Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு நாள் 3 அப்பாக்கள்.....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாள் 3 அப்பாக்கள்..... c6709ebfb271843ddab08837174b66e7.jpgஅப்பா 01 

அப்பாவுக்காக காலிமுகத்திடல் காத்துக் கொண்டிருந்தது. செந்நிறச் சால்வையை வழக்கம் போல கழுத்தில் போட்டுக் கொண்டு தன் மூன்று புத்திரர்கள் சகிதம் மேடையில் ஏறியமர்ந்தார்.

அவர் கண்முன்னே விதவிதமான சாகசங்கள் நிகழ்ந்தேறத் தொடங்கின. வானத்திலிருந்து பரசூட் குதிப்புக்கள், மோட்டார் சைக்கிள் சாகசங்கள் என்பவற்றுடன் இதுவரை போர்க்களம் பார்த்திராத ஆயுதங்களும், டாங்கிகளும் இன்னமும் மாறாத வெற்றி செருக்குடன் அசைந்துகொண்டிருந்தன. 

அப்பாவுக்கு பெருமை பிடிபடவில்லை. போதாக்குறைக்கு ஒலிவாங்கிக்கு முன்னால் வந்தவர்கள் எல்லாம் அப்பாவினதும் அவரது தம்பியினதும் புகழையும் வீரத்தையும் வானளாவ புகழ்ந்து கொண்டிருந்தார்கள். 

நவீன துட்டகைமுனு என்றும், தர்மத்தை நிலைநாட்ட வந்த கலியுக கௌதம புத்தர் என்றும் புதுப் புதுப் பட்டங்கள் அவருக்கு சூட்டப்பட்டுக் கொண்டிருந்தன. புதிய மகாவம்சத்தின் நாயகனாகிய திருப்தியோடு தன் படை பரிவாரங்களின் அணி வகுப்பை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார். 

"இது இலங்கையரின் நாடு. மூன்று தசாப்தமாக குடிகொண்டிருந்த பயங்கரவாதப் பாம்பை நான் கொன்றொழித்தேன். இப்போது நாட்டு மக்கள் எல்லோரும் எந்தப் பயமும் இன்றி எந்தக் கவலையுமின்றி வாழ்கிறார்கள். ஆசியாவின் ஆச்சரியமாக  மிளிர்கிறது இலங்கை. குறையொன்றும் இல்லாது சுதந்திரம் பெற்ற ஆனந்தத்தோடு குதூகலிக்கிறார்கள் மக்கள்'' என்ற சாரப்பட அப்பா பேசினார். 

கரகோஷத்தில் காலிமுகத்திடல் அதிர்ந்து அலைகள் மேலெழுந்தன. எல்லாம் முடிந்தது. அப்பா புறப்பட வேண்டும். வழியில் தீப்பந்தம் ஏந்திக் கொண்டு ஆயிரக்கணக்கானோர் "மின்கட்டணத்தை குறை. விலைவாசியை ஏற்றாதே'' என்று அப்பாவுக்கு எதிராக கோஷம் போட்டுக் கொண்டிருந்தார்கள். 

அப்பா மாளிகைக்கு வரும் வரை வீதி நெடுகிலும் ஒட்டி உலர்ந்த உடலோடு ஆயிரக்கணக்கான புதிய பிச்சைக்காரர்கள் குந்திக் கொண்டிருந்தார்கள். "எங்கள் நாடு உண்மையிலேயே ஆசியாவின் அதிசயம்தான்'' ஒரு மகன் சொல்ல ஆமோதிப்பது போல அப்பா கொடுப்புக்குள் சிரித்துக் கொண்டார்.

அப்பா 02

இந்த அப்பாவுக்கு நிறைய வேலைகள் இருந்தன. அவற்றில் முக்கியமானது வால்பிடிப்பும் துதிபாடலும் தான். இதற்கான ஆயத்தங்களைச் செய்வதற்கிடையில் பிள்ளையின் அழைப்பு அவரை அவசரப்படுத்துகிறது. 

"ரியூசனுக்குக் கொண்டுபோய் விடுங்கோ. நேரம் போகுது'' பிள்ளையின் குரலுக்கு ஓடோடி வந்த அப்பா அவளை, மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு விரைகிறார். 4 வருடங்களுக்கு முன்னர் அப்பா பிக் அப் வாகனத்தில் பறந்துகொண்டு திரிந்தவர்தான். 

அப்போது அவரின் உடலை வரிச் சீருடை மறைத்திருந்தது. "நாங்கள் பொறுமையின் விளிம்பில் நின்று கொண்டு அரசுக்கு எச்சரிக்கிறோம்'' என்று அநேக அறிக்கைகளின் முடிவில் எழுதியவர். 

இடையே அவர் பின்னால் செய்யப்போகும் தவறுக்கான தண்டனையாக முன்னதாகவே இதயத்தில் கோளாறு வர, புலிகளின் புண்ணியத்தில் கொழும்புக்கு அனுப்பப்பட்டு அவர்களின் பணத்தில் மீள் உயிர் பெற்றவர். 

அவர்தான் போர் முடிவதற்கு முன்னதாகவே பொறுமையின் விளிம்பில் இருந்து எழுந்து இரு கரங்களையும் தூக்கிக் கொண்டு முதல் ஆளாக பேரினத்தின் காலில் விழுந்தார். 

"சந்தேகம் இல்லை இது அவரேதான்'' என்று தமிழர்களின் மீட்பரின் உடல் எதிரே நின்று கைநீட்டிக் காட்டிக் கொடுத்த கலிகால யூதாஸ். இப்போது அவருக்கு நாற்காலிக் கனவு அடிக்கடி வந்துகொண்டிருக்கிறது. கனவு கண்டதோடு அதை மறந்திருந்தால் பரவாயில்லை. 

யாரைப் பிடித்தாவது அல்லது காலில் விழுந்தாவது உண்மையாகவே  கதிரையில் தொற்றிக் கொள்ள வேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்கிறார். அவருக்கே தெரியும் அது நடக்க முடியாத காரியம் என்று. 

போகும் வழியில் பிள்ளை அவரைப் பார்த்து கேட்டாள். 

"அப்பா எங்களுக்கு எத்தின கண்?'' "இரண்டு''

"காது எத்தின?''

"அதுவும் இரண்டுதான்''

"நாக்கு?''

"அதுவும் இரண்....''

பழக்கதோஷத்தில் இரண்டு என்று சொல்லப்போனவர் அமைதியானார். அவருக்கு இரண்டு நாக்குத்தானே? 

அப்பா 03

அவனுக்கு சரியாகப் பசித்தது. "அம்மா! பசிக்கிது. சாப்பிட ஏதாவது தாங்கோ'' என்று ஏழெட்டு முறை அழுதுவிட்டான். 

தாய் அவனின் பசியை கண்டுகொள்வதாக இல்லை. வட்டுவாகல் பாலத்தில் ஒரு முனையில் நின்றபடி எதிரே தெரிந்த சதுப்புவெளியை வெறித்துப் பார்த்தபடியே இருக்கிறாள். கன்னங்களில் காய்ந்துபோன கண்ணீரின் ரேகைகள். 

எவ்வளவுநேரம் தான் அவனும் பொறுத்துப் பொறுத்துப் பார்ப்பது. ஐந்து வயதுப் பாலகனுக்கு தாய் வெறித்துப்பார்ப்பதன் காரணம் புரியாதுதானே தாயின் கையிலிருந்த பையை நோண்டத் தொடங்கினான். 

சாப்பிடுவதற்கு எதுவுமிருக்கவில்லை. அப்படியும் அவன் விடவில்லை. தேடிக் கொண்டேயிருந்தான். தேடலின் முடிவில் கசங்கிப் போன ஒரு புகைப்படம் அவன் கையில் சிக்கியது. 

"அப்பா!'' பசி மறந்து அவன் கண்கள் மலர்ந்தன. அவன் தந்தை புகைப்படத்தில் ஒரு வயதான அவனை தூக்கி வைத்திருந்தான். கண்ணீர் பட்டு அந்தப் படம் நிறையவே பழுதடைந்து போயிருந்தது. கூடவே விபூதி, சந்தன அடையாளங்களும். தாய் இன்னும் வெறித்தப் பார்த்துபடியே இருந்தாள்.

"அம்மா! அப்பா எங்கே அம்மா? எப்ப வருவார்? அவர பாக்கோணும் போல இருக்கம்மா. எங்கட அப்பா எப்படியிருப்பார்?'' அப்பாவைப் பற்றிய நிறையக் கேள்விகளை அவன் அடுக்கிக் கொண்டு போனான். 

அப்பா மீள வரலாம் என்ற கனவில் அவன் பசி மறைந்திருந்தது. ஐந்து வயதுப் பாலகனின் எல்லாக் கேள்விகளுக்கும் "உன்ர அப்பா அங்கதான்'' என்று சொல்லியபடியே எதிரே தெரிந்த வெளியை நோக்கி கையை நீட்டினாள் தாய். தூரத்தே ஆள்காட்டிக் குருவி பறந்துகொண்டிருந்தது. காற்றில் புதைந்து போயிருந்தது பிணங்களின் வாடை. 

அவனுக்கு இது ஒன்றும் புரிந்துகொள்ளும் வயதில்லை. அவன் அப்பாவைப் பற்றி எப்றேபாதும் போல கேட்டுக் கொண்டே இருக்கிறான். அவள் அவனின் அடுத்த வேளை பசியை எப்படிப் போக்குவது என்று யோசிக்கத் தொடங்குகிறாள்.

 

http://onlineuthayan.com/News_More.php?view=essay_more&id=1248449520814650

 

 

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்தலுக்கு நன்றி.

 

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்தலுக்கு நன்றி.

 

 

அப்பாக்கள் முன் மாதிரியாக இருக்கணும்

பிள்ளை

அதையே தான் எடுத்துக்கொள்ளும்

காலம் பதில் தரும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பகிர்தலுக்கு நன்றி.

 

 

அப்பாக்கள் முன் மாதிரியாக இருக்கணும்

பிள்ளை

அதையே தான் எடுத்துக்கொள்ளும்

காலம் பதில் தரும்

 

அப்பிடியெண்டும் சொல்லேலாது விசுகர். எனக்குத்தெரிஞ்ச தமிழ்க்குடும்பத்திலை தாய்தகப்பன் அந்தமாதிரி நல்லபெயர் எடுத்தவர்கள்.குடி சூதுவாது தெரியாதவர்கள்.ஒழுக்கத்துக்கும் பெயர் எடுத்தவர்கள். ஆனால் பிள்ளையளோ தண்ணி தடியடி பொலிசு கோட்டு எண்டு திரியுதுகள்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடியெண்டும் சொல்லேலாது விசுகர். எனக்குத்தெரிஞ்ச தமிழ்க்குடும்பத்திலை தாய்தகப்பன் அந்தமாதிரி நல்லபெயர் எடுத்தவர்கள்.குடி சூதுவாது தெரியாதவர்கள்.ஒழுக்கத்துக்கும் பெயர் எடுத்தவர்கள். ஆனால் பிள்ளையளோ தண்ணி தடியடி பொலிசு கோட்டு எண்டு திரியுதுகள்.

 

 

உண்மைதான் அண்ணா

நானும் சந்தித்திருக்கின்றேன்.

ஆனால் முன் மாதிரி  என்று சொன்னது

பொதுவானது.

விதைப்பது நல்லதாக இருக்கணும்

வருவது சிலவேளை களையாகவும் இருக்கலாம்.........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.