Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகள் அன்று பாலசிங்கத்தை இழந்தது போன்று இன்று ஐ.தே.க ஜயலத்தை இழந்துள்ளது! - மகிந்த தெரிவிப்

Featured Replies

விடுதலைப் புலிகள் அன்று பாலசிங்கத்தை இழந்தது போன்று இன்று ஐ.தே.க ஜயலத்தை இழந்துள்ளது! - மகிந்த தெரிவிப்பு!!

018dbeb5-d185-4b8a-a644-a4249d7be9ba1.jp

 

'தமிழீழ விடுதலைப் புலிகள் அன்று தமது தத்துவ ஆசிரியர் அன்ரன் பாலசிங்கத்தை இழந்தது அவர்களுக்கு ஈடுசெய்ய முடியாததாக இருந்தது. அதேமாதிரி இன்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தனவின் இழப்பு ஐக்கிய தேசியக் கட்சிக்கு மாபெரும் இழப்பாகும். இவர் எமது அரசைக் கடுமையாக விமர்சித்தாலும் நல்ல பண்புடையவர்' என சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்த்தனவின் பூதவுடலுக்கு சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேற்று தனது இறுதி மரியாதையைச் செலுத்தியுள்ளார்.

அன்னாரது பூதவுடல் ஜா-எலயிலுள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவரது வீட்டுக்கு நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் வேளையில் சென்ற சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது இறுதி மரியாதையை செலுத்தியதுடன் குடும்ப உறவினர்களுடன் தனது துயரத்தையும் பகிர்ந்து கொண்டார்.

இதன் பின்னர் அங்கு நின்ற ஊடகவியலாளர்களிடம் உரையாடும் போதே சிறிலங்கா ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் கூறியவை வருமாறு:-

'கலாநிதி அன்ரன் பாலசிங்கத்தின் இழப்பு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாக இருந்தது. ஏனெனில், அவர் விடுதலைப் புலிகள் அமைப்பில் தத்துவ ஆசிரியராக இருந்ததுடன் அரசியல் ரீதியில் மிக நுட்பமான முறையில் செயற்பட்டார்.

அதேமாதிரி இன்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தனவின் இழப்பு ஐக்கிய தேசியக் கட்சிக்கு மாபெரும் இழப்பாகும். ஏனெனில், அக்கட்சியின் அரசியல் நடவடிக்கைகளில் இவரின் மதிநுட்பம் மேலோங்கி இருந்தது.  

இறக்கும்வரை ஐக்கிய தேசியக்  கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளராக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன, அக்கட்சி 2002இல் ஆட்சியமைத்த போது புனர்வாழ்வு அமைச்சராக 2004 வரை இருந்து திறம்பட சேவையாற்றினார். அந்தக் காலத்தில் நான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தேன்.

அக்காலத்தில் ஒரு நாள் என்னை யாழ்ப்பாணத்திற்கு அமைச்சர் மகேஸ்வரனுடன் அழைத்துச் சென்ற ஜயலத் ஜயவர்த்தன அங்குள்ள மக்களுக்கு என்னை அறிமுகப்படுத்தி சில நிகழ்வுகளில் என்னை பங்குபற்றச் செய்தார். இவ்வாறு நல்ல பண்புகளைக் கொண்டவர் ஜயலத் ஜயவர்த்தன.

 

இவர் எனது அரசைக் கடுமையாக விமர்சித்தது உண்மைதான். எனினும், டாக்டர் ஜயலத் ஜயவர்த்தனவின் நல்ல பண்புகளை நான்  மறக்கமாட்டேன்' என்று சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=018dbeb5-d185-4b8a-a644-a4249d7be9ba

 

பாலசிங்கம் அண்ணன் அவர்களின் புகழ் அழிக்கபட முடியாது.

இன்றும் சிங்களவன் மனதில் சிம்மசொப்பனமாக இருக்கிறார் என்பது போர்க் குற்றச்சாடுகளில் மாட்டுபட்டுள்ள மகிந்தவின் கூற்றில் தெரிகிறது.

 

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப  எதுக்கு இவர் பாலசிங்கம் அண்ணா பற்றி புகழ்கிறார்

புலிகள் பற்றி அக்கறைப்படுகின்றார்???

  • கருத்துக்கள உறவுகள்

ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுகிறது..! :rolleyes:

  • தொடங்கியவர்

UNP யை புலிகளாக காட்டவும், ரணிலை "பிரபாகரன் போன்ற பயங்கரவாதி" எனச் சிங்கள மக்களுக்கிடையில் பிராச்சாரம் ஆரம்பிக்கவும் அத்திவாரம் போடுகிறார்.

 

கோமாளி UNP கட்டைகள் எதையும் பெருமையாகவே எடுத்துக்கொள்வார்கள். "ஆகா அப்படியா " என்று கூறிக்கொண்டு தேர்தலுக்கு போய் ரணில் திரும்பவும் ஒருதடவை மண் கவ்விக்கொண்டு வருவார். 

 

கருணாவை, பிள்ளையானை, "புலிகள் அலரிமாளிகை மெத்தையில் படுக்கின்றன, போரை வென்ற பொன்சேக்கா சிறையில் குறந்தறையில் படுக்கிறார்" என நீலிக்கண்ணிர் வடித்துவிட்டு பெருமை தேட முயலும் போது தான் தான் கருணாவையும் பிள்ளையானையும் புலிகளிடமிருந்து பிரித்து எடுத்து சிங்கள அரசு பக்கம் சேர்த்தது, அவர்கள் கொடுத்த இரகசியத்தால் தான் போர்வென்றது  என்றுவிடுவார்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர்களுடன் சேர்ந்து வாழ விரும்பும் எந்தச் சிங்களவனும்

இப்படியான கருத்துக்களை முன்வைப்பதில்லை.

இங்கே ஒரு இனவாத நாட்டின் தலைவர் தனது நாட்டின்  

 எதிர்க்கட்சியைப் பலவீனப்படுத்துவதற்காக

தனது நாட்டில் வாழும் இன்னொரு இனத்தினைக் 

கொச்சைப் படுத்துகின்றார்.  

 



 

Edited by வாத்தியார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செத்தது சிங்கப்பூரில ...

எண்டபடியா தப்பியிட்டான்...

அல்லாட்டில்....

நெத்தியில பெரிய பொட்டு வச்சு ...

பெரிய செத்தவீட்டு கொண்டாட்டமும் செய்து ....

மா மனிதர்... நாட்டுப்பற்றாளர் எண்டு ஒரு பட்டமும் குடுத்த பழக்க தோசத்தில ....

அப்பிடித்தான் நடந்தது எண்டு எழுதியிருப்பினம்.... :lol: :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.