Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அஸாத் சாலியின் விடுதலைக்காக துஆ பிரார்த்தனையில் ஈடுபடுங்கள் - அகில இலங்கை உலமா கவுன்சில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அஸாத் சாலியின் விடுதலைக்காக அனைத்து முஸ்லிம்களும் பொறுமையுடன் துஆ பிரார்த்தனையில் ஈடுபடுமாறு அகில இலங்கை உலமா கவுன்சில் கேட்டுக்கொண்டுள்ளது.

இது பற்றி உலமா கவுன்சில் தலைவர் முபாறக் அப்;துல் மஜீத் மௌலவி தெரிவித்திருப்பதாவது,

முஸ்லிம் சமூகத்துக்கான குரலாக ஒலித்த அஸாத் சாலி பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டமை அதிர்ச்சியை தருகிறது.

இந்த விடயம் அனைத்து முஸ்லிம்களையும் பாரிய கவலைக்குள்ளாக்கியுள்ளது. நிச்சயம் அஸாத் சாலி நிரபராதி என விடுதலை செய்யப்படுவார் என்பதில் எமக்கு நிறையவே நம்பிக்கை உண்டு.

ஆயினும் அவரது விடுதலைக்காக அனைத்து முஸ்லிம்களும் ஒன்றிணைந்து துஆ பிரர்த்தனையில் ஈடுபடுமாறு அகில இலங்கை உலமா கவுன்சில் முஸ்லிம்களை கேட்டுக்கொண்டுள்ளது.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=4327

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம் மக்களுக்காக மட்டும் அல்ல தமிழ் மக்களுக்காவும் குரல் கொடுத்த அசாத் சாலியின் கைது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது......

ஆட்சியிலும் அதிகாரத்திலும் இருப்பவர்கள் விமர்சனங்களை ஆக்கபூர்வமாக எடுத்துக்கொள்ள வேண்டும் அதிகாரமும் நீதித்துறையும் காவல்துறையும் தங்கள் கையில் இருக்கின்றது என்பதற்காக கைத்துகள் செய்வதும் மிரட்டுவதும் ஆரோக்கியமான அரசியலுக்கு அழகல்ல என்பதனியும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.....

இந்த கைதுக்கு ஒருவகையில் முஸ்லிம் காங்கிரசும் பொறுப்பேற்க வேண்டும்....

சுண்டல்...

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அநியாயத்துக்கு எதிராக தூ ஆ பிரார்த்தனை மட்டும்தானா..? தமிழருக்கு எதிராக என்றால் ஜிகாத், புலனாய்வுப்படை.. முஸ்லீம் சகோதரர்கள் சற்று சிந்திக்க வேண்டும்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம் மக்கள் உடனடியாக இவர் கைது தொடர்பாக இலங்கையில் இருக்கும் மத்திய கிழக்கு நாடுகளின் தூதரகங்களுக்கு அறிவித்து அழுத்தம் கொடுத்து அவரின் விடுதலைக்கு உதவ வேண்டும்...

இது இலங்கை அரசு கூட்டமைப்பில் தேவையானவர்களை உள்ளே போட்டு தேவையில்லாதவர்களை வெளியே வைத்திருந்து கூட்டமைப்பை தேர்தலின் முன்னர் உடைக்க போடும் தந்திரமாக இருக்கலாம். எனவே அசாத் சாலி வெளியே வருவது எவ்வளவுக்கு எவ்வளவு முஸ்லீம் மக்களுக்கு அவசியமோ அவ்வளவுக்கு அவ்வளவு தமிழ் மக்களுக்கும் முக்கியம்.

 

சகோதரதுவம், சக சிறுபான்மை இனம் பற்றி யெல்லாம் பேசிக்கொண்டிருக்க இலங்கை அரசு முந்தி விடும்.

 

முஸ்லீம் அமைச்சர்கள் இதைப்பற்றி பாரளுமன்றத்தில் பேச மாட்டர்கள். கூட்டமைப்பு உடனே இது பற்றிக்கதைக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

Andrew Bennett, Canada’s Ambassador for Religious Freedom, today issued the following statement:

“Canada condemns the arrest of Azath Salley, leader of Sri Lanka’s newly formed Muslim Tamil National Alliance. Mr. Salley was reportedly taken into custody by Sri Lankan authorities on May 2.

Andrew Bennett, Canada’s Ambassador for Religious Freedom

“We call for Mr. Salley’s immediate release. We understand his arrest is likely motivated by his work on human rights, in particular his defence of religious freedom, including the right of religious communities to practise their faith in Sri Lanka without fear of reprisals.

“This latest action by the authorities suggests strongly that those who dare to criticize the Government of Sri Lanka can face consequences such as imprisonment.

“Canada will continue to stand by all those who courageously speak out against egregious violations of human rights and freedom of religion.”

For further information, media representatives may contact:

Foreign Affairs Media Relations Office

Foreign Affairs and International Trade Canada

613-995-1874

Colombo telegraph

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் முஸ்லீம்கள் ஒற்றுமையானவர்கள் என்றால்.. இவரின் விடுதலைக்காக மகிந்த அரசில் உள்ள அனைத்து முஸ்லீம் அமைச்சர்களும் பதவி விலகுவதோடு.. மகிந்த அரசுக்கு ஆதரவு அளிப்பதையும் வாபஸ் வாங்க வேண்டும். அப்படிச் செய்தால் அன்றி.. வேறு எந்த வகையில்.. முஸ்லீம்கள் இவரின் விடுதலையை உறுதி செய்ய முடியும்...???! ஆனால் முஸ்லீம் அமைச்சர்கள் செய்வார்களா.. முஸ்லீம் காங்கிரஸ் தான் இதற்கு சம்மதிக்குமா....???! :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அரசின், சித்திர வதைக்கூடம் தான்.... நாலம் மாடி.
அதில்... கைது செய்யப் பட்டவர்கள் வெளியே.. உயிருடன் வருவது அரிது.
அங்கு கொலை செய்யப்பட்ட தமிழர் ஏராளம். நடைப்பிணமாக வாழ்வோர்... பல்லாயிரம்.
முதலாவது, இஸ்லாமியர்... நாலாம் மாடியை... பார்த்தது உள்ளூரச் சந்தோசம் என்றாலும்....
எல்லா... முஸ்லீம் மக்களும்.... கிளர்ந்து எளாதது, கவலையாயிருக்கு.

 

  • கருத்துக்கள உறவுகள்

81347054nn00.jpg

அசாத் சாலி வைத்தியசாலையில் அனுமதி

கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும் தமிழ் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான அசாத் சாலி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.