Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சத்தீஷ்காரில் தாக்குதல்: சோனியா காங்கிரஸ் தலைவர்கள் பலி மற்றும் கடத்தல்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

_67817609_india_raipur_may13.gif

 

 

இந்தியாவில் சத்தீஷ்கார் (Chhattisgarh) மாநிலத்தில் மாவேஸ்டுக்கள் நடத்திய தாக்குதல் ஒன்றில் அந்த மாநில காங்கிரஸ் உள்ளூர் தலைவர் ஒருவர் கொல்லப்பட்டு பலர் காயமடைந்துள்ளதோடு.. மாநில காங்கிரஸ் தலைவர் மற்றும் மகன் கடத்தப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

 

இந்தத் தாக்குதலில் மொத்தம் 17 பேர் உயிரிழந்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

 

இது இந்தியாவின் ஜனநாயகத்தின் மீது விழுந்த பேரடி என்று காங்கிரஸ் தலைவர் சோனியா இத்தாக்குதலை கண்டித்துள்ளார். காங்கிரஸார் இச்செய்தி கேட்டு இடிந்து போயுள்ளார்களாம்.

 

http://www.bbc.co.uk/news/world-asia-india-22667020

 

 

Edited by nedukkalapoovan

சீனா நேராக வரவிட்டாலும் மாவோஸ்டுக்கலாக வருகிறது.

 

எதோ யார் இறந்தாலும் எஞ்சியோரின் பொக்கெட்டுகள் கனமாக இருந்தால் காங்கிரசுக்கு அது போதும்.

நல்ல விடயம். அடுத்த முறை மவோக்களையும் அழையுங்கள். ஏனெனில் , சிறிலங்கா சீனாவுடன் உறவு கொள்வதால் தான் இந்தியா அவர்களுக்கு ஆதரவு தருகிறது.

ஆகவே , நாம் சீனாவின் செல்லப் பிள்ளைகளுடன் பேசினால், இந்தியா எமக்கும் ஆதரவு தரும். <_<

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

MANMOHANSIGH-99991111.jpg

 

 

சத்தீஷ்கரில் காங்கிரஸ் பேரணியில் மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தியதை அறிந்ததும், பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர்.

 

பிரதமர் மன்மோகன்சிங் உடனடியாக முதல்-மந்திரி ராமன்சிங்குடன் டெலிபோனில் தொடர்பு கொண்டு பேசினார். நடந்த சம்பவத்தை கண்டித்த அவர் மாநில அரசுக்கு கூடுதலாக மத்திய படைககள் மீட்பு மற்றும் நிவாரண உதவிகள் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்துதர தயாராக இருப்பதாக கூறினார்.

 

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மாவோயிஸ்டுகள் தாக்குதல் குறித்து கடுமையான அதிர்ச்சியையும், வேதனையும் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தின் மீதான இந்த தாக்குதலை அனைத்து அரசியல் கட்சிகள் மட்டுமின்றி ஒட்டு மொத்த சமுதாயமும் கண்டிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

 

பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று டெல்லியில் இருந்து ராய்ப்பூர் விரைந்தனர்.

ராய்ப்பூர் வந்த பிரதமர் மன்மோகன்சிங், முதல்வர் ராமன்சிங்கை சந்தித்தார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காங்கிரஸ் நிர்வாகிகளை சந்தித்தார்.

 

பிரதமர் மன்மோகன்சிங் கூறுகையில், மாவோயிஸ்ட்களின் இந்த தாக்குதல் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல், கண்டனத்திற்குரியது. இவர்களை ஒழித்துக்கட்ட அனைவரும் ஒன்று பட வேண்டும். உறுதியுடன் போராடினால் மட்டுமே மாவோயிஸ்ட்களின் அட்டூழியத்தினை ஒழித்துக்கட்ட முடியும் என்றார்.

 

 

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=100152

 

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை காலம்தான் "ஏமாற்றுவார்" இந்த நாட்டிலே!!
 
nitin-gadkari-2009-12-24-4-40-27.jpgMay 30, சத்தீஷ்கார் மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடைபெறுகிறது.

அந்த மாநிலத்தில் உள்ள ரேஷன் கடைகளில் ரூ.5-க்கு 1 கிலோ பருப்பு வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது. 

அந்த தொடக்க விழாவில் பா.ஜனதா தலைவர் நிதின் கட்காரி கலந்து கொண்டு திட்டத்தை ஆரம்பித்துவைத்தார். 

அந்த விழாவில் பேசிய நிதின் கட்காரி, உலக அளவில் தீவிரவாதம் வளர்ந்து வருவதால் அனைவரும் ஒன்றுபட்டு போராட வேண்டும் என்று தெரிவித்தார். 

சிந்திக்கவும்: இந்திய தீவிரவாதிகள் உலக தீவிரவாதம் குறித்து பேசுகிறார்கள். இந்தியாவில் நடந்த அனைத்து தீவிரவாத செயல்களின் பின்னணியிலும் இருந்து செயல்பட்டது இந்த ஹிந்துத்துவா இயக்கங்களே. 

மக்கா மஸ்ஜித் முதல் மலேகன் வரை, "இந்தியா முழுவதும் தொடர் குண்டுவெடிப்புகளை நடத்திவிட்டு" இவர்கள் தீவிரவாதம் பற்றி பேசுகிறார்கள். 

"மதத்தை வைத்து அரசியல் நடத்த" இந்த பாரதிய ஜனதாகட்சி இந்தியா முழுவதும் நடத்திய கலவரங்கள் எத்தனை? எத்தனை? 

இதன் மூலம் கொல்லப்பட்ட அப்பாவி சிறுபான்மை மக்கள் பல்லாயிரக்கணக்கில். இந்தியாவில் நடக்கும் தீவிரவாத நடவடிக்கைகளின் ஊற்று கண்களாக ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் துணை அமைப்புகளாகிய பாரதிய ஜனதா பார்ட்டி, 

விஸ்வஹிந்து பரிஷத், பஜ்ராங்க்தல், அகிலபாரதிய வித்யாதி பரிஷத், இந்து முன்னணி, ஹிந்து சுயம் சேவக் சங்க், துர்க்கா வாகினி, ஆகிய அமைப்புகள் இருந்து செயல்பட்டு வந்தன. 

இப்படிப்பட்ட பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் முகமூடிதான் பாரதிய ஜனதா கட்சி, இவர்கள் சொல்கிறார்கள் வளர்ந்து வரும் உலக தீவிரவாததிற்கு எதிராக ஒன்று பட்டு போராடவேண்டும் என்று.

வேடிக்கையாக இருக்கிறது, இந்திய தீவிரவாதத்தின் தலையாக இருந்து செயல்படுபவர்கள் உலக தீவிரவாதத்தை பற்றி பேசுகிறார்கள். இந்தியாவில் வளர்ந்து வரும் இவர்களது தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக எல்லாரும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும்.

இந்நிலையில் இந்தியாவின் மனித உரிமை இயக்கங்களும், மதசார்பற்ற இயக்கங்களும், கட்சிகளும், மக்களும், தலைவர்களும் இந்த ஹிந்துத்துவா ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்து இந்தியாவை காப்பாற்ற தொடர்ந்து பாடுபட்டு வருகிறார்கள் என்பது ஒரு சந்தோசமான செய்தியே.

http://www.sinthikkavum.net/search?updated-max=2011-05-29T17:37:00-07:00&max-results=6&reverse-paginate=true

மாவோ போராளிகளின் வீரம் செறிந்த தாக்குதலுக்கு பாராட்டுகள் 

 

நக்ஸலைட்டுகளில் நேற்று கொல்லப்பட்ட மஹேந்திர கர்மா என்னும் காங்கிரஸ் தலைவர், சத்தீஸ்கரில் முன்பு உள்துறை அமைச்சராக இருந்தவர். மாவோயியவாதிகளை எதிர்த்து மோதுவதற்காக உருவாக்கப்பட்டிருந்த சல்வா ஜுதும் என்ற ஆயுதக் குழுவை உருவாக்கியதும் இவர்தான்.

ஜார்க்கண்ட், உத்தராகண்ட், சத்தீஸ்கர், ஒரிஸ்ஸா போன்ற மாநிலங்களில் உள்ள ஏராளமான இயற்கை வளங்களை வேதாந்தா போன்ற பன்னாட்டு நிறுவனங்களிடம் அடகுவைத்துவிட்டது களவாணி காங்கிரஸ் கும்பல்.

பன்னாட்டு நிறுவங்கள் இயற்கை வளங்களை சுரண்டுவதற்க்கு ஏதுவாக, காடுகளில் உள்ள பழங்குடி இனமக்களை அடித்து துரத்தவேண்டும். 

வடகிழக்கு, காஷ்மீர் போல இராணுவத்தை ஒரிஸ்ஸா காடுகளில் நிறுத்த முயல்கிறது காங்கிரஸ்...

 

மாவோயிஸ்ட் தாக்குதலில் 27பேர் பலி:மாநில காங்கிரஸ் தலைவர் உடல் மீட்பு

 

rescue.png

 

 

சத்தீஸ்கர் மாநிலத்தில், மாவோயிஸ்ட்களால் கடத்தப்பட்ட மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் நந்தகுமார் பட்டேலின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

 

சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தர் மாவட்டத்தின் ஜக்தல்பூர் நகரில் ஆளும் பாரதிய ஜனதா அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் 'பரிவர்த்தன் யாத்ரா' என்ற பெயரில் நேற்று பேரணி நடைபெற்றது. அடர்ந்த வனப்பகுதி வழியாக நடந்த இந்த பேரணியில் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

 

காதி பள்ளத்தாக்கு பகுதியில் சென்றபோது பேரணியில் சென்றவர்கள் மீது மாவோயிஸ்ட்கள் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்கள் பலர் உயிரிழந்தனர். 27 பேர் இந்த சம்பவத்தில் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் முன்னாள் மத்திய அமைச்சர் சுக்லா உட்பட ஏராளமானோர் பலத்த காயம் அடைந்தனர்.

 

மேலும், மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் நந்தகுமார் படேல் மற்றும் அவரது மகன் தினேஷை மாவோயிஸ்ட்கள் கடத்திச் சென்றனர். இந்நிலையில், இன்று காலை தர்பா காத் வனப்பகுதியில் நந்தகுமார் படேலின் உடல் மீட்கப்பட்டுள்ளது. படேலை கடத்திய மாவோயிஸ்ட்கள் அவரை கொன்று உடலை காட்டுப்பகுதியில் வீசிவிட்டு சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.மேலும், நந்தகுமாருடன் கடத்தப்பட்ட அவரது மகன் தினேஷூம் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இதனிடையே, தாக்குதல் நடைபெற்ற இடத்தை பார்வையிடுவதற்காக காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி சத்தீஸ்கர் சென்றுள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர், தாக்குதல் நடைபெற்ற பகுதியை பார்வையிடுவதற்காக சற்று முன் ராய்ப்பூர் சென்றடைந்தனர்.

 

http://puthiyathalaimurai.tv/maoist-attack-in-chattisgarh-27-dead

 



சத்தீஸ்கர் மாவோஸ்ட் தாக்குதல் : பாஜக மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

 

சத்தீஸ்கரில் காங்கிரஸ் தலைவர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ள நிலையில், இந்த தாக்குதலுக்கு, அம்மாநிலத்தை ஆளும் பாரதிய ஜனதாவே காரணம் என காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. ஆனால், நக்சல் தீவிரவாதத்தை அனைவரும் ஒருங்கிணைந்து எதிர்க்க வேண்டும் என பாரதிய ஜனதா வலியுறுத்தியுள்ளது.

 

சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தர் மாவட்டத்தின் ஜக்தல்பூர் நகரில், பாரதிய ஜனதா அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று பேரணி நடைபெற்றது. பேரணியில் சென்றவர்கள் மீது மாவோயிஸ்ட்கள் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்கள் உள்ளிட்ட 25க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். மாவோயிஸ்ட்களால் கடத்திச் செல்லப்பட்ட மாநில காங்கிரஸ் தலைவர் நந்த் குமார் படேல், அவரது மகன் தினேஷ் ஆகியோரின் உடல்கள் இன்று காலை தர்பா காத் வனப்பகுதியில் மீட்கப்பட்டன. மாவோயிஸ்ட் தாக்குதலில் முன்னாள் மத்திய அமைச்சர் வி சி சுக்லா உட்பட ஏராளமானோர் பலத்த காயம் அடைந்தனர்.

 

ஜக்தல்பூரில் வைக்கப்பட்டுள்ள பலியானவர்களின் உடல்களுக்கு முதலமைச்சர் ராமன் சிங் மற்றும் ஆளுநர் சேகர் தத் ஆகியோர் இன்று நேரில் அஞ்சலி செலுத்தினர். இதனிடையே, மாவோயிஸ்ட் தாக்குதலில் காயமடைந்து, தலைநகர் ராய்ப்பூரில் சிகிச்சை பெற்று வரும் காங்கிரஸ் தொண்டர்களை பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, இதுபோன்ற தாக்குதல்கள் மூலம் காங்கிரஸ் கட்சியினரை அச்சுறுத்த முடியாது என்றார்.

 

காங்கிரஸ் கட்சியினர் மீதான மாவோயிஸ்ட் தாக்குதலுக்கு, சத்தீஸ்கரை ஆளும் பாரதிய ஜனதா அரசின் தோல்வியே காரணம் என காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

 

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்கள் நடத்திய  தாக்குதலுக்கு குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரணப் முகர்ஜி வெளியிட்டுள்ள செய்தியில், தாக்குதல்களால் தேசத்திற்கு மிரட்டல் விடுக்க முடியாது என அவர் கூறியுள்ளார். தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள குடியரசுத் தலைவர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனிடையே, நக்சல் ஆதிக்கமுள்ள மாநிலங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரியும், சமூக சேவகருமான கிரண் பேடி வலியுறுத்தியுள்ளார்.

 

மாவோயிஸ்ட் தாக்குதலில் காங்கிரஸ் தலைவர்கள் கொல்லப்பட்டதைக் கண்டித்து, தலைநகர் டெல்லியில் பாரதிய ஜனதா அலுவலகம் முன்பாக காங்கிரஸ் கட்சியினர், கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

http://puthiyathalaimurai.tv/mavost-attack-bjp-allegation-on-congress

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.