Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மரணம் இழப்பு மலர்தல்

Featured Replies

மரணம்  வளர்ச்சிக்கான ஒரு படிக்கல்

 

மே 18, 2009ம் ஆண்டு எல்லாம் நடந்து முடிந்து விட்டதாக செய்திகள் அறிவித்தன. இந்த ஆண்டு, இந்த நாள் ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை வரலாற்றில் மிக முக்கியமான ஒரு நாளாகும். ஈழத் தமிழர்கள் மீது சிறிலங்கா அரசு முன்னெடுத்த இனவழிப்பு போர் முடிவூற்றதாக கூறிய நாள். உலகில் நடந்த போர்களில் இதைவிட அதிகமான மனிதர்கள் இறந்திருக்காலாம். ஆனால் ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை பல்லாயிரக்கணக்கான தமிழ் பேசும் ஈழத்து மனிதர்கள் தொடர்ச்சியாக பல வருடங்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட நாட்களின் இறுதி நாள். பல மரணங்கள் நடைபெற்ற நாள். ஈழத் தமிழின அழிப்பு நடந்த நாள். பல இழப்புகளை சந்தித்த நாள். ஈழத் தமிழ் தேசம் முழுமையாக மீண்டும் ஆக்கிரமிக்கப்பட்ட நாள். ஈழத் தமிழர்களுக்கு இது ஒரு துக்க நாள்.

 

சிறு வயதிலிருந்து பல உறவூகளின் மரணத்தைப் பார்த்திருக்கின்றேன். கேட்டிருக்கின்றேன். அதற்காக அழுதிருக்கின்றேன். 1974ம் ஆண்டு இறந்த அப்பாவின் மாமா வித்துவான் கார்த்திகேசு அவர்கள்; அப்பாவை சந்;திப்;பதற்காக அட்டனுக்கு வந்திருந்தார். மீண்டும் யாழ் போகின்ற வழியில் இறந்து போனார். இதுவே நான் அறிந்த என் நினைவில் இருக்கின்ற முதல் மரணம். இதன்பின் அப்பப்பாவின் அக்காவின் (ஆத்தை) கணவர் சிற்றம்பலம் அவர்கள் 1979ம் ஆண்டு இறந்தார். இவர் மிகப் பெரிய உடம்பைக் கொண்ட திடகாத்திரமான மனிதர். குழந்தைகளுக்கு ஏதாவது வருத்தம் எனின் இவரைத் தேடி ஊரவர்கள் வருவார்கள். இவர் வீபூதியை உடலில் பூசி தனது கையால் தடவி விடுவார். இது வருத்ததை மாற்றுமோ இல்லையோ ஆனால் மிகவூம் சுகமாக இருக்கும். அந்த சுகத்தை சிறு வயதில் அனுபவித்திருக்கின்றேன். இவர் தானே சமைத்து பெரிய தட்டு ஒன்றில் நிறைய சோறும் பல கறிகளும் போட்டு சேர்த்து சாப்பிடுவார். எனக்கும் ஊட்டியிருக்கின்றார். அதன் சுவையூம் மனமும் தனித்துவமானது. இவரது மரணமே என்னைப் பாதித்த முதல் மரணம். அந்த சிறு வயதில் நான் மனித இழப்பை உணர்ந்து அழுத முதல் மரணம். ஆனால் நான் அறிந்த என் நினைவில் இருக்கின்ற இரண்டாவது மரணம் இது.

 

இதன் பின்பு பல மரணங்கள் தொடர்ச்சியாக வந்தன. அப்பாவின் தம்பி (சித்தப்பா)இ அப்பாவின் அம்மா (அப்பாச்சி)இ அப்பாவின் அப்பா (அப்பபப்பா) என மரணங்கள் வாழ்வில் தொடர்ந்தன. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு அனுபவத்தைத் தந்தன என்றால் மிகையல்ல. இவர்கள் ஒவ்வொருவரும் எனது குடும்ப உறவூகள். ஆகவே இந்த இழப்புகள் என்னைப் பாதித்தது ஆச்சரியமானதல்ல. சில உறவூகளது மரணங்கள் நாம் அறியாமலே நடந்தேறின. அப்பப்பாவின் அக்காவின் (ஆத்தை) மரணம். அப்பாச்சியின் மூன்று சகோதரிகளினதும் (பெரியம்மா வித்துவான் மாமி) இரு சகோதரர்களினதும் (கண்ணாடிக் கந்தப்பு வீரகத்தி) மரணங்கள் எப்;பொழுது எப்படி நடந்தன எனத் தெரியாது. ஆனால் வீரகத்தி அப்பாச்சி இறுதியாக முள்ளிவாய்க்காலில் இறந்ததாக அறிந்தேன். இதற்கு மாறாக உறவில்லாதவர்களின் பல மரணங்கள் என்னைப் பாதித்தது ஆச்சரியமானதுதான். ஏன் பாதித்தன?

 

ஒரு நாள் அப்பா விக்கி விக்கி அழுவதைக் கண்டேன். அப்பொழுது எனக்கு ஒன்பது வயதிருக்கும். அப்பா ஏன் அழுகின்றார் என அம்மாவிடம் கேட்டேன்… “அப்பாவின் அரசியல் தலைவர் மாவோ சீனாவில் இறந்துவிட்டாராம்…” என நாம் வாழ்ந்த அறையில் சுவரில் மாட்டப்பட்டிருந்தஇ பக்க வாட்டில் எடுக்கப்பட்டிருந்த தொப்பி போட்ட மாவோவின் சிலை வடிவானஇ ஒரே ஒரு படத்தைக் காட்டி அம்மா சொன்னார். பதில் புரிந்ததோ அல்லது திருப்பதியோ இல்லையோ தொடர்ந்தும் கேள்வி கேட்கவில்லை. சில வருடங்களின் பின்இ அப்பாவின் கண்களில் மீண்டும் கண்ணீர் துளிகள் விழுவதைக் கண்டேன். இப்பொழுது யாழ்ப்பாணத்தில் யாரோ பல்கலைக்கழக பேராசிரியர் கைலாசபதி இறந்துவிட்டாரம். அந்தக் கவலையில் அழுகின்றார் என்ற பதில் கிடைத்தது. இப்படி யாரோ குடும்ப உறவில்லாத ஒருவருக்காக, ஆனால் அரசியல்; மற்றும் புலமைசார் துhறைகளில் சிறந்து விளக்கிய காரணத்திற்காக, அப்பா அழுவது எனக்கு அந்த வயதில் புரியவில்லை. ஆச்சரியமாக இருந்தது. ஆனால் அதை நான் புரிவதற்கான காலம் விரைவில் வந்தது. 1983ம் ஆண்டு மலையகத்தில் அட்டனில் வாழ்ந்த காலம் அது. குட்டிமணி மற்றும் தங்கத்துரை தொடர்பாக பத்திரிகைகளில் வந்த செய்திகளைத் தொடர்ச்சியாக வாசித்திருந்தேன். தமிழ் மக்களின் விடுதலைக்காக சிறை சென்றதாக தமிழ் பத்திரிகைகள் எழுதியிருந்தன. இவர்களுக்கு துhக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டிருந்தது.

 

குட்டிமணி தனது இறுதி ஆசையாக தனது இறப்பின் பின் தனது கண்களை தமிழர் ஒருவருக்கு தானம் செய்யூம் படி கேட்டிருந்தார். இதன் காரணமாக இவர்கள் மீது அனுதாபமும் மரியாதையூம் ஏற்பட்டிருந்தது. ஆனால் 83ம் ஆண்டு வெலிக்கடைச் சிறையில் நடந்த திட்டமிட்ட படுகொலையில் இவரது கண்கள் பறிக்கப்பட்டன. இதை ரூபவாகினி செய்தியில் ஒலிபரப்பிக் கொண்டிருந்தார்கள். அன்றுதான் முதன் முதலாக உறவில்லாத ஒருவருக்காக நான் அழுதேன். ஈழத் தமிழ் தேசிய உணர்வூ என்னுள் வித்திட்ட நாளாக அது இருக்கலாம். அன்றுதான் அப்பா முன்பு உறவில்லாத யாருக்காகவோ அழுததற்கான காரணமும் புரிந்தது. அப்பா அன்று வடித்த கண்ணீரும் இன்று நான், நீங்கள் என அனைவரும் வடிக்கின்ற கண்ணீரும் நம் ஆழ் மனதிலிருக்கின்ற ஏதோ ஒன்றை நோக்கிய ஒருமைப்பாட்டின் வெளிப்பாடுகள் என்றால் மிகையல்ல. ஆனால் இந்த ஒருமைப்பாடுகள் பல்வேறு காரணங்களால் வேறுபாடுகளாக வெளிப்படுகின்றமை தவிர்க்க முடியாதது. புரிந்து கொள்ளப்படவேண்டி ஒன்று.

 

இவ்வாறு சிறுவயதிலிருந்து மரணங்களை எதிர்கொள்கின்ற அனுபவம் தொடர்ந்தது. ஐந்தாம் வகுப்பு படிக்கும் பொழுது நாம் படித்த வகுப்பிலிருந்த சக மாணவன் ஒருவன் தற்கொலை செய்து கொண்டான். இந்தச் சிறு வயதிலும் தற்கொலை செய்வார்களா என இப்பொழுதும் எனக்கு ஆச்சரியமே. ஆனால் அன்று அது நடந்தது. நாம் பார்க்கவூம் சென்றிருந்தோம். 1983ம் ஆண்டு இலங்கை பூராவூம் பல கொலைகள் நடந்தன. பல மரணங்கள். இழப்புகள். அட்டனிலுள்ள முதலாளி ஒருவரும் கொல்லப்பட்டார். இவர் அட்டனிலிருந்த மூன்று திரையரங்குகளில் லிபர்ட்டி என அழைக்கப்படும் ஒன்றின் உரிமையாளர். இவற்றைவிட தெய்வம் தந்த வீடு மற்றும் இரத்தத்தின் இரத்தமே போன்ற திரைப்படங்கைளை இலங்கையில் தயாரித்திருந்தார். இவர் மீதான கொலை இவர் தமிழராக இருந்ததுடன்; அந்த நகரில் முக்கியமான பணக்காரராக இருந்ததும் ஒரு காரணமாகும். இந்தக் காலங்களில், இப்படியூம் கொலை செய்வார்களா என நம்பமுடியாதளவிற்கு, சிங்கள இனவாதிகள் பல கொடுரமான முறைகளில் தமிழர்களை கொலை செய்தார்கள் என அறியக் கிடைத்தது. இந்த செய்திகள் குழந்தைகளான எங்களிடம் அதிர்ச்சியையூம் பயத்தையூம் உருவாக்கி இருந்தன.

 

இதன் பின் நாம் யாழ்ப்பாணத்திற்கு அகதியாகச் சென்றறௌம். அங்கு மரணம் பல்வேறு புதிய அனுபவங்களைத் தந்தது. முன்னால் இலங்கை இராணுவத்தில் பணிபுரிந்த தமிழர் ஒருவர் கொழும்பிலிருந்து அகதியாக வந்து நம்முடன் குருநகர் அகதிகள் முகாமில் தங்கியிருந்தார். அப்பொழுது நாம் ஓட்டோ கிராப் வைத்திருந்தோம். இவரது அழகான கையெழுத்திற்காக முகாமிலிருந்து அனைவரும் இவரிடம் தான் முதல் கையெழுத்தை வாங்கினார்கள். ஆனால் ஒருநாள் இவர் உளவாளி என அடையாளங் காணப்பட்டு அப்பொழுது இருந்த பல இயக்கங்களில் ஒன்றால் சுட்டுக் கொல்லப்பட்டார். நான் இதை அறிந்தபோதும் சென்று பார்க்கவில்லை. இதன்பின் ஒவ்வொரு நாளும் நாவற்குழியிலிருந்து யாழ் நோக்கி பாடசாலைக்கு சைக்கிளில் வருவோம். அப்பொழுது சுடப்பட்ட பல மனிதர்கள் மின் கம்பங்களில் கட்டப்பட்டுஇ வயிறு பிதுங்க, கண் விழிகள் தொங்க, தலை கவிழ்ந்து இருப்பதை பல நாட்கள் காலைக் காட்சிகளாகக் காண்போம்;. இவர்களது கழுத்தில் துரோகிகள் அல்லது உளவாளிகள் அல்லது சமூக விரோதிகள் என்ற செய்தி தொங்கவிடப்பட்டிருக்கும். இவர்களை 32 இயக்கங்களில் ஒரு இயக்கம் ஏதாவது ஒரு காரணத்திற்காக தண்டனை கொடுப்பதற்காக இரவூ சுட்டு இவ்வாறு கட்டியிருப்பார்கள். இதன் பின் மன்னாரில் தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்ட 10க்கு மேற்பட்ட இராணுவத்தினரின் உடல்களை நல்லுரின் பின்னால் காட்சிக்கு வைத்திருந்தார்கள். இந்த உடல்கள் இராட்ச உடம்புகளாக காட்சியளித்தன. இதிலிருந்து வந்த மணம் இன்று நினைத்தாலும் வயிற்றைப் பிரட்டுவதாக இருக்கின்றது.

 

இந்திரா காந்தி அவர்கள் சீக்கிய மனிததொருவரால் சுட்டு கொல்லப்பட்டு இறந்தபோது யாழ் நகரமே சோகமயமாக காட்டியளித்தது. மனதைப் பிசையூம் சோக இசை சுனாமியைப் போல பெருக்கெடுத்து நகரம் எங்கும் ஓடியது. இது யாழ் சென்ற பின் நாம் கண்ட முதலாவது மாபெரும் சோக நிகழ்வூ. அன்று பெரும்பாலான ஈழத்துத் தமிழர்கள் அவரது மரணத்;திற்காக துக்கம் கொண்டாடினார். தங்களின் ஒருவர் இறந்தாக உணர்ந்தார்கள். அந்தளவிற்கு அவரை நம்பியிருந்தார்கள் என்றால் மிகையல்ல. அல்லது இயக்கங்களாலும் கட்சிகளாலும் இவ்வாறான உணர்வூ மக்களுக்குள் கட்டமைக்கப்பட்டதா என இன்று மனம் சந்தேகிக்கின்றது. ஏனெனில் இதற்கு சில காலத்திற்கு முதல் தான் பஞ்சாப் விடுதலைக்காகப் போராடிய இயக்கத்தை மிக மோசனமாக அடக்கி அழித்திருந்தார் அவர். அவ்வாறான ஒருவரை தம் மீதான சிறிலங்கா அரசின் அடக்கு ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடிய இயக்கங்கள் மற்றும் தமிழ் கட்சிகள் ஈழத் தமிழர்கள் விடுதலை பெற உதவூவார் என நம்பியது ஒரு முரண்நகைதான்.

 

இதுபோல் இரண்டாவது சோக நிகழ்வூ ஒன்று நடந்தது. மேற்குறிப்பிட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டும் பிடிபட்டும் காட்சிக்கு வைக்க காரணமான நிகழ்வில் புலிகள் இயக்கத்தின் மன்னார் பொறுப்பாளர் விக்டர் இறந்ததற்கும் இவ்வாறான இசை நகரம் எங்கும் ஓலிபரப்பப்பட்டது. இதன்பின் இவ்வாறான மரணங்கள் தொடர்வதும் சோக இசை ஒலிபரப்புவதும் அதைக் கேட்பதும் தொடர் நிகழ்வூகளாகின. சிவாஜி, எம்.ஜி.ஆர்., கமல், ரஜனி… நடிகர்களின் திரைப்பட சுவரொட்டிகளை தாங்கிய யாழ் நகர சுவர்கள் இதன்பின் பிரமாண்டமான மரண அஞ்சலிகள் மற்றும் வீர வணக்க சுவரொட்டிகளை தாங்கின. நாமும் இவற்றுக்குப் பழக்கபட ஆரம்பித்தோம். ஆனால் இந்த சோக இசை இப்பொழுது கேட்டாலும் மனதை என்னவோ செய்யூம். ஒன்று விரக்தியை உருவாக்கி மன அழுத்தத்தை ஏற்படுத்தும். அல்லது போராடத் துண்டும்.

 

ஒரு புறம் சிறிலங்கா இராணுவத்தினால் குழந்தைகளிலிருந்து முதியவர்கள் வரையா நாளுக்கு நாள் சுடப்பட்டு, செல்லடிப்பட்டு, குண்டுகள் போடப்பட்டு, கத்திகளால் வெட்டப்பட்டு, காயப்பட்;;டார்கள். கொல்லப்பட்டார்கள். இவ்வாறான குழந்தைகள், பெண்கள், ஆண்கள் ஆகியோரின் படங்கள் ஒவ்வொரு நாளும் பத்திரிகைகளில் வந்தன. கல்வி கற்ற பாடசாலைகள், கும்பிடுகின்ற கோயில்கள், ஆலயங்கள், பஸ் தரிப்பிடங்கள், சந்தைகள் என எல்லா இடங்களிலும் ஆரம்பத்தில் இராணவம் வந்து நேரடியாக சுட்டது. வரமுடியாத காலங்களில் இவற்றின் மீது செல்களையூம் குண்டுகளையூம் ஏவினார்கள். இவை விழுந்து வெடித்து மாணவர்களும் பக்தர்களும் பயணிகளும் பொதுசனங்களும் நாள் தொரும் இறந்தார்கள். பல்கலைக்கழங்களுக்குள் புகுந்து பட்டதாரிகளை சுட்டார்கள். படகுகளில் பயணம் செய்த ஏழைப் பொதுமக்கள்; படுகொலை செய்யப்பட்டார்கள். வயல்களில் வேலை செய்தவர்கள் கொல்லப்பட்டார்கள். பஸ்களில் பயணம் செய்தவர்கள் கொல்லப்பட்டார்கள்.

 

மறுபுறம் இயக்கங்கள் இராணுவத்திற்கு எதிராக போராடிய அதேவேளை தமக்குள்ளும் தமக்கிடையிலும் சுடுபட்டு, அடிபட்டு, ஒருவரை ஒருவர் உயிரோடு எரித்துக் கொன்றார்கள். தாமும் இறந்தார்கள். இவர்களும் தமதும் மற்றும் பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த பல போராளிகளைக் கொத்துக் கொத்தாக கொன்றார்கள். முஸ்;லிம்களின் பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட்ட சிறுவர்கள் முதல் முதியவர்கள் என அனைவரையூம் கொன்றார்கள். இதற்கு எதிர்வினையாக முஸ்லிம்களும் தமிழர்களைக் கொன்றார்கள். இதைவிட சிறிலங்கா அரசுக்கும் தேசத்திற்கு எதிரான தற்கொலைக் தாக்குதல்களால் இலங்கை நாடு அதிர்ந்தது. சிங்களப் பொது மக்கள் மீது இந்த தற்கொலைத் தாக்குதல்கள் நடந்தன. இப்படியான நிகழ்வூகளால் சிதைந்த மனித உடல்களின் தசைகளும் இரத்தமும்; இலங்கையின் பெரும்பாலான குறிப்பாக வடக்கு கிழக்கில் உள்ள ஊர் நகரமெல்லாம் பரவிக் கிடந்தன.

 

இவற்றுக்கு மேலாக இந்திய இராணுவம் வந்தது. இவர்களும் தாமும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என நிறுபிக்க ஈவிரக்கமின்றி மனிதர்களை அடித்தே கொன்றார்கள். இறந்த மனித உடல்களை தமக்குப் பாதுகாப்பாக்கி அரண்களாக்கி பல மனிதர்களைக் கொன்றார்கள். இவர்களிடம் நாவற்குழி சந்தியில் தனித்து அகப்பட்ட நாம், அப்பா, அம்மா, இரண்டு தங்கைகள் மற்றும் நான் அதிர்ஸ்டவசமாக தப்பினோம். மனிதம் வாழ்கின்றது என்ற நம்பிக்கையைத் தந்த கணங்கள்.

இப்படி பல மரணங்கள், படுகொலைகள் நம் முன்னே நாள்தோறும் நடந்தன. தொடர்ந்தன. இவை நம் வாழ்வின் ஒரு பகுதியாகின. எங்கள் மனமும் இறுக்கமடைந்து வந்தன. ஆனாலும் வாழ்ந்தோம். வாழ்க்கை இதை எல்லாவற்றiயூம் விட உயர்ந்ததாக இருந்தது. இருக்கின்றது. இதன் முக்கியத்துவம் நாம் மற்றவர்களைக் கொல்லும் பொழுது நமக்குப் புரிவதில்லை.. ஆனால் மற்றவர்கள் எங்களை கொல்ல வரும்பொழுது உணருவோம். ஆனால் அப்பொழுது நம்மைக் காப்பாற்ற காலம் கடந்திருக்கும்.

 

மேற்குறிப்பிட்டதை விட தனிப்பட்ட சில மரணங்கள் கவலையை ஏற்படுத்தின. நாவற்குழியில் இருந்தபோது மணிவண்ணனுடன் ஒன்றாக உயரந்தரம் படித்தேன். என்னைக் கனடா வரும் படியூம் தான் உதவி செய்வதாகவூம் அப்பொழுதே கூறியிருந்தார். ஆனால் நான் பத்து வருடங்களின் பின் கனடா வந்தபோது அவர் இருக்கவில்லை. கார் விபத்தொன்றில் இறந்துபோயிருந்தார். எனக்கு பெண் நண்பர்கள் மிக மிகக் குறைவூ. ஆனால் உயர்தர பரிட்சை எடுத்து விட்டு அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக அப்பொழுது மிஞ்சியிருந்த இரண்டு இயக்கங்களில் ஒன்றைத் தெரிவூ செய்து சேர்ந்தேன். அப்பொழுது அந்தப் பெண் அறிமுகமானார். இவர் மட்டக்களப்பைச் சேர்ந்தவர். ஊர்காவற்படையால் வன்புணர்வூக்கு உள்ளாக்கப்பட்டவர் என மற்றவர்கள் கூறியிருந்தார்கள்;. ஆனால் அதன் பின்பும் நம்பிக்கையூடன் வாழ்ந்தார். எனது விட்டுக்கு நான் அழைத்து வந்த முதல் பெண் இவர்தான். எனக்கு காதல் உறவூ அப்பொழுது யாருடனும் இல்லாதபோதும், காமம் பொங்கி எழுகின்ற வயதானபோதும் எமக்குள் தோழமை உணர்வூ மட்டுமே இருந்தது. வேறு எண்ணங்கள் எனக்கு இருக்கவில்லை. அப்படி இருந்ததை இப்பொழுது நினைத்தாலும் அதிசயமாகவூம் ஆச்சரியமாகவூம்தான் இருக்கின்றது. ஆனால் அது உண்மை. நான் கணிதம் படித்ததும் படிப்பிப்பதும் அவருக்குப் பெருமையாக இருந்தது. ஏனெனில் அவருக்கு கணிதம் ஓடாது. ஆனால் அவர் எனக்கு அரசியல் பொருள் முதல்வாதம்இ வரலாற்றுப் பொருள்முதல் வாதம் என்பவற்றின் அடிப்படைகளை எளிமையாக விளக்கினார். ஒரு நாள் இந்தப் பெண் கவிதை ஒன்றை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  இச் செய்தி கேட்டு ஒரு கணம் ஆடிப்போனேன்.

 

யாழ் பல்கலைக்கழம் சென்ற போதுஇ அங்கு செல்வியூம் சிவரமணியூம் அறிமுகமானார்கள். நாம் ராக்கிங் எதிர்ப்புக் குழு மற்றும் நாடகம்இ கல்வி வட்டம் போன்ற பல செயற்பாடுகளில்; பல்கலைக்கழத்திற்குள் இணைந்து செயற்பட்டோம். ஒரு நாள் சமூக காரணங்களுக்காக சிவரமணி தனது கவிதைகளுடன் தற்கொலை செய்து கொண்டார். இன்மொரு நாள் தனிப்பட்ட அலுவலாக வவூனியா பூந்தோட்டத்திற்;கு சென்றபோது ஒழுங்கை ஒன்றில் பெண் ஒருவர் சிரித்துக் கொண்டு நிற்பதை தற்செயலாக கண்டேன். செல்வி சிரித்துக்கொண்டு நின்றார். அந்த சிரிப்பு இப்பொழுதும் என் மனதில்; அப்படியே இருக்கின்றது. சில மாதங்களின்; பின் இவருக்கு இயக்கம் தண்டனை கொடுத்துக் கொன்றதாக அறிந்தேன். இந்த தண்டனைக்கான காரணமும் வெளியே தெரியாதவாறு 2009ம் ஆண்டு மேயூடன் அழிந்துபோனது. யாழ் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு படித்;துக் கொண்டிருந்தபோது கொல்லப்பட்ட ராஜனி திரணகமவினது மரணமும் குறிப்பிட்டதக்கது.

 

புலிகளின் நாவற்குழி பொறுப்பாளராக இருந்து இந்திய இராணுவத்தால் கொலை செய்யப்பட்ட அருள் மற்றும் இறுதிப் போரில் கொல்லப்பட்ட நம்முடன் விளையாடித் திரிந்த போராளி சுதன்இ கந்தன் கருனையில் கொலை செய்யப்பட்ட மாலையகத்தைச் சேர்ந்த போராளி பெஞ்சமின் ஆகியோரையூம் இங்கு நினைவூ கூறவேண்டும். இதன்பின் கொழும்பு பல்கலைக் கழகத்தில் கல்வி கற்றபோது சந்தித்த நண்பர் விஜி. இவர் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும் பொழுதே இவரது தாயூம் தந்தையூம் ஒருவர் பின் ஒருவராக இறந்தனர். இதிலிருந்து இவர் வெளிவர ஆறுதல் கடிதம் எழுதியிருந்தேன். நெகிழ்ந்து போனதாக குறிப்பிட்டார். ஆனால் விஜி திருணம் முடித்து இரண்டு குழந்தைகளுக்கு தந்தையாகியபின் மூளையில் புற்றுநோய் வந்து திடிரென இறந்துபோனார்;. நாட்டில் இருக்கப் பயந்து புலம்பெயருந்து ஜெர்மனியில் வாழ்ந்து கொண்டிருந்து வீரகத்தி அப்பாச்சியின் பேரன் ஒருவர் பாடசாலை செல்லும் வழியில் புகையிரம் அடித்து இறந்தார்.

 

மேற்குறிப்பிட்ட எல்லா மரணங்களையூம் விழுங்கித் தின்றது 2008ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வைகாசி 18ம் திகதி வரை இலங்கையின் வடபகுதியில் நடைபெற்ற ஈழத் தமிழர்களின் மீதான இன அழிப்பு நடவடிக்கை. இதுபோன்ற இனவழிப்பு நடவடிக்கை ஒன்று கிழக்கில் நடைபெற்றதாகவூம் ஆனால் அதற்கு இந்தளவூ முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கவில்லை என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. என்ன காரணம்? இவ்வளவூ இழப்புகளின் பின்பும் மரணங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இறுதியாக புலம் பெயர்ந்த நாடுகளிலும் இன்றுவரை தொடரும் பல படுகொலைகள். சில மரணங்கள் அமைதியானவை. சில இன்னும் ஏன் மரணிக்கவில்லை எனவூம் காத்திருக்க வைத்தவையூம் உண்டு. சிலர் உறவூகளின் உதவியின்றி அநாதைகளாக வயோதிபர் மடங்களில் இறந்ததும் உண்டு. இப்படி எத்தனை மரணங்கள். இவற்றை எதிர்கொண்ட அனுபவங்கள் சவால்கள் எங்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது. மிகச் சிலரே பதிவூ செய்கின்றௌம். சிலரே சக மனிதர்களுடன் உரையாடுகின்றௌம். ஆனால் பலர் தமக்குள் அடக்கி வைத்துக்கொண்டு அமைதியாக இருப்பதுபோல் வாழ்;கின்றனர். அதேவேளை இவர்களது மனங்கள் எரிமலையாக குமுறிக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு தமக்குள் புளுங்கிக் கொண்டிருப்பது நீண்ட காலத்தில் இவர்களுக்கும் இவர்களது எதிர்கால சந்ததியினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. ஆகவே இவர்களுக்கு உள மன நல சமூக சேவையாளர்களின் உதவியூம் வழிகாட்டலும் கிடைக்குமாயின்இ இவர்களுக்கு ஏற்பட்ட இந்த இழப்புகளையூம் அதனால் உருவான வலிகளையூம் துயரங்களையூம்இ தம் வளர்ச்சிக்கும் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கும்; பயன்படுத்தலாம்.

 

 ஈழத்து தமிழ் சமூகம் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக வன்முறைகளையூம் போரையூம் சந்தித்து வந்திருக்கின்றது. இதனால் பல மரணங்களையூம் இழப்புகளையூம் சந்தித்திருக்கின்றது. இறுதியாக தன் இனம் அழிக்கப்பட்டதை சாட்சியாக இருந்து பார்த்துள்ளது. இந்த அனுபவங்களிலிருந்தும் பாதிப்புகளிலிருந்தும் உடனடியாக மீள்வது என்பது சாத்தியமில்லாத ஒன்று. ஆனாலும் அதற்கான முயற்சிகள் இப்பொழுதே மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறான முயற்சிகள் மூலம் சிறிய உதவிகள் பங்களிப்புகளையாகவது நாம் செய்யலாம். இந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டே ”மரணம் இழப்பு மலர்தல்” நுhல் வெளியீடப்படுகின்றது.

 

இறுதியாக மரணம்இ இழப்புஇ மலர்தல் தொடர்பாக எழுதுவதற்கு ஓசோவின் கருத்துக்கள் தந்த ஊக்கம் முக்கியமானது. இவர் மரணத்தை எவ்வாறு எதிர்கொள்வதுஇ அதை எவ்வாறு ஆழமாக அறிவதுஇ தியானம் செய்வதனுடாக விழிப்பு நிலையை வளர்ப்பதனுடாகவூம் பிரக்ஞையான செயற்பாடுகள் மூலமாகவூம் சுயஅனுபவத்தில் புரிவதுஇ மற்றும் குழந்தைகளுக்கான கல்வித் திட்டத்தில் இதுவூம் ஒரு பாடத்திட்டமாக இருக்கவேண்டும் என பலவற்றுக்கு வழிகாட்டியூள்;ளார். இவ்வாறு பல்வேறு தளங்களில் வழிகாட்டியவர் ஓசோ. இவரை நான் அறிந்திராவிட்டால் இந்த நுhல் வெளிவந்திருக்காது என்றே உணர்கின்றேன். நாம் மேற்குல சிந்தனைகளாலும் அதன் கல்வித் திட்டங்களாலும் ஒவ்வொன்றையூம் பிரித்துப் பிரித்து துண்டு துண்டாக அறிவதற்கும் ஆராய்வதற்கும் பயிற்றப்பட்டவர்கள். பழக்கப்பட்டவர்கள். ஆனால் கிழக்கின் சிந்தனையோ அனைத்தையூம் முழுமையாக பார்ப்பதற்கு வழிநடாத்துவதாகும். இந்தப் பார்வையை இன்றைய தலைமுறையூம் சமூக மாற்றத்திற்காக செயற்படுகின்றவர்களும் புரிந்துகொள்ள வேண்டியது வரலாற்றுக் கடமை என்றே நினைக்கின்றேன். வாழ்வூம் மரணமும் அவ்வாறு பார்க்கப்படவேண்டிய ஒன்றே. மேற்குக்கு மரணம் முடிவூற்ற ஒரு பயணம். கிழக்குக்கு மரணம் மனிதரின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கான ஒரு படிக்கல்.

மீராபாரதி
18.04.2013

 

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பல கட்டுரைகளை முன்பு பலமுறை வாசித்திருக்கிறேன். உங்கள் எழுத்து சாதாரணமானவர்களால் விளங்கிக் கொள்ள முடியாததாக இருந்திருக்கிறது என்பதற்கு நான் சாட்சி. ஆனால் இக்கட்டுரை விளங்கும்படியாக எழுதியமைக்கு நன்றி. யதார்த்த வாழ்வியலோடு ஒன்றிய மக்களை அதனின்றும் நகர்த்துவது கடினமானது. அத்தோடு வாழ்வில் சாதாரணமானவை எல்லாம் சுமுகமானதாக நடைபெற்று நேரம் மிஞசினாலன்றோ தியானமும் தீர்க்க சிந்தனைக்கும் நேரம் கிடைக்கும். ஓடிக்கொண்டிருக்கும் வாழ்வில் இவைகள் எப்படி சாத்தியம்???

 

இதுதான் "எரிகிற வீட்டில் நெருப்பெடுப்பதின் செம்மையான உதாரணம்." புத்தக வியாபாரம். புதிய போலிச் சரித்திரம். இயக்கக் கதை......

 

ஓவ்வொரு வரியிலும் வஞ்சக நினைவுதான் மிஞ்சுகிறது.

 

 "ஈழத்து தமிழ் சமூகம் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக வன்முறைகளையூம் போரையூம் சந்தித்து வந்திருக்கின்றது." 1958 ல் தாரை முதில் வார்த்து செய்த கொலைகளை இவர் பார்க்க மறுப்பத்தால் அதிலிருந்து ஆறுதல் அடைய வேண்டிய தேவை இல்லை.

 

தனது பிரச்சாரங்களை உண்மையான மரணங்களாக காட்டி போற்குற்ற விசாரணை வரமுதல் அதை மடக்க கண்டுபிடித்த உத்தி.

 

எந்த ஒரு மரணத்திற்கும் நீதி கிடைக்காத பட்டசத்தில் அமைதி வரபோவத்தில்லை.  அடக்குமுறையை அரசு மிரட்டலாக விடலாம். தனது பிரச்சாரிகளை வைத்து மக்களை நடந்த போன பழிவாங்களை திசை திருப்பி யாராவது மீதி பழி போடலாம்.

 

இந்த கட்டுரைள் வக்கற்றுப்போய்விட்ட தமிழ் மக்களை ஏமாற்றலாம். ஆனால் இப்பொது சர்வதேசம் இலங்கை அரசு 1948 தொடக்கம் செய்த இன வழிப்புக்கு பதில் கேடக்கத்தாயாராகிக்கொண்டு வருகிறது. தேவைப்பட்டால் மகிந்த கோத்தா தமது மரணத்தால்தான் மரணம் அடைந்தவர்களுக்கான நீதி கேட்பவர்களை ஆறுதல் அடைய வைக்க முடியும்.

 

அது வரை இந்த விலைபோனவற்றை யாரும் வாங்கிக்கொள்ளப்போவதில்லை.

 

நசுக்காக நஞ்சை ஊட்டுகின்றார்....ம்....ம்... புரித்து கொள்வார்களா. மரணத்தை காட்ட எந்த உதாரணங்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்

நானும் வாசித்தேன்

ஆனால் தொடர்ந்து நானே எழுதுவதால் இவருக்கு இது தான் வேலை என்று வந்துவிடும்

ஆனாலும் 

நன்றி மல்லை மற்றும் வந்தி

 

காலைத்தூக்கி  பழகியாச்சு

இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதை மாற்றமுடியாது :( 

  • கருத்துக்கள உறவுகள்

மீரா......... அநேகமாக நீங்களும் நானும் ஒரே காலகட்டத்தில் தான் யாழ்ப்பாணத்தில் அல்லது வடக்கில் வாழ்ந்து இருக்கின்றோம் என்று இதிலிருந்து புலனாகின்றது.

 

ஒன்றுக்கொன்று சளைக்காமல், இலங்கை ஆமியும், புலிகளும், ஏனைய தமிழ் தாயின் வயிற்றில் பிறந்து வளர்ந்தவர்களால் அமைக்கப்பட்ட இயக்கங்களும் படுகொலைகளை தமிழர் இடங்களில் தமிழர் மீது செய்ததும், தினசரி நிகழ்வுகளாக படுகொலைகளை கண்டு வளர்ந்ததும் மறக்க முடியாத துன்பியல் நிகழ்வுகள்....

 

இக்கட்டுரையை இதனை விட விரிவாக எழுதி இருக்கலாம்....



நானும் வாசித்தேன்

ஆனால் தொடர்ந்து நானே எழுதுவதால் இவருக்கு இது தான் வேலை என்று வந்துவிடும்

ஆனாலும் 

நன்றி மல்லை மற்றும் வந்தி

 

காலைத்தூக்கி  பழகியாச்சு

இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதை மாற்றமுடியாது :( 

 

 

ஐயா, ஊரில் படுகொலைகள் எல்லாம் தொடங்க முதல் மூட்டை முடிச்சுகளுடன் வெளிநாடு ஓடி வந்து அசைலம் அடித்தவர் போல இருக்கு....சிறுவராக இருக்கும் போது பள்ளிக்கூடம் போகும் போது தினமும் சவங்களின் முகத்தில் முழித்த பரம்பரை நாங்கள். அந்த சவங்களில் சரி பாதிக்கும் மேல் தமிழர்களால் தமிழர்கள் மீது செய்யப்பட்ட படுகொலைகள்...........

Edited by வைரவன்

146,000 கணக்கை மறைத்துவிட்டு, தாங்கள் பிரச்சாரம் மூலம் தூண்டு நடத்தி வெற்றிகண்ட சகோதர சண்டைகளில் தங்கள் பிரச்சார காலை ஊண்றுகிறார்கள்.  அந்த வெற்றியில் மீண்டும் கட்ட எழுப்ப ஆசைப்படுகிறார்கள். இன்றைய பிரிவினைக் கதைகளை 2006 முன்னர் நடந்து முடிந்துபோனவற்றில் தொடங்குகிறார்கள் சகோதர சணடைகளில் ஏமாற்றம் கண்ட பின்னர் கருணாவை பிரித்தார்கள். இன்று கருணா அவர்களின் தியானத்துறவிகளுக்குள் ஒரு மந்திரி.

 

இந்த பிரச்சாரிகள் இங்கே வருவது பிரச்சாரத்திற்காக என்பது நானோ அல்லது வந்தோ எழுதி மட்டும்தான் மற்றவர்கள் புரிவார்கள் என்பதல்ல நான் இங்கே எழுதுவதன் கருத்து.

 

அரசியல் பிரசாரமாக 5 நிமிடம் நல்ல தமிழில் மேடைகளில் பேசாத SJV புரிந்துவைத்திருக்காத வடக்கு கிழக்கு தமிழன் இல்லை என்றே சொல்லாம். (எதிரியாக இருந்திருக்கலாம், அவரின் ஆதரவாளனாக இருந்திருக்கலாம் எல்லோருக்கும் அவரை யார் என்று தெரியும்). இது வடக்கு கிழக்கில் இன்றும் காணப்படும் இயல்பு. மேற்கு நாட்டு அரசியல் வாதிகளுக்கு கூட வடக்கு கிழக்கில் பிரசாரம் செய்ய வேண்டுமானால் சில சிக்கல்கள் வரலாம். பிரசாரங்களில் சரியானவற்றை வடித்தெடுக்கும் அவர்களின் பண்பு உலகின் தலை சிறந்தது.

 

அப்போது நாம் ஏன் தவறாமல் இந்த பிரசாரங்களை எதிர்க்கிறோம் என்றால் இவர்கள் அந்த சிறந்த இயல்பை கூட விழுத்தி பிரசாரத்தால் ஏமாற்ற முட்யும் என்று நினைத்து திரும்ப  திரும்ப இங்கே வருவதாலேயே.

 

ஐ.நா பிரேரணையின் பின்னர் யாழில் இது மட்டுமல்ல பல கோணங்களில் பிரச்சாரம் இறுக்கி  முடக்கிவிடப்பட்டுள்ளமை பல விவாதங்களினூடாக வெளிவருகிறது. இது போன ஐ.நா பிரேணையின் பின்னர் அரச அடிவருடிகள் மெல்ல மெல்ல ஒதுங்கி போனதற்கு எதிரான இயல்பு.  அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்று சிங்கள எதிரி நினைக்கிறான். பிரசாரம் மூலம் மேற்கு நாடுகள் முழுவதையும் தங்கள் கைக்குள் போட்டு புலிகளையும் தமிழரையும் பயங்கரவாதிகளாக காட்டுவதில் தமிழ் கதிர்காமரை வைத்தே வெற்றி கண்டவர்கள்.

 

அன்று புலிகளும், கூட்டமைப்பும் கதிர்காமரை இந்த பொய்யன் சொல்வதை யாரும் நமப மாட்டார்கள் என்று தட்டிக்கழித்ததுதான் இன்று தமிழருக்கு போலி பிரச்சர தியானங்களின் ஏமாற்றுகளுக்கு எடுபடுவதை விட வேறு வழி இல்லை என்ற நிலைக்கு இட்டு வந்திருக்கு. கதிர்காமர் பல மேற்கு நாடுகளுக்கு, தமிழருக்கு உரிமைக்கான தேவை இருக்கு, அது போர் முடிய அளிக்கப்படும் என்று பசப்பு வார்த்தைகள் பேசினார். அதையும் விட நுணுக்கமான பசப்பு வார்த்தைகள் யாழில் பதியப்படும் பந்திகளில் மறைக்கப்பட்டு பதியப்படுகிறது. 

மனித இயல்பு: பொதுமக்கள்

1. தாமாக மெய்யை சொல்வார்கள்.

2. பொய்யை கேள்விப்படால் மறுப்பார்கள்.

3.பொய்யை திணிக்க முயன்றால் எதிர்ப்பார்கள்.

4.பொய்யை ஏற்க மறுத்தற்கு தண்டிக்கப்பட்டால் போராடுவார்கள்.

5.தோற்கடிக்கப்பட்டு ஒடுக்கபட்டால் பொய்யை விலத்தி ஒதுங்க பார்ப்பார்கள்.

6.முன்னால் இழுத்துவந்து சித்திரவதைகளால் வலிந்து ஏற்றப்பட்டல் ஏற்றுக்கொள்வதா நடிப்பார்கள்.

7. மீட்சி கிடைக்காத பட்சத்தில் அதனுடன் இயைந்து தாமும் பொய்யாக வாழ ஆரம்பிப்பர்கள்.

 

போலிப்பிரசாரிகள் இந்த மனித உண்மையை விளங்கிக்கொண்டுதான் அடி மேல் அடி அடிக்க இங்கே வருவார்கள்.

 

இதனால் ஒன்றுக்கொன்றாக பிரசாரிகளின் பிரசாரம் உடனேயே எதிர்த்து தோல்வி என்ற பேச்சுக்கு இடம் இல்லாத நிலையை வைத்திருக்க வேண்டியது அவசியம்.

 

 

Edited by மல்லையூரான்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

மரணம் இழப்பு மலர்தல்
இழப்பிலிருந்து வளரச்சியை நோக்கி...

போரில் கொல்லப்பட்டு மரணித்த மனிதர்களையூம்...
சமூக விடுதலைக்காக போராடி மரணித்தவர்களையூம் நினைவூ   கூறுதல்...
அஞ்சலி செய்வதற்கான உரிமையை வலியுறுத்தல்...
இழந்தவர்களை ஆற்றுப்படுத்தல்...
இவர்கள் வாழ்வை மேப்படுத்தல்

போன்ற கருத்துக்களை வலுயுறுத்துவதை நோக்கமாகக் கொண்டு
 “மரணம் இழப்பு மலர்தல்” என்ற நூல்  மே மாதம்  19ம் திகதி வெளியீடப்படுகின்றது..

Mid Scarborough Community Centre,

2467 Eglinton Ave East

 

மாலை 5.00 மணி வழமையாக தாமதமாக வருகின்றவர்களுக்கு...
மாலை 5.30 மணி வழமையாக ;குறிப்பிட்ட நேரத்திற்கு வருகின்றவர்களுக்கு

 

 

 

 

Edited by meerabharathy

  • தொடங்கியவர்

மரணம் இழப்பு மலர்தல் – ஒரு மனிதர்: ஒரு உயிர் – 2

ஒரு மனிதர் : ஒரு உயிர் -
துரோகியிலிருந்து மாமனிதர் … போராளியிலிருந்து துரோகி…

பல மனிதர்களின் உயிர்கள் இன்று நம்மிடையே இல்லை. இதில் ஒருவர் நல்ல அரசியல் செயற்பாட்டாளர். ஆற்றல் மிக்க போராளி. சிறந்த எழுத்தாளர். தரமான பத்திரிகையாளர். இப்படி பல ஆற்றல்களைக் கொண்ட பல மனிதர்கள். சமூகமளித்த பல்வேறு பொறுப்புகளையூம் ஏற்று செயற்பட்ட தனித்துவமான மனிதர்கள். இதற்கு முன்னர் இவர் போன்ற ஒரு மனிதர் பிறந்ததும் இல்லை. இனிப் பிறக்கப்போவதும் இல்லை. நம்மைப் போல. ஆனால் இம் மனிதர்கள் இவ் உலகத்திற்கு வந்த பணி முழுமை பெற்றதா அல்லது செயற்கையாக நிறுத்தப்பட்டுள்ளதா?

உலகில் பிறந்த பிறக்கப் போகின்ற ஒவ்வொரு மனித உயிரும் தனித்துவமானது. ஓவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு தனித்துவமான வாழ்க்கை உண்டு. தனித்துவமான ஆற்றலும் பங்களிப்பும் உண்டு. தன் ஆற்றலை அறிந்துகொண்டு அதன் முழுமையையூம் வெளிப்படுத்தும் பொழுது ஒருவர் தான் பிறந்ததற்கான பங்களிப்பை இவ்வூலகில் நிறைவூ செய்கின்றார். அவ்வாறு தனது ஆற்றலை வெளிப்படுத்திக் கொண்டிருந்த ஒருவர் இவர். ஆனால் தனது கருத்திற்காக அரசியல் நிலைப்பாட்டிற்காக தான் கொலை செய்யப்படுவதை எதிர்கொண்டார். ஒரு நாள் எதிர் கருத்துக் கொண்டவர்களால் அல்லது அதிகாரத்தில் இருந்தவர்களால் கொல்லப்பட்டார். இவ்வாறு கொலை செய்யப்பட்டதற்கான ஒரே காரணம் இவர் மாற்றுக் கருத்தை அல்லது தமது அதிகாரத்திற்கு எதிரான கருத்தைக் கொண்டிருந்தார் என்பது மட்டுமே.

இவ்வாறான ஒரு மனிதரின் கொலை தொடர்பாக எழுத ஆரம்பித்தபொழுது ஒரு கேள்வி முன் எழுந்தது. எவ்வாறான சொற்றொடரைப் பயன்படுத்துவது. இறந்தான் அல்லது இறந்தாள் என்று எழுதுவதா? அல்லது இறந்தார் எனப் பொதுவாக எழுதுவதா? எதனடிப்படையில் இதனைத் தீர்மானிப்பது. என் தனிப்பட்ட நலனின் அடிப்படையில் எதிரி அல்லது நண்பர் என நோக்குவதா? அல்லது என் சிந்தனையின் அடிப்படையில் தீர்மானிப்பதா? அல்லது மனித உரிமைகளின் அடிப்படையில் மனித உயிர் ஒன்று இயற்கையான இறப்புக்கு மாறாக கொலை ஒன்றின் மூலமாக செயற்கையாகப் பறிக்கப்பட்டுள்ளது என்றடிப்படையில் நோக்குவதா? இந்தடிப்படைகள் எல்லாற்றுக்கும் அப்பாற்பட்டு ஒரு மனித உயிர் கொலை செய்யபட்டுள்ளது என்பதே உண்மை. இது சார்புத் தன்மைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு பார்வையை வேண்டி நிற்கின்றது. ஆனால் இவ்வாறான கொலைகள் தொடர்பான நமது வழமையான பார்வை ஏதாவது ஒரு வரையறுப்புக்கும் கட்டுப்பாட்டுக்கும் உட்பட்டு பார்ப்பதேயாகும். இவ்வாறு பார்ப்பது சார்புத்தன்மையானதாகும்.

இன்று இவ்வாறு கொலை செய்யப்பட்ட ஒருவரின் இழப்பு ஈடுசெய்யப்பட முடியதாது எனவூம் இக் கொலை கண்டிக்கப்பட வேண்டியது எனவூம் கண்டன அறிக்கைகள் வெளீயிட்டு செய்திகளும் வாசிக்கின்றனர். இதற்கான அடிப்படை காரணமாக இருப்பது இந்த உயிர் கொலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கும் மேலாக தம் நலன் சார்ந்து திறமையாகவூம் ஆளுமையூடனும் செயற்பட்ட ஒருவரை தாம் இழந்தது என்பதே காரணமாகும். ஆனால் வேறு சிலருக்கோ இக் கொலை எவ்விதமான தாக்கத்தையூம் எற்படுத்தாமல் இருக்கலாம். அதேவேளை இவர் கொலைசெய்யப்பட வேண்டியவர் என ஒரு சிலர் கருதியதால் அவர்கள் கொலை செய்திருக்கின்றனர் என்கின்றனர் சிலர். இன்னும் சிலர் இக் கொலையினால் மகிழ்ச்சியூம் அடையலாம். இவ்வாறு ஒரு கொலை தொடர்பாக வேறுவேறான உணர்வூ ஓட்டங்களும் சிந்தனைச் சிதறல்களும் உருவாவதற்கு காரணம் தாம் சார்ந்த தம் நலன் சார்பான பார்வை என்றால் மிகையல்ல. இது அடிப்படையில் பக்கச் சார்புத்தன்மையை உருவாக்கின்றது. இதற்குக் கொலை செய்யப்பட்டவரின் கடந்த கால குறிப்பாக 2000 களின் பின்பான செயற்பாடுகளின் விளைவூகளே இன்றைய மனித மனங்களின் மேற் கூறப்பட்டவாறான எண்ணங்களும் உணர்வூகளும் எழுவதற்கு காரணமாகின்றன.

இதே மனிதர் பத்து வருடங்களுக்கு முன்பு இவ்வாறு கொலை செய்யப்பட்டிருந்தால் இன்றைய நிலைமை தலைகீழாக இருந்திருக்கும். இன்று கவலைப்படுபவர்களும் கண்டன அறிக்கை விடுபவர்களும் அன்று கண்டும் காணாமல் விட்டிருப்பர். அல்லது கொலையின் நியாயத்தன்மை தொடர்பாக வாதம் செய்திருப்பர். இன்று கண்டும் காணாமல் இருப்பவர்கள் அன்று கவலைப்பட்டு கண்டன அறிக்கைகள் விட்டிருப்பர். இன்று மகிழ்பவர்கள் அன்றும் மகிழ்ந்திருப்பர் அல்லது கவலைப்பட்டிருப்பர். இவ்வாறான சிந்தனைகளுக்கும் உணர்வூகளுக்கும் இந்த மனிதரின் 2000ம் அல்லது 1990ம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்தின் செயற்பாடுகளின் விளைவூகள் அடிப்படை காரணமாக இருந்திருக்கும்.

ஓரு கொலை தொடர்பான நமது நிலைப்பாடு எப்பொழுதும் இவ்வாறு ஒரு பக்கச் சார்பானதாகவே இருந்திருக்கின்றது. நமது சிந்தனை வரையரைகளுக்கு உட்பட்டும் கட்டுப்பட்டும் நமது நலன் சார்ந்துமே நமது நிலைப்பாடு வெளிவருகின்றது. இவ்வாறான வரையரைகளையூம் கட்டுப்பாடுகளையூம் கடந்து ஒரு சாதாரண மனித உயிர் என்ற மனிதத்துவ பண்பு இன்று நம்மிடம் இல்லை. மனிதம் இறந்துவிட்டது. மாறாக ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு கொள்கையாகவூம் கோட்பாடாகவூம் வாழ்கிறார். ஓருவர் கம்யூனிஸ்ட்இ இன்னுமொருவர் தேசியம் வேறு ஒருவர் இந்து மற்றுமொருவர் முஸ்லிம் இவ்வாறு பௌத்தம் கிரிஸ்தவம் சாதி இனம் என பல முகமூடிகளை அணிந்து கொண்டு வாழ்கின்றனர். இம் முகமூடிகள் ஒருவரின் கண்ணாடியாகவூம் செயற்பட்டு அதனுடாக வடிகட்டிப் பார்த்து தமது நிலைப்பாட்டை தரிவிக்கின்றனர். நாம் கூறுவது சரி தவறு என்பதற்கும் அப்பால் இது எனது நிலைப்பாடு இதை மற்றவர் ஏற்கவூம் மதிக்கவூம் வேண்டும் என எதிர்பார்க்கின்றேம். இவ்வாறு நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கிணற்றுக்குள் வாழ்கின்றேம். ஆனால் துரதிர்ஸ்டவசமா இதை ஒவ்வொரு கணமும் நாம் மறந்தே வாழ்கின்றேம். இதனால்தான் ஒருவருக்கு சரி என்பது இன்னுமொருவருக்கு பிழையாக இருக்கின்றது. அவருக்குப் பிழையானது மற்றவருக்கு சரியாக இருக்கின்றது. இதற்கு அடிப்படை காரணமாக இருப்பது நம்மைக் கட்டுப்படுத்தும் வரையறுக்கப்பட்ட சிந்தனையின் ஆதிக்கம். இதுவே ஒரு பக்கச் சார்புத் தன்மை நிலைப்பாட்டிற்கு வழிவகுக்கின்றது.

இன்று ஒருவர் கொலை செய்யப்பட்டுவிட்டார். இக் கொலையின் நியாயம் அநியாயம் தொடர்பாக பலர் அல்லது சிலர் வாதிடலாம். பலர் இவர் பற்றிய கவலையின்றி தம் வாழ்க்கையில் மட்டும் அக்கறையாக இருக்கலாம். இதற்கும் மேலாக இந்த மனிதரின் கடந்த கால முரண்பட்ட அல்லது பரிணாம வளர்ச்சி கொண்ட வாழ்க்கை இவ்வாறான வாதப் பிரதிவாதங்களுக்கு தகுதியானவர் அல்லது தகுதியற்றவராகக் கூட இருக்கலாம். இவ்வாறான வாதப்பிரதி வாதங்கள் உணர்வலைகள் மதிப்பீடுகள் புதிய சிந்தனைகளைத் துண்டலாம். ஆனால் மனித வாழ்வைப் பாதுகாக்க உதவப்போவதில்லை. ஆகவே இக் கொலையில் இருந்து நாம் கற்றது என்ன என்பதே இன்று அக்கறைக்குரிய விடயமாகும். இதுவே எதிர் கால வாழ்வின வளர்ச்சிக்கும் மனித வாழ்வைப் பாதுகாப்பதற்கும் உதவியூம் நன்மையூம் அளிக்கும். இதிலிருந்து கற்கத் தவறுவோமாயின் இன்று இக் கொலையைக் கண்டிப்பவர் நாளை வேறு ஒருவரை கொலை செய்யலாம் அல்லது ஒரு கொலையை நியாயப்படுத்தி அறிக்கை விடலாம். மறுபக்கம் இன்று கொலை செய்தவர் அல்லது இக் கொலையை ஆதரிப்பவர் நாளை வேறு ஒரு கொலையை மனித உரிமை மீறல் எனக் குரல் கொடுத்து கண்டன அறிக்கைகளும் விடலாம். இவ்வாறு ஒரு பக்க சார்பாக மாறி மாறி முன்னெடுக்கும் செயற்பாடுகள் எதுவூம் மனித வளர்ச்சிக்கு உதவப் போவதில்லை. மீண்டும் மீண்டும் ஒரு வட்டத்தில் சுற்றி வருவதற்கு மட்டுமே உதவி புரியூம்.

பத்து அல்லது இருபது வருடங்களுக்கு முன்பு ஒரு மனிதர் ஒரு கொலைகாரராக இருந்திருக்கலாம். மனித உரிமை மீறியவராறக இருந்திருக்கலாம். அன்று இவருக்கு நண்பர் சிலராக இருந்திருக்கலாம். பலரின் எதிரியாக இருந்திருக்கலாம். ஆனால் இன்று சிறந்த பத்திரிகையாளராக இருக்கலாம். சிறந்த எழுத்தாற்றல் கொண்டராக இருக்கலாம். பலரின் நண்பராக இருக்கலாம். சிலரின் எதிரியாக மட்டும் இருக்கலாம். இப்படி பல மாற்றங்கள் நடைபெற்றிருக்கலாம். ஆனால் இந்த மனிதர் சில காலங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டிருந்தால் இன்று காண்கின்ற பன்முக ஆற்றலுள்ள மனிதரைக் கண்டிருக்கமாட்டோம். சிறந்த தமிழ் பத்திரிகையாளர் அல்லது ஆய்வாளர் அல்லது அரசியல் செயற்பாட்டாளர் ஒருவரை அவரது பல ஆற்றல்களை அறியாமலே இழந்திருப்போம். இப்படி எத்தனை ஆற்றல் கொண்டவர்களை அவர்களது ஆற்றல்களை அறியாமலே இன்றுவரை நாம் கொலை செய்து கொண்டிருக்கின்றேம். இதற்கு காரணம் குறிப்பிட்ட ஒரு கணத்தில் நமக்கு எதிரியாக அல்லது நமது கருத்துக்கு எதிர் கருத்து உடையவராக அவர் இருந்தது மட்டுமே.

ஒருவரை கொலை செய்வதற்கு நமக்கு அதிகாரம் தந்தது யார்? நாம் பிறந்தது எந்த ஒரு அதிகாரத்தின் கட்டளைப்படியூம் அல்ல. அது இயற்கை நிகழ்வூ. நமது இறப்பும் ஒரு இயற்கை நிகழ்வாக இருப்பது தான் நியாயமானது. இந்த இடைப்பட்ட காலத்தில் நாம் வாழும் வாழ்க்கை இப் பிரபஞ்ச காலத்துடன் ஒப்பிடும் பொழுது ஒரு சில கணங்களே. இக் கணங்கள் மட்டுமே இயற்கை நமக்களித்த ஆற்றலை முழுமையாக வெளிப்படுத்துவதற்கான நேரம். ஆகவே ஓவ்வொருவருக்கும் கிடைத்திருக்கின்ற இந்த நேரத்தை மதித்து அவரவர் ஆற்றலுக்கு ஏற்ப வாழ்வதை மதிப்பது தான் சிறந்த மனிதப் பண்பு. இந்தப் பண்புக்கு பின் தான் எந்தக் கொள்கையூம் கோட்பாடும் முக்கியத்துவம் பெறும். இவ்வாறான எதிர்பார்ப்பை அதிகாரத்திலுள்ளவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. ஆனால் ஆகக் குறைந்தது சமூக மாற்றத்திலும் மனித மேம்மாட்டிலும் அக்கறையூள்ள மனித விடுதலைக்காகவூம் சுதந்திரத்திற்காகவூம் செயற்படுகின்றவர்களிடம் எதிர்பார்க்கலாமலலவா?

ஆரோக்கியமான ஆக்கபூர்வமான எதிர்காலத்திற்குத் தேவை நம்மில் மாற்றம். இயந்திரத்தனமான செயற்பாட்டிலிருந்து பிரக்ஞையான செயற்பாட்டிற்கான பரிணாமவளர்ச்சி இன்று மனிதர்களாகிய நமக்குத் தேவைப்படுகின்றது. பிரக்ஞை இல்லாத எந்த செயற்பாடும் அழிவூக்கே வழிவகுக்கும். நம் முகமூடிகளை கழற்றி எறியாதவரை அதனுடாகப் பார்ப்பதை நிறுத்தாதவரை மனித சமூக மாற்றம் எல்லாம் கனவாகவே இருக்கும். இது துரரதிர்ஸ்டமானது. நம் உள்ளே ஆக்கம் அழிவூ என்ற இரண்டு ஆற்றல்களும் உள்ளன. இவற்றை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பமும் நம்முன் ஒவ்வொரு கணமும் உள்ளது. தெரிவூ நம்முடையது. இத் தெரிவின் அடிப்படையிலான நமது செயலிலையே விளைவூம் தங்கியூள்ளது. சரியானதை எவ்வாறு தெரிவூ செய்வது என்பது தான் நம் முன் இருக்கின்ற சவால்.

மழையாக வருகின்றேம்
ஊற்றாகப் பிறக்கின்றேம்
ஆறு போல் வாழ்கின்றேம்
சமுத்திரத்தில் சங்கமிக்கின்றேம்…
இறுதியாக……

மீராபாரதி
 கொலை செய்யப்பட்ட ஒருவரின் நினைவாக 2005ம் எழுதப்பட்டது.

 

  • கருத்துக்கள உறவுகள்

முன்பெல்லாம் சாமிகள் அமைதியை நிலைநிறுத்த உழைப்பார்கள்.

தற்பொழுது அமைதியைக்கெடுத்து 

தம்மை முன்னிலைப்படுத்துதலே நடக்கிறது :(

எதோ கொலை செய்யபட்டவர் ஊடகவியலராகவும் இருந்திருக்கலாம்.

 

அவரை யரோ எதிரியாக கண்டிருந்திருக்கலாம்.

 

யாரோ சிலரின் அனுமானத்தில் அவர் துரோகியாக கணிக்கப்பட்டிருந்திருக்கலாம்.

 

அவர் எழுத்தாளராக இருந்திருந்தால் தனது செய்கைகளின் பலா பலன்களை நன்கும் அறிந்திருந்திருக்கலாம்.

 

அவர் ஒரு கொலை செய்யப்பட்டதற்கு இந்த கட்டுரை எழுதி 8 வருடங்களாக அதை திரும்ப திரும்ப பிரசுரிக்கிறோம்.

 

அது ஒரே ஒருவர்.

 

இதை 400,000 X2 ஆக திருப்பி பதிவதால் மட்டுகே அரசு கொண்ற அத்தனை பேரின் உயிரையும் 2005 செந்தவரின் உயிருக்கு சமனானதாக மாற்றலாம். 

 

ஆனால் அதில் இறந்தவர்கள் ஒருவரின் எதிரியும் இல்லை.

 

அவர்களை யாரும் ஒரு தடவையேனும் துரோகிகளாக கண்டதும் இல்லை.

 

அவர்கள் தம்மை கொலையாளிகள் கொல்லும் போது ஏன் தங்களைக் கொல்கிறார்கள் என்பதை விளங்கவுமில்லை.

 

இந்த செய்தியை அந்த கொலையாளிகள் விளங்க வைக்க வேண்டுமால் இந்த கட்டுரையை சிங்களத்தில்  பிரசுரிக்க வேண்டும்.

 

சிங்களத்தில் 400,000 X 2 தடவைகளாவது பிரசுரிக்க வேண்டும்.

 

ஒருவர் மீது இன்னொருவருக்கு இருக்கும் வன்மை அவரின் எதிரி மீதி இருக்கும் அன்பாக கட்டுரை எழுதி அதை மனிதம் ஆக்க முடியுமா?

 

புலிகளின் மீது வைக்கும் வன்மமா மனிதம். அல்லது புலிகளின் எதிரிகள் மீது வைக்கும் அன்பா மனிதம்.

 

அல்லது 400,000 கொலைகலை ஒதுக்கி வைப்பதா மனிதம்?

மீராபாரதி,தொடர்ந்து எழுதுங்கள் .வன்முறையற்ற ஒரு சமுதாயம் உருவாக்கவேண்டியகட்டயத்தில் இருக்கின்றோம் .அதை கறை படியாத கைகளால் தான் செய்யமுடியும் .

தமது இருப்பும் பிழைப்பும் பற்றி மட்டுமே  சிந்திப்பவர்கள் எதையம் குழப்ப நினைப்பார்கள் ,அவர்களை கருத்தில் எடுக்கவேண்டாம் . தொடருங்கள் .

மீராபாரதி,தொடர்ந்து எழுதுங்கள் .வன்முறையற்ற ஒரு சமுதாயம் உருவாக்கவேண்டியகட்டயத்தில் இருக்கின்றோம் .அதை கறை படியாத கைகளால் தான் செய்யமுடியும் .

தமது இருப்பும் பிழைப்பும் பற்றி மட்டுமே  சிந்திப்பவர்கள் எதையம் குழப்ப நினைப்பார்கள் ,அவர்களை கருத்தில் எடுக்கவேண்டாம் . தொடருங்கள் .

 

தங்களின் கறைபடியாத வாயால் வாழ்த்துக்கள். நிச்சயமாக வன்முறை அற்ற சமுதாயம் மலரும். <_< 

 

பழிவாங்குகிறேன் என்று நினைத்து வாழ்த்துகிறீர்கள். ஆனால் அது POLTE ஆக இருந்திருந்தால் மனதார நினைப்பதின் படி அழிந்திருந்திருக்கும். நீங்கள் பழிவாங்குவதாக நினைப்பது PLOTE அல்ல.

 

பழி வாங்க தவிக்கும் உங்கள் பிரசன்னத்தால் திரியை கறை படியாமல் காக்க பொறுமை காத்திருந்திருக்கலாம்.  :huh:

Quote:"பத்து அல்லது இருபது வருடங்களுக்கு முன்பு ஒரு மனிதர் ஒரு கொலைகாரராக இருந்திருக்கலாம். மனித உரிமை மீறியவராறக இருந்திருக்கலாம். அன்று இவருக்கு நண்பர் சிலராக இருந்திருக்கலாம். பலரின் எதிரியாக இருந்திருக்கலாம். ஆனால் இன்று சிறந்த பத்திரிகையாளராக இருக்கலாம். சிறந்த எழுத்தாற்றல் கொண்டராக இருக்கலாம். பலரின் நண்பராக இருக்கலாம். சிலரின் எதிரியாக மட்டும் இருக்கலாம். இப்படி பல மாற்றங்கள் நடைபெற்றிருக்கலாம். ஆனால் இந்த மனிதர் சில காலங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டிருந்தால் இன்று காண்கின்ற பன்முக ஆற்றலுள்ள மனிதரைக் கண்டிருக்கமாட்டோம். சிறந்த தமிழ் பத்திரிகையாளர் அல்லது ஆய்வாளர் அல்லது அரசியல் செயற்பாட்டாளர் ஒருவரை அவரது பல ஆற்றல்களை அறியாமலே இழந்திருப்போம். இப்படி எத்தனை ஆற்றல் கொண்டவர்களை அவர்களது ஆற்றல்களை அறியாமலே இன்றுவரை நாம் கொலை செய்து கொண்டிருக்கின்றேம். இதற்கு காரணம் குறிப்பிட்ட ஒரு கணத்தில் நமக்கு எதிரியாக அல்லது நமது கருத்துக்கு எதிர் கருத்து உடையவராக அவர் இருந்தது மட்டுமே"

 

 இப்ப நல்ல மனிதராக திருந்திவிட்டீர்களா?  ஆமா ஆமா கறை படியாத கைகளால் தொடருங்கள் பணையை, ஜால்ரா போட ஒரு கூட்டமே இருக்கிறம். கொத்து கொத்தாக சிங்கள நாய்கள் கொல்லும் போது மட்டும் உங்கள் குரல்கள் ஒலிக்கவில்லை, இப்ப வேள்வி நடத்தி வேதம் ஓதுகின்றீர்கள், இந்த நஞ்சுப்புகையில் மயங்கியவர்கள் புதிய வன்முறையற்ற சமுதாயத்தை உருவாக்க சொல்கின்றார்கள், காலமடா இது. வன்முறையை தூண்டுபவனைவிட்டுவிட்டு, அடக்க நினைப்பதுதான் வேடிக்கை

 

"இத்தகைய நிலையை சிவராம் பின்வருமாறு விபரித்தார். ஒருவர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகின்றார். கைதின் பின் அவர் கடுமையான சித்திரவதைக்கு தொடர்ச்சியாக உட்படுகின்றார். இப்போது அவரின் சிந்தனை இரண்டு விடயங்கள் பற்றியதாகவே இருக்கும். ஒன்று அடுத்த சுற்று சித்திரவதை எப்போது தொடங்கும் என்பது. மற்றையது தன்னைக் காப்பாற்ற யாராவது வரமாட்டார்களா என்பது. இந்த உதாரணத்தை ஒரு மக்கட் கூட்டத்திற்கும் பொருத்திப் பார்க்க முடியும். 
பொதுவாக இப்படியான பொழுதுகளில் யாராவது ஒருவர் சித்திரவதையாளர் மத்தியில் இருந்தே உதவுபவர் போன்று வருவார். சித்திரவதைக்கு ஆட்பட்டவர் அவரைக் கடவுளுக்குச் சமமாக மதிப்பார். 

தமிழ் மக்கள் மனநிலையில் இப்போது அவ்வாறே இருக்கின்றனர். இப்பொழுது அமெரிக்கவும், ஐ.நா. தீரமானமுமே அந்த நல்ல மனிதர். ஆனால், அந்த நல்ல மனிதர் தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலையில் சம்பந்தப்பட்டவர் என்பதை மறக்கக் கூடாது. ஐ.நா. தீரமானம் மீது தமிழ் மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். ஆனால் அது எதனையும் அவர்களுக்குப் பெற்றுத் தராது. 

தமிழ் மக்கள் தோற்கடிக்கபட்டதாகத் தங்களைக் கருதி வருகின்றனர். உண்மையில் அவர்கள் தோற்கடிக்கப்படவில்லை. அவர்கள் அழிக்கப் பட்டிருக்கின்றார்கள் என்பதே உண்மை. எனவே அவர்கள் தமது மனத்தைத் தளரவிடக் கூடாது. 

சிவராம் அவர்களை எதிரிகள் அழிக்கக் காரணம் அவர் ஒரு ஊடகவியலாளர் என்பதற்காக மட்டுமல்ல. அவர் தமிழ் மக்கள் மத்தியில் வாழ்ந்த ஒரு தலைசிறந்த புத்திஜீவி. தமிழ் மக்கள் கூட அவரைச் சரிவரப் புரிந்து கொள்ளவில்லை. மக்கள் மத்தியில் அரசியல் செய்வதற்கான இடைவெளியை இல்லாமற் செய்வதும் கிளர்ச்சித் தடுப்பு நடவடிக்கையின் ஒரு தந்திரோபாயமே. அதன் ஒரு அங்கமாகவே சிவராம் கொல்லப் பட்டார். "



http://www.puthinappalakai.com/view.php?20130501108192

 

மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், தமிழ்-முஸ்லிம் மக்களிடையே எவ்வாறு பகைமையுள்ள முரண்பாடுகளைத் தோற்றுவித்தது என்பது குறித்து ‘ தராக்கி’ சிவராம் அவர்கள் முன்வைத்த ஆய்வுகளை, வடக்கில் வாழும் தமிழ் பேசும் மக்கள் கவனத்தில் கொள்ளல் வேண்டும்.

 

http://sankathi.com/dailynews/?p=5446

 

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

மரணம்- இழப்பு- ஒரு அனுபவம் – செழியன்

chiliayn.jpg?w=200&h=300அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்.

மீராபாரதி இரண்டுவாரங்களுக்கு முன்னர் ஒரு மின்னஞ்சல் அனுப்பி இருந்தார்.

மரணித்தவர்களை நினைவு கூறல்…

அஞ்சலி செய்வதற்கான உரிமையை வலியுறுத்தல்…

இழந்தவர்களை ஆற்றுப்படுத்தல்…

இவர்கள் வாழ்வை மேப்படுத்தல்

போன்ற கருத்துக்களை வலுயுறுத்துவதை நோக்கமாகக் கொண்டு “மரணம் இழப்பு மலர்தல்” என்ற நூல் வெளியீட்டை மே மாதம்  19ம் திகதி நிகழ்த்த விரும்புகின்றேன். அதில் கலந்து கொண்டு உரையாற்ற முடியுமா என்று?

புத்தகத்தை வாசிக்க முன்னரே எனக்குள் இந்த விடயங்கள் பெரிய உற்சாகத்தை… ஒரு வித நம்பிக்கையை … பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. பேசப்பட வேண்டிய பொருள்… இன்னமும் நமக்குள் பேசப்படாத பொருள். அதனால் உடனடியா சம்மதம் தெரிவித்துவிட்டேன்.

 

புத்தகத்தை முழு மூச்சில் வாசித்து முடித்தேன். வாசித்து முடித்து விட்டு புத்தகத்தை தூக்கி ஒரு மூலையில் போட்டு விட்டு போய்விடலாம். ஆனால் இந்தப் புத்தகம்  ஏற்படுத்திய தாக்கத்தை தூக்கிப் போட்டுவிட்டு போகவே முடியாது.

நாம் எல்லோருமே பிறந்தில் இருந்து மரணத்தை நோக்கியே பயணம் செய்கின்றோம். அது இயற்கையாகவும் வரும்… செயற்கையாகவும் வரும்.

 

முதன் முதலாக யாருடைய மரணம் உன்னைப் பாதித்தது? என்ற கேள்வி இந்தப் புத்தகத்தை வாசிக்கின்ற ஒவ்வொருவருக்கும் வரும்.

 

எனக்கு முதன் முதலாக கவலை வந்தது அப்பா கவலைப்பட்டதைப் பார்த்து. சமர்செட் தோட்டத்தில் ஆசிரியர் அவர்.

பள்ளி முடிந்து நானும் தம்பிமாரும் குளிப்பதற்காக பீலி என்று சொல்லப்படுகின்ற இயற்கையான நீர் விழுகின்ற இடத்திற்கு புறப்பட்ட போது அப்பா எங்களை எல்லாம் கவணிக்காமல் அன்றைய வீரகேசரியை எடுத்து தலையங்கத்தை பார்த்து விட்டு “ஓ” என்று சொல்லி கவலையோடு உச்சிகொட்டினார்.

 

அப்பா ஏன் கவலைப்பட்டார் என்று மனம் துடிதுடித்தது. குளித்து விட்டு வந்து வீரகேசரியை எடுத்து தலையங்கத்தைப் பார்த்தேன்.

 

“அறிஞர் அண்ணாவுக்கு மீண்டும் புற்று நோய்” என்று தலைப்பு செய்தியாக இருந்தது.

அன்று தான் முதன் முதலாக நான் பத்திரிகை வாசித்தது. பிறகு அது அப்பா வாசிக்கின்ற கல்கி, சுதந்திரன் பத்திரிகை என்று ஆகியது.

 

யார் இந்த அறிஞர் அண்ணா? என்று அம்மாவிடம் கேட்டேன். வீட்டில் மாட்டியிருந்து ஒரு பெரிய படத்தின் நடுவில் நின்று கொண்டிருந்தவரைக் காட்டி இவர்தான் பேரறிஞர் அண்ணா என்று சொன்னார்கள். சுற்றிவர பல பேருடைய படங்கள் இருந்தன. பிறகு பிறகு தெரிந்து கொண்டேன். கருணாநிதி, நெடுஞ்செழியன்…. என்று ஒரு படையே இருந்தது.

பிறகு ஒரு நாள் அப்பா அழுதார். அறிஞர் அண்ணா இறந்து விட்டார் என்று. அவருக்கு அந்த உரிமை அன்று இருந்தது.

மலைய தோட்டமான சமர்செட்டில் எங்கள் வீடு தனிமைப்பட்டு இருந்தது. கூக்குரல் போட்டாலும் யாருக்கும் கேட்காது. எங்களுக்கு பாதுகாப்பாக இருந்தது எங்கள் செல்லப் பிராணியான செல்வம் என்ற நாய். (செல்வம் அண்ணை தயவு செய்து மன்னிக்கவும்)

 

நாங்கள் குளிக்க போனாலும் கூடவரும். எமது முதல் நண்பர்களான ஐஸ்டின் அம்முண்டி வீட்டுக்கு விளையாடப் போனாலும் வரும். எங்கள் அப்பா இரவில் செல்லும் போதும் போகும்.

அப்படி ஒரு நாள் இரவு அப்பாவுடன் எங்கள் நாய் சென்றது.

சென்ற நாய் வரவில்லை…. அப்பா மட்டும் பதட்டதுடன் வந்தார்.

 

நான் நித்திரைக்காக சென்றிருந்தேன்.

அம்மாவுடன் கதைத்து விட்டு “தம்பி” என்று அப்பா என்னைக் கூப்பிட்டார். ஏதோ பிரச்சனை என்று எனக்கு தெரிந்தது.

“வாங்கோ ஒருக்கா… செல்வத்தை வேகமாய் போன கார் அடிச்சுப் போட்டுது. அதை தூக்கித்தான் கொண்டுவர வேண்டும்…”

உடனேயே நானும் அப்பாவும் அந்த இடத்திற்குச் சென்றோம். ஒரு மோட்டு சாரதியால் அடிபட்டு பேச்சு மூச்சில்லாமல்…இரத்தம் சிந்த அமைதியாக கிடந்தது எங்கள் அன்புக்குரிய நாய்.

 

அப்பா இரண்டு மூன்று தடவை பெயர் சொல்லிக் கூப்பிட்டார். பிறகு தொட்டுப்பார்த்தார்.

“தம்பி செத்துப் போச்சுதடா” என்றார்.

 

எனக்கு அழுகை அழுகையாக வந்து. ஒரு உயிருக்காக நான் அழுத முதல் அழுகை அது.

 

அப்பா எனது அழுகையை தடுக்கவில்லை. ஒரு உயிருக்காக அழுகின்ற உரிமை எனக்கு அப்போது இருந்தது.

எங்கள் நாயை ஒரு சாக்கில் தூக்கி வளர்த்தி இரண்டு பேருமாக தூக்கிக் கொண்டு வீடு வந்தோம்.

அடுத்த நாள் காலை எப்படியோ விடயம் அறிந்து ஐஸ்டினும் அம்முண்டியும் வந்து நாய்க்கு முன்னால் குந்தி இருந்து அழுது கொண்டிருந்தார்கள்.

 

ஒரு நாய்காக தமிழன் நானும் சிங்கள நண்பர்கள் இரண்டு பேரும் அழுவதற்கான உரிமை அன்று இருந்தது.

இன்று இருக்கிறதா?

 

போரில் இறந்து போன தன்னுடைய மகளுக்காக ஒரு தாய்க்கு அழுகின்ற உரிமை அவளுக்கு இருக்கின்றதா?

 

மகளுக்காகää மகனுக்காக ஒரு விளக்கைää ஒரு மெழுகுதிரியை கொழுத்திவைக்கும் உரிமை ஒரு தாய்க்கு இருக்கின்றதா?

இறந்து போன பிள்ளைக்காக உறவினர்களை கூட்டி ஒரு நினைவஞ்சலி செய்கின்ற உரிமை தமிழர்களுக்கு இருக்கின்றதா?

இந்தக் கேள்விகளை எழுப்பிச் செல்கின்றது இந்த நூல்.

 

என்னை மிகவும் உணர்வு ப10ர்வமாக இந்த நூல் பாதித்துள்ளது. நிச்சயமாக எல்லாரையுமே பாதிக்கும்.

 

இலங்கைத் தமிழர்களின் வரலாற்றில் போராட்டம் பற்றிய பல புத்தகங்கள் வந்துள்ளன. இந்த வரிசையில் வந்தது தான் இது. ஆனால் இது புதிது. நண்பர் மீராபாரதிக்கு எனது வாழ்துக்கள்.

மீராபாரதிக்கு இந்த விதையை விதைத்தவர் அவருடைய அப்பா என்றே என்னால் கருதமுடிகின்றது.

இன்று கனடாவில் குடும்பத்தில் நாலு பேர் இருந்தால் நால்வருமே…. நான்கு கிரகங்களில் வாழ்வதைப் போல வாழுகின்றோம்.

 

ஒரு பிள்ளை தொலைக் காட்சியில் வாழும். மனைவி இந்திய நாடகங்களில் வாழ்வார். இன்னொரு பிள்ளை தொலை பேசியில் வாழும். அடுத்த பிள்ளை இன்டநெட்டில் வாழும்.

மீராபாரதி…. மற்றும் எமது காலங்களில் எங்கள் அப்பா, அம்மா தான் எமது தொலைக் காட்சி, தொலை பேசி, நாடகம், இன்டநெட்.

 

அதனால் அவர்களிடம் இருந்து கற்றுக் கொண்டோம். அவர்கள் பாதையை இன்னமும் செப்பனிட்டு தொடர்கின்றோம்.

அன்பான நண்பர்களே மீராபாரதி சொல்வது போல நீங்கள் எதற்காக முதல் அழுதீர்கள் என்று சிந்தியுங்கள். பின்னர் இன்றைய சமூகத்தில் அழுவதற்கான உரிமை இருக்கின்றதா? என்று உங்களுக்குள் ஒரு கேள்வியை கேளுங்கள். கூடவே இந்த புத்தகத்தை வாசியுங்கள்.

 

அன்புடன்

செழியன்

19.05.2013

செழியன் படம் – நன்றி – Tamil News ekuruvi

 

 

 

"நானும் கூட ராஜாதானே நாட்டு மக்களிலே அதில் நாணம் என்ன வெக்கம் என்ன காசு கேட்பதிலே. "ஆயிரம் பொய்யை சொல்லித்தன்னும் ஒரு கலியாணத்தை கட்டு" - இது ஒரு  பழமொழி . "எதை செய்தென்றாலும் பணம் தேடு"  இதுதான் புது மொழி.

 

இன்றைய கால நாகரீகம், நித்தியானந்தா சமய சொற்பொழிவாற்றினால்கூட  அதில் "தமிழ்", "உரிமை", "போராட்டம்", என்ற சொற்களை மறக்காமல் சேர்த்துக்கொண்டுவிடுவது வழமையாகிவிட்டது.

 

எது எப்படியாயினும் மரணத்தை பற்றி சொல்வதனால் எப்படி மரணித்திற்காக துக்கிக்க உரிமை இருக்கிறது என்று சொல்லாமல் போகலாம். அதை சொன்னால் எப்படி தமிழ் மக்களுக்கு துக்கிக்க உரிமை இல்லை என்று கூறலாம். இதனால்தான் புலிகளால் கொல்லப்பட்டவர்களுக்கு துக்கிக்க உரிமை உண்டு என்பது சொல்ல வேண்டி எழ நேர்கிறது.

 

ஆனால் இந்து சமயம் மரணத்திற்காக துக்கிக்கும் உரிமை மறுக்கிறது. அதன் நிலைப்பாடு மரணம் வெறும் இயற்கையானது மட்டும் அல்ல, அல்லது தவிர்க்க முடியாது மட்டும் அல்ல. உயிர் வளர, உயிர் முதிர்ச்சி அடைய , உயிர் மோட்சத்தை அடைந்து  விடுதலை காண அது எண்ணிலடங்காத் தடவைகள் மரணிப்பது அவசியம்.

 

எனவே மரணத்தில் இரண்டு கருத்துக்கள் இருக்கிறது. அதாவது மரணத்தை விரும்பி ஏற்பவன் சமயவாதி; போதகன்; பிரமச்சாரி.  மரணத்தில் துக்கித்து நினைவாஞ்சலி செலுத்துபவன் சம்சாரி. இதில் நினைவாஞ்சலி உரிமைக்காக வாதாடுபவன் அரசியல்வாதி.

 

ஆனால் தன்னை சமயவாதியாக காட்டி  புலிகளால் வந்த மரணத்துக்கு துக்கிக்க உரிமை கேட்டு அதை நினைவாஞ்சலியுடன் தொடுத்து இதிலிருந்து "தமிழர், போராட்டம், உரிமை" எல்லாவற்றையும் ஒரே தடவையில் வெளியே இழுத்து எடுப்பவன் மந்திர வாதி. எரிகிற வீட்டில் நெருப்பெடுத்து விளக்குக்கொழுத்தி வைத்து புத்தகம் எழுதி பணம் பண்ணத்தெரியும் பொருளாதாரவாதி.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

விதி

 

கொஞ்சம் விஷயம் தெரிந்தவர்களுக்கு மட்டும் என்று பதிந்திருக்கவேண்டும் .

கொஞ்சம் விஷயம் தெரிந்தவர்களுக்கு மட்டும் என்று பதிந்திருக்கவேண்டும் .

 

எழுத ஒன்றும் இல்லாத ஒரு ஆள், தவறி இங்கே வந்து விழுந்து விட்டீர்கள் போலிருக்கு. பரவாயில்லை. இனி கவனமாக தலைப்புகளை படியுங்கள் உள்ளெ விழ முதல். <_<

Edited by மல்லையூரான்

கொஞ்சம் விஷயம் தெரிந்தவர்களுக்கு மட்டும் என்று பதிந்திருக்கவேண்டும் .

 

 

அதுசரி நீங்கள் தலைப்பை பார்த்து திரி மாதிரி வந்துவிட்டீர்கள். தலைப்பை விளக்கமா போடுங்கள் மீராஆஆஆஆ.....

 

இப்படிதான் நீங்கள் பலதடவை முன்னர் லண்டனில் இருந்து ஓடினீர்கள் தலைப்பை பார்த்து பின் திரும்ப ஓடிவிட்டீர்கள். நுனிப்புல் மேய வெளிக்கிட்டால் இப்படிதான். அறிவு ஞானியே, எங்கே உங்கள் அக க் கண்களை திறந்து உங்கள் உள் மனதை ஆரயுங்கள் நீங்கள் செய்வது சரிதானா என்று

 

இந்த "கொஞ்சம் விஷயம்" த்தை நீங்க வைத்துக்கொண்டு போற ஆட்டம் தங்க முடியலையடா சாமி :D  :D  :icon_mrgreen:  :icon_mrgreen:

கொஞ்ச விஷயம் என்று போட்டது அதுதான் ,

உங்களுக்கு என்றால் கொஞ்சும் விஷயம் என்று போட்டிருப்பன் .

கொஞ்ச விஷயம் என்று போட்டது அதுதான் ,

உங்களுக்கு என்றால் கொஞ்சும் விஷயம் என்று போட்டிருப்பன் .

 

இதோ பாருடா இத்தனை நாளா கொஞ்சாமல் இருந்தவரை, பாவம் எங்கே போகவோ.... :D  :icon_mrgreen:

 

அட ஒத்துக்கொண்டுவிட்டீர்கள் கொஞ்ச விஷயமென்று உங்களைதான் போட்டனீர்களென்று, நன்றி இப்பவாவது ஒத்துக்கொண்டீர்களே :icon_mrgreen:  :icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.