Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களின் வங்கிக் கணக்குகளில் உள்ள நிதி அரசுடமையாக்கம்

Featured Replies

முக்கிய செய்தி:-

தாயகத்தில் இருந்து இடம்பெயர்ந்து பத்து வருடங்களுக்கு மேலாக பாவனையில் இல்லாத காணிகளை எல்லாம் அரசாங்கம் கையகப்படுத்த முடிவு செய்துள்ளது. அந்த காணிகள் வறுமையில் வாடுபவர்களுக்கும் காணிநிலம் இல்லாதவர் எண்று அரசில் பதிவு செய்தவர்களுக்கும் வளங்கப்படும். நாட்டைப்பாதுகாக்கும் உன்னத பணியில் இருக்கும் இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு முன்னுரிமை வளங்கப்படும்.

காணிகள் இல்லாதவர்கள் எண்று பதிவு செய்யப்பட்டவர்களில் விகிதாசார முறைப்படி பெரும்பாண்மை இனமக்களுக்கு 78 வீதமும் சிறுபான்மை இனமக்களுக்கு 22% மாக பிரித்து வளங்கப்படும் எண்று தெரிய வருகின்றது....! :idea:

  • Replies 118
  • Views 13.7k
  • Created
  • Last Reply

ஆகா அற்புதம் அபாரம் உன்னத சிந்தனை. கையோடு அடுத்த அதிமுக்கிய செய்தியையும் கொண்டு வந்து போட்டுவிடும். :P :P

அநேகமாக எனி சுடலை ஒன்றுதான் அபகரிக்கமுடியாத பொதுச்சொத்தாக இருக்கும். அவசரத்தில் அதைப்பற்றியும் முக்கியசெய்தியென்று போட்டுவிடாதையும் :roll: :wink: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அரசு ஒரு சட்டமூலத்தை கொண்டு வந்து எதிர் காலத்தில் அரசுக்கு வரும் அந்நியச்செலவாணியை அது இளக்கவிரும்புமென்று நான் நம்பவில்லை. இது வேறு சில உள்நோக்கங்களுக்காக பாவிக்கப்படும் மிரட்டலாகவே நான் கருதுகின்றேன். இந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டாலும் அதிலிருந்து தப்பிக்க வழியிருக்கும்போது ஏன் பயப்படவேண்டுமென்பதே என் வாதம். தற்போது கையாளப்படும் கணக்குகளை அவர்களால் ஒன்றும் செய்யமுடியாது. அதனால்த்தான் இதுவரை கையாளப்படாத கணக்குகளை உறவினர் மூலமோ அல்லது நண்பர்கள் மூலமோ கையாளப்பட்டால் அரசால் ஒன்றுமே செய்ய முடியாது.

உயிரிழப்புகள் எத்தரப்பில் ஏற்பட்டாலும் அதனை இதுவரை நான் கண்டித்தே வந்துள்ளேன். ஏதோ தமிழர் நிதியை நம்பித்தான் அரசு யுத்தம் செய்வது போலவும் அது கிடைக்காவிட்டால் யுத்தத்தை அரசு நிறுத்திவிடும் என்பது போலவும் உங்கள் கருத்து உள்ளது.

உங்கள் அளவிற்கு எனக்கு சுத்துமாத்து தெரியாது. கீழ்த்தரமான சிந்தனைகளைத் தவர்த்து கருத்தைக் கருத்தால் எதிர் கொள்ளப்பாருங்கள்.

ஜயா வசம்பு!

இலங்கையில் இன்று கையகப்படுத்தாத பணம் என்றால் அது தமிழரின் பணம் மட்டுமேயாகும். மற்றப்பகுதிகளில் இத்தனை காலம் பணத்தை யாரும் அனுகாமல் இருக்கமாட்டார்கள்! எனவே தமிழரைக் குறி வைத்து தான் இந்தச் சட்ட மூலம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

இதை விட, வங்கி முகாமையாளர் அந்த கூட்டுத்தாபனத்தி;ன் சார்பான அறிக்கை விடமுடியுமே தவிர, தன் சுயகருத்தாக வெளியிட முடியாது. எனவே அவர் வெளிப்படையாக தமிழரின் பணத்தை கையகப்படுத்துவதில்லை சொல்லமுடியும். ஆனால் சட்டத்தில் உள்ள சூட்சமத்தை வெளிப்படுத்த அவரால் முடியாது.

மேலும் சட்டத்தில் இருந்து தப்பிக்கும் வழிகளாக எதைக் கருதுகின்றீர்கள்? புலம்பெயர்ந்த எல்லோராலும் அப்பணத்தை உடனடியாக மீளப்பெற முடியுமா? அல்லது வங்கி கணக்கிலக்கத்தை உடனடியாக உறுதி செய்யமுடியுமா? அதை விட ஒட்டுமொத்த பணமும் ஒருவருக்குரியதல்ல. அவை ஒவ்வொருவருடையது என்று பார்த்தாலும் இப்போது போய் வர

அந்தப் பணத்தில் 4 இலக்க பணமாகத் தான் மிச்சம் வரும்!

சட்டத்தில் தப்பிக்க வசதி உண்டு எனில் ஏன் அரசாங்கம் அப்படி ஒரு சட்டமூலத்தை இயற்ற வேண்டும்? இவ்வளவு அவசரக்குடுக்கையான வேலை என்னத்திற்கு?

இந்தப் பணம் இல்லை என்றால் சண்டையை நிறுத்தி விடும் அளவிற்கு சிங்கள அரசு இல்லை உண்மை தான். கடன்வாங்கி தமிழரைக் கொன்ற சந்திரிக்காவின் ஆட்சியை மறக்க முடியாது தான்.

நீர் சொன்னதற்கு மறுதலையாக இப்பணத்தை சிங்கள அரசு தமிழர் கொலைக்கு பயன்படுத்தாது என்று உம்மால் உறுதிப்படுத்த முடியுமா? இந்தப் பணமும் பயன்படும் என்பதை மறுக்கமுடியாது.

உமக்கு சுத்துமாத்து தெரியாது. ஆனால் சிங்கள பேரினவாதிகளுக்கு வக்காளத்து வாங்கத் தெரிகின்றது!

யாழ்ப்பாணத்திலுள்ள மக்களின் பேணப்ப டாத வங்கிக் கணக்குகளிலுள்ள 3 பில்லியன் ரூபா பணத்தை சூறையாடுவதற்காகவே வங்கி திருத்தச்சட்டமூலத்தை அரசாங்கம் கொண்டுவர முயற்சிப்பதாக ஐ.தே.க.வின் கொழும்பு மாவட்ட எம்.பி. தி.மகேஸ்வரன் சபையில் தெரிவித்தார்.

ஆகா அற்புதம் அபாரம் உன்னத சிந்தனை. கையோடு அடுத்த அதிமுக்கிய செய்தியையும் கொண்டு வந்து போட்டுவிடும். :P :P

அநேகமாக எனி சுடலை ஒன்றுதான் அபகரிக்கமுடியாத பொதுச்சொத்தாக இருக்கும். அவசரத்தில் அதைப்பற்றியும் முக்கியசெய்தியென்று போட்டுவிடாதையும்

நீர் இங்கு மிக முக்கியமாக இருந்து கஸ்ரப்பட்டதால்தான் இது முக்கிய செய்தி....! :wink:

இது செய்தியாக வரும்..... முதலில் வங்கிக்கணக்குகள்... பிறகு காணிகள்...... "யாரும் பயன் படுத்தாத காணிகள் எதற்காக" எண்டு நீங்க இங்க பின்னூட்டம் விடப்போகும் நாள் தூரத்தில் இல்லையோய்....! :wink: :lol:

வசம்பு சொல்வது போல.. இது ஒரு அரசு தனது நிதி நிலமை கருதிச் செய்யும் ஒரு நடவடிக்கையே..! துரதிஸ்டவிதமாக சொந்த தேசத்தை விட்டோடிய தமிழர்களின் கணக்குகள் அதிகம் இதற்குள் சிக்கிக் கொண்டிருப்பதுவே..இது தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கை என்பது போல பிரச்சாரப்படுத்தப்படுகிறது. :roll: :idea:

அரச வங்கிகளில் நீண்ட காலமாக பரிகரிக்கப்படும் பணத்தை உடனடியாக தமிழீழ வைப்பகத்திற்கு மாற்ற எத்தனை தமிழர்கள் தயாராகி இருந்தனர் அல்லது தயாராக இருக்கிறார்கள் என்பது அந்தக் கடவுளுக்கே வெளிச்சம்..??! :?: :idea:

ஜரோப்பிய நாடுகளில் வங்கிக்கணக்கில் காசு இல்லாமல் அதிக வருடங்கள் வெறுமையாக இருந்தால் மட்டுமே அறியதந்து மூடுவதற்கு ஒழுங்கு செய்வார்கள். ஒருசதம் இருந்தாக்கூட வருடம் ஒரு முறை நடைமுறைக்கணக்கு விபரம் அறிய தந்து கொண்டு இருப்பார்கள். ஒவ்வொரு கணக்காளரிடமும் இலங்கை வங்கி கணக்குகளில் நிச்சயம் காசு இருக்கும் .அவர்கள் அந்த பணத்தை அல்லது அதற்கு கொடுக்கவேண்டிய வட்டையை இல்லாம்ல் செய்வதற்காகவே தமிழருக்கு எதிரான மறைமுக நடவடிக்கையே தவிர. வேறு ஒன்றும் இல்லை.

உ-ம் 83ம் ஆண்டு வங்கிக்கணக்கில் 3000 ரூபா பணத்தை விட்டுவிட்டு அகதியாக ஓடியவர் இப்போ 2006 ம் ஆண்டு போய் பணத்தை மீளப்பெறகேட்டால் பெருந்தொகை பணம் வட்டியோடு சேர்த்து கிடைக்கும்.

அவற்றை கொடுப்பதானால் இன்றை நிலையில் வங்கிபெரும்பணத்தை இழக்கும். அதை இல்லாமல் செய்வதற்கு இப்படியான வேலைகளைத்தான் செய்ய முடியும்.

ஏற்கனவே நாடு பிச்சைஎடுக்குறது போருக்ககாக, பிறகு வட்டி போட்டு காசு தர முடியுமா?

இதென்ன சுவிஸ் வங்கியா.

விளங்குகள் எப்படி எல்லாம் உரிமைகள் பறிக்கப்படுகின்றன

அரச வங்கிகளில் நீண்ட காலமாக பரிகரிக்கப்படும் பணத்தை உடனடியாக தமிழீழ வைப்பகத்திற்கு மாற்ற எத்தனை தமிழர்கள் தயாராகி இருந்தனர் அல்லது தயாராக இருக்கிறார்கள் என்பது அந்தக் கடவுளுக்கே வெளிச்சம்..??! :?: :idea:

உண்மையில் பாதிக்கப்பட்ட எத்தனை தமிழர்கள் அங்கு போக அச்சத்தில் இல்லை, முடியாத சூழ்நிலையில் இருக்கிறார்கள் என்பது தெரியுமா...???

உதாரணமாக என்னையே எடுத்துக்கொள்ளலாம்...! :idea:

அது சரி அதுக்கு ஏன் வசம்பர் இங்கிருந்து முக்கிறார். :P :P :P :P

அதைத்தான் முக்கிய செய்தியாக போட்டு இருக்கிறமே....! :):D:lol:

இப்ப குருவிகளும் சேந்துட்டுது... :wink: :P :P

உ-ம் 83ம் ஆண்டு வங்கிக்கணக்கில் 3000 ரூபா பணத்தை விட்டுவிட்டு அகதியாக ஓடியவர் இப்போ 2006 ம் ஆண்டு போய் பணத்தை மீளப்பெறகேட்டால் பெருந்தொகை பணம் வட்டியோடு சேர்த்து கிடைக்கும்.

அவற்றை கொடுப்பதானால் இன்றை நிலையில் வங்கிபெரும்பணத்தை இழக்கும். அதை இல்லாமல் செய்வதற்கு இப்படியான வேலைகளைத்தான் செய்ய முடியும்.

ஏற்கனவே நாடு பிச்சைஎடுக்குறது போருக்ககாக, பிறகு வட்டி போட்டு காசு தர முடியுமா?

இதென்ன சுவிஸ் வங்கியா.

விளங்குகள் எப்படி எல்லாம் உரிமைகள் பறிக்கப்படுகின்றன

உது இல்லைக்காரணம்... தமிழந்தான் கேக்க நாதி இல்லாத செலுட்டு கும்பல்கள்....! அவையிட்ட சுறண்டி தட்டிப்பறிச்சா கேக்க JVP யொ, இல்லை உறுமயவோ வராது எண்ட துணிவுதான்...! அதுக்கு எங்கடை ஆக்களும் துணையா குரல் குடுப்பினம்பாருங்கோ... :wink:

வசம்பு சொல்வது போல.. இது ஒரு அரசு தனது நிதி நிலமை கருதிச் செய்யும் ஒரு நடவடிக்கையே..! துரதிஸ்டவிதமாக

தமிழன் இண்டைக்கும் அதிஸ்ரத்தை நம்பித்தான் இருக்கவேண்டிய நிலை....! :wink: :P

உண்மையில் பாதிக்கப்பட்ட எத்தனை தமிழர்கள் அங்கு போக அச்சத்தில் இல்லை, முடியாத சூழ்நிலையில் இருக்கிறார்கள் என்பது தெரியுமா...???

உதாரணமாக என்னையே எடுத்துக்கொள்ளலாம்...! :idea:

உங்கட சூழல் அப்படி இருக்கலாம்..யாழ் கன்னாதிட்டியில் தமிழீழ வைப்பகம் திறந்து வைக்கப்பட்ட அன்றே..அதில் எம்மிடமிருந்த சிறுதொகைப் பணத்தை வைப்பிலிடச் சென்ற போது அங்கு வெகு சிலரே அக்கறையோடு கணக்குகளை ஆரம்பித்தனர். பலர் தயங்கினர். காரணம் கேட்டால்..உவங்கள் சுருட்டிக் கொண்டு ஓடப் போறாங்கள் என்றுதான் பதில் வந்தது. அந்த அவநம்பிக்கை இப்போதாவது முற்றாக விலகட்டும்..! சிங்களத்தை நம்பி மோசம் போகும் வரை அநேக தமிழர்களுக்கு சுயமா சிந்திச்சு முன்னோடியா நடக்க புத்தியே வாறதில்லை. :P :idea:

ஏன் உதாரணத்துக்கு...இந்த ஒரு பேப்பரைப் பாருங்கோ...ஒரு பக்கம்..நாள் கோள்..சாத்திரத்தில நம்பிக்கை இல்லை என்று சில விடயங்களில் அவற்றைத் தவிர்க்கிறவையே...விளம்பரம் வருவாய் என்ற உடன...அதுக்கு விளம்பரம் போடினம்..! இப்படித்தான் அநேக தமிழர்களும்...சுயநலத்துக்காக எதுவும் செய்வார்கள். தமிழர்களை சிந்திக்க வைக்கிறதுக்கு இரண்டு வழிதான் இருக்கு...ஒன்று அச்சுறுத்துறது..மற்றது சோகத்தில மிதக்க விடுறது..! இவர்களிடம் தேசப்பற்று என்பது கூட அந்த வினாடிக்கு மட்டும் தான்... இப்படியானவர்களை அதிஸ்டம் என்ற அந்த மர்மம் தான் காக்க வேண்டும்..! :P :idea:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கருத்தில் எனக்கும் உடன்பாடுதான். :idea: :idea: :arrow: :arrow: :roll: :roll: :roll: :roll: :roll:

குருவி

சிலபேர் ஊருக்கு உபதேசிப்பது மட்டும்தான். செயற்பாடு என்னவோ வேறுமாதிரித்தான். இப்ப இப்படி ஒரு நிலை வந்தபின் தானே தெரியுது சனத்துக்கு எங்க நம்பிக்கையில் காசு போட்டு வைத்திருக்கினமென்று. வாழ்க வளமுடன் :roll: :)

  • தொடங்கியவர்

சிலபேர் ஊருக்கு உபதேசிப்பது மட்டும்தான். செயற்பாடு என்னவோ வேறுமாதிரித்தான். இப்ப இப்படி ஒரு நிலை வந்தபின் தானே தெரியுது சனத்துக்கு எங்க நம்பிக்கையில் காசு போட்டு வைத்திருக்கினமென்று. வாழ்க வளமுடன்

புதிதாக நண்பர்களை சேர்ப்பதைவிட இருக்கின்ற நண்பர்களை எதிரிகளாக்காமல் பார்த்துக் கொள்வதே மேலானது

எங்கயோ உதைக்குதே

உங்களுக்கு உதைப்பது போல் தோன்றினால் அதற்கு நான் என்ன செய்ய முடியும்.

நான் எனது நண்பர்களைத் தெரிவுசெய்ததிலும் அவர்களை அன்பாக கையாள்வதிலும் கவனமாகத் தான் இருக்கின்றேன். அதனைப்பற்றி நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். :roll: :)

  • தொடங்கியவர்

உங்களுக்கு உதைப்பது போல் தோன்றினால் அதற்கு நான் என்ன செய்ய முடியும்.

நான் எனது நண்பர்களைத் தெரிவுசெய்ததிலும் அவர்களை அன்பாக கையாள்வதிலும் கவனமாகத் தான் இருக்கின்றேன். அதனைப்பற்றி நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். :roll: :)

நான் கவலை கொள்வது பற்றி எங்காவது சொன்னேனா? நீர் முட்டாள்தனமாக எழுதுவதைத்ததான் சுட்டிக்காட்டினேன்? இப்போது மீண்டும் கீழே தந்துள்ளேன். திருப்பி வாசியும். உமக்கே உமது முரண்பாடு முடியாவிட்டால் நான் கவலை கொள்ளப்போவதில்லை. உமக்கு புலியளைக் குறை சொல்வதென்றால் அதைப்போல் ஒரு சந்தோசம் உமது வாழ்வில் இருப்பதில்லை என்பதுபோல் உம்முடைய பல கருத்துக்கள் இருக்கின்றன. எப்படியாவது புலிகளைக் குறைபிடிக்கவேண்டும். அதுதான் உங்கள் நோக்கம்.

ஒரு கோட்டைக் கீறுவம். ஒரு பக்கம் புலிகள், மறுபக்கம் சிறீலங்கா. கோட்டில் நிற்கமுடியாது. நான் புலிகள் நிக்கும் பக்கம் தான் நிற்பேன். நீங்கள் எந்தப்பக்கம் நிற்பீர்கள்?

சிலபேர் ஊருக்கு உபதேசிப்பது மட்டும்தான். செயற்பாடு என்னவோ வேறுமாதிரித்தான். இப்ப இப்படி ஒரு நிலை வந்தபின் தானே தெரியுது சனத்துக்கு எங்க நம்பிக்கையில் காசு போட்டு வைத்திருக்கினமென்று. வாழ்க வளமுடன்

புதிதாக நண்பர்களை சேர்ப்பதைவிட இருக்கின்ற நண்பர்களை எதிரிகளாக்காமல் பார்த்துக் கொள்வதே மேலானது

சிலபேர் ஊருக்கு உபதேசிப்பது மட்டும்தான். செயற்பாடு என்னவோ வேறுமாதிரித்தான். இப்ப இப்படி ஒரு நிலை வந்தபின் தானே தெரியுது சனத்துக்கு எங்க நம்பிக்கையில் காசு போட்டு வைத்திருக்கினமென்று. வாழ்க வளமுடன்

மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போன்றது தான் உமது வாதமும். நான் எதை எழுதினாலும் அது உமக்கு புலியெதிர்ப்பாகவே தெரிகின்றது. மேலே நான் எழுதிய கருத்திற்கும் புலிகளுக்கும் என்ன சம்பந்தம். சிலரின் இரட்டை வேடங்களைத்தான் சுட்டிக் காட்டினேன். அது உமக்கும் சுட்டு விட்டதா?? :P :)

  • தொடங்கியவர்

இன்னொரு கேள்வியும் அங்கு இருக்கின்றது. வடிவாகப்பாருங்கள்

என்ன உம்மைப் போல கோடு போட்டு ஜாடி பாயச் சொல்கின்றீரா??

எனக்கு உப்படிப் பக்கம் சார்ந்து தான் பதிலளிக்க வேண்டும் என்பதில் உடன்பாடு இல்லை. தவறு யார் செய்தாலும் தட்டிக் கேட்கலாம்.

  • தொடங்கியவர்

யார் தவறு செய்தாலும் சுட்டிக்காட்டலாம். நல்லது, நீர் புலிகளின் பின்னால் நிற்கின்றீரா? சிறீலங்கா அரசின் பின்னால் நிற்கின்றீரா? இதுதான் கேள்வி விளங்காவிடில் தனிமடலில் அனுப்புவதா?

உமக்கு விளக்கம் குறைவென்பதற்காக எனக்கு விளக்கம் தர வேண்டாம்.

நான் எவர் பின்னாலும் நிற்காமல் மனிதனாக வாழவே ஆசைப்படுகின்றேன்.

  • தொடங்கியவர்

உமக்கு விளக்கம் குறைவென்பதற்காக எனக்கு விளக்கம் தர வேண்டாம்.

நான் எவர் பின்னாலும் நிற்காமல் மனிதனாக வாழவே ஆசைப்படுகின்றேன்.

இங்கே ஒரு மனிதனின் முகத்திரை கிழிந்து தொங்குகின்றது. அடையாளம் கண்டு கொள்ளுங்கள் :P

கேட்ட கேள்வியே இந்த மனிதனுக்குப்புரியவில்லையே. ஒன்றுக்கு மூன்று தரமாய்க்கேட்டேன். எனக்கு விளக்கம் குறைவு என்கின்றார் இந்த மனிதன். இருக்கலாம். அதற்கு முன் இதே கருத்தில் மட்டும் இவரது விளக்கக் குறைபாடுகளை இவரால் விளங்கிக் கொள்ளவில்லை. :P பாவம் இப்படியும் சில மனிதர்கள் விளக்கமில்லாமல் பதில் எழுதுகின்றார்கள்.

நாளையும் வருவார் இந்த மனிதன்.

புலிகளை விமர்சிக்க.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.