Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கள உறவுகளின், அசத்தல் கருத்துகள்.

Featured Replies

தலையங்கம் "பொதுவுடமைவாதிகளின் கவனத்துக்கு" என்று உள்ளபடியால் பலர் வழக்கமான ஒரு கட்டுரைதான் என்று படிக்காமலே தாண்டிச் சென்றிருப்பார்கள்.. நானும் அப்படித்தான் செய்தேன்.. பான்ச் இன் பின்னூட்டத்தைப் பாரத்த பிறகுதான் படிக்கும் ஆர்வம் ஏற்பட்டது.. இந்தத் தொடரை மிகவும் எதிர்பார்க்கிறேன்.. 

 

தலைப்பை இணைத்தவர்: பிளம்பு

அசத்தல் கருத்து : இசைகலைஞன், பதிவு இலக்கம் #3

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=121794&p=897251

 

Edited by மல்லையூரான்

  • Replies 131
  • Views 10.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

 

ஏன் அண்ணை அங்கையும் மண் அள்ளப்போறியளா..?

 

 

தலைப்பை இணைத்தவர்: தமிழரசு

அசத்தல் கருத்து, சுபேஸ் : பதிவு இலக்கம் - 02

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=122574

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருமாவளவனின் கூற்றை இந்திய அரசும் மற்றவர்களும் கூர்ந்து நோக்குவது நன்று.

 

மகாராணி விரும்பி இருந்தால் அவர் போக எத்தனையோ வழிகள் இருக்குது. உடம்புக்கு முடியாமை என்பது ஒரு காரணமாக இருக்கக் கூடிய நிலையில் மகாராணியின் உடல்நிலை இருப்பதாகத் தெரியவில்லை.

 

வெளிப்படையாகக் கூறாவிட்டாலும்.. மகாராணி மீதான சனல் 4 இன் குற்றச்சாட்டுக்கள்.. மற்றும் சிறீலங்கா மீதான மனித உரிமைக் குற்றச்சாட்டுக்கள் என்பனவும் மகாராணியின் முடிவில் செல்வாக்குச் செய்திருக்க வாய்ப்புள்ளது. அதனை அடியோடு மறுக்க முடியாது.

 

மகிந்த லண்டனிலும்.. ஒக்ஸ்பேட்டிலும் பேச முடியாமல் போன போதும் சொல்லப்பட்ட காரணங்கள் வேறு. ஆனால்.. அதனை தீர்மானித்தவை வேறு..! :icon_idea:

 

தலைப்பை இணைத்தவர்: மல்லையூரான்.

அசத்தல் கருத்து, நெடுக்காலபோவான்: பதிவு இலக்கம் - 4

http://www.yarl.com/forum3/index.php?showtopic=122431&page=1

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்கள்...சிறுபான்மையினரோ...ஹக்கீம் அப்படி சொல்லவில்லையே...நாம் ஒருபோதும் அரசைவிட்டு விலக மாட்டம் என்றுதான் சொன்னவர்....சயிக்கிளை பார்க்க வன்னிக்கு வந்த சயிக்கிள்போலதெரியிது...

 

தலைப்பை இணைத்தவர்: மல்லையூரான்.

அசத்தல் கருத்து, அல்வாயன்: பதிவு இலக்கம் - 3

http://www.yarl.com/forum3/index.php?showtopic=122616&hl=

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முருகா  இதையாவது  அர்ஜுன் அண்ணா  முமையாக எழுதி முடித்தால் நூற்றியெட்டு  தேங்காய் உடைக்கிறேன்  :)

 

தலைப்பை இணைத்தவர்: அர்ஜூன்.

அசத்தல் கருத்து, நந்தன்: பதிவு இலக்கம் - 2

http://www.yarl.com/forum3/index.php?showtopic=122612&hl=

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெருமாள், இப்படியான ஆய்வுகளைத் தொடர்ந்து இணையுங்கள்!

 

மிகவும் பயனுள்ள ஆய்வுகளையும, ஆக்கங்களையும், நீங்கள் தொடர்ந்து இணைத்து வருவது, யாழையும், எம்மையும் மேலும் வலுப்படுத்தும்!

 

நன்றிகள்!

 

தலைப்பை இணைத்தவர்: பெருமாள்.

அசத்தல் கருத்து, புங்கையூரான்: பதிவு இலக்கம் - 2

http://www.yarl.com/forum3/index.php?showtopic=122613&hl=

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தம்பி, உங்களது இசைப்பயணம் வெற்றிகரமாக அமைய எனது வாழ்த்துக்கள், தவிர குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டிக்கண்டு இதயே தொடரவேண்டாம், முடிந்தால் தமிழ்நாடு சென்று இசையில் இமையங்கண்டவர்களிடம் மேலதக பயிற்சி எடுக்கவும். தேடல் ஒன்றே இசையில் மேன்மைகொள்ள ஒரே வழி.தாங்கள் மேலதிக பயிற்சிக்காக தமிழ்நாடு செல்வீர்களாகவிருந்தால் அதன்பின்பு இசையில் எத்தனை அற்புதங்களை நிகழ்த்தல்லாமென நீங்கள் உணர்வீர்கள்.

 

தலைப்பை இணைத்தவர்: யாழ்அன்பு.

அசத்தல் கருத்து, எழுஞ்ஞாயிறு: பதிவு இலக்கம் - 5

http://www.yarl.com/forum3/index.php?showtopic=122509&hl=

 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

அருமையாய் இருக்கின்றது தொடருங்கள் சிறி வாழ்த்துகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்க ஒருத்தனின் காரை பொலிஸார் மறிச்சு சோதிக்க அவன் அவர்களை அடிச்சுப்போட்டு அவர்களின் பொலிஸ் காரை  எடுத்துக் கொண்டு ஒடிப்போய்ட்டான்.    :D

 

 

தலைப்பை இணைத்தவர்: நாதமுனி.

அசத்தல் கருத்து, ஈசன்: பதிவு இலக்கம் - 3

http://www.yarl.com/forum3/index.php?showtopic=122645&st=0&p=897539

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓம் சரவணா பவ...

மன்னாரில் என்னத்திற்கு கூடினது என்பதே மறந்து போச்சையா

 

தலைப்பை இணைத்தவர்: பிழம்பு.

அசத்தல் கருத்து, எரிமலை: பதிவு இலக்கம் - 4

http://www.yarl.com/forum3/index.php?showtopic=122660&hl=

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழினக் காவலர்கள் தன்மானம் மிக்கவர்கள்!. ஈனத்தனமான மானம் என்றாலும் அதற்கு விளக்கம் கூறுவதில் வல்லவர்கள்!. விதவை என்று ஒதுக்கப்பட்டாலும் நாங்கள் கைம்பெண் என்று இரண்டு திலகம் வைத்துள்ளோம் என்பதாக முழங்கி, இன்றும் கணவன் இறந்ததும் அவன் மனைவியை விதவையாக்கும் சடங்குகளை விமரிசையாக செய்து கொண்டாடுபவர்கள். தமிழினத் தலைவர்களோ தன்மானத்துடன் கொள்கையிலும் தீரர்கள்!. தமிழினத்தின் கழுத்தில் சுருக்குக்கயிறு இறுகும்போதும், அது கண், காது, மூக்கு, கை, காலை இறுக்கவில்லையே என்று விளக்கமளித்து தங்கள் கொள்கையே மானம் என வாழ்பவர்கள்!.

-------

 

தலைப்பை இணைத்தவர்: காசினி.

அசத்தல் கருத்து, பஞ்ச்: பதிவு இலக்கம் - 2

http://www.yarl.com/forum3/index.php?showtopic=122629#entry897383

 

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கலியாணம் கட்டுறதுக்கு வயது முக்கியமில்ல ஆனால் அதுக்காக பதினஞ்சு வயதில கலியாணம் கட்டேலா, எப்ப எங்களால ஒரு குடும்பத்தை உழைச்சு காப்பாத்த முடியுமோ அப்ப கட்டலாம்.  எந்த வயசில கலியாணம் கட்டினாலும் அந்த வாழ்க்கையின் வெற்றி சம்பந்தபட்ட ரெண்டுபேரிண்ட கையிலயும் தான் இருக்கு. பொறுமை விட்டுக்கொடுப்பு சகிப்புத்தன்மை இதெல்லாம் இருந்தால் எப்பொழுதுமே வெற்றிதான். அந்தகாலம் எங்கட அம்மம்மா கலியாணம் கட்டேக்க அவவுக்கு வயசு பதினைஞ்சு அம்மப்பாக்கு வயசு பதினேழு. அம்மம்மாக்கு முதல் பிள்ளை பிறக்கேக்க வயசு பதினாறு அவ்வளவு சிறு வயசில கலியாணம் கட்டினாலும் ரெண்டுபேரும் ஐம்பது வருசத்துக்கு மேல சந்தோசமா வாழ்ந்திச்சினம்.தோட்டம் துறவு குடும்பம் எண்டு எவ்வளவு சந்தோசமா வாழ்ந்திச்சினம். பணம் இல்லாதது ஒரு குறையாகவே இருக்கேல, இருக்கிறதை வச்சு சந்தோசமா வாழ்ந்திசினம். இதுதான் வாழ்க்கை.

 

தலைப்பை இணைத்தவர்: பெருமாள்.

அசத்தல் கருத்து, சுப்பண்ணை: பதிவு இலக்கம் - 3

http://www.yarl.com/forum3/index.php?showtopic=122631&hl=

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கின்றது மல்லை !   ஸ்ரீமாவோ  அவர்களின் ஆட்சியில் என்.எம் பெரேராவின் மூளையில்  உதித்த திட்டம்.

 

போண்டாவுக்கு  உருளைக்குப் பதில் மரவள்ளியை போட்டு தேனீர் கடைகள் புரட்சி செய்த காலம்.

செத்தல் மிளகாய் அமோகமாய் பயிரிடப் பட்டு யாழில் உள்ள சிறு விவசாயிகளும் ஆஸ்டின் லொறிகளும் ,எ போட்டி காருமாய் வாங்கிய கார்காலம் !

நான் வெருண் காலில் இருந்து முதன் முதல்  பட்டா செருப்பு வாங்கி வீதியில் வெள்ளத்தைப் பார்த்தால் செருப்பை கையில தூக்கிக் கொண்டு நடந்த கால் காலம் !

 

தொடருங்கள் !

 

தலைப்பை இணைத்தவர்: மல்லையூரான்.

அசத்தல் கருத்து, சுவி: பதிவு இலக்கம் - 11

http://www.yarl.com/forum3/index.php?showtopic=122611&hl=

 

 

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றாகத்தான் இருக்கின்றது அனுபவங்கள். தோளுக்கு மேல் வளர்ந்தால் தோழன் என்று இருக்கவேண்டும்.

ஒரு சின்னக் கேள்வி:

பொழுது பட ஒருவருக்கும் தெரியாமல் வெளியில் போய் தனக்குத்தேவையானவற்றை சாப்பிட்டுவிட்டு நல்ல பிள்ளையாட்டம் திரும்பி வரும் சாரைப் பாம்பு மாதிரி இள வயதில் இருந்தனீங்கள் என்று சொல்லிவிட்டு, மது, சிகரட் புகைப்பதில்லை என்றும் சொல்லியிருக்கின்றீர்கள். அப்ப என்னதான் பொழுதுபட்டாப் பிறகு செய்தனீங்கள்? :unsure:  :rolleyes:

 

தலைப்பை இணைத்தவர்: விசுகு.

அசத்தல் கருத்து, கிருபன்: பதிவு இலக்கம் - 4

http://www.yarl.com/forum3/index.php?showtopic=122663&hl=

 

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் அப்பவே சொன்னனான் தானே மச்சி. இப்போது யாழில் நன்றாக வரக் கூடிய துறை கட்டடம் கட்டும் துறை. எல்லாருமே சீமேந்திலே எதோ கட்டுகிறார்கள். ஏற்கனவே வீடிருக்கிற சனம் அதுக்கு டைல்ஸ் போடுது, மதில் கட்டுது, முகப்பிலே கனக்க அலங்கார வேலைகள் புது கேட் எண்டு எல்லாம் போடுது, அட்டாச் பாத் ரூம் கட்டுது. ஊரிலே மேசன் வேலை செய்ய ஆள் இல்லாமல், ஊரிலே நவீன தொழில் உபகரணங்கள் இல்லாமையால் தெற்கிலே இருந்து வந்து தங்கி நின்று செய்கிறார்கள். மரவேலை, இரும்புவேலை, கட்டடவேலை ஒருங்கினைந்த ஒரு ஒப்பந்த நிறுவனம் போட்டால் நன்கு உழைக்கலாம். யாழிலே இதற்குப் பாரிய வெற்றிடம் தற்போது இருக்கு.

 

தலைப்பை இணைத்தவர்: நெல்லைய‌ன்.

அசத்தல் கருத்து, தும்பளையான்: பதிவு இலக்கம் - 264

http://www.yarl.com/forum3/index.php?showtopic=91501&page=14

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்போ.. உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ள முஸ்லீம்கள் இரண்டு இடங்களில் வாக்களிக்க வேண்டிய அவசியம் இல்லை. முஸ்லீம்களைப் பொறுத்தவரை அமைதி.. சமாதானம் நிலவுவதாகச் சொல்லப்படும் வடக்கிற்கு சென்று அங்கு வாழ்ந்ததற்காக அத்தாட்சியை காட்டி மட்டுமே அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட வேண்டும்.

 

 

அதென்ன முஸ்லீம்கள்.. சிங்களவருக்கு ஒரு சட்டம். தமிழர்களுக்கு இன்னொரு சட்டம். ஹக்கீம் நினைச்சதை எல்லாம் தமிழர்கள் கேட்கனுன்னு அவசியம் கிடையாது. தமிழர்கள் தங்கள் வாக்குரிமைக்காக.. ஜனநாயக உரிமைக்காக சர்வதேசத்தை அணுகுவது நல்லது.

 

தேர்தல் ஆணையாளரக் கேள்வி கேட்டால்.. ஏன் ஹக்கீம் குரைக்கிறார்..??! :lol::icon_idea:

 

தலைப்பை இணைத்தவர்: மல்லையூரான்.

அசத்தல் கருத்து, நெடுக்காலபோவான்: பதிவு இலக்கம் - 2

http://www.yarl.com/forum3/index.php?showtopic=122709&hl=

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி!

 

இந்த முயற்சியில் பங்களித்த தமிழ்சு+ரியன், புங்கையூரான் உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுக்கள்.

 

இதுபோல காலத்தின் தேவையாயுள்ள விடயங்களை உட்புகுத்திய எமது கலைப் படைப்புக்கள் தொடர்ந்து வெளிவர வேண்டும்.

 

தலைப்பை இணைத்தவர்: தமிழ்ச்சூரியன்.

அசத்தல் கருத்து, மணிவாசகன்: பதிவு இலக்கம் - 24

http://www.yarl.com/forum3/index.php?showtopic=122678&hl=

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முப்பதாயிரம் சிறி லங்கா கூலிகள் இறந்ததற்கு களியாட்டங்கள் நடக்கின்றன.

இதற்கான செலவில் விலை உயர்வுகளை சமாளித்திருக்கலாம்.

சிறி லங்கா அறிவு முத்தியவர்கள் இங்கு வந்து அறிவுரை சொல்கிறார்கள் இல்லை.

 

தலைப்பை இணைத்தவர்: பிழம்பு.

அசத்தல் கருத்து, விவசாயிவிக்: பதிவு இலக்கம் - 6

http://www.yarl.com/forum3/index.php?showtopic=122803&hl=

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பரீட்சார்த்தமாக யாழ் இணையத்திற்கான apps வெளியிடப்பட்டுள்ளது. இது Android 4 ற்கான கைத்தொலைபேசிகளுக்கு மட்டுமே தற்போது இயங்கும். பாவிக்க விரும்புபவர்கள் குகிள் தளத்தில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

 

மேலும் இது தொடர்பான உங்கள் அபிப்பிராயங்கள் வரவேற்கப்படுகின்றது. 

 

apps1.png

 

தலைப்பை இணைத்தவர்: நெடுக்காலபோவான்.

அசத்தல் கருத்து, யாழ் இணையம்: பதிவு இலக்கம் - 24

http://www.yarl.com/forum3/index.php?showtopic=117865&page=2

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலத்தின் இராமநாதன்களும்.. பொன்னம்பலங்களும் செய்ததை.. அப்ப கண்டித்த தலீவர்.. இப்ப தான் அதைவிட மோசமாகச் செய்கிறார். என்ன வித்தியாசம்.. இராமநாதன்களையும் பொன்னம்பலங்களையும் சிங்களவன் பல்லக்கில் வைத்து தூக்கி ஊர்வலம் வந்தான்.. இப்ப டக்கிளஸ் புத்த பிக்குகளை தலையில தூக்கி வைச்சுக்கிட்டு ஊர்வலம் வருகிறார்..! நல்ல படிநிலை முன்னேற்றம்.

 

கொழும்பில பட்டம் பெறும் போது கூட.. கூடப்படிச்ச புத்த பிக்குவும் லைனில நின்று தான் பட்டம் வாங்கினான். ஆனால் இங்கு அவன் குந்தி இருக்க தலீவர் கொண்டு போய் சேட்டுபிக்கட் வழங்கிறார். படிச்ச சிங்களவனே இவர்களை வைக்க வேண்டிய இடத்தில் வைக்கும் போது.. தலீவர்.. தூக்கி தலைல வைக்கிறார் என்றால் தலீவர் பெரும் தொலைநோக்கோடு செயற்படுகிறார் என்று அர்த்தமாகும்.. அப்படின்னு ஒட்டுக்குழு கூப்பாடிகள் அறிக்கை விட ஏன் இன்னும் தாமதமோ புரியவில்லை..! :lol::D

 

தலைப்பை இணைத்தவர்: தமிழரசு.

அசத்தல் கருத்து, நெடுக்காலபோவான்: பதிவு இலக்கம் - 4

http://www.yarl.com/forum3/index.php?showtopic=122817&hl=

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் முஸ்லிம்களை வெளியேற்றியதைப் பற்றி அதியுச்ச மனச்சாட்சியுடன் நேர்மையாக கருத்து தெரிவிக்கும் தமிழ் நடுநிலையாளர்கள் ஏனோ தமிழ் மக்கள் முஸ்லீம் அரசியல் தலைவர்களால் பாதிக்கபடும்போது மூச்சு கூட விடுவதில்லை.அவர்களின் மனச்சாட்சி புலிகளை நோக்கி குற்றம் சாட்டும் போது  மட்டும் தான் தட்டி எழுப்பபடுமோ? புலிகள் முஸ்லீம்களை வெளியேற்றிய போது தமிழ் மக்கள் அதை எதிர்க்கவில்லை என்று நீலிக்கண்ணீர் வடிக்கும் இவர்கள் தமிழ் மக்கள் மீது சிங்கள இனவாதிகளால் எடுக்கபட்ட எல்லா நடவடிக்கையைகளையும் முஸ்லீம்கள் எதிர்க்கவில்லை மட்டுமல்ல அதற்கு ஆதாரவாகவும்  இருந்ததை எவராலும் மறுக்க முடியாது.

 

அதற்காக புலிகளின் தவறுகளை நான் நியாயபடுத்தவில்லை. முஸ்லீம்களுடம் நாம் தமிழர்கள் சகோதரத்துவத்தை வளர்க்க வேண்டும் என்பதை ஏற்றுகொள்ளும் அதேவேளை அவர்கள் பக்கத்து தவறுகளை மறைத்து தமிழர்கள் மட்டும் குற்றவாளிகளாக காட்டப்படுவதை ஏற்றுகொள்ள முடியாது. இதற்கு மாற்றுகருத்து இருந்தால் யாராவது தெரிவிக்கலாம்.

 

தலைப்பை இணைத்தவர்: காஷ்னி.

அசத்தல் கருத்து, ருல்பென்: பதிவு இலக்கம் - 2

http://www.yarl.com/forum3/index.php?showtopic=122875&hl=

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் எதிர்காலத்தைச் சந்தைபடுத்த  தீவிரமாக முயற்சி எடுக்கும்

அரசியல்  ஓதிகள் இருக்கும்வரை  முள்ளிவாய்க்கால் 

மரணங்கள் சந்தையைச் சேர வாய்ப்பில்லைத்தான் 

 

நன்றி புங்கையூரான்  

 

தலைப்பை இணைத்தவர்: புங்கையூரான்.

அசத்தல் கருத்து, வாத்தியார்: பதிவு இலக்கம் - 10

http://www.yarl.com/forum3/index.php?showtopic=122939&hl=

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் தமது விருப்பங்கள் நிறைவேறவும், குறைகள் நீங்ககவும் கோயிலுக்குப் போய் அர்ச்சனை செய்து மனத் திருப்தி அடைவது மாதிரித்தான் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்க எவர் எதையும் செய்கின்றோம் என்று சொல்லிக் கொண்டு வந்தால் தங்கள் பங்களிப்புக்களை வழங்குகின்றனர். ஆனால் எல்லா விருப்பங்களும் எப்போதும் நிறைவேறுவதில்லை. எல்லாக் குறைகளும் நீங்குவதுமில்லை.

 

தலைப்பை இணைத்தவர்: ஈழப்பிரியன்.

அசத்தல் கருத்து, கிருபன்: பதிவு இலக்கம் - 27

http://www.yarl.com/forum3/index.php?showtopic=122303&page=2

கோமகனுக்குத்தான் மனவருத்தம் என்றால்... ஜீவாவுக்கு என்ன மனவருத்தம் ஏற்பட்டது.

கோமகனது ஆக்கங்கள் பலவற்றை யாழ்களம் தனது முன்பக்கத்தில் நிரந்தரமாக வைத்து, அவரை உயரிய இடத்தில் வைத்திருந்ததை மறக்கக் கூடாது. இணைய உலகில் அவர்கள் பெயர்கள் பிரபல்யமானதற்கு யாழ்களமே காரணம், என்பதை மறக்காமல் இருந்தால்... சரி.

பலரும் யாழ்களத்தில் இருந்து விட்டு, கோவித்துக் கொண்டு... கூட்டாகவும், தனியாகவும் வேறு தளங்களுக்குப் போய்.. அங்கிருந்து தாக்குப்பிடிக்க முடியாமலோ, மன விரக்தியிலோ சில நாட்களில், இணைய உலகை விட்டே... காணாமல் போனதை நானறிவேன்.

அவரவர் எங்கும் எழுதுவது, அவரவர் சுதந்திரம். ஆனால்... யாழுடன் கோவித்துக் கொண்டு போவது முறையல்ல.

 

 

 

தலைப்பை இணைத்தவர்: கோமகன்

அசத்தல் கருத்து, தமிழ்சிறி: பதிவு இலக்கம் - 497

 

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=86211&page=25#entry900276

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

பௌத்த இனவாதியான மகிந்த ஹெல உறுமையா பொதுபலசேன போன்ற இனவாதிகளீன் சொல்லை கேட்பார்.
மற்றொரு காரணம் தேர்த்தலில் தோற்க வேண்டும் என்பது.
 
காலத்தை கடத்தி சிங்களவர்களை குடியேற்றி வாக்கு வங்கியை அதிகரித்தல்.
 
பொதுநலவாய நாடுகளுக்கு இராணுவ முகாம்களை மூடுவதாக சாட்டு போக்கு சொல்வதற்கு சிங்களவர்களூக்கு சொல்லி கொடுக்க தேவை இல்லை.

 

 

தலைப்பை இணைத்தவர்: காஷ்னி.
அசத்தல் கருத்து, நுணாவிலான்: பதிவு இலக்கம் - 3

http://www.yarl.com/forum3/index.php?showtopic=123187&st=0&p=900587
 

 

 



விடுதலைப்புலிகள் இருக்கும்வரை தங்களால் ஈழத்தமிழருக்கு ஒன்றும் செய்ய முடியாது  எனக் கைவிரித்து , இன்றும்  சிங்கள அரசுடன் ஒட்டியிருக்கும் மாற்றுக்குழுக்கள்    2009 இற்குப்பின்னர் எதுவும் செய்ய முயற்சித்ததாகத் தெரியவில்லை.

ஆனால் சீமான் இன்றும் ஈழவிடுதலைப் போராட்டத்தை கையில் எடுத்து தமிழக மக்களின் ஆதரவு அலைகளை ஓங்க வைத்திருக்கும் நிலையில்,

அவருடைய ஈழ ஆதரவுப் போராட்டம் வலிமை மிக்கதொன்றாகவே இருக்கின்றது

 

தலைப்பை இணைத்தவர்: பிழம்பு.
அசத்தல் கருத்து, வாத்தியார்: பதிவு இலக்கம் - 59

http://www.yarl.com/forum3/index.php?showtopic=122991&page=3#entry900507
 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.