோ, இலங்கையில் பிரிவினைவாதம் மற்றும் தமிழ்த் தீவிரவாதம் மீண்டும் உருவாகவோ வாய்ப்பு ஏற்படக் கூடாது என்பதை நான், அமெரிக்க அதிகாரிகளிடம் கூறினேன். 

விடுதலைப் புலிகளின் தோல்விக்கு அமெரிக்கா பங்களித்தது என்பதையும் அவர்களுக்கு நினைவூட்டினேன்.புலிகளின் கப்பல்களை அமெரிக்க ஆயுதங்கள் மூலமே இலங்கையால் அழிக்க முடிந்தது.

இந்தப் பிரேரணை விடயத்தில் ராஜபக்ஷ அரசும் தனது நிலைப்பாட்டை மென்மையாக்கிக் கொள்ளும் என்று எதிர்பார்க்கிறேன். ஏனெனில் இலங்கையின் ஏற்றுமதிச் சந்தைகளில் ஒன்றாக அமெரிக்கா இருக்கிறது என்றார்.

 

http://www.eelanatham.net/story/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D

  • கருத்துக்கள உறவுகள்

இலஙகை சென்றமுறை போலன்றி இம்முறை மிகவும் இராசதந்திரத்துடன் செயல்படுகிறது. குற்றம் சுமத்தப்பட்ட ஒரு தரப்பு என்கிற நிலையை அது மறந்துவிடவில்லை.
இம்முறை அது சிங்கக்கொடி ஊர்வலங்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு மேற்குலகை மிரட்டும் போக்கை கைவிட்டுள்ளது. இதற்க்கு இரண்டு வலுவான காரணங்கள் உள்ளன. 
1. ஜெனிவாவில் தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யும் சமரசச் சூழலை உருவாக்குதல். 
2.கடுமையான தீர்மானம் மேற்கு நாடுகளுக்களில் புலிகளையே பலப்படுத்தும் என்கிற கருத்தை வலுப்படுத்துதல். .
சுவாமியின் அருள்வாக்கு திரை மறைவுபேச்சுகள் எல்லாவற்றுக்கும் இதுவே அடிப்படை. இனியாவது தீர்மான வாக்கெடுப்பு வரை நாம் அடக்கி வாசிக்க வேண்டிய அவசியத்தை உணரவேண்டும்.

 

இம்மாதம் 22ம் திகதி வரைக்கும் ஈழ, புலம் பெயர்ந்த மற்றும்  தமிழ்நாட்டு தமிழர் தரப்புகள் அமரிக் தீர்மானம் தொடர்பான கண்டனங்களைக் பின்போடவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் - வ.ஐ.ச.ஜெயபாலன்

அட! 

 

 

புதிய தலைமுறை டிவியில் அமெரிக்காவை வெளியேற்ற இந்தியா உள்ளே புகுந்து தனக்கே விளங்காத 13ம்  திருத்தம் + யை நடை முறைப்படுத்த வேண்டும் என்றவர் இப்போது திரும்ப அமெரிக்கா சம்பந்தரை  கண்டால் புலிகள் என்று சொல்லிவிடபோகுது என்ற அதே பழைய கதையோடு திரும்ப  வருகிறார்.

 

அமெரிக்கா இரண்டாவது தடவை வரைவுப் பிரேரணையின் கடுமையைக் கூட்டி விட்டது.  இது புலம் பெயர் மக்களின் செயல்பாடுகளால் என்பது மறுக்க முடியாது. பிரேரணையில் மிகப் பிரதான சரத்து பொறுப்பு கூறல். இது இலங்கை அரசு தமிழ் மக்களை புலிகள் என்று பொய் கூறி செய்த கொலைகள் பற்றியது.  அரச செயல்ப்பாட்டாளர்கள் புலம் பெயர் மக்களை புலிகள் என்று அழைக்க முடியாது என்றதைதான் பிளேக் போர் முடிந்து சில நாட்களில் சொல்லிருந்த அறிக்கையில் இருந்தது. அரச பிரசாரிகள் திருட்டுத்தனமாக "புலம் பெயர் மக்கள் புலிகள்" என்று சுப்பிரமணிய சாமியுடன் சேர்ந்து கூறினாலும் அமெரிக்கா ஒருநாள் அரசை பொறுப்பு கூறலிற்கு பிடிக்கத்தான் போகிறது. இது அமெரிக்காவில் இனி குடியரசு கட்சி வந்தாலும் நடந்த்துதான் தீரும்.

 

"கடுமையான தீர்மானம் மேற்கு நாடுகளுக்களில் புலிகளையே பலப்படுத்தும் என்கிற கருத்தை வலுப்படுத்துதல்." உண்மையில தான் கேட்கிறேன் அரசு "மேற்குநாடுகளில் புலிகள்" என்று சொல்லும் போது

அந்த வார்த்தையை அரசு .0000001% விதம் தன்னும் உண்மையாக நம்பித்தான் சொல்கிறது என்று வைத்துதான் இதை எழுதுகிறார்களா இந்த பிரச்சார பீரங்கிகள்.

 

கிழக்கும்-வடக்கும் ஒன்றாக இருந்தால்தான் 13ம் திருத்தம் இருக்கமுடியும் என்ப்தை தெரிந்து வைத்துகொண்டு . கிழக்கை வடக்கிலிருந்து பிரிக்க வேண்டும் என்று வாதாடியவர்கள்.

 

இதுவரையில் எந்த தந்திரமும் அமெரிக்கா பிரேரணைக்கு எதிராக எடுபடாததால்  புலம் பெயர்  நாடுகளில் இருப்போர் அமெரிக்க பிரேரணைக்கு எதிராக புரடசி செய்கிறார்கள் என்ற மாயையை உருவாக்கி அதை அடக்கி வாசிக்கும் படி யாழில் பதிகிறார்கள். இவ்வளவுக்கும் அமெரிக்க தீர்மானத்துக்கு ஆதரவு தேடி ஜெனிவாவில் இரவுபுகல் புலம் பெயர் மக்கள் தொடர்ந்து செயல்ப் பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

 

 

புலம்பெயர் மக்களின் செயற்பாடுகளினால்தான் அமெரிக்கா வரைவுப் பிரேரணையை கடுமையாக கூட்டியதா? சரி, அப்படியே வைத்துக் கொள்வோம். இப்பொழுது பிரேரணை வலுவிழந்து போவதாக செய்தி வருகிறதே! அது யாருடைய செயற்பாடு?

  • கருத்துக்கள உறவுகள்

இலஙகை சென்றமுறை போலன்றி இம்முறை மிகவும் இராசதந்திரத்துடன் செயல்படுகிறது. குற்றம் சுமத்தப்பட்ட ஒரு தரப்பு என்கிற நிலையை அது மறந்துவிடவில்லை.

இம்முறை அது சிங்கக்கொடி ஊர்வலங்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு மேற்குலகை மிரட்டும் போக்கை கைவிட்டுள்ளது. இதற்க்கு இரண்டு வலுவான காரணங்கள் உள்ளன. 

1. ஜெனிவாவில் தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யும் சமரசச் சூழலை உருவாக்குதல். 

2.கடுமையான தீர்மானம் மேற்கு நாடுகளுக்களில் புலிகளையே பலப்படுத்தும் என்கிற கருத்தை வலுப்படுத்துதல். .

சுவாமியின் அருள்வாக்கு திரை மறைவுபேச்சுகள் எல்லாவற்றுக்கும் இதுவே அடிப்படை. இனியாவது தீர்மான வாக்கெடுப்பு வரை நாம் அடக்கி வாசிக்க வேண்டிய அவசியத்தை உணரவேண்டும்.

 

இம்மாதம் 22ம் திகதி வரைக்கும் ஈழ, புலம் பெயர்ந்த மற்றும்  தமிழ்நாட்டு தமிழர் தரப்புகள் அமரிக் தீர்மானம் தொடர்பான கண்டனங்களைக் பின்போடவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் - வ.ஐ.ச.ஜெயபாலன்

 

மேற்கு நாடுகளில் புலி என்பதை சிங்களவனைத் தவிர வேறு யாரும் சொல்வதே இல்லை.. இது ஒரு கருத்தியலும் அல்ல.. அப்படியே மேற்குநாடுகளில் புலி என்று பிரச்சனைகள் வரும்போது அந்தந்த நாடுகளின் சட்ட நடைமுறைகள் இயக்கம்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன.. உதாரணம் கனடாவின் கப்பல் அகதிகள்..!

 

ஆகவே மேற்கு நாடுகளில் புலி என்கிற குழறல் எடுபடப்போவதில்லை.

 

மற்றது.. மேற்குலகத் தீர்மானம்.. அது ஏற்கனவே ஒரு வலுவிழந்த தீர்மானம்.. Unfettered access என்கிற ஒரு சொல்லாடல் மட்டுமே சிங்களவனை உறுத்துகிறது.. அதுவும் போய்விடுமா என்கிற ஒரு நிலை உள்ளது..

 

போகாமல் இருக்க போராட்ட முன்னெடுப்புகள் அவசியம், குறிப்பாக தமிழகத்தில்.. அதைத் தடுப்பதால் என்ன நன்மை உங்களுக்கு?

 

புலம்பெயர் மக்களின் செயற்பாடுகளினால்தான் அமெரிக்கா வரைவுப் பிரேரணையை கடுமையாக கூட்டியதா? சரி, அப்படியே வைத்துக் கொள்வோம். இப்பொழுது பிரேரணை வலுவிழந்து போவதாக செய்தி வருகிறதே! அது யாருடைய செயற்பாடு?

யார் அதிலிலும் சந்தேகமா? முயற்சி திருவினையாக்கியிருக்கிறது. நன்றி. சம்பள உயர்வுக்கு வாழ்த்துக்கள்

 

(அது கதை மட்டும்தான். <_<  இல்லை என்றால் இன்னொரு இராணுவ வியூகமாகவும் இருக்கலாம். :icon_idea: இந்த பிரேரணை போனால் இன்னொன்றில் மகிந்தாவும், கோத்தாவும், பொன்சேக்காவும் உள்ளேதான் :) )

Edited by மல்லையூரான்

மல்லையூரானின் பதிலடி ரசிக்கக் கூடியதாக இருந்தது. உதட்டில் ஒரு புன்னகை எட்டிப் பார்த்துப் போனது. ஆனாலும் பதிலடி என்பதைத் தாண்டி அதில் வேறு ஒன்றும் இல்லை.

இசை!

மேற்குநாடுகளில் புலிகள் பற்றி மிகுந்த எச்சரிக்கையாகவே இருக்கிறார்கள். மேற்குலகம் முன்னின்று புலிகளை அழித்து ஒழித்தது. அவர்களுக்கு புலிகளைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை என்று எப்படிச் சொல்வீர்கள்?

Edited by சபேசன்

மேற்கு நாடுகளில் புலி என்பதை சிங்களவனைத் தவிர வேறு யாரும் சொல்வதே இல்லை.. இது ஒரு கருத்தியலும் அல்ல.. அப்படியே மேற்குநாடுகளில் புலி என்று பிரச்சனைகள் வரும்போது அந்தந்த நாடுகளின் சட்ட நடைமுறைகள் இயக்கம்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன.. உதாரணம் கனடாவின் கப்பல் அகதிகள்..!

 

ஆகவே மேற்கு நாடுகளில் புலி என்கிற குழறல் எடுபடப்போவதில்லை.

இதில் இலங்கை அரசின் பிரசார பீரங்கிகள் தங்கள் ஸ்கிரிப்ட்டை புதுப்பித்துக்கொள்ள பிந்திப்போய் இருக்கிறார்கள் தவிர வேறு ஒன்றும் இல்லை.இலங்கை கூட அமெரிக்காவிடம் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கும் படி கேட்டிருக்கிறது. அதன் கருத்து தான் புலம் பெயர் மக்களை இப்போதெல்லாம் புலிகளாக் கொள்வத்தில்லை என்று பிரச்சாரம் செய்யவே.

 

நமது பண்டிதர்கள் காலம் பிந்தியதிற்கு கோத்தாவால் தண்டிக்கப்படுவார்கள். :)

மல்லையூரானின் பதிலடி ரசிக்கக் கூடியதாக இருந்தது. உதட்டில் ஒரு புன்னகை எட்டிப் பார்த்துப் போனது. ஆனாலும் பதிலடி என்பதைத் தாண்டி அதில் வேறு ஒன்றும் இல்லை.

 

அந்தப் பதிலடி வரும் என்று தெரிந்துதான் எழுதப்பட்டது. அதனால்த்தான் நான் பதிலடியையும் தவறவிடவில்லை. ஆனால் தேவையான பதிலும் அதில் இருக்கிறது.

 

பதிலடி வேறு. அதிலே பதில் வேறாக இருக்கிறது.போனமுறை இந்தியாவை வைத்து பிரேரணையை நீர்க்கப்பண்ணி இந்த முறைப் பிரேரணை வருவதை தடுக்க முடியவில்லை. புலம் பெயர் மக்களை சாட்டிக்கொண்டு தாம் அயராது உழைத்து திரும்பவும்  இந்த முறை பிரேரணையின் வலிவை குறத்தாலும்  "இந்தப் பிரேரணை போனால் இன்னொன்றில் மகிந்தாவும், கோத்தாவும், பொன்சேக்காவும் உள்ளேதான் :) "

 

இது வரையில் இரண்டாம் வரைபுக்கு குறைந்த வரைபு ஒன்று வெளியில் வரவில்லை. எனவே அப்படி ஒன்று வரப்போவதாக எதிர்வு கூறுவது அது வரும் வரை ஒரு பிரச்சாரக் கதையே.

 

போன தடவை அமெரிக்கப் பிரேரணையை இந்தியா நீர்த்துப்போக செய்ததினால்மட்டும் இந்த முறை பிரேரணைகள் வருவதை இந்தியாவால் தடுக்க முடியவில்லை. யாரும் போன முறை அமெரிக்க பிரேரணையை நீர்த்துப்போனதற்கு புலம் பெயர் மக்களை குற்றம் சாட்டவில்லை. ஆனால் பொய் அட் மட்டும்தான் தனது பதிவில் - இனியாவது- என்ற சொற்ப்பிரயோகத்தால் அப்படி சம்பங்களை வலிந்து செருக முயல்கிறார்.

 

போனமுறை கூட்டமைப்பை வரவிடாமல் தடுக்க பல முயற்சிகள் நடந்தது. ஆரம்பத்தில் சம்பந்தர் புலியாக்கப்படுவார் என்று அவிழ்த்த கதைகள் எடுபடாமல்போன பின்னர் இனக்கலவரம் என்று மிரட்டப்பட்டது. ஆனால் இலங்கையின் எந்த முயற்சியாலும் இந்தியா பிரேரணையை நீர்க்க பண்ணியது என்பதை மறுப்பத்து போல சல்மான் குர்திஷ் இந்தியா பிரேரணையை வெற்றி பெறவிட்டால் இந்தியா கஸ்மீரில் அதையே சந்திக்க வேண்டும் என்று பொருள்பட மேல் சபை, கீழ் சபை விவாதங்களில் கூறியிருக்கிறார். கவனிக்க வேண்டியது இங்கே இதுவரை எந்த இந்து வெளிநாட்டு விவகார அமைச்சரும் கூறாததை  சல்மான் குர்திஷ் கூறினார் என்பதும், கஸ்மீரில் இருந்து இந்தியா வெளியேறவேண்டும் என்பதை இந்தியாவின் நட்பு நாடுகளில் அமெரிக்கா மட்டும்தான் பங்கிரங்கமாக கேட்கிறதும் என்பதும் அறிந்தது.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

இசை!

மேற்குநாடுகளில் புலிகள் பற்றி மிகுந்த எச்சரிக்கையாகவே இருக்கிறார்கள். மேற்குலகம் முன்னின்று புலிகளை அழித்து ஒழித்தது. அவர்களுக்கு புலிகளைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை என்று எப்படிச் சொல்வீர்கள்?

அவர்களுக்குக் கவலை இல்லை என்று கூறவில்லை.. அந்தந்த நாடுகளின் சட்ட எல்லைக்குள் நின்று நடவடிக்கை எடுத்துக்கொண்டுதான் உள்ளார்கள்..

ஆனால் சிங்கள அரசு போராட்டம் நடத்துவோர் அனைவரிலும் புலிமுலாம் பூச எத்தனிக்கிறது.. இதன்மூலம் அந்தப் போராட்டத்தின் மூலமாகச் சொல்லப்படும் செய்திகளின் வீச்செல்லையைக் குறைக்க விழைகிறது..

இந்தச் சதிவேலைக்குப் பலியாகும் நிலையில் மேற்குலகம் இல்லை என்பதையே சொல்லவந்தேன்..

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் மக்களின் செயற்பாடுகளினால்தான் அமெரிக்கா வரைவுப் பிரேரணையை கடுமையாக கூட்டியதா? சரி, அப்படியே வைத்துக் கொள்வோம். இப்பொழுது பிரேரணை வலுவிழந்து போவதாக செய்தி வருகிறதே! அது யாருடைய செயற்பாடு?

 

நீங்கள் புலம் பெயர்ந்த அமைப்புக்களால் தான் என்று சொல்ல வருகின்றீர்களா?

 

சிறிலங்கா தனது அத்தனை பலத்தையும் பாவித்தும் தோற்று வருவதற்கு காரணம்  எம்மிடையே  உள்ள உண்மை. தர்மம் தான்.  அந்த முள்ளிவாய்க்காலில் ஆகுதியாகிய   போராளிகள் மக்களுடைய  தியாகங்கள் ஒரு நாளும் வீணாகாது.

 

 

இன்று நீறுபூத்த நெருப்பாக எரியத்தொடங்கியுள்ள  தமிழக மாணவர்களது போராட்டங்கள் மேற்குலக நாடுகளால் கவனத்தில் எடுக்கப்படமாட்டாது என்று எண்ணுகின்றீர்களா?

இந்த மாணவர்கள்தான் நாளை  மேலைதேசத்தையே  ஆளப்போகின்ற திறமையாளிகள் என்பதை உலகம் அறியும்.

 

அதை எவ்வாறு முன்னோக்கி  நகர்த்தலாம் என்று ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்

அதை விடுத்து  வெறும் வியாபாரி   போல் இதை முன்பே சொன்னேன்  என்ற லாபத்துக்காய்  எழதுவதால் நாலு பணம் பார்க்கமுடியும்

ஆனால் வரலாறு.....................????

Edited by விசுகு

கடந்த ஆண்டின் தொடர்ச்சியாக இந்த ஆண்டின் பிரேரணை இருக்குமாக இருந்தால் அது பின்வரும் இரண்டு விடயங்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

- பிரேரணையில் உள்ளவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான கால எல்லை

- நடைமுறைப்படுத்துவதை கண்காணிப்பதற்கு சர்வதேச பொறிமுறை

இதில் இரண்டாவது போன ஆண்டின் பிரேரணையிலேயே இருந்து பின்பு இந்தியாவின் அழுத்தத்தால் நீக்கப்பட்டது. ஆகவே இந்த ஆண்டு கொண்டுவரப்படும் பிரேரணையில் இவைகள் இயல்பாகவே இடம்பெற வேண்டும்.

பிரேரணை வருகின்ற பொழுது இவைகள் இடம்பெறாமல் இருந்தால், அது சில காரணங்களால் இல்லாமல் செய்யப்பட்டதாகவே இருக்கும். தற்போதைய தகவல்களின்படி அப்படி ஏதும் இல்லை என்பது போன்றுதான் தெரிகிறது.

விழுந்தாலும் மீசையில் மண்படவில்லை.

 

இவ்வளவு cool மகிந்தாவிடம் இருந்திருந்தால் யப்பான் போயிருக்கவேண்டாம்.

 

புலிகள் பற்றிய மேற்குலகின் நிலைப்பாடு பற்றி பேசுவது என்றால் நிதானமான நிறுத்தி நிறுத்தி பேச வேண்டும்.

புலிகள் அழிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகின்றன. இயங்கிக் கொண்டிருக்கின்ற அமைப்புக்கள் மீதான தடைகளையை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆய்வுக்கு உட்படுத்தி தடையை நீக்குகின்ற மேற்குலகம் விடுதலைப் புலிகள் மீதான தடையை இன்று வரை நீக்கவில்லை. ஏன்??

புலிகள் போராடிய காலங்களில் ஒரு எல்லையை தாண்டி பிற நாடுகளால் சிறிலங்காவில் செல்வாக்கு செலுத்த முடியவில்லை. ஆனானப்பட்ட இந்தியாவே ஒரு பத்து ஆண்டுகள் தள்ளி நின்று பார்த்துக் கொண்டுதான் நின்றது. அப்படி என்றால் மேற்குலகின்ற நிலை எப்படி இருந்திருக்கும்?

சிறிலங்கா அரசால் மற்றைய நாடுகளை கையாள முடிந்தது. இதற்கு காரணம் புலிகள். புலிகள் உண்மையில் சிறிலங்காவையும் சேர்த்தே காப்பாற்றினார்கள். இன்றைக்கு புலிகள் இல்லை. சிறிலங்கா உலக நாடுகளின் ஆடுகளம் ஆகிவிட்டது.

சிறிலங்கா மீதான தங்களின் தலையீட்டையும் செல்வாக்கையும் தடுக்கின்ற சக்தியாக விளங்கிய புலிகளை மேற்குலகம் மீண்டும் எழுவதற்கு அனுமதிக்காது. புலிகள் இல்லாத வரைதான் சிறிலங்காவை தாம் நினைத்தபடி ஆட்டி வைக்க முடியும் என்பதில் அவைகள் தெளிவாக இருக்கின்றன. கூட்டமைப்பு போன்ற ஒன்றைத்தான் மேற்குலகம் விரும்புகிறது.

மீண்டும் புலிகள் எழுச்சி பெற்று விடுவார்கள் என்பது போன்ற தகவல்கள் மேற்குலகின் கவனத்தை நிச்சயம் ஈர்க்கும். கவலை கொள்ளவும் வைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

விடுங்கையா poet ஐயாவும் தமிழ் நாட்டில இருந்து நாலு படம் நடிக்க வேண்டாமா....பிறகு புலிகளுக்கு ஆதரவா கதைக்க போய் ஈழவேந்தன நாடு கடத்தின மாதிரி கடத்திட்டா அப்புறம் என்ன ஆகிறது அது தான் ஐயா இப்பிடி :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விடுங்கையா poet ஐயாவும் தமிழ் நாட்டில இருந்து நாலு படம் நடிக்க வேண்டாமா....பிறகு புலிகளுக்கு ஆதரவா கதைக்க போய் ஈழவேந்தன நாடு கடத்தின மாதிரி கடத்திட்டா அப்புறம் என்ன ஆகிறது அது தான் ஐயா இப்பிடி :D

உண்மையான நிலைப்பாட்டை சொன்ன சுண்டலுக்கு நன்றி  :D

புலிகள் பற்றிய மேற்குலகின் நிலைப்பாடு பற்றி பேசுவது என்றால் நிதானமான நிறுத்தி நிறுத்தி பேச வேண்டும்.

புலிகள் அழிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகின்றன. இயங்கிக் கொண்டிருக்கின்ற அமைப்புக்கள் மீதான தடைகளையை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆய்வுக்கு உட்படுத்தி தடையை நீக்குகின்ற மேற்குலகம் விடுதலைப் புலிகள் மீதான தடையை இன்று வரை நீக்கவில்லை. ஏன்??

ஏன் ?  :rolleyes: 

அது எனக்கும் புரியாத புதிராகவுள்ளது சபேசன் 

  • கருத்துக்கள உறவுகள்


 

 

மீண்டும் புலிகள் எழுச்சி பெற்று விடுவார்கள் என்பது போன்ற தகவல்கள்
மேற்குலகின் கவனத்தை நிச்சயம் ஈர்க்கும். கவலை கொள்ளவும் வைக்கும்.


மேற்குலகம் புலிகள் இருந்த போதும்.. இணைத்தலைமை நாடுகள் என்ற போர்வையில் பிரச்சனையில் தலைப்போட்டது. புலிகள் இல்லாத போது அமெரிக்காவின் தீர்மானங்களூடு தலைப்போடினம்.

 

புலிகள் மேற்கிற்கு ஆபத்தானவர்கள் அல்ல என்பதை மேற்குலகம் புரிந்து கொண்டிருந்தது. ஆனால் தெற்காசியாவில் தமது நகர்வுகள் எல்லாவற்றிற்கும் புலிகள் ஒத்துவர மாட்டார்கள் என்பதையும் அவர்கள் அறிந்திருந்தார்கள்.

 

அந்த வகையில் தான் புலிகள் மீதான தடைகள். புலிகள் ஒரு வலுவான சக்தியாக வளரும் வரை அவர்களை பெரிசாக கணக்கில் எடுக்காத மேற்குலகம்.. 1996 முல்லைச் சமருக்குப் பின்னர்.. சில முக்கிய முடிவுகளை எடுக்க நிற்பந்திக்கப்பட்டதில் இருந்து இது தெளிவாகிறது.

 

முல்லை மற்றும் கிளிநொச்சி சமர்கள்.. ஜெயசிக்குறு முறியடிப்பு.... என்பது போர்ச் சமநிலையில் ஒரு திருப்பம். தோற்று விட்டதாக அழிக்கப்படப் போவதாகச் சொல்லப்பட்ட இயக்கம்.. விஸ்வரூபம் எடுத்தமை என்பது.. மேற்குலகிற்கு புலிகள் புறக்கணிக்கப்பட முடியாத சக்திகள் என்று இனங்காட்டியது.

 

அவர்கள் மீதான அழுத்தங்களுக்கான வடிவமாகவே தடைகள் அமைந்தன. இன்று மேற்குலகம் புலிகள் மீதான தடையை அவர்கள் நினைத்தாலும் எடுக்க முடியாது. காரணம்.. இந்தியா புலிகள் என்ற பெயரைப் பயன்படுத்தி தமிழீழம் என்ற கோரிக்கைக்கு முடிவுகட்ட நகர்வுகளைச் செய்வதால். மேற்குலகிற்கு சிறீலங்கா துண்டாடப்பட்டு.. அந்தத் துண்டுகள் இரண்டும் இரு துருவங்களாகி அதன் மூலம் தமது நலன்கள் பாதிப்படைவதில்.. அல்லது தமக்கு சவால்கள் ஏற்படுவதில் விருப்பம் இல்லை. அந்த வகையில்.. புலிகள் மீதான தடை நீக்கம் வெளிப்படையாக தமிழீழக் கோரிக்கைக்கு வலுக்கொடுக்கும் என்பதை மேற்குலகம் நன்கே அறிந்திருக்கிறது.

 

இப்போது கூட அமெரிக்கா.. தமிழர்கள் விரும்பவில்லை என்பதை நன்கே அறிந்திருந்தும்.. ஒன்றிணைந்த இலங்கை என்ற எல்லைக்குள் தான் நிற்கிறது.

 

அதுதான் அவர்களின் காய் நகர்த்தலுக்கு அவசியம்.

 

அதன் படி தான்.. அவர்களின் நகர்வுகள் இருக்கும். புலிகள் இடையில் வளர்ந்து.. நிமிர்ந்து அடிவாங்கி முடிந்து போயிட்டார்கள். புலிகள் விட்ட ஒரே தவறு.. இந்தப் பலம்பொருந்திய சக்திகளை எதிர்கொள்ளக் கூடிய மாற்று சர்வதேச சக்தி ஒன்றை எமது மண்ணில் நிலைநிறுத்தாமை..! அதற்குக் காரணம் இருந்தது. அப்படி நிலை நிறுத்தி இருந்தால்.. அவர்கள் புலிகளின் பலவீனத்தை பயன்படுத்தி தமது நலன்பேண ஆரம்பித்துவிட்டிருப்பார்கள். அதனால் தான் அப்படி ஒரு சிக்கலுக்குள் புலிகள் தம்மை மாட்டிவைக்க விரும்பவில்லை.

 

ஒருவேளை.. அதைச் செய்திருந்தால்.. அமெரிக்காவின் நகர்வுகளில் இன்னொரு பரிமான மாற்றம்.. ஏற்பட வேண்டிய நிர்ப்பந்தம் இருந்திருக்கும். இன்று அமெரிக்கப் படைகள்.. இந்தியப் படைகள் போல எம்மால் வெறுக்கப்படும் ஒரு படையாக நின்றிருக்கலாம். இன்று.. அமெரிக்கா அமெரிக்கா என்று நாம் ஆற்றாமையில் அரவணைக்கிறோம்.. இதே அமெரிக்காவை சோமாலியர்கள் கூட உன் உதவியும் வேண்டாம் உபத்திரபமும் வேண்டாம் என்று.. விரட்டி அடித்தார்கள் என்பதை நாம் மறக்கக் கூடாது. :icon_idea:

Edited by nedukkalapoovan

இப்பொழுது கவிஞர் இங்கே சுற்றி வளைத்துக் கேட்ட ஒரு கேள்விக்கு வருவோம். இன்றைய நிலையில், ஒரு ராஜதந்திரப் போராட்டம் நடக்கின்ற சூழ்நிலையில், இலங்கை மீது மேற்குலகின் பொறிமுறை ஒன்று வரவேண்டும் என்று நாம் வேலை செய்கின்ற நிலையில்... ஐநா சபை முன்பு ஆயிரக் கணக்கில் புலிக்கொடிகளோடு போய் நின்று கொண்டு, we want tamil eelam என்று கோசம் போடுகின்ற நகர்வு சரியா?

சிறிலங்கா அரசால் மற்றைய நாடுகளை கையாள முடிந்தது. இதற்கு காரணம் புலிகள். புலிகள் உண்மையில் சிறிலங்காவையும் சேர்த்தே காப்பாற்றினார்கள். இன்றைக்கு புலிகள் இல்லை. சிறிலங்கா உலக நாடுகளின் ஆடுகளம் ஆகிவிட்டது

இப்படி வேண்டுமென்றே எழுதும் சீண்டல் விவாதங்கள் தேள் கொட்டுவது போல வலிக்கச் செய்கின்றன.

 

புலிகள் அழிந்துவிட்டதாக இலங்கை சொன்னதை மேற்குலகம் நம்பவில்லை.  புலிகள் எங்கே இருக்கிறார்கள் என்ன செய்கிறார்கள் என்பதை இலங்கைக்கு சொல்லி வந்தவர்கள்தாம் அவர்கள்.  தாய்லாந்தில் வைத்து இலங்கையை நோக்கி பறந்த ஆயுத விமானத்தை 2009 அமெரிக்கா தரையிறக்கிய பின்னர், புலிகளா, இலங்கையா மேற்குநாடுகளின் நலங்களுக்கு தடை என்பதை மீளாய்வு செய்த போது இலங்கை என்பதை கண்டுகொண்டிருக்கிறார்கள். இதனால் இலங்கை பக்கம் அழுத்தம் திரும்பியிருக்கிறது.

 

இலங்கையில் இனி ஆட்சி மாறினாலும் அவர்கள் நம்பமாட்டார்கள். இப்போது மெல்ல மெல்ல சுதந்திரத்திற்கு பின்னாலான 65 ஆண்டுகால நடத்தைகளை தெரிய வந்துகொண்டிருக்கிறார்கள். மேற்குநாடுகள் தமிழ் ஈழம் பிரிவதை சரியான நேரத்தில் ஆதரிப்பார்கள். வௌம் தேர்தலில் இந்திய காங்கிரஸ் மிக்கப்பெரிய தோல்வியை சந்திக்க இருக்கிறது. இதைதான் அவர்கள் எதிபார்த்திருக்கிறார்கள். 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுது கவிஞர் இங்கே சுற்றி வளைத்துக் கேட்ட ஒரு கேள்விக்கு வருவோம். இன்றைய நிலையில், ஒரு ராஜதந்திரப் போராட்டம் நடக்கின்ற சூழ்நிலையில், இலங்கை மீது மேற்குலகின் பொறிமுறை ஒன்று வரவேண்டும் என்று நாம் வேலை செய்கின்ற நிலையில்... ஐநா சபை முன்பு ஆயிரக் கணக்கில் புலிக்கொடிகளோடு போய் நின்று கொண்டு, we want tamil eelam என்று கோசம் போடுகின்ற நகர்வு சரியா?

 

அது சரியான நகர்வோ இல்லையோ.. தேவையான நகர்வு.

 

மேற்குலகம்.. இரண்டு அடிப்படைகளில்.. இன்று மனித உரிமைகள் பற்றி பேசத் தலைப்படுகிறது.

 

இதே மேற்குலகிடம்.. இதுதான் நடக்கிறது என்று சரியான ஆதரங்களோடு.. போராட்டங்கள்.. உண்ணாவிரதங்களோடு எடுத்துச் சொன்ன போது செயலற்று இருந்தவர்கள்.. இன்று அதனை முன்னிறுத்தக் காரணம்..

 

1. இந்தக் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் சிறீலங்காவின் மீது அழுத்தம் கொடுத்து.. தெற்காசியாவில் தமது பிடியை இறுக்கிக் கொள்வதற்கான ஒரு வழிமுறையை வகுக்க. தமிழர்களையும் தாஜா பண்ணிக் கொள்ள.

 

2. சிறீலங்கா துண்டாடப்படுவதன் வாயிலாக.. பிராந்திய நிலவரம் தமக்கு தற்போதை தேவைக்கு ஏற்ப சாதகமாக அமையாது என்பது. குறிப்பாக துண்டுபடல் இந்தியாவில் ஏற்படுத்தும் தாக்கத்தின் விளைவாக...இந்தியாவின் வளரும் பொருண்மியம்.. மற்றும் பிராந்திய முக்கியத்துவத்தை அவர்கள் இழக்க விரும்பவில்லை.

 

இந்த நிலையில் இப்போதைக்கு மாற்றம் வரப்போவதில்லை. அந்த வகையில் அவர்களின் நகர்வுகள்.. ஒன்றுபட்ட இலங்கைக்குள் இருந்து வெளியே செல்லப் போவதும் இல்லை.

 

அதற்காக தமிழர்கள் எமது அரசியல் தேவைகளை நாம் முற்றாகப் புறக்கணித்து மேற்குலகின் நிகழ்ச்சி நிரலுக்குள் இழுபட்டுச் செல்லும் நிலை ஒன்று உருவானால்... நிச்சயம் நாம் மேற்குலகால் ஒரு துரும்பிச் சீட்டாகப் பாவிக்கப்படுவமே அன்றி அவர்கள் எமது வலிமையை தேவையை உணரமாட்டார்கள். எம்மை சவால் மிக்க சக்திகளாக கணக்கிலும் எடுக்கமாட்டார்கள். புலிகள் அவர்களுக்கு ஏற்படுத்திய சவால் மிக்க சூழல்.. இன்று இல்லை. இது எமக்குப் பாதகம். அந்த வகையில்..

 

நாம்.. தமிழர்கள் ஒற்றுமையூடாக.. எமது தாயக நிலைப்பாட்டை முன்னிறுத்துகிற போது மேற்குலகம்.. அதனைப் புறக்கணிக்க முடியாத படிக்கு அரசியல் மாற்றங்களைக் கொண்டு வருவதன் வாயிலாக மட்டுமே புலிகள் இல்லாத அந்த வெற்றிடத்தை நிரப்ப முடியும். அதன் மூலமே நாம் விரும்பும் ஆகக் குறைந்த தீர்வையாவது நாம் பெற முடியும். அந்த வகையில்.. எமது தமிழீழக் கோரிக்கை.. அதனை பிரதிநிதிப்படுத்தி நிற்கும்.. கொடி என்பது.. இன்று எமது போராட்ட வலு என்று சொன்னால் மிகையில்லை.

 

நாம்.. இரண்டு நகர்வுகளைச் செய்ய வேண்டியவர்களாக உள்ளோம்..

 

ஒன்று.. மேற்குலகின் இழுபாட்டிற்கு சமாந்திரமான ஒரு இழுபடுதலோடு.. சிங்களத்தின் கோரமுகத்தை இயன்றவரை வெளி உலகிற்கு உணர்த்துவது. அதேநேரம் மேற்குலகின் தவறுகளை அவர்களுக்கு இனங்காட்டி.. அவர்களோடு நாம் எல்லாவற்றிலும் உடன்பட முடியவில்லை என்பதையும் சொல்லிக் கொள்ள வேண்டும். நாம் விரும்பும் குறைந்த பட்ச.. மாற்றங்களையும் இனங்காட்டிக் கொள்ள வேண்டும்.

 

இரண்டு.. எமது தமிழர் தேசிய இனத்தினை ஒற்றுமைப்படுத்தி.. உலகம் பூராவும் உள்ள தமிழ் மக்கள் மத்தியில் ஒத்த கருத்தியலை விதைத்து அந்த வலுவை பிராந்திய அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில்.. பாவிக்க தூண்டுவது. அது அரசியல் ரீதியாக இருக்கலாம்.. போராட்டங்கள் ரீதியாக இருக்கலாம்.. சமூக எழுச்சிகளாக இருக்கலாம். இதன் மூலமே நாம் எம்மை கட்டுப்படுத்த நினைக்கும் சக்திகளுக்கு சவால்விட முடியும்..!

 

இந்த இரட்டை அணுகுமுறையில் எங்கு ஓட்டை விழுந்தாலும்... தமிழர்கள் எனி தலைநிமிர முடியாத சூழலே தோன்றும்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

நெடுக்காலபோவான்! நல்ல முறையில் விவாதம் போகிறது. ஆயுதப் போராட்டம் நடந்த பொழுது மிதவாதம் பேசியவர்கள் துரோகிகளாகப் பார்க்கப்பட்டார்கள். அல்லது ஒரு எல்லையோடு நிற்கப் பணிக்கப்பட்டார்கள். இப்பொழுது ராஜதந்திரப் போராட்டம் நடைபெறுகின்ற காலத்தில் தீவிரவாத அரசியல் செய்பவர்கள் ஒரு எல்லைக்குள் நிற்க வேண்டாமா என்று கேள்வி எனக்குள் இருக்கிறது. மற்றைய உறவுகளின் கருத்தையும் பார்த்து விட்டு நாளை தொடர்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

We want tamil Eelam என்று கோசம் போடாமல் we want pizza உம் burger உம் என்றா போய் கோசம் போடுறது?

  • கருத்துக்கள உறவுகள்

எமது மக்களின் இத்தனை துயருக்கும் காரணமாக இருந்த துரோகிகளை.. இராஜதந்திர அரசியலுக்குள் இழுப்பதே ஆபத்தானது. துரோகிகள் எப்போதும் அவர்களின் இடத்தில் வைக்கப்படனும். கண்காணிக்கப்படனும். அவர்களுக்கு தெரிஞ்சதை அவர்கள் செய்து.. மக்களுக்கு எனியாவது ஏதாவது நல்லது செய்ய முடிந்தால் அதை செய்யட்டும்..! அவர்களின் கூக்குரலே தங்களை ஒருத்தரும் அரசியல் செய்ய விடல்லை என்றது தான். இப்ப தானே அந்த பிரச்சனையே இல்லை. செய்துக்கிறது. ஆனால் மீண்டும் துரோகங்களை இழைக்க அவர்களுக்கு சந்தர்ப்பம் அளிப்பது முழு முட்டாள் தனம்..! அவர்களே தங்கள் துரோகத்திற்கு தங்கள் சொந்த அரசியல் மூலம்.. அழிவைத் தேடிக்கொள்ளட்டும்..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு ஈழம் வேணுமெண்டால் ஈழம் வேணும் எண்டு கேட்க வேணும்.. : D அதைவிட்டிட்டுப் பொய் சொல்லப்படாது.. :D பொய் சொன்னால் பொரி கிடையாது.. :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.