Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழர் பிரச்னை: தமிழ் திரைப்பட இயக்குனர்கள் உண்ணாவிரதம். (படங்கள் & வீடியோ )

Featured Replies

தமிழீழமே தீர்வு, பொதுவாக்கெடுப்பு தேவை இவற்றை வலியுறுத்தி தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கம் மற்றும் திரைதுறையினர் இன்று 19.03.2013 ல் சென்னை வள்ளுவர் கோட்டத்தில்  இன்று ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வருகிறது.

இயக்குனர் சங்கத் தலைவர் அமீர் தலைமையில் நடந்து வரும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் இளையராஜா , நடிகர் சிறிகாந்த் ,கௌதம்மேனன், எஸ்.ஜே.சூர்யா உள்பட ஏராளமான இயக்குனர்கள் பங்கேற்றுள்ளனர்.

மேலும் நடிகைகள் சுகாஷினி, குயிலு என ஏராளமானவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த உண்ணாவிரத்தையொட்டி இன்று ஒருநாள் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

{youtube}mB9s0EZmT8{youtube}

உண்ணாவிரதத்துக்கு தமி்ழ்நாடு சி்ன்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளதாக அதன் தலைவர் ராதிகா சரத்குமார் அறிவித்துள்ளார்.

மேலும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேனமும்(பெப்சி) கலந்து கொண்டுள்ளது.

http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13449:valluvarkottam&catid=36:tamilnadu&Itemid=102

iyakunar_sankam.jpg

Share this post

 

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் அரசியல் நிலைப்பாட்டை தெளிவாகப் பதிவுசெய்தமைக்கு நன்றி..

எனக்குத் தெரிந்து இளையராஜா இப்படியான ஒன்றில் கலந்து கொள்வது இதுதான் முதல் தரம் என்று நினைக்கின்றேன்.



இவர்களுடன் மணிரத்தினமும் சுஹாசினியும் கலந்து கொண்டது இன்னுமொரு ஆச்சரியம். இளைஞர்களின் போராட்டம் இவர்களையும் பாதித்து இருக்குமோ...!

பாதித்து இருக்கும் , எதை?  தங்கள் வருமானம் வருங்காலத்தில் புறக்கணிக்கப்பட கூடாது என்பதற்காக.

 

ஆனால் இன்றும் இவர்கள் குரல் கொடுத்தமை எமக்கு தேவையான விடயமே. அத்துடன் இவர்கள் பலவேறு வழிகளிலும் உதவலாம், அதுவே உண்மையான உதவியாக இருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்குத் தெரிந்து இளையராஜா இப்படியான ஒன்றில் கலந்து கொள்வது இதுதான் முதல் தரம் என்று நினைக்கின்றேன்.

இவர்களுடன் மணிரத்தினமும் சுஹாசினியும் கலந்து கொண்டது இன்னுமொரு ஆச்சரியம். இளைஞர்களின் போராட்டம் இவர்களையும் பாதித்து இருக்குமோ...!

 

எனக்கும் ஆச்சரியமாக இருக்கின்றது!!!!!!

எது எப்படியிருந்தாலும் ஈழத்தமிழர்களுக்கு நல்லது நடந்த பின்னர்தான்........இவர்களுக்கு நன்றிகளோ அல்லது இவர்களை தோளில் வைத்து கொண்டாடுவதும்........இது தமிழக அரசியல்வாதிகளுக்கும் பொருந்தட்டும்....பட்டதும் போதும் ....அழிந்ததும் போதும் ஐயா :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

பாதித்து இருக்கும் , எதை?  தங்கள் வருமானம் வருங்காலத்தில் புறக்கணிக்கப்பட கூடாது என்பதற்காக.

 

ஆனால் இன்றும் இவர்கள் குரல் கொடுத்தமை எமக்கு தேவையான விடயமே. அத்துடன் இவர்கள் பலவேறு வழிகளிலும் உதவலாம், அதுவே உண்மையான உதவியாக இருக்கும்.

 

சரியாகச் சொன்னீர்கள்.

 

ராஜாவுக்கு அங்க போயும் சுயதம்பட்டம் தானா..?!

 

எதுஎப்படியோ.. எல்லா மக்களையும் போல தனக்கும் இவற்றில்.. பங்குபற்ற ஒரு ஆர்வம்.. மனிதாபிமானம் இருக்கு என்று காண்பித்தமை  அவரை மனிதனாக..  அடையாளம் காட்டுகிறது. :icon_idea:

 

37957_1.jpg

 

http://www.nakkheeran.in/Users/frmGalleryList.aspx?GV=1788&GSS=4

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இனியாவது அணைக்கிற கைகளை உதறாது இருப்போமாக

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.