Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்கள் மீண்டும் போர் ஒன்றில் ஈடுபட நேரிடலாம்: மிச்சேல் சிஷன்

Featured Replies

 

தமிழ் மக்கள் மீண்டும் போர் ஒன்றில் ஈடுபட நேரிடலாம்: மிச்சேல் சிஷன்
2013-04-26 19:28:19  

விடுதலைப் புலிகளுக்கும், அரசாங்கத்திற்கும் இடையிலான இறுதிப் போரில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் போர் குற்றங்களுக்கு பொறுப்பானவர்களை சட்டத்திற்கு முன் நிறுத்துவது தாமதப்படுத்தப்படுமாயின், இலங்கையில் தமிழ் மக்கள் மீண்டும் போர் ஒன்றில் ஈடுபட நேரிடலாம் என அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் மிச்சேல் சிஷன் தெரிவித்துள்ளார்.

இலங்கை சர்வதேச ஊடகவியலாளர்கள் சங்கத்தினர் கொழும்பில் நடத்திய விசேட வைபவம் ஒன்றில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இலங்கையும் அமெரிக்காவும் ஒத்துழைப்புடன் செயற்பட ஆரம்பித்த வரலாறு 1800 ஆம் ஆண்டு வரையான கால கட்டம் வரை நீண்டு செல்கிறது. அந்த காலத்தில் அமெரிக்காவின் கொனசல் ஜெனரல் காலி கோட்டை விடுதியின் வரபேற்பறையில் இருந்தாராம். அவர் அங்கிருந்து அமெரிக்காவின் கப்பல்களுக்கான ஆட்சேர்ப்பு பணிகளை மேற்கொண்டார் எனக் கூறப்படுகிறது.

எனினும் தற்போது நாம் 21 ஆம் நூற்றாண்டில் உள்ளோம். அப்போதைய காலத்தை விட அமெரிக்க தூதரகத்தின் பணிகள் அதிகரித்துள்ளன. இலங்கையுடனான உறவுகள் அன்றைய காலத்தை விட மிகவும் ஆழமானதாக உள்ளது. இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளையும், சமூக மற்றும் கல்விக்கான உதவிகளையும் அமெரிக்க வழங்கி வருகிறது.

இலங்கைக்கு தேவையான அனைத்து சந்தர்ப்பங்களிலும் அமெரிக்கா உதவி வருகிறது. 2004 ஆம் ஆண்டு சுனாமி ஏற்பட்ட போது, அமெரிக்கா உடனடியாக தனது போர் கப்பலை அனுப்பியது. அத்துடன் சுனாமியினால் பாதிக்கப்பட்ட அனைத்து இலங்கை மக்களையும் அதில் இருந்து மீட்க பாரிய உதவிகளை செய்ததது.

ஜனாதிபதியான ரணசிங்க பிரேமதாசவைக் கூட கொலை செய்த விடுதலைப்புலிகளின் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா அனைத்து வகையிலும் உதவியது. அமெரிக்காவும் பயங்கரவாதத்தை எதிர்நோக்கியுள்ள நாடு என்ற வகையில், பயங்கரவாதம் காரணமாக நாட்டில், சமூகத்தில் ஏற்படக் கூடிய பாதிப்புகளை நன்கு அறிந்துள்ளது.

விடுதலைப்புலிகளை சர்வதேச ரீதியாக தடைசெய்யும் வேலைத்திட்டத்தின் அதிகளவான பங்களை அமெரிக்காவே வகித்தது. இந்த தடைக்காரணமாக விடுதலைப் புலிகளின் சர்வதேச ரீதியிலான உதவிகள் கிடைக்கும் வலையமைப்பை முடக்கவும் அதனை முடிவுக்கு கொண்டு வரவும் முடிந்தது. புலிகள் அமைப்பு இன்னும் அமெரிக்காவில் தடைசெய்யப்பட்ட அமைப்பாகும். பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக தேசிய பாதுகாப்பை முன்னெடுத்துச் செல்லும் சவாலை நாம் அறிந்துள்ளோம். அதேபோல், முக்கியமான விடயமாக சிரமமான சந்தர்ப்பங்களில் ஜனநாயகத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் முன்னெடுத்துச் செல்லும் சவாலும் மிகவும் முக்கியமானது.

ஜனநாயகத்தை மதிப்பை பாதுகாப்பதன் ஊடாகவே இலங்கைக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான நீண்டகால வலுவான இணைப்பு காணப்பட்டது. அவ்வாறான ஜனநாயக மதிப்பு சவாலுக்கு உட்படும் போது, அதற்கான அமெரிக்கா குரல் கொடுக்கும். ஊடகவியலாளர்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்து அமெரிக்கா தொடர்ந்தும் அவதானத்துடன் இருக்கும் நாடாகும். சில ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டுச் சென்று விட்டனர். அதேபோல் சில ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் இன்னும் தீர்வுகள் காணப்படவில்லை. 2009 ஆம் ஆண்டு லசந்த விக்ரமதுங்க கொலை, 2010 ஹெக்நேலியகொட காணாமல் போனமை, 2011 ஆம் ஆண்டு உயதன் பத்திரிகை ஆசிரிய ஞானசுந்தரம் குகநாதன் மீதான தாக்குதல் சம்பவம் என்பன இவ்வாறான சம்பவங்களாகும். முழு உலகத்திலும் கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பதற்காக அமெரிக்கா தொடர்ந்தும் குரல் கொடுத்து வருகிறத என்பதை எடுத்து கூறுவதற்காகவே இந்த சம்பவங்கள் குறித்து உங்கள கவனத்திற்கு கொண்டு வந்தேன்.

பிரதிநிதித்துவ ஜனநாயகம் உள்ள நாட்டில் அரசாங்கம் ஒன்று செயற்படும் விதத்தையும் அதன் நிலைமைகளையும் அறிந்து கொள்ளும் உரிமை மக்களுக்கு உள்ளது. அத்துடன் அந்த உரிமையை பெற்றுக்கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு. இது பிரஜைகளின் சட்டரீதியான மனித உரிமை எனவும் அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=4218

 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜெனீவாவில  அமேரிக்காவ சந்திக்கட்டாம் .... :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

tommy-submachine-gun.gif

 

சண்டையை துவக்குங்கடா எண்டு இவ சொல்லுவதுபோல இருக்கு.. :D இனிமேல் நீங்கள் அமெரிக்காவே நேரடியா சண்டை பிடிக்கிறதுதான் நல்லது.. tank.gif

  • கருத்துக்கள உறவுகள்
வடகொரியா மாதிரியான நாடுகள் தான் தற்போதைக்கு கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டக்கூடிய ஆட்கள்.
 
சிறிய நாடுகள், விடுதலை இயக்கங்கள் என்பன பலமோடு இருக்கும் வரை தான் சொல்வதை கேட்பார்கள். பலமற்றால் நடைப்பிணம் தான்.
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல உசுப்பேற்றல். இந்தியா செய்ய்த வேலையை இப்போ அமெரிக்கா எடுத்துக்கொண்டதோ?

 

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டம் இல்லாத விடுதலை ஒரு நாளும் கிடைக்காது என்பது தெளிவான விடயம். 

 ஈழத்திற்கான விடுதலைக்கான போராட்டம் இப்போதும்  நடந்துகொண்டுதான் இருக்கின்றது.

 

ஆனால் அந்தப் போராட்டம் எதிர்காலத்தில் எந்தப் பாதையில் அல்லது எந்த வடிவில்

விரிவடையும் என்பதற்கு வழி காட்டப் போவது சிங்களமும் 

மேற்குலகமும் இந்தியாவும் தான்.

 

சுய அரசியல் நோக்கங்களுக்காக நீண்ட காலத்திற்கு

ஒரு இனத்தின் குமுறல்களை அடங்கு  நிலையில் வைத்திருக்க முடியாது.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கையில் தமிழ் மக்கள் மீண்டும் போர் ஒன்றில் ஈடுபட நேரிடலாம் என அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் மிச்சேல் சிஷன் தெரிவித்துள்ளார்.
அப்ப இவ்வளவு நாளும் நடந்த போராட்டம் ....தமிழ் மக்கள் போராட்டம்....இனிமேலும் தமிழ் மக்கள் போராட்டம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.