Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் நடுநிலையான ஒருவர் கூட்டமைப்பு வேட்பாளராக தெரிவுசெய்யப்படுவாரா?

Featured Replies

NorthElection1.jpgவட மாகாண சபைக்கான தேர்தல் இவ்வருடம் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்பதை ஜனாதிபதி மீளவும் உறுதிப்படுத்தியுள்ளார். அண்மையில் அலரிமாளிகையில் இடம்பெற்ற பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பின்போது தேர்தல் தொடர்பிலும் ஜனாதிபதி தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். இதற்கு ஒருபடி மேலாகச் சென்று அமைச்சர் பசில் ராஜபக்ஷ, வட மாகாண சபைத்தேர்தலை எதிர்கொள்ள ‘நீல அலை’ திட்டத்தின் மூலம் அரசாங்கம் தயாராகவுள்ளது, எதிரணியினர் யாரை வேண்டுமானாலும் வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெற்றுக் காட்டட்டும் என்று சவால் விடுத்திருந்தார்.

எதிரணியினர் யாரை வேண்டுமானாலும் வேட்பாளராக நிறுத்தி வெற்றிபெறட்டும் என்று பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டதன் உள்ளர்த்தம் யாதெனில், வடமாகாண சபைக்கான தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பொதுவேட்பாளராக தமிழ் மக்கள் மத்தியில் மரியாதைக்குரியவராக நோக்கப்படுகின்ற முன்னாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் விக்கினேஸ்வரன் நிறுத்தப்பட வேண்டும் என்ற கருத்து சமீபகாலமாக தமிழ் ஊடகங்களினாலும் சில அமைப்புக்களினாலும் முன்வைக்கப்படுகின்றன.

ஆனால் இதுவரை இக்கோரிக்கைகள் தொடர்பில் தமிழரசுக் கட்சியோ, ஏனைய தமிழ்க் கட்சிகளோ தமது உத்தியோகபூர்வ கருத்தை தெளிவுபடுத்தவில்லை. தமிழரசுக் கட்சியோ, அதனுடன் இணைந்த ஏனைய கட்சிகளோ வட மாகாண சபைத் தேர்தலில் நீதியரசர் விக்கினேஸ்வரன் போன்ற ஒருவர் பொதுவேட்பாளராகப் போட்டியிடுவதை உளப்பூர்வமாக ஆதரிப்பார்களா என்பது ஐயமே.

இதனால் தான் விக்கினேஸ்வரன் இது போன்ற கருத்துக்கள் தன்னை அசெளகரியப்படுத்துவதாகவும் இது தொடர்பில் தான் இன்னும் எந்த முடிவுகளையும் மேற்கொள்ளவில்லை என்றும் கூறவேண்டியதாயிற்று. அவரைப் பொறுத்தவரை அவர் முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளர் என்பதை நேரடியாக ஏற்கவோ, மறுக்கவோ இல்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பு இது தொடர்பில் முடிவெடுக்காதவரை தான் முடிவெடுப்பதில் அர்த்தமில்லை என்பதை அவர் நன்குணர்வார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இன்று எழுந்துள்ள உள்முரண்பாடுகள் தீவிரமாகி வருகின்றன. வடபகுதித் தமிழர் விவகாரங்களில் குரல்கொடுக்கின்ற மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் அவர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள கட்சிகள் தனித்தனியாகச் சந்தித்தன. தமிழ் தேசியக் கூட்டமைப்பை அரசியற் கட்சியாக பதிவு செய்கின்றமை தொடர்பில்தான் பேசப்பட்டது. எதிர்பார்க்கப்பட்டதைப் போலவே தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கட்சியாகப் பதிவு செய்வதற்கு விருப்பமோ, ஆர்வமோ காட்டவில்லை.

வட மாகாண சபைத் தேர்தலுக்கு முன் இதில் முடிவெடுக்கப்பட வேண்டும் என ஏனைய கட்சிகள் வலியுறுத்துகின்றன. வட மாகாணசபைத் தேர்தலுக்குப் பின் இதனைப் பற்றிப் பேசலாம் என்கின்ற பாணியில் செல்கின்றது தமிழரசுக் கட்சி. வடமாகாண சபைத் தேர்தலுக்கு முன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்படாவிட்டால் வழமை போன்று அது தமிழரசுக் கட்சியின் சின்னத்தில்தான் அத்தேர்தலையும் சந்திக்க வேண்டி ஏற்படும். இதனால் தமிழரசுக் கட்சி இன்னும் தனது நிலையை உறுதிப்படுத்தும்.

இவ்வாறான உள் முரண்பாடுகள் தமிழ் மக்கள் மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீதான செல்வாக்கை தளர்வாக்கலாம் என்பதுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக வட மாகாண சபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த ஒருவரே முதலமைச்சருக்கான அபேட்சகராக முன்நிறுத்தப்படலாம் என்பதனால் ஏனைய கட்சிகள் எவ்வளவு தூரம் உளப்பூர்வமாக அவரின் வெற்றிக்காக செயற்படும் என்ற சந்தேகமும் உள்ளது. இதனால் வடமாகாணத்திற்கான முதலமைச்சர் அபேட்சகர் எக்கட்சியும் சாராமல் பொதுவேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதற்கு கிழக்கு மாகாண சபையிலும் முன்மாதிரி இருக்கின்றது. நடைபெற்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஈ.பி.ஆர்.எல்.எப் துரைரெட்ணம் அதிகூடிய வாக்குகளைப் பெற்றிருந்த போதும் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினரான துரைரெட்ணசிங்கம் இரண்டாமிடம் வந்த போதும் புதிதாக அரசியலுக்குக் கொண்டுவரப்பட்ட கல்வியாளர் என்று அறியப்பட்ட திருகோணமலையைச் சேர்ந்த தண்டாயுதபாணிக்கே, குறைந்தவிருப்பு வாக்குகளைப் பெற்ற போதும் முக்கியத்துவமிக்க எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டது. இது போன்ற நடைமுறை வடமாகாண சபைத் தேர்தலிலும் பின்பற்றப்படுவதே சிறந்தது என பலர் வாதிடுகின்றனர்.

ஆனால் முக்கியமான பிரச்சினை யாதெனில், கிழக்கு மாகாணத்தில் உள்ளது எதிர்கட்சித் தலைவர் பதவி. ஆனால் வடமாகாணத்தில் எதிர்பார்ப்பது முதலமைச்சர் பதவி. வடமாகாண முதலமைச்சரின் முக்கியத்துவம் எவ்வாறென்பதை தமிழரசுக்கட்சி நன்கறியும். விக்னேஸ்வரன் போன்ற பணிப்பாளர், கல்வியாளர் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றால் கட்சியின் ஆதிக்கத்தினுள் அவர் வருவார் என எதிர்பார்க்க முடியாது. மாறாக அவரின் பின்னால் செல்ல வேண்டிய நிலைமை கட்சிக்கு ஏற்படும். இதனை ஒருபோதும் சம்பந்தரோ, சுமந்திரனோ, மாவையோ உளப்பூர்வமாக விரும்பப்போவதில்லை.

இவ்வாறான நெருக்கடிகளுக்கு மத்தியில் பதவிக்காக அரசியலுக்கு வருவதை நீதியரசர் விக்னேஸ்வரன் போன்றவர்களும் விரும்பப்போவதில்லை. இவ்வாறான நெருக்கடிகளைக் கடந்து நீதியரசர் விக்னேஸ்வரன் போன்ற நடுவர் முதலமைச்சருக்கான பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டால் அவரின் வெற்றி இமாலயமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

வட மாகாண சபைத் தேர்தல் நீதியாகவும், நேர்மையாகவும் நடைபெற்றால், இன்றைய கால கட்டத்தில் தமிழ் மக்களின் அரசியல் தலைமையானது பாரம்பரியமிக்கவர்களிடமிருந்து புதிய கண்ணோட்டத்தில் பிரச்சினைகளை அணுகின்ற முற்போக்கு சிந்தனை கொண்டவர்களிடம் கை மாற்றப்பட வேண்டும். அப்போதுதான் அரசாங்கத்தினாலும் புலிகளின் கொள்கைகளை பின்பற்றியவர்கள், தனிநாடு கேட்டவர்கள் என்று தொடர்ந்தும் ஏமாற்ற முடியாமல், நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தும்.

வடமாகாண சபைத் தேர்தல் அதற்கான ஆரம்பமாக இருந்திடுமோ?

http://tamilworldtoday.com/?p=9645

தமிழ்த்தேசியகூட்டமைப்பு சார்பாக தலைமை பதவியில் உள்ளவர்கள் 

அதிகாரபூர்வமாக நீதியரசர் விக்னேஸ்வரனிடம் தங்களது விருப்பத்தை 
சொல்லிவிட்டார்கள் ஆனால் இன்னமும் இவர் பதில் சொல்லவில்லை .
இன்றைய நிலையில் மிகவும் பொருத்தமானவர் .

 

 

 

பொது வேட்பாளரை நிறுத்துவது கட்சிகளுக்கிடையில் இருக்கும் சிக்கலையும் தீர்த்தும வைக்கலாம். அத்தோடு:

 

அதிகாரமில்லாத மகாணசபையில் தமிழ் அரசியல் கட்சிகள் போட்டியிடுவது தமிழ் மக்களை ஏய்ப்பதற்கு சமன். இது மக்களை ஏய்க்காமல், அதிகாரம் எதிரியின் கையில் விழாமல் பாதுகாக்க உதவும். 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பிடம் இருந்து முறைப்படி அழைப்பு வந்தால் நான் போட்டி போட தயார்... :D

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பிடம் இருந்து முறைப்படி அழைப்பு வந்தால் நான் போட்டி போட தயார்... :D

 

 

ஏன் ராசா இந்த விபரீத விளையாட்டு????

தற்கொலை செய்ய நல்ல  இடம்  தேடுகின்றீரா????

எப்படியும்  இறப்பு நிச்சயம்

(வென்றால் கோத்தபாயா கொன்றுவிடுவார்

தோற்றால் தமிழர் கொன்றுவிடுவர்.....) :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சம்பந்தர் ஐயாவும் உதயன் பேப்பரும் சரியான முடிவை எடுப்பினம்..

அசாத் சாலிக்கு பிறகு அரசின் கவனம் விக்கினேஸ்வரன் பக்கம் திரும்பியினால் அவர் "ஓம்" சொல்லும் சந்தர்ப்பம் குறையும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.