Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)

Featured Replies

மாணவர்கள் போராட்டத்தின் நிலை!!

 

Edited by மகம்

  • Replies 1.3k
  • Views 119.7k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • தமிழரசு
    தமிழரசு

    Indian Students Supporting TN Students protest for Tamil EELAM   Eventhough Indian govt and Indian media trying to supress the feelings of Tamil people and Srilankan Genocide , Indian stu

  • தமிழரசு
    தமிழரசு

    இதே எழுற்சி வன்னியில் முள்ளிவாக்காலில் மிகமோசமான யுத்தம் நடைபெற்ற வேளையில் இருந்திருக்குமேயானால் இவ்வளவு இழப்புகள் ஏற்பட்டிருக்காது 

  • வீரப் பையன்26
    வீரப் பையன்26

    நன்றி தோழர்களே , இடை விடாது தொடர்ந்து அக்கல்லூரி முதல்வரை கண்டித்ததில் அவர் தற்போது ரத்தகொதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்ததால் ம

மாணவி திவ்வியாவின் அரசியல் தெளிவு மகிழ்வையும் பெரிய நம்பிக்கையையும் தந்து நிற்கின்றது.

 

நன்றிகள் மகம் இணைப்பிற்கு !

Cartoonist Bala

 

எங்கெங்கு திரும்பினாலும் மாணவர் போராட்டம். நடிகனுக்கு பாலாபிஷேகம் செய்யும் கூட்டம் என்று விமர்சிக்கப்பட்ட எம் இளைஞர் கூட்டம் இன்று நீதிக் கேட்டு வீதிக்கு வந்திருப்பதை பார்க்கையில் ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும், இதே எழுச்சி 2009-ல் வந்திருந்தால் வரலாறு திரும்பியிருக்குமே என்ற ஏக்கமும் வருகிறது.

 


முத்துகுமார் ஆசைப்பட்டதும் இதுபோன்ற ஒர் எழுச்சியை தான். மாணவர் எழுச்சியை ஒடுக்க கருணாவைப் போல் ஜெயாவும் தந்திரமாக கல்லூரிகளுக்கு விடுமுறை விட்டுப்பார்த்தும் ஒண்ணும் நடக்கவில்லை. காலம் கடந்தேனும் இந்த எழுச்சி ஏற்பட்டது கொண்டாடப்பட வேண்டியது.


ஒரு பாலசந்திரனைக் கொன்று இன்று தமிழகம் முழுக்க .. உலகம் முழுக்க பல பாலசந்திரன்களை உருவாக்கி விட்டிருக்கிறார்கள் கொன்ற ராஜபக்சேவும் துணை நின்ற சோனியாவும்.

 

அதுவும் வழக்கமான போராட்டம் என்றால் சட்டக்கல்லூரி மாணவர்களும் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் மட்டுமே வீதிக்கு வந்த நிலை மாறி இன்று தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்களும் போராட்டக்களத்திற்கு வந்திருக்கிறார்கள் என்பதை பார்க்கும்போது பாலசந்திரனின் ஒற்றைப்பார்வை எத்தனை வீரியமிக்கது என்று புரிகிறது.

இன்று வீதிக்கு வந்திருக்கும் மாணவர்கள் அத்தனைபேரும் கடந்த நான்காண்டுகளாக ஈழப்படுகொலைக் காட்சிகளை மனதிற்குள் போட்டு புழுங்கித் தவித்திருக்கிறார்கள் என்பதையே இந்த எழுச்சிக்காட்டுகிறது.

 

ஏதோ ஒருவகையில் இப்படியான ஒரு எழுச்சிக்கு வித்திட்ட லயோலா கல்லூரி மாணவர்களை மனதாரப் பாராட்டுகிறேன்.


மாணவர்கள் எழுச்சி ஒன்று படுத்தப்பட வேண்டும்.. வென்றாக வேண்டும் நாம்..

 

 

  • கருத்துக்கள உறவுகள்

மாணவமணிகளின்..கவனத்திற்கு...

1. உணர்ச்சி வசப்படகூடியவர்களை முன்னணியில் நிறுத்த வேண்டாம்.

2. அனைத்து கல்லூரி மாணவரையும் அரவணைத்து செல்லவும்.

3. வீண் வாக்கு வாதங்கள் வேண்டாம்.

4. நமது எண்ணத்தை ஏற்று கொள்ளும்படி யாரையும் நிர்பந்திக்க வேண்டாம்.

5. பெற்றோரின் வற்புறத்தலால் விலக நேரும் தோழர்களை வருத்த வேண்டாம்.

6 சில காலம் செல்ல வேண்டிய போராட்டம். இறுதி வருட மாணவர்களுக்கு "சுழற்சி" முறையில் பங்கு பெற செய்யுங்கள்.

7. யார் தலைமை என எக்காலமும் போட்டி வர கூடாது.

8. மத, சாதீய உணர்வினால் பிரிக்க எண்ணுவார்கள் கவனம்.

9. உடல் நிலை பேணல் மிக அவசியம்

10. வரலாற்றை பகிருங்கள்

11. "ஐரோம் சர்மிளா" "உதயகுமார் ஐயா" ஆகியோரின் கள வாழ்வு பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

12. வன்முறை எண்ணம்..எள் முனையளவு கூட உள் நுழைய கூடாது.

13. மாணவர்களின்றி உங்களுடன் கலந்திருப்போரை கண்காணிப்பதும் மிக அவசியம். அவர்களின் எண்ணம் நாம் அறிய இயலாது

14. இதனை தங்களுக்குள் குழ பிரித்து கண்காணிப்பு, தகவல் தொடர்பு என பணிகளை சரியாக செயல் படுத்துங்கள்

15. தலைமைதுவம்..விட்டு கொடுத்தலில் தொடங்குகிறது.

வெல்லும் உங்கள் படை..

உங்களின் பின்னால்..இந்த தமிழ் உலகு!

 

- முகநூல் -

 

இணைப்பிற்கு நன்றி துளசி.

மாணவர்கள், முக்கியமாக... மேலே உள்ள அறிவுரைகளின் படி செயல்படுவார்கள் என நம்புகின்றேன்.

7000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கோயம்பத்தூரில் நடக்கும் போராட்டத்திற்கு ஒன்று சேர்ந்துள்ளார்கள்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அப்போலோ பொறியியல் கல்லூரியை சேர்ந்த 100 மாணவர்கள் பூந்தமல்லி அருகே தங்கள் போராட்டத்தை தொடங்கினர்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தேனீ பல்கலைக்கழக மாணவர்கள் தமது போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்கள்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Students of Salem korimedu ITI, involved in protest on streets

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

சற்று முன்: தஞ்சை அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் தஞ்சை மணி மண்டபம் கல்லுரி அருகில் 250 பேர் தொடர் உண்ணாவிரதம் தொடங்கியுள்ளனர்.

 

மாணவர்களை வாழ்த்த தொடர்பு கொள்ளவும்.


ராம்குமார் 9787896700
பாலசந்தர் 9994282388
பாட்ஷா 9629923887
பாரதிராஜா 9042112706

 

"ஈழம் எங்கள் உயிர்டா இந்தியா எங்களுக்கு மயிரடா" இது தற்பொழுது இங்கு ஒங்கி ஒலிக்கும் மாணவர்களின் கோஷம்

 

(முகநூல்)

சேலம் கோரிமேடு பகுதியில் அரசு ஐ.டி.ஐ மாணவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர் !!!

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அருள்மிகு மீனாக்ஷி அம்மன் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 13 பேர் 2 ஆவது நாளாக தமது உண்ணாவிரதத்தை தொடர்கிறார்கள். சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் அவர்களுடன் இணைந்து தமது ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலை விருதாச்சலத்தில் நூற்றைம்பது மாணவர்கள் மறித்து மறியல் செய்தார்கள். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ரயிலை மாணவர்கள் சிறை பிடித்து உள்ளார்கள்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நாமக்கல் மாணவர்கள் போராட்டத்தை தொடங்கவுள்ளார்கள்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

சற்றுமுன்:காலை முதல் அனைத்து பொறியியல் கல்லூரி மாணவர்கள் தஞ்சையில் தொடர் உண்ணாவிரத போராட்டம்...கோர்ட் ரோடு அருகே நடைபெறுவதாக இருந்த போராட்டம் இட பற்றக்குறை காரணமாக புதிய பேருந்து நிலையம் அருகே தொடங்கபட்டுவிட்டது. 100 மாணவர்களுக்கு மேல் உண்ணாவிரதம். புகைபடங்களை மதியம் பதிவேற்றம் செய்கிறேன். தஞ்சை பகுதி நண்பர்கள் நேரில் சென்று மாணவர்களுக்கு உங்கள் வாழ்த்துக்களை தெரிவிக்கவும்.

 

நண்பர்களே மாணவர்களை வாழ்த்த தொடர்பு எண்கள்


விஸ்ணு வரதன் 7598167241
அருண் உதயா 7373169407
சதிஷ்குமார் 8122616410

 

(முகநூல்)
 

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

காஞ்சிபுரம் மாவட்ட அனைத்து பள்ளி-கல்லூரி-பல்கலைக்கழக மாணவர் கூட்டமைப்பு சார்பில் நாளை (20.03.2013) காலை 9 மணியளவில் காஞ்சிபுரம் பெரியார்நகர் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி முதல் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் வரையில் மாபெரும் மாணவர் பேரணி எழுச்சியுடன் நடைபெற உள்ளது. மாணவ சமூகம் திரளாக பங்கேற்று நம் தொப்புள் கொடி உறவுகளுக்கான ஆதரவினை தந்து பேரணியை வெற்றியடையச் செய்யவும். தொடர்புக்கு தோழர்கள்-9940911235, 9659241174, 9094522380 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும். அனைத்து கல்லூரிகளும் பாகுபாடின்றி கட்டாயம் பங்கேற்கவும். தோழர்களின் வருகையை உறுதி படுத்தவும். முடிந்தவரை அனைத்து தோழர்களும் இச்செய்தியை பகிருங்கள், பரப்புங்கள். மிக்க நன்றி!

நாளை சரியாக காலை 10மணிக்கு, திருப்பூர் மாவட்டம் மூலனூரில் மாணவ கூட்டமைப்பு சார்பாக உண்ணாவிரத போராட்டம் ஆரம்பம்.
தொடர்புக்கு : கிங்ஸ் லி - 9952650743

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

மதுரை அமெரிக்கன் கல்லூரி முன் நூற்றுகணக்கான மாணவர்கள் உண்ணாவிரதம் ,மதுரை மாணவர்களும் பொதுமக்களும் இணைந்து கொள்ளவும்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு சாண்டி பொறியியல் கல்லூரி மாணவர்கள் விடுமுறை அறிவித்தும் இலங்கை அரசை கண்டித்து போராட்டம் நடத்திவருகின்றனர்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஸ்ரீ ராம் பொறியியல் கல்லூரியில் போராட்டம் தடுக்கப்படுகிறது. கல்லூரி நெருப்போடு விளையாட வேண்டாம் என மாணவர் கூட்டமைப்பு எச்சரிக்கிறது.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கல்லூரியின் அராஜகம்

நாகர்கோவில் சிந்தங்கரையில் உள்ள சென் பிட்டர் இஞ்சினிரிங் காலேஜ் மாணவர்கள் 4 பேர் உண்ணாவிரதம் இருந்தனர். கல்லூரி நிர்வாகம் அனுமதி அளிக்காத நிலையில் உண்ண விரதத்தை தொடர்ந்த மாணவர்களை அங்கு உள்ள லோக்கல் ரவுடிகளை வைத்து உண்ணவிரதத்தினை கலைத்து . மாணவர்களை துக்கி சென்றுள்ளனர் . மாணவர்கள் இதுவரை எங்கு என்று தெரியவில்லை.  :(

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நாமக்கல் பிஜிபி பொறியியல் கல்லூரியில் நேற்றிலிருந்து கல்லூரியின் கடும் எதிர்ப்பையும் மீறி 60 மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

குமரி மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 400க்கும் மேற்பட்ட St. சேவியர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் மீது கல்லூரி
நிர்வாகம் குண்டர்கள் மற்றும் ஆசிரியர்களை வைத்து தாக்குதல். பதட்டமான சூழ்நிலை, மாணவர்களுக்கு ஆதரவாக குவிந்து வரும் உணர்வாளர்கள்.

 

களத்தில் இருந்து Suresh Kumar தகவல்

 

(முகநூல்)

ராசிபுரம் கல்லூரி மாணவர்கள் போராட தயாராகி வருகிறார்கள்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ராசிபுரம் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 25 பேர் நாமக்கல் செல்வம் கல்லூரி மாணவர்கள் உடன் இணைந்து போராட்டத்தில் ஈடு பட்டனர்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

எஸ்.ஆர். எம் கல்லூரி மாணவர்கள் கல்லூரியில் இருந்து மறைமலை நகர் வரை ஊர்வலம். நகராட்சி மன்றத்தின் முன்பு போராட்டம்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

திருநெல்வேலி மாணவர்கள் ஒன்பதாவது நாளாக உண்ணாவிரத போராட்டம்.

 

487917_595638650448164_102550152_n.jpg

 

(முகநூல்)

601559_595643663780996_98963604_n.jpg

 

(முகநூல்)

சென்னை சத்திய மூர்த்தி பவனை முற்றுகையிட்ட 100 கல்லூரி மாணவர்கள் கைது.

தொடர்புக்கு : 8438350122 

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று 6 ஆயிரம் கடைகள் மூடப்பட்டன.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

மானமுள்ள தமிழனாக நீ மாண்டு என்னை வேதனை பட வைத்து விட்டாயே தோழா . செந்தீயில் வேகிறது எம் தமிழினம் அதனை வேடிக்கை பார்க்கிறது ஓர் ஓநாய்கள் கூட்டம். இனியும் உயிரிழப்புகள் வேண்டாம் தோழா.

 

384829_318087794961017_1656262858_n.jpg

 

 

(முகநூல்)

நியூவார்க் டைம்ஸ் இல் வந்த செய்தி..

Tamil Nadu Students Protest Alleged Human Rights Abuses in Sri Lanka

http://india.blogs.nytimes.com/2013/03/18/tamil-nadu-students-protest-alleged-human-rights-abuses-in-sri-lankatamil-nadu-protests/

 

- முகநூல் -

மாணவர்களின் இப்போதைய எழுச்சியினால் ஈழம் விவகாரத்தில் நல்லதொரு முன்னேற்றம் கிடைக்கும் தருவாயிலே, சாதி வெறியர்களால் சில காலமாக இளைஞர்கள் மனதில் விதைக்கப்பட்ட சாதிவெறி எனும் நஞ்சும் அகன்று தமிழன் என்ற உணர்வு ஆழமாக வேரூன்றி விடுமாயின் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் கிடைத்த மகிழ்ச்சியே. -முகநூல்

உண்மை. ஈழ விடுதலை என்பதுடன் சமூக விடுதலை கூட முக்கியமானதே !

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

tyo_logo-150news.jpg

இத்தனை காலமாக புலம்பெயர் நாடுகளில் வாழும் ஈழத் தமிழர் எவ்வளவோ போராட்டங்கள் செய்து வந்த போதிலும் தாய் தமிழ் நாடு மக்கள் அமைதியாகவும் பாராமுகமாகவும் இருந்தது ஒரு குறையாகவே இருந்து வந்தது. எங்கள் அவலத்தை பற்றிய விழிப்புணர்வோ அதை ஒட்டிய எழுச்சியோ கோடி கணக்கிலுள்ள தாய் தமிழ் நாட்டு மக்கள் இடையில் இல்லாமை என்பது ஏமாற்றத்தையே இத்தனை காலமும் தந்தது. ஆனால் அக்குறையை தீர்த்து தமிழ் நாடு முழுவதும் ஈழ உணர்வு பற்றி எரியும் பொருட்டு உங்கள் போராட்டங்கள் அமைந்துள்ளது. இதைத் தான் இத்தனை காலமும் புலம்பெயர் ஈழத் தமிழர்களும் தாயகத்தில் வாழும் உடன் பிறப்புகளும் எதிர் பார்த்தோம்.

  

தாய் மண்ணின் விடிவிற்கான போரட்டத்தை எங்கள் தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் இளையோர் கையில் 2008 ஆம் ஆண்டு மாவீரர் உரையின் மூலம் ஒப்படைத்தார். அதை நன்கு புரிந்து புலம்பெயர்ந்து வாழும் இளையோரும், குறிப்பாக 'தமிழ் இளையோர் அமைப்புகளும்' செயல்பட்டு வருகிறது. இவர்களுடன் தாய்த் தமிழ் நாட்டு மாணவர்களும் கைகோர்க்கும் வண்ணம் வீறுகொண்டு எழுந்து புரட்சியுடன் போராடுவது புலம்பெயர் ஈழ தமிழர்களிற்கும் தாயக உறவுகளிற்கும் புத்துணர்வும் உற்சாகமும் அளித்துள்ளது.

எங்களது போராட்டம் ஓயவில்லை மாறாக அது மாபெரும் சக்தியாக உருவெடுத்துள்ளது. அதுவும் மாணவர்கள் சக்தியாக, 1972 ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக பேரினவாத இலங்கை அரசால் உருவாக்கப்பட்ட அரசியல் யாப்பினால் கோபம் அடைந்த அன்றைய மாணவர்களாக இருந்த தேசியத்தலைவரும் அவரது நண்பர்களும் தங்களது பாரிய எதிர்ப்பினை காட்டினார்கள் அதேபோல உங்களிடம் இருக்கும இந்த உத்வேகம் எங்களது சுதந்திர தமிழீழ தனியரசை அடைய என்றும் எங்களோடு இருக்கும் என்று இளையோரகிய நாம் கருதுகின்றோம்.

 

இன்று எமது போராட்டம் சர்வதேசமயப்படுத்தப்பட்டுள்ளது, எல்லா நாடுகளும் எம்மை உற்றுநோக்கிய வண்ணம் உள்ளார்கள். சனல் 4 தனது ஊடகதின் மூலம் எமது மக்களின் பல அவல நிலைகளை வெளிக்கொண்டு வருகிறது. ஆனாலும் சர்வதேசம் இப்பவும் எமது மக்களின் குரல்களை செவிசாய்ப்பதாக இல்லை. ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டில், இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பாக அமெரிக்கா தீர்மானம் கொண்டுவரவுள்ள நிலையில்,இலங்கையில் நடைபெற்றவை போர்க்குற்றமோ அல்லது மனித உரிமை மீறல்களோ அல்ல; அது இன அழிப்பு என்ற உங்கள் தெளிவான நிலைப்பாட்டை நாம் வரவேற்கின்றோம். அத்துடன் மாணவர்களாகிய நீங்கள் முன்வைத்திருக்கும் அனைத்துலக சுயாதின விசாரணை, இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் மற்றும் ஈழத் தமிழர்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் போன்ற உங்களதுகோரிக்கைகளை நாம் வரவேற்கிறோம்.

 

அன்று தொட்டு இன்று வரை தமிழர்களுக்கான எந்த உரிமைகளும் உரியமுறையில் வழங்கப்படவில்லை.அடக்குமுறைகளும் சமுதாய சீர்கேடுகளும் குறைந்தபாடில்லை அதேபோல எமது தாயக நிலப்பரப்புகளும் தமிழர்களின் அடையாளங்களும் வெகு வேகமாக பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. மக்களின் மற்றும் மாணவர்களின் குரல்களும் இனவாத அரசினால் தொடர்ச்சியாக அடக்கப்பட்டுக் கொண்டிருகிறார்கள். அடக்குமுறைகளுக்குள் அடைபட்டு கிடக்கும் இனம் அல்ல நாம், போராடுவோம் இறுதி வரை போராடுவோம்.

உங்கள் போராட்டம் வெற்றி பெற எமது வாழ்த்துக்கள், மாணவர் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழ அரசு பிறக்கட்டும்!

 

தமிழரின் தாகம் தமிழ் ஈழத் தாயகம்

தமிழ் இளையோர் அமைப்பு

ஐக்கிய இராச்சியம்

[

 

 

[

Edited by தமிழரசு

  • கருத்துக்கள உறவுகள்
28503748.jpg
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் போராட்டமாக உருவெடுத்தது மாணவர் போராட்டம் - ரஜினி ரசிகர்களும் களத்தில் குதித்தனர்!camera_icon.jpeg

 

rajini-protest-190313-seithy-150.jpg

இலங்கைத் தமிழர்களுக்கு தனி ஈழம், இனப்படுகொலை செய்த ராஜபக்சேவுக்கு தண்டனை, கச்சத்தீவை திரும்பப் பெறுதல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ரஜினிகாந்த் ரசிகர்கள் உண்ணாவிரதம் நடத்தினர். இலங்கைப் பிரச்சனையில் தமிழருக்கு ஆதரவான போராட்டம் இதுவரை இல்லாத அளவுக்கு இந்தியாவில் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. மாணவர்கள் ஆரம்பித்த இந்தப் போராட்டம் இப்போது மக்கள் போராட்டமாக வடிவம் பெற்றுள்ளது. இப்போது இதில் ரஜினி ரசிகர்களும் கைகோர்த்துள்ளனர். வேலூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் சோளிங்கர் நகரில் மார்ச் 19-ம் தேதி ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டனர். இந்தப் போராட்டத்தில் ஏராளமான ரஜினி ரசிகர்கள் பங்கேற்றனர். ரஜினி ரசிகர்கள் ஏற்கெனவே 2009-ம் ஆண்டு ஈழப் போர் உச்சக்கட்டத்தில் இருந்த போது தனி ஈழம் கோரி தொடர் உண்ணாவிரதம் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்போது மீண்டும் ஈழப் பிரச்சனைக்கான போராட்டத்தில் தங்களின் உணர்வுகளைக் காட்ட ஆரம்பித்துள்ளனர் என ரசிகர் மன்ற தலைவர் கூறினார்.

  

 

rajini-protest-190313-seithy.jpg

http://www.seithy.com/breifNews.php?newsID=78460&category=TamilNews&language=tamil

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாணவர் போராட்டத்தால் அதிர்ந்தது கோவை !

Updated 40 minutes ago
இன்று தமிழீழம் அமைய வற்புறுத்தி கோவை கல்லூரி மாணவர்கள் வரலாறு காணாதவாறு பல்லாயிரக் கணக்கில் திரண்டு பிரமாண்ட பேரணி நடத்தினர் . அரசியல் கட்சிகளே இது போன்ற பேரணியை நடத்த முடியாது ஆனால் மாணவர்கள் தங்களை தாங்களே ஒழுங்குபடுத்தி தமிழீழ மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என இப்படி ஒரு கவன ஈர்ப்பு பேரணியை நடத்தி உள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது . இது வரை நடந்த மாணவர் ஒன்றுகூடலில் இந்தப் பேரணி தான் மிகப் பெரியது என்றும் கூறலாம் . நிச்சயம் இது அரசியல் கட்சிகளை மட்டுமல்லாமல் அரசையும் திரும்பிப் பார்க்க வைக்கும் என்பது ஐயமில்லை . இம்மாணவர்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்காத எந்த அரசியல் கட்சிகளும் இனி ஆட்சிக் கட்டிலில் ஏற முடியாது . தமிழர்களின் நியாயமான கோரிக்கையை அரசு கவனத்தில் கொள்ளவேண்டும் அல்லது அரசு அதன் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதை கோவை மாணவர்கள் நமக்கு செய்தியாக உணர்த்தி உள்ளனர் . கோவை மாணவர்களுக்கு நமது பாராட்டுகள் . வெல்க மாணவர் போராட்டம் . தமிழகமெங்கும் நடக்கும் மாணவர் போராட்டம் புதிய தமிழகத்தை உருவாக்கி வருகிறது என்று சொன்னால் அது மிகையல்ல . 

படங்கள்: தமிழ் டெனி

 
 
 

482138_619725521375635_661471767_n.jpg

45536_619725544708966_1852314317_n.jpg

575147_619725534708967_302797417_n.jpg

577590_619725571375630_1627402762_n.jpg

487498_619725614708959_1078818943_n.jpg

426496_619725608042293_716568980_n.jpg

482319_619725618042292_319562329_n.jpg31900_619725674708953_325417586_n.jpg580621_619725691375618_405649038_n.jpg487828_619725688042285_1805940079_n.jpg386422_619725731375614_341101881_n.jpg562353_619725841375603_1126317061_n.jpg

402377_619725848042269_1323046721_n.jpg482364_619725894708931_1446664326_n.jpg300720_619726078042246_975118781_n.jpg

246398_619726098042244_782178918_n.jpg45536_619725544708966_1852314317_n.jpg

- முகநூல் -

  • கருத்துக்கள உறவுகள்

ரஜனி ரசிகர் மன்ற உறுப்பினர்களுக்கும், தொடர்ந்து போராடும் மாணவர்களுக்கும் & பொது மக்களுக்கும் நன்றிகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

v-thiruchchibnsl%20%284%29.jpg

photo.gifvideo123.gifஇன்று காலை முதல் திருச்சியில் மாணவர்கள் இந்திய மத்திய அரசுக்கும் சிறீலங்கா அரசுக்கும் எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் போது இந்திய மத்திய அரச அலுவலகங்கள் முற்றுகையிடப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது.

சற்று முன் மத்திய அரசுக்கு சொந்தமான BSNL அலுவலகம் முற்றுகையிடப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டுக்கொண்டிருப்பதாக ஈழதேசம் நிருபர் தெரிவித்துள்ளார். 

v-thiruchchibnsl%20%282%29.jpgv-thiruchchibnsl%20%285%29.jpgv-thiruchchibnsl%20%283%29.jpgv-thiruchchibnsl%20%281%29.jpg

 

 

 

http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=19650:2013-03-19-09-45-07&catid=1:aktuelle-nachrichten&Itemid=50

  • கருத்துக்கள உறவுகள்

தி மு க வை மத்திய அரசில் இருந்து வெளியேற்றியது மாணவர்களுக்கு கிடைத்த முதல் வெற்றி......வாழ்த்துகள் மாணவர்களே

அம்மா சொல்லி வேலை இல்லை இந்த படங்களை பாக்க பாக்க மாற்று கருத்து கும்பல்களுக்கு வயித்தால போக போது ......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர்களுக்காக போராடும் மாணவர்களுக்கு செவ்வணக்கம்: சத்யராஜ்- மணிவண்ணன்

19-sathyaraj2-300.jpg

சென்னை: ஈழத்து உறவுகளின் உரிமைகளையும், உடைமைகளையும் மீட்டுத்தர பசியையே ஆயுதமாக்கிப் போராடும் எங்கள் எதிர்கால நம்பிக்கை வெளிச்சமாய் உதயமாகி இருக்கும் தமிழக மாணவச் செல்வங்களுக்கு எங்கள் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம் என்று நடிகர் சத்தியராஜ், இயக்குநர் மணிவண்ணன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இன்று அவர்கள் இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறியுள்ளதாவது:

குருதிச் சேற்றில் தங்கள் உறவுகளையும், வாழ்வையும், உரிமைகளையும் புதையக் கொடுத்து விட்டு, முள்வேலிக் கம்பிகளுக்குள் பசித்த வயிரோடு பரிதவித்து நிற்கும் நமது, ஈழத்து உறவுகளின் உரிமைகளையும், உடைமைகளையும் மீட்டுத்தர பசியையே ஆயுதமாக்கிப் போராடும் எங்கள் எதிர்கால நம்பிக்கை வெளிச்சமாய் உதயமாகி இருக்கும் தமிழக மாணவச் செல்வங்களுக்கு எங்கள் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

சுயநலமும், அரசியலும் கலக்காத சமூகத்துக்கான சமூக மனிதர்களின் தூய்மையான போராட்டமாக மாணவர்களின் போராட்டம் அமைந்திருக்கிறது. ஒன்றிணைந்த மாணவர் சக்தி பெரும் வெற்றிகளை குவித்திருக்கிறது என்பதே இதுவரை உலக வரலாறு.

அதற்கு தமிழகமும் ஒரு சான்றாக விளங்குகிறது. இந்த மாணவர்களின் பட்டினிப் போராட்டமும், ஈழத்தில் நடந்தது போர் குற்றமல்ல இனப்படு கொலை என்ற உண்மையான உன்னதமாக குரலை ஓங்கி ஒலிக்கிறது. இந்தக் குரல் உலகத்தின் செவிப் பறைகளைக் கிழிக்கும்.

கொடுங்கோலன் ராஜபக்சேவை கூண்டில் நிறுத்தும் எம் ஈழ உறவுகளுக்கு நீதி பெற்றுத் தரும் என்பது தின்னம். உள்நோக்கமற்ற அறம் நிறைந்த எமது மாணவர்களின் இந்த தூய்மையான போராட்டத்துக்கு எமது செவ்வணக்கம். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

 

http://tamil.oneindia.in/movies/news/2013/03/sathyaraj-manivannan-s-red-salute-to-171826.html




மயங்கி சுருண்டு விழுந்தும், தனி ஈழம் வேண்டும் என உச்சரித்த உதடுகள்!
 

students-6002.jpg

 

 

 

பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும், ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், தனி ஈழம் வேண்டும் போன்ற கோரிக்கைகளை உள்ளடக்கி சேலத்தில் மத்திய சட்ட கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

 

சட்ட கல்லூரி வளாகத்திலேயே நடந்த இந்த உண்ணாவிரதம் இன்று 7வது நாளை எட்டியது. இதில் காலை 11.30 மணியளவில் இரண்டு மாணவர்கள் அந்த இடத்திலேயே சுருண்டு மயங்கி விழுந்தனர்.

 

ஆம்புலென்ஸ் வந்து அவர்களை மருத்துவமனைக்கு ஏற்றி சென்றது. அந்த நேரத்திலும் தனி ஈழம் வேண்டும் என அவர்களின் உதடுகள் உச்சரித்தபடியே இருந்தது.
 
இதே போல பெரியார் பல்கலைகழக வாசலிலேயே பல்கலைகழக மாணவர்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர் 

 

செய்தி படங்கள் இளங்கோவன்

 

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=94641

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ராஜபச்சே போர்க்குற்றவாளி என தீர்மானம் கொண்டுவரக்கோரி அரை நிர்வாண போராட்டம் 

students-8886.jpg

 

 

 

இலங்கை அதிபர் ராஜபக்சேவை இனப்படுகொலை செய்த போர் குற்றவாளி என்று ஐ.நா மன்றத்தில் தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்பதை வலியுறுத்தி  புதுக்கோட்டையில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் அரை நிர்வாண ஆர்ப்பாட்டம் நடந்தது.

இரா.பகத்சிங்.

 

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=94633

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்சேவுக்கு பாடைகட்டி மாணவகளின் எழுச்சி பேரணி! அடக்குமுறை செய்த காவல்துறை! 

students-6000.jpg

 

 

 

 சேலத்தில் தொடர்ந்து ஆறு நாட்களுக்கு மேல் மத்திய சட்ட கல்லூரி மாணவர்கள்உண்ணாவிரதம் இருந்து போராடி வருகின்றனர். இதையொட்டி சேலத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளும் போராட  வந்தனர். தனி தனியாக போராடுவதை விட ஒற்றுமையாக போராடினால் வலிமை கூடும் என கருதி அனைவரும் ஒரு இடத்தில இருந்து ஒருங்கிணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை 7 கி.மீ பேரணியாக சென்று கோரிக்கைகளை வெல்ல போராடலாம் என முடிவெடுத்தனர். 

 

எனவே இன்று (19.03.2013) காலை சேலத்தில் உள்ள பல்வேறு தனியார் கல்லூரி மாணவர்களும் சட்ட கல்லூரியில் திரண்டனர்.  

பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் 

ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் 

 

இலங்கையில் நடந்தது இனப்படுகொலையே 

என முழக்க மிட்டு அனைவரும் எழுச்சி உரையும் ஆற்றினர். பின் சில மாணவர்கள் ராஜபக்சே போல உருவபொம்மை செய்து எடுத்து வந்து அதை பாடையில் கட்டி பிணம் போல நாலு பேர்கள் தூக்கி சுமந்து சென்றனர்.

 

இந்த பாடையோடு மாணவர்கள் பேரணி தொடங்கியது. சட்ட கல்லூரியில் இருந்து ஏற்காடு முக்கிய சாலை வரை பேரணி வந்துகொண்டு இருக்கும்போதே பெரும்படையில் திரண்டு இருந்த காவல்துறையினர் வழிமறித்து தடுத்தனர். எங்கள் உணர்வுகளை தானேகாட்டுகிறோம் இன்னும் சிறிது தூரமாவது செல்ல விடுங்கள் என்றனர் மாணவர்களும்மாணவிகளும் ஆனால் காவல்துறையோ சட்டை செய்யாமல் அனைவரையும் அள்ளிபோட்டது. திமிறிய மாணவர்களை தாக்கியது. தள்ளிவிட்டது. இதையும் தாண்டி மாணவர்கள் ராஜபக்சே உருவ பொம்மையை தீயிட்டு கொடும்பாவி எரித்தனர். 

இதனால் ஆத்திரம் அடைந்த காவல்துறை ஏ.சி ரவிசங்கர் காவல்துறையை ஏவி விட மிக கடுமையாக மாணவர்களை தள்ளுமுள்ளு செய்து குண்டு கட்டாக வேனிர்க்குள் திணித்து கைது செய்தனர்.

 

காக்கிகளின் அடக்குமுறைகள் மாணவர்கள் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. 

செய்தி, படங்கள்: இளங்கோவன்

 

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=94634

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதி , காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேற முக்கிய காரணம் , தமிழகத்தில் வெடித்த மாபெரும் மாணவர் புரட்சி .

அந்தப் புரட்சித் தீ மேலும் பரவட்டும் ! மாணவர்கள் போராட்டங்களுக்கு ஆதரவாக நாம் போடும் பதிவுகள் தொடரட்டும் !!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.