Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்க நடை சீமான் .

Featured Replies

936110_477712568968536_1700400313_n.jpg

  • Replies 246
  • Views 15.2k
  • Created
  • Last Reply

ஏன் அர்ஜூன் அண்ணா உங்களுக்கு இப்படி ஒரு வரவேற்ப்பு கிடைக்கவில்லை என்ற கவலையோ ? :D

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் அர்ஜூன் அண்ணா உங்களுக்கு இப்படி ஒரு வரவேற்ப்பு கிடைக்கவில்லை என்ற கவலையோ ? :D

சீ

நீங்க வேற

அவரது தரம் உலகத்தரத்துக்கு நிகரானது :lol:  :D

  • தொடங்கியவர்

கானமயிலாட கண்டிருந்த வான்கோழி பாட்டுத்தான் நினைவு வருகின்றது .

  • கருத்துக்கள உறவுகள்

இதில் என்ன தப்பிருக்கிறது என்று இதை தவறு என்று சொல்பவர்கள் தயவு செய்து விளக்கவும்...

  • கருத்துக்கள உறவுகள்

இதில் என்ன தப்பிருக்கிறது என்று இதை தவறு என்று சொல்பவர்கள் தயவு செய்து விளக்கவும்...

1-  எங்கு பார்த்தாலும் புலிக்கொடி  பறக்குது

2- கறுப்பு உடை (யாரையோ நினைவு படுத்துகிறது)

3- நெஞ்சிலே புலி

4- பிரபாகரன் எம் தலைவன் என்கிறார்கள்

5-

6-

இவை  அவருக்கு அலர்சி  தரக்கூடியவை.

:(

  • தொடங்கியவர்

தவறு ஒன்றும் இல்லை .இந்தியா ஒரு ஜனநாயக நாடு :D .நீங்கள் விரும்பியதை செய்யலாம் .பவர் ஸ்டார் தான்தான் சூப்பர் ஸ்டாருக்கு போட்டி என்பது போலத்தான் உதுவும் .

இங்கு சீமானை பார்க்க சிரிப்புதான் வருகின்றதே ஒழிய ஒரு மரியாதை வரவில்லை .(புலிகேசி தான் நினைவில் வருகின்றது ).

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு விடயத்தை தவறு என்று சுட்டிகாட்டிய நீங்கள் அதற்கு தரும் விளக்கம் இதுவா..? இந்தப்படம் ஏன் தவறாக உங்களுக்குபட்டது இங்கு போடும் அளவுக்கு..? அதற்கு விளக்கம் தாருங்கள் அண்ணா..அதைப்பற்றி பேசுவோம்...

  • கருத்துக்கள உறவுகள்

தவறு ஒன்றும் இல்லை .இந்தியா ஒரு ஜனநாயக நாடு :D .நீங்கள் விரும்பியதை செய்யலாம் .பவர் ஸ்டார் தான்தான் சூப்பர் ஸ்டாருக்கு போட்டி என்பது போலத்தான் உதுவும் .

இங்கு சீமானை பார்க்க சிரிப்புதான் வருகின்றதே ஒழிய ஒரு மரியாதை வரவில்லை .(புலிகேசி தான் நினைவில் வருகின்றது ).

ஐயா

இன்று தமிழகத்தில் பெரும் மாற்றங்களுக்கு காரணகர்த்தா  இந்த சீமான்

இதை உலகமே அறியும்

நீங்கள்  உங்களுக்கு பிடிக்காததை ஒருத்தர் ஆதரிக்கின்றார் என்பதற்காக

தமிழ் மக்களுக்கு கிடைக்கும் ஒரு சில ஆறுதல்களையும்

பவர் ஸ்டார் என்று கேவலப்படுத்தி மட்டம் தட்டுவது

மிகவும் கேவலமான அரசியல்

இது அவரை ஒன்றும் செய்யாது

மல்லாக்காய்க்கிடந்து துப்புவது நீங்கள் தான்.

தோல்வியின் வெளிப்பாடு இது

தொடருங்கள்.......... :( 

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் அவருக்கு புலிக்கொடி, தலைவர் படம், இதெல்லாம் அலர்ச்சி (ஒவ்வாமை) என்று தெரியாதோ ?  :D  :icon_idea:

  • தொடங்கியவர்

உங்கள் குண்டு சட்டி அரசியலை தொடர்ந்து நடாத்துங்கள் .கடந்த இருபது வருடங்கள் நீங்கள் சொன்னவைகள் ,எழுதியவைகள் எல்லாம் எமக்கு தெரியும் பின்னர்  என்ன நடந்தது என்றும் எமக்கு தெரியும் .

சீமானுக்கு தனது பலம்  பற்றி தெரிந்திருக்கும் அளவிற்கு உங்களுக்கு அவரின் பலம்  தெரியவில்லை .புலிகளும் புலி ஆதரவாளர்களும் கனவுலகில் இருந்து பழக்கபட்டுவிட்டார்கள். அதிலிருந்து வெளிவருவது மிக கஷ்டம் .

"தமிழகத்தில் பெரும் மாற்றம் கொண்டுவந்தது சீமான் அதை உலகமே அறியும்" என்று எழுதும் போது உங்கள் உலகம் எந்த அளவு என்று விளங்குகின்றது .

இன்று தேர்தல் நடந்தால் தி.மு,க எடுக்கும் வாக்குகளில் கால்வாசியை கூட சீமானால் எடுக்கமுடியாது .

தோல்வியின் வெளிப்பாடு? யார் தோற்றது அண்ணை .

  • கருத்துக்கள உறவுகள்
எங்கட தலைவருக்கு மரியாதை அவருடைய தியாகத்தாலும்,அர்ப்பணிப்பாலும் தான் கிடைத்தது.என்ன தான் அவரை மாதிரி வெளிக்கிட்டு,அவரை மாதிரி நடக்க வெளிக்கிட்டாலும் இவர் தலைவராவாரா? எதற்காக தன்னுடைய சுயத்தை சீமான் இழக்கிழாரோ தெரியவில்லை :unsure:
 
'உயர,உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது' என்ட பழமொழி தான் ஞாபகம் வந்து தொலைக்குது.எது எப்படி இருந்தாலும் எப்படி இருக்க,உடுக்க வேண்டும் என்பது அவரவர் விருப்பம்

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் வீழ்த்த வேண்டிய ஆள் சீமான் அண்ணா இல்லை..இதனால் இழப்பு ஈழத்தமிழர் நமக்குத்தான் என்பதை மறந்துவிடாதீர்கள்..எதற்காக விமர்சிக்கிறீர்கள்,யாரை விமர்சிக்கிறீர்கள் என்ற அடிப்படை புரிந்துணர்வே இல்லாமல் ஒருசிலரைப்பார்த்துவிட்டு ஒவ்வொருவராய் வாந்தி எடுக்கிறீர்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட தலைவருக்கு மரியாதை அவருடைய தியாகத்தாலும்,அர்ப்பணிப்பாலும் தான் கிடைத்தது.என்ன தான் அவரை மாதிரி வெளிக்கிட்டு,அவரை மாதிரி நடக்க வெளிக்கிட்டாலும் இவர் தலைவராவாரா? எதற்காக தன்னுடைய சுயத்தை சீமான் இழக்கிழாரோ தெரியவில்லை :unsure:
 
'உயர,உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது' என்ட பழமொழி தான் ஞாபகம் வந்து தொலைக்குது.எது எப்படி இருந்தாலும் எப்படி இருக்க,உடுக்க வேண்டும் என்பது அவரவர் விருப்பம்

இங்கு தான் சிக்கலே ரதி

நீங்கள் பிரபாகரனாக

தலைவராக அவரை ஏன் நினைக்கின்றீர்கள்???

அவரும் அப்படி எங்கும்  சொன்னதாக தெரியவில்லை.

இந்தப்படத்திலுள்ள  அவரது தம்பிகள் தொண்டர்கள் அவருக்கு இருக்கும் ஆபத்துக்குறித்து பாதுகாப்புக்கொடுப்பது அவரவர் உரிமையல்லவா.

அது தேவையும் கூட அல்லவா.

உயர,உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது' என்ட பழமொழி தான் ஞாபகம் வந்து தொலைக்குது.

இந்த  வார்த்தை தேவையா?

நாமாகவே ஒருவரை இன்னொருவருடன் ஒப்பிட்டு அவரைத்தாழ்த்த இது போன்ற வார்த்தைகளைப்பாவிப்பது  எமக்காக குரல் கொடுக்கும் அவர்களைச்சீண்டாதா??? :(

  • கருத்துக்கள உறவுகள்

சீமானை தனிப்பட பிடிக்காத எல்லோருக்கும் சீமான் அண்ணாவை விமர்சிக்க சப்பை போட்டோவும்,ஏதாவது கிராபிக்ஸ் படம்களும்தான் கிடைக்கிறது..யாரிடமும் அவர்களது கொள்கைகளை கேள்விகேட்கவோ செயற்பாடுகளை கேள்விகேட்கவோ காரணங்கள் இல்லை...இதுபோதும் அவர்கள் பாதை சரியாகத்தான் போகிறது என்பதை தீர்மானிக்க..

Edited by சுபேஸ்

சீமானின் எழுச்சி  என்பது பலருக்கும் ஏதோ ஒரு வகையில் தடையாக இருக்கலாம்

ஆனால் அதை வெளிப்படையாக இங்கு அவர்களால் சொல்லமுடியாது.

சீமானை பிடிக்காமலிருக்க  ..

1- மதம் காரணமாக இருக்கலாம்

2- சாதி  காரணமாக இருக்கலாம்

3- திராவிடம் காரணமாக இருக்கலாம்

4- புலிகள் அல்லது பிரபாகரன் காரணமாக இருக்கலாம்

5- பிரதேசம் காரணமாக இருக்கலாம்

6- அவர் பேசும் அழகு தமிழ் காரணமாக இருக்கலாம்

7- கட்சி  சாராத அரசியல் காரணமாக இருக்கலாம்

8- அவரது தம்பிகளின் ஒழுக்கம் காரணமாக இருக்கலாம்

9- அல்லது இது எதையுமே பேச  செயற்படுத்த தயங்கும் எமது சோம்பல் காரணமாக இருக்கலாம்

.......................

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் குண்டு சட்டி அரசியலை தொடர்ந்து நடாத்துங்கள் .கடந்த இருபது வருடங்கள் நீங்கள் சொன்னவைகள் ,எழுதியவைகள் எல்லாம் எமக்கு தெரியும் பின்னர்  என்ன நடந்தது என்றும் எமக்கு தெரியும் .

சீமானுக்கு தனது பலம்  பற்றி தெரிந்திருக்கும் அளவிற்கு உங்களுக்கு அவரின் பலம்  தெரியவில்லை .புலிகளும் புலி ஆதரவாளர்களும் கனவுலகில் இருந்து பழக்கபட்டுவிட்டார்கள். அதிலிருந்து வெளிவருவது மிக கஷ்டம் .

"தமிழகத்தில் பெரும் மாற்றம் கொண்டுவந்தது சீமான் அதை உலகமே அறியும்" என்று எழுதும் போது உங்கள் உலகம் எந்த அளவு என்று விளங்குகின்றது .

இன்று தேர்தல் நடந்தால் தி.மு,க எடுக்கும் வாக்குகளில் கால்வாசியை கூட சீமானால் எடுக்கமுடியாது .

தோல்வியின் வெளிப்பாடு? யார் தோற்றது அண்ணை .

உங்கள் அரசியலை எழுதவும்.என்ன தரத்தில் உள்ளது என்பதை வாசகர்கள் சொல்வார்கள். இந்த படத்தை போட்டு என்னத்தை நிறுவ முற்படுகிறீர்கள் என நாலு வரி எழுத தெரியாதோ?
 
அல்லது ஒருக்கால் யாரையாவது சீண்டிப்பார்ப்போம் என்ற உள் நோக்கமா??
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்த தேசியத் தலைவர் சீமான் வாழ்க...!!

ஒரு விடயத்தை தவறு என்று சுட்டிகாட்டிய நீங்கள் அதற்கு தரும் விளக்கம் இதுவா..? இந்தப்படம் ஏன் தவறாக உங்களுக்குபட்டது இங்கு போடும் அளவுக்கு..?

தவறு என்று சொல்லி அவர் போடவில்லையே சுபேஸ்?

தலைப்புக் கூட "சிங்க நடை சீமான் என்று தான் இருக்கு" அவர் பார்த்ததை பகிர்ந்துகொள்கிறார் இதில் தவறேது?

  • கருத்துக்கள உறவுகள்

அவர் கீழே கீழே எழுதி இருப்பவற்றை வாசிக்கவும் ஜீவா..அப்ப புரியும் அவர் எந்த நோக்கத்தோடு இணைத்திருக்கிரார் என்று.. நீங்கள் நான் மேலே அர்ஜுன் அண்ணாக்கு எழுதியதை தவறு என்று காட்ட விளைகிறீர்கள்..நான் எழுதுவது தவறானால் பரவாயில்லை..நான்கூட கவலைப்படப்போவதில்லை..ஆனால் சீமான் அண்ணா எமக்கா யாரும் பேசாதபோது பேச வந்தவர் தமிழ்நாட்டில்.. இன்றுவரைக்கும் பேசிக்கொண்டிருப்பவர்...அவரை நக்கலடிக்கவும்,வசைபாடவும் நம்மவர்களுக்கு இருக்கும் ஆர்வத்தை பார்க்க புல்லரிக்குது..

கருத்துக்களம் என்றாலும் சரி, பொதுவாக என்றாலும் சரி அவரவர் தனக்குத் தனக்கு என்று சுய கருத்துக்களைக் கொண்டவர்களே அது நானாக இருந்தாலும், நீங்களாக இருந்தாலும், யாராக இருந்தாலும் அப்படி இருக்கும் போது ஒருத்தரின் கருத்தை சரி அல்லது பிழை என்று சொல்லும் உரிமை யாருக்கும் கிடைக்காது. அப்படி இருக்கும் போது அவரின் கருத்துக்கு பதில் வைக்கலாமே தவிர சரி, பிழை சொல்ல முடியாது. அதை விட பொது வாழ்க்கைக்கு வந்த பின்னர் சீமானை மட்டுமல்ல யாரையும் விமர்சிக்கலாம். விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் பொதுவாழ்க்கைக்குத் தேவை இல்லை.

இங்கு தனிப்பட்ட  சீமானுக்கான கருத்தாக யாரும் பார்ப்பதாக தெரியவில்லை. நாம் தமிழர் கட்சி தலைவரையே விமர்சிக்கிறார்கள், இதில் தவறேதும் இல்லையே. :icon_idea:

கானமயிலாட கண்டிருந்த வான்கோழி பாட்டுத்தான் நினைவு வருகின்றது .

கானமயில் ஆடும் எண்டு இப்ப என்றாலும் ஏற்றுகொண்டதட்கு நன்றி அர்யுன் அண்ணா

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த தேசியத் தலைவர் சீமான் வாழ்க...!!

நீங்கள் சீமானை சரியாக விளங்கிக் கொள்ளவில்லை என்று நினைக்கிறேன்.

அவர் தன்னை தலைவன் என்று சொல்லிக் கொள்ளும் ஒருவர் அல்ல. மேலும் தமிழர்களுக்கு தலைவன் பிரபாகரனே என்று உணர வைக்கும் ஒரு தொண்டன்.

நாம் தமிழர் கட்சி என்பது அதிகம்... இளைஞர்களை கொண்ட ஒரு கட்சி மட்டுமன்றி காங்கிரஸ்.. தி மு க .. அதிமுக.. போன்ற காட்டுமிராண்டிக் கட்சிகளின் வன்முறையையும் எதிர்கொள்ள வேண்டிய கட்சி. மேலும் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள்.. நிர்வாகிகள் படுகொலைகளும் செய்யப்பட்டு வந்துள்ள நிலையில் அக் கட்சி தமக்கென்று ஒரு இளைஞர் விழிப்புக்குழுவை வைத்துக் கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. அது கட்சிக்கு மட்டுமன்றி சமூகத்திற்கும் பயனளிக்க வேலைத்திட்டங்களைக் கொண்டிருப்பது இன்னும் சிறப்பு.

அதனை.. சிலர் போராளி அமைப்புக்களின் இராணுவக் கட்டமைப்போடு ஒப்பிட்டு பார்ப்பதன் விளைவே இத்தலைப்பு..! அது அவர்களின் அறியாமை..! :icon_idea::)

வவுனியாவில் மாணிக்கதாசன் வைத்திருந்த கொலைகாரக் குழுவை விட சீமான் வைத்திருக்கும் குழு ஆபத்தானது அல்ல இவர்கள் தமிழை நேசிக்கும் சுவாசிக்கும் மனிதர்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் சீமானை சரியாக விளங்கிக் கொள்ளவில்லை என்று நினைக்கிறேன்.

அவர் தன்னை தலைவன் என்று சொல்லிக் கொள்ளும் ஒருவர் அல்ல. மேலும் தமிழர்களுக்கு தலைவன் பிரபாகரனே என்று உணர வைக்கும் ஒரு தொண்டன்.

நாம் தமிழர் கட்சி என்பது அதிகம்... இளைஞர்களை கொண்ட ஒரு கட்சி மட்டுமன்றி காங்கிரஸ்.. தி மு க .. அதிமுக.. போன்ற காட்டுமிராண்டிக் கட்சிகளின் வன்முறையையும் எதிர்கொள்ள வேண்டிய கட்சி. மேலும் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள்.. நிர்வாகிகள் படுகொலைகளும் செய்யப்பட்டு வந்துள்ள நிலையில் அக் கட்சி தமக்கென்று ஒரு இளைஞர் விழிப்புக்குழுவை வைத்துக் கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. அது கட்சிக்கு மட்டுமன்றி சமூகத்திற்கும் பயனளிக்க வேலைத்திட்டங்களைக் கொண்டிருப்பது இன்னும் சிறப்பு.

அதனை.. சிலர் போராளி அமைப்புக்களின் இராணுவக் கட்டமைப்போடு ஒப்பிட்டு பார்ப்பதன் விளைவே இத்தலைப்பு..! அது அவர்களின் அறியாமை..! :icon_idea::)

Seeman-su-7.jpg

Seeman-su-6.jpg

Seeman-su-5.jpg

இவை சுவிஸுக்கு வந்த போது எடுத்த படம். ஆயிரம் விண்ணாணம் கதைத்தாலும், எனக்கும், உங்களுக்கும், எல்லாருக்கும் புரியும் இந்தப் படங்கள் சொல்லும் சேதி.

அதை விட சீமானை விட அன்றிலிருந்து இன்று வரை குரல் கொடுக்கும் வைகோ,நெடுமாறன் முதல் திரைமறைவில் செயற்படும் குப்பன்,சுப்பன் வரை இருக்கும் போது சீமானுக்கு மட்டும் பிரச்சனை என்பதை காமடியாகத்தான் எடுக்க முடியும். அதிமுக, திமுக விலும் தான் முக்கிய பிரமுகர்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள், அதுக்காக அவர்களுமா இப்படி படம் காட்டிக்கொண்டு திரிகிறார்கள்?

பிரபாகரனுடன் சேர்ந்து எடுத்த படத்தைக் காட்டித்தான் சீமான் பிழைப்பு நடத்தும் போது குறிப்பிட்ட போராளி அமைப்புடன் ஒப்பிட்டுப் பார்ப்பது அறியாமை என்று சொல்வதை நினைத்து எங்கை போய் முட்ட? இல்லை பிரபலமையக் கூடிய அளவுக்கு அதுக்கு முன்னர்  சீமான் சினிமாவிலும் கூட கோலோச்சினாரா????

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களம் என்றாலும் சரி, பொதுவாக என்றாலும் சரி அவரவர் தனக்குத் தனக்கு என்று சுய கருத்துக்களைக் கொண்டவர்களே அது நானாக இருந்தாலும், நீங்களாக இருந்தாலும், யாராக இருந்தாலும் அப்படி இருக்கும் போது ஒருத்தரின் கருத்தை சரி அல்லது பிழை என்று சொல்லும் உரிமை யாருக்கும் கிடைக்காது. அப்படி இருக்கும் போது அவரின் கருத்துக்கு பதில் வைக்கலாமே தவிர சரி, பிழை சொல்ல முடியாது. 

இதைக் கேட்டு சிரிக்காமல் இருப்பதற்கு பெயர்தான் ஜென் நிலை... :D
பதில் என்றால் சரி பிழை என்று சொல்லாமல் அல்லது தவறை தவறு என்று சொல்லாமல் இரண்டுக்கும் நடுவால் போவதா..? :D 

அதை விட பொது வாழ்க்கைக்கு வந்த பின்னர் சீமானை மட்டுமல்ல யாரையும் விமர்சிக்கலாம். விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் பொதுவாழ்க்கைக்குத் தேவை இல்லை.

இங்கு தனிப்பட்ட  சீமானுக்கான கருத்தாக யாரும் பார்ப்பதாக தெரியவில்லை. நாம் தமிழர் கட்சி தலைவரையே விமர்சிக்கிறார்கள், இதில் தவறேதும் இல்லையே.  :icon_idea:

எல்லா விசமப்பிரச்சாரங்களையும் தாங்கி தாண்டி வந்த நாம் தமிழர்கட்சியை இந்த சில்லறைத்தனமான விசமப்பிரச்சாரங்கள் ஒன்றும் செய்துவிடமுடியாது என்பதை காலம் காட்டும்.. 

அடுத்த தேசியத் தலைவர் சீமான் வாழ்க...!!

தமிழின எதிரிகளைத் தவிர வேறு யாரையும் வீழ்த்த வேண்டிய தேவை இன உணர்வுள்ள தமிழனுக்கு கிடையாது..நீங்கள் யாரை வீழ்த்தப்புறப்படிருக்கிறீர்கள் ஜீவா..?

தமிழனை பழிக்கு பழி வாங்க நாம இப்போதைக்கு செய்ய வேண்டிய ஒரே வேலை..!!
## சீமானை அவமானப்படுத்துவதுதான்..!!! வாங்க எல்லாரும் வரிசையாக..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.