Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருமலை கடற்படைத் தலைமையகம் மீது தாக்குதல்

Featured Replies

'Shelling and explosions'  

Military officials say that the ship - carrying more than 850 soldiers - came under attack from mortar and artillery fire as it was sailing from the northern Jaffna peninsula to the port of Trincomalee.  

http://news.bbc.co.uk/1/hi/world/south_asi...sia/5234202.stm

என்கிண்ற அப்பட்டமான புளுகுகளை இராணுவத்தினரை மேற்கோள் காட்டி வரும் செய்திகளை உண்மையான நடுநிலை எண்று குருவிகள் சொல்கிறது...

புலிகளிடமும், இராணுவத்தினரிடமும்  இருக்க கூடிய ஆகப்பெரிய ஹொவிச்சர் ரக 152MM பீரங்கைகளால் 36 மைல் தூரத்தை தாக்குவதே பெரிய விடயம் என்பது தெரியாமல்த்தால் படித்த அறிவாளிகளான BBCயினர் செய்தி வெளியிடுகிறார்களாம்...! அதை குருவிகளும் நம்புகிறாராம்...!  

இராணுவமுகாம்களில் இருந்து பாதுகாப்பாய் வடபகுதீல் இருந்து திருகோணமலைக்கு ஆட்லறியால் தாக்க வேண்டுமானால்.... புலிகளிடம் "ஹொவிச்சர்" ரக பீரங்கிகள் அல்ல இந்தியாவின் இண்றய தொழில்நுட்பமான சுவீடனின் தொழில் நுட்பம் கொண்ட "போபஸ்" பீரங்கீகள் வேண்டும்...!

தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் தல. குறித்த கப்பல் தான் யாழ் குடாவில் இருந்து..திருமலை நோக்கிச் சென்றதாக அதில் எழுதப்பட்டுள்ளது. தவறைத் திருத்திக் கொள்வீர்கள் என்று நம்புகின்றோம். :arrow:

(as it was sailing from the northern Jaffna peninsula to the port of Trincomalee)

தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் தல. குறித்த கப்பல் தான் யாழ் குடாவில் இருந்து..திருமலை நோக்கிச் சென்றதாக அதில் எழுதப்பட்டுள்ளது. தவறைத் திருத்திக் கொள்வீர்கள் என்று நம்புகின்றோம். :arrow:

(as it was sailing from the northern Jaffna peninsula to the port of Trincomalee)

யாழ் குடா நாட்டில் இருந்து தாக்குவதாக நானும் குறிப்பிட இல்லை...

உமக்கு இராணுவ வரைபட குறியீடுட்டில் இருந்து சொன்னால் 6 digit ல் தாக்கும் வல்லமை கொண்ட மோட்டாரினால் அலை கடலில் வரும் கப்பலுக்கு மோட்டரினாலும் ஹொவிச்சராலும் தாக்க முடியாது என்பதுதான்...! தரையில் அண்டி நிண்ற போது தாக்கினார்களா...??? அது அப்போ சாத்தியம்..!

அதையும் விட புலிகள் 10 digit துல்லியமான போபஸ் பிரங்க்கிகளால் அதாவது ஒரு மீற்றர் பரப்பளவு துல்லியம் கொண்ட பீரங்கிகள் தேவை...!

பேசாமல் கடலில் கடற்புலிகளின் தாக்குதல்களை தாக்குப்பிடிக்க முடியாமல் முதலே ஓடீட்டம் எண்டு சொல்லுங்கோ...!

நீங்களும் குறிப்பிடவில்லை..பிபிசியும் குறிப்பிடவில்லை...குருவிகளும

  • தொடங்கியவர்

4TH LEAD

Shells hit Trinco navy base, 14 killed, Dvora destroyed

[TamilNet, August 01, 2006 09:44 GMT]

Artillery shells began hitting the Sri Lanka Navy (SLN) Trincomalee Naval base as a ship transporting more than 800 Sri Lanka Army (SLA) troopers approached the naval base around 2:25 p.m. Tuesday. More than 36 shells have hit the naval base. At least 6 naval personnel were killed when the shells hit navy college inside the Naval complex. Five sea-borne LTTE vessels destroyed a Dvora boat killing eight SLN troops, naval sources said. The Trincomalee naval headquarters has sustained heavy damage.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19010

நீங்களும் குறிப்பிடவில்லை..பிபிசியும் குறிப்பிடவில்லை...குருவிகளும
  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா தமிழ்நெற்றுக்குள் பொக இயலாத மாதிரிக் கிடக்கு! சேவர் நடத்துகின்றவர்கள், அதற்கு மாற்று ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும்!

உம்! உண்மை அறிந்து கொள்ள வெளிநாட்டு அரசாங்கங்களும் தமிழ்நெற்றுக்குத் தான் போகினம் போல கிடக்கு! :roll:

இல்லயப்பா பிபிசிக்காரர் செய்தி எழுத அதுக்குள்ள தான் போய்ப்பாக்கினமாம், ஆனாப் பாருங்கோ உந்த நடு நிலை ஊடகங்கள் எழுதினாத் தான் சில பேருக்கு அது உண்மை.

தமிழர் எப்ப உண்மை சொன்னவை?

இல்லயப்பா பிபிசிக்காரர் செய்தி எழுத அதுக்குள்ள தான் போய்ப்பாக்கினமாம், ஆனாப் பாருங்கோ உந்த  நடு நிலை ஊடகங்கள் எழுதினாத் தான் சில பேருக்கு அது உண்மை.

தமிழர் எப்ப உண்மை சொன்னவை?

ஏன் மதித்தாத்தா சொல்லுறதை உண்மை எண்டு சொன்னதில்லையே....! அவரும் நியாயஸ்தன் தானே...!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னப்பா தமிழ்நெற்றுக்குள் பொக இயலாத மாதிரிக் கிடக்கு! சேவர் நடத்துகின்றவர்கள், அதற்கு மாற்று ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும்!

உம்! உண்மை அறிந்து கொள்ள வெளிநாட்டு அரசாங்கங்களும் தமிழ்நெற்றுக்குத் தான் போகினம் போல கிடக்கு! :roll:

ஜோவ் துாயவன் என்ன லொள்ளா சிறீலங்கா அரசாங்கமே தமிழ்நெற்றை பாத்துத்தான் தகவல் தெரிஞ்சு கொள்ளினம் :):D

தண்ணி திறந்துவிடப்போனவை இப்ப இரத்தம் குடுத்துக்கொண்டிருக்கினம்.

திருகோணமலையிலிருந்து ஓடுவதற்கு தயார் நிலையில் சிறீலங்காராணுவம். :):D

20041129172857trincomalee_police_grenade.jpg

படஉபயம்:- bbc.tamil :D

நீங்கள் தான் முற்றிலும் விளக்கமின்றி..அவர்களின் செய்தியைத் திரிக்கிறீர்கள்.

முதலில் ஆட்லறி வடபகுதியில் இருந்து திருமலை நோக்கி தாக்குதல் நடத்தியதாக விளங்கி ஆட்லறிகள் பற்றி எழுதினீர்கள்.

இப்போ...யாழில் இருந்து திருமலைக்குப் படையினரை ஏற்றிச் சென்ற கப்பலும் தாக்கப்பட்டதை..அவர்கள் குறிப்பிட நீங்கள் அதையும் தவறாக விளங்கிக் கொண்டு...விவாதிக்கிறீர்கள். இதற்குப் பெயர்தான் விதண்டாவாதம் என்பது.

பிபிசி குறிப்பிட்ட செய்திகளில் தவறிருப்பதாக நமக்குத் தெரியவில்லை. இதைத்தான் தமிழ் நெற்றும் சொல்லி இருக்கிறது. :idea:

அப்பிடியானால் வட பகுதி எண்று நான் சொன்ன பதங்களை நீர் காட்டலாம் நான் அதில் திருத்தம் கூட செய்திருக்கவில்லை...! முடிந்தால் சுட்டிக்காட்டும்...!

நான் வடபகுதி யாழ்குடாநாட்டில் இருந்து திரிகோணமலைக்கு என்பதை சிவப்பில் குறி இட்டும் இருகிறேன்...! அதாவது திருகோணமலை துறையில் இருந்து 30-35மைல் தூரத்தில்த்தான் கொக்குத்தொடுவாய் (வன்னி பெருநிலப்பரப்பின் மணலாறு) புலிகள் ஆழுகை தொடங்குகிறது.... அந்தப்பகுதியில் கப்பல்கள் கரையில் இருந்து குறைந்தது 80-200 கடல்மைல்(1860மீ ஒரு கடல் மைல்) தூரத்தில் ஆழ்கடலில்த்தான் பயணம் செய்யும்...! இது நடைமுறை....!

அப்படி இருக்க வட கடலில் இருந்து பயணம் செய்த கப்பல் கடலில் பயனம் செய்யும்போது பீரங்கிகளால்த்தான் தாக்கப்பட்டதா...??? :roll:

இப்போ அரசாங்கம் விடுமுறையில் வந்த ஆயுதம் அற்ற படையினர் தாக்குதலுக்கு உள்ளானார்கள் எண்று எதற்கான விளக்கம் எண்றும் சொல்லும்....??? ( என்ன போர் நிறுத்த மீறல்களாய் காட்ட முனைகிறார்களா..??? இல்லை ஆயுதம் இல்லாத அப்பாவி இராணுவத்தினரை கொல்ல முயண்றண்றனர் எண்று போர் குற்றவாளிகளாய் காட்டும்முயற்சி...??? இல்லை பயங்கரவாதிகளாய் காடும் முயற்சி...??)

கடற்படை தளத்தினுள் இராணுவத்தினரை ஏற்றி திருமலை துறைமுக கரைவந்த கப்பல் தாக்கப்பட்டதாக தமிழ்நெற் சொல்லியது.......! அதுதான் உண்மை..! அதாவது போர் நடக்கும் பிரதேசத்தில்....! தாக்குதலுக்கு மிண்டு கொடுக்க வந்தவர்கள் தாக்கப்பட்டனர்....! அல்லது விரட்டப்பட்டனர்...!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலாவின் சமாளிப்பை இரசித்தேன்.

நிற்க,

ஆட்லறி பற்றி தலா கூறியதில் ஒரு திருத்தம்.

புலிகளிடமோ அரசபடையிடமோ இருக்கும் 152 மி.மீ ஆட்லறிகளின் தூரவீச்சு 36 கிலோமீற்றர்கள் அல்ல. 17 கிலோமீற்றர்களே. 122 மி.மீ ஆட்லறிக்கு ஒப்பான தூரவீச்சைத்தான் இவையும் கொண்டுள்ளன.

130 மி.மீ ஆட்லறிகள்தாம் அண்ணளவாக 32 கிலோமீற்றர் தூரவீச்சைக் கொண்டன.

புலிகள் எங்குமே 130 மி.மீ ஆட்லறிகள் கைப்பற்றவில்லை. ஆனால் புலிகளிடம் அவை இருப்பது பரம இரகசியமன்று.

________________________

அதுசரி, தலா என்றுதானே தமிழில் எழுதுவது? அல்லது வேறு பேரா?

  • கருத்துக்கள உறவுகள்

திருமலைக் கடற்தளம் மீதுபுலிகள் கடும் ஷெல் மழை!

*"டோறா' மூழ்கடிப்பு! 8 படையினர் பலி! * 850 துருப்பினருடன் கப்பல் அருந்தப்பு! * பதிலுக்கு சம்பூர் பகுதியில் விமானப்படை குண்டுமாரி; அகோர எறிகணை வீச்சு!

திருகோணமலை நகரில் அமைந்துள்ள கடற்படைத் தளத்தின் மீது நேற்றுப் பிற்பகல் அகோர மோட்டார் ஷெல் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. இதனால், கடற்படைத் தளப் பிரதேசம் அதிர்ந்தது.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள சம்பூர் பிரதேசத்தில் இருந்து மேற்கொள் ளப்பட்டதாகக் கூறப்படும் இத்தாக்குதலினால் கடற்படைத் தளத்தில் பலத்த சேதங்கள் ஏற்பட்டிருக்கின்றன. கடற்படை மாலுமிகள் நால்வர் உயிரிழந் திருக்கின்றனர். 32 பேர் வரை காயமடைந்திருக்கின்றனர்.

122 மி.மி. ரகத்தைச் சேர்ந்த சுமார் 36 மோட்டார் குண்டு கள் கடற்படைத் தளம் மீது பரவலாக வீழ்ந்து வெடித்தன என்று கடற்படை வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.

வடக்கில் இருந்து சுமார் 850 துருப்பினரை ஏற்றிக்கொண்டு வந்த துருப்புக் காவி கப்பல் ஒன்று கப்பல் துறையை நெருங் கிய வேளையே இந்த ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. அதேவேளை, கடற் பரப்பில் கடற் புலி களின் ஐந்து படகு களால் வழிமறிக்கப்பட்ட "டோறா' பீரங்கிப் படகு ஒன்று தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டது என்றும் தெரிகிறது. டோறா மூழ்கடிக்கப்பட்டபோது அதில் இருந்த எட் டுப் படையினரும் உயிரிழந்தனர் எனவும் கூறப்படுகிறது.

துருப்பினரை ஏற்றிவந்த கப்பல் கடற்புலி களின் தாக்குத லில் இருந்து தப்பி சர்வதேச கடற்பரப்புக்குள் சென்றதாக முற்கொண்டு கிடைத்த தகவல்கள் தெரிவித்தன. அந்தக் கப்பல் பிற்பகல் அளவில் பாதுகாப்பாக துறை முகப்பகுதியை வந்தடைந்துவிட்டது என்று அரச பாதுகாப்பு வட்டாரம் தகவல் தெரிவித் தது.

நேற்றுப் பகல் முழுவதும் இப்படியாக ஒன்றுக்கொன்று முரண்பட்ட தகவல்கள் வந்து கொண்டிருக்க, நேற்று மாலை 6.30 மணியளவில் குறித்த கப்பல் மீண்டும் திருமலை நோக்கி திரும்பி வந்திருக்கின்றது. அப்போது புலிகள் புல்மோட்டை கடற்பரப்பில் அதனை வழி மறித்து சுற்றி வளைத்துத் தாக்கினர் என்று இணையத்தளத் தகவல்கள் நேற்றிரவு தெரிவித்தன. திரு கோணமலையிலிருந்து வடகிழக்காக 49 கடல் மைல்தொலைவில் புல்மோட்டைக்கும் புட வைக்கட்டு என்ற பகுதிக்கும் இடையிலான கடற்பரப்பில் புலிகள் வழிமறித்துத் தாக்கினர் என்று தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக துருப்புக் கப்பலுக்குப்பாது காப்பாக கடற்படையின் டோறா முதலிய கடற்கலங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கடற்புலிகளோடு தாக்குதலில் ஈடுபட் டன. விமானப்படையின் கிபிர் விமானங் களும் குறித்த கடற்பரப்புக்கு மேலாகப் பறந்து கடற்புலிகளின் படகுகளை இலக்கு வைத்து குண்டுகளை வீசின என்றும் தெரிவிக் கப்பட்டது. பின்னர் துருப்பினருடன் வந்த கப்பல் கரைசேர்ந்துவிட்டது என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

புலிகளின் ஷெல் மழை

நேற்றுப் பிற்பகல் சுமார் 2.00 மணியள வில் கடற்படைத் தளம் மீது ஷெல்கள் அடுத் தடுத்து வீழ்ந்து பெரும் சத்தத்துடன் வெடித் தன. உடனடியாகக் கடற்படைத் தளப் பிரதேசத்தைப் புகை மண்டலம் சூழ்ந்து கொண் டது. கப்பல் துறைப் பகுதி மீதே பல ஷெல் கள் வீழ்ந்து சேதத்தை ஏற்படுத்தின. உடனடியாக கடற்படையினர் உஷார்படுத்தப்பட்ட னர். பாதுகாப்பான இடங் களில் ஒளிந்து கொள்ளுமாறு சகலருக்கும் உத்தரவிடப்பட் டது.

கடற்படைத் தளத்தினுள் ஷெல்கள் வீழ்ந்த போது எழுந்த பெரும் வெடி ஓசைகள் அந் தப் பிரதேசத்தை அதிர வைத்தன.

கடற்படைத் தளத்தினுள் அமைந்திருந்த எரிபொருள் களஞ்சியக் குதம் ஒன்றையும் ஷெல் தாக்கியது. அதனால், அது தீப்பற்றி பெரும் புகை மண்டலத்துடன் எரிந்தது.

பெரும் வெடி ஓசைகளை அடுத்து கடற் படைத் தளத்தில் இருந்து எழுந்த புகை மண்ட லத்தைக் கண்ட அப்பிரதேச மக்கள் கிலி கொண் டனர்.

பெரும் வெடி அதிர்வுகள் திருமலை நக ரப் பகுதியையும் உலுக்கின. அங்கு பதற்ற மும், பரபரப்பும் ஏற்பட்டது. வீதிகளில் காணப் பட்ட மக்கள் விழுந்தடித்துக் கொண்டு பாது காப்பான இடங்களை நாடி ஓடினர். கடை கள், அலுவலகங்கள் இழுத்து மூடப்பட்டன. நகரும் பெரும் அல்லோலகல்லோலப்பட்டு அடங்கி வெறிச்சோடியது.

கடற்படைத்தளத்தை அண்டி குடியிருந்த கடற்படையினரின் குடும்பங்கள் அவசர அவ சரமாக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டன.

புலிகள் ஏவிய ஷெல்களில் ஒன்று கடற் படைத் தளத்தினுள் அமைந்திருந்த கடற்படை யினரின் தலைமையகத்தையும் தாக்கியது. இதனால், அங்கும் சேதங்கள் ஏற்பட்டன. நேற்றுப் பிற்பகல் 3.00 மணியளவில் ஹெலிக் கொப்டர் ஒன்று கடற்படைத் தலைமையகப் பகுதியில் தரையிறங்கிச் சென்றது என்றும் கூறப்பட்டது.

காயமடைந்தவர்கள் ஹெலிக்கொப்டர் மூலம் சிகிச்சைக்காக ஏற்றிச் செல்லப்பட்டி ருக்கக் கூடும் என்று நம்பப்படுகிறது.

திருமலை கடற்படைத் தளத்தின் உள்ளே புலிகள் மோட்டார் ஷெல் தாக்குதல் நடத்தி இருப்பது இதுவே முதல் முறை ஆகும்.

நகரில் சோதனைகள் தீவிரம்

கடற்படைத் தளம் மீது நடத்தப்பட்ட இந்த அகோர ஷெல் தாக்குதலை அடுத்து திருமலை நகரப் பகுதி முழுவதும் பாது காப்பு பலப்படுத்தப்பட்டது. வீதிகள் எங்கும் படையினர் குவிக்கப்பட்டு முழத்துக்கு முழம் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டன.

கடற்படைத் தளத்துக்கு அண்மையில் வசிக்கும் குடும்பங்கள் அந்தப் பிரதேசத்தை விட்டு வெளியேறிவிடுமாறு கடற்படையின ரால் பணிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக் கப்பட்டது.

சம்பூர் மீது பதிலடி

கடற்படைத் தளம் மீது புலிகள் மேற்கொண்ட தாக்குதலுக்குப் பதிலடியாக விமானப்படை யினர் உடனடியாகவே சம்பூர் பிரதேசம் மீது பதிலடி தொடுத்தனர்.

புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள சம்பூர் பிரதேசம் மீது இஸ்ரேலியத் தயாரிப்பான "கிபிர்' விமானங்கள் குண்டுத் தாக்குதல் நடத்தின என்று கொழும்பில் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேவேளை

திருமலை பிளான்டின் பொயின்ற், மங்கி பிறிட்ஜ் ஆகிய படைமுகாம்களில் இருந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மூதூர் கிழக்குப் பிரதேசம் மீது கடும் ஷெல் தாக்குதல்களும் நடத்தப்பட்டன.

பெரும் எடுப்பில் நடத்தப்பட்ட வான் தாக்குதல் மற்றும் ஷெல் வீச்சுகளால் புலிக ளின் நிர்வாகப் பிரதேசங்களில் ஏற்பட்ட சேதங்கள் பற்றிய விவரம் உடனடியாகத் தெரியவரவில்லை.

-உதயன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருமலை மட்டுமன்றி யாழ் பலாலி, காங்கேசன்துறைகூட இன்னும் புலிகளின் ஆட்லறி வீச்செல்லைக்குள்தான் இருக்கின்றன.

திருமலையில் பாவித்தது ஆட்லறிதானா என்று தெரியவில்லை. 7 கிலோமீற்றர் செல்லும் 120 மி.மீ மோட்டார்கள் தாக்கக்கூடிய தூரத்தில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி உள்ளதா என்பதை அந்நிலப்பகுதி பற்றி நன்கு தெரிந்தவர்கள் சொல்லலாம்.

எனினும் புலிகள் ஓரிரு ஆட்லறிகளையாவது கிழக்குக்கு நகர்த்தியிருப்பார்களென்றே நினைக்கிறேன்.

முன்பும் ஒருமுறை (1999) திருமலைத் துறைமுகம் மீது புலிகள் எறிகணைத் தாக்குதல் நடத்தினார்கள். ஆனால் அது செலுத்திகளை இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நகர்த்தி, நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதல். அவ்வணி படையினரின் தாக்குதலுக்குள்ளாகியது. அதில் மேஜர் கலைவிந்தன் உட்பட சிலர் வீரச்சாவடைந்தனர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யோவ்.

உந்த "அகோர எறிகணைத் தாக்குதல்" எண்ட கதைய விடுங்கப்பா.

அவங்கள் செய்திநிறுவனங்கள் சும்மா பாடமாக்கி வைச்சிருக்கிமாதிரி உதைப்பாவிக்கிறாங்கள்.

36 செல் அடிச்சிட்டு அகோர எறிகணைத்தாக்குதல் எண்டு சொல்லிறது புலியளுக்கு இழுக்கு.

குறைந்தது ஒரு 100 ஆவது அடிச்சிட்டுச் சொல்லலாம். :)

தலாவின் சமாளிப்பை இரசித்தேன்.

நிற்க,

ஆட்லறி பற்றி தலா கூறியதில் ஒரு திருத்தம்.

புலிகளிடமோ அரசபடையிடமோ இருக்கும் 152 மி.மீ ஆட்லறிகளின் தூரவீச்சு 36 கிலோமீற்றர்கள் அல்ல. 17 கிலோமீற்றர்களே. 122 மி.மீ ஆட்லறிக்கு ஒப்பான தூரவீச்சைத்தான் இவையும் கொண்டுள்ளன.

130 மி.மீ ஆட்லறிகள்தாம் அண்ணளவாக 32 கிலோமீற்றர் தூரவீச்சைக் கொண்டன.

புலிகள் எங்குமே 130 மி.மீ ஆட்லறிகள் கைப்பற்றவில்லை. ஆனால் புலிகளிடம் அவை இருப்பது பரம இரகசியமன்று.

________________________

அதுசரி, தலா என்றுதானே தமிழில் எழுதுவது? அல்லது வேறு பேரா?

நீங்கள் சொன்னதுதான் சரியான தரவு....! 130மிமீ. M-46 ரக ஆட்லறிகளை குறிப்பிடிவதாய் எண்ணி 152மிமீற்றர் எண்று குறிப்பிட்டு இருந்தேன்....!

மற்றது சமாளிப்பு எது எண்று விளக்குவீரா...??

  • தொடங்கியவர்
photo2bt5.jpg
  • தொடங்கியவர்

r789266817gg3.jpg

Sri Lankan navy passenger ferry moves to port safely during heavy fighting between the Sri Lankan government military and Tamil Tiger rebels in eastern Trincomalee, August 3, 2006. REUTERS/Anuruddha Lokuhapuarachchi (SRI LANKA)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.