Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பொஸ்டன் குண்டும் புலிகளின் குண்டும் – ஒப்பிடுகிறார் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா

Featured Replies

பொஸ்டன் குண்டும் புலிகளின் குண்டும் – ஒப்பிடுகிறார் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா [ வியாழக்கிழமை, 18 ஏப்ரல் 2013, 00:06 GMT ] [ கார்வண்ணன் ] major-general-savendra-silva.jpgஅமெரிக்காவின் பொஸ்டனில் வெடித்த குண்டுகள், விடுதலைப் புலிகளால் 1980களின் தொடக்கத்தில் சிறிலங்கா இராணுவத்தினர் மீதான தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்பட்ட குண்டுகளுக்கு ஒப்பானது என்று சிறிலங்கா இராணுவத்தின் மூத்த அதிகாரியான மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

நியுயோர்க்கில் ஐ.நாவுக்கான சிறிலங்கா தூதுவராக உள்ள அவர், பொஸ்டனில் வெடித்த குண்டுகள் தொடர்பாக கொழும்பு ஊடுகம் ஒன்றுக்குத் தகவல் வெளியிடுகையில், 

“பொஸ்டன் குண்டுத் தாக்குதலுக்கு நேரக்கணிப்புடன் கூடிய, கரிமருந்து துகள், ஆணிகள், சிறிய இரும்புக் குண்டுகளை உள்ளடக்கிய இரண்டு மேம்படுத்தப்பட்ட வெடிமருந்துக் கருவிகள் பயன்படுத்தப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக ஊடகத் தகவல்கள் கூறுகின்றன. 

ஈழப்போரின் போது, 1980களின் தொடக்கத்தில் விடுதலைப் புலிகள், நட்டுகள், போல்ட்களை உள்ளடக்கிய இத்தகைய வெடிகுண்டுகளை பயன்படுத்தியிருந்தனர். 

பொஸ்டன் குண்டுத் தாக்குதல் தொடர்பான ஊடக அறிக்கைகள், விடுதலைப் புலிகளாலும், சிறிலங்கா இராணுவத்துடன் போரிட்ட ஏனைய பல தீவிரவாத குழுக்களாலும், ஆரம்ப காலத்தில் தயாரிக்கப்பட்ட குண்டுகளைத் தான் நினைவுபடுத்துகின்றன. 

சில ஆண்டுகளுக்குப் பின்னர், விடுதலைப் புலிகள் துல்லியமான தொழில்நுட்பத்தை கொண்டிருந்தனர். 

மேம்படுத்தப்பட்ட வெடிபொருள் கருவிகளால் மூன்று பத்தாண்டுகளில் நாம் பயங்கரமான அனுபவங்களை பெற்றிருக்கிறோம். 

சிறிலங்கா படையினருக்கும் பொதுமக்களுக்கும் அதிகளவு சேதங்களை ஏற்படுத்தும் வகையில் அவர்கள் பெருமளவில் போல்ட் மற்றும் நட்டுகளை, தமது குண்டுகளில் பயன்படுத்தினர். 

விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் குறித்த பரிசோதனைகள், இப்போதைய அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கு உதவ முடியும். 

பொஸ்டன் மரதன் போட்டியின் முடிவிடத்தில் வைக்கப்பட்டிருந்த, ஆணிகள், போல் பெயாரிங்குகள் நிரப்பிய பிரசர் குக்கரே வெடிக்க வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

விடுதலைப் புலிகளால் பிரசர் குக்கர்கள் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்படவில்லை. 

ஆனால், குண்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட உள்ளீடுகள் விடுதலைப் புலிகளாலும் பயன்படுத்தப்பட்டவை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.com/view.php?20130418108124

  • கருத்துக்கள உறவுகள்

அத்துடன் இன்னொரு விசயத்தையும், இந்தப் போர்க்குற்றவாளி, அமெரிக்காவுக்குச் சொல்ல வேணும்!

'விடுதலைப் புலிகள், செய்யும் குண்டுகளில், அவை வெடிக்கும் போது, அதிக புகையும், பெரிய சத்தமும் வரும்! :D

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் பொஸ்டனில் வெடித்த குண்டுகள், விடுதலைப் புலிகளால் 1980களின் தொடக்கத்தில் சிறிலங்கா இராணுவத்தினர் மீதான தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்பட்ட குண்டுகளுக்கு ஒப்பானது என்று சிறிலங்கா இராணுவத்தின் மூத்த அதிகாரியான மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

இக்குண்டுகள் இலங்கை அரசால் தமிழ் மக்கள் மீது போடப்பட்ட குண்டுகளுடன் எந்த வகையிலும் ஒப்பிடமுடியாது.

'விடுதலைப் புலிகள், செய்யும் குண்டுகளில், அவை வெடிக்கும் போது, அதிக புகையும், பெரிய சத்தமும் வரும்! :D

குண்டைச் செய்தவர் இராணுவ தொழில்நுட்ப நிபுணராக இருக்கவேண்டும். அமெரிக்காவின் கடும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் கிடைக்கக்கூடிய இரசாயன‌ங்களைப் பாவித்து குண்டைச் செய்திருக்கிறார் போல. வலிமைகுறைந்த இரசாயனம், அல்லது பற்றாக் குறையை நிவர்த்தி செய்ய பிரஷர் குக்கரைப் பயன் படுத்தியிருக்கிறார். கிளெமோர் போல் வடிவமைத்திருக்கிறார்.
 
புகைக்கு காரணம் பிரஷகுக்கர் என்ற படியால் இரசாயனங்கள் முற்றாக தகனம் அடைந்திராமை. 
  • தொடங்கியவர்

அவர் புலிகளை இந்த பயங்கரவாதிகளுடன் ஒப்பிடுகிறாரா அல்லது அமெரிக்காவை தங்களுடன் ஒப்பிட்டு 35 வருடங்கள் தங்களுக்கு பின்னே என்று நக்கல் அடிக்கிறாரா?

அமெரிக்கர் கொம்பை பிடி என சங்கைப் பிடித்தவர்கள். தங்களுக்கு உபத்திரவம் கொடுத்த அல்கைடாவை விட்டு விட்டு இலங்கை போய் புலிகளை பிடித்தவர்கள். அதனால் இப்போ சவேந்திரா அல்கைடாவை பிடிப்பது எப்படி என்று அமெரிக்கர்களுக்கு சொல்லிக்கொடுக்கிறார். இனிதன்னும் அமெரிக்கர்கள் சவேந்திராவை கேட்டு கொம்பை பிடி என்றால் கொம்பை பிடித்து சாமியை சரியாக காவுவார்களாக. 

அகிலம் முழுவதையும்  ஆட்டம் ஆட்டும் அல்கைடாவை மேற்குநாடுகளுக்கு தெரியாமல் புலிகளை தெரிந்தது ஒரு வகை காமளைக்கண். :(

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

இக்குண்டு வெடிப்பை சிறீலங்கா முஸ்லீம் அடிப்படைவாதிகளால் வளர்க்கப்பட்டும்.. சிறீலங்கா அரசு சார்ப்பு அல்-குவைடா அமைப்பு நடத்தியதாக ஊடகங்கள் சந்தேகம் வெளியிட்டுள்ள நிலையில்..

விடுதலைப்புலிகளின் போர் தந்திரோபாயங்களை தளபாடங்களை.. சிறீலங்கா இராணுவமும்.. அதன் பாதுகாப்புச் செயலரும் விற்று காசாக்கி வரும் நிலையில்...

இந்தப் போர்க்குற்றவாளியின் இந்த அறிவிப்பின் பிரகாரம்.. போஸ்டன் குண்டுவெடிப்பில் சிறீலங்காவில் பங்களிப்பு முக்கியமாக இருந்துள்ளமை தெளிவாகிறது. அந்த வகையில் FBI இவரையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.

மேலும்.. இந்த வகையான குண்டுகளை தயாரிக்கும் பாரம்பரிய வழிமுறைகள்.. இன்று இணையத்தளங்களில் பெருகி இருப்பதாக பிபிசியே சொல்கிறது. ஆனால்... சிறீலங்கா அரசோ.. இவற்றை சிறீலங்கா முஸ்லீம் அடிப்படைவாதிகளுக்கு விற்று காசாக்கி வருகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.

ஒரு பக்கம் பொதுபல சேனவினைப் பயன்படுத்தி.. முஸ்லீம் அடிப்படைவாதிகளைக் கிள்ளிக் கொண்டு எதிர்ப்பைக் காட்டுவது போல.. உலகின் கண்களில் மண் தூவிக் கொண்டு.. இன்னொரு பக்கம் சிறீலங்கா இராணுவத்தைக் கொண்டு அவர்களுக்கும் அல்குவைடாவிற்கும் சிறீலங்கா உதவி வருகின்றமை இந்த அறிக்கையின் மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது.

அண்மையில் கோத்தபாய விடுதலைப்புலிகளிடம் கைப்பற்றிய ஆயுதங்களை அநாமதேய குழுக்களுக்கு (பெரும்பாலும் அல்குவைடாவாக இருக்கலாம்) விற்று காசாக்கிய.. போது அந்தக் கப்பல் ஆயுதங்களுடன்.. அராபிக்கடலில் வைத்து பிடிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நிலமை இப்படி இருக்க.. இவர் தவளை மாதிரிக் கத்தி.. சிறீலங்காவை காட்டிக் கொடுத்தமைக்கு நன்றி சொல்லனும்... :D

குக்கர் குண்டுகள் என்றால் என்ன? தீவிரவாதிகள் அதை ஏன் பயன்படுத்துகிறார்கள்?

டெல்லி: பாஸ்டனில் பயன்படுத்தப்பட்ட பிரஷர் குக்கர் குண்டுகள் தெற்காசியாவில் சர்வ சாதாரணமாக பயன்படுத்தப்படுகிறது என்றும், அவற்றை தயாரிப்பதும் எளிது, அவற்றால் ஏற்படும் பாதிப்புகள் அதிகம் என்றும் இந்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

2006ம் ஆண்டில் மும்பை ரயிலில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் குக்கர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டன. இந்த சம்பவத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும் அதே ஆண்டு வாரனாசியில் 5 பேர் பலியான குண்டுவெடிப்பிலும் குக்கர் குண்டு தான் பயன்படுத்தப்பட்டது. முன்னதாக 2005ம் ஆண்டில் டெல்லியில் உள்ள சரோஜினி நகர் அருகே நடந்த குண்டுவெடிப்பிலும் குக்கர் குண்டுகள் தான் பயன்படுத்தப்பட்டன என்று நம்பப்படுகிறது.

இந்தியா தவிர பாகிஸ்தானில் 2010ம் ஆண்டு மார்ச் மாதம் நடந்த குண்டுவெடிப்பு, அதே ஆண்டில் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தை தாக்க முயன்றது, ஆப்கானிஸ்தானில் மேற்கத்திய ராணுவத்தை தாக்க குக்கர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டன. இருக்கமான மூடி கொண்ட குக்கரில் கன் பவுடர், மெட்டல் பொருட்கள், ஆணிகள், கூரான நுனி கொண்ட பொருட்கள் மற்றும் டெட்டனேட்டரை வைத்து மூடிவிடுகின்றனர். பின்னர் அதை தூரத்தில் இருந்தபடியே ரிமோட் மூலம் வெடிக்கச் செய்கின்றனர்.

குக்கர் குண்டு வெடிக்கையில் அதன் உள்ள மெட்டல் பொருட்கள், ஆணிகள் ஆகியவை பறந்து வந்து சம்பவ இடத்தில் உள்ளவர்கள் மீது பாய்கின்றன. குக்கர் குண்டை தயாரிக்க தீவிர பயிற்சி தேவையில்லையாம். குக்கர் குண்டை தயாரிப்பது எப்படி என்று இன்டர்நெட் மூலம் கூட அறிந்துகொள்ள முடியுமாம். உலோகத்தால் ஆன குக்கரில் உள்ள குண்டு வெடிக்கையில் குக்கர் தூள் தூளாகி பாதிப்பை ஏற்படுத்துகிறது. பாஸ்டன் மாரதான் போட்டியை குறி வைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் குக்கர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று எஃப்.பி.ஐ. தெரிவித்துள்ளது.

Read more at: http://tamil.oneindia.in/news/2013/04/18/india-what-are-pressure-cooker-bombs-why-do-terrorists-173623.html
 
இதில் சிங்கள அரச பயங்கரவாதிகளின் பங்களிப்பு இருக்கும் என்ற சந்தேகம் பயங்கரவாதி சவேந்திர சில்வாவின் கூற்றுக்களால் மேலும் வலுப்பெறுகிறது.

இலங்கையில் சிங்கள அரச பயங்கரவாதிகளின் ஆதரவுடன் சில இஸ்லாமிய பயங்கரவாத இலங்கையில் குழுக்கள் இயங்குவது வெகுகுகாலத்தின் முன்னரே உறுதி செய்யப்பட்ட விடயம். கிண்ணியா, மூதூர், காத்தான்குடி, ஓட்டமாவடி, கல்முனை, அம்பாறை, புத்தளம், மருதானை. பம்பலப்பிட்டி   போன்ற பல பகுதிகளில் இவர்களின் செயற்பாடுகள் அதிகமாக இருந்தது முன்னரே தெரிந்த விடயம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜெனரல் சவீந்திர சில்வாவை விசாரித்தால் மட்டுமே உண்மை வெளியே வரும். ஜெனரல் சவீந்திர சில்வாவே இந்த தாக்குதலை ஏற்பாடு செய்திருக்கலாம்.

குக்கர் குண்டுகள் என்றால் என்ன? தீவிரவாதிகள் அதை ஏன் பயன்படுத்துகிறார்கள்?

டெல்லி: பாஸ்டனில் பயன்படுத்தப்பட்ட பிரஷர் குக்கர் குண்டுகள் தெற்காசியாவில் சர்வ சாதாரணமாக பயன்படுத்தப்படுகிறது என்றும், அவற்றை தயாரிப்பதும் எளிது, அவற்றால் ஏற்படும் பாதிப்புகள் அதிகம் என்றும் இந்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

2006ம் ஆண்டில் மும்பை ரயிலில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் குக்கர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டன. இந்த சம்பவத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும் அதே ஆண்டு வாரனாசியில் 5 பேர் பலியான குண்டுவெடிப்பிலும் குக்கர் குண்டு தான் பயன்படுத்தப்பட்டது. முன்னதாக 2005ம் ஆண்டில் டெல்லியில் உள்ள சரோஜினி நகர் அருகே நடந்த குண்டுவெடிப்பிலும் குக்கர் குண்டுகள் தான் பயன்படுத்தப்பட்டன என்று நம்பப்படுகிறது.

இந்தியா தவிர பாகிஸ்தானில் 2010ம் ஆண்டு மார்ச் மாதம் நடந்த குண்டுவெடிப்பு, அதே ஆண்டில் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தை தாக்க முயன்றது, ஆப்கானிஸ்தானில் மேற்கத்திய ராணுவத்தை தாக்க குக்கர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டன. இருக்கமான மூடி கொண்ட குக்கரில் கன் பவுடர், மெட்டல் பொருட்கள், ஆணிகள், கூரான நுனி கொண்ட பொருட்கள் மற்றும் டெட்டனேட்டரை வைத்து மூடிவிடுகின்றனர். பின்னர் அதை தூரத்தில் இருந்தபடியே ரிமோட் மூலம் வெடிக்கச் செய்கின்றனர்.

குக்கர் குண்டு வெடிக்கையில் அதன் உள்ள மெட்டல் பொருட்கள், ஆணிகள் ஆகியவை பறந்து வந்து சம்பவ இடத்தில் உள்ளவர்கள் மீது பாய்கின்றன. குக்கர் குண்டை தயாரிக்க தீவிர பயிற்சி தேவையில்லையாம். குக்கர் குண்டை தயாரிப்பது எப்படி என்று இன்டர்நெட் மூலம் கூட அறிந்துகொள்ள முடியுமாம். உலோகத்தால் ஆன குக்கரில் உள்ள குண்டு வெடிக்கையில் குக்கர் தூள் தூளாகி பாதிப்பை ஏற்படுத்துகிறது. பாஸ்டன் மாரதான் போட்டியை குறி வைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் குக்கர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று எஃப்.பி.ஐ. தெரிவித்துள்ளது.

Read more at: http://tamil.oneindia.in/news/2013/04/18/india-what-are-pressure-cooker-bombs-why-do-terrorists-173623.html

11nlook5.jpg

குக்கர் குண்டு இதைச் செய்யுமா ?

  • கருத்துக்கள உறவுகள்

11nlook5.jpg

குக்கர் குண்டு இதைச் செய்யுமா ?

http://en.wikipedia.org/wiki/2006_Mumbai_train_bombings

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ சொல்ல வாறார்

ஆனால் முடியல

வெற்றிக்களிப்பும் பயமும் சேர்ந்த அறிக்கை

புலிகளின் வரலாறு இனி எதிரியாலும் எழுதப்படும் போலுள்ளது

நன்றி நுணா.
 
குக்கர் குண்டுக்கு இவ்வளவு சக்தி.. பெரிய சைஸ் குக்கராக்கும்.  :D
 
தகனமடையாத இரசாயன‌ங்கள் குக்கருக்குவெளியே வெடிக்கும் போது அதிகசக்தி உருவாகும் என்று சொல்கிறார்கள்.(Thermobaric ). ரயில் பெட்டியை பிளக்கும் அளவுக்கு அது இருக்குமா ? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.