Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

v-thangchaavuurnews%20%281%29.jpg

photo.gifஇனப்படுகொலையை நிகழ்திய சிறிலங்கா அதிபர் ராசபக்சேவை தண்டிக்கக்கோரியும் சுதந்திர தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூரில் 5000ற்கு மேற்பட்ட மாணவர்கள் திரண்டு பிரமாண்ட பேரணியை நடத்தியுள்ளார்கள். ஈழத்தில் நீதி மறுக்கப்பட்டுவரும் தமிழீழ மக்களிற்கு ஆதரவான போராட்டங்கள் தமிழக மாணவசகோதரர்களால் காலவரையற்ற உண்ணாவிரதப்போராட்ட வடிவத்தில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு தமிழகத்தில் மாபெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.
v-thangchaavuurnews%20%289%29.jpg
தினமும் பல்வேறு இடங்களில் மாணவர்கள் தம்மை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுத்திக் கொண்டுவருகின்ற கொதிநிலையில் கல்லூரி நிர்வாகங்கள் சுயமாகவும் காவல்துறை உளவுத்துறை அரசியல் கட்சிகளின் கடுமையான அழுத்தங்களிற்கு உட்பட்டும் மாணவர்களது உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதியை மறுத்துவருகின்றது.
v-thangchaavuurnews%20%283%29.jpg
அதனையும் மீறி தமது நிலையில் உறுதியாக நிற்கும் மாணவர்களிற்கு தொடர்நது கல்வி கற்றலிற்கான அனுமதியை ரத்துச் செய்வதாகவும் மிரட்டிவருவதன் காரணமாக மாணவர்கள் வலிந்து உண்ணாநிலைப் போராட்டத்தில் இருந்து பின்வாங்கவைக்கப்பட்டு வருகின்றார்கள்.

இந்த நிலையில் தஞ்சாவூரில் உள்ள மாணவர்கள் ஒன்றிணைந்து அதே கோரிக்கையை வலியுறுத்தி கவனயீர்ப்பு பேரணியை பிரமாண்டமாக நடத்தியுள்ளார்கள். இந்த பேரணியில் 5000ற்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றுள்ளார்கள்.
v-thangchaavuurnews%20%282%29.jpgv-thangchaavuurnews%20%284%29.jpgv-thangchaavuurnews%20%286%29.jpgv-thangchaavuurnews%20%285%29.jpgv-thangchaavuurnews%20%288%29.jpgv-thangchaavuurnews%20%287%29.jpg
ஈழதேசம் இணைய தமிழக செய்திப் பிரிவு.

ஈழதேசம் இணையம்.

 

Edited by தமிழரசு

  • Replies 1.3k
  • Views 119.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • தமிழரசு
    தமிழரசு

    Indian Students Supporting TN Students protest for Tamil EELAM   Eventhough Indian govt and Indian media trying to supress the feelings of Tamil people and Srilankan Genocide , Indian stu

  • தமிழரசு
    தமிழரசு

    இதே எழுற்சி வன்னியில் முள்ளிவாக்காலில் மிகமோசமான யுத்தம் நடைபெற்ற வேளையில் இருந்திருக்குமேயானால் இவ்வளவு இழப்புகள் ஏற்பட்டிருக்காது 

  • வீரப் பையன்26
    வீரப் பையன்26

    நன்றி தோழர்களே , இடை விடாது தொடர்ந்து அக்கல்லூரி முதல்வரை கண்டித்ததில் அவர் தற்போது ரத்தகொதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்ததால் ம

  • கருத்துக்கள உறவுகள்

இதை சிங்களம் பார்க்கனும்...முள்ளி வாய்க்கால் ஓட எல்லாம் முடிஞ்சு போச்சு என்று சொன்ன சொறி கூட்டமும் இதை பாக்கனும்..மாணவர் போராட்டம் வெல்லட்டும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாணவர்களின் போராட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது இதற்க்கு நிச்சயமாக உலகம் செவிசாய்க்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை 



மாணவ சகோதரர்களுக்கு நன்றிகள். 

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர்களின் போராட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது இதற்க்கு நிச்சயமாக உலகம் செவிசாய்க்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை 

மாணவ சகோதரர்களுக்கு நன்றிகள். 

அது நடக்கும் சகோ 

மாணவர் போராட்டம் வெல்லட்டும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அது நடக்கும் சகோ 

மாணவர் போராட்டம் வெல்லட்டும்

இதே எழுற்சி வன்னியில் முள்ளிவாக்காலில் மிகமோசமான யுத்தம் நடைபெற்ற வேளையில் இருந்திருக்குமேயானால் இவ்வளவு இழப்புகள் ஏற்பட்டிருக்காது  :(

தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் கோமாளிகள் என்று மேடைகளில் பேசினார்கள் சிலர். தமிழ் நாட்டின் மக்களுக்கு அரசியல் தெரியாது என்று யாழில் எழுதினார்கள் சிலர். நெடுமாறன், வைகோ, சீமான் போன்றோர் அங்கு வேண்டப்படாதவர்கள் என்று சோடிக்கமுயன்றார்கள். 

 

அவர்கள் தங்கள் வாசகங்களின் அரசியல் சரியை இப்போ சரி பார்த்துக்கொள்ளட்டும்.

 

லையோலா கல்லூரி உண்ணாவிரதம் அடக்கப்படும் என்று ஆருடம் கூறியவர்கள் அது இப்படி திரண்டு எழ போகிறது எனற ஆருடத்தை கூற மறந்துவிட்டர்கள். அவர்களின் எதிர்பார்ப்பு அதுவாக இருக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இதே எழுற்சி வன்னியில் முள்ளிவாக்காலில் மிகமோசமான யுத்தம் நடைபெற்ற வேளையில் இருந்திருக்குமேயானால் இவ்வளவு இழப்புகள் ஏற்பட்டிருக்காது  :(

உண்மை தான்..*********  கருணாநிதி எங்கை விட்டார் மாணவர போராட ..பள்ளியலை பூட்டி...மாணவ போராட்டத்தை அப்ப அடக்கி போட்டு...இப்ப ஏதோ டெசோ என்ர ஒரு அமைப்பை ஆரம்பிச்சு பூச்சாண்டி விளையாட்டு காட்டுறார்...பாலச்சந்திரனை பாலகிருஷ்ணம் என்று சொல்லி அரசியல் நடாத்தும் அந்த கயவர் கூட்டத்தை பற்றி தெரியும் தானே அவங்கள் தமிழன் மேல் எவளவு அக்கறை உள்ளவங்கள் என்று 

 

நியானி: பண்பற்ற சொற்கள் தணிக்கை

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர்களின் முகத்தில் தெரியுது வெற்றி மிக அருகில் என்று...

 

vettrimanavarkal.png

உங்கள் போராட்டம் வெல்லட்டும் தோழர்களே

இது மற்றைய மானிலங்களுக்கு பரவுமாயின் காங்கிரஸ் அமெரிக்கா மீதான தனது அழுத்தத்தை விட்டுத்தான் கொடுக்க வேண்டும். அப்போது கனடா ஐயர்லாந்து ஜேர்மனி போன்ற நாடுகளின் பிடி இறுகும். அமெரிக்கா இந்த பிரேரணையிலேயே சர்வதேச விசாரணையயை கேட்கும்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

ilankaiyatamilwadaaaa.jpg

 

  • கருத்துக்கள உறவுகள்

pppppppadammmmmmmm.png

 

  • கருத்துக்கள உறவுகள்

tamilan.jpg

 

  • கருத்துக்கள உறவுகள்

ஈழ விடுதலைக்கான போராட்டத்தில் திருச்சி தனலட்சுமி கல்லூரி மாணவ, மாணவிகள் களமிறங்கியுள்ளனர்.

 

 

manavikal.jpg

 

இதோ பின்வரும் கல்லூரிகளில் மாணவர் போராட்டங்கள் வெடித்துவிட்டன.அவையாவன..

(1)மதுரை சட்டக்கல்லூரி மாணவர்கள்

(2)காரைக்குடி அழகப்பா கல்லூரி..

(3) காரைக்குடி ஆனந்தா கல்லூரி..

(4)சென்னை லயோலா கல்லூரி 2000 மானவர்கள் கல்லூரி வளாகத்தில் போராட்டத்தை தொடக்கி விட்டனர்.

(5)கும்பகோணக் கல்லூரி ஒன்றில் இருந்து2000 மாணவர்கள் போராட்டத்தை தொடக்கி விட்டனர்.

(6)திருச்சி தூய வளனார் கல்லூரியைச் சேர்ந்த 10 மாணவர்கள் காலவரை அற்ற உண்ணா நோன்பை

(7)மதுரை..பெரம்பலூர் ஆத்தூர் சாலையில்(எசனை,கடகால்)மாணவர்கள் சாலைமறியலை தொடங்கியுள்ளனர்.

(8)கும்பகோணம் பூம்புகார் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

(9)பாளையங் கோட்டை செயின்ட்.சேவியர் கல்லூரி மாணவர்களும் தீவிர போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

மேலும் அழகல்லோரிகளின் போராட்டங்கள் பற்றிய விபரங்கள் இன்னும் சில நிமிடங்களில் வரவுள்ளன என்பதுடன் நாளையும் பல மாணவர்களின் போராட்டங்கள் வெடிக்கவுள்ளன.என்பது குறிப்பிடத் தக்கது.

தமிழ்நாட்டு மாணவச்செல்வங்களுக்கு நன்றிகள்; வாழ்த்துகள்.  தீ பரவட்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

balacahndranjpgllhhhhhh.jpg

 

  • கருத்துக்கள உறவுகள்

நாளை மதுரையில் நடக்க இருக்கும் அனைத்து கல்லூரி மாணவர்கள் பேரணி சுவரொட்டிகள் ஓட்ட ஆயத்தமாகி கொண்டு இருந்த போது ..........

 

 

poraddampadam.jpg

 

  • கருத்துக்கள உறவுகள்

thalaimuraiiiiiiiiiiii.jpg

 

 

மாணவர் போராட்டம் மக்கள் போராட்டமாக மாறட்டும்.

• அது போலி அரசியல்வாதிகளை தூக்கி வீசட்டும்.

ஒருபுறம் போலி அரசியல்வாதிகளால் மாணவர் போராட்டம் காட்டிக்கொடுக்கப்படுகிறது. இன்னொருபுறம் அரசு பொலிசாரை ஏவி அவர்களை நசுக்க முனைகிறது . “புலி என்று கூறி சிறையில் அடைப்போம”. “கல்லூரியை விட்டு நீக்குவோம்” என்றெல்லாம் அரசாலும் அதன் ஏவல் நாய்களான பொலிசாராலும் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்கள் மிரட்டப்படுகிறார்கள்.

எட்டு மாணவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட மாணவர் போராட்டம் இன்று தமிழகமெங்கும் தீயாக பரவியுள்ளது. அது மக்கள் போராட்டமாக மாற வேண்டும். எனவே மக்களே மௌனமாக இருக்காதீர்கள். மாணவர்களுக்கு உங்கள் ஆதரவை தெரிவித்து மக்கள் போராட்டமாக மாற்றுங்கள்.

மத்திய அரசை மிரட்டி தமிழர் நலன் பேண வேண்டிய தி.மு.க சிறு கடைகாரர்களை மிரட்டி பந்த் நடத்துகிறது. மத்தியில் ஆட்சியில் அமைச்சர்களாக இருந்து கொண்டு மாநிலத்தில் டெசோ என்று நாடகம் காட்டுகிறது.

இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று கூறி ஆட்சியைப் பிடித்த அம்மையார் மாணவர்கள் உண்ணாவிரதம் இருக்கக்கூட விடாமல் பொலிசாரை ஏவி நசுக்கிறார்.

எனவே மாணவர் போராட்டம் இந்த போலி அரசியல்வாதிகளை தூக்கி வீசட்டும்.

போராடும் மாணவர்களுக்கு எமது புரட்சி வாழ்த்துகள்.

அடுத்தடுத்து பல கல்லூரிகளில் போராட்டங்கள் நடக்கிறது. அனைவருக்கும் பாராட்டுகள் மற்றும் நன்றி. மாணவர் எழுச்சி எழ காரணமான அனைவருக்கும் நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[

Edited by தமிழரசு

மாணவ சகோதரர்களுக்கு நன்றிகள். உங்களால் எங்கள் அவலம் முழு இந்தியர்களின் மனக்கதவுகளையும் தட்டட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

eelamtry1.jpg

eelamtry2.jpg

 

  • கருத்துக்கள உறவுகள்

thilipanannaaaaaaaaaa.jpg

 

திலீபன்கள் உருவாகிவிட்டார்கள், பிரபாகரன்கள் எப்போது...?

14 03 2013

இந்தியாவின் மௌனங்களையும், துரோகங்களையும் தகர்த்துக்கொண்டு திலீபன்கள் களத்திற்கு வந்தவிட்டார்கள். இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் கல்லூரி மாணவர்களது போராட்டமும், அந்த அறப் போராட்டத்திற்கான மக்கள் ஆதரவும் இதனையே உணர்த்துகின்றது.

இதே இந்திய காங்கிரஸ் ஆட்சியில்தான் தியாகதீபம் திலீபன் அவர்களது உயிரும் பறிக்கப்பட்டது...

தனது கட்டுக்குள் அடங்க மறுத்த சிங்கள ஆட்சியாளர்களை அடிபணிய வைக்கும் நுழைவாயிலாக ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் தலையிட்ட இந்திய காங்கிரஸ் ஆட்சியாளாகளது கோர முகம் ஈழத் தமிழர்களுக்குப் புரிந்து கொள்ள ஆரம்பித்த நாட்கள் அது. சமாதானப் படை என்ற பொய் முகத்தோடு தமிழீழ மண்ணில் கால் பதித்த இந்தியப் படைகள் மெல்ல, மெல்லத் தங்களது இலக்கினை நோக்கி நகர்ந்தார்கள். அந்த இலக்கினை அடைவதற்கு சிங்களம் கேட்ட விலை ஈழத் தமிழர்கள்மீதான தனது மேலாதிக்க அங்கீகாரம்.

அந்த வேளையில், இந்திய - இலங்கைக் கூட்டுச் சதிக்குள் தமிழீழம் சிக்கிக்கொண்டதை உணர்ந்துகொண்ட திலீபன், காந்தி தேசத்தை காந்தியின் பாதையில் சென்று அதன் துரோகங்களைத் தடுக்க முனைந்தார்.

- மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.

- சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.

- அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.

- ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.

- தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும்.

என்ற ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து 15 செப்ரம்பர் 1987 அன்று நல்லை வீதியில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். காந்தி தேசம் தனது நியாயமான கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்கும். தமிழீழ மக்களுக்கு நீதி வழங்கும் என்ற திலீபனின் நம்பிக்கை பொய்த்துப் போனது. அன்றைய காங்கிரஸ் அரசால் 26 செப்ரம்பர் 1987 அன்று அவர் கொலை செய்யப்பட்டார். அவர் மெல்ல, மெல்லச் சாவினைத் தழுவுவதை அன்றைய காங்கிரஸ் ஆட்சியாளர்கள் ரசித்துக்கொண்டிருந்தார்கள்.

வரலாறு மன்னிக்க முடியாத அந்தத் தவறினை இழைத்த காங்கிரஸ் ஆட்சியாளர்களது கொடூரங்கள் அத்தோடு நின்றுவிடவில்லை. அது முள்ளிவாய்க்கால் வரையும், அதன் பின்னரும் நீண்டே செல்கின்றது.

ஒரு தமிழனின் அகிம்சைப் போர் தோற்கடிக்கப்பட்டதால், விடுதலைப் புலிகள் மீண்டும் ஆயுதம் ஏந்த நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.

ஒரு கால் நூற்றாண்டு கடந்த திலீபனது போராட்டத்தை இன்று லயோலா கல்லூரி மாணவர்கள் மீண்டும் கையேற்றிருக்கிறார்கள். இது ஒரு வரலாற்று மாற்றத்திற்கான தெளிவான செய்தி. வைகோ அவர்கள் கூறியது போல், இது கந்தகக் கிடங்கில் வீழ்ந்துள்ள தீப்பொறி. அதனைக் கவனிக்கத் தவறினால், பின்னர் அதனைக் கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும்.

இப்படி ஒரு தீப்பொறிதான் துனீசியாவின் அதிகார பீடத்தையே புரட்டிப் போட்டது. எகிப்தில் ஆட்சி மாற்றத்தை உருவாக்கியது. லிபியாவின் சர்வாதிகாரம் நொருக்கப்பட்டது. சிரியாவில் இப்போதும் புரட்சித் தீ கொழுந்துவிட்டு எரிகின்றது. இந்திய ஆட்சியாளர்களும் தவறுகளிலிருந்து கற்றுக் கொள்ளவும், அதற்குப் பிராயச்சித்தம் தேடவும் தவறினால் வரலாறு தீர்ப்பினைத் திருத்தி எழுதிவிடும்.

இந்தத் திலீபன்களது நியாயமான உணர்வினைப் புரிந்து கொள்ளாது, எங்கள் திலீபனைக் கொன்றது போல் நிலை மீண்டும் உருவானால், தமிழக மண்ணில் இனி திலீபன்கள் உருவாக மாட்டார்கள். பிரபாகரன்களே உருவாகுவார்கள். இதனை இந்தியாவின் காங்கிரஸ் ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

புரட்சியாளர்கள் தாமாகவே உருவாவதில்லை. அவர்கள் நீதியற்ற ஆட்சியாளர்களாலும், அவர்களது வன்கொடூரங்களாலும் உருவாக்கப்படுகின்றார்கள்.

தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியாளர்களாலும், அவர்களது வன்கொடூரங்களாலும் மீண்டும் திலீபன்கள் உருவாகிவிட்டார்கள். பிரபாகரன்கள் எப்போது? என்பதே வரலாற்றாளர்களின் கேள்வியாக உள்ளது.

- இசைப்பிரியா-

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மாணவச் செல்வங்களே ! இந்தியராக இருந்து இழந்தது போதும் . தமிழராக நிமிர்ந்து இழந்ததை மீட்போம். தமிழினம் காப்போம். தமிழீழம் காண்போம் !

இனியும் நாம் சூதாட்டக் கிரிக்கெட்டுக்கும் , திரைப்படத்திற்கும் அடிமையாகி விடாமல் விழிப்புடன் , பொறுப்புடன் தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுப்போம். நாம் யாருக்கும் அடிமை இல்லை என்பதை உலகிற்கு சொல்வோம்

 

manavareanruinru.jpg

 

அது சரி எங்கே அர்ஜுன் அண்ணையை காணோம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.