Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடகொரியா அணு ஆயுத மிரட்டல்: எதிர்ப்பு ஏவுகணைகளை நிறுத்தியது அமெரிக்கா!

Featured Replies

http://www.yarl.com/forum3/index.php?showtopic=69819

 

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

வடகொரியா நான்காவது ஏவுகணை பரிசோதனையை செய்யுமா செய்யாதா?

 

news_09-04-2013_8Nkorea_issile.jpg

 

வடகொரியா நான்காவது அணுச்சோதனை செய்வதற்கு தயாராக இல்லை எனவும், வடகொரியாவின் முக்கிய அணு சோதனை செய்யும் இடத்தில் வழமைக்கு மாறான நடமாட்டங்கள் எதுவும் தென்படவில்லை எனவும் தென்கொரியா தெரிவித்துள்ளது.

வடகொரியா நான்காவது அணுச் சோதனைக்கு தயாராவதாக தென்கொரியாவின் அமைச்சர் ஒருவர் நாடாளுமன்ற விசாரணை ஒன்றில் தெரிவித்திருந்த நிலையில், இவ்வாறாக கூறி மேலும் பதற்றத்தை அதிகப்படுத்த வேண்டாம். அப்படி ஒரு சமிக்கையும் கிடைக்கவில்லை என தென்கொரிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

முன்னதாக வடகொரியா எந்த நேரத்திலும் ஏவுகணை சோதனையை மேற்கொள்ள வாய்ப்பிருப்பதாக தொடர்ந்து தகவல் வெளிவந்தவாறு இருந்தன. எதிர்வரும் புதன்கிழமைக்குள் வடகொரியாவிலிருந்து அனைத்து வெளிநாட்டு தூதர்களும் வெளியேற வேண்டும் என வடகொரிய அரசு உத்தரவிட்டிருப்பதையும் தென் கொரியா சுட்டிக்காட்டியிருந்தது.
 
இதனிடையே வடகொரியா போர் ஒத்திகை பயிற்சிகளையும் தற்போது  தொடங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

http://www.paristamil.com/tamilnews/view-news-MjYyMDQ5Nzg0.htm#.UWPG4UqC9S0

Edited by nunavilan

  • Replies 58
  • Views 3.4k
  • Created
  • Last Reply

April 8, 2013

 

ஆசியாவில் குழப்பம் ஏற்படுத்த முயற்சிப்பவர்களை அனுமதிக்க முடியாது: சீன அதிபர் ஜின்பிங் பேச்சு.

 

சுயநலத்துக்காக, ஆசிய பகுதியில் குழப்பம் ஏற்படுத்த முயற்சிப்பவர்களை அனுமதிக்க முடியாது,'' என, சீன அதிபர் ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

ஆசிய பொருளாதாரம் குறித்த மூன்று நாள் மாநாடு, பீஜிங்கில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் இந்தியாவின் சார்பில், கம்பெனிகள் விவகாரத் துறை அமைச்சர், சச்சின் பைலட், அமெரிக்க தொழிலதிபர், பில்கேட்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இந்த மாநாட்டில், சீன அதிபர் ஜின்பிங் பேசியதாவது:

கொரிய தீபகற்பத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஆசிய பசிபிக் பகுதியில் அமைதி நிலவ வேண்டும் என விரும்புவதாக அமெரிக்கா கூறுகிறது. சுய நல நோக்கோடு, ஆசிய பகுதியில் குழப்பம் விளைவிக்க, யாரையும் அனுமதிக்க முடியாது. ஆசியாவில் மட்டுமல்ல, உலகின் எந்த பகுதியிலும் இந்த நடைமுறையை ஏற்க முடியாது.

சீனாவுக்கு, அண்டை நாடுகளுடன் எல்லை பிரச்னை தொடர்பாக முரண்பாடு இருந்தாலும், அமைதி பேச்சு வார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள முயற்சிக்கிறது.ஏழை நாடாக இருந்தாலும், பணக்கார நாடாக இருந்தாலும், சிறிய நாடாக இருந்தாலும், பெரிய நாடாக இருந்தாலும், அமைதி ஏற்படுத்துவதில் இந்த நாடுகளின் பங்களிப்பு தேவை.காற்று, வெயில் உள்ளிட்டவை இயல்பாக எங்கும் நிறைந்திருப்பது. அதன் பலனை எல்லாரும் அனுபவிக்க முடியும். அதே போல, அமைதியும் எல்லாருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும்.இவ்வாறு ஜின்பிங் பேசினார்.

ஜப்பான் உஷார்: தங்கள் நாட்டில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களுக்கு, இம்மாதம், 10ம் தேதி முதல், பாதுகாப்பளிக்க முடியாது என, வட கொரியா தெரிவித்திருந்தது.எனவே, "வட கொரியா தாக்குதல் நடத்தும்' என, அண்டை நாடுகளான தென் கொரியா, ஜப்பான் போன்றவை நம்புகின்றன."நம் நாட்டு எல்லைக்குள் நுழையும் வட கொரிய ஏவுகணைகளை சுட்டு வீழ்த்துங்கள்' என, ஜப்பான் தனது ராணுவ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை, அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது. கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் நிலவுவதால், தாங்கள் மேற்கொள்ளும் ஏவுகணை சோதனை, தேவையில்லாத சந்தேகங்களை உருவாக்கும் என்பதால், இந்த சோதனையை நிறுத்தி வைத்துள்ளதாக, அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் சக் ஹேஜல் தெரிவித்துள்ளார்.

 

http://www.paristamil.com/tamilnews/view-news-MjYxNzYzMzgw.htm#.UWPH00qC9S0

Edited by துளசி

தென்கொரியாவைவிட்டு வெளியேறுங்கள் - வடகொரியா போர் எச்சரிக்கை.

 

img1130409035_1_1.jpg

 

 

 

தென் கொரியாவில் வசிக்கும் வெளிநாட்டினர் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று வடகொரியா போர் எச்சரிக்கையை சூசகமாக தெரிவித்துள்ளது.

தென் கொரியா மற்றும் அமெரிக்காவின் முக்கிய நகரங்களின் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தப்போவதாக வடகொரியா மிரட்டல் விடுத்துள்ளது.

வடகொரியாவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க தயாராக உள்ளதாக தென் கொரியாவும் அமெரிக்காவும் கூறியுள்ள நிலையில் வடகொரியா ஏவுகணை தாக்குதல் நடத்தினால் ஜப்பான் கடற்பகுதியில் அந்த ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் வகையில் ஜப்பான் ராணுவமும் தயார் நிலையில் உள்ளது.

இந்நிலையில், தென் கொரியாவில் வசிக்கும் வெளிநாட்டினர் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று வடகொரியா எச்சரித்துள்ளது.

'போர் மூண்டால், தென்கொரியாவில் வசிக்கும் வெளிநாட்டினரை துன்புறுத்த நாங்கள் விரும்பவில்லை. எனவே, உடனடியாக அவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும்' என கொரியா - ஆசிய பசிபிக் அமைதி குழுவின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

 

http://tamil.webdunia.com/newsworld/news/international/1304/09/1130409035_1.htm

 

Edited by துளசி

வட கொரியாவின் வியாபரங்களை எல்லாம் தொலைத்துவிட்டார்கள். இதனால் வடகொரியா இப்படிப் புருடா விடுகிறது. எத்தனை நாளைக்கு  சரவதேச நிறுவனங்களை தென் கொறியாவை விட்டு வெளியே இருக்கும்?

சிறிலங்காவை எச்சரிக்கும் வடகொரியா!

 

தென்கொரியாவில் வசிக்கும் வெளிநாட்டவர்களை நாட்டில் இருந்து வெளியேறுமாறு வட கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரிய தீபகற்பத்தில் யுத்த சூழ்நிலை ஏற்படும் சந்தர்ப்பத்தில் வெளிநாட்டவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என கருதியே வடகொரியா இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளது.

சிறிலங்கா தூதரகத்தின் ஊடாகவும் அங்கு பணியாற்றும் சிறிலங்காவைச் சேர்ந்த ஊழியர்களுக்கும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

எனினும் வடகொரியாவின் எச்சரிக்கை தொடர்பில் அவசர தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்பட மாட்டாது என சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையில் யுத்தம் ஏற்படக் கூடிய அபாய நிலைமை உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தென்கொரியாவில் சிறிலங்காவைச் சேர்ந்த சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் கடமையாற்றி வருகின்றனர்.
 
தென் கொரிய அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கு அமையவே நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

வடகொரிய எச்சரிக்கை தொடர்பில் துரித கதியில் எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்பட மாட்டாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
தென் கொரியாவுடன் மிக நெருக்கமாக செயற்பட்டு வருவதாகவும், நிலைமைகள் உன்னிப்பாக அவதானிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தென்கொரியாவின் எந்தவொரு தூதரகமும் வடகொரியாவின் எச்சரிக்கையை பொருட்படுத்தவில்லைஎன வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

 

http://www.paristamil.com/tamilnews/view-news-MjYyMzA2NTYw.htm#.UWVqOUqC9S0

 

தலிபான் கொக்கரித்தார்கள், சதாம்,  கடாபி,   அசாட் என நீண்ட  போர் வடகொரியாவின்   தலைவிதியை மாற்ற போகிறது என்பத்ய் யதார்த்தம்.

 

 நாங்கள்( இத்தாலி தமிழர்கள்) சமாதாண காலத்தில்  வலிய போர் தொடங்க சொல்லி  வன்னிக்கு   ஆர்ப்பாட்டம் நடத்தி மனுக் கொடுத்த கதையும்  இந்த நேரத்தில் நினைவில் வைத்து கொள்வோம்.

 

இத்தாலியில் நடத்திய ஆர்ப்பாட்டத்துக்கு வன்னியில்  சனம் அடிவாங்கி  படுகொலை செய்யப்பட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பொருளாதார தடைகளால் வடகொரியாவில் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது, பஞ்சத்தால் இறப்பதைவிட போராடி இறப்பது மேல் என்று நினைத்துவிட்டார்கள் போலும். போராடி ஒருவேளை வடகொரியாவின் கை ஓங்கிவிட்டால் அவர்களின் இருப்பு உறுதி செய்யப்படுவதோடு அவர்களின் மீதான தடையும் நீக்கப்படலாம். ஆனால் இப்போர் தற்கொலைக்கு சமனானது. வரைமுறைகளை உடைப்பதும் வரம்புகளை மீறுவதும் சிலவேளைகளில் வாழ்க்கையில் அவசியமானதே

 

அமெரிக்க அரசுதுறைச் செயலர் தென்கொரியாவில்!

 

130412085851_john_kerry_seoul_south_kore

 

 

கொரிய தீபகற்பத்தில் முறுகல்நிலை முற்றிவருகின்ற நிலையில், அமெரிக்காவின் அரசுதுறைச் செயலர் ஜோன் கெர்ரி பேச்சுவார்த்தைகளுக்காக தென்கொரியா சென்றுள்ளார்.

தென்கொரிய அதிபர், வெளியுறவு அமைச்சர் மற்றும் அந்நாட்டிலுள்ள அமெரிக்க இராணுவத் தளபதிகளை ஜோன் கெர்ரி சந்தித்துப் பேசிவருகிறார்.

வடகொரியாவை கட்டுப்படுத்தி வைக்குமாறு ஜோன் கெர்ரி அவரது ஆசியாவுக்கான விஜயத்தின்போது சீனாவிடம் வலியுறுத்துவார் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடிய வல்லமை வடகொரியாவுக்கு உள்ளது என்று அமெரிக்க புலனாய்வு அறிக்கையொன்று கூறியுள்ள நிலையிலேயே, அமெரிக்க அரசுதுறைச் செயலர் தென்கொரியாவுக்குச் சென்றுள்ளார்.

அடுத்து சீனாவுக்குச் செல்லவுள்ள கெர்ரி, இந்தப் பிரச்சனை பற்றி பேசுவதற்காக ஜப்பானுக்கும் செல்லவுள்ளார்.

 

http://www.bbc.co.uk/tamil/global/2013/04/130412_uskorea.shtml

 

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 

மிகுந்த பயத்தில் இருக்கிறோம்' : தென்கொரியாவில் உள்ள இலங்கையர்

 

தாம் மிகுந்த அச்சத்தில் இருப்பதாக தென்கொரியாவில் பணியாற்றுகின்ற இலங்கையைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கொரிய தலைநகரான ஸோலுக்கு தென்கிழக்கு திசையில் சுமார் 40 மைல் தூரத்தில் ஓசோன் என்னும் நகரத்தில் பணியாற்றுகின்ற இலங்கையின் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த முஹமட் பௌஸ் என்னும் அந்த இளைஞர் அங்கிருக்கும் இலங்கையர்கள் எல்லாம் மிகுந்த அச்சத்தில் இருப்பதாகக் கூறினார்.

தமக்கு தமது நிறுவனத்தினால், தங்குவதற்கான வசதிகள் எல்லாம் உரிய வகையில் செய்து கொடுக்கப்பட்டிருந்தாலும், வடகொரியாவால் ஒரு தாக்குதல் நடத்தப்பட்டால், ஒளிவதற்காக பதுங்கு குழி வசதிகளோ அல்லது சுரங்க அறை வசதிகளோ தமக்கு செய்து தரப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

ஏவுகணைகளை ஏற்றிய வாகனங்கள் அங்குமிங்கும் நடமாடுவதாகவும், நகருக்கு மேலாகச் செல்லும் விமானங்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டதாகவும் கூறிய அவர் இவற்றால் தமது அச்சம் அதிகரிப்பதாகவும் கூறினார்.

மோதல் ஏற்படும் பட்சத்தில் தம்மை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக இலங்கை அரசாங்கம் கூறுவதாக ஊடகங்களிலேயே தாம் பார்த்ததாகக் கூறும் பௌஸ், ஆனால் எவ்வாறு அவற்றை செய்யப்போகிறார்கள் என்பது குறித்து தமக்கு எந்த விதமான தகவல்களும் கிடைக்கவில்லை என்றும் கூறுகிறார்.

எது எப்படி இருந்தாலும் தென்கொரிய மக்கள் இந்தப் பதற்றங்கள் எதுவும் இன்றி சாதாரணமாகவே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சுமார் இருபத்தையாயிரம் முதல் நாற்பதாயிரம் வரை இலங்கையர்கள் அங்கு வேலை செய்வதாகக் கூறும் அவர் அனைவரும் இவ்வாறே பயத்தில் இருப்பதாகவும் கூறுகிறார்.

 

http://www.bbc.co.uk/tamil/multimedia/2013/04/130412_fowzkorea.shtml

 

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

-------

 

மிகுந்த பயத்தில் இருக்கிறோம்' : தென்கொரியாவில் உள்ள இலங்கையர்

 

தாம் மிகுந்த அச்சத்தில் இருப்பதாக தென்கொரியாவில் பணியாற்றுகின்ற இலங்கையைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் தெரிவித்துள்ளார்.

-------

சுமார் இருபத்தையாயிரம் முதல் நாற்பதாயிரம் வரை இலங்கையர்கள் அங்கு வேலை செய்வதாகக் கூறும் அவர் அனைவரும் இவ்வாறே பயத்தில் இருப்பதாகவும் கூறுகிறார்.

 

வட கொரியாவிலையியோ... தென் கொரியாவிலையோ.... சிங்களவன், இலங்கை முஸ்லீம் தான் போய் குடியிருப்பான்.

அங்கு தமிழன் எவனும் போகமாட்டான், என்பதால்..... எவன் அடிபட்டுச் செத்தாலும், எனக்குக் கவலையில்லை.

வட கொரியாவிலையியோ... தென் கொரியாவிலையோ.... சிங்களவன், இலங்கை முஸ்லீம் தான் போய் குடியிருப்பான்.

அங்கு தமிழன் எவனும் போகமாட்டான், என்பதால்..... எவன் அடிபட்டுச் செத்தாலும், எனக்குக் கவலையில்லை.

தென்கொரியாவில் தமிழர்களும் உள்ளார்கள். :)

http://www.yarl.com/forum3/index.php?showtopic=119014&p=882774

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

தற்செயலாக ஏதாவது சில்லறைக் காரணத்திற்காக யுத்தம் ஆரம்பிக்குமே தவிர ஒரு போதும் வட கொரியா யுத்தத்தை முனைந்து தொடுக்காது. அப்படித் ஆரம்பித்தால் வட கொரியத் தலைவருக்கும் அவரது ஆட்சிக்கும் ஆப்புத்தான். எனவே ஆகாயத்தில் போகின்ற பிசாசை வடகொரியா கயிற்றைக் கட்டி இறக்கமாட்டார்கள் :)

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான்  கிருபன்

ஆனால் ஈரானுடனான  சண்டை தள்ளிப்போவதற்கும்

சிரியாவுடனான மோதல் காட்சிப்பொருளாகி  வருவதற்கும்

மேலைத்தேசத்தவரின்  பொருளாதார பலவீனமே  காரணம்  என்ற களநிலை  ஆய்வகள் சரி  என்று வடகொரியர்களும் சீனர்களும் ரசியர்களும் முடிவெடுத்துவிட்டால்.......................???

 

உலக மாறுதல்கள் நடக்கும் களமாக வட கொரியா மாறக்கூடுமல்லவா???

  • கருத்துக்கள உறவுகள்

 

உண்மைதான்  கிருபன்

ஆனால் ஈரானுடனான  சண்டை தள்ளிப்போவதற்கும்

சிரியாவுடனான மோதல் காட்சிப்பொருளாகி  வருவதற்கும்

மேலைத்தேசத்தவரின்  பொருளாதார பலவீனமே  காரணம்  என்ற களநிலை  ஆய்வகள் சரி  என்று வடகொரியர்களும் சீனர்களும் ரசியர்களும் முடிவெடுத்துவிட்டால்.......................???

 

உலக மாறுதல்கள் நடக்கும் களமாக வட கொரியா மாறக்கூடுமல்லவா???

வட கொரியச் சண்டை ஆரம்பித்தால் பல நாட்களுக்கு இழுபடாது. அமெரிக்கா தனது நவீன ஆயுதங்களையும் உபகரணங்களையும் வைத்து சில நாட்களிலேயே முடித்துவிடும். வடகொரிய மக்களுக்கு விடுதலையும் வந்துவிடும்!

  • கருத்துக்கள உறவுகள்

 

வட கொரியச் சண்டை ஆரம்பித்தால் பல நாட்களுக்கு இழுபடாது. அமெரிக்கா தனது நவீன ஆயுதங்களையும் உபகரணங்களையும் வைத்து சில நாட்களிலேயே முடித்துவிடும். வடகொரிய மக்களுக்கு விடுதலையும் வந்துவிடும்!

 

இன்றைய சூழ்நிலையை நீங்கள் கணக்கில் எடுக்கவில்லை  கிருபன்

அவ்வளவுசுலபமாக இராது

குறித்து வைத்துக்கொள்ளுங்கள்

உலக நிலையை  அது தலைகீழாக மாற்றக்கூடும்.

உலக எசமானங்களாக சீனர்கள் வரக்கூடும்

அண்மையில் ஒரு ஆய்வில் ஐரோப்பாவிலுள்ள  பல நாடுகள் பிரெஞ்சு  உட்பட வறிய  நாடுகளின் பட்டியலில் வரவிருக்கின்றன எனத்தெரிவித்துள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

 

இன்றைய சூழ்நிலையை நீங்கள் கணக்கில் எடுக்கவில்லை  கிருபன்

அவ்வளவுசுலபமாக இராது

குறித்து வைத்துக்கொள்ளுங்கள்

உலக நிலையை  அது தலைகீழாக மாற்றக்கூடும்.

உலக எசமானங்களாக சீனர்கள் வரக்கூடும்

அண்மையில் ஒரு ஆய்வில் ஐரோப்பாவிலுள்ள  பல நாடுகள் பிரெஞ்சு  உட்பட வறிய  நாடுகளின் பட்டியலில் வரவிருக்கின்றன எனத்தெரிவித்துள்ளது

நான் குறிப்பிட்ட கருத்து வடகொரிய நிலவரம் பற்றிய மேற்கத்தையப் பாதுகாப்பு ஆய்வாளர்களின் குறிப்புக்களிலிருந்து வந்தது.

சீனா வடகொரியாவுடன் இணைந்து மேற்கோடு போர் ஆரம்பித்தால் உலகம் மிஞ்சாது! எனவே சீனா வடகொரியாவை அடக்கித்தான் வைத்திருக்க முயலும். 

April 12, 2013

 

கொரிய வலயத்தில் யுத்தப் பதற்றத்தை தணிக்க சீனாவும் ரஷ்யாவும் அழுத்தம்.

 

வடகொரியாவின் ஆத்திரமூட்டும் யுத்த அச்சுறுத்தலுக்கு எதிராக சீனாவின் அரச தலைமையகத்தில் இருந்து வெளியான கருத்துக்களை அமெரிக்கா வரவேற்றுள்ளது.

இது குறித்து வெள்ளை மாளிகையின் பத்திரிகையாளர்களுக்கான செயலாளர் ஜாய் கார்னேய் நிருபர்களுக்குச் செவ்வாய்க் கிழமை பேட்டியளிக்கையில், வடகொரியாவின் நடவடிக்கைகள் குறித்து சீனா வெளியிட்டுள்ள கருத்துக்கள் அர்த்தமுள்ளவையாகவும் நியாயத்தை வெளிப்படுத்துவதாகவும் உள்ளது என்றார்.

மேலும் வடகொரியாவின் நடத்தையில் மாற்றத்தைக் கொண்டு வர அமெரிக்காவுடன் சீனாவின் ஆலோசனை மிகவும் தேவைப் படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இது குறித்து அமெரிக்கா ஏற்கனவே ரஷ்ய அரசுடன் கலந்துரையாடியிருப்பதாகவும் அவர் தெரிவித்த அவர் இவ்விடயத்தில் அமெரிக்கா மிகவும் வெளிப்படையாகவே நடவடிக்கைகளை முன்னெடுக்க விரும்புவதாகவும் கூறினார். இந்நிலையில் சனிக்கிழமை சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி கூறிய கருத்தை நோக்குவதும் முக்கியமானதாகும். அவர் தனது கூற்றில், வடகொரியாவின் எத்தகைய மிரட்டல் பாணியிலான வார்த்தைகளையும் செயற்பாடுகளையும் சீனா கடுமையாக எதிர்ப்பதாகவும் வடகொரியாவில் உள்ள எந்தத் தரப்பாக இருந்தாலும் இது கண்டிக்கத் தக்கது என்றும் தனது நாட்டின் மக்களைப் பாதிக்கக் கூடிய எந்த ஒரு தகராறையும் தவிர்க்க சீனா மும்முரமாகச் செயற்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

இதேவேளை கொரிய வலயத்தில் யுத்தப் பதற்றத்தைத் தணித்து நிலமையை சாதாரண நிலைக்குக் கொண்டு வர ரஷ்யா அழுத்தம் தெரிவிக்கும் என அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் சேர்கெய் லவ்ரோவ் உம் செவ்வாய்க்கிழமை ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார். மேலும் அணுகுண்டு வெடிப்புக்களும் ஏவுகணைத் தாக்குதல்களும் நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளக் கூடிய விடயங்கள் அல்ல எனவும் நிலமையின் தீவிரத்தை ரஷ்யா நன்கு உணர்ந்திருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

http://www.paristamil.com/tamilnews/view-news-MjYyNzExNDc2.htm#.UWlve0qC9S0

 

கொரியாவில் அணு ஆயுத ஒழிப்பு' - சீனா மற்றும் அமெரிக்கா உறுதி

 

130413124951_kerry_china_304x171_reuters

 

கொரிய தீபகற்பத்தில், அணு ஆயுதத்தை ஒழிப்பது தொடர்பில் இணைந்து செயற்படப் போவதாக சீனாவும், அமெரிக்காவும் கூறியுள்ளன.

சீனத் தலைநகர் பீஜிங்கில் பேச்சுவார்த்தைகளை நடத்திய பிறகு பேசிய அமெரிக்க அரசுத்துறை செயலர், ஜோண் கெரி அவர்கள், இது பற்றி குறிப்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்ய இரு தரப்பும் தொடர்ந்தும் பேசவிருப்பதாக கூறியுள்ளார்.

அமெரிக்காவையும், தென்கொரியாவையும் வடகொரியா மிரட்டியது தொடர்பான முரண்பாடு, பேச்சுவார்த்தைகள் மூலம் அமைதியாக கையாளப்பட வேண்டும் என்று சீன வெளியுறவு கொள்கை தலைவரான யாங் ஜீச்சி கூறியுள்ளார்.

வடகொரியா தனது அணு ஆயுதத்திட்டத்தை கைவிட உடன்படும் வரை, அதனுடன் மேலும் சமரச முயற்சிகளை மேற்கொள்ளப்போவதில்லை என்று அமெரிக்கா கூறுகிறது.

 

http://www.bbc.co.uk/tamil/global/2013/04/130413_usandchinaonkorea.shtml

 

அணுகுண்டு சோதனை நடந்தால் பொருளாதார தடை- வட கொரியாவுக்கு ‘ஜி 8′ நாடுகள் எச்சரிக்கை.

 

அணுகுண்டு மற்றும் ஏவுகணை சோதனை நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், மேலும் அதன் மீது ஐ.நா.சபை கொண்டு வர இருக்கும் பொருளாதார தடை தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக ‘ஜி 8′ நாடுகள் தெரிவித்துள்ளன.

கொரிய தீபகற்பத்தில் வட கொரியா போர் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. தென் கொரியா மற்றும் அமெரிக்கா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்துவோம் என மிரட்டி வருவதுடன் அதற்கான ஆயத்த வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், வளர்ந்த நாடுகள் என்றழைக்கப்படும் ‘ஜி 8′ நாடுகளின் கூட்டம் லண்டனில் 2 நாட்கள் நடந்தது. அதில், அந்த நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது, வடகொரியா மீது ‘ஜி 8′ நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி பேசும்போது, வடகொரியா மீண்டும் அணுகுண்டு சோதனை நடத்தப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனால் கொரிய தீபகற்பத்தில் தேவையற்ற பதட்டம் நிலவுகிறது. மீண்டும் அணுகுண்டு சோதனை நடத்தினால் அந்த நாட்டின் மீது மீண்டும் பொருளாதார தடைவிதிக்கப்படும் என எச்சரித்தார்.

இதுபோன்று ‘ஜி 8′ நாடுகளை சேர்ந்த வெளியுறவு அமைச்சர்களும் வடகொரியாவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து முடிவில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், வடகொரியா அணுகுண்டு மற்றும் ஏவுகணைகளை தயாரித்து சோதனை நடத்தி வருவது கண்டிக்கதக்கது. அதற்கான யுரேனியம் நிரப்பும் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலை மேலும் தொடர்ந்தால் வடகொரியா மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை தவிர வடகொரியா தொடர்ந்து நடத்தும் அணுகுண்டு சோதனை சர்வதேச நாடுகளின் அமைதிக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. எனவே, வடகொரியாவுக்கு எதிராக ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கொண்டு வந்துள்ள தீர்மானங்களுக்கு ஆதரவும் தெரிவிக்கப்பட்டது.

 

http://tamil.webdunia.com/newsworld/news/international/1304/12/1130412043_1.htm

 

தென்கொரியாவின் பேச்சுவார்த்தை அழைப்பை நிராகரித்தது வடகொரியா.

 

img1130415015_1_1.jpg

 

 

வடகொரியா தென்கொரியவுக்கு எதிராக விடுத்த போர் பிரகடனத்தால் கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. அமெரிக்காவின் ஆலோசனைப்படி தென்கொரியா விடுத்த பேச்சுவார்த்தை அழைப்பை வடகொரியா நிராகரித்தது.

தென் கொரியாவையும் அதற்கு ஆதரவு தெரிவிக்கும் அமெரிக்காவையும் தாக்குவோம் என்று வடகொரியா அறிவித்துள்ளது. இதனால் கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதப்போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

பதற்றத்தைத் தணிப்பதற்காக பேச்சுவார்த்தைக்கு வருமாறு வடகொரியாவுக்கு தென் கொரியா கடந்த வாரம் அழைப்பு விடுத்திருந்தது. எனினும், இது தென் கொரியாவின் தந்திரம் என்று கூறி இந்த அழைப்பை வடகொரியா நிராகரித்து விட்டது. தென் கொரியா தனது மோதல் போக்கைக் கைவிடும் வரை அதனுடன் பேச்சு நடத்தும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்று வடகொரிய அரசின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

கொரிய தீபகற்பத்தில் நிலவும் போர்ப் பதற்றம் குறித்து விவாதிப்பதற்காக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி ஞாயிற்றுக்கிழமை ஜப்பான் சென்றார். அவர் ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் பியூமியோ கிஷிடாவைச் சந்தித்துப் பேசினார். பின்னர் இருவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, ஜப்பானின் பாதுகாப்பை உறுதிசெய்ய அமெரிக்கா உறுதி பூண்டுள்ளது என்று ஜான் கெர்ரி தெரிவித்தார்.

மேலும், ஜப்பானின் பாதுகாப்புத்துறை அமைச்சர் இட்சுனோரி ஒனோடரா கூறுகையில், சர்வதேச சமூகத்தின் பேச்சைக் கேட்கும்படி வடகொரியாவை அமெரிக்கா மற்றும் ஜப்பானின் மூத்த அமைச்சர்கள் கடுமையாக வலியுறுத்துவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். நாம் சர்வதேச ரீதியில் ஒருங்கிணைந்து செயல்படுவதும், அணு ஆயுத மற்றும் ஏவுகணைத் திட்டங்களைக் கைவிடுமாறு வடகொரியாவிடம் உறுதியாகத் தெரிவிப்பதும் முக்கியமானவை என்றார்.

 

http://tamil.webdunia.com/newsworld/news/international/1304/15/1130415015_1.htm

 

அப்போ சண்டை வராதா? :(

  • கருத்துக்கள உறவுகள்
வட கொரியாவோடு பேச்சுவார்த்தைக்கு தயார்:அமெரிக்கா அறிவிப்பு

 

usa-300x201.jpgவட கொரியாவோடு பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா தயாராக இருப்பதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி தெரிவித்துள்ளார்.அதே நேரத்தில், வடகொரியா சர்வதேச சமூகத்திற்கு ஏற்கெனவே அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.டோக்யோவில் ஜப்பான் பிரதமருடனான சந்திப்பிற்கு பின் பேசிய கெர்ரி, வடகொரியா விஷயத்தில் அனைத்து நாடுகளும் ஒரே கருத்தைக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். வடகொரியா நடத்தி வரும் அணு ஆயதங்கள் சோதனையானது அதன் அண்டை நாடுகளுக்கு மட்டுமல்லாது, அந்நாட்டு மக்களுக்கும் அச்சுறுத்தல் தரும் விஷயமாகும் என்றும் தெரிவித்துள்ளார் கெர்ரி.

உலகில் எங்கும் போர் என்பதே கூடாது என்பதே அனைத்து நாடுகளின் விருப்பமும். எனவே இந்த விவகாரத்தில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

 

முன்னறிவிப்பின்றி தாக்குதல் நடத்துவோம் : தென் கொரியாவுக்கு வடகொரியா எச்சரிக்கை

 

April 17, 2013

 

 

news_17-04-2013_5korea_map.jpg

 

தங்களுக்கு எதிரான போராட்டங்களை தென் கொரியா தொடருமானால் எந்தவித முன்னறிவுப்பும் இன்றி தாக்குதல் நடத்தப்படும் என வடகொரியா இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென் கொரிய தலைநகர் சியொலில் போராட்டக்காரர்கள் ஒன்றினைந்து வடகொரிய அதிபர் ஜிம் ஜாங் உன், முன்னாள் அதிபர்கள் கிம் ஜாங் இல், கிம் இல் சங் ஆகியோரின் உருவ பொம்மைகளை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். தென் கொரியா மற்றும் அமெரிக்கா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்துவோம் என வடகொரியா எச்சரித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் நடைபெற்றது.

அதிலும் குறிப்பாக வடகொரிய முன்னாள் அதிபர் கிம் இல் சங்கின் 101 வது ஆண்டு பிறந்த நாள் விழா கடந்த திங்கட்கிழமை கொண்டாடப்பட்ட நிலையில் அன்றைய தினமே தென் கொரியாவில் இப்போராட்டங்கள் நடைபெற்றன. இதையடுத்து ஆத்திரமடைந்துள்ள வடகொரிய இராணுவம், தென் கொரியாவுக்கு தனது இறுதி எச்சரிக்கையை விடுத்துள்ளது.

அதில் வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தென் கொரியாவுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால் எதிர்ப்பு நடவடிக்கைகளை கைவிட வேண்டும். வடகொரியாவுக்கு எதிரான செயல்களுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தென் கொரியாவும், அமெரிக்காவும் இணைந்து நடத்தி வரும் போர் ஒத்திகை பயிற்சியின் போது வடகொரிய எல்லையில் தென் கொரியாவுக்கு உள்பட்ட செயொல்வான் மாவட்டத்தில் அமெரிக்க ஹெலிகாப்டர் ஒன்று நொறுங்கி வீழ்ந்தது. எனினும் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 12 இராணுவ வீரர்களும் உயிர் தப்பியுள்ளனர்.

கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இது குறித்து பேசுவதற்காக தென் கொரிய அதிபர் பார்க் கியூன் ஹையை எதிர்வரும் மே 7ம் திகதி அமெரிக்க அதிபர் ஒபாமா சந்திக்கவுள்ளார். இதையொட்டி தென் கொரிய அதிபரை வாஷிங்டன் வருமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

 

http://www.paristamil.com/tamilnews/view-news-MjYzNTQxMDYw.htm#.UXBPa0qC9S0

 

மே 7 ஆம் திகதி வாஷிங்டனில் தென்கொரிய அதிபரை நேரில் சந்திக்கவுள்ள ஒபாமா.

 

April 17, 2013

 

 

news_17-04-2013_12Park.jpg

 

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தென்கொரிய அதிபர் பார்க் கெயுன் ஹையே இனை மே 7 ஆம் திகதி வாஷிங்டனில் சந்திக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரிய வலயத்தில் யுத்தப் பதற்றம் அதிகரித்துள்ள வேளையில் இச்சந்திப்பு நிகழவுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் இச்சந்திப்பின் போது பாதுகாப்பு மற்றும் பொருளாதாரம் சம்பந்தமான விடயங்கள் பேசப்படலாம் எனக் கருதப் படுகின்றது.

கடந்த சில வாரங்களாக வடகொரியா தென்கொரியா, ஜப்பான், மற்றும் இந்நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை எந்நேரமும் தாக்குவோம் என அச்சுறுத்தல் விடுத்து வந்தது. மேலும் இன்று செவ்வாய்க்கிழமை அமெரிக்க இராணுவ ஹெலிகாப்டர் ஒன்று வடகொரிய எல்லைக்கருகே தரையில் வீழ்ந்து வெடித்துள்ளது. இதில் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து உடனடித் தகவல்கள் எதுவும் இல்லை எனினும் இச் சம்பவம் குறித்த விசாரணைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஹெலிகாப்டரில் 21 பேர் பயணம் செய்ததாகவும் ஏதோ ஓர் காரணத்தால் இது தரையிறங்கையில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது எனவும் கொரியாவிலுள்ள அமெரிக்கப் படைகளின் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் இக்குழு ஜப்பானின் ஒகினாவாவில்  இருந்து புறப்பட்ட 31 ஆவது கடற்படைப்  பிரிவு எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

பெப்ரவரி 12 ஆம் திகதி வடகொரியா நிலத்துக்கடியில் மறைமுகமாகத் தனது 3 ஆவது அணுப் பரிசோதனையை நிகழ்த்தியதை அடுத்து சர்வதேசத்தின் அழுத்தம் அதிகரித்ததுடன் ஐ.நா சபையினால் பொருளாதாரத் தடைகளும் விதிக்கப் பட்டன. இந்நிலையில் வடகொரியாவின் பிரிட்டனுக்கான தூதுவர் ஹ்யொன் ஹக்-பொங் கூற்றுப்படி தற்போது நிலவும் யுத்தப் பதற்றத்துக்கு வடகொரியா காரணமல்ல என்றும் அது அமெரிக்காவின் யுத்த அறைகூவலின் காரணமாகவே ஏற்பட்டது எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. தென்கொரியாவில் தற்போது சுமார் 200,000  அமெரிக்கப் படைகள் வரை இராணுவப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

 

http://www.paristamil.com/tamilnews/view-news-MjYzNTUwOTM2.htm#.UXBSAEqC9S0

 

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

வடகொரியா ஐ.நாவால் தன் மீது போடப்பட்ட பொருளாதார தடையை நீங்கினால் தான் பேச்சுவார்த்தைக்கு வருவேன் என கூறுகிறது.

 

 

 

 

North Korea demands end to U.N. sanctions before talks

 

North Koreans pass by a large nationalist painting in Pyongyang. (David Guttenfelder / Associated PressApril 10, 2013)

By Emily Alpert

April 18, 201311:44 a.m.

 

North Korea insisted Thursday that the U.S. and South Korea must scrap United Nations sanctions and put an end to joint military drills before any talks on its nuclear arsenal can begin. The U.S. and South Korea have said the burden is on Pyongyang to pull back on its nuclear ambitions.

Experts say both sides have set out unrealistic demands. The South Korean Foreign Ministry derided the North Korean argument Thursday as “totally incomprehensible” and “illogical.” North Korea, in turn, is extremely unlikely to give up its nuclear bargaining chips before even getting to the table, analysts said.

But even talk of talk has been greeted as a welcome change after weeks of bombastic threats from Pyongyang. Though cautious about predicting what North Korea will do next, some analysts believe that such a change could be a first step toward opening dialogue to defuse tensions on the Korean peninsula.

The North Korean demands, implausible as they are, “could be seen as a step toward Pyongyang backing off the ledge,” said Suzanne DiMaggio, vice president of global policy programs at the Asia Society.

“It could offer an opening for Seoul and Washington to approach North Koreans,” possibly making some kind of contact that falls short of official talks, she said.

Tensions soared after North Korea conducted its third nuclear test in February, spurring a new, stiffer round of U.N. sanctions last month. At the same time, Pyongyang was infuriated by ongoing U.S.-South Korea military drills.

The isolated nation declared an end to a Korean War armistice and vowed nuclear attacks on its foes. Intelligence analysts said North Korea was poised to test as many as five missiles last week.

Yet a week later, both sides were talking about negotiations. Charles K. Armstrong, director of the Center for Korean Research at Columbia University, said he believes that was what North Korea was aiming for all along.

“Making a very strong, even outrageous set of statements, with the intention of negotiation from a position of strength -- that’s pretty consistent with their past behavior,” he said.

The military drills that left North Korea steaming are due to end in a week and a half, which is expected to dial down tensions. A key day in the North Korean calendar -- a holiday marking the birthday of its late founder, Kim Il Sung -- passed Monday, which could allow “posturing” to die down, Armstrong said.

So far, North Korea has not launched the missiles it moved to its east coast, as had been feared last week. Pyongyang may still press ahead with a missile test to shore up support at home before talking to Washington, said Marcus Noland, senior fellow at the Peterson Institute for International Economics.

“The problem is, if you’re [North Korean leader] Kim Jong Un and you are putting your nuclear program on postage stamps and billboards and having mass rallies in Pyongyang chanting that this is the lifeblood of the nation ... if you’ve built all that up, it’s quite hard to back away.”

“He needs some way to declare victory,” Noland said. After carrying out a missile test, North Korea could tell its people “they’ve come begging to talk to us,” and resume negotiations.

DiMaggio said that wouldn’t help bring the U.S. or South Korea to the table, however.

“Seoul and Tokyo would feel more threatened," she said. "They’d want the U.S. to offer more reassurance that they’re protecting their allies. That would likely include more joint military exercises.”

Another important player is China. Beijing has evidenced growing frustration with North Korea, a situation that has spurred hopes it might put more pressure on its longtime ally. U.S. Secretary of State John F. Kerry visited China last week, mentioning Korean tensions among several “very challenging issues” before meeting with President Xi Jinping. What China is doing behind the scenes could prove crucial.

Experts caution that reading North Korea under its new young leader remains difficult. Weeks ago, former basketball star Dennis Rodman returned from the country saying that Kim just wanted President Obama to call him. Soon after, Pyongyang vowed to attack the U.S. and South Korea.

“This still strikes me as a fairly capricious and unpredictable regime,” Noland said.

 

Copyright © 2013, Los Angeles Times

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.