Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலி ஆறும் பலிக்கடாவானது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

DovedaleRaised_platform_and_tropical_riv

 

துள்ளி எழும்

நீரலை எட்டி நோக்க

அது கண்டு

நாணல்கள் நாணிக் குனிய

தமிழ் நங்கையர்

நளினம் பண்ண

வன்னி மண்ணெடுத்து

நயந்தது ஓடியது

பாலி ஆறு.

 

தங்கத் தலைவன்

சேனையது

வீரச் சமர் முடித்து

இளைபாற

தாகம் தீர்க்க

நாலு துளி

நீர் வழங்கி

பெருமை கண்டது அது..!

 

காட்டிடை நகரும்

அன்ன நடையில்

அழகு கண்டு

வன்னியனின் வீரமதில்

வரலாறு கண்டு

தம்பி சேனையதன்

வெற்றியில்

சுதந்திர மூச்சிழுத்து

வாழ்ந்த ஆறு

இன்று....

ஈனர்களின்

ஒற்றர்களின்

காக்கவன்னியச் சகோதர்களின்

காட்டிக் கொடுப்பில்

வறண்டே போனது..!

 

தமிழ் விளையாடிய

நிலமதில்

சிங்களம் அரங்கேறுது.

நாரைகளும்

நாணல்களும்

கூடி விளையாடிய

நீரதில்

புத்தம் சிலை வைக்குது..!

பிறை பங்கு பிரிக்குது..!

பாலி ஆறு

நாளை

வரைபடத்தில்

"பாலித" ஆறும் ஆகிடும்..!

தமிழ் செம் புலவர்களோ

பழைய நினைப்பில்

சாய்மனைக் கதிரையில்

கற்பனையில்

சல சலப்பர்...!

பழைய காகிதங்கள் புரட்டி

புலமை காட்டி நிற்பர்..!

 

அப்போதும்

பாலி ஆறு

அமைதியோடு

ஓடிக்கொண்டு தான் இருக்கும்..!

வன்னி மண்ணில்

இனப்படுகொலையில்..

புதையுண்ட தன்

உறவுகளின்

உக்கிய உடல்கள்

தந்த

தாதுக்களால் கரித்தப்படி..

கண்ணீர் விட்டபடி..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

"பாலித" ஆறும் ஆகிடும்..!

தமிழ் செம் புலவர்களோ பழைய நினைப்பில் சாய்மனைக் கதிரையில் கற்பனையில் சல சலப்பர்...! பழைய காகிதங்கள் புரட்டி புலமை காட்டி நிற்பர்..
! கவிதை படைத்து புரட்சிக் கவிஞன் என பெயர் எடுத்திடுவர்..... வாழ்த்துக்கள் கவிஞர் நெடுக்ஸ்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் கவிஞர் நெடுக்ஸ்

  • கருத்துக்கள உறவுகள்

தையல் மெஷின் நாயகிகள், பலிக்கடா ஆன பாலியாறு என்று காழ்ப்புணர்வும், விஷமும் கலந்து கவிதையால் வசைபாடும் நெடுக்ஸ் யாழ் இணையத்தில் ஒரு troll என்பது காலங்காலமாக அறிந்து ஒன்று. வருடங்கள் கழியும் போது அறிவும் முதிர்ச்சியும் வரவேண்டும். ஆனாலும் தமிழ்த் தேசியத்தையும், தமிழர்களின் பண்பாடுகளையும் காக்கும் காவலன் என்ற போர்வையில் செய்வதெல்லாம் அதற்கு எதிரானவைதான். காகம் திட்டி ஒரு நாளும் மாடு சாவதில்லை..

கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் - தானுந்தன்
பொல்லாச் சிறகை விரித் தாடினாற் போலுமே
கல்லாதான் கற்ற கவி.

 

 

இது இந்தக் கவிதைக்குப் பொருந்துகின்றது.

கிணற்றில் இருக்கிற தவளை எப்படித் தன் வாழ் நாள் முழுவதையும் அந்தக் கிணற்றிலேயே கழித்து விடுகிறதோ அதைப்போல பல மனிதர்கள் தங்கள் வாழ் நாள் முழுமையையுமே ஒரு சின்ன வட்டத்துக்குள் சுருக்கிக் கொண்டு முடித்துக் கொள்வதில் ஆனந்தம் அடைகிறார்கள். அவர்களுக்கு அது பாதுகாப்பாக இருக்கலாம். வெளியே செல்லத் தேவையில்லாமல் இருக்கலாம். ஆனால் அவர்கள் இருக்கிற உலகத்தைக் காட்டிலும் இனிமையானதாக வேறொரு உலகம் இருக்க முடியாது என்று நினைக்கிறார்களே, அந்த எண்ணம் தான் தவறானது.

 

கடலில் இருந்து வந்த தவளை கிணற்றுத் தவளைக்கு கடலைப் பற்றி விளக்கிச் சொல்ல முடியாது. காரணம், விவரங்களுக்கு அப்பாற்பட்டதாகக் கடல் வியாபித்து நிற்கிறது. எனவே அந்தக் கடலிலேயே வாழ்ந்தாலும் கடலைப்பற்றி அந்தக் கடல் தவளைக்கு முழுவதும் தெரியாததில் வியப்பில்லை. ஏனென்றால் அதன் பயணம் குறுகியதாகத்தான் இருக்க முடியும். நிச்சயம் கிணற்றைக் காட்டிலும் கடல் பெரியது என்கின்ற ஒன்று மட்டும் தெரியும். இதுபோலவே ஒரு மாபெரும் மகானுடன் வாழ்கின்ற பலர் அவர்களைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளாமலேயே இருப்பதுண்டு.

 

கிணற்றில் இருக்கும் தவளையை எவ்வளவு வற்புறுத்தினாலும் அது கடலுக்கு வர சம்மதிக்காது. ஏனெனில் கிணற்றில் அலை இல்லை , புயல் இல்லை, ஆபத்துக்கள் இல்லை.  பல நேரங்களில் உண்மை நம் கண் முன்னே போகும்போது நாம் கண்களை இறுக மூடிக் கொள்கிறோம். உண்மையைச் சந்திப்பது என்பது நமக்குப் பயத்தைத் தருகிறது. அதன் பிரம்மாண்டத்தின் முன் நாம் காணாமல் போய்விடுவோம் என்கின்ற சந்தேகம் நமக்கு ஏற்படுகிறது.

 

கிணற்றுத் தவளையாக இருப்பதில் கூடத் தவறில்லை. யார் கிணற்றில் இருந்து கொண்டு கிணற்றைக் கடல் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்களைப் பார்த்து நாம் பரிதாபப் பட முடியுமே தவிர பரிகாரம் செய்ய முடியாது.

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=112806&page=7

 

 

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

 வாழ்த்துக்கள் கவிஞர் நெடுக்ஸ் 

இதுக்குள்ள  ஏதோ உள்க்குத்து இருக்கு போல.....

நாமறியோம் பராபரனே........... :icon_idea: 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் ஒரு ஆக்கத்தை முன் வைக்கின்ற போது அது தொடர்பாக அவரவர் அறிவு மட்டத்திற்கும் சமூகப் பார்வைகளுக்கும் ஏற்ப அவரவர் வரிகளில் அமைந்த விமர்சனங்கள் அமையும் என்பதை அறிந்தே தான் எழுதுகிறோம்.

 

அந்த வகையில் விமர்சனங்கள் எப்படி இருந்தாலும் உருப்படியானவையை ஏற்றுக் கொள்கிறோம். மீதியை கழித்து விடுகிறோம். அதற்காக விமர்சனமே வேண்டாம்.. வலிக்கும் என்ற கணக்கா நாம் ஆக்கங்களை ஆக்கி இங்கு கொண்டு வருவதில்லை.

 

நாகரிமான வார்த்தைப் பிரயோகங்களோடு அமையும் எந்த வகையான விமர்சனங்களையும் யாழும் அங்கீகரித்தே வருகிறது.

 

இக்களத்தில் ஆரம்ப காலத்தில்.. தமிழ் எழுதத் தெரியாது என்றார்கள்.. அதை தாண்டி வந்தோம். பின்னர் கலாசாரக் காவலர்கள் என்றார்கள் அதைத் தாண்டி வந்தோம்.. பின்னர் தேசியவாதிகள் என்றார்கள் அதைத் தாண்டி வந்தோம்.. இந்து மதவெறியர்கள் என்றார்கள் அதைத்தாண்டி வந்தோம்.. கவிதை அல்ல.. உடைத்த வரிகள் என்றார்கள்.. அதையும் தாண்டி வந்தோம்.. அறிவியல் அல்ல.. மொழி பெயர்ப்பு என்றார்கள் அதையும் தாண்டி வந்தோம்.. இன்னும் இன்னும் பலவற்றை தாண்டி வந்திருக்கிறோம். எவரெவர் எந்தெந்த வடிவங்களில் விமர்சித்தனரோ அவரவர் இப்போதும் தமக்கு ஒவ்வாததுகளை அவ்வாறே விமர்ச்சித்துக் கொண்டும் இருக்கின்றனர். அவர்கள் மாறுவதாகவும் இல்லை. மாறியதாகவும் தெரியவில்லை.

 

இவ்வகையான விமர்சனக் கோமாளித்தனங்களை எல்லாம் நாங்கள் கருத்தில் எடுப்பதில்லை. குறிப்பாக கிருபண்ணா இதனை அறிந்து கொள்வது நல்லது..! :lol:

 

மற்றும்படி.. இவ் ஆக்கத்திற்கு உங்கள் கருத்துக்களை வழங்கிய உறவுகளுக்கு நன்றி.

 

இப்படைப்பின் ஊடு இன்றைய என் தேசத்தின் சோகமே சொல்லப்பட்டுள்ளது. பாலியாற்றை வைத்து நாங்கள் இன்னொரு தமிழீழ ஆயுதப் போராட்டத்தை நடத்த ஆக்கம் படைக்கவில்லை.. அல்லது அப்படிக் காட்டப் போவதும் இல்லை... என்பதை சில விமர்சன கர்த்தாக்கள் புரிந்து கொண்டால் நன்று. :):icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் அண்ணா, கவிதை அருமை.

இளகிய ஜெனோசைட் மனம் கொண்ட சிறி லங்கா ஏஜெண்டுகளை இந்த கவிதை நோகடிக்கும். :D

 

யாழ் களத்திலும் நெடுக்ஸ் ஜெனோசைட் அரசாங்கம் ஒன்று நெடுங்காலமாக இயங்கி வருகிறது. அவர்களும்.. இப்படித்தான்...! "மாற்றி எழுதுதலை.. அல்லது பச்சையாக எழுதுவதை" "புரட்சி" என்பதாக இனங்காட்டிக் கொண்டு அதனூடு.. தம்மை இனங்காட்டி.. தமது கருத்தியலை திணிக்க முற்படுபவர்கள். அது கொஞ்சக் காலம் அதன் பச்சைத் தன்மைக்காக சலசலக்கும். பின்னர் மறந்து போயிடும். விளம்பரம் மட்டும் இலாபமாகும்.

 

நம்ம சிறீலங்கா சிங்கள அரசும்.. நல்லிணக்கம்.. செளஜன்னியம்.. சகவாழ்வு என்று பேசிக் கொண்டே இனப்படுகொலையை திணிப்பது போல..! இறுதியில்.. நல்லிணக்கம்.. அடிபட்டுப் போக.. இனப்படுகொலை மட்டும் ஆதாயமாகும்..! சிங்களவன் வாழ்ந்து கொல்வான். தமிழன் போற்றி அழிவான். :icon_idea::)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் உண்மையான பாலியாற்றின் தோற்றம்..

 

DSC09250.JPG

 

படம்: கூகிள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.