Jump to content

குடாநாட்டு பழங்குடி மக்களின் வாழ்வும் வளமும்


Recommended Posts

a65130_644414395584832_1171018700_n.jpg

குடாநாட்டு பழங்குடி மக்களின் வாழ்வும் வளமும்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதற்பகுதியிலும் அதற்கு முன்னைய காலங்களிலும் வாழ்ந்த யாழ்ப்பாணத்துப் பழங்குடி மக்களது வாழ...்வியல்புகளில் பனை வர்தக பாடம் இன்றும் என்றும் நினைவு கூரத்தக்கதாகும். அவ்வாறு நினைவு கூருதல் இன்றைய காலத்தின் தேவையாகும். அன்றெல்லாம் மக்களது குடியிருப்புக்கள் அனைத்தும் பனந்தோப்புகளில் பனை ஓலைகளால் வேயப்பட்டவையாக இருந்துள்ளன. இந்தக் குடியிருப்புக்களை அமைக்க வேண்டிய மரங்கள் வளைகள் சலாகைகள் அனைத்தும் பனையிலிருந்து பெறப்பட்டவையாகும்.

கடுங்கோடை காலத்திலும் சரி மாரி காலத்திலும் சரி பனை ஓலைகளால் வேயப்பட்ட வீடுகளில் மக்களை மிக மிக இதமான சுவாத்தியத்தில் வாழ்ந்துள்ளனர். வெப்பமோ அன்றிக் குளிரோ அவர்களை அன்று பாதித்ததில்லை

மக்கள் பனை ஓலைகளால் இழைக்கப்பட்ட பாய்களிலேயே படுத்துறங்கினர். அதே பாய்கள் தான் குழந்தைப்பிள்ளைகள் உறங்கவைப்பதற்கும் மருத்தெண்ணெய் பூசிக் கிடத்துவதற்கும் உதவின. வைபவகாலங்களில் விருந்தினர்களை அமரச் செய்து உபசரிப்பதற்கும் வர்ணவர்ண ஓலைப்பாய்களையே மக்கள் பயன்படுத்தியுள்ளனர்.

பனை ஓலைப்பாய்களின் தேவை மிகமிகப் பெரிதாக உணரப்பட்ட அந்தக் காலத்தில் தமது விளைபொருட்களான சாமி குரக்கன் கதிர்களை பென்னம் பெரிய கதிர்ப்பாய்களிலேயே மக்கள் உலரவைத்தனர். எள்ளு, பயிற்றம் நெத்துக்களையும், மரவள்ளிச் சீவல்களையும் காயப்போடுவதற்கும்’ இக்கதிர்ப்பாய்களே அன்று உபயோகத்திலிருந்துள்ளன. நடந்தும் கொட்டகைகளில் மக்கள் செளகரியமாக இருந்து கூத்துக்களை இரசிப்பதற்கும் அந்தக் காலத்தில் ஆசன வசதிகள் எவையுமே இருந்ததில்லை. நிலத்தில் கதிர்ப்பாய்களில் உல்லாசமாக அமர்ந்தே அந்தக் காலத்தில் குடாநாட்டு மக்கள் கண்டு களித்துள்ளனர்.

ஓலைதந்த பண்டங்கள்

வீடுகள் தோறும் பனை ஓலை பனம் ஈர்க்கில் கொண்டு பின்னப்பட்ட எண்ணில்டங்கா பொருட்களையும் மக்கள் பாவித்துள்ளனர். பனை ஓலையால் பின்னப் பட்ட பாரிய கூடைகளிலேயே ஒடியல் புளுக்கொடியல் முதலியவற்றைச் சேமித்தனர். சாமி குரக்கன்வரகு நெய் மரவள்ளிச் சீவல்களும் சேமித்து வைப்பதற்கு பாரிய பனை ஓலைக் கூடைகளே பயன்படுத்தப்பட்டன. இக் கூடைகள் கறையான் பிடிக்காமல் இருப்பதன் பொருட்டு வீடுகள் தோறும் பனைமரத்திலான கோர்க்காலிகள் இருந்துள்ளன. அன்று மக்கள் பாவித்த பெட்டிகள், கடகங்கள், நீற்றுப்பெட்டிகள், திருகனைகள், உறிகள், இடியப்பத்தட்டுக்கள், சுளகுகள், பனக்கட்டிக் குட்டான்கள் திருநூற்றுக் குட்டான்கள், தொப்பிகள், நீர் இறைக்கப்பட்டைகள் பாட்டிமாரின கொட்டைப் பெட்டிகள் ஆதியாம் பொருட்கள் அனைத்தும் பனை ஓலை அல்லது பனை ஓலை ஈர்க்குக்களால் உருவாக்கப்பட்டவையே எனலாம். பனை ஓலையின் பயன்பாடுகள் இன்னும் மிக நீளமானவை. ஏடுகளை எழுதவும் அன்று பனை ஓலைகளே பயன்பட்டன. கடற்கரையோரங்களில் வாழ்ந்த மீனவக் குடும்பங்கள் பயன்படுத்திய மீன் பறிகள், கூடைகள் அனைத்தும் பனையோலையிலானவையே எனலாம்.

கடல் அரிப்பை தடுக்க

கரையோரப்பனங்கூடல்கள் கடல் அரிப்பைத் தடுக்கவல்லனவாகவும் விளங்கின. பெரிய புயல்களையும் புயல் காற்றுக்களையும் தடுக்கும் வல்லமை பனங்கூடல்களுக்குண்டென்பதும் பண்டைக்காலம் குடாநாட்டு மக்களது அனுபவமாக உணரப்பட்டிருந்தது.

பனையோலைப் பாயும் பாணிப் புகையிலையும்

குடாநாட்டிற்கும் மலையாளத்திற்கும் இடையில் நேரடியாக வியாபாரம் இடம்பெற்ற அந்தக் காலத்தில் பெரிய எடுப்பில் குடாநாட்டுப் பாணிப்புகையிலை பாரிய வந்தைகள் மூலம் மலையாளத்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. பனை ஓலைப்பாய்களிளும் பாணிப்புகையிலை சிப்பங்களாகக கட் டப்பட்டே அனுப்பப்படுவது அன்றைய நடைமுறையாகும். இன்றும் குடாநாட்டிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு புகையிலையை பனையோலைப்பாய்ச்சிப்பங்களாகவே கட்டி அனுப்பப்படுவதும் வழமையாகவுள்ளது.

சாதகங்கள்

மக்களது சாதகங்களைச் சாந்திரிமார்கள் பனை ஓலைச் சுவடிகளாகவே எழுதிவைத்தனர்.

வாகடங்கள்

ஆயுள் வேத வைத்தியர்களது வாகடங்களும் எழுதிப் பேணப்பட பனை ஓலைகளே பயன்பட்டன. இன்றும் மிகப்பழைய ஆயுள் வேத வாகடங்களைப் பனையோலை ஏட்டுச்சுவடிகளாகவே பார்க்கமுடியும்.

பசுக்களின் உணவு பனை ஓலை

குடாநாட்டுமக்கள் பட்டிபட்டியாகப் பசுக்களை வளர்ந்த அந்தக்காலத்தில் அப்பசுக்களின் பிரதான உணவு பனை ஓலைகளாகவே இருந்துள்ளன. பனை ஓலைகளை உணவாகக் கொண்ட பசுக்களின் பால் அதிக தடிப்பும் சுவையும் மிக்கதாகும். இது அடியேனது அனுபவமும் கூட பனந்தோப்புக்களில் குரும்பைகளும் கறவைப் பசுக்களுக்கு அந்தக் காலத்தில் சத்துணவாகப் பயன்படுத்தப் பட்டுள்ளன.

பசுத்தொட்டில்களுக்கும் பனை மரங்களும் பனைஓலைகளுமே பயன்பாட்டில் இருந்தன. பனைஓலைக்குடிசைகளில் வாழ்ந்த மக்கள் தமது வேலிகளை அடைக்கப்பனை ஓலைகளையும் பனைபட்டைகளையும் பயன்படுத்தினர். புதிதாக வீடு வேயும் பொழுது கழற்றி விடப்படும் பழைய ஓலைகள் அனைத்தும் விளைநிலங்களில் V.ஜி பசளைக்காகப் புதைக்கப்பட்டன.

குடாநாட்டில் ஆட்டுக்கடா வேள்விகள் பிரபல்யமாக நடைபெற்ற அந்தக் காலத்தில் பங்கு இறைச்சிகள் பச்சைப் பனைஓலைகளிலேயே பொதிசெய்யப்பட்டன. பனம் மட்டை, பாளை, கொக்காறை, பனம் ஊமல் முதலியவற்றை மக்கள் தமது எரிபொருட் தேவைகளுக்குப் பயன்பயன்படுத்தினர்.

பனைதந்த உணவுகள்

யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்களின் உணவுத் தேவையில் கணிசமான ஒரு பகுதியை நாள்தோறும் அன்று பனைகளே பூர்த்தி செய்துள்ளன. பனம் பழங்களை அன்று மக்கள் பெரிதும் விரும்பிப் புசித்து வாழ்ந்துள்ளனர். பனம் பழச்சாற்றிலிருந்து பெறப்பட்ட பனாட்டும் மக்களின் உணவாக இடம்பிடித்துக் கொண்டது. ஒடியற் கூழ் ஒடியற்பிட்டு ஒருநேர முக்கிய உணவாகக் கருதப்பட்ட அந்தக் காலத்தில் கடல் உணவு அதாவது சிறுமீன்கள் கலந்து அவித்த ஒடியற்பிட்டை அசைவர்கள் அமிர்தமாகவும் கொண்டனர். பனம் வளவுகள் இல்லாதவர்கள் உள்ளவர்களிடம் பனம் பழங்களே வாங்கிப் புசித்த அந்நாட்க ளில் புசித்தபின் விதைகளைத் நிருப்பிக் கொடுக்கவேண்டிய கட்டாயநிர்ப்பந்தமும் அந்தக் காலத்தில் இருந்துள்ளது. ஒவ்வொரு பனம் பழத்திற்கும் அந்தக் காலத்தில் அவ்வளவு மதிப்பிருந்தது என்பதை உணர்ந்துகொள்ளலாம். அக்காலத்தில் நாடகங்களில் வரும் நகைச்சுவை நடிகர்கள் ‘காலிப் பனங்காயைத் தின்னுங்கோ கண்ட இடமெல்லாம் கழியுங்கோ” எனப்பாடும் பொழுது மக்கள் கொல்லென்று சிரிப்பார்களாம்.

 

Thankx

 

http://www.thinakaran.lk/Vaaramanjari/2012/11/11/?fn=f1211114

 

Link to comment
Share on other sites

எங்க ஊர் கோவில் அன்னதானத்தில் இருந்து  பெரிய அந்தியெட்டிகளுக்கும் சோற்றை பாய்களில் தான்  காச்சி கொட்டுவார்கள். பணங்காய் பிசைந்து பினாட்டுக்கு ஊற்றுவதும் பாய்தான்  படுத்து உறங்குவதும் பாய் தான் .

Link to comment
Share on other sites

பசுவுக்கு பனை ஓலை வெட்டிப்போட்டு பனைக்கு கீழே நின்று பால் கறந்து குடிப்பது வரைக்கும் தானே எழுதியிருக்கிறார். நம்பலாமா இவரை? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மொத்தத்தில் எங்களைப் பனங்காய்கள் என்கிறாரா?

அல்லது  பனங்கொட்டைகள் என்கிறாரா? கட்டுரையாளர் :D

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டக் காலத்திலே அதிகம் பனைமரங்கள் அழிந்துபோனதால், 5 இலட்சம் பனம் விதைகளை ஈழமெங்கும் நடுகைசெய்யும் திட்டத்தை புலிகள் மேற்கொண்டு அதனைச் செயல்படுத்தியும் வந்தனர்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்க ஊர் கோவில் அன்னதானத்தில் இருந்து  பெரிய அந்தியெட்டிகளுக்கும் சோற்றை பாய்களில் தான்  காச்சி கொட்டுவார்கள். பணங்காய் பிசைந்து பினாட்டுக்கு ஊற்றுவதும் பாய்தான்  படுத்து உறங்குவதும் பாய் தான் .

 

அதெண்டால் உண்மைதான்....

 

 

 

 

sooRu_zpse9c8beda.jpg

Link to comment
Share on other sites

 

அதெண்டால் உண்மைதான்....

 

 

 

 

sooRu_zpse9c8beda.jpg

 

மண்டுவில் சோலை அம்மன் கோவில் படம் போல கிடக்கு ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குசா பார்க்க ஆசையாக இருக்கு, என்ன ஒரு சந்தோஷம் அந்த காலங்களில்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மண்டுவில் சோலை அம்மன் கோவில் படம் போல கிடக்கு ?

 

 

ஓம் சோலைஅம்மன் தான். :)

குசா பார்க்க ஆசையாக இருக்கு, என்ன ஒரு சந்தோஷம் அந்த காலங்களில்

 

உண்மைதான் உடையார் அன்னதானத்திலை ஒருகவளம் வாங்கி சாப்பிட்டாலே பெரிய சந்தோசம் :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அவரும் தோற்கடிக்கப்படவேண்டியவரே. நான் அவருக்கும் வாக்கு போட்டிருக்க மாட்டேன். நிச்சயம் சிங்கபூரில் இருந்து டிக்கெட் போட்டு போய் அவருக்கு பிரச்சாரம் செய்து வாக்கு கேட்டிருக்க மாட்டேன். தவிரவும் அவரும் மட்டகளப்பு, அவர் வன்கொடுமை செய்ய பெண்ணும், மட்டகளப்பு, அவரை ஆதரித்த உள்ளூர் கட்சியினரும் மட்டகளப்பு  வாக்களித்த வாக்காளரும் மட்டகளப்பு எனும் போது இதில் பிரதேசவாதம், மையவாதம் என்ற கோணமே எழவில்லை. இல்லையே…அப்பட்டமாக பிரதேசவாதம் கக்காத தமிழ் தேசிய அரசியலும் செய்யாத பலர் அங்கே தேர்தலில் நின்றார்களே. தமிழ் தேசியத்தில் நம்பிக்கை இல்லை, சரி வேறு ஒரு தெரிவை எடுக்கலாமே? தென்னிலங்கை கட்சியில் கேட்ட ஒரு தமிழருக்கு போட்லாலாமே? நான் இன்றும் மேடைக்கு மேடை பிரதேசவாதம் கக்குபவருக்குதான் வாக்கு போடுவேப் ஆனால் நான் பிரதேசவாதி இல்லை என்பது நம்பும்படியாகவா இருக்கு? தெரியும். மட்டகளப்பு மாவட்டமும் பெரும்பான்மை தமிழர் பகுதிதான்.    பிரதர், நான் தமிழ் தேசிய வடையை நியாப்படுத்தவில்லை. அதை நீங்கள் ஆதரிக்க வேண்டும் என்றும் சொல்லவில்லை . நீங்கள் நன்னா டிரக்கை மாத்த வேண்டாம். தமிழ் தேசிய அரசியல் உதவாது என்ற நிலைப்பாடு = பிரதேசவாதம் என நான் எங்கும் எழுதவில்லை. ஆனால் அப்பட்டமாக செயலில், சொல்லில் இன்றுவரை பிரதேசவாதத்தை எழுப்புவரை, அவரின் கொள்கையை ஆதரிப்பது, இறங்கி வேலை செய்வது, நிச்சயம் பிரதேசவாதம்தான். இது நான் ஹிட்லரின் அனுதாபி, அவருக்கு வாக்கு போடுகிறேன், அவருக்கு வாக்கு போடுமாறு பிரச்சாரமும் செய்கிறேன் ஆனால் நான் நாஜி இல்லை என்பது போல ஒரு நிலைப்பாடு.
    • சங்கி ஆனந்தம் சொன்னது சம்பந்தமாக, மெதடிஸ்ட் (CSA, CoE, American Mission) இப்படி ஊருக்குள் போய் மதம் மாற்றுகிறார்களா? நான் அறிய 5ம் வேதம் என கூறப்படும், யெஹோவா சாட்சிகள், பெந்திகோஸ்த் ஆட்கள்தான் இப்படி செய்வது.
    • இதே போன்ற ஒன்றை மட்டக்களப்பு பெண்ணிற்கு இழைத்து இழைத்தவர் கூத்தமைப்பில் மட்டக்களப்பில் பா. ஊ வாக இருந்தார். ஒரு வேளை அவர் இதனை யாழில் செய்திருந்தால் கூத்தமைப்பில் நிறுத்தப்பட்டிருப்பாரா...? ஆகவே யாழ் மையவாதிகள் ஒன்றும் திறம் கிடையாது அடுத்தவனுக்கு பாடம் எடுக்க. ஆக என்ன சொல்ல வருகிறீர்கள் நீங்களும் நானும் பவுன்ஸிலும் டாலர்களிலும்  பாக்கெட்டிற்குள் போட்டுக் கொண்டு நம்ம அடுத்த வேலையை பார்க்கப்போக அங்கே இருக்கும் மட்டக்களப்பார்கள் மட்டும் யாழ் தேசியவாதிகளை நம்பி அடுத்த வேளை சோற்றுக்கு பிச்சையெடுக்க வேண்டும் அப்பிடியா...? முக்கால் வாசி தேசிய வியாதிகள் எல்லாம் ஒன்று புலம் பெயர், இல்லை தமிழர் பெரும்பான்மை பிரதேசத்தில் மட்டும் ஏன் இருக்கிறார்கள் என்று தெரியுமா..? சோற்றுக்கு வயிறு காயும் போதுதான் தெரியும் தேசியத்தின் பெருமை. தமிழர் பெரும்பான்மை பிரதேசங்களில் தேசியவாதிகள் சிறுபான்மை ஆகும் போது தெரியும் தேசியத்தின் பெருமை அதுவரை தேசியவாதிகள் வாயால் நன்னா வடை சுடலாம்
    • ""எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்"" என்பது உந்தக் கரடிக்குத் தெரியாதோ?  😁
    • என்னப்பா உந்தப்பிரச்சனை இன்னும் முடியேல்லையே?😂 நானெண்டால் இத்தடிக்கு கார பாட்ஸ் பார்ட்சாய் கழட்டி வித்திருப்பன்.😎
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.