Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை செல்கிறது இந்திய எம்.பி.க்கள் குழு; தமிழக எம்.பி.க்களுக்கு இடமில்லை!

Featured Replies

 தமிழகத்தில் ஈழ ஆதரவு போராட்டம் வலுவடைந்துள்ள நிலையில், இந்திய அனைத்து
கட்சி எம்.பி.க்கள் குழு ஒன்று வரும் 9 ஆம் தேதியன்று இலங்கை செல்ல உள்ளது.


6 பேர் கொண்ட இக்குழுவில் ஆளும் காங்கிரஸ், பிரதான
எதிர்க்கட்சியான பா.ஜனதா, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பகுஜன் சாமஜ்
கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர்.
 
 9
ஆம் தேதியன்று இலங்கை செல்லும் இக்குழு, மாலை 6 மணியளவில் யாழ்ப்பாணம்
சென்று, அங்குள்ள சமூகப் பிரதிநிதிகளைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.
அதன்பின்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே உள்ளிட்ட முக்கிய தலைவர்களையும்
இவர்கள் சந்தித்துப் பேச உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இக்குழுவில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13805:india-srilanka-tour&catid=37:india&Itemid=103

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் இலங்கைக்குப் போனபின்பு, வெளிவிடப்போகும் அறிக்கையின் சாராம்சத்தை, இப்போதே என்னால் எழுத முடியும்! :D

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள தேசத்தில் தயாராக உள்ளவை..

 

  • ஆண் எம்பிக்களுக்கு பணிவிடை செய்ய அழகான சிங்களக் கன்னிகைகள்..! :wub:
  • அது முடியாதவர்களுக்கு தேயிலைத் தோட்டத்தில் பங்கு.. :D
  • பெண் உறுப்பினர்களுக்கு நவரத்தினக் கற்கள்..! வெளியில் பிடிபடாமல் கொண்டுவாறது உங்கள் பொறுப்பு.. :unsure::D

எங்களால் முடிந்த பரப்புரையை முன்னெடுப்போம் !

கூட்டமைப்பினரும் மற்றையை அமைப்புக்களும் தமது பக்க கருத்துக்களை கூறுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டைத் தனிநாடாக்கும் முயற்சியை இந்திய மத்திய அரசாங்கம் மேற்கொண்டு இதனை

வரும் 9 ஆம் தேதியன்று அங்குரார்ப்பணம் செய்துவைக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டைத் தனிநாடாக்கும் முயற்சியை இந்திய மத்திய அரசாங்கம் மேற்கொண்டு இதனை

வரும் 9 ஆம் தேதியன்று அங்குரார்ப்பணம் செய்துவைக்கிறது.

 

வரலாற்றுத்தவறுகளை தலைவர்கள் விடக்கூடாது

அமைதியாக

பேச்சுவார்த்தை   மூலம் தீர்க்கக்கூடிய விடயங்களை  பெரிதாக்குவதும் வேறு வழிகளை நாடத்தூண்டுவதும் இதுபோன்ற தாயகப்பற்றற்ற சுயநல அரசியல்வாதிகளே.

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் இலங்கைக்குப் போனபின்பு, வெளிவிடப்போகும் அறிக்கையின் சாராம்சத்தை, இப்போதே என்னால் எழுத முடியும்! :D

 

எங்கள் பயணம்  பயனுள்ளதாகவும்  பிரயோசனமானதாகவும் இருந்தது . பலரது குறைகளையும் கேட்டு அறிந்தோம்   அவற்றை  நிறைவேற்றும்படி இலங்கை  அரசிடம்  வலியுறுத்துவோம். :lol: இதுதானே

பழிவாங்களை தனது வெளிநாட்டு, பாதுகாப்பு கொள்கையாகவும், கொள்ளையை தனது பொருளாதார, நிதிக் கொள்கையாகவும் கொண்டியங்கும் காங்கிரசின் அண்மைய பழி வாங்கல்களை இளங்கோவனால் நடத்தப்பட்ட புதிய தலைமுறை மீதான தாக்குதல் வரை பார்த்தோம். நல்லவர்களோ, துட்டர்களோ கருணாநிதி பதவி விலகியதற்கான பரிசை அவர்கள் குடுபம் மீது உடனேயே காங்கிரஸ் காட்ட ஆரம்பித்து விட்டது.

 

தமிழ்நாட்டு காங்கிரஸ் எம்.பி.கள் சந்தர்ப்பவாதிகள். காங்கிரசின் தலைமை பீடத்திடம் தங்கள் கட்சியை தங்களுக்குள்  காட்டிக் கொடுத்து கொண்டிருப்பதால் யுவராஜ் வரையும் பதவி இழந்துவிட்டார்கள். தாங்கள் இவ்வளவு சின்னாபின்னப்பட்ட பின்னரும் ஈழத்தமிழருக்கு தாம் குடைபிடிக்க போவதாக இந்த எம் பீ.க்கள் அண்மையில் பல வாக்குறுதிகளை வழங்கினார்கள். மாணவர் போராட்டம் தேர்தலுக்காக இவர்களை அப்படி பேச வைத்தது. ஆனால் மேலிடத்தில் அவர்களின் பேச்சுகளுக்கு இருக்கத்தக்க பிடி இந்த இலங்கை பயணத்தில் காட்டப்படுகிறது.

 

ரணில் போய் கிந்திய மந்திரிகளுடன் பேசினார். இப்போ கிந்திய எம்.பி.கள் பிரதிக்கடன் செய்ய வருகிறார்கள். சென்ற தடவை வந்து செயலாளர் நாயகத்தை ஈழத்து எம்.ஜி.ஆர். ஆக கௌரவித்துவிட்டு போனார்கள். இந்த முறை வந்து அங்கஜனை ஈழத்து காந்தி என்று கௌரவிப்பார்களாகும்.

 

ஆனால் கங்கிரஸ் இன்னொரு தடவை பதவிக்கு வந்தால், தமிழ் நாட்டை சின்னாபின்னப்படுத்தித்தான் தன் பழி வாங்கல்களை தொடரும். தேர்தலில் கருணாநிதியை உள்ளே வைத்துக்கொள்ள முயன்ற போது சல்மான் குஷ்திர் "தமிழ் நாட்டு மக்களின் உணர்வுகள் மதிக்கப்படும்" என்றார். தி.மு.க. பதவி விலகிய பின்னர், தமிழ்நாட்டு சட்டசபையின் ஏகோபித்த தீர்மானத்தை கவனிக்கத்தேவை இல்லை என்று கூறினார்.

 

ஈழத்தில் இருந்த இந்திய தமிழரை நாடு கடத்திய போது பொன்னம்பலம் கண்ணை மூடிக்கொண்டிருந்தார். ஈழத்தில் வைத்து தமிழரை கொலை செய்த போது கருணாநிதி கண்ணை மூடிக்கொண்டிருந்தார். அல்லது இவர்களை பதவிகளாலும், லஞ்சங்களும் மடங்கப்பண்ணிவிட்டு, இந்திய அரசும் இலங்கை அரசும் ஒன்று கூடி தமிழரை அழித்தன. இந்த அழிப்புகளின் தொடரில் ஒன்றுதான் இந்த பயணமும் போல் இருக்கு.

 

திருட்டு, கொலை, லஞ்சம், கொள்ளை என்ற கறுப்பு ஜனநாயக அரசியலில் முழு மனத்தாக தமிழ்நாடு ஈடுபடாவிட்டால் தமிழ் நாட்டுடன் தனது பழிவாங்கல்களை காங்கிரஸ் நிறுத்திக்கொள்ளாது என்றுதான் சல்மான் குஷ்திர் தனது அண்மைய பேச்சில் சொல்லியிருக்கிறார்.  தமிழ்நாடு வெள்ளை (அல்லது சாதரண) அரசியலில் இறங்க வேண்டுமாயின் இந்தியாவுடன் இணைந்து இருக்க முடியாது என்பதைத்தான் காட்டுகிறது.

 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

சாஸ்த்திரி முக்காலமும் உணர்ந்த சாஸ்த்திரியேதான். நான் ஏதோ புனைப்பெயர் என்று ஊகித்தேன். வாழ்துக்கள்!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.