Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கை கபளீகரம் செய்ய நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமின் புதிய சட்டமூலம் நிறைவேற்றம்

Featured Replies

வடக்கை கபளீகரம் செய்ய நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமின் புதிய சட்டமூலம் நிறைவேற்றம்

PostDateIcon.png வெள்ளிக்கிழமை, 10 மே 2013 13:54

pooraddammm.jpgவடக்கு மாகாண சபையை எப்படியாவது கைப்பற்றுவதற்குத் துடித்துக்கொண்டிருக்கின்ற மகிந்த அரசாங்கம் வடக்கிற்கு வெளியே, தென்னிலங்கையிலுள்ள சிங்கள, முஸ்லிம் மக்களைக் வடக்கிற்கு அழைத்து வந்து வாக்களிப்பதற்கு வசதியாக நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் புதிய சட்டமூலமொன்றைக் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளது.

அதாவது, பூர்வீக நிலங்களில் குடியிருந்தவர்கள் வாக்களிப்பதற்கு “வாக்காளர் பதிவு விசேட ஏற்பாடுகள்” என்று விசேட சட்டமூலமொன்றைக் கொண்டு வந்துள்ளது. யுத்த சூழ்நிலைகளில் தத்தமது இடங்களிலிருந்து வெளியேறியவர்கள் முன்னர் எந்த இடங்களில் வசித்தார்களோ அந்த இடங்களிற்கு வந்து வாக்களிக்க முடியும் என்று இந்த சட்டமூலம் வெளிப்படுத்துவதாக நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இந்தச் சட்டமூலத்தின் அடிப்படை என்னவென்றால் வடக்கில் பூர்வீகமாகக் குடியிருந்தவர்கள் என்று கூறி பெருமளவான சிங்களவர்களையும் அரசுக்கு சார்பான முஸ்லிம்களையும் அழைத்து வந்து வடமாகாண சபைத் தேர்தலில் வாக்களிக்க வைத்து அதன் மூலம் வடக்கை கைப்பற்றுவதேயாகும். இதற்கு ஏற்றாற் போலவே குறித்த சட்டமூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் நேற்று வியாழக்கிழமை (09/05/2013) இந்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த போது ஏற்கனவே தயார்படுத்தப்பட்டிருந்த அமைச்சர்கள் யாவரும் அதற்கு வரவேற்பு தெரிவித்து நாட்டின் நிலமையில் தற்போது இது அவசியமான சட்டமூலம் என்று தெரிவித்து ஏற்றுக்கொண்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.

இந்தச் சட்டமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

யுத்த காலத்தில் வடக்கில் நிரந்தரமாக குடியிருந்த வசிப்பிடங்களிலிருந்து வெளியேறுமாறு நிர்ப்பந்திக்கப்பட்ட மக்கள் தங்கள் காணிகளையும் சொத்துக்களையும் ஆவணங்களையும் கைவிட்டு சிறிலங்காவின் வேறு மாகாணங்களில், வேறு தேர்தல் தொகுதிகளில் சென்று தங்கியிருந்தனர்.

இவர்கள் வடமாகாணத்தில் உரிய தேர்தல் தொகுதிகளில் தங்களை வாக்காளர்களாக பதிவு செய்யுமாறு விண்ணப்பித்த போதிலும் தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களைக் காரணம் காட்டி தேர்தல் ஆணையாளர் அந்த விண்ணப்பங்களை நிராகரித்தார்.

இவ்வாறானவர்கள் வாக்காளர்களாக தகைமை பெறுவதற்குரிய தமது முகவரி பற்றிய தேவையை நிறைவு செய்வதும் வாக்காளர் பட்டியலை மீளாய்வு செய்வதற்காக வீடுதோறும் சென்று பரிசீலிக்கும் அலுவலர்களிடம் தகைமை பெறும் முகவரியொன்றைச் சமர்ப்பிப்பதும் மிகவும் சிரமமான காரியங்களாகும்.

எனவே, பொதுசன வாக்குரிமை என்பது மக்களின் இறைமையில் முக்கிய அம்சங்களில் ஒன்று. உள்ளக ரீதியாக வெளியேற்றப்பட்டு அல்லது இடம்பெயர்ந்து தீவின் ஏனைய பிரதேசங்களை நோக்கிச் சென்று அங்கு தற்போது தற்காலிகமாக வசிக்கும் வாக்குரிமைக்கு உரித்துடையவர்கள் முன்னர் நிரந்தரமாக அவர்கள் குடியிருந்த தேர்தல் மாவட்டத்தில் வாக்களிக்கக்கூடியவாறு வாக்காளர் பெயர்ப் பட்டியலொன்றைத் தயாரிப்பதற்கு இந்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவது அவசியம் என்று குறித்த சட்டமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகிந்த குடும்பத்தால் மிகவும் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பின்னரே ஹக்கீம் ஊடாக இந்தச் சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது. வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதால் ஹக்கீம் ஊடாக இந்தச் சட்டமூலத்தைக் கொண்டுவந்தால் ஏனையோரிடையே சந்தேகம் வராது என்றும் வடக்கிலிருந்து வெளியேறி புத்தளம் உள்ளிட்ட மாவட்டங்களில் வசிக்கும் முஸ்லிம்களின் நலன் கருதியே இந்தச் சட்டமூலம் கொண்டுவரப்படுவதாகவே எல்லோரும் கருதுவர் என்றும் சிந்தித்தே மகிந்த குடும்பம் மிகவும் திட்டமிட்ட காய் நகர்த்தலுடன் இதனைக் கொண்டுவந்துள்ளது.

இந்தச் சட்டமூலம் விதந்துரைக்கும் விதிகளின் அடிப்படையில் உடனடியாக தென்னிலங்கையில் சில வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. அதாவது, தெற்கில் உள்ள சிங்களவர்களில் பல்லாயிரக்கணக்கானோரையும் புத்தளம் மற்றும் கிழக்கு மாகாணத்தில் வசிக்கின்ற முஸ்லிம்களையும் ஒருங்கிணைத்து புதிய வாக்காளர் பட்டியல் ஒன்று தயாரிக்கப்படவுள்ளது.

இந்தப் பட்டியல்கள் தேர்தல் தினத்தன்று வடமாகாணத்திலுள்ள ஒவ்வொரு தேர்தல் நிலையத்திற்கும் அனுப்பி அங்கு தேர்தல் பணியாளர்கள் அவற்றை வைத்திருப்பர். தேர்தல் தினத்தன்று குறிப்பிட்ட சிங்கள, முஸ்லிம் மக்கள் வாகனங்கள் மூலம் அழைத்து வரப்பட்டு வடக்கிலுள்ள தேர்தல் நிலையங்களில் வாக்குப் பதிவுசெய்யவைக்கப்படவுள்ளனர்.

மகிந்த குடும்பத்தின் இந்த அராஜகப் புத்தியானது உலகில் எங்குமே நடைபெற்றதில்லை. வடக்கில் நீதியான தேர்தல் நடத்தப்பட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே வெல்லுமென்பது தெரிந்த காரணத்தாலேயே அரசாங்கம் தேர்தல் நடத்த தொடர்ந்தும் பின்னடிக்கிறது. ஆனால், இந்தியா, அமெரிக்காh உள்ளிட்ட நாடுகளின் கடும் அழுத்தம் காரணமாக தேர்தலை உடனடியாக நடத்த வேண்டிய இக்கட்டான சூழ்நிலை அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் எப்படியாவது இந்தத் தேர்தலில் வெற்றிபெற வேண்டுமென்று துடிப்பதன் வெளிப்பாடாகவே தற்போது இந்த மோசடி வேலையை சிறிலங்காவின் ஆட்சியாளர்கள் அமுல்படுத்தவுள்ளனர்.

இது தமிழ் மக்களின் மோசடி மூலம் பறிப்பதற்கு எடுக்கப்படுகின்ற மகிந்த குடும்பத்தின் சர்வாதிகாரத்திற்கு எதிராக இந்தியா, அமெரிக்கா போன்ற ஜனநாயகத்தை நேசிக்கும் நாடுகள் குரல் கொடுக்க வேண்டும்.

இந்தச் செயற்பாட்டை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் தமிழினத்தின் அழிவுக்கு மேற்படி நாடுகளை உள்ளடக்கிய உலக நாடுகளே பதில் கூறவேண்டியிருக்கும்.

- தாயத்திலிருந்து வீரமணி

http://www.uyarvu.com/index.php?option=com_content&view=article&id=23603:2013-05-10-13-56-23&catid=45:news&Itemid=67

 

 

 



மீண்டும் ஒரு முறை கூட்டமைப்பின் முதுகில் குத்தினார் கக்கீம்

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கை கபளீகரம் செய்ய நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமின் புதிய சட்டமூலம் நிறைவேற்றம்

PostDateIcon.png வெள்ளிக்கிழமை, 10 மே 2013 13:54

இது தமிழ் மக்களின் மோசடி மூலம் பறிப்பதற்கு எடுக்கப்படுகின்ற மகிந்த குடும்பத்தின் சர்வாதிகாரத்திற்கு எதிராக இந்தியா, அமெரிக்கா போன்ற ஜனநாயகத்தை நேசிக்கும் நாடுகள் குரல் கொடுக்க வேண்டும்.

 

 

 

இந்த யோசனையை இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளே வழங்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கவும் இடமிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ஹக்கீமை சுற்றி அரசியல் செய்ய வேண்டிய தேவை கூட்டமைப்பிற்கோ.. தமிழ் மக்களிற்கோ இல்லை. சிறீலங்காவைப் பொறுத்த வரை தமிழ் மக்களின் ஏகோபித்த நிலைப்பாடு தமிழீழத் தனியரசு தான். அதனை எவராலும் தட்டிப்பறிக்க முடியாது. சிறீலங்கா எத்தனையோ மோசடியான சட்டமூலங்களையும்.. தேர்தல்களையும் நடத்தி விட்டது. இந்திய அமைதிப்படை காலத்திலும் இந்தியா மோசடியான தேர்தல்களை நடத்தியது. தேர்தல்கள் தான் ஜனநாயகம் என்றால்.. சிறீலங்காவைப் பொறுத்த வரை அந்த ஜனநாயம் எப்பவோ செத்துவிட்டது.

 

மேலும் இந்தச் சட்ட மூலத்தின் பிரகாரம் வடக்குக் கிழக்கிற்கு வெளியில் வாழும் வடக்குக் கிழக்கு பூர்வீகம் வாழ் மக்கள் வாக்களிக்க வகை செய்யப்பட்டுள்ளது எனின் அதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனக்கும் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கொழும்பு உட்பட்ட தென்பகுதிகளில் பல தமிழ் மக்கள் வாழ்கின்றனர். தமிழகத்தில் வாழ்கின்றனர். மேற்கு நாடுகளில் வாழ்கின்றனர். அவர்களும் வாக்களிக்க சர்வதேசத்தின் உதவியை நாட வேண்டும். அதன் மூலமே இப்படியான ஜனநாயக மோசடிகள் சிறீலங்காவில் இடம்பெறுவதை சர்வதேச மயப்படுத்த முடியும். அதன் மூலமே தமிழ் மக்களின் பூர்வீக இருப்பை நிரூபிக்கக் கூடிய வலுவை சிங்களத்தின் மோசடிகளுக்குள்ளும் நாம் தக்க வைக்க முடியும்.

 

புலிகள் காலத்தில் ஹக்கீம் உட்பட்ட முஸ்லீம் காங்கிரஸை புலிகள் ஒரு தரப்பாகக் கூட கணிக்கவில்லை. அந்தளவிற்கு அவர்களிடம் ஒற்றுமையும் இருக்கவில்லை. இன்றும் அதே நிலை தான். சிங்களம்.. இராணுவ இயந்திரத்தையும் அதிகாரத்தையும் வைச்சுக் கொண்டு தமிழ் மக்கள் பலவழிகளிலும் அச்சுறுத்தி அடக்க நினைக்கிறது. இதன் பின்னால் அமெரிக்கா.. ஜப்பான்.. இந்தியா போன்ற நாடுகளும் மறைமுகமாக உதவியே நிற்கின்றன. அந்த வகையில்.. இதனை சர்வதேச மயப்படுத்தி.. உலகத் தமிழர்களின் குரலை இந்த மோசடிகளுக்கு எதிராக திருப்பும் வரை மோசடிக்குள் கிடைக்கக் கூடிய உச்ச பயனை தமிழர்கள் பெற்றுக் கொள்ள முனைவதும் சிங்களம்.. இவ்வாறான சுத்துமாத்துக்களில் இருந்து தனக்கு எழக் கூடிய பாதகத்தைக் கருத்தில் கொண்டு.. அவற்றில் இருந்து விலகி நிற்கத் தூண்டும்.

 

கொழும்பு.. நீர்கொழும்பு.. மற்றும் தென்பகுதி..  வாழ் வடக்குத் தமிழ் மக்களும் இந்தத் தேர்தல்களில் வாக்களிக்க வேண்டும். வடக்கில் வாழ்ந்து தற்போது மலையகத்திற்கு இடம்பெயர்ந்து வாழும் மலையக தமிழ் மக்களும் மலையகத்தில் இருந்து கொண்டு வாக்களிக்க கூட்டமைப்பு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் மற்றும் மேற்கு நாடுகளில் உள்ள தமிழ் மக்களும் வாக்களிக்க கூட்டமைப்பு ஒரு முயற்சியை மேற்கொள்வதற்கு இதனை ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொள்வது அவசியமாகும்.

 

சிங்கள - ஹக்கீம் கூட்டு சதியை அவர்கள் பாணியில் முறியடித்தால் அன்றி அவர்களை அவ்வளவு இலகுவில் ஜனநாயக மோசடிகளில் இருந்து.. கட்டுப்படுத்த முடியாது. :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கை கபளீகரம் செய்ய நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமின் புதிய சட்டமூலம் நிறைவேற்றம்

 

 

நீங்கள் ஓட்டு போடத்தான் ஈரானு இராக்கு சவுதி  குவைத்து  இன்னும் எத்தனை எத்தனை நாடுகள் உள்ளன..  அங்கிட்டு போய் ஓட்டு போடுங்க.. நாங்க என்ன வேண்டாம் என்றா சொல்கிறம்..?  

டிஸ்கி:

அய்யோ அடிக்கிறான்  சிங்களன் அடிக்கிறான்... என்று அடைக்கல்ம் கேட்க ரைம் பார்த்து வருவார்கள் .. நம்ம இளிவாயர்கள் பரிதாப பட்டு இரண்டு பேருக்கு இடம் கொடுத்தால் அதாவது (கணவன்/மனைவி) ... ஓவர் நைட்டில் .. எல்லாம் முடிந்து காலையில் பத்து நியு ஜாயினிஸ் (குழந்தைகள்) . ஆய் அங்கில் என நம்மள பார்த்த் சொல்லிட்டு போகும்...

 

அதை பார்த்து நம்மட ஆட்களும் அய்யோ பாவம்  குழந்தைகள் என விட்டுடும் ஆனால்

 

  இது  வருங்கால் சனி என நம்ம வருக்கு தெரிவதில்லை... அதான் பிரச்சனையே இப்பொ..

டிஸ்கிக்கு டிஸ்கி

ராஜ தந்திரம் பாருங்கப்பா துப்பாக்கி தூக்க வேண்டிய இடத்தில் தூக்கணும் .. முடியாட்டி வேற துப்பாக்கிய துக்கணும் (...) கேட்டா பெரும்பான்மை நாங்கதான் என்று சொல்லிடுவான்.. மண்ணின் மைந்தர்கள் குச்சி மிட்டாய்தான் சப்பிட்டு நிற்கணும்...

 

 

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.