Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னாள் போராட்டக் குழுக்கள் உள்ளமையால் கூட்டமைப்பை பதிவு செய்ய முடியாது – கைவிரித்தார் சம்பந்தன்!

Featured Replies

முன்னாள் போராட்டக் குழுக்கள் உள்ளமையால் கூட்டமைப்பை பதிவு செய்ய முடியாது – கைவிரித்தார் சம்பந்தன்!

— 

23/04/2013 at 9:49 am

 | 

 

sampanthan-150x150.jpg

முன்னாள் போராட்டக் குழுக்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில்  இருக்கும்போது அதனை ஓர் அரசியல் கட்சியாக பதிவு செய்யும் சாத்தியம் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் தலைமையிலான இலங்கை தமிழரசுக் கட்சி கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மன்னார் ஆயர் இராயப்பு ஜோஸப்புடன் பேசியபோது இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர்களான இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர், முன்னாள் போராட்ட குழுக்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும்போது அதனை பதிவு செய்ய முடியாது எனக் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்ட குழுக்கள் முன்னர் இழைத்த கொடூரங்கள் பற்றி அரசாங்கம் தகவல்களை சேர்த்துவைத்திருப்பதாக இலங்கை தமிழரசுக் கட்சி கருதுகின்றது என சம்பந்தன் தரப்பு காரணம் வெளியிட்டிருக்கின்றது.

எனவே இப்போது பதிவு செய்ய முற்பட்டால் அரசாங்கம் சட்ட பிரச்சினைகளை கிளப்ப முடியும் என கட்சி நம்புகின்றது. ஆயினும், மற்றைய கட்சிகளுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடத் தயாராக இருப்பதாக தமிழரசுக்கட்சி மன்னார் ஆயரிடம் தெரிவித்திருப்பதாகவும் தெரியவந்திருக்கின்றது.

வட மாகாண சபை தேர்தலுக்கு முன்னர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் பிளவு ஏற்படுவதை தடுப்பதற்கு மன்னார் ஆயர் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களும் முயன்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://tamilleader.com/?p=10954

Edited by மல்லையூரான்

வடக்கு மாகாணம் மகிந்த  கூட்டத்திடம் பறி போவதைக் கூடத் தடுக்க முடியாது போலிருக்கிறது....

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் பெட்டியை விட்டு வெளிய வந்து சிந்திக்கனும். சம்பந்தன் சிங்களவர்களுக்காக அரசியல் செய்யவில்லை. தன்னை இரத்தக் கறைபடியாத.. சுத்தமான வலதுசாரி சார்ந்தவன் என்று காட்டிக்கொண்டு நிற்க.

 

சம்பந்தனின் கடந்த கால நிலைப்பாடுகள் குறித்து சிங்களவர்கள் நன்கே அறிவார்கள். தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடுகள் குறித்தும் அறிவார்கள். எனவே சிங்களவர்களை மையமாக வைத்து அரசியல் செய்வதை விடுத்து தமிழ் மக்களின் தேவைகளை மையமாக வைத்து அரசியல் செய்ய சம்பந்தன் உட்பட்ட தமிழரசுக் கட்சியினர் முன்வர வேண்டும். அதுதான் முற்போக்குத்தனம்.

 

இன்றும் சரி அன்றும் சரி சிறீலங்காவின் ஆட்சிப்பீடத்தில் இருந்த இருக்கும் முக்கிய சிங்களக் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும் சரி சுதந்திரக்கட்சியும் சரி ஜே வி பியோடு கூட்டு வைத்து கூட்டணிகளாக தனிப் பெயரில் தம்மை பதிவு செய்து தமது அடையாளங்களை இழந்து சிங்கள மக்களிடம் வாக்குச் சேகரித்துக் கொண்டதை சம்பந்தன் உட்பட்ட தமிழரசுக் கட்சிப் பழமைவாதிகள் முன்னுதாரணமாகவாவது கொள்ள வேண்டும்..!

 

இப்படி சம்பந்தன் வலதுசாரி அமிர்தலிங்கம் காலத்துக் கொள்கையோடு நிற்பாரானால்.. தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது சம்பந்தன் - சங்கரி கூட்டமைப்பு என்று மட்டுமே நிற்க முடியும். அதற்கு மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கு என்ன என்பதையும் சம்பந்தன் சிந்தித்துப் பார்க்க வேண்டும்..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் போராட்டக் குழுக்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில்  இருக்கும்போது அதனை ஓர் அரசியல் கட்சியாக பதிவு செய்யும் சாத்தியம் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் தலைமையிலான இலங்கை தமிழரசுக் கட்சி கூறியுள்ளதாக தகவல்கள்

 

 

 

அப்படியானால் எப்படி டக்கிளசின் EPDP பிள்ளையானின் TMVP பதிவு செய்தவர்கள் ?

 

 

இவர்களுக்கு உண்மையில் கட்சியை பதிவு செய்வதில் அக்கறை இல்லை இப்படியே காலத்தை கடத்தினால் சரி .  :(

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நாம் ஒற்றுமையாகவே இருப்போம்: சம்பந்தன்!

 

sampanthan.jpg

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்றும் ஒற்றுமையாவே இருக்கும். எவருக்கும் நாம் நம்பிக்கை துரோகம் செய்ய மாட்டோம் என்று கூட்டமைப்பின் தலைவரும் திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பதிவு செய்யும் விடயத்தில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இலங்கை தமிழரசுக் கட்சிக்கும் ஏனைய கட்சிகளான ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப்., தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட் ஆகிய கட்சிகளிடையே முரண்பட்ட நிலை காணப்படுகிறது. இவ்விடயம் தொடர்பில் கேட்டபோதே சம்பந்தன் எம்.பி. இவ்வாறு கூறினார்.

“நாம் ஒற்றுமையாகவே இருப்போம். இவ்விடயம் தொடர்பில் எல்லோருடைய கருத்தினையும் மதித்து முடிவு எடுக்க வேண்டும். எங்களுக்குள் நாம் பிரச்சினைபட முடியாது. நாம் யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம். இந்த பிரச்சினைக்கு சுமுகமான தீர்வினை காண்பதற்கு நாம் முயற்சி எடுப்போம் என்று தெரிவித்தார்.

 

http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=20470:2013-04-24-09-21-42&catid=1:aktuelle-nachrichten&Itemid=50

  • தொடங்கியவர்

அப்படியானால் எப்படி டக்கிளசின் EPDP பிள்ளையானின் TMVP பதிவு செய்தவர்கள் ?

 

இவர்களுக்கு உண்மையில் கட்சியை பதிவு செய்வதில் அக்கறை இல்லை இப்படியே காலத்தை கடத்தினால் சரி .  :(

தமிழரசு:

 

சிங்கள சிராணியை அரசு பதவி நீக்கியது. அதை பாராளுமன்றத்தில் கதைக்கப் போன சம்பந்தரை சிறைக்குள் போடப் போவத்தாக மிரட்டடியது. யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள் விசாரணை இன்றி புனர்வாழ்வுக்கு அனுப்பப்பட்டபோது  அதை கேட்டுபெற்றுத் தந்தவர் JVP மந்திரி விமல் வீரவன்சா. தமிழருக்கு ஒரு நீதி சிங்களவர்களுக்கு ஒரு நீதி இலங்கையில் இருப்பதுதான் நமது போராட்டத்திற்கு காரணம் என்றால் இந்த கேள்வி ஏன்?

 

சம்பந்தர் என்ன பதிலையும்  பத்திரிகைகளுக்கு கொடுக்கலாம். ஆனால் இது பதிவு செய்வதால் வரத்தக்க பிரச்சனைகளை பற்றியது மட்டும் அல்ல என்பது நமக்கு தெரியும். 

 

எனவே  நாம்(புலம் பெயர் மக்கள்) வெங்காயத்தை உரிக்காமல் சம்பந்தர் சிவாஜிலிங்கம், அரியநேந்திரன், சுரேஸ்பிரேம சந்திரன் போன்றோருடன் பேச வேண்டும். மாவை போன்றோர் சில கஸ்டங்களை சந்திக்கும் அங்கத்தவர்களுடன் போட்டியை தவிர்க்க வேண்டும். சிவாஜிலிங்கம் இதை ஜனாதிபதி தேர்தலாக பாவித்து தனது வேட்பாளரை போடக்கூடாது. இவர்கள் சம்பந்தருக்கு கூட்டமைப்பை கொண்டு போகும் வேலையை இலகுவாக்க வேண்டும். விக்கினேஸ்வரன் தான் மிக நல்ல தெரிவு. கூட்டமைப்பார் அதில் கவனம் செலுத்த வேண்டும். அதற்கு கடிசிப் பதிவு தேவை இல்லை.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதென்ன பதி பதி எண்டுகொண்டு ....

வீட்டு சின்னம் ..... TNA  பனர் ...

கரண்டீட் . மஜோரிட்டி ...

 

வேற என்ன தேவை??????? :lol:

 

 

அப்படியானால் எப்படி டக்கிளசின் EPDP பிள்ளையானின் TMVP பதிவு செய்தவர்கள் ?

 

 

இவர்களுக்கு உண்மையில் கட்சியை பதிவு செய்வதில் அக்கறை இல்லை இப்படியே காலத்தை கடத்தினால் சரி .  :(

1. இன்று   TNA  ஐ   பதிவு  செய்ய  கேட்பவர்கள்  புலிகள்   இருந்த  போது 

ஏன்  கேட்கவில்லை ? 
2.அப்படியாயின்  புலிகளும்   காலத்தை  கடத்தியவர்களா ?
 
இந்த  கேள்விகளுக்கு   எவராவது   பதில்  தரலாம் .
  • கருத்துக்கள உறவுகள்

 

1. இன்று   TNA  ஐ   பதிவு  செய்ய  கேட்பவர்கள்  புலிகள்   இருந்த  போது 

ஏன்  கேட்கவில்லை ? 
2.அப்படியாயின்  புலிகளும்   காலத்தை  கடத்தியவர்களா ?
 
இந்த  கேள்விகளுக்கு   எவராவது   பதில்  தரலாம் .

 

புலிகள் எப்போதுமே சிறிலங்காவின் ஜனாயகத்தில் நம்பிக்கை கொண்டிருக்க வில்லை அதனால்தான் ஆயுதப் போராட்டத்தை தேர்ந்தெடுத்தனர் அவர்கள் என்றும் அரசியல் நீரோட்டத்தில் கலந்து கொள்ள விரும்பியதில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை அதனால் தமது இயக்கத்தை பதிவு செய்வதற்கான தேவை ஏற்படவில்லை .. 

புலிகள் எப்போதுமே சிறிலங்காவின் ஜனாயகத்தில் நம்பிக்கை கொண்டிருக்க வில்லை அதனால்தான் ஆயுதப் போராட்டத்தை தேர்ந்தெடுத்தனர் அவர்கள் என்றும் அரசியல் நீரோட்டத்தில் கலந்து கொள்ள விரும்பியதில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை அதனால் தமது இயக்கத்தை பதிவு செய்வதற்கான தேவை ஏற்படவில்லை .. 

நான்  புலிகள்  இயக்கத்தை  கேட்கவில்லை ?  TNA    ஒற்றுமை 

கருதி  புலிகளின்  காலத்தில்  ஆரம்பிக்கப்பட்டது .2004 இல் புலிகள் 
தான் பட்டியலை  இறுதி செய்தவர்கள் .2001 -2009(9வருடம் )  வரை புலிகளின் காலத்தில்  TNA செயற்பட்டது .ஆக  புலிகள்  இல்லாத  காலம் 

2009-2013 (4 வருடம் ) .ஆகவே  புலிகள்  எது  செய்தாலும் (சரி யாக /பிழையாக )ஏன் ,எதற்கு என்று  கேட்காததன் விளைவுதான்  இன்று நாம்  அனுபவிப்பது?

 

 

அதென்ன பதி பதி எண்டுகொண்டு ....

வீட்டு சின்னம் ..... TNA  பனர் ...

கரண்டீட் . மஜோரிட்டி ...

 

வேற என்ன தேவை??????? :lol:

உங்களுக்கு  பச்சை  போட்ட காரணம் 

இதுதான் யதார்த்தம் . மக்களுக்கு  பழகின 
சின்னம் .

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களுக்கு  பச்சை  போட்ட காரணம் 

இதுதான் யதார்த்தம் . மக்களுக்கு  பழகின 
சின்னம் .

 

 

 

உது ரெண்டாவது பச்சை ....

 

முன்னமும் யாரோ ஏதோ திரிக்கு ஒரு பச்சை போட்டு கிடந்திச்சு ...

முதல் போட்ட புண்ணியவானுக்கும் நன்றி.  :)

 

தமிழ் மக்களின் எதிர்காலத்தை அழிக்கும் வகையில் வயதுக்கும் அனுபவத்துக்கும் கொஞ்சம் கூடப் பொருத்தம் இல்லாமல் சம்பந்தன் கூறிய கருத்துக்கள் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியவை.

தற்போது TNA வில் அங்கம் வகிக்கும் தமிழ் மக்களின் உரிமைக்குப் போராடிய குழுக்கள் அனைத்தும் ஏற்கனவே தேர்தல் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன  என்ற அடிப்படை அறிவுகூட சம்பந்தனிடம் இல்லை.

முன்பு ஆயுதம் ஏந்திப் போராடிய ஜேவிபி முதல் இன்றும் ஆயுதம் ஏந்தி கடத்தல், கொலை செய்துவரும்  EPDP, TMVP போன்றவையும் தேர்தல் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன என்ற சிறுபிள்ளைகளுக்குத் தெரியும் அறிவுகூட சம்பந்தனிடம் இல்லை.

இதன் மூலம் சம்பந்தனும் அவரது அடிவருடிகளும் தமிழ் மக்களின் வாழ்வுரிமையை வைத்து  சுய ஆதாய  அரசியல் தான் செய்து வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுவிட்டது.

ஏற்கனவே பல அறிக்கைகள், பேச்சுக்கள் மூலமும் சம்பந்தனும் அவர் மூலம் குடும்ப அனுகூலம் பெற்றுவரும் சில சுயநல அடிவருடிகளும் தமிழ் மக்களின் பிரச்சினைகளில் பெரிதும் அக்கறை இல்லாதவர்கள் என்ற உண்மை வெளிப்பட்டிருந்தது.

முன்பு புலிகளை தடைசெய்ய சிலரின் கைப்பாவையாக சம்பந்தன் செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டும், ஒருதடவை சுரேஷ் பிரேமச்சந்திரனின் கனடிய விசா நிராகரிப்புக்கும் சம்பந்தன் காரணம் என்ற கருத்தும் உண்மையாக இருக்கலாம் என்பதை இவரது கருத்து ஊர்ஜிதப்படுத்துகிறது.

ஜனநாயகம் என்ற போர்வைக்குள் வாழும் சம்பந்தன் இவ்வளவு கீழ்த்தரமாக செயற்படக்கூடியவர், ஒரு சுயநலப் பிராணி  என்பது நிரூபணமான பின்னர் இனியும் அவர் தமிழ் மக்களை பிரதிநிதிப்படுத்தும் தகுதி  இல்லாதவர் என்பது தெளிவாகிவிட்டது.

இதன் மூலம் சம்பந்தனும் அவரது அடிவருடிகளும் தமிழ் மக்களின் வாழ்வுரிமையை வைத்து  சுய ஆதாய  அரசியல் தான் செய்து வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுவிட்டது.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
ஆமாம் ஹரி நீங்கள் ஆனந்த சங்கரியின் மகனா?
  • கருத்துக்கள உறவுகள்

 

ஆமாம் ஹரி நீங்கள் ஆனந்த சங்கரியின் மகனா?

 

 

எப்பிடியெல்லாம் கண்டுபிடிக்கிறீங்க? :D இது உண்மையென்றால் நான் இவரைச் சந்தித்திருக்கிறேன்..  :o  :D 

 

ஆமாம் ஹரி நீங்கள் ஆனந்த சங்கரியின் மகனா?

 

 

   இல்லை 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.