Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வாறீயளா?

Featured Replies

வாறீயளா?

தேசியத்துக்கு எதிராய் - விசகருத்து பரப்பும் - திரு.மதிவதனன் ............

மதிப்புக்குரிய .............. குருவிகள்..........

யார் உதவியும் வேணாம் .........

ஒரு பகிரங்க - விவாதம் நடத்தினால் - தப்பா?

நாங்க 3 பேர் பேசுவம் ............நான் றெடி ............

நீங்களும் ......... கட்டாயம் வருவீங்க ..........

என்ற நம்பிக்கையில்! 8)

  • Replies 87
  • Views 8.8k
  • Created
  • Last Reply

நல்ல விசயம்

குருவிகள் குறைப்பட்டவர் தனிமனித தாக்குதல் இல்லாமல் கருத்தாடினா எல்ல விளக்கமும் சொல்லுவன் என்று. ஆனபடியா ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட விவாதமாக நடத்தினால் பொருத்தமாக இருக்கும்.

விவாதப் பொருள் இவையாக "தற்போது தேக்கமடைந்துள்ள சமாதான சூழ்நிலைக்கு யார் காரணம்? நடக்கும் மக்களின் அவலங்களிற்கு யார் பொறுப்பு? அதை தடுத்து நிறுத்த தமிழர் தரப்பு என்ன செய்திருக்க வேண்டும்?" இருக்கலாமா?

மற்றவர்களும் உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன வர்ணன்!

நாங்கள் என்ன, வேடிக்கை பார்ப்பதா? நாங்களும் தயார்!!

விதிகளை கூட்டுங்கள்!

சொல்கின்ற கருத்தில் தெளிவிருக்க வேண்டும். இரண்டு பக்கத் தாளமும் போடக் கூடாது.

இறுதியாக இவர்கள் ஏதாவது தீர்வு சொல்ல வேண்டும். எதுவுமே இல்லாமல், புலி எதிர்ப்பை மட்டுமே கருத்தாகக் கொண்டு கருத்து தெரிவித்தால் அதில் விவாதிப்பதில் பிரியோசமில்லை!

அதிகமாய் அவர்கள் பக்கத்தில் ஆட்கள் வாதாட வந்தால் வர்ணன் பக்கத்தில் என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கோ...!

இல்லை அவர்கள் இருவர் மட்டும்தான் எண்றால் நான் பார்வையாளனாகவே இருக்கிறேன்...!

தலைப்பை ஆரோக்கியமான கருதாடலுக்கு ஏற்றதாக கவனமா வைக்க வேணும்.

சமாதானா வழி முறையில் தமிழர் சுயாதிபத்தியதிற்கான போராட்டதிற்குத் தீர்வுகாணுவதற்கான தற்போதைய சமாதான முயற்ச்சிகளில் இருக்கும் முட்டுக் கட்டைகளும் அவறிற்கான தீர்வுகளும் .

தமிழர் விடுதலைப் போரட்டத்தில் புலிகளின் வழிமுறையில் இருக்கும் தவறுகளும் அதற்கான மாற்று வழிகளும் எண்டு தெளிவா வையுங்கோ.

சும்மா நக்கல் பண்ணவும், விமர்சனம் எண்டு வக்கிர எண்ணக்களை எழுதவும் இடம் வைக்க வேண்டாம்.ஆரோக்கியமான கருதாடல் என்பது தீர்வை நோக்கியதாகத் தான் இருக்க வேணும்.ஆனா அதற்கு ஏற்ற எண்ணமோ அன்றி நோக்கமோ மேற்குறிபிட்டவர்களிடம் இல்லை.அவர்களின் நோக்கங்கள் வேறானவை.

எண்ணமே நோக்மோ இல்லை என்று விவாதம் தொடங்க முதல் முடிவு செய்யக் கூடாது.

நடுவராக நிதர்சன் மற்றும் வன்னியன் என இருவரை முன்மொழிகிறேன்.

விவாதத்தில் முக்கியமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டியது தற்போது மக்கள் அனுபவித்து வரும் அவலங்கள் அதற்கான காரணம் அதற்கான தீர்வுகள். ஏன் என்றால் இந்த விடையம் தான் விவாதத்தை அதிகரித்தது.

இங்கே தமிழர் தரப்பு என்று பார்த்தால் அதனுள்ள புலிகள், தாயகத்திலுள்ள தமிழ்பேசும் மக்கள் மற்றும் புலம் பெயர்ந்துள்ளவர்கள் என்று 3 பகுதிகள் உள்ளடங்கும்.

நல்ல முயற்சி :P

எனது ஆதரவு கட்டாயம் உண்டு எமக்கு சார்பாக வாதாடுபவர்களுக்கு மட்டும் :wink:

நாரரதர் அங்கிள் அன்ட் குறுக்ஸ் அண்ணா சொல்லுற மாதிரி தலைப்பை வைக்கலாம்

தூயவன் சொன்ன மாதிரி விதிகளை கூட்டினால் நல்லம் அதே போல நழுவுற மாதிரி கருத்து எழுதக்கூடாது

அப்ப லோயர் அம்மாவையும் நடுவராக்குங்கோ :wink:

  • தொடங்கியவர்

நீங்கள் எல்லாரும் சொல்வது போலவே

மழுப்பல்கள் - சொதப்பல்கள் - நழுவல்கள் இல்லாம இருக்கணும் ....

பந்தி பந்தியாய் எழுதி தள்ளாமல் 5 வரிகளுக்குள் - எல்லோர் கருத்தும் இருக்கணும் .......

தனிப்பட்ட தாக்குதல்கள் - இருக்ககூடாது !

நாகரிகமற்ற - வார்த்தைகள் - பாவித்தல் தவிர்க்கபடணும்!

இவ்ளோவும் - என்னமோ எடுத்துவிட சொல்லல -

எங்க - நோக்கம் - சரியா நிறைவேற முன்னமே - தலைப்பு இழுத்து மூடபடவேண்டிய அளவிற்கு - போக கூடாது - அதாலதான்!

முதல்ல சிறு தன்னிலை விளக்கத்துடன் ஆரம்பிக்கலாம்:

பெயர்: வர்ணன்

தற்போதைய வதிவிடம்: கனடா

தாயகத்தில் : வடமராட்சி

(எல்லோரும் இப்பிடி ஆரம்பிக்கணும் - என்று கட்டாயம் - இல்லை)

இந்த விவாதத்தில் என் கொள்கை:

எதுவித சந்தேகத்துக்கும் - விட்டுகொடுப்புக்கும் - தளம்பல்களுக்கும் - இடமேயில்லாமல் - நான் ஒரு புலி விசுவாசி -அதன் தலமையில் - அசைக்கமுடியாத - நம்பிக்கை உள்ளவன்!

காரணம்:

புலிகளை தவிர்த்து ஒரு மாற்று தலைமை - அர்ப்பணிப்பு - நேர்மை - இனம் பத்தி மட்டுமே சிந்திக்கும் - கொள்கைபற்று - யாரிடமும் இல்லை!

உங்கள பற்றி - திரு. மதி & குருவிகள்??

அப்ப லோயர் அம்மாவையும் நடுவராக்குங்கோ :wink:

அதுக்கெல்லாம் உங்களை மாதிரி அனுபவம் உள்ளவர்கள்தான் சரி குறுக்ஸ் அண்ணா :wink: :P

நல்ல விசயம தான்.

ஆனால் கருத்தாடல் தனிநபர் தாக்குதலாக இல்லாமல் ஆரோக்கியமான கருத்தாடலாக இருக்கவேண்டும், இருக்கும் என்று நம்புகிறேன்.

அன்புடன்,

மணிவாசகன்

இது என்னவோ மதித்தாத்தாவை வைச்சு குருவிகளுக்கு புலி எதிர்ப்பு குஞ்சம் கட்டுற மும்மர முயற்சி போலத்தான் தெரியுது.

விவாதம் நடக்கனும் என்றால் யாழ் களத்தில் அரசியல் கருத்தியலினூடாக கள உறுப்பினர்களிடையே அணிப்பிரிப்பு நிறுத்தப்படனும். கள உறுப்பினர்கள் கருத்துக்களுக்கு அப்பால் சமனாக மதிக்கப்படனும். அது மதித்தாத்தாவாகக் கூட இருக்கலாம். அவரின் அரசியல் கருத்துகளுக்காக அவரை இம்சித்த அளவுக்கு அவரை ஒரு சக கருத்தாளனாக கருத யாரும் இடமளிக்கல்ல. அந்த வகையில்..இந்த அணிப்பிரிப்புக் கூட ஒரு கருத்தாளனை கருத்துக்களின் அடிப்படையில் மற்றவர்களில் இருந்து வேறுபடுத்திக்காட்டும் நோக்கிலான மிகவும் கீழ்த்தரமான கள நட்புறவுக்கு அப்பாலான செயற்பாடாகவே நாம் காண்கிறோம். துரோகிகள் என்று தமிழர்கள் தங்களுக்குள்ளேயே அணிபிரித்து அடிபட்டுக் கொண்டதும்..கொள்கின்றதும் தான் இங்கும் நடைபெறுகிறது. அப்படியான அசிங்கமான தமிழர்களைப் பலவீனப்படுத்தக் கூடிய..கருத்தியல் புரிந்துணர்வுக்கு கருத்துக்கள் மூலம் முயற்சிக்காத சூழலில்..இவ்விவாதத்தில் ஈடுபடுவதை நாம் விரும்பவில்லை.

ஒரு ஆரோக்கியமான விவாதச் சூழல் என்பது நட்புணர்வுடன் கூடிய விவாத அரங்கில்..கருத்தியல் வேறுபாடுகளுக்கான கருத்துக்களை முன்வைத்து கருத்தாடற் கருப்பொருளை விளக்கி தெளிவுறுத்திச் செல்லுதலாகத்தான் இருக்க முடியும். அதற்கு இங்கு ஒரு நட்புறவிலான சூழல் கருத்தாளர்களுடன் நிலவி இருக்க வேண்டும். ஆனால் தாத்தா.. வைத்த கருத்துக்களின் அடிப்படையில் மிக மோசமாக இக்களத்தில் நடத்தப்பட்டார். கருத்தாளர்களுக்குரிய கருத்தியல் பொறுமை பக்குவம்..மரியாதை எதுவும் இல்லாது..உணர்ச்சி வேகத்தில்...மிகவும் அருவருக்கத்தக்க வகையில் கருத்துக்கள் பகரப்பட்டன. இத்தனைக்கும் மத்தியில் தாத்தா தன்னிலையில் மிகவும் உறுதியாக நின்று கள உறவுகளுடன் கள விதிக்கு உட்பட்டு மதிப்பு வழங்கி தனது கருத்துக்களை காவி வந்ததை நிச்சயம்..நாம் பாராட்டித்தான் ஆக வேண்டும். அதுவே அவரை ஒரு கருத்தாடற்களத்துக்கான முதிர்ச்சி உள்ள மனிதராக இனங்காட்டியது.

கருத்தியல் முதிர்ச்சிக்கு முதல்..கள உறுப்பினர்களிடையிலான கள நாகரிக முதிர்ச்சியற்று கருத்துக்களின் அடிப்படையில் கருத்தாளனை..துரோகிகள் எதிரிகள் என்று இனங்காணத்தக்க.. மிகவும் அடிமட்ட அரசியல் கருத்தியல் உலகில் சஞ்சரிக்கும் சிலருடன் விவாதத்தின் பங்கேற்பது என்பது..மீண்டும் எம்மீது தவறான நோக்கோடு முன்வைக்கப்படும் தனிநபர்தாக்குதல்களை எதிர்காலத்தில் மேற்கொள்ள நாமே வழி செய்ததாகத்தான் முடியும்.

எனவே களத்தில் கருத்தியலுக்கு அப்பால் கள உறுப்பினர்களை சமனாக..நட்புறவுடன் மதிக்கத்தக்க..ஒரு சூழல் நிலவின்..வைக்கப்படும் தலைப்புக்கு ஏற்ப..தேவையென்றால்..எதிரணியில

  • தொடங்கியவர்

இல்ல குருவிகள் - இவ்ளோ நீளமா எல்லாம் - ஏன்?

ஆரோக்கியமான - கருத்தாடல்தான் நடக்கும் !

உங்களை காயப்படுத்துவது நோக்கமல்ல - அப்பிடி நீங்கள் ஏதோ ஒரு இடத்தில் உணர்ந்தால் - உடனே சொல்லுங்க - மன்னிப்பு கேட்கிறேன் - !

இதில் ஒன்றும் எனக்கு சங்கடமில்ல - ஏனெனில் நான் பேசவந்தது - என் வீட்டு பிரச்சினை பத்தி அல்ல - நாட்டு..!

சரி இப்ப ஆவது சொல்லுங்க - சுருக்கமா -

புலிகளினதும் - அதன் தலமையினதும் - மீதான - உங்க -எண்ணம் - கருத்து - சீரானதா - இல்ல - மாறுதலுக்கு அடிக்கடி உட்படுபவையா?

ஏற்கனவே குறிப்பிட்ட வாய்க்காலாலை குறிப்பிட்ட பாத்திக்குத்தான் தண்ணி இறைக்கலாம் எண்ட விதிமுறை இருக்கு.. அதுக்கும் மேலாலை வலுக்கட்டாயமா கட்டிப்போட்டு மற்றவன் பாத்திக்கு தண்ணியிறைக்கிற கூத்துகளும் இருக்கு.. உதுகள் நம்ம விளைச்சலைத்தான் இதுவரை பாதிச்சிருக்கு.. அனுபவத்திலை சொல்லுறன் உது சரிப்பட்டுவராது..

நல்ல முயற்சி :P

எனது ஆதரவு கட்டாயம் உண்டு எமக்கு சார்பாக வாதாடுபவர்களுக்கு மட்டும் :wink:

நாரரதர் அங்கிள் அன்ட் குறுக்ஸ் அண்ணா சொல்லுற மாதிரி தலைப்பை வைக்கலாம்

தூயவன் சொன்ன மாதிரி விதிகளை கூட்டினால் நல்லம் அதே போல நழுவுற மாதிரி கருத்து எழுதக்கூடாது

மதியால் முடியாது அவரின் பதில் மேலே இருக்கு பாருங்கள் :P :!: :wink: :?:

இவர்களின் நோக்கம் விளைச்சலைப் பெருக்குவதாக இருக்கும் போது எவ்வாறு விவாதத்திற்கு வருவார்கள்? நக்கல் விடுவது இலகுவான விசயம் , அதில் தான் இவர்கள் இன்பம் காணுவார்கள்.கருத்தாடல் செய்வது என்பது கடினமான விடயம்.தீர்வு பற்றிக் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் இல்லை, பிறகு கருத்தாட வந்து போட்டு சொல்வதற்கு ஒன்றும் இல்லாமல் நின்றால் சுய விம்பம் என்னாவது? பிறகு உண்மயளைச் சொல்லிப் போட்டு எப்படித் திருப்பிக் களத்துக்க நடமாடுறது?

ஏற்கனவே குறிப்பிட்ட வாய்க்காலாலை குறிப்பிட்ட பாத்திக்குத்தான் தண்ணி இறைக்கலாம் எண்ட விதிமுறை இருக்கு.. அதுக்கும் மேலாலை வலுக்கட்டாயமா கட்டிப்போட்டு மற்றவன் பாத்திக்கு தண்ணியிறைக்கிற கூத்துகளும் இருக்கு.. உதுகள் நம்ம விளைச்சலைத்தான் இதுவரை பாதிச்சிருக்கு.. அனுபவத்திலை சொல்லுறன் உது சரிப்பட்டுவராது..

:P :P :P எங்களுக்கு தவிச்ச முயல் அடிச்சுத்தான் பழக்கம்..... உள்ள இறங்கிவாற இராணுவத்தை எப்ப நாங்கள் சுட்டு இருக்கிறம்...??? அதுவும் எப்பவாவது ஆமிக்காறனை சிறைப்பிடிச்சிருக்கிறமே...??? 8) 8) 8)

திடீர் எண்டு வாதாட வா எண்டால் எங்கை இருந்து வாறது....??? சொந்தமா சரக்கு இல்லாமல்தான் கூலியளின்ர இணையத்துக்கு போய் சரக்கு சேத்துக்கொண்டு வாறனீங்கள் இதுக்கை வாதாட வா எண்டால் ஏலுமே....??? :lol::D:D

ஓய் வர்ணன் தாத்தா சொந்த சரக்கு பற்றாக்குறையால் வரமாட்டாராம்...! சொல்லீட்டார்...! வேணும் எண்டால் ஏதாவது இணையத்தில இது சம்பந்தமாய் கருத்தாடல் இருந்தா சொல்லுங்கோ அதை அப்பிடியே வெட்டிக்கொண்டு வந்து ஒட்டுவார்...! :wink:

இவர்களின் நோக்கம் விளைச்சலைப் பெருக்குவதாக இருக்கும் போது எவ்வாறு விவாதத்திற்கு வருவார்கள்? நக்கல் விடுவது இலகுவான விசயம் , அதில் தான் இவர்கள் இன்பம் காணுவார்கள்.கருத்தாடல் செய்வது என்பது கடினமான விடயம்.தீர்வு பற்றிக் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் இல்லை, பிறகு கருத்தாட வந்து போட்டு சொல்வதற்கு ஒன்றும் இல்லாமல் நின்றால் சுய விம்பம் என்னாவது? பிறகு உண்மயளைச் சொல்லிப் போட்டு எப்படித் திருப்பிக் களத்துக்க நடமாடுறது?

ஒரே விசயத்தை வச்சுக்கொண்டு எப்பிடி அண்ணா திறந்த விவாதத்துக்கு வாறது....???? நாங்கள் வயலுக்கை நெல்லோடை புல்லு நிக்குது எண்டுரம்.... அவர் புல்லுக்கை கொஞ்ச நெல்லும் நிக்குது எண்டுறார்.. அவரின் அடிப்படையே பிசகா இருக்குது இதுக்கை எப்பிடி அண்ணா களைபுடுங்குததைப்பற்றி பேசுறது...

அவற்ற பாணியிலை சொன்னால் கிணத்துக்கை இருந்தாத்தானே வாய்க்காலுக்கை வரும்....! :wink: :P :lol:

  • தொடங்கியவர்

ஏற்கனவே குறிப்பிட்ட வாய்க்காலாலை குறிப்பிட்ட பாத்திக்குத்தான் தண்ணி இறைக்கலாம் எண்ட விதிமுறை இருக்கு.. அதுக்கும் மேலாலை வலுக்கட்டாயமா கட்டிப்போட்டு மற்றவன் பாத்திக்கு தண்ணியிறைக்கிற கூத்துகளும் இருக்கு.. உதுகள் நம்ம விளைச்சலைத்தான் இதுவரை பாதிச்சிருக்கு.. அனுபவத்திலை சொல்லுறன் உது சரிப்பட்டுவராது..

இதில் வலுக்கட்டாயம் என்ன இருக்கு - மதி அவர்களே?

அப்போ இதுவரை நீங்கள் ஒவ்வொரு தலைப்பிலும் - அவசியமற்றமுறையில் - நீங்கள் தெரிவித்த கருத்துக்கள் - எந்த வலுக்கட்டாயத்தில்?

ஒட்டுமொத்த இனத்தின் - போராட்ட சக்திக்கு எதிராய் - கருத்து வைக்கும் உங்கள் துணிகரம் ........

எதானால் அப்பிடி செய்கிறீர்கள் - என்ற கேள்வி எழும்போது - இல்லாமல் போவது ஏன்?

உலகில் உள்ள எந்தமனிதனுக்கும் - ஒரு அடையாளம் - கொள்கை இருக்கும் .....

உங்களின் கொள்கை - புலிகளையும் அதன் தலைமயையும் - வெறுப்பது!

சரி - நீங்கள் விரும்பும் தலைமை எது?

ஒன்றை பிடிக்காமல் நீங்கள் - கருத்து வைக்கிறீர்கள் என்றால் - நிச்சயமாய் - உங்களுக்கு பிடித்த ஒரு சக்தி - இருந்தேயாகணும் - அது எது?

  • கருத்துக்கள உறவுகள்

வர்ணன் நல்ல விடயம்தான் ஆனால் இப்படி மாற்று கருத்து எண்டும் புலிஎதிர்ப்பு எண்டும் வாறவை சரியான ஒரு தீர்வு திட்டம் ஒண்றோ அல்லது ஒரு மாற்று தீர்வோ இல்லாமல் சரியான தரவுகள் கூட சொல்ல முடியாமல் வரலாற்றை திரித்து விதண்டா வாதம் செய்து சும்மா வெறுமனே தாங்களும் எதிர்க்கிறேன் பேர்வழியென்று காட்டிகொள்வது மட்டும்தான் எனக்கு இப்படியானவர்களுடன் பல நேரடி அனுபவங்கள் நிறைய எனவே எனவே தான் யாழிலும் நான் இப்படியான கருத்தாடல்களில் உள் நுளைவது இல்லை காரணம் பிரயொசனம் இல்லை.உண்மையான ஒரு உறுதியான தீர்வு அல்லது கொள்கை இருந்தால் தாராளமாக கருத்தாட நானும் இங்கு தயார். அப்பிடியே இங்கு தமிழ் மகனும் யுூட்டும் கூட வந்து தங்கள் கருத்துகளை வைத்து இடையிடை காணாமல் போகாமல் இறுதிவரை கருத்தாடினால் நல்லம் நானும் தயார் :idea:

நான் எழுதின கருத்துக்களை தூக்கிப்போட்டு எதிரான கருத்துக்களை மட்டும் எழுதவிட்டுவிட்டு பதில் எழுதவில்லை உண்டு சாடுவதெல்லாம் இஞ்சத்தைய சாதாரண நிகழ்வு.. நான் சாதாரணமா எழுதவேண்டியதை எழுதிறன்.. பதில் எழுத ஏலுமெண்டா எழுதுங்கோ.. தூக்கினாலும் கவலைப்படப்போறதில்லை.. உங்கடை கேள்வியளுக்கு அப்ப அப்ப வேண்டிய இடத்திலை பதில் தருவன்.. அவதானிச்சு பொறுக்கி எடுக்கவேண்டியது உங்கள் பொறுப்பு..

:P

இதில் வலுக்கட்டாயம் என்ன இருக்கு - மதி அவர்களே?

அப்போ இதுவரை நீங்கள் ஒவ்வொரு தலைப்பிலும் - அவசியமற்றமுறையில் - நீங்கள் தெரிவித்த கருத்துக்கள் - எந்த வலுக்கட்டாயத்தில்?

ஒட்டுமொத்த இனத்தின் - போராட்ட சக்திக்கு எதிராய் - கருத்து வைக்கும் உங்கள் துணிகரம் ........

எதானால் அப்பிடி செய்கிறீர்கள் - என்ற கேள்வி எழும்போது - இல்லாமல் போவது ஏன்?

உலகில் உள்ள எந்தமனிதனுக்கும் - ஒரு அடையாளம் - கொள்கை இருக்கும் .....

உங்களின் கொள்கை - புலிகளையும் அதன் தலைமயையும் - வெறுப்பது!

சரி - நீங்கள் விரும்பும் தலைமை எது?

ஒன்றை பிடிக்காமல் நீங்கள் - கருத்து வைக்கிறீர்கள் என்றால் - நிச்சயமாய் - உங்களுக்கு பிடித்த ஒரு சக்தி - இருந்தேயாகணும் - அது எது?

அப்ப அப்ப எழுதுறதை சேர்த்து எழுத ஏலாதா மதி தாத்ஸ் :?: :roll:

அது சரி உங்களுக்கு எப்பவும் ஒரு வாதத்துக்கு குதர்க்கமா ஒரு மாற்றுகருத்து மட்டும் தானே வைக்கத் தெரியும்

ஏனென்டா உங்களுக்கு எண்டு ஒரு கருத்து இல்லை மாற்று கருத்து :?: :?: :?: :?: மட்டும் தானே இருக்கு

பிறகெப்படி வர்ணன் அண்ணாவோட வாதத்துக்கு போறது :D

நான் எழுதின கருத்துக்களை தூக்கிப்போட்டு எதிரான கருத்துக்களை மட்டும் எழுதவிட்டுவிட்டு பதில் எழுதவில்லை உண்டு சாடுவதெல்லாம் இஞ்சத்தைய சாதாரண நிகழ்வு.. நான் சாதாரணமா எழுதவேண்டியதை எழுதிறன்.. பதில் எழுத ஏலுமெண்டா எழுதுங்கோ.. தூக்கினாலும் கவலைப்படப்போறதில்லை.. உங்கடை கேள்வியளுக்கு அப்ப அப்ப வேண்டிய இடத்திலை பதில் தருவன்.. அவதானிச்சு பொறுக்கி எடுக்கவேண்டியது உங்கள் பொறுப்பு..

:P

யாராவது சொல்லித்தருவாங்கள் இங்கை கொண்டுவந்து கொட்டுவன் எண்டுறீர்... இல்லை கேக்கிறன் யாழ் என்ன குப்பைக்கிடங்கே,...???

ஆரோக்கிரமா விவாதத்துக்கு வாங்கோ எண்டால் எங்கயாவது வந்து எழுதீட்டு பதுங்கீடுவன் வேணும் எண்டால் நீங்கள் பதில் எழுதுவன் எண்டுறீர்....! சிங்கள ஆமி மாதிரி உமக்கு நல்ல வீரம் இருக்கு....! :wink: :P :P

:D:D:D:lol::(

நான் எழுதிற பாதிக்கருத்து காணாமல்போகுது.. அதுதான் உங்கடை வீரம் ..இதை பலதரம் முந்தியும் சொல்லியிருக்கிறன்.. குப்பையெண்டு தூக்கிப்போட்டு வீரம் கதைக்கிற ஆக்களல்லே.. உங்களோடை வீரம்காட்டேலுமே..

:P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.