Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தீப ஆரத்தி எடுப்பது எதற்காக?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தீப ஆரத்தி எடுப்பது எதற்காக?

 
arthi1.jpg
 
 
ம் வழிபாட்டு முறைகளில் பலவும் காரணம் புரியாத சடங்குகளாகவும் சம்பிரதாயங்களாகவும் ஆகி விடுகின்றன. அவற்றை அப்படியே நாமும் பின்பற்றுகிறோமே ஒழிய அவற்றில் புதைந்துள்ள ஆழ்ந்த பொருளை நாம் உணரத் தவறி விடுகிறோம்.  உதாரணத்திற்கு கோயில்களில் இறைவனுக்கு தீப ஆரத்தி எடுப்பதை எடுத்துக் கொள்வோம். தீப ஆரத்தி எடுப்பதை நாம் நாள் தோறும் பார்க்கிறோம் என்றாலும் அது எதற்காக என்றும், ஆரத்தி எடுப்பதன் பின்னால் உள்ள தத்துவம் என்ன என்றும் நம்மில் பெரும்பாலானோர் அறிவதில்லை. அதன் உண்மைப் பொருளை இப்போது பார்ப்போம்.
 
பூஜையில் இறைவனுக்குச் செய்யப்படும் பதினாறு வகை உபசாரங்களில் தீப ஆரத்தியும் ஒன்று. அதை வடமொழியில் ஷோடச உபசாரா என்று சொல்வார்கள். பூஜை காலத்தில் தீப ஆரத்தி எடுப்பதற்கு முன்பு இறைவன் விக்கிரகத்தின் முன் திரை போட்டு இருப்பார்கள். அந்தத் திரை மறைப்பதால் நம்மால் இறைவனைக் காண முடியாது. நான்என்னும் அறியாமைத் திரை நம்முள் இருக்கும் வரை அதைத் தாண்டி உள்ள எல்லாம் வல்ல இறைவனை நம்மால் அறிந்து கொள்ள முடியாது என்பதை அது குறிக்கிறது. அந்தத் திரை விலகினால் மட்டுமே இறைவனைக் காண முடியும். அப்போதும் கூட இறைவன் மிகத் தெளிவாகத் தெரிவது இல்லை. இறைவனை மிகத் தெளிவாக அறிய ஞானம் என்ற விளக்கு வேண்டும். அந்த ஞான விளக்கொளி இருந்தால் தான் இறைவனை முழுமையாகத் தரிசிக்கும் அனுபவம் வாய்க்கும். அந்த ஞான ஒளி தான் தீப ஆரத்தி. நான் என்னும் ஆணவத் திரை விலகிய பின்னர் ஞானத்தின் துணையுடன் இறைவனைக் காண முடியும் என்பதை தீப ஆரத்தி விளக்குகிறது.
 
திரை விலகுதல், தீப ஆரத்தி காட்டுதல், இருள் நீங்குதல், இறைவனைக் காணல் எல்லாம் ஏக காலத்தில் நிகழ்வது போல ஆணவம் விலகி, ஞானம் பெற்று, அறியாமை நீங்கி, இறைவனை உணர்தல் எல்லாம் ஏக காலத்தில் மனிதன் மனதில் நிகழ வேண்டும் என்பதை தீப ஆரத்தி குறிப்பால் உணர்த்துகிறது.
 
உள்ளத்தில் ஞான விளக்கேற்றுவது குறித்து பத்தாம் திருமுறையில் திருமூலர் மிக அழகாகக் கூறுவார்.
  விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்

     விளக்கினின் முன்னே வேதனை மாறும்

     விளக்கை விளக்கும் விளக்கு உடையார்கள்

     விளக்கில் விளங்கும் விளக்காவர் தாமே!

இதன் பொருள்: உங்களுக்குள் இருக்கும் ஞான விளக்கை ஏற்றி பரஞான வெளியாக இருக்கும் பரம் பொருளை அறியுங்கள். அந்த ஞான விளக்கின் முன்னே உங்கள் வேதனைகள் மாறும். அந்த ஞான விளக்கை விளங்கிக் கொள்ளும் ஞானம் உடையவர்கள் தாங்களே ஞான விளக்காக விளங்குவார்கள்.
 
(ஞான விளக்கின் ஒளியின் அனைத்தையும் காணும் போது அறியாமையால் நாம் உணர்கின்ற துன்பங்கள் தானாக மாறி விடும் என்றும் ஞானம் பெற்றவர்கள் தாமாக மற்றவர்களுக்கு ஞான விளக்காக இருந்து வழிகாட்டுவார்கள் என்றும் திருமூலர் விளக்குகிறார்.)
 
கற்பூர தீப ஆரத்தியில் இன்னொரு மெய்ஞான உண்மை வலியுறுத்தப் படுகிறது. கற்பூரம் ஏற்றப்படும் போது அது எரிந்து ஒளி கொடுத்து பின் கடைசியில் இருந்த சுவடே இல்லாமல் முடிந்து விடுகிறது. கற்பூரம் நான், எனது என்ற எண்ணங்களால் ஏற்படும் வாசனைகளைக் குறிக்கிறது. இறைவனில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு வாழும் தன்மையைக் குறிக்கிறது. ஆனால் எல்லாம் இறைவன் என்ற ஞானம் பற்றிக் கொள்ளும் போது மனிதனின் வாசனைகளும், அறியாமையும் கொஞ்சம் கொஞ்சமாய் அழிய மற்றவர்களுக்கு ஒளி தரும் வாழ்க்கையை மனிதன் வாழ ஆரம்பிக்கிறான். அவன் காலம் முடிந்து விடும் போது அவன் வாசனைகளும் முடிந்து போகின்றன. ஒளிமயமான, உபயோகமான வாழ்க்கை வாழ்ந்து முடித்து இருந்த சுவடில்லாமல் அவன் இறைவனுடன் ஐக்கியமாகி விடுகிறான். இது கற்பூர தீப ஆரத்தி மூலமாக உணர்த்தப்படும் இன்னொரு மாபெரும் தத்துவம்.
 
தீப ஆரத்தியின் முடிவில் தீபத்தின் மேல் நம் கைகளை வைத்துக் கண்களில் ஒற்றிக் கொண்டு தலையையும் தொட்டுக் கொள்கிறோம்.இந்த ஞான ஒளி என் அகக் கண்களைத் திறக்கட்டும். என் எண்ணங்களும், நோக்கங்களும், அறிவும் மேன்மையானதாக இருக்கட்டும்.’ என்ற பாவனையில் செய்யப்படும் செயலே அது.
 
எந்திரத்தனமாகக் கோயிலுக்குச் சென்று தீப ஆரத்தியைக் கண்டு இறைவனை வணங்கி அங்கிருந்து எந்த பாதிப்பும் இல்லாமல் கிளம்பி விடாமல் மேற்கண்ட தத்துவக் கண்ணோட்டத்தோடு தீப ஆரத்தியைக் கண்டு வணங்குங்கள். அதுவே உண்மையான பயனுள்ள வழிபாட்டு முறை. அப்படி உயர்ந்த பாவனையுடன் வழிபட ஆரம்பிக்கும் போது மிக மேன்மையான ஆன்மிக அனுபவத்தை உணர்வீர்கள். உண்மையான வழிபாட்டின் பலனை அடைவீர்கள்!
 
சரி அப்படியானால் மனிதர்களுக்கும் ஆரத்தி எடுக்கிறார்களே அது எதற்காக என்ற கேள்வி ஒருவர் மனதில் எழுவது இயற்கை. அதற்கான பதிலையும் பார்ப்போம்.
 
புதிதாய் திருமணம் முடிந்து வீட்டுக்கு வரும் தம்பதியர், குழந்தை பெற்றுக் கொண்டு வீடு திரும்பும் தாய், தொலை தூரங்களுக்குச் சென்று வெற்றிகரமாக ஒரு செயலை முடித்து விட்டு வருபவர் முதலானோருக்கு ஆரத்தி எடுக்கும் வழக்கம் நம் நாட்டில் இருக்கிறது.
 
அவர்களுக்கு ஆரத்தி எடுப்பது இறைவனுக்கு ஆரத்தி எடுக்கும் முறையில் இருப்பதில்லை. அவர்களுக்கு ஒரு தாம்பாளத் தட்டில் தண்ணீருடன் மஞ்சள் மற்றும் சுண்ணாம்பு கலந்து தண்ணீரை சிவப்பாக்கிக் கொள்கிறார்கள். பின் எண்ணெய் தோய்த்த திரியை விளிம்பில் வைத்து தீபமாக்கி ஆரத்தி எடுக்கிறார்கள்.
 
ஒவ்வொரு மனிதனைச் சுற்றிலும் ஆரா(aura) என்ற சூட்சுமப் பகுதி இருக்கிறது. மனிதனுக்கு ஏற்படும் திருஷ்டி மற்றும் அவனைச் சேரும் தீய கிருமிகள் ஆகியவை அந்த சூட்சும பகுதியில் முதலில் பதிந்து பின்னரே அவனுள் புகுகின்றன. திருமணம், குழந்தை பெறுதல், வெற்றியடைதல் ஆகியவற்றால் பலருடைய  திருஷ்டி மணமக்கள், தாய்-சேய், வெற்றியாளர் மீது அதிகம் விழ வாய்ப்பு அதிகம் உள்ளது.
 
மஞ்சள் மற்றும் சுண்ணாம்பு இரண்டிற்கும் விஷக் கிருமிகளை அழிக்கும் சக்தி இருப்பதாக நம் முன்னோர் கண்டிருந்தார்கள் எனவே தான் திருஷ்டி கழிக்கும் சக்தி உள்ள கிருமி நாசினிகளான மஞ்சளையும் சுண்ணாம்பையும் தண்ணீரில் கலந்து திருஷ்டி கழித்து அந்தத் தண்ணீரை வெளியேயே கொட்டி விடுகிறார்கள். வீட்டினுள் நுழையும் முன்பே ஆரா சரீரத்தில் சேர்ந்துள்ள திருஷ்டி மற்றும் கிருமிகளை அகற்றி தூய்மைப்படுத்திய பின்னரே சம்பந்தப் பட்டவர்களை வீட்டுக்குள் அழைத்துக் கொண்டு போகும் வழக்கம் உள்ளது.
 
எனவே அது போல் ஆரத்தி எடுக்கும் போது பொருள் அறிந்து சரியான பாவனையுடன் செய்வது முக்கியம். அப்போது தான் அதன் பலனும் முழுமையாக இருக்கும்.
 
-என்.கணேசன்
 
நன்றி: தினத்தந்தி 

தற்போதைய பூசாரிகள் ஆரத்தி எடுப்பது தட்டில் எவ்வளவு பணம் விழுமென்றே, அதுவும் பசையுள்ள ஆட்களாக பார்த்து முதலில் தொட்டு கும்பிட விடுவார். கொஞ்சம் கூடுதலாக தட்டில் விழுந்தால் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் (கைக்குழந்தைக்கு கூட) பூ பழங்கள் கொடுத்துவிடுவார், இதுதான் தற்போதைய காலம்  

  • கருத்துக்கள உறவுகள்

கோயில்களில் இறைவனுக்கு தீப ஆரத்தி எடுப்பதை எதற்காக என்றும், ஆரத்தி எடுப்பதன் பின்னால் உள்ள தத்துவம் என்ன என்பதிலும் உள்ள பல்வேறு உண்மைப் பொருள்களில் இதுவும் ஒன்று. கோவில்கள் அனேகமாக உயரமான இடங்களில் குன்றுகளின் மேலேயே காணப்படுகிறது. கும்பிடச் செல்பவர்கள் உயரமான இடத்திற்கு எறிச்செல்லும் பொழுது உடற்பயிற்சியுடன் சுத்தமான காற்றைச் சுவாசிப்பதற்கும் இது காரணமாகிறது. மூலஸ்தானம் பலவேறுபட்ட தன்மையுடைய கருங்கற்களினால் கட்டப்படுகிறது. பிரகாரம் ஒரு சிறு வாசலைக் கொண்டதாகவும் வாசலைத்தவிர உட்புறம் காற்றுப் புகவோ வெளியேறவோ வழியற்றதாகவும் கட்டப்படுகிறது. மூலஸ்தானத்தின் உள்ளே தேங்காய் எண்ணையில் விளக்குகள் எற்றப்படுகின்றன அதில் உண்டாகும் ஆவி அங்குள்ள கருங்கற்களில் படிந்து ஒருவகை மருத்துவத் தன்மையைப் பெற்று உள்ளே நிறைகிறது. சூடத்திலும் மருத்துவத் தன்மை உண்டு. பூசகர் ஒரு சூடத்தை எற்றிக் காட்டும் பொழுது சூடத்திலிருந்து வெளிப்படும் புகையும் ஏற்கெனவே அங்கு நிறைந்திருக்கும் ஆவியுடன் கலந்து வாசல்வழியாக வெளியே தள்ளப்படுகிறது. சூடம் எற்றிக் காட்டப்படும் போது பக்தர்கள் ஆ..அரோகரா என்று வாய்திறக்கும்போது உள் இழுக்கப்படும் சுவாசத்துடன் வெளிவரும் ஆவியும் உள்ளிழுக்கப்படுகிறது. சூடமானது மூன்று, ஐந்து, ஒன்பது என அதிகரித்துக் காட்டப்படும்போது, மூச்சுமுட்ட ஆ....அரோகராவும் அதிகரித்து, ஆவியும் அதிகளவு உள்ளிழுக்கப்படுகிறது. அப்படி உள்ளிழுக்கப்படும் மருத்துவத் தன்மை கொண்ட ஆவியானது பல நோய்க்கிருமிகளை உடம்பிலிருந்து நீக்கிவிடும் மருந்தாகிறது, சாத்திர முறைப்படி கட்டப்பட்ட மூலஸ்தானத்தில் பூசை செய்யும் பூசாரி எந்த நோய்களும் இன்றி ஆரோக்கியமாக வாழ்வதை அவதானிக்கலாம்.

 

அத்தோடு தீப ஆராதனை செய்யப்டும் போது, ஓம் என்ற முறையில் ஒளி சுற்றப்படுவதால், பக்தர்களுக்கு இடப் புறம் வலப்புறமாக‌ கண் பயிற்சியும் கிடைக் கிறது.

 

  • கருத்துக்கள உறவுகள்

கோயில்களில் இறைவனுக்கு தீப ஆரத்தி எடுப்பதை எதற்காக என்றும், ஆரத்தி எடுப்பதன் பின்னால் உள்ள தத்துவம் என்ன என்பதிலும் உள்ள பல்வேறு உண்மைப் பொருள்களில் இதுவும் ஒன்று. கோவில்கள் அனேகமாக உயரமான இடங்களில் குன்றுகளின் மேலேயே காணப்படுகிறது. கும்பிடச் செல்பவர்கள் உயரமான இடத்திற்கு எறிச்செல்லும் பொழுது உடற்பயிற்சியுடன் சுத்தமான காற்றைச் சுவாசிப்பதற்கும் இது காரணமாகிறது. மூலஸ்தானம் பலவேறுபட்ட தன்மையுடைய கருங்கற்களினால் கட்டப்படுகிறது. பிரகாரம் ஒரு சிறு வாசலைக் கொண்டதாகவும் வாசலைத்தவிர உட்புறம் காற்றுப் புகவோ வெளியேறவோ வழியற்றதாகவும் கட்டப்படுகிறது. மூலஸ்தானத்தின் உள்ளே தேங்காய் எண்ணையில் விளக்குகள் எற்றப்படுகின்றன அதில் உண்டாகும் ஆவி அங்குள்ள கருங்கற்களில் படிந்து ஒருவகை மருத்துவத் தன்மையைப் பெற்று உள்ளே நிறைகிறது. சூடத்திலும் மருத்துவத் தன்மை உண்டு. பூசகர் ஒரு சூடத்தை எற்றிக் காட்டும் பொழுது சூடத்திலிருந்து வெளிப்படும் புகையும் ஏற்கெனவே அங்கு நிறைந்திருக்கும் ஆவியுடன் கலந்து வாசல்வழியாக வெளியே தள்ளப்படுகிறது. சூடம் எற்றிக் காட்டப்படும் போது பக்தர்கள் ஆ..அரோகரா என்று வாய்திறக்கும்போது உள் இழுக்கப்படும் சுவாசத்துடன் வெளிவரும் ஆவியும் உள்ளிழுக்கப்படுகிறது. சூடமானது மூன்று, ஐந்து, ஒன்பது என அதிகரித்துக் காட்டப்படும்போது, மூச்சுமுட்ட ஆ....அரோகராவும் அதிகரித்து, ஆவியும் அதிகளவு உள்ளிழுக்கப்படுகிறது. அப்படி உள்ளிழுக்கப்படும் மருத்துவத் தன்மை கொண்ட ஆவியானது பல நோய்க்கிருமிகளை உடம்பிலிருந்து நீக்கிவிடும் மருந்தாகிறது, சாத்திர முறைப்படி கட்டப்பட்ட மூலஸ்தானத்தில் பூசை செய்யும் பூசாரி எந்த நோய்களும் இன்றி ஆரோக்கியமாக வாழ்வதை அவதானிக்கலாம்.

 

இதற்கு ஏதாவது அறிவியல் ரீதியான ஆய்வுகள் சான்றுகளாக உள்ளனவா..??!

 

நச்சியல்

 

அது உடலுக்குள் உணவாக பேரளவில் செலுத்தப்படும்போது நச்சுத்தன்மையுடையதாகும் மற்றும் திடீர் நோய்த் தாக்குதல், குழப்பம், எரிச்சல் தரும் தன்மை மற்றும் நரம்பு தசையின் அதிகபட்ச இயக்கம் போன்றவற்றிற்குக் காரணமாகலாம்.கடுமை மிக்க சிகிக்சைகளில்,கற்பூரத்தின் நோவகற்றும் பயன்பாடும் கூட குடல் நச்சு பாதிப்பிற்கு வழிவிடலாம்.[14][15] வயது வந்தோரில் மரணம் விளைவிக்கக்கூடிய மருந்தளவு 50-500 மிகி/கிகிராம் அளவு விகிதங்களில் (வாய்வழியாக) இருக்கலாம்.பொதுவாக,2 கிராம் தீவிர நச்சுக்குணமுள்ளதாகும்.மேலும்,4 கிராம் மரணத்தை ஏற்படுத்தும் ஆற்றலுடையதாகும்.

 

1980 ஆம் ஆண்டில்,அமெரிக்க ஒன்றிய உணவு மற்றும் மருந்து நிர்வாகம் நுகர்வோர் பொருட்களில் 11% வரை கற்பூரத்தை அனுமதித்து வரையறைச் செய்தது.மேலும்,ஃபெடரல் டிரக் ஏஜென்சி (FDA) யினால் கற்பூரத்தின் மருத்துவ பயன்பாடானது,கற்பூர நிறை எண்ணெய்,கற்பூர எண்ணெய்,கற்பூர பூச்சுத் தைல மருந்து மற்றும் காம்போரேடட் லினமெண்ட் ("வெள்ளை கற்பூர இன்றியமையா எண்ணெய்" தவிர,அது குறிப்பிடத்தக்க கற்பூர அளவு கொண்டிருப்பதில்லை என்பதால்)ஆகியவற்றை மாற்று சிகிச்சை முறைகள் இருக்கின்ற காரணத்தினால்,ஊக்குவிக்கப்படவில்லை.ஃபெடரல் டிரக் ஏஜென்சி (FDA) விதிவிலக்காக தோல் தொடர்புடைய பயன்பாடுகளில்,சிகிச்சைக்கான பொடிகள் போன்றவற்றில் சிறிதளவே கற்பூரம் இடம் பெற்றிருப்பதால் அதைப் பயன்படுத்த ஊக்குவிக்கிறது.

 

 

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D

 

https://en.wikipedia.org/wiki/Camphor

 

CAMPHOR
 
page 2 of 6
 
 
This Fact Sheet is a summary
source of information of all
potential
and most severe health hazards that may result from
exposure. Duration of exposure,
concentration of the substance
and other factors will affect your
susceptibility to any of the
potential effects described below.
---------------------------------------------------------------------------
 
HEALTH HAZARD INFORMATION
 
 
Acute Health Effects
 
The following acute (short-term
) health effects may occur
immediately or shortly after exposure to
Camphor
:
 
* Contact can irritate the skin and eyes.
* Breathing
Camphor
can irritate the nose and throat causing
coughing and wheezing.
* Exposure can cause headaches, nausea, stomach pain,
mental confusion, and seizures (fits). Higher exposures can
cause unconsciousness and death.
 
Chronic Health Effects
The following chronic (long-term) health effects can occur at
some time after exposure to
Camphor
and can last for months
or years:
 
Cancer Hazard
* According to the information presently available to the New
Jersey Department of Health and Senior Services,
Camphor
has been tested and has not been shown to cause
cancer in animals.
 
Reproductive Hazard
* According to the information presently available to the New
Jersey Department of Health and Senior Services,
Camphor
has not been tested for its ability to affect
reproduction.
 
Other Long-Term Effects
*
Camphor
may affect the kidneys and nervous system.

 

 

http://nj.gov/health/eoh/rtkweb/documents/fs/0334.pdf

 

 

Edited by nedukkalapoovan

அத்தோடு தீப ஆராதனை செய்யப்டும் போது, ஓம் என்ற முறையில் ஒளி சுற்றப்படுவதால், பக்தர்களுக்கு இடப் புறம் வலப்புறமாக‌ கண் பயிற்சியும் கிடைக் கிறது.

sarcastic statement?

sarcastic statement?

இல்லை இது நான் எங்கோ வாசித்தது மூலம் நினைவில் இல்லை, சுஜாதாவின் கற்றதும் பெற்றதுமாக இருக்கலாம்..

 

Edited by உதயம்

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு ஏதாவது அறிவியல் ரீதியான ஆய்வுகள் சான்றுகளாக உள்ளனவா..??!

 

 

அறிவியல் ரீதியான ஆதாரங்களை என்னால் தர முடியவில்லை. கடவுளைக் கும்பிட குன்றின்மேல் ஏறிக் கற்பூரப் புகையை உள்ளிழுக்கும் அனுபவத்தை நான் பெறுவதற்கு என்னிடமிருந்து பூசாரியால் பிடுங்கப்பட்ட பணத்தின் நினைவையும் மீறி அந்தப் புகை உடலுக்கும், மனத்திற்கும் ஏற்படுத்திய பரவசத்தையும், இனிய உணர்வுகளையும் அனுபவித்துள்ளேன். அதனால் எந்தக் கெடுதலும் எனக்கு ஏற்பட்டதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

கற்பூரம் சிறந்த ஒரு மூலிகைப் பொருளாக இல்லாவிடில் நம் முன்னோர்கள் அதனை ஆண்டவனை ஆராதிப்பதற்கு பயன்படுத்தியிருக்க மாட்டார்கள். அந்த மூலிகையின் தாக்கங்கள் பற்றியும் அறியாது அவர்கள் பயன்படுத்தினார்கள் என்று சொல்லமுடியாது. எதனையும் அளவோடு பயன்படுத்தினால் அதன் பயனை அடையலாம்.

 

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.

 

 

ஈகரை இணையத்திலிருந்து;-

 

கற்பூரம், வெள்ளை நிறமற்ற மெழுகுத்தன்மை கொண்ட அதிக நாற்றமுள்ள கட்டி, சினமோனம் காம்ஃபோரா (cinnamonum camphora) என்ற மரத்திலிருந்து வருகிறது. இது ஆசியா நாடுகளில் வளரக்கூடிய மரம். இதன் வேதிய விதிமுறை(Formula) C10H16O . கற்பூர மரங்கள் உஷ்ண நாடுகளான இந்தியா, ஈஜிப்ட் மற்றும் அர்ஜென்டினா நாடுகளில் அதிகமாக வளர்கின்றன. இம்மரத்தின் வேர், தண்டு மற்றும் காம்புகளில் இருந்து கற்பூரம் எடுக்கப்படுகிறது.

 

நவீன உலகத்தில் கற்பூரம் பூச்சிகொல்லி தயாரிக்க பயன்படுகிறது. சில பட்டாசுக்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது. மருத்துவ ரீதியில் கற்பூரம், மயக்கம் தெளிவிக்கவும், இருதயத்திற்கும் மற்றும் பூச்சிக்கடிக்கும் பயன்படுகிறது. நரம்பு சம்பந்தமான நோய்களுக்கு கற்பூரம் சிறிய அளவில் பயன்படுகிறது. சிறிய அளவில் சுமார் 50 மில்லி கிராம் கற்பூரத்தை உண்ணலாம். அதிகப்படியான கற்பூரம் உடலுக்கு விஷமாகும்.

கற்பூர மரங்கள் மிக மெதுவாக வளரும். முன்பு சைனா நாட்டில் கற்பூர மரங்களால் தான் பெட்டிகள் தயாரிக்கப்பட்டன. அதன் எண்ணை வாடையால் பூச்சிக்கள் வராது. பொம்மலாட்டத்திற்கு கூட இந்த மரங்கள் பயன்பட்டன. கண்ணுக்கு தெரியாத கிருமிகளை அழிக்கக் கூடிய தன்மை பெற்றது கற்பூரம்.

 

  • கருத்துக்கள உறவுகள்

பாஞ்ச், இந்த மரம், இங்கு சிட்னியில் பல இடங்களில் வளர்கின்றது. பெரிய அரசமரம் போல வளரும். இதை, இங்கு களைகளுடன் வகைப்படுத்தியுள்ளார்கள். இது அவுஸ்திரேலியாவின் இயற்கைத் தாவரமல்ல. தங்கம் கிண்டி எடுக்கப்பட்ட  காலப்பகுதியில், சீனர்கள் கூலிகளாக இங்கு வந்தார்கள். அவர்கள், இறந்து போனால், சவப்பெட்டியினுள். உடலுடன், இந்த மரத்தின் சீவல்களையும் போட்டுக் கப்பலில் அனுப்புவது வழக்கமாம். உடல், சீனாவுக்குப் போனபின்பும், பழுதடையாமல் இருக்குமாம். இந்த மரத்தின் பழங்களை, வேறு பறவைகள் சாப்பிடுவதில்லை. இந்த மரத்தின் கீழும், ஒரு புல்லும் கூட வளர்வதில்லை. எனது வீட்டிற்கு அண்மையில், மூன்று மரங்கள் நிற்கின்றன. இந்த மரங்களின் கிளைகளை, வெட்டும்போது கற்பூரவாசனை, நீண்ட தூரத்துக்கு மணக்கும்.

 

Starr_001228-0130_Cinnamomum_camphora.jp

  • கருத்துக்கள உறவுகள்

நுணாவிலான் அவர்களே! உங்களின் தீப ஆரத்தித் தேடலானது, கற்பூரத்தின் தன்மைகள் பற்றி நெடுக்ஸ் அவர்கள் மூலம் வெளிப்படுத்தி, அறியாதோர் அறியத்தந்து, புங்கையூரன் புண்ணியத்தில், கற்பூர மரத்தையே வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது. என்ன ஒரு அழகான காட்சி. காட்சியில் லயித்தபோது நாசியில் கற்பூர வாசனையை நுகர்வதுபோன்றும் ஓர் உணர்வு.

 

Edited by Paanch

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.