Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொது பல சேனாவிற்கு அரசு நேரடியாக ஆதரவளிக்கவில்லை - ரிஷாத் பதியுதீன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பொது பல சேனாவிற்கு அரசு நேரடியாக ஆதரவளிக்கவில்லை - ரிஷாத் பதியுதீன்

 

images9.jpgஇலங்கையில் அண்மைக் காலமாக முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கின்ற பொது பல சேனா என்ற கடும்போக்கு பௌத்த அமைப்புக்கு அரசாங்கம் நேரடியாக ஆதரவளிக்கிறது என்று கூறமுடியாது என்று அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவிக்கிறார்.

ஆனால் அரசாங்கத்தில் பொது பல சேனாவை ஆதரிக்கின்ற ஜாதிக ஹெல உறுமய போன்ற கட்சிகள் இருப்பதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, பொது பல சேனா அமைப்பே தங்களுக்கு அரசாங்கத்துடன் தொடர்பில்லை என்று கூறியிருப்பதாகவும் அதேபோல அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கூட அந்த அமைப்பை அரசாங்கம் தடைசெய்ய வேண்டும் என்று கோரியிருப்பதாகவும் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

சிங்கள கடும்போக்கு அமைப்பு என்று கூறப்படும் பொதுபல சேனாவுக்கு அரசு நேரடியாக ஆதரவு அளிக்கவில்லை என்று அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கூறுகிறார்.

இதேவேளை, பொது பல சேனாவின் விழாவொன்றில் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில் கலந்துகொண்டிருந்தார்.

அந்த நிகழ்வில் அவர் அதில் கலந்துகொள்ளக்கூடாது என்று முஸ்லிம் அமைச்சர்கள் முன்கூட்டியே கேட்டுக்கொண்டிருந்தததாகவும் ரிசாத் கூறினார்.

இதேவேளை, முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக ஆராய்வதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நியமித்துள்ள அமைச்சரவை உபகுழு இன்று திங்கட்கிழமை கூடியுள்ளது.

முன்னாள் பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்க தலைமையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம், அமைச்சர் அதாவுல்லா ஆகியோருடன் தானும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க, அமைச்சர் டியூ குணசேகர, அமைச்சர் திஸ்ஸ வித்தாரண ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டதாகவும் அமைச்சர் ரிஷாத் கூறினார்.

பொதுபல சேனா மற்றும் சிங்கள ராவய போன்ற கடும்போக்கு பௌத்த அமைப்புகளால் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படுவதாகவும் ஹலால் உணவு முறைக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்றும் முஸ்லிம் உலமா சபையை இழிவுபடுத்தும் விதமாக அந்த அமைப்புகள் கருத்து வெளியிடுவதை நிறுத்த வேண்டும் என்றும் தாங்கள் கேட்டுக்கொண்டதாக அமைச்சர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
  • கருத்துக்கள உறவுகள்
இந்த பொழைப்புக்கு..பேசாமா மாமா வேலை செய்யலாம் :wub: ...மானம் என்றால் என்ன என்று எங்கள் தலைவன் பிராபகரனின் வரலாற்றை படித்து தெரிந்துகொள்ளுங்கள்..இப்படி அரசியல் செய்பவர்களைவிட வயிற்றுக்காக உடலை விற்பவர்களிடம் நேர்மை இருக்கிறது.... :wub: 
 
கண்ணா பதியுதீன் இந்தக்காமடியை கவனமா பார்த்துக்கோ..பின்னாடி பீல் பண்ணியாவது திருந்திக்கோ...
 
 
என்னங்க..அப்ப நான் கிளம்புறன்..

அரசியலிலை இதெல்லாம் சகஜமப்பா டக்ளசும் கருணாவும் தமிழருக்கு செய்யாததையா ரிஷாத் பதியுதீன் முஸ்லீமுக்கு செய்துபோட்டார்.

Edited by Mayuran

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சர் வாசுதேவவின் அமைச்சரவை பத்திரத்துக்கு பொது பல சேனா எதிர்ப்பு


நாட்டில் பொதுபலசேனா, இராவண பலய மற்றும் சிங்கள ராவய போன்ற அமைப்புக்கள் உள்ளிட்ட தீவிரவாத குழுக்கள் மீது தடை விதிக்கக்கோரும் அமைச்சரவைப் பத்திரமொன்றை தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அமைச்சரவைக்கு விரைவில் சமர்ப்பிக்கவுள்தாக தெரிவித்தமை குறித்து பொது பல சேனா எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.

குருநாகலை, பன்னலை பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற அவ்வமைப்பின் மார்ச் மாதத்துக்கான இறுதி மக்கள் ஒன்று கூடலின் போதே அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் அமைச்சரவை பத்திரம் தொடர்பான நடவடிக்கைக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 


நாட்டில் அண்மைக் காலமாக இடம்பெற்று வரும் பதற்றத்தைத் தோற்றுவிக்கும் மதம் சார்ந்த சம்பவங்களைக் கருத்திற்கொண்டு இத்தகைய குழுக்கள் மீதான தடையை அமுல்படுத்தும் விதத்தில் புதிய சட்டங்களைக் கொண்டு வருவதற்கே குறித்த பத்திரம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று பன்னலையில் உரையாற்றிய பொது பல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இவ்வாறான அமைச்சரவை பத்திரத்தை சமர்பிக்க முன்னர் அமைச்சர் வாசுதேவ மொழிகள் தொடர்பிலான உரிய கொள்கையொன்றினை வகுத்து அது தொடர்பில் அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்பித்து சிங்கள மொழிக்கு முன்னுரிமை பெற்றுத்தரவேண்டும் என தெரிவித்தார்.

அத்துடன் இவ்வாறான அமைச்சர்களை இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அங்கொடை மனநல மருத்துவமனைக்கு அனுப்பி பரிசோதிக்குமாறு ஜனாதிபதியை கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

 

https://www.facebook.com/pages/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-Protesters-against-Pothu-Bala-Sena/427778897310772?ref=stream

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/photo.php?v=387780547986814

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனக்கலவரத்தை தூண்ட பொதுபலசேனா முயற்சி! கொழும்பு நாளிதழ் குற்றச்சாட்டு!!

பாதுகாப்பமைச்சின் செயலாளர் கோத்தாவின் பின்புலத்தினில் செயற்பட்டுவரும் பொதுபலசேனா இனக்கலவரத்தை தூண்டும் வகையில் செயற்படுவதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
Pothupalasena1.jpg

ஏற்கனவே பர்மாவில் ஏற்படுத்தப்பட்ட இனக்கலவரத்தை ஒத்த இனமோதல் ஒன்றை உருவாக்கவிருப்பதாக அச்செய்தியினில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2000ம் ஆண்டுகளில் பர்மாவில் 969 என்ற பௌத்த அடிப்படைவாத அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது.

இது அங்கிருந்து சிறுபான்மை முஸ்லிம்களை வெளியேற்ற தீவிர முயற்சிகளை மேற்கொண்டது.

அத்துடன் பல முஸ்லிம் சிறுவர்களை கடத்திச் சென்று பல்வேறு துன்புறுத்தல்களையும் மேற்கொண்டது.

தற்போது அதே போன்ற செயற்பட்டையே பொது பலசேனா அமைப்பு இலங்கையில் ஆரம்பித்திருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது இலங்கையை உலக நாடுகளில் இருந்து வேறொரு இடத்துக்கு கொண்டுச்செல்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இதனால் இலங்கையின் எதிர்காலம் சர்ச்சைக்குறியதாக இருப்பதாகவும் அந்த இதழ் சுட்டிக்காட்டியுள்ளது.

 

http://www.pathivu.com/news/24156/57/d,article_full.aspx

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
ஹலால் தொடர்பில் இனிமேல் பேசமாட்டோம் - பொது பல சேன

 

bodubalasena6.jpgஹலால் தொடர்பில் இனிமேல் பேசமாட்டோம் என பொது பல சேன இன்று வியாழக்கிழமை அறிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற சந்திப்பின் பின்னரே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொது பல சேன தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மேற்கொண்டவாறு பொது பல சேன அறிவித்துள்ளது.  இங்கு  பொது பல சேனவின் பிரதிநிதிகள் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

‘சமூக ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கமே எமது அமைப்பின் முதன்மை நோக்கங்களாகும். அத்துடன் முஸ்லிம்கள் ஹலால் சான்றிதழ் பொறிக்கப்பட்ட உணவுகளை உண்ண உரிமை உண்டு. அதேபோல் முஸ்லிமல்லாதவர்கள் விரும்பிதை உண்ணலாம்

இதேவேளை, தமது இயக்கத்தை தடை செய்ய வேண்டும் என கோரி தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார சமர்ப்பிக்கவுள்ள அமைச்சரவை பத்திரத்தை கண்டிக்கின்றோம். குற்றசாட்டுகளுக்கு பதிலளிக்க உரிய கால அவகாசம் வழங்கப்படாமல் அமைச்சரவை பத்திரத்தை கொண்டுவர அமைச்சர் வாசுதேவ நாணயக்கார உரிமையில்லை.

அத்துடன் சமூகங்களுக்கு இடையில் பிரிவினையை பரப்புவோருக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆடைக் களஞ்சியசாலைகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மற்றும் எம்பிலிபிடிய, தம்புள்ளை, அநுராதபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடம்பெற்ற மோதலில் தமக்கு தொடர்பு இல்லை.

சில இரகசிய குழுக்கள் தம்மீது சேறுபூச விரும்புகின்றனர். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களினால் நிதி வழங்கப்படும் அரசியல் கட்சிகளும் குழுக்களும் பொது பல சேன பற்றி கட்டுக்கதைகளை பரப்பி வருகின்றது.

அரசாங்கமும் எதிhக்கட்சியும் எமக்கு முடிவுகட்ட முயல்கின்றது. நாம் இதை நடக்க அனுமதியோம். பொது பல சேன என்ற பெயரில் பேஸ்புக் மற்றும் டிவிட்டர் ஆகிய சமூக வலைத்தளங்களில் இயங்குகின்றன. இவை தமக்கு உரியவை அல்ல. முஸ்லிம் கடைகளை பகிஷ்கரிக்க வேண்டும் என்ற துண்டுப்பிரசுரங்களை தாங்கள் வெளியிடவில்லை’.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

 

இது அந்தர் பல்டிடா சாமி..

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டின் தொழில் துறை அபிவிருத்தி எனக் கூறிக்கொண்டு, சூதாட்ட நிலையங்கள், கசினோ நிலையங்களை திறந்து, இலங்கையை வெள்ளைகாரர்களின் காலனியாக மாற்ற இடமளிக்க போவதில்லை என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர், இரண்டு மாதங்களில் நாட்டில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த எண்ணியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

பௌத்த மாநாடு ஒன்றின் மூலம் நோய்வாய்ப்பட்டிருக்கும் நாட்டை மீண்டும் உயிர்பிக்க போவதாகவும் இலங்கையை மற்றுமொரு தாய்லாந்ததாக முயற்சிக்கும் அனைவரும் இது வெறும் கனவாக மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை எனவும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்திற்கு மாத்திரமல்ல, எதிர்க்கட்சியினருக்கும், இலங்கை என்ற பௌத்த மண்ணை வெளிநாட்டினரின் காலனியாக மாற்றும் தேவை இருந்த போதிலும் இதனை செய்ய இடமளிக்க போவதில்லை.

முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தா உடை தொடர்பாக பொதுபல சேனா அமைப்பு சில செயற்பாடுகளில் ஈடுபட உள்ளதாக ஊடகங்களில் வெளியிடப்படும் தகவல்கள் முற்றிலும் பொய்யானது. லங்கா ஈ நியூஸ், லங்கா சீ நியூஸ் ஆகிய இரண்டு இணையத்தளங்களும் தமது அமைப்பை விமர்சிப்பதாகவும் இந்த இணையத்தளங்கள் பொதுபல சேனா குறித்து பொய்யான செய்திகளை வெளியிட்டு வருகின்றன எனவும் ஞானசார தேரர் கூறியுள்ளார்.

கே.பி போன்ற விடுதலைப்புலிகளின் தலைவர்களை கைதுசெய்யும் அளவுக்கு திறமையான புலனாய்வு பிரிவு இலங்கையில் இருப்பதால், லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தின் சந்தருவான் சேனாதீர லண்டனில் இருப்பதால் முடிந்தால் அவரை கைதுசெய்யுமாறு தமது அமைப்பு அரசாங்கத்திற்கு சவால் விடுப்பதாகவும் அவர்கள் தமது இணையத்தளங்கள் மூலம் நாட்டில் இனவாதத்தை தூண்ட முயற்சித்து வருகின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/90445/language/ta-IN/article.aspx

ஆனால் மேற்குலக நாடுகளுக்கு கடன் வேண்டியே வாழுகின்றோம்.

 

சுதந்திரம் என்ற பெயரில் சிறுபான்மை மக்களை அழித்து பௌத்த நாடாக்குவதே இந்த 65 வருடங்களாக நாம் செய்வது

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளை  என்பதற்குள் 

சீனர்கள் வரவில்லையோ???

Edited by விசுகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.