Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தீவிரவாதிகளால் டொரோண்டோ வில் பயணிகள் ரயிலை தாக்கும் முயற்சி முறியடிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

CANADA says it has thwarted an al-Qaeda-supported plot to attack a passenger train in the greater Toronto area.

Two men have been arrested and charged but police said there was no imminent threat. The Royal Canadian Mounted Police said Monday that Chiheb Esseghaier and Raed Jaser were conspiring to carry out an attack against Via Rail.

"It was definitely in the planning stage but not imminent," RCMP chief superintendent Jennifer Strachan told reporters.

The duo received "direction and guidance" from al-Qaeda, officials said.

Charges against the two men include conspiring to carry out an attack and murder people in association with a terrorist group. Police said the men are not Canadian citizens, but declined to say where they were from.

The investigation was part of a cross-border operation involving Canadian law enforcement agencies, the FBI and the U.S. Department of Homeland Security.

News.com.au

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறவுகள்

http://news.nationalpost.com/2013/04/22/two-men-arrested-over-al-qaeda-inspired-plan-to-attack-a-via-rail-train-in-the-greater-toronto-area/#ooid=Z4bW00Yjpr-mAGOlAcznE4SoPINKoIex

 

 

ஈரானை தளமாக கொண்டியங்கும் அல்கைடா இவ்விரு இளைஞர்களுக்கும் உதவியதாக ஆரம்ப விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்விரு இளைஞர்களும் கனடியர்கள் இல்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

 

பயணிகள் தொடரூந்து அமெரிக்காவை நயாகர நீர்வீழ்ச்சியை கடக்கும்பொழுது வெடிக்க வைக்க திட்டமிட்டு இருந்ததாக ஒரு தகவல் கூறுகின்றது.

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சென்ற கிழமை அமெரிக்காவில்... இந்தக்கிழமை கனடாவில்... புதிய உத்வேகத்துடன் கிளம்பிய காரணம் என்னவாக இருக்கும்.
 

 

இருவரும் ஈரானில் உள்ள அல்கைடா உதவியுடன் தக்க திட்டமிட்டனர் என கூறப்பட்டுள்ளது. இதில் ஈரானிற்கு எதிரான அரசியல் உள்ளதா இல்லை உண்மையாகவே அங்கு இப்பொழுது அல்கைடா உள்ளதா? என்பதே இன்றைய கேள்வி.

 

 

ஒருவர் மொன்றியலில் கைதானார். இவர் தூநிசிய நாட்டை சேர்ந்தவர், கலாநிதி பட்டப்படிப்பை மேற்கொள்ளுபவர்.


அடுத்தவர் டொராண்டோவில் வாழ்ந்த பாலஸ்தீனத்தை பூர்வீகமாக கொண்டவர். ஆனால் ஐக்கிய அரபு குடியரசின் பிரசை.

  • கருத்துக்கள உறவுகள்

சென்ற கிழமை அமெரிக்காவில்... இந்தக்கிழமை கனடாவில்... புதிய உத்வேகத்துடன் கிளம்பிய காரணம் என்னவாக இருக்கும்.

 

 

நாங்கள் எல்லாவற்றையும் மறந்துவிட்டோமென்றோ

தோற்றுவிட்டோமென்றோ......

அரேபியர்கள் எப்பொழுதுமே சொன்னதில்லை 

 

இவர்கள் சொல்லிக்கொள்கிறார்கள்

நாம் வென்றுவிட்டோம்

எல்லாவற்றையும் அழித்துவிட்டோமென்று.

 

அராபியர்கள் சொல்லாததற்கு ஒரு காரணமுண்டு.

அது அவர்களின் இலட்சியமான உலகை ஒரு நாள் ஆளுவதற்கானது.

 

இவர்கள் சொல்வதற்கு ஒரு காரணமுண்டு

அடுத்த தேர்தலில் வென்று அந்த மக்களை  ஆளுவதற்காக.

  • கருத்துக்கள உறவுகள்

இருவரும் ஈரானில் உள்ள அல்கைடா உதவியுடன் தக்க திட்டமிட்டனர் என கூறப்பட்டுள்ளது. இதில் ஈரானிற்கு எதிரான அரசியல் உள்ளதா இல்லை உண்மையாகவே அங்கு இப்பொழுது அல்கைடா உள்ளதா? என்பதே இன்றைய கேள்வி.

 

 

ஒருவர் மொன்றியலில் கைதானார். இவர் தூநிசிய நாட்டை சேர்ந்தவர், கலாநிதி பட்டப்படிப்பை மேற்கொள்ளுபவர்.

அடுத்தவர் டொராண்டோவில் வாழ்ந்த பாலஸ்தீனத்தை பூர்வீகமாக கொண்டவர். ஆனால் ஐக்கிய அரபு குடியரசின் பிரசை.

 

எல்லோரும் முஸ்லீம்....மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால்.... அல் கைதாவின்... பங்களிப்பு நிச்சயம் இருக்கும்.

எதோ.. ஒரு சோனக நாடு... வாங்கிக் கட்டப் போகுது.... எல்லாம் நன்மைக்கே....

நாங்கள் எல்லாவற்றையும் மறந்துவிட்டோமென்றோ

தோற்றுவிட்டோமென்றோ......

அரேபியர்கள் எப்பொழுதுமே சொன்னதில்லை 

 

இவர்கள் சொல்லிக்கொள்கிறார்கள்

நாம் வென்றுவிட்டோம்

எல்லாவற்றையும் அழித்துவிட்டோமென்று.

 

அராபியர்கள் சொல்லாததற்கு ஒரு காரணமுண்டு.

அது அவர்களின் இலட்சியமான உலகை ஒரு நாள் ஆளுவதற்கானது.

 

இவர்கள் சொல்வதற்கு ஒரு காரணமுண்டு

அடுத்த தேர்தலில் வென்று அந்த மக்களை  ஆளுவதற்காக.

 

உண்மை. சரியான கருத்து விசுகு. :)

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான முட்டாள்களின் வேலையினால் எத்தனை பேருக்கு பிரச்சனை சாதரணமாக பயணிக்கும் இஸ்லாமியர்களைக்கூட சந்தேக கண் கொண்டு பார்க்கவேண்டி உள்ளது .......... அவர்களும் பல இடங்களின் நாணி குனியவேண்டிய நிலை உருவாகின்றது 

 

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான முட்டாள்களின் வேலையினால் எத்தனை பேருக்கு பிரச்சனை சாதரணமாக பயணிக்கும் இஸ்லாமியர்களைக்கூட சந்தேக கண் கொண்டு பார்க்கவேண்டி உள்ளது .......... அவர்களும் பல இடங்களின் நாணி குனியவேண்டிய நிலை உருவாகின்றது 

 

இதாலை... தான்...

அப்துல் கலாம், கமல ஹாசன்,  சல்மான் கான் என்று இஸ்லாமிய பெயர் வைத்தவர்களையெல்லாம்...  அமெரிக்க விமான நிலையங்களில்.... அம்மணமாய்... சோதனை போட வேண்டியிருக்கு. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான முட்டாள்களின் வேலையினால் எத்தனை பேருக்கு பிரச்சனை சாதரணமாக பயணிக்கும் இஸ்லாமியர்களைக்கூட சந்தேக கண் கொண்டு பார்க்கவேண்டி உள்ளது .......... அவர்களும் பல இடங்களின் நாணி குனியவேண்டிய நிலை உருவாகின்றது 

 

இதாலை... தான்...

அப்துல் கலாம், கமல ஹாசன்,  சல்மான் கான் என்று இஸ்லாமிய பெயர் வைத்தவர்களையெல்லாம்...  அமெரிக்க விமான நிலையங்களில்.... அம்மணமாய்... சோதனை போட வேண்டியிருக்கு. :lol:

 

அதைவிட பரிதாபம்

இவர்களின் வேலையால் நாம் அழிக்கப்பட்டது............ :(

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்பெயின் நாட்டிலும் இரண்டு இஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

 

Spain holds two North African 'al-Qaeda suspects'

 

http://www.bbc.co.uk/news/world-europe-22261873

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று  பிரான்சில் பரிசிலுள்ள அதிக மக்கள் நடமாட்டமுள்ள  புகையிரத நிலையமான சைன் லசாரில் (Saint-Lazare) அநேமதேய பாசல் ஒன்று கிடப்பதாக  அறிவித்து வாகனங்கள் செல்ல தடைவிதித்து சோதனை  செய்தார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

 

 

அதைவிட பரிதாபம்

இவர்களின் வேலையால் நாம் அழிக்கப்பட்டது............ :(

 

 

உண்மைதான் விசுகு.
இந்த உலகத்துக்கு உரிமை போராட்டத்துக்கும் பயங்கரவாதத்துக்கும் வித்தியாசம் தெரியாது இவர்களின் பார்வை ஊனமாகி ரொம்பநாட்கள் ஆகிவிட்டது   :(

டொரொண்டோ ரயில் கவிழ்ப்பு சதி முறியடிக்கப்பட்டது: கனடிய பொலிஸ்

 

கனடாவில் பயணிகள் ரயில் ஒன்றின் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டினார்கள் என அந்நாட்டில் வாழும் வெளிநாட்டுப் பிரஜைகள் இருவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

திங்களன்று கைதுசெய்யப்பட்ட சிஹெப் எஸ்ஸெகாயிர், ராயித் ஜேஸ் என்ற இவ்விருவரும் இரானில் உள்ள அல்கைதா சக்திகளிடம் இருந்து உதவிகளைப் பெற்றுவந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கனடாவின் மிகப் பெரிய நகரமாகிய டொரொண்டோ அருகே ரயில் ஒன்றை தடம்புரளச் செய்ய இவர்கள் திட்டம் தீட்டியதாக குற்றம்சாட்டப்படுகிறது.

இந்த தாக்குதல் கட்டாயம் நடந்திருக்கும் என்று கூறுவதற்கில்லையென்றாலும், அப்படி நடந்தால் அப்பாவி மக்கள் நிறைய பேர் உயிரிழந்திருப்பார்கள் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

சந்தேக நபர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் கண்காணிக்கப்பட்டு வந்த இந்த பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையில் அமெரிக்காவின் சட்ட அமலாக்கப் பிரிவினரும் சம்பந்தப்பட்டிருந்தனர்.

டொரொண்டோ-நியுயார்க் இடையில் ஓடக்கூடிய ஒரு ரயிலை இலக்குவைத்து தாக்குதல் நடந்தவே இவர்கள் திட்டமிட்டார்கள் என்பது உறுதிசெய்யப்பட்டிருக்கவில்லை.

 

http://www.bbc.co.uk/tamil/global/2013/04/130423_canadaplot.shtml

 

கனடாவில் ரயில் கவிழ்க்க அல்-கொய்தா சதி: அமெரிக்க உதவியுடன் 2 பேர் கைது!
 

ஒட்டாவா: கனடாவில் ரயிலைக் கவிழ்க்கும் சதியில் ஈடுபட்ட இருவரை அந் நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர். இந்த இருவருக்கும் அல்-கொய்தா தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருபத்தகும் தெரியவந்துள்ளது.

 

இது குறித்து டொரண்டோவில் நிருபர்களிடம் பேசிய காவல்துறை அதிகாரியான ஜேம்ஸ் மலிஷியா கூறுகையில்,

 

சிகப் எஸஹெர் (35), ரெயிட் ஜாசர் (30) ஆகிய இருவரும் கனடாவின் வயா ரயில் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து சில காலமாக ரகசியமாக கண்காணித்து வந்தனர். டொரண்டோவில் இந்த ரயில் நிறுவனத்தின் கட்டமைப்பு, பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவை குறித்த தகவல்களை சேகரித்து வந்தனர். இவர்களுக்கு ஈரானில் உள்ள அல்-கொய்தா அமைப்பினரிடம் இருந்து உத்தரவுகள் வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்தச் சதித் திட்டத்தில் ஈரான் அரசுக்கு தொடர்பு இருப்பதை உறுதிப்படுத்த எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

 

கைது செய்யப்பட்ட இருவரும் கனடா பிரஜைகள் அல்ல. அவர்கள் எந்த நாட்டினர் என்பதை இப்போது வெளியிட இயலாது.

 

இந்த இருவரும் ரயிலைக் கவிழ்க்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதை சில காலத்துக்கு முன்பே தெரிந்து கொண்டு இருவரையும் ரகசியமாக கண்காணித்து வந்தோம் என்றார். ஆனால், இவர்கள் எந்த ரயிலைக் கவிழ்க்க முயன்றனர் என்ற தகவலை அவர் வெளியிடவில்லை.

 

வயா ரயில் நிறுவனம் கனடா அரசுக்கு சொந்தமானதாகும். இந்த ரயில் நிறுவனம் அம்ட்ராக் ரயில் நிறுவனத்துடன் இணைந்து டொரண்டோவில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் பென் ஸ்டேசனுக்கும் ஒரு ரயிலை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

 

சிகப் எஸஹெர் கனடாவின் க்யூபெக் நகரில் உள்ள ஷெர்ப்ரூக் பல்கலைக்கழகத்தில் படித்துவிட்டு இப்போது மாண்ட்ரியலில் உள்ள Institut National de la Recherche Scientifique மையத்தில் உயிரியல் படித்து வருவதாகத் தெரிகிறது.

 

இந்த இருவரையும் கண்காணிப்பதிலும் கைது செய்வதிலும் அமெரிக்காவின் எப்பிஐ அமைப்பும் கனடா போலீசாருக்கு உதவியுள்ளது. இரு நாடுகளின் உளவுப் பிரிவுகளும் இணைந்தே இவர்களைப் பிடித்ததாக கனடா அரசு தெரிவித்துள்ளது.

 

அல்-கொய்தா சன்னி பிரிவைச் சேர்ந்தது. அவர்களை ஷியா ஆதிக்கம் கொண்ட ஈரான் எந்தக் காலத்திலும் ஆதரித்ததில்லை. அப்படியிருக்கையில் ஈரானில் எப்படி அல்-கொய்தா இயக்கத்தினர் சுதந்திரமாக செயல்பட முடியும் என்று நிருபர்கள் கேட்ட கேள்விக்கு ஜேம்ஸ் மலிஷியா பதிலளிக்கவில்லை.

 

கடந்த மாதம் கனடாவைச் சேர்ந்த இருவர் அல்ஜீரியாவில் ஒரு எரிவாயு ஆலையின் மீது நடத்திய தீவிரவாதத் தாக்குதலில் பலியானது குறிப்பிடத்தக்கது.

 

அதே போல கடந்த 2006ம் ஆண்டு அல்-கொய்தாவுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி டொரண்டோவில் 18 பேரை கனடா கைது செய்தது. இதில் 11 பேர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டன. 7 பேர் விடுவிக்கப்பட்டுவிட்டனர்.
 

http://tamil.oneindia.in/news/2013/04/23/world-canada-foils-al-qaeda-linked-terror-attack-on-train-173969.html

 

அமெரிக்காவின்  உள்துறை காவல்துறை பொஸ்டனில் ஏற்பட்ட பின்னடைவை சமாளிக்க, மக்கள் மத்தியில் உள்ள பயத்தை போக்க இந்த கைது நடந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

 

காரணம் இன்னும் கைதுக்கான முறையான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை.

 

அத்துடன் கனடாவின் பாராளுமன்றத்திலும் 'பயங்கரவாதம்' சம்பந்தமான விடயம் விவாதிக்கப்பட உள்ளது. எனவே இதில் அரசியல் உள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குள் சிரியாவில் அசாத்தின் ஆட்சி அகற்றப்பட்டால் அல்கொய்தா ஆதரவு சக்திகளிடம் நாடு போவது உறுதி.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.